Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 3.2 விருந்தினர் இல்லம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 3.2 விருந்தினர் இல்லம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 1.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளில் உங்கள் மனம் கவர்நத சிலவற்றை வகுப்பறையில் படித்துக்காட்டுக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம் 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம் 2

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது யாது?
அ) வக்கிரம்
ஆ) அவமானம்
இ) வஞ்சனை
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஈ) இவை அனைத்தும்

குறுவினா

Question 1.
எதிர்பாரத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார் ?
Answer:
(i) வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தையும் ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு என்று உருவகப்படுத்துகிறார். இவைகளை நமது இல்லத்திற்கு வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக எண்ண வேண்டும்.

(ii) எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்பாராத விருந்தாளிகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

சிறுவினா

Question 1.
“வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
இக்கவிதை வரிகள் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய கவிதையின் ஆங்கில : 9 மொழியாக்கத்தைத் தமிழில் ‘தாகங்கொண்ட மீளொன்று’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார் என். சத்தியமூர்த்தி. அத்தொகுப்பில் உள்ள ‘விருந்தினர் இல்லம்’ என்னும் கவிதையில் இடம்பெற்றுள்ளது.

பொருள் :
வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் நம்மைத் தேடி வரும் நன்மையோ, தீமையோ எது வந்தாலும் அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

விளக்கம் :
வாழ்க்கை என்பது எல்லாம் கலந்த கலவை. நம் வாழ்க்கை விருந்தினர் இல்லம் போன்றது. நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் மகிழ்ச்சியுடனும் வருபவர்களும் இருப்பர். துக்கங்களைக் கொண்டு வருபவர்களும் இருப்பர். அதுபோன்றுதான் நம் வாழ்க்கையும். ஆனந்தம், மனச்சோர்வு, : – அற்பத்தனம், சிறிது விழிப்புணர்வு என பல வாழ்வியல் வடிவங்கள் நம்மைத் தினம் தினம் விருந்தினர்களைப் போலச் சந்திக்கலாம் அவற்றை எல்லாம் நாம் வரவேற்க வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு நிகழ்வும் நமக்குப் புதுப்புது அனுபவங்களைத் தரும். மகிழ்ச்சியால் மகிழ்ந்தாலும், துக்கத்தால் வெறுமையடைந்தாலும் துவண்டுவிடக் கூடாது. ஏனெனில் எல்லாமே நமக்கு அனுபவங்களைக் கற்றுத் தரும். எனவே, எது வந்தாலும் விருந்தினரை எதிர்கொண்டு வரவேற்பது போல வரவேற்று அனுபவங்களைக் கற்றுத்தரும் வாழ்வியல் வடிவங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்
அ) கோல்மன் ரூபன்
ஆ) கோல்மன் ஹிப்ஸ்
இ) கோல்மன் பார்க்ஸ்
ஈ) கோல்மன் ஹிக்ஸ்
Answer:
இ) கோல்மன் பார்க்ஸ்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 2.
‘தாகங்கொண்ட மீனொன்று’ என்ற தலைப்பில் தமிழில் மொழிப்பெயர்த்தவர்
அ) என்.சத்தியமூர்த்தி
ஆ) என்.ஆர்.சத்தியமூர்த்தி
இ) எஸ்.சத்தியமூர்த்தி
ஈ) எம்.சத்தியமூர்த்தி
Answer:
அ) என்.சத்தியமூர்த்தி

Question 3.
ஜலாலுத்தீன் ரூமி இன்றைய நிலவரப்படி எந்த நாட்டில் பிறந்தவர்
அ) வங்களாதேசம்
ஆ) பாகிஸ்தான்
இ) கஸகிஸ்தான்
ஈ) ஆப்கானிஸ்தான்
Answer:
ஈ) ஆப்கானிஸ்தான்

Question 4.
வருபவர் எவராயினும் செலுத்த வேண்டியதாக ‘விருந்தினர் இல்லம்’ கூறுவது
அ) காணிக்கை
ஆ) நன்கொடை
இ) நன்றி
ஈ) அன்பளிப்பு
Answer:
இ) நன்றி

Question 5.
விருந்தினர் இல்லத்தில் ஒவ்வொரு காலையும் ஒரு
அ) சங்கீத மேடை
ஆ) புதுவரவு
இ) புதுமை
ஈ) ஆனந்தம்
Answer:
ஆ) புதுவரவு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 6.
ஒவ்வொரு விருந்தினரையும் நடத்தும் முறையாக ‘விருந்தினர் இல்லம்’ குறிப்பிடுவது
அ) அன்பாக
ஆ) பாசமாக
இ) உறவாக
ஈ) கௌரவமாக
Answer:
ஈ) கௌரவமாக

Question 7.
எல்லாவற்றிலிருந்தும் ………….. கற்றுக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்.
அ) அன்பானவற்றைக்
ஆ) ஒழுக்கமானவற்றைக்
இ) நல்லவற்றைக்
ஈ) தூய்மையானவற்றைக்
Answer:
இ) நல்லவற்றைக்

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) ஆனந்தம் எதிர்பார்க்கும் விருந்தாளி.
ஆ) ஒவ்வொரு விருந்தினரையும் விலக்கி வை.
இ) அவமானத்தை இன்முகத்துடன் வரவேற்பாயாக.
ஈ) வருபவர் எவராயினும் ஏற்றுக் கொள்ளாதே.
Answer:
இ) அவமானத்தை இன்முகத்துடன் வரவேற்பாயாக.

Question 9.
பொருந்தாததைத் தேர்க.
அ) சற்று மனச்சோர்வு எதிர்பாராத விருந்தாளி.
ஆ) ஒவ்வொரு விருந்தினரையும் கௌரவமாக நடத்து.
இ) வக்கிரத்தை வாயிலுக்குச் சென்று விரட்டி விடு.
ஈ) வருபவர் எவராயினும் நன்றி செலுத்து.
Answer:
இ) வக்கிரத்தை வாயிலுக்குச் சென்று விரட்டி விடு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 10.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதையைக் கோல்மன் மார்க்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்
அ) என். சத்தியமூர்த்தி
ஆ) பி. கலியமூர்த்தி
இ) ஆர். கிருஷ்ணமூர்த்தி
ஈ) எம்.புண்ணியமூர்த்தி
Answer:
அ) என். சத்தியமூர்த்தி

Question 11.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதையைத் தமிழாக்கம் செய்த என் சத்தியமூர்த்தி இட்ட தலைப்பு
அ) தாகங்கொண்ட மீனொன்று
ஆ) தாகங்கொண்ட காகமொன்று
இ) மேகமீதில் விண்மீனொன்று
ஈ) மழைத்துளியும் மண்ணும்
Answer:
அ) தாகங்கொண்ட மீனொன்று

Question 12.
ஜலாலுத்தீன் ரூமி …………… மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர்.
அ) பாரதத்தின்
ஆ) கிரேக்கத்தின்
இ) பாரசீகத்தின்
ஈ) ஆப்ரிக்காவின்
Answer:
இ) பாரசீகத்தின்

Question 13.
ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பான ‘மஸ்னவி’ ………………. பாடல்க ளைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
அ) 23,500
ஆ) 24,600
இ) 25,600
ஈ) 24,000
Answer:
இ) 25,600

Question 14.
மஸ்னவி என்பது
அ) ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கருவிகளின் தொகுப்பு
ஆ) காதல்பாடல்களின் இசைத்தொகுப்பு
இ) தேச உணர்வுமிக்க இசைப்பாடல்களின் தொகுப்பு
ஈ) கனவுத்தேசத்தின் எல்லைகளை வரையறுப்பது
Answer:
அ) ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கருவிகளின் தொகுப்பு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 15.
‘திவான்-ஈஷம்ஸ்-ஈ-தப்ரீஸி’ என்றும் நூலின் ஆசிரியர்
அ) இபின் பதூதா
ஆ) அமிர்குஸ்ரு
இ) நாகூர் ரூமி
ஈ) ஜலாலுத்தீன் ரூமி
Answer:
ஈ) ஜலாலுத்தீன் ரூமி

Question 16.
வக்கிரம் அவமானம் வஞ்சனை ஆகியவற்றை என்ன செய்ய வேண்டும் என்கிறார் ஜலாலுத்தீன் ரூமி?
அ) அவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.
ஆ) அவற்றை வாயிலுக்கே சென்று சினத்துடன் சிதைக்க வேண்டும்.
இ) அவற்றை அமைதியாக அனுபவிக்க வேண்டும்.
ஈ) அவற்றைப் புதைகுழியில் இட்டுப் புதைக்க வேண்டும்.
Answer:
அ) அவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.

குறுவினா

Question 1.
எவற்றையெல்லாம் வாசலுக்குச் சென்று வரவேற்க வேண்டுமெனஜலாலுத்தீன் ரூமிகுறிப்பிடுகிறார்?
Answer:
வக்கிரம், அவமானம், வஞ்சனை.

Question 2.
எவையெல்லாம் எதிர்பாராத விருந்தாளிகளாக வாழ்வில் வந்து செல்லும்?
Answer:
ஓர் ஆனந்தம், சற்று மனச்சோர்வு, சிறிது அற்பத்தனம், நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு.

Question 3.
மஸ்னவி என்பது யாது?
Answer:
மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 3.2 விருந்தினர் இல்லம்

Question 4.
வரும் விருந்தினர்களை எல்லாம் கௌரவமாக நடத்த வேண்டும். ஏன்?
Answer:

  • வாழ்வில் சந்திக்கும் அனைத்தையும் இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.
  • இன்பமோ, துன்பமோ அவை புது அனுபவங்களைத் தரும்.
  • துக்கங்கள் உன்னை முழுவதுமாகத் துடைத்தாலும் இனிமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • புதிய மகிழ்ச்சிக்காக அந்த துக்க நிகழ்வுகள் உன்னைத் தயாரிக்கும்.

சிறுவினா

Question 1.
‘வாழ்க்கை ஓர் அனுபவப் பள்ளிக்கூடம்’ – என்னும் கருத்தை ‘விருந்தினர் இல்லம்’ கவிதை உறுதிப்படுத்துவதை நிறுவுக.
Answer:
(i) மனித வாழ்வு எதையும் ஏற்கும் உள்ளம் கொண்டதாக இருக்க வேண்டும்.

(ii) ஒவ்வொரு நாளும் மனித வாழ்வில் ஆனந்தம், சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு என்பவை எதிர்பாராத விருந்தாளிகளாக வந்து போகும். வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் சொல்லிக் கொண்டு வருவதில்லை .

(iii) இன்பச்செய்தி, துக்கச்செய்தி, துயரச் செய்தி, வீணாகப் பொழுதைக் கழிக்க, தன்னுடைய கௌரவத்தைக் காட்ட எனப் பல வடிவங்களில் விருந்தினர்கள் நம் இல்லங்களுக்கு வருவதுண்டு.

(iv) இதைப் போன்று நம்மை வந்தடையும் அத்தனை அனுபவங்களையும் வக்கிரம் அவமானம், வஞ்சனை இவைகளையும் விருந்தினர்களை எதிர் கொண்டு வரவேற்பது போல வரவேற்க வேண்டும்.

(v) ஒவ்வொரு விருந்தினர்களும் நமக்குப் புதுப்புது அனுபவங்களைத் தருவர். ஒவ்வொரு வாழ்வியல் வடிவங்களும் நமக்குப் புதுப்புது அனுபவங்களைத் தரும்.

(vi) இன்பம் துன்பம், வேண்டியது வேண்டாதது, என எல்லாமே விரும்பியும் விரும்பாமலும் நம்மை வந்தடையும் இவைகள் மூலம் நாம் நம்மை மெருகூட்ட, நம்மைப் புதுப்பிக்க உதவும்.

(vii) எனவே, வாழ்க்கை ஓர் அனுபவப் பள்ளிக்கூடம் என்பதை உணர்ந்து நம்மைத் தேடி வரும் அனைத்திற்காகவும் நன்றி செலுத்துவோம்.

Leave a Reply