Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

12th History Guide ஐரோப்பாவில் அமைதியின்மை Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நெப்போலியன் முதன்முறை நாடு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் ……………. ஆகும்.
அ) எல்பா
ஆ) செயின்ட் ஹெலனா
இ) கார்சிகா
ஈ) வாட்டர்லூ
Answer:
அ) எல்பா

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 2.
பிரிட்டிஷ், பெல்ஜிய மற்றும் பிரஷ்யக் கூட்டுப் படைகளால் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட வாட்டர்லூ அமையப்பெற்ற இடம் ……
அ) பிரான்ஸ்
ஆ) ஜெர்மனி
இ) பெல்ஜியம்
ஈ) இத்தாலி
Answer:
இ) பெல்ஜியம்

Question 3.
கூற்று : கற்பனைவாத சோஷலிஸ்டுகள் உற்பத்திக் கருவிகளைப் பொதுவில் கொண்ட மாதிரி சமூகங்களைப் பரிந்துரைத்தனர்.
காரணம் : அவர்கள் வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் ஒழிந்த சோஷலிச சமூகத்தை வளர்தெடுக்கும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தனர். பாதுகாக்க
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. –
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி,
Answer:
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 4.
இங்கிலாந்தில் தொழிற்சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆண்டு …..
அ) 1815
ஆ) 1822
இ) 1824
ஈ) 1827
Answer:
இ) 1824

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 5.
கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியானவற்றை தெரிவு செய்துப் பொருத்துக

அ புதிய கிறித்தவம் 1. வில்லியம் லவெட்
ஆ எ நியூ வியூ ஆப் சொசைட்டி 2. லூயி பிளாங்க்
இ ரெவ்யூ டூ ப்ராக்ரஸ் 3. செயின்ட் சீமோன்
ஈ மக்களின் பட்டயம் 4 இராபர்ட் ஓவன்

அ) 2, 3, 4, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 1, 4, 3, 2
ஈ) 3, 1, 2, 4
Answer:
ஆ) 3, 4, 2, 1

Question 6.
மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலை …………… ஆண்டில் வெளியிட்டனர்.
அ) 1842
ஆ) 1848)
இ) 1867
ஈ) 1871
Answer:
ஆ) 1848

Question 7.
கூற்று : மக்கள் உரிமை சாசன இயக்கம் ஒரு கலவரமோ, புரட்சியோ அல்ல.
காரணம் : அது தொழிலாளர் வர்க்கத்தின் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கமாகும்.
அ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
இ) கூற்று சரி. காரணம் தவறு

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 8.
சாசனத்துவவாதிகளின் முக்கியத்துவம் பெற்ற செய்தித்தாள் ……………. ஆகும்.
அ) ஏழை மனிதனின் பாதுகாவலன்
ஆ) பட்டயம்
இ) வடக்கத்திய நட்சத்திரம்
ஈ) இல் ரிசார்ஜிமென்டோ
Answer:
இ) மட்டக்கத்திய நட்சத்திரம்

Question 9.
நெப்போலியன் போனபார்ட்டின் மருமகனான லூயி நெப்போலியன 7-க் கொண்ட பட்டம் ………………. என்ப தாகும்.
அ) இரண்டாம் நெப்போலியன்
ஆ) மூன்றாம் நெப்போலியன்
இ) ஆர்லியன்ஸின் கோமகன்
ஈ) நான்காம் நெப்போலியன்
Answer:
ஆ) மூன்றாம் நெப்போலியன்

Question 10.
கோட் டெலா நேச்சர் என்ற நூலின் ஆசிரியர் …………….. ஆவார்.
அ) சார்லஸ் ஃபூரியர்
ஆ) எட்டியன்-கேப்ரியல் மோராலி
இ) செயின்ட் சீமோன்
ஈ) பகுனின்
Answer:
ஆ) எட்டியன்-கேப்ரியல் மோராலி

Question 11.
கூற்று : தேசியவாதத்திற்கு 1848ஆம் ஆண்டு தனித்துவமான வெற்றிகள் கிடைத்த ஆண்டாகும்.
காரணம் : சர்வாதிகாரம் மறைந்தது போன்ற பிம்பம் சிறிது காலத்திற்குத் தோன்றியது.
அ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. கால்
ஆ) கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 12.
இரண்டாம் சர்வதேசம் ……………… நகரில் துவக்கப்பட்டது.
அ) பாரிஸ்
ஆ) பெர்லின்
இ) லண்டன்
ஈ) ரோம்
Answer:
அ) பாரிஸ்

Question 13.
இளம் இத்தாலி இயக்கம் …………….. ஆண்டு துவக்கப்பட்டது.
அ) 1822
ஆ) 1827
இ) 1831
ஈ) 1846
Answer:
இ) 1831

Question 14.
பார்மா, மொடினா, டஸ்கனி ஆகிய பகுதிகள் ………………. க்குப் பிறகு பியட்மாண்ட சார்டினியா இராஜ்ஜியத்தோடு இணைக்கப்பட்டது.
அ) பொதுவாக்கெடுப்பு
ஆ) சார்லஸ் ஆல்பர்டின் படையெடுப்பு
இ) சால்ஃபரினோ உடன்படிக்கை
ஈ) வில்லாஃப்ராங்கா உடன்படிக்கை
Answer:
அ) பொதுவாக்கெடுப்பு

Question 15.
“இரு உலகங்களின் நாயகன் “ என கொண்டாடப்பட்டவர் ………………. ஆவார்.
அ) சார்லஸ் ஆல்பிரட்
ஆ) பிஸ்மார்க்
இ) மூன்றாம் நெப்போலியன்
ஈ) கரிபால்டி
Answer:
ஈ) கரிபால்டி

Question 16.
……………… இடையே ஏழு வாரப் போர் நடந்தது.
அ) டென்மார்க், பிரஷ்யா
ஆ) பியட்மாண்ட்-சார்டினியா, ஆஸ்திரியா
இ) பிரான்ஸ், பிரஷ்யா
ஈ) ஆஸ்திரியா, பிரஷ்யா
Answer:
ஈ) ஆஸ்திரியா, பிரஷ்யா

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 17.
பிராங்கோ -பிரஷ்யப் போர் உருவாகக் காரணமாக விளங்கியது ……………… ஆகும்
அ) காஸ்டெய்ன் மாநாடு
ஆ) எம்ஸ் தந்தி
இ) பிரேக் உடன்படிக்கை
ஈ) அல்சேஸ், லொரைன் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதில் எழுந்த சர்ச்சை
Answer:
ஆ) எம்ஸ் தந்தி

Question 18.
ஜெர்மன் தேசத்திற்கு தொடர் சொற்பொழிவுகளை வழங்கியவர் …….. ஆவார்.
அ) ஜோஹன் வான் ஹெர்டர்
ஆ) பிரைட்ரி ஷெலிகெல்
இ) J.G. ஃபிக்ட்
ஈ) ஆட்டோ வான் பிஸ்மார்க்
Answer:
இ) J.G. ஃபிக்ட்

Question 19.
கூற்று : J.G. ஃபிக்ட் ஜெர்மானியர்களிடையே தேசியவாதத்தை ஊட்டினார்.
காரணம் : ஃபிக்ட் இளம் இத்தாலி இயக்கத்தை சேர்ந்தவர் ஆவார்.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
இ) கூற்று சரி. காரணம் தவறு.

Question 20.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியானவற்றைத் தெரிவு செய்து பொருத்துக

அ  மெட்டர்னிக் 1. பியட்மாண்ட்-சார்டினியாவின் ஆட்சியாளர்
ஆ பத்தாம் சார்லஸ் 2 பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர்
இ (கிராமோன்ட் 3 பிரெஞ்சு மன்னர்
ஈ சார்லஸ் ஆல்பர்ட் 4 ஆஸ்திரிய-ஹங்கேரியின் பிரதம அமைச்சர்

அ) 1. 3, 4, 2
ஆ) 4, 2, 1, 3
இ) 4, 1, 2, 3
ஈ) 4, 3, 2, 1
Answer:
ஈ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
ஆறு சரத்துகளைக் கொண்ட 1838ஆம் ஆண்டின் மக்களின் பட்டயத்தைப் பற்றி எழுதுக. (மார்ச் 2020)
Answer:

  • அனைவருக்கும் வாக்குரிமை.
  • அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்களித்தல்.
  • வேட்பாளர்களுக்கு சொத்துத்தகுதி நிர்ணயிக்கலாகாது.
  • ஏழைகள் தேர்தலில் போட்டியிடவும் பதவிகளில் இடம்பெறவும் வழிவகை செய்யும் முகமாக மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நிதி சலுகைகளை வழங்குதல்.
  • சம அளவிலான தேர்தல் மாவட்டங்களையும், சம அளவிலான பிரதிநிதித்துவத்தையும் வழங்கல்.
  • வருடாந்திரப் பாராளுமன்றம்.

Question 2.
அறுபது நபர்கள் வழங்கிய அறிக்கை பற்றி நீவீர் அறிந்தது யாது?
Answer:
1864இல் அறுபதுகளின் அறிக்கை :

  • 1789இன் பிரெஞ்சு புரட்சி அரசியல் சமத்துவத்தை மட்டுமே ஏற்படுத்தியதென்றும், பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அறிவித்தது.
  • அவர்கள் உழைக்கும் வர்க்கத்தை உழைப்பாளிகளே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

Question 3.
எதனால் 1848ஆம் ஆண்டின் ஜூன் 24 முதல் 26 வரையான காலம் இரத்த ஜூன் தினங்கள்’ எனக் கொள்ளப்படுகின்றன?
Answer:

  • ஏப்ரல் 1848இல் நடத்தப்பட்ட தேர்தல்களில் மிதவாதிகள் சோஷலிசவாதிகளில் சொற்பமானவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
  • புதிதாகப் பதவியேற்ற சபையினர் சமூக ஒழுங்கிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற வாதத்தை முன்வைத்து லூயி பிளாங்கின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பட்டறைகளை மூடினர்.
  • தொழிலாளர்கள் அதற்குத் தக்க பதிலடி கொடுத்ததோடு அரசை எதிர்க்கவும் துணிந்தனர்.
  • ஜூன் 24-26ஆம் தேதிகளுக்கிடையே ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படவும் பதினோராயிரம் புரட்சியாளர்கள் சிறையிலடைக்கப்பட்டும், நாடு கடத்தப்பட்டும் தண்டிக்கப்பட்டார்கள்.
  • இக்காலம் இரத்தந்தோய்ந்த ஜூன் தினங்கள்’ என்று குறிப்பிடப்படுகின்றன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 4.
மெட்டர்னிக் சகாப்தத்தில் ஐரோப்பிய கூட்டு (Concert of Europe) எத்தகைய பங்காற்றியது என்பதனை விளக்குக.
Answer:
மெட்டர்னிக் சகாப்தத்தில் ஐரோப்பிய கூட்டின் பங்கு:

  • மெட்டர்னிக்கின் தலைமையில் செயலாற்றிக் கொண்டிருந்த முடியரசை ஆதரிக்கும் முன்னேற்றம் விரும்பா பழமைவாத சக்திகள் ஐரோப்பிய இணைவின் (Concert of Europe) வாயிலாக கொடுங்கோன்மை முறையை கையாளத்துவங்கின.
  • ஐரோப்பாவில் ஒழுங்கை நிலைநிறுத்தி, அதிகார சமநிலை காத்திடவும் பாடுபட்டது.
  • உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவகாரத்தில் தலையிட்டது.
  • தங்கள் முடிவை பதிக்கப்பட்ட நாடுகளின் மீது திணித்தது.

Question 5.
இத்தாலியை மெட்டர்னிக் “வெறும் பூகோள வெளிப்பாடே” என ஏன் கூறினார்?
Answer:

  • வியன்னா காங்கிரசால் இத்தாலி எட்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.
  • இத்தாலியின் வட பகுதி ஆஸ்திரியர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
  • 19 ஆம் நூற்றாண்டில் இத்தாலி 12 மாநிலங்கள் உள்ளடக்கியதாக இருந்தது.
  • எனவே மெட்டர்னிக் இத்தாலியை “வெறும் பூகோள வெளிப்பாடே” என்று கூறினார்.

Question 6.
இரவலர் சட்டங்கள் பற்றி விவரமாக எழுதுக. (மார்ச் 2020 )
Answer:
இரவலர் சட்டங்கள் (Poor Laws):
பிரிட்டனில் எலிசபெத் அரசியின் ஆட்சிக்காலத்தில் இரவலர் சட்டங்கள் இயற்றப்பட்டு (1597-98) அதன் மூலமாக வயது முதிர்ந்தோருக்கும், நோயாளிகளுக்கும், ஏழை சிறார்களுக்கும், ஆற்றலிருந்தும் வேலை வாய்ப்பில்லாமல் தவித்தோருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது.

Question 7.
1864இல் துவங்கப்பட்ட முதல் பன்னாட்டு உழைக்கும் ஆண்களின் சங்கம் ஆற்றிய பங்கை விளக்குக.
Answer:

  • 1864இல் அவரது சிந்தனையின் தாக்கத்தால், பன்னாட்டு உழைக்கும் ஆண்களின் சங்கம் என்ற அமைப்பு உருவானது.
  • பன்னாட்டு உழைக்கும் மக்களின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதே அதன் நோக்கமாக விளங்கியது.
  • இப்பன்னாட்டு உழைப்பாளரமைப்பில் மிதவாதிகள் கலந்துவிடாமலும் ஃபெர்டினான்ட் லசால், பகுனின் போன்ற சோஷலிசவாதிகள் நுழைந்துவிடாமலும் மார்க்ஸ் எச்சரிக்கையோடு முனைந்து செயல்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 8.
கார்பொனாரி இத்தாலிய ஐக்கியத்திற்கு செய்த தொண்டுகளை முன்வைத்து குறிப்பு வரைக.
Answer:

  • சுதந்திர கருத்துக்களையும், நாட்டுப்பற்றையும் வலியுறுத்திய கார்பொனாரி போன்ற இரகசிய குழுக்கள் 1820களில் அதிகமாகப் பரவியது.
  • தாராளமயவாத கருத்துக்களையும், தேசியவாதத்தையும் இக்குழுக்கள் உயிர்த்தெழச் செய்தன.
  • நேப்பிள்ஸ், பியட்மாண்ட், லம்பார்டி ஆகியப் பகுதிகளில் புரட்சி வெடித்தது.

Question 9.
ஃபிராங்கோய்ஸ் பபேஃப் என்பவர் யார்?
Answer:
பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்தில் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்த அரசியல் கிளர்ச்சியாளரான ஃபிராங்கோய் ஸ்பபேஃப் புரட்சி விவசாயிகள், தொழிலாளர்களின் தேவைகளை வெளிக்கொணரவில்லை * என்றதோடு தனியுடைமையை ஒழித்து நிலங்களைப் பொதுவுடைமையாக்க வேண்டும் என்று வாதிட்டார்.

Question 10.
ஸோல்வரெய்ன் (Zollverein) எனப்படுவதன் முக்கியத்துவம் யாது?
Answer:

  • பிரஷ்யா 1834 இல் ஸோல்வரெய்ன் என்ற சுங்க ஐக்கியத்தை வெற்றிகரமாய் ஏற்படுத்தியது.
  • ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் நீங்கலாக மற்ற ஜெர்மானிய பகுதிகள் 1840களில் இணையவும் அவையாவும் ஒரு பொருளாதார நிர்வாகத்தின் கீழ்வரவும் தகுந்த சூழல் உருவானது.

Question 11.
போலியான பொருளாதார பகட்டுக்காலம் பற்றி நீவீர் அறிவதை கூறுக.
Answer:

  • போலியான பொருளாதார பகட்டுக் காலமாகச் சொல்லப்படும் காலம் உழைக்கும் வர்க்கம் தீவிரமாக ஒன்று திரட்டப்பட்ட சகாப்தம் துவங்கிய காலமாகும்.
  • சோஷலிசமும், தொழிலாளர் இயக்கங்களும் பல நாடுகளில் பரந்து விரிந்து ஏற்றம் பெறலாயின.
  • வறுமையும் ஏற்றத்தாழ்வும் அன்றாட சமூக வாழ்வின் அங்கமாயின.
  • சிலரிடம் மட்டுமே அதிகமாக செல்வங்கள் குவிந்து கிடப்பது வெளிப்படையாகவே தெரியவந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 12.
அமெரிக்கப் பொருளாதார வரலாற்றில் 1873ஆம் ஆண்டின் முக்கியத்துவம் யாது?
Answer:

  • வியன்னா பங்குச்சந்தை மே, 1873இல் வீழ்ச்சியுற்றதே அதை சுட்டும் விதமாக அமைந்தது.
  • இப்பெருமந்தம் உலகளாவிய ஒன்றாக இருந்து 1896 வரை தொடர்ந்தமையால் நீண்டகாலப் பெருமந்தம் என்று வர்ணிக்கப்படுகிறது.
  • அது ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் மிகக்கடுமையாகப் பாதித்தது. அமெரிக்க இருப்புப்பாதை நிறுவனம் திவாலானது. ஜெர்மானியப் பங்குகளின் மதிப்பு 60 சதவிகிதம் வரை சரிந்தது.
  • விலைகளின் வீழ்ச்சியால் விவசாயமும் பெரும் பாதிப்புக்குள்ளானது.

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் – தெளிவுப்படுத்துக.
Answer:

  • ஐரோப்பாவில் எழுந்த மக்களாட்சி உணர்வையும், தேசியவாதப் போக்கையும் ஒடுக்க முனைந்த ‘ஆஸ்திரிய-ஹங்கேரியின் பிரதம அமைச்சர் மெட்டர்னிக்கின் வரலாற்று சிறப்புமிக்க கூற்றுதான் “பிரான்சு தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் பிடிக்கும்” என்பது.
  • புரட்சி வெடித்த 1789, 1830, மற்றும் 1848 ஆண்டுகளில் பிரான்ஸ் தும்மியதாக கருத்தில் கொள்ள வேண்டும்.

Question 2.
“சோஷலிச கருத்துக்கள் உருப்பெற தொழில்புரட்சியே முகாந்திரம் அமைத்தது” ஆதாரப் பின்புலத்தோடு உறுதிப்படுத்துக.
Answer:

  • ஆரம்பகட்டத்தில் ஒருங்கிணைக்கப்படாமலிருந்த தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளின் கருணையை முழுதும் நம்பி வாழ்ந்தனர்.
  • ஒருங்கிணைந்த அமைப்பு முறையும் ஒற்றுமையும் தொழிலாளர்களிடையே ஏற்படாத வரையில் நிரந்தரமான முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தார்கள்.
  • ஆகவே அவர்கள் தொழிற்சங்கங்களை ஏற்படுத்த விழைந்தனர்.
  • 1824இல் தொழிற்சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது.
  • தொழிற்சங்கங்களின் அபரிதமான வளர்ச்சியைத் தொடர்ந்தது.
  • இதன் விளைவாக முதலாளித்துவத்திற்கு மாற்றானதொரு சிந்தனையளவில் வலுப்பெற்று அதுவே சோஷலிசக் கருத்துக்கள் உருவாக வழிவகுத்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 3.
தனது தொழிற்சாலையில் பணியிலிருந்த ஊழியர்களின் முன்னேற்றத்திற்கு இராபர்ட் ஓவன் மேற்கொண்ட முன்னோடி தன்மையிலான நடவடிக்கைகளை மதிப்பிடுக.
Answer:

  • மான்செஸ்டர் நகரின் தொழிற்சாலை அதிபர்களில் மனிதாபிமானம் கொண்டவராக இராபர்ட் ஓவன் திகழ்ந்தார்.
  • தொழிற்சாலையில் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காகப் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.
  • 10 வயதிற்கு குறைந்த குழந்தைகளைப் பணியமர்த்த மறுத்தார்.
  • தனியுடைமையையும், லாபநோக்கத்தையும் விமர்சித்தார்.
  • “சமூகத்தின் புதிய பார்வை” என்ற தனது நூலில் தேசிய கல்வி கொள்கை, வேலை வாய்ப்பற்றோருக்கு பொதுப்பணி வழங்கல், வறுமை ஒழிப்பு சட்டங்களில் சீர்திருத்தம் போன்றவற்றை விவாதித்தார்.
  • சமூக சமத்துவத்தையும், கூட்டுறவையும் முன்னிறுத்தி ஒரு கற்பனைவாத சோஷலிச கோட்பாட்டை உருவாக்கினார்.

Question 4.
பிரான்சில் 1830இல் நடந்த ஜூலை புரட்சி ஐரோப்பாவின் பிற்பகுதிகளை எவ்வாறெல்லாம் பாதித்ததென்பதை எடுத்தெழுதுக.
Answer:

  • ஐரோப்பாவின் பிற பகுதிகளில் கிளர்ச்சி தொடர்ந்து வெடித்தவாறே இருந்தது.
  • புரட்சி நெதர்லாந்தில் வெற்றி பெற்றது.
  • பெல்ஜியம் பிரிக்கப்பட்டு தனி சுதந்திர நாடானது.
  • துருக்கியர்களின் ஆட்சி அதிகாரத்தில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்த கிரேக்கர்கள் விடுதலை (1832) அடைந்தார்கள்.
  • ஆனால் ரஷ்ய சார் மன்னருக்கு எதிரான போலந்து நாட்டினரின் போராட்டம் தோல்வியை அடைந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 5.
இங்கிலாந்தோடும், பிரான்சோடும் முழுமையான தேசங்களாக இத்தாலியும், ஜெர்மனியும் ஏன் உருப்பெற்று வெளிப்பட முடியவில்லை என்பதற்கான காரணங்களைப் பட்டியலிடுக.
Answer:

  • இத்தாலியின் குறுநாடுகள் விழிப்புணர்வுடன் இருந்தாலும் அவற்றில் ஃபிளாரன்ஸின் மெடிஸி போன்றும், மிலானின் கொடூர விஸ்கான்டி, மத்திய இத்தாலியின் சீஸர் போர்ஜியா போன்றவர்களால் கொடுங்கோல் ஆட்சியே நடத்தப்பட்டு வந்தது.
  • புனித ரோமானியப் பேரரசு என்பது பெயரளவில் மட்டுமே பேரரசராக விளங்கியது.
  • ஜெர்மனி 300லிருந்து 400 வரையான தனி நாடுகளைக் கொண்டதாக விளங்கியது.
  • மன்னர்களே இந்நாடுகளை நிலப்பிரபுத்துவ அராஜகத்திலிருந்து காப்பாற்றி தேசங்களாக மாற்றினர்.
  • தேசிய அரசுகளாக ஏற்றம் பெறத் தேவையான சூழல் தேசியவாதம் பரவிய 19 ஆம் நூற்றாண்டில்தான் இத்தாலியிலும் ஜெர்மனியிலும் ஏற்பட்டது.

Question 6.
பாரிஸ் கம்யூனை நோக்கி வழிநடத்திச் சென்ற சம்பவங்களின் அடிச்சுவட்டை ஆராய்க.
Answer:

  • தேசிய மன்றத்தில் பெரும்பான்மையாக மன்னராட்சி ஆதரவாளர்கள் இருந்தது பாரிஸ் நகர மக்கள் – மனதைக் கசப்படையச் செய்தது.
  • தலைமைக்கு தையர்ஸ் என்ற 71 வயது மனிதரை நியமித்தமை குடியரசின் மீது மக்களை ஏமாற்றங்கொள்ளச் செய்தது.
  • முறையான இராணுவம் பிரஷ்யாவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் கலைத்து விடப்பட்டமையால் – பாரிசின் மக்களே ஆயுதமேந்தலானார்கள்.
  • லெக்கோம்ட் என்ற இராணுவத் தலைவன் கூட்டத்தை நோக்கி மும்முறை சுடச்சொல்லியும் ராணுவ வீரர்கள் அவ்வுத்தரவை ஏற்கவில்லை.
  • கூட்டம் இராணுவ வீரர்களை சகோதரர்களாகப் பாவித்து அவர்களின் துணையோடு லெக்கோம்டையும், மற்ற அவரது அதிகாரிகளையும் கைது செய்தனர். தையர்சும், அவரது அரசும் தலைநகரை விட்டு அகன்றன.
  • உலகின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்று ஆயுதமேந்திய உழைப்பாளர்களின் வசம் இருந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 7.
ஏழை மக்களும் உழைக்கும் வர்க்கமும் ஏற்றம் பெற பாரிஸ் கம்யூன் எடுத்த நடவடிக்கைகளை விவாதத்திற்கு உட்படுத்துக.
காக்க (மார்ச் 2020)
Answer:

  • அடுமனையில் இரவுப்பணியைத் தடை செய்தது.
  • மூடப்பட்ட தொழிற்சாலைகளை தொழிலாளர்களைக் கொண்டே திறந்தது.
  • விதவைகளுக்கு ஓய்வூதியமும், குழந்தைகளுக்குக் கட்டணமில்லாக் கல்வியும் கொடுத்தது.
  • முற்றுகை காலத்தில் வாங்கப்பட்ட கடன்களை வசூலிக்காமல் தடுத்தது.

Question 8.
பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் நீண்ட கால பெருமந்த காலத்தில் உருவான தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் பற்றி குறிப்பு வரைக.
Answer:

  • 1892ல் பிரிட்டனில் ஹோம்ஸ்டெட் எஃகு பட்டறை போராட்டம் துப்பாக்கி சண்டை வரை போனது.
  • 1894ல் அமெரிக்க இருப்புப்பாதை தொழிற்சங்கம் பங்கு பெற்ற புல்மேன் வேலை நிறுத்தப் போராட்டம்
    நிர்வாகத்தால் ஒடுக்கப்பட்டது.
  • 1880ல் பிரிட்டன் மகளிர் தீப்பெட்டி போராட்டம் வெற்றி பெற்றது.
  • 1889 ஆம் ஆண்டு கப்பல் செப்பனிடும் பட்டறை தொழிலாளர் போராட்டம் வெடித்தது.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கியத்துவம் பெற்ற கூட்டு சிந்தனையாளர்களை (Collectivist Thinkers) அடையாளப்படுத்தி அவர்கள் சோஷலிச சிந்தனையை செழுமையாக்க ஆற்றிய பங்கைக் கூறுக.
Answer:
19 ஆம் நூற்றாண்டின் முக்கியமான கூட்டு சிந்தனையாளர்களாக

  • எட்டியன்-கேப்ரியல் மொராலி,
  • க்ளாட்ஹென்றி செயின்ட்-சைமன்,
  • சார்லஸ் ஃபூரியர்,
  • இராபர்ட் ஓவன்,
  • பியர்ரி-ஜோசப் பிரௌதன் ஆகியோரை அடையாளம் காணலாம்.

எட்டியன்-கேப்ரியல் மொராலி:
கற்பனையுலகு குறித்த சிந்தனையாளரான இவர் 1755ல் தனது நூலான கோட்டேலா நேச்சர் என்பதில் தனியுடைமையைக் கண்டித்து சமூகத்தைப் பொதுவுடைமை அமைப்பாக மாற்ற முன்மொழிந்தார்.

க்ளாட்ஹென்றி செயின்ட்-சைமன் (1760-1825):

  • செயின்ட் சைமன் பிரிட்டிஷாருக்கு எதிராக அமெரிக்க சுதந்திரப் போரில் பங்கேற்ற ஒரு பிரெஞ்சு உயர்குடி மகனாவார்.
  • இவர் சமயகுருக்களின் இடத்தை விஞ்ஞானிகளைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

சார்லஸ் ஃபூரியர் (1772-1837):

  • சமூக சூழலே மனித இனத்தின் கவலைகளுக்கு முதல் காரணம் என்று நம்பினார்.
  • அனைவருக்கும் குறைந்தபட்ச தேவைகள் கிடைத்துவிட்டால் சமூக மற்றும் பொருளாதார ஏற்றதாழ்வுகளை கடந்து விடமுடியும் என்று வாதிட்டார்.
  • நல்லிணக்கமும், தன்னிறைவும் கொண்ட ஃபலான்ஸ்டெரெஸ் என்ற கூட்டுறவு சமூகத்தை யூகித்தார்.

இராபர்ட் ஓவன் (1771-1858):

  • மான்செஸ்டர் நகரின் தொழிற்சாலை அதிபர்களில் மனிதாபிமானமிக்கவர் இராபர்ட் ஓவன்.
  • 1818இல் தான் வெளியிட்ட நூலான ‘சமூகத்தின் புதிய பார்வை’ என்பதில் தேசிய கல்வி கொள்கை, வேலை வாய்ப்பற்றோருக்கு பொதுப்பணி வழங்கல், வறுமை ஒழிப்பு சட்டங்களில் சீர்திருத்தம் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.
  • சமூக சமத்துவத்தையும், கூட்டுறவையும் முன்னிறுத்தி ஒரு பெரும் கற்பனைவாத சோஷலிச கோட்பாட்டை உருவாக்கினார்.

பியர்ரி-ஜோசப் பிரௌதன் (1809-1865):

  • தான் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் உடைமைகள் யாவும் திருடப்பட்டவையே என்றார்.
  • அனைத்து வகை அர்சுகளும் அடக்குமுறை தன்மை கொண்டவையே என்றார்.
  • கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோரின் சோஷலிச சிந்தனை கம்யூனிசம் எனப்பட்டது.
  • மார்க்ஸ் தனது தாஸ் கேப்பிடல் நூலில் உழைக்கும் வர்க்கத்தை முதலாளி வர்க்கம் சுரண்டுவதை கூறியுள்ளார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 2.
1848ஆம் ஆண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பாவின் பிறபகுதிகளில் அரசியல் தோல்விகளை
ஏற்படுத்தியமை குறித்து விவாதித்து எழுதுக.
Answer:

  • பாரிஸ் நகரில் தாமாக உதித்த மக்களின் புரட்சி 1848 ஆம் ஆண்டு பிப்ரவரி புரட்சி.
  • 1848இல் பிரான்சின் பிப்ரவரி புரட்சியைத் தொடர்ந்து இத்தாலியின் மாநிலங்களான பியட்மாண்ட்சார்டினியா, சிசிலி, போப்பாண்டவரின் பகுதிகள், மிலான், லம்பார்டி, வெனிஷியா ஆகிய பகுதிகளில் மக்களின் கிளர்ச்சி மீண்டும் வெடித்தது.
  • அதன் விளைவாக இப்பகுதிகளில் தாராளக்கூறுகளைக் கொண்ட அரசியல்சாசனம் வழங்கப்பட்டது.
  • புரட்சி பகுதிகளின் மன்னர் சார்லஸ் லம்பார்டி வெனிஷியா மீது படையெடுத்தார்.
  • ரஷ்யாவின் உதவியுடன் ஆஸ்திரியா இவரைத் தோற்கடித்தது.
  • மன்னர் சார்லஸ் பட்டம் துறந்ததோடு தனது மகன் இரண்டாம் விக்டர் இம்மானுவேலை அடுத்த மன்னராக்கினார்.
  • பியட்மாண்ட்-சார்டினியா தோல்வியை அடைந்தது போல பல குறு இராஜ்ஜியங்களில் எழுந்த கிளர்ச்சிகள் ஒடுக்கப்பட்டாலும், தாராளவாத கருத்துக்களும், தேசியவாதமும் தாக்குப்பிடித்து நின்றன.

Question 3.
இத்தாலிய இணைவு எவ்வாறு சாத்தியமாக்கப்பட்டது?
Answer:
இத்தாலியின் ஒருங்கிணைவிற்கான முக்கிய ஆளுமைகளாக கவூர் மூளையாகவும், மாஸினி ஆன்மாவாகவும், கரிபால்டி வாட்படையாகவும் நின்று இத்தாலியை ஒருங்கிணைத்தார்கள் என்றே கருதப்படுகிறது.

மாஸினி (1805-1872):

  • இத்தாலிய ஒருங்கிணைவிற்கு அடித்தளமிட்டவர். 1831ல் இளம் இத்தாலி என்னும் இயக்கத்தை தொடங்கி, இத்தாலிய ஒருங்கிணைவிற்காகப் பாடுபட்டார்.
  • அதனால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
  • 1848ஆம் ஆண்டு வடக்கு இத்தாலியில் புரட்சி வெடித்த சூழலைப் பயன்படுத்தி ரோமிற்கு திரும்பினார்.
  • குடியரசு பிரகடனப்படுத்தப்பட்ட பின் பொறுப்பேற்ற மூவரடங்கிய நிர்வாகக்குழுவில் மாஸினியும் பங்குபெற்றார்.

கவுன்ட்க வூர் (1810 – 1861):

  • 1847இல் ரிசார்ஜிமென்டோ என்ற செய்தித்தாளை பிரசுரித்தார். அச்செய்தித்தாளின் பெயரே இத்தாலிய இணைவு சொல்லாக உருவானது.
  • சார்டினியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றபின் போரையும், இராஜதந்திரத்தையும் பயன்படுத்தி இத்தாலி இணைவை ஏற்படுத்த முயன்றார்.

கரிபால்டி:

  • கொரில்லா போர் முறையைக் கொண்டு இத்தாலியை ஒருங்கிணைக்க முயன்றார். சிசிலிய மக்கள் முடியாட்சிக்கு எதிராக போராடிய நேரத்தில் அவர்கள் அழைப்பை ஏற்று தன்னார்வலர்களுடன் சிசிலியை அடைந்தார்.
  • 20000 படைவீரர்கள் கொண்ட நேப்பிள்சின் படைகளை வென்றார்.
  • பிரெஞ்சுப் படைகள் 1871இல் நடந்த பிராங்கோ-பிரஷ்யப் போரில் பின்னடைவைச் சந்தித்து ரோமை விட்டு அகன்றதால் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இத்தாலி ரோமை இணைத்துக் கொண்டது. இவ்வாறாக இத்தாலிய இணைவு முழுமை பெற்றது.

Question 4.
ஒருங்கிணைந்த ஜெர்மனியின் உண்மையான வடிவமைப்பாளர் பிஸ்மார்க்கே என ஏன் சொல்லப்படுகிறது?
Answer:

  • பிரஷ்யாவின் பிரதமராக பதவி வகித்தவர் பிஸ்மார்க். இவர் பிரஷ்யாவின் தலைமையில் ஜெர்மனியை ஒன்றிணைக்கப்பட வேண்டும் என கருதினார்.
  • ஜெர்மனி ஒருங்கிணைவை அடைவதற்கு ‘இரத்தமும், இரும்பும்’ என்ற வலுவான கொள்கையைக் கைக்கொண்டார்.

ஷ்லெஸ்விக் – ஹால்ஸ்டின் சிக்கல் (டென்மார் உடனான போர்):

  • இப்பகுதி டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருந்த ஜெர்மானிய மாநிலங்களாகும்.
  • 1864இல் ஆஸ்திரிய – பிரஷ்யா கூட்டுப்படைகள் டென்மார்க்கைப் போரில் தோற்கடித்தன.
  • வியன்னா உடன்படிக்கையின் கீழ், டென்மார்க் இவ்விரு பகுதிகளையும் பிரஷ்யா-ஆஸ்திரியாவிடம் ஒப்படைத்தது.

ஆஸ்திரிய -பிரஷ்யப்போர் (1866):

  • தனது இராஜதந்திர செயல்பாடுகளின் வாயிலாக பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவின் நடுநிலையை பிஸ்மார்க் உறுதி செய்து கொண்டார்.
  • பியட்மாண்ட்-சார்டினியாவின் ஆதரவைப் பெற்றார்.
  • பெரும் சக்திகள் எதுவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவளிக்காது என்பதனை உறுதி செய்து கொண்ட பிஸ்மார்க் பிரஷ்யாவை தாக்க ஆஸ்திரியாவைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டார்.
  • ஏழு வாரப் போர் நடைபெற்றது.
  • பிரஷ்யா ஆஸ்திரியாவை பொஹிமியாவிலுள்ள கொனிக்ராட்ஸ் போரில் தோற்கடித்தது.
  • பிரேக் உடன்படிக்கை மூலம் போருக்கு முடிவு காணப்பட்டது. ஆஸ்திரியா ஜெர்மானியக் கூட்டமைப்பிலிருந்து விலகியது.

பிராங்கோ -பிரஷ்யப்போர் (1870-71):

  • தெற்கு ஜெர்மானிய மாகாணங்களை ஒன்றிணைக்கும் பொருட்டு பிரான்சை எதிர்க்க துணிந்தார்.
  • பிரஷ்ய மன்னர் பிஸ்மார்கிற்கு தந்தி அனுப்பினார்.
  • அதனை பிஸ்மார்க் மாற்றியமைத்தார். இதனால் எம்ஸ் தந்தி பிராங்கோ-பிரஷ்யப் போர் ஏற்பட வழிவகுத்தது.
  • 1871இல் ஏற்பட்ட பிராங்க்பர்ட் உடன்படிக்கையின் வாயிலாக முடிவிக்கு கொண்டுவரப்பட்டது.
  • வெர்செய்ல்ஸ் அரண்மனையில் பிரஷ்ய மன்னர் முதலாம் வில்லியம் வடக்கு ஜெர்மானிய கூட்டமைப்பிற்கும், தெற்கு ஜெர்மானிய மாகாணங்களுக்கும் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
  • இவ்வாறு இராஜதந்திர உத்திகளையும், போர் நடவடிக்கைகளையும் கொண்டு ஜெர்மானிய ஒருங்கிணைவின் வடிவமைப்பாளராக பிஸ்மார்க் திகழ்ந்தார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. ஐரோப்பாவில் நெப்போலியன் போனபார்ட் நடத்திய முக்கியமான போர்கள் பற்றிய தகவல்களை மாணவர்கள் சேகரிக்கலாம்.
2. 1830ஆம் ஆண்டின் ஜூலைப் புரட்சியையும் 1848ஆம் ஆண்டின் பிப்ரவரி புரட்சியையும் ஒப்பிடலாம்.
3. தேசியவாத எதிர்ப்பையும் புரட்சி – விரோதப் போக்கையும் கருத்தாக்கமாகக் கொண்டிருந்த மெட்டர்னிக் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எவ்வாறு ஐரோப்பாவில் செல்வாக்கு மிக்கவராகத் திகழ்ந்தார் என்பதனை அலசலாம்.
4. அமெரிக்க ஐக்கிய நாடு அதிவேகப் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிய போலியான பொருளாதார – பகட்டுக்காலத்தின் போது ஏன் அந்நாட்டில் பல மக்கள் வறுமை நிலையிலேயே வாழ்ந்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முனையலாம்.

12th History Guide ஐரோப்பாவில் அமைதியின்மை Additional Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
“பிரான்சு தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் பிடிக்கும்” என கூறிய ஆஸ்திரிய-ஹங்கேரி பிரதம் அமைச்சர் ……….
அ) இராபர்ட் ஓவன்
ஆ) ஜோஸப் பிரௌதன்
இ) கிளெமென்ஸ் வான் மெட்டர்னிக்
ஈ) எட்டியன்-கேப்ரியல் மொராலி
Answer:
இ) கிளெமென்ஸ் வான் மெட்டர்னிக்

Question 2.
கோட் டே லா நேச்சர் (Code da la nature) என்ற நூலை எழுதியவர்
அ) செயின்ட் சீமோன்
ஆ) எட்டியன்-கேப்ரியல் மொராலி
இ) பிரௌதான்
ஈ) இராபர்ட் ஓவன்
Answer:
ஆ) எட்டியன்-கேப்ரியல் யொராலி

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 3.
கூற்று : தொழிற்புரட்சி குடியிருப்போடு இணைந்த தொழில் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு தொழிலாளர்களை தொழிற்சாலைக்கு அருகே குடியமர நிர்பந்தித்தது.
காரணம் : கூலியோ ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் மிகக் குறைவு.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
ஆ) கூற்றும் காரணமும் சா.க

Question 4.
தொழில்சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்த ஆண்டு
அ) 1814
ஆ) 1824
இ) 1813)
ஈ) 1826
Answer:
ஆ) 1824

Question 5.
மெட்டர்னிக்கின் சகாப்தம் ……………
அ) 1805-1838
ஆ) 1810-1843
இ) 1815-1848
ஈ) 1825-1858
Answer:
இ) 1815-1848

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 5.
“மகளிர் தீப்பெட்டி தொழிலாளர் போராட்டம்” நடைபெற்ற ஆண்டு ………………
அ) 1874
ஆ) 1880
இ) 1884
ஈ) 1890
Answer:
ஆ) 1880

Question 16.
மான்செஸ்டர் நகரின் தொழிற்சாலை அதிபர்களில் மனிதாபிமானம் கொண்டவராக திகழ்ந்தார்.
அ) செயின்ட் சீமோன்
ஆ) இராபர்ட் ஓவன்
இ) பிரௌதன்
ஈ) கேப்ரியல் மொராலி
Answer:
ஆ) இராபர்ட் ஓவன்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஐரோப்பிய சமூகம் எவ்வாறு இருந்தது?
Answer:

  • நெப்போலியன் வீழ்ச்சிக்குப் பிறகு 40 ஆண்டுகள் நிலையற்ற ஒரு அமைதியே நிலவியது.
  • 1854 முதல் 1871 வரை போர் மூண்டெழ இரண்டு காலனிகள் வழியமைத்து கொடுத்தன.
  • முதலாவதாக, மன்னராட்சி மீண்டும் அமைந்ததும் புரட்சி காலத்தில் ஒழிக்கப்பட்ட நியாயமற்ற சலுகைகள் மீண்டும் தலை தூக்கியதாகும்.
  • இரண்டாவதாக, வியன்னா காங்கிரஸில் பங்கெடுத்த இராஜதந்திரிகள் தேசம் சார்ந்த கோட்பாடுகளை புறந்தள்ளி பின்பற்ற முடியாத பூகோள எல்லைகளை நிர்ணயித்து இருந்ததுமாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 2.
சார்லஸ் ஃபூரியர் பற்றி குறிப்பு தருக.
Answer:

  • சார்லஸ் ஃபூரியர் ஆரம்ப கால கற்பனைவாத சோசலிஸ்டுகளில் ஒருவர்.
  • அவர் சமூக சூழலே மனித இனத்தின் கவலைகளுக்கு முதல் காரணம் என்று நம்பினார்.
  • அனைவருக்கும் குறைந்தபட்ச தேவைகள் கிடைத்துவிட்டால் அதனூடாக சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கடந்து விட முடியும் என்று வாதிட்டார்.
  • மனித இயல்பு நன்மையையே உள்ளடக்கியது என்று கூறிய அவர் “முதற்பாவம்” என்ற சமய மரபை மறுத்தார்.

Question 3.
அரசின்மை வாதம் என்பது என்ன?
Answer:
தா அரசையும் சமூகத்தின் அமைப்பையும் நம்பிக்கை கொண்டு, அதற்காக வலிமையை பயன்படுத்தாமலும், கட்டாயப்படுத்தாமலும், தன்னார்வ அடிப்படையில் கூட்டுறவாக அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர் வாதம் “அரசின்மைவாதம்” எனப்படும்.

Question 4.
கம்யூனைப் பற்றிய மார்க்ஸின் கூற்று யாது?
Answer:
அது முதலாளித்துவத்தின் புதிய உலகம் அதுவரை சந்தித்திராத பெரும் சவால்களை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு அதற்கு எதிராக உருவான வர்க்கத்திற்குப் பெரும் உந்து சக்தியாகவும் விளங்குகிறது என்று கம்யூனைப்பற்றி மார்கஸ் குறிப்பிடுகிறார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 5.
இரு உலகங்களின் நாயகன் என்று அழைக்கப்படுபவர் யார்? ஏன்?
Answer:

  • இரு உலகங்களின் நாயகன் என்று அழைக்கப்படுபவர் கரிபால்டி ஆவார்.
  • இவர் இத்தாலியின் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றியவர்.
  • மாஸினியின் இளம் இத்தாலி இயக்கத்தில் சேர்ந்த அவர், மாஸினி பியட்மாண்டில் நடத்திய கலகத்திலும் கலந்து கொண்டு தென் அமெரிக்காவில் அடைக்கலமானார்.
  • அங்கே இருந்த போராளிகளோடு இணைந்து ரியோகிராண்ட், உருகுவே பகுதிகளை அர்ஜென்டினாவின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க போராடினார். எனவே இவர் இரு உலகங்களின் நாயகன் என அழைக்கப்படுகிறார்.

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
கற்பனைவாத சோஷலிசம் என்ற சொல்லாடலை விளக்குக.
Answer:

  • ஐரோப்பிய சமூகத்தில் உள்ள அனைவரும் வேலைகளை பகிர்ந்து கொண்டு அது போலவே அவர்களின் முயற்சியால் விளைந்த உற்பத்தியைப் பகிர்ந்து கொண்டு ஒரு கூட்டுறவு முறை சமூகத்தை முன்மொழிந்தார்கள்.
  • தங்களுக்கு முன்பாக வாழ்ந்த சோஷலிசவாதிகளை குறிப்பிடவே கார்ல் மார்க்சும், ஃபிரெட்ரிக் ஏங்கல்சும் கற்பனைவாத சோஷலிசம் என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார்கள்.
  • அவ்வாறான கற்பனைவாத சோஷலிசம் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இல்லாத ஒரு சோஷலிச சமூகம் பிறக்கும் என்ற தொலைநோக்குச் சிந்தனையை அவர்கள் ஊக்குவித்தார்கள்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 2.
கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலைப் பற்றி நீவீர் அறிவதென்ன?
Answer:

  • கார்ல் மார்க்சும், ஃபிரெட்ரிக் ஏங்கல்சும் சோஷலிச சிந்தனைக்கு அரும்பங்களிப்பைவழங்கியுள்ளார்கள்.
  • மார்க்சும், ஏங்கல்சும் 1848ஆம் ஆண்டின் புரட்சி நடந்த சமகாலத்தில் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலை வெளியிட்டார்கள்.
  • அதில் மிகவும் புகழ்பெற்ற தொழிலாளர்களைத் திரட்டும் கூக்குரலான “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு ஏதுமில்லை , அணிந்திருக்கும் விலங்குகளைத் தவிர” என்பது 1 இடம்பெற்றிருந்தது.

Question 3.
1848 பிப்ரவரி புரட்சியின் விளைவுகள் யாவை?
Answer:

  • சட்டசபை இயற்றியப் புதிய அரசியல் சாசனத்தின்படி தேர்தல்கள் நடைபெற்றன.
  • குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லூயி நெப்போலியன். 1852இல் மூன்றாம் நெப்போலியன் என்ற பெயரில் பிரான்சு நாட்டின் பேரரசராக முடிசூட்டிக் கொண்டார்.
  • 1848ஆம் ஆண்டு தேசியவாதத்திற்கு வெற்றியாய் அமைந்தது.
  • ஐரோப்பாவின் இடைத்தரகராகவும் தேசியவாதத்தின் பெரும் எதிரியாகவும் கருதப்பட்ட மெட்டர்னிக் மாறுவேடத்தில் வியன்னாவை விட்டு வெளியேறினார். அதன்
  • ஹங்கேரி. பொஹிமியா, வெனிஸ் ஆகிய விடுதலை பெற்ற நாடாக மாறியது.
  • சார்டினியாவின் மன்னராக சார்லஸ் ஆல்பர்ட் ஆஸ்திரியா மீது போர்ப் பிரகடனம் செய்தார்.
  • மிலான் ஆஸ்திரியர்களை வெளியேறச் செய்தது. சர்வாதிகாரப்போக்கு சிறிது காலம் மறைந்தது போன்ற பிம்பம் ஏற்பட்டது. இது

Question 4.
மாபெரும் ஜெர்மனி என்ற சிந்தனையாளர்கள் பற்றி கூறுக.
Answer:

  • 1848இல் தேர்தல் மூலம் சட்டசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு ஃப்ராங்க்பர்ட் அவை கூட்டப்பட்டது.
  • இதில் தெரிந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஜெர்மானிய தேசத்தைக் கட்டியெழுப்ப முடியுமென்று நம்பிய தாராளவாதிகள் ஆவர்.
  • இதில் மாபெரும் ஜெர்மனி’ என்ற சிந்தனையை முன்வைத்த பிரதிநிதிகள் ஹங்கேரி நீக்கப்பட்ட ஆஸ்திரியாவையும் உள்ளடக்கி, அதிக எண்ணிக்கையில் ஜெர்மன் மொழி பேசுவோரின் ஒருங்கிணைந்த நாடாக்கி அதன் மன்னராக ஆஸ்திரிய அரசருக்கு முடிசூட்ட வேண்டும் என்று நினைத்தார்கள்.
  • இது மாபெரும் ஜெர்மனி என்ற சிந்தனையாளர்களின் எண்ணமாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
நெப்போலியன் போனபார்ட்டின் வீழ்ச்சியை விவரி (அல்லது) நெப்போலியன் போனபார்ட்டின் இறுதிகால போர் நிகழ்ச்சிகளையும் விளைவுகளையும் விவரி.
Answer:

  • நெப்போலியன் போனபார்ட்டின் ஆட்சி சில ஆண்டுகள் மட்டுமே வெற்றிகரமான பாதையில் நகர்ந்தது.
  • ஆனால் பிரிட்டிஷாருடன் 1805ல் நடைபெற்ற கடல் போரில் படுதோல்வி அடைந்தார்.
  • ஸ்பெயின் நாடு 1808இல் நெப்போலியனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது. வெலிங்டன் தலைமையிலான பிரிட்டிஷ் படை. பிரெஞ்சுப் படைகளை அத்தீபகற்பத்திலிருந்து வெளியேற்றியது.
  • நெப்போலியன் 600.000 வீரர்களைக் கொண்ட பெரும் படைப்பிரிவுடன் 1812 இல் போர் தொடுத்து கடுமையான சரிவை எதிர்கொண்டார்.
  • நெப்போலியன் பட்டம் துறந்து 1814ல் எல்பாவிற்கு, மாடு கடத்தப்பட்டார்.
  • 1815இல் மீண்டும் பிரான்சிற்கு திரும்பி அதிகாரத்தை மீட்க முயன்ற போது வாட்டர்லூ போரில் பிரிட்டிஷ், பெல்ஜிய மற்றும் பிரஷ்ய கூட்டுப்படைகளால் தோற்கடிக்கப்பட்டார்.
  • இறுதியாக மேற்கு அட்லாண்டிக்கில் வெகுதொலைவில் அமைந்திருந்த செயின்ட் ஹெலனா தீவில் தனிமையில் சிறைவைக்கப்பட்ட நெப்போலியன் 1821இல் அங்கேயே இறந்தார்.

Question 2.
பிரான்சில் மூன்றாம் குடியரசு உருவாக்கம் பற்றி விவரி.
Answer:

  • செடானில் நடந்த போருக்குப்பின் நெப்போலியன் கைது செய்யப்பட்டு அவரது அரசு கவிழ்க்கப்பட்டது.
  • புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் வரை நாட்டை ஆளும் பொறுப்பு தற்காலிக அரசிடம் விடப்பட்டது.
  • தேசிய சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் பிப்ரவரி 1871இல் நடத்தப்பட்டது.
  • தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முடியாட்சியின் ஆதரவாளர்களாகத் திகழ்ந்தனர்.
  • இதனால் பிரெஞ்சு மக்கள் மன்னராட்சியை விரும்பினர் என்பதை விட அமைதியை நேசித்தார்கள் என்பதே பொருள்.
  • மன்னராட்சி ஆதரவாளர்களும் ஒத்தகருத்துடையவர்களாக இல்லை. 4 ஆண்டுகள் வீணடிக்கப்பட்டு எத்தகைய அரசு பதவியேற்க வேண்டும் என்ற குழப்ப நிலையே நீடித்தது.
  • இறுதியாக, ஜனவரி 1875 ஆம் ஆண்டு தேசிய மன்றம் கூடி மக்களாட்சியை நிறுவுவதாக முடிவு செய்யப்பட்டது.

இதுவே பிரான்சின் மூன்றாம் குடியரசு உருவாக வழிவகுத்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை

Question 3.
கார்ல் மார்க்சும், அறிவியல் சார்ந்த சோஷலிசமும் என்பதை ஆய்வு செய்க.
Answer:

  • கார்ல் மார்க்சும், பிரெட்ரிக் ஏங்கல்சும் சோஷலிச சிந்தனைக்கு அரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்
  • காலப்போக்கில் அவர்களது சிந்தனை மார்க்சியம் அல்லது கம்யூனிசம் என்று வழங்கப்படலாயின.
  • அவர்களோ சோஷலிசம் சார்ந்த அவர்களது சிந்தனைகளை அறிவியல் சார்ந்த சோஷலிசம் என்றே குறிப்பிட்டார்கள்.
  • மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலை வெளியிட்டார்கள். அதில் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை, அணிந்திருக்கும் விலங்குகளைத் தவிர” என்ற தொழிலாளர்களை திரட்டும் கூக்குரல் இருந்தது.
  • நிலப்பிரபுத்துவத்தை எவ்வாறு முதலாளித்துவம் மாற்றி அமைத்ததோ அதே வழியில் முதலாளித்துவத்தை சோஷலிசம் மாற்றி அமைக்கும் என மார்க்ஸ் நம்பினார்.
  • வேலை கொடுக்கும் வசதி படைத்தோருக்கும் வேலை பெறும் நிலையில் உள்ள வறியோருக்கும் இடையே தொடர் முரண்பாடு இருப்பதாக மார்க்ஸ் நம்பினார்.
  • கல்வி நிலை மேம்பாடே, பணியமர்த்தப்பட்ட பெருந்திரளான மக்கள் தங்களின் வர்க்க உணர்வால் உந்தப்பட்டு அது போன்றே ஆளும் வர்க்க உணர்வோடு வாழும் சிறுபான்மை மக்களை எதிர்க்கும் நிலையை ஏற்படுத்தும் என்றார்.
  • வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றி புதிய சமூக அமைப்பிற்கு அடித்தளமமைப்பார்கள் என்று அவர் ஒரு தீர்க்க தரிசியைப் பேசுமியா
  • முதலாளித்துவத்தின் மீதான தமது விமர்சனத்தை முன்வைத்து தான் கேபப்டல (Das Kapital) -என்னும் நூலின் முதல் தொகுதியை 1867இல் கால் மாம் மாட்டார்
  • இந்நூலில் உழைக்கும் வர்க்கத்தை முதலாளி வர்க்கம் சாண்டுவகை கார்ல் மார்க்ள அழுத்தமாகக் கூறியுள்ளார்.

கார்ல் மார்க்சின் எண்ணங்களும் எழுத்துக்களும் அநவிய சாந்தப்படத்துக்கள் என்பதில் ஐயமில்லை .

Leave a Reply