Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 5.1 ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

குறுவினா

Question 1.
ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
Answer:

  • “கப்பல்கள் வருகின்ற செய்தியைக் கேட்டதும், நஷ்டப்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற்போலவும்,
  • மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்ததுபோலவும்,
  • நீண்டநாள் தவமிருந்து புத்திரப் பாக்கியம் கிட்டினாற்போலவும்,
  • தேவாமிர்தத்தைச் சுவைத்தது போலவும் மக்கள் சந்தோஷப்பட்டார்கள் எனப் பதிவு செய்துள்ளார்.
  • இதனை ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர் யார்?
Answer:
ஆங்கிலேயக் கடற்படையில் பணியாற்றிய சாமுவேல் பெப்பிசு, ‘உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 3.
முகலாய மன்னர் கால நாட்குறிப்புப் பற்றி அறியும் செய்திகள் யாவை?
Answer:
முகலாய மன்னர்களுள் பாபர் காலம்முதல், நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்துள்ளது. ஒளரங்கசீப் ஆட்சியின்போது, இம்முறை தடை செய்யப்பட்டது.

Question 4.
நாட்குறிப்பு என்பது யாது? அதன் மூலம் எது?
Answer:
ஒருவரின் அன்றாட நிகழ்வுகளையோ, பணிகளையோ பதிவு செய்யும் ஏடு, ‘நாட்குறிப்பு’ எனப்படும். இலத்தீன் மொழியின் மூலச்சொல்லான ‘டைஸ்’ என்பதில் உருவான ‘டைரியம்’ என்பது, ‘டைரி’க்கு மூலச் சொல்லாகும்.

Question 5.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு வரலாற்றுக் கருவூலமாக எவ்வகையில் திகழ்கிறது?
Answer:
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு, இருபத்து ஐந்து ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப் படுத்துகிறது. அக்காலப் பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் திகழ்கிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 6.
ஆனந்தரங்கர் வாழ்வில் உயர்வு பெற்றதை விளக்குக.
Answer:
உழைப்பு, உண்மை , உறுதிமிக்க ஆனந்தரங்கர், பிரெஞ்சு ஆளுநர் ‘துய்ப்ளே ‘யின் காலத்தில் தலைமைத் ‘துவிபாஷி’யாகப் பணியாற்றினார். பிரெஞ்சு ஆட்சியரின் நம்பிக்கைக்கு உரியவராகவும், அரசியல் செல்வாக்கு மிக்கவராகவும் ஆனந்தரங்கர் திகழ்ந்தது, வாழ்வில் பெற்ற உயர்வாகும்.

Question 7.
ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் எவற்றைப் பதிவு செய்துள்ளார்?
Answer:
தமிழ்நாட்டுப் பண்பாடு, சமயம், சாதி, நீதி, வாணிகம், நம்பிக்கைகள் முதலான கூறுகள் அடங்கிய நிகழ்வுகளைத் தம் நாட்குறிப்பில் ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார்.

Question 8.
ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்விற்கும் எவ்வெவற்றைக் குறிப்பிட்டார்?
Answer:
ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் உரிய ஆண்டு திங்கள், நாள், கிழமை, அந்நாளின் நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டபின் செய்திகளை எழுதியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 9.
ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்து உ.வே.சா. கூறிய கருத்து யாது?
Answer:
“நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் தமிழ்த்தாய் பாதிக்கப்பட்டாலும், அவளுடைய ஆபரணங்கள், தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன” என்று, உ.வே.சா., ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்துக் கூறியுள்ளார்.

Question 10.
மகாகவி பாரதியார் ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்துக் கூறியுள்ள செய்தி யாது?
Answer:
“அந்தக் காலத்தில் நடந்த செய்திகளை எல்லாம் ஒன்று தவறாமல் நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார்” என்று, ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்து, மகாகவி பாரதியார் கூறியுள்ளார்.

Question 11.
உ.வே.சா. பயின்ற கல்விமுறை குறித்துக் குறிப்பு வரைக.
Answer:
மரபுவழிக் கல்வி முறைகளுள் ஒன்றான பயர்நிலைக் கல்விமுறையில் உ.வே.சா. பயின்றார். இக்கல்விமுறை, தனிநிலையில் புலவாரிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறை என்னும் வகைமைக்குள் அடங்கும்.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம், உ.வே.சா. பயின்ற கல்விமுறை இம்முறையாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

சிறுவினா

Question 1.
ஆனந்தரங்கர், ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதைப் பாடப் பகுதிவழி எடுத்துக்காட்டுக.
Answer:

  • ஆனந்தரங்கர் நாட்குறிப்பில், அவர் காலப் புதுவை, தமிழகம், தென்னிந்திய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்.
  • பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ், நாணய அச்சடிப்பு உரிமை பெற்றது,
  • பிரெஞ்சுக் கப்பல் தளபதி லெபூர் தொனே, சென்னையைக் கைப்பற்றியது,
  • சினமுற்ற ஆற்காடு நவாபு, தம் மூத்த மகனை அனுப்பிப் பிரெஞ்சு அரசை எதிர்த்துப் போரிட்டது.
  • தேவனாம் பட்டணத்தைக் கைப்பற்றப் பிரெஞ்சு அரசு நடத்திய போர்,
  • புகழ்பெற்ற ஆம்பூர்ப் போர், தஞ்சைக் கோட்டை முற்றுகை, இராபர்ட் கிளைவ் படையெடுப்பு எனப் எல் வரலாற்றுச் செய்திகளை நேரில் கண்டு
  • உரைப்பதுபோல், நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். இவற்றை நோக்க, ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியராகத் திகழ்வது புலப்படும்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் சிறப்பு யாது?
Answer:

  • ஆனந்தரங்கர் நாட்குறிப்பு, பன்னிரண்டு தொகுதிகளாகத் தமிழில் வெளிவந்துள்ளன.
  • ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட பின்னரே, செய்திகளை எழுதியுள்ளார்.
  • ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்பே, இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாகும். ஆனந்தரங்கர் நாட்குறிப்புகள், தென்னிந்தியாவின் 25 ஆண்டுகால வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.
  • சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும், ஆவணமாகவும், இலக்கியமாகவும் திகழ்கின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 3.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு ஆனந்தரங்கரின் இறுதிக்கால நாட்குறிப்புகளில் இடம் பெற்ற செய்திகளை விவரிக்கவும்.
Answer:
புதுச்சேரியை ஆங்கிலேயர் முற்றுகை இட்டதையும் புதுச்சேரியின் வீழ்ச்சியையும் ஆனந்தரங்கரின் இறுதிக் கால நாட்குறிப்புகள் பேசுகின்றன. புதுச்சேரியைத் தாக்க 1760 பிப்ரவரியில் ஆங்கிலக் கப்பல்கள் வந்தன.

செஞ்சியைச் சுற்றியுள்ள பகுதிகளை வென்ற ஆங்கிலத் தளபதி புதுச்சேரியில் நெருங்கியது, ஆங்கிலப் படைகள் சாரம்வரை வந்துவிட்டதைப் பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்தது, புதுச்சேரியில் பீதி நிலவும் வகையில் குண்டு சாலையை ஆங்கிலேயர் பிடித்தது,

தேவனாம் பட்டணத்தில் மேலும் மேலும் ஆங்கிலத் துருப்புகள் கப்பலில் வந்து இறங்கியது, புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் ஆங்கிலேயர் கைப்பற்றியது என்னும் செய்திகளை எல்லாம் தம் குறிப்பேட்டில் ஆனந்தரங்கர் எழுதிவைத்துள்ளார். இவை இறுதிக்கால நாட்குறிப்புகளாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 4.
ஆனந்தரங்கர் ‘இந்தியாவின் பெப்பிசு’ என அழைக்கப்படுவது ஏன்?
Answer:

  • ‘உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர், ‘சாமுவேல் பொரிய ஆவார்.
  • இவர் ஆங்கிலேயக் கடற்படையில் பணியாற்றியவர். இரண்டாம் சார்லஸ் மைனர் காலத்து நிகழ்வுகளை இவர் நாட்குறிப்பாகப் பதிவு செய்துள்ளார். இதுவே முதல் நாட்குறிப்பு.
  • இவரைப் போல் ஆனந்தரங்கரும் தம் கால நிகழ்வுகளை, நாட்குறிப்பாக எழுதி வைத்துள்ளார். இந்நாட் குறிப்பு, இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாகும்.
  • எனவே, ஆனந்தரங்கர், இந்தியாவின் பெப்பிசு’ என அழைக்கப்படுகிறார்.

நெடுவினா

Question 1.
“தாம் வாழ்ந்த காலகட்டத்தின் நாகரிகப் புதையலாக நாட்குறிப்பைப் பயன்படுத்தியவர் ஆனந்தரங்கர்” என்பதை நிறுவுக.
Answer:
காலப்பெட்டகமான நாட்குறிப்பு :
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு, தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துவதாகவும், அக்காலப் பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் வரலாற்றுப் பேழையாகவும் உள்ளது. அந்த நாட்குறிப்பு நிகழ்வு, நடைபெற்ற ஆண்டு, மாதம், நாள், கிழமையோடு 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

அரசியல் நிகழ்வுகள் :
அக்காலத்தில் நாணயம் அச்சடிக்க உரிமை பெற்றது. பிரெஞ்சு – ஆங்கிலப்படைகள் தங்களுக்கு இடையே நாடு பிடிக்கப்பட்டது. ஆற்காடு நவாபின் செயல்பாடுகள் முதலான அரசியல் நிகழ்வுகளையும் நாட்குறிப்பில் பதித்துள்ளார். 18ஆம் வற்றாண்டில் தமிழகத்தின் சமூகத்தில் நிலவிய பண்பாடு, சமயம், சாதி, நீதி, வாணிகம், நம்பிக்கை முதலான பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாக ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பைப் பதிவு செய்வாளர்.

சமுதாய செய்தி
நீதி வழங்குதல், பல்வேறு காரணங்களுக்காக மரணதண்டனை வழங்கல், காதறுத்தல், சாட்டையடி, கிடங்கில் போடுதல் முதலிய அக்காலச் செயல்களைப் பற்றிப் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து வீடுகளில் திருடியவர்களைப் படித்துத் தலைவனைக் கடைத்தெருவில் தூக்கிலிட்டது.

ஒருவருக்குக் காதறுத்து, ஐம்பது கசையடி கொடுத்தது ஆகியவற்றை எழுதியுள்ளார். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம், வணிகர் பலர்மூலம் கடல் வணக்கம் செய்ததைத் தெளிவுபட எழுதியுள்ளார். ஐரோப்பியக் கப்பல்கள் ஆறு மாதம் பயணம் செய்து புது வந்ததும், பீரங்கி முழங்கி வரவேற்றதையும் ஆனந்தரங்கர் நாட்குறிப்பால் அறியமுடிகிறது.

வர்த்தகச் செய்தி :
துணி வர்த்தகம் செய்த முறை, புதுச்சேரியில் நாணயம் அச்சிட்ட செய்தி, 1742இல் வீசிய பெருங்காற்று, அதனால் மக்கள் பெற்ற துயர், வாடிய மக்களுக்கு ஒழுகரை கனகராயர் பெருஞ்சோறு அளித்தது, 1745இல் கப்பல் வருகை இன்மையால் புதுவையில் ஏற்பட்ட பொருளாதாரத் தட்டுப்பாடு, அதை நீக்க லெபூர் தொனேவின் ஒன்பது கப்பல்கள் வந்தது, மக்கள் அடைந்த மகிழ்ச்சி என, அனைத்தையும் பதித்துள்ளார். இவற்றை எல்லாம் நோக்கத் தம் நாட்குறிப்பை ஆனந்தரங்கர், தாம் வாழ்ந்த காலத்தின் (நாகரிகப் புதையலாகப் பயன்பட வைத்துள்ளமை புலப்படும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

பலவுள் தெரிக

Question 1.
பொருந்தாததைத் தேர்க.
அ) ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள், பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
ஆ) ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம்
இ) ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார். ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஈ) ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத் திங்கள்கள் தேவைப்பட்டன.
i) அ, ஆ
ii) ஆ, இ
iii) அ, இ
iv) ஆ, ஈ
Answer:
iv) ஆ, ஈ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 2.
ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாதது எது?
அ) மொழிபெயர்ப்பாளர்
ஆ) இந்தியாவின் பெப்பிசு
இ) தலைமைத் துவிபாஷி
ஈ) உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை
Answer:
ஈ) உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை

கூடுதல் வினாக்கள்

Question 3.
18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றை அறிந்து கொள்ளக் கிடைத்த அரிய பெட்டகம் ………………………
அ) துய்ப்ளே நாட்குறிப்பு
ஆ) வாஸ்கோடகாமா நாட்குறிப்பு
இ) சாமுவேல் பெப்பிசு நாட்குறிப்பு
ஈ) அனந்தரங்கர் நாட்குறிப்பு
Answer:
ஈ) ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

Question 4.
நாட்குறிப்பை ஆங்கிலத்தில் ………………………என அழையர்)
அ) டைஸ்
ஆ) டைரியம்
இ) டைரி
ஈ) எபிமரிடிஸ்
Answer:
இ) டைரி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 5.
நாட்குறிப்புகளின் முன்னோடியாகத் திகழும் ‘EPHEMERIDES’ என்பது ………………………
அ) ஆங்கிலக் குறிப்பேடு
ஆ) இலத்தீன் குறிப்பேடு
இ) கிரேக்கக் குறிப்பேடு,
ஈ) பிரெஞ்சுக் குறிப்பேடு
Answer:
இ) கிரேக்கக் குறிப்பேடு

Question 6.
‘EPHEMERIDES’ ஏன் தகு, ………………………என்பது பொருள்.
அ) ஒரு மாதத்துக்கான முடிவு
ஆ) ஒரு நாளுக்கான முடிவு
இ) வரலாறு
ஈ) ஓர் ஆண்டுக்கான முடிவு
Answer:
ஆ) ஒரு நாளுக்கான முடிவு

Question 7.
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை………………………
அ) சாமுவேல் பெப்பிசு
ஆ) கீட்ஸ்
இ) ஜான்ரஸ்கின்
ஈ) ஜி. யு. போப்
Answer:
அ) சாமுவேல் பெப்பிசு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 8.
முகலாய மன்னர்களிடையே நாட்குறிப்பு எழுதும் வழக்கம், ………………………காலம்முதல் வழக்கத்தில் இருந்தது.
அ) அக்பர்
ஆ) ஔரங்கசீப்
இ) பாபர்
ஈ) சலீம்
Answer:
இ) பாபர்

Question 9.
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு, தென்னிந்தியாவின் ………………………ஆண்டுகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது.
அ) பத்து
ஆ) பதினைந்து
இ) இருபத்தைந்து
ஈ) முப்பது
Answer:
இ) இருபத்தைந்து

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 10.
ஆனந்தரங்கர், தமிழில் எழுதிய நாட்குறிப்பு,………………………தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
அ) பத்து
ஆ) இருபத்தைந்து
இ) பன்னிரண்டு
ஈ) பதினெட்டு
Answer:
இ) பன்னிரண்டு

Question 11.
சென்னைக் கோட்டையை 1758இல் முற்றுகையிட்டுத் தாக்கியது ………………………
அ) துய்ப்ளே
ஆ) மகபூஸ்கான்
இ) லல்லி
ஈ) லெபூர்தொனே
Answer:
இ) லல்லி

Question 12.
1758இல் சென்னைக் கோட்டையின் கவர்னராக இருந்தவர்………………………
அ) இராபர்ட் கிளைவ்
ஆ) துய்ப்ளே
இ) மன்றோ
ஈ) மேஸ்தர்பிகட்
Answer:
ஈ) மேஸ்தர்பிகட்

Question 13.
புதுச்சேரியிலிருந்து மணிலாவுக்குச் சென்ற கப்பலில் அழகப்பன், ……………………… பணியாற்றினார்.
அ) ஆளுநராக
ஆ) பணியாளாக
இ) மாலுமியாக
ஈ) எடுபிடியாக
Answer:
இ) மாலுமியாக

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 14.
ஐரோப்பாவிலிருந்து கப்பல்கள் இந்தியாவை அடைய, ……………………… திங்கள்களானது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஆறு
ஈ) எட்டு
Answer:
இ) ஆறு

Question 15.
நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பெற்றது ………………………
அ) ஆங்கில அரசு
ஆ) பிரெஞ்சு அரசு
இ) ஆங்கில வணிகக்கழகம்
ஈ) பிரெஞ்சு வணிகக்கழகா
Answer:
ஈ) பிரெஞ்சு வணிகக்கழகம்

Question 16.
வணிகர் பலரைப் பங்குதாரராகக் கொண்ட கூட்டு நிறுவனம் ………………………
அ) ஆங்கிலக் கிழக்கிந்தியக் கழகம்
ஆ) போர்ச்சுகீசியக் கிழக்கிந்தியக் கழகம்
இ) டச்சுக் கிழக்கிந்தியக் கழகம்
ஈ) பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம்
Answer:
ஈ) பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 17.
புதுச்சேரியில் எட்டு மாற்றுக்குக் குறைவாக வராக நாணயங்களை வைத்திருப்பது, தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்தது ………………………
அ) ஆங்கில மன்னர்
ஆ) ஆற்காட்டு நவாப்
இ) பிரெஞ்சு மன்னர்
ஈ) புதுவை கவர்னர்
Answer:
இ) பிரெஞ்சு மன்னர்

Question 18.
நாட்குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டது ………………………காலத்தில்.
அ) பாபர் ஆட்சி
ஆ) ஔரங்கசீப் ஆட்சி
இ) பிரெஞ்சு ஆட்சி
ஈ) ஆங்கில ஆட்சி
Answer:
ஆ) ஔரங்கசீப் ஆட்சி

Question 19.
இந்தியாவுக்குக் கடல் வாயைக் கண்டுபிடித்த மாலுமி வாஸ்கோடகாமா, ………………………மாலுமி.
அ) முகலாய
ஆ) ஆங்கிலேய
இ) போர்ச்சுக்கீசிய
ஈ) பிரெஞ்சு
Answer:
இ) போர்சுகசிய

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 20.
பிரெஞ்சு அரசுபற்றி அறிய உதவும் வரலாற்றுக் கருவூல ஆவணமாக இருப்பது ………………………
அ) வாஸ்கோடகாமா நாட்குறிப்பு
ஆ) சாமுவேல் பெப்பிசு நாட்குறிப்பு
இ) அனந்தரங்கர் நாட்குறிப்பு
ஈ) பாபர் நாட்குறிப்பு
Answer:
இ) ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

Question 21.
ஆனந்தரங்கர், பிரெஞ்சு ஆளுநர்………………………காலத்தில், தலைமைத் துவிபாஷியாகப் பணியாற்றினார்.
அ) கியோம் ஆந்த்ரே
ஆ) பிரான்சுவா மர்த்தேன்
இ) துய்ப்ளே
ஈ) லெபூர்தொனே
Answer:
இ) துய்ப்ளே

Question 22.
ஆனந்தரங்கரைப் பரங்கிப்பேட்டை நெசவுச்சாலைக் கிடங்குத் தலைவராக நியமித்தவர்………………………
அ) கியோம் ஆந்த்ரே
ஆ) அலனுவார்
இ) துய்ப்ளே
ஈ) லெபூர்தொனே
Answer:
ஆ) அலனுவார்

Question 23.
நாணய அச்சடிப்பு உரிமை பெற்ற பிரெஞ்சு ஆளுநர் ………………………
அ) துய்ப்ளே
ஆ) அலனுவார்
இ) லெபூர்தொனே
ஈ) டூமாஸ்
Answer:
ஈ) டூமாஸ்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 24.
புதுச்சேரியைப் பெருங்காற்றுச் சூறையாடிய ஆண்டு ………………………
அ) 1736
ஆ) 1993
இ) 1745
ஈ) 1717
Answer:
இ) 1745

Question 25.
புதுவையைக் காப்பாற்ற ஆங்கிலேயக் கப்பல்கள், துருப்புகளை மேலும் மேலும் இறக்கிய இடம்………………………
அ) செஞ்சி
ஆ) சாரம்
இ) தேவனாம்பட்டணம்
ஈ) புதுவை
Answer:
இ) தேவனாம்பட்டணம்

Question 26.
செய்திகளை ஒன்று தவறாமல் சித்திரகுப்தனைப்போல் ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார் எனக் குறிப்பிட்டவர் ………………………
அ) திருவேங்கடம்
ஆ) நைனியப்பர்
இ) ஆளுநர் துய்ப்ளே
ஈ) மகாகவி பாதியார்
Answer:
ஈ) மகாகவி பாரதியார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Question 27.
புதுச்சேரியிலிருந்து மணிலா சென்ற கப்பலில் மாலுமியாகப் பணியாற்றியவர் ………………………9/8+6
அ) திருவேங்கடம்
ஆ) கனகராயர்
இ) அழகப்பன்
ஈ) தைனயப்பர்
Answer:
இ) அழகப்பன்

Question 28.
‘இந்தியாவின் பெப்பிசு’ என்று அழைக்கப்படுபவர்
அ) சாமுவேல்
ஆ) ஆனந்தரங்கர்
இ) துய்ப்ளே
ஈ) இராபர்ட் கிளைவு
Answer:
ஆ) ஆனந்தரங்கர்

Question 29.
கீழ்க்காண்பவற்றைப் பொருத்திச் சரியான விடையைத் தெரிவு செய்க.
ஆனந்தரங்கர் பற்றிய நூல்கள் – எழுதியோர்
அ) ஆனந்தரங்கர் கோவை
ஆ) ஆனந்தரங்கர் பலளைத்தமிழ்
இ) வானம் வசப்படும்
1. புலவரேறு அரிமதி தென்னகன்
2. பிரபஞ்சன்
3. தியாகராய தேசிகர்
4. சாமுவேல் பெப்சு
1. அ – 1, ஆ – 2, இ – 4
2. அ – 3, ஆ – 1, இ – 2
3. அ – 4, ஆ – 3, இ – 2
4. அ – 3, ஆ – 4, இ – 1
Answer:
2. அ – 3, ஆ – 1, இ – 2

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் 12 தொகுதிகளாகத் தமிழில் வெளிவந்துள்ளன.
வினா : ஆனந்தரங்கத்திய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகளாகத் ஆனந்தரங்கர் எழுதிய
நாட்குறிப்புகள் வெளிவந்துள்ளன?

2. உலக நாட்குறிப்பு இயக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர், சாமுவேல் பெப்பிசு ஆவார்.
வினா : உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

3. பண்பாடு, யம், சாதி, நீதி, வணிகம், நம்பிக்கைகள் முதலான பல்வேறு கூறுகள் அடங்கிய நிகழ்விகளை, ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார்.
வினா – ஆனந்தரங்கர் எவ்வெக் கூறுகள் அடங்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்?

4. ஆகரந்தரங்கர் நாட்குறிப்பில் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளது.
வினா : ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் பெரும்பகுதி எச்செய்திகளையே விவரித்துள்ளது?

5. பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம், வணிகர் பலரைப் பங்குதாரராகக் கொண்ட கூட்டு நிறுவனம்.
வினா : பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம் எவரைப் பங்குதாரராகக் கொண்டு கூட்டு நிறுவனம்?

6. நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரெஞ்சு வணிகக் கழகம் பெற்றது.
வினா : புதுச்சேரியில் பிரெஞ்சு வணிகக் கழகம் நிஜாமிடமிருந்து எவ்வுரிமையைப் பெற்றது?

7. மாலைப்பொழுதில் வீசிய பெருங்காற்று, புதுச்சேரியைச் சூறையாடியது.
வினா : எப்பொழுது வீசிய பெருங்காற்று, புதுச்சேரியைச் சூறையாடியது எது?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

8. புதுச்சேரிக்குக் கப்பல்களின் வருகை தடைப்பட்டுப் பெரும் பொருளாதாரத் தட்டுப்பாடு தோன்றியது.
வினா : எவற்றின் வருகைத் தடைப்பட்டுப் புதுச்சேரிக்குப் பெரும் பொருளாதாரத் தட்டுப்பாடு தோன்றியது?

Leave a Reply