Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.4 புறநானூறு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.4 புறநானூறு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 1.
கல்வியின் சிறப்பை உணர்த்தும் திருக்குறள், நாலடியார் பாடல்களைத் திரட்டி வகுப்பறையில் உரையாடுக.
Answer:
i) யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.

  • யாதானும் நாடாமால் ………….. கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடு, எல்லா ஊரும்
    சொந்த ஊர், அவ்வாறு இருக்க ஒருவன் சாகும்வரை ஏன் கல்வி கற்கக் கூடாது என்கிறார் வள்ளுவர்.
  • சாகும் வரை கல்வியைத் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது வள்ளுவனின் வற்புறுத்தல்.

ii) ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

  • ஒரு பிறவியில் ஒருவன் கற்கின்ற கல்வியானது எழுகின்ற ஏழு பிறவியிலும் அவனுக்குப் பாதுகாப்பினைத் தரவல்லது.
  • ஏழு பிறவியிலும் தொடர்ந்து வரவல்லது கல்வி ஒன்றேயாகும்.

iii) நாய்க்கால் சிறு விரல் போல் நன்கணியராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் – செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு – நாலடியார்

  • நாலடியார் பாடலில், நாயின் கால் விரல்கள் நெருங்கி இருக்கும். அதுபோல நம்மை நெருங்கி இருப்பவர்கள் ஈயின் கால் அளவுகூட உதவமாட்டார்கள்.
  • வாய்க்காலின் தூரத்திலிருந்து வரும் தண்ணீர் பயிர் விளைச்சலுக்கு உதவும். அதுபோல தூரத்திலிருந்து உதவி செய்யும் நல்லவர்களை நாம் நெருங்கிச் சென்று நட்பு கொள்ள வேண்டும் என்கிறது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை” – இத்தொடரில் ‘கலன்’ உணர்த்தும் பொருள்
அ) போர்க்கருவி
ஆ) தச்சுக்கருவி
இ) இசைக்கருவி
ஈ) வேளாண்கருவி
Answer:
இ) இசைக்கருவி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

குறுவினா

Question 1.
‘எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’ – யார்க்கு?
Answer:

  • கலைத்தொழில் செய்வோர்க்கு சோறு தட்டாது கிட்டும்.
  • கலைத்தொழிலில் இருக்கும் வல்லவர்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

சிறுவினா

Question 1.
வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை நிறுவுக.
Answer:
திணை விளக்கம்:
பாடாண் திணை என்பது பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள், கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும்.

சான்று விளக்கம்:

  • வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப் பாடலில், ‘பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!’ என்ற வரி இடம் பெற்றுள்ளது.
  • அதாவது தன்னை நாடி வரும் பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத அரண்மனை அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை.
  • தன்னை நாடிவரும் புலவர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் வாரிவழங்கும் நல்ல உள்ளம் கொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி.
  • பரிசிலர் வரும்போது வாயிலை அடைக்காத குணம் உடையவன் என்றதால் அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை புலனாகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் பாடாண்திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

இலக்கணக் குறிப்பு

வயங்குமொழி – வினைத்தொகை
அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
அறிவும் புகழும் – எண்ணும்மை
சிறாஅர் – இசைநிறை அளபெடை.

புணர்ச்சி விதி

1. எத்திசை = எ + திசை
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்ற விதிப்படி எத்திசை என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கற்றோரது ‘செம்மாப்பு’ என்பதில் ‘செம்மாப்பு’ – பொருள்
அ) பெருமை
ஆ) புகழ்
இ) இறுமாப்பு
ஈ) வெற்றி
Answer:
இ) இறுமாப்பு

Question 2.
புறநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர்
அ) புறம், புறப்பாட்டு
ஆ) புறம், புறப்பொருள்
இ) நானூறு, புறப்பாட்டு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) புறம், புறப்பாட்டு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 3.
‘வயங்குமொழி வித்தித்தாம்’ – ‘வித்தி’ என்பதன் பொருள்
அ) விதி
ஆ) விதை
இ) புத்தி
ஈ) விதைத்து
Answer:
ஈ) விதைத்து

Question 4.
தாழும் நிலை வரினும் கலங்காதவர்
அ) கல்வி கற்றோர்
ஆ) செல்வம் உடையவர்
இ) ஞானம் பெற்றவர்
ஈ) செல்வாக்கு உடையவர்
Answer:
அ) கல்வி கற்றோர்

Question 5.
ஔவையார் அகநானூற்றில் பாடியுள்ள பாடல்கள்
அ) 5
ஆ) 15
இ) 4
ஈ) 7
Answer:
இ) 4

Question 6.
கூற்று 1 : இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை.
கூற்று 2 : கலைத்தொழில் வல்லவர்களுக்கு எத்திசை சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
அ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 7.
கூற்று 1 : அதியமானிடம் நட்பு பாராட்டிய ஔவை அவருக்காகப் போர்க்களம் சென்றார்.
கூற்று 2 : அதியமானின் அரசவைப் புலவராக இருந்தவர் ஔவையார்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) எம் யாழினை எடுக்கவில்லை ; கருவிப்பையையும் எடுக்கவில்லை.
ஆ) கலைத்தொழில் வல்ல எங்களுக்கு எத்திசை சென்றாலும் ஒன்றும் கிடைப்பதில்லை.
இ) தச்சனின் பிள்ளைகள் காட்டுக்குச் சென்றால் வெட்ட மரம் கிடைக்காது.
ஈ) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்டவன் நெடுமான் அஞ்சி.
Answer:
ஈ) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்டவன் நெடுமான் அஞ்சி.

Question 9.
சரியானதைத் தேர்க.
அ) புறநானூற்றிற்குப் புறம், புறப்பாட்டு என்னும் பெயர்கள் உண்டு.
ஆ) புறநானூற்று பத்துப் பாட்டு நூல்களில் ஒன்று.
இ) அதியமானிடம் நட்பு பாராட்டும் குணம் இல்லாதவர் ஒளவையார்.
ஈ) ஔவையார் பாடியதாக நற்றிணையில் 8 பாடல்கள் உள்ளன.
Answer:
அ) புறநானூற்றிற்குப் புறம், புறப்பாட்டு என்னும் பெயர்கள் உண்டு.

Question 10.
பொருந்தியதைத் தேர்க.
அ) அறிவும் புகழும் – வினைத்தொகை
ஆ) சிறாஅர் – இசைநிறையளபெடை
இ) வயங்குமொழி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) அடையா – எண்ணும்மை
Answer:
ஆ) சிறாஅர் – இசைநிறையளபெடை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 11.
பொருந்தாததைத் தேர்க.
அ) தமிழரின் அகவாழ்வைப் பற்றி எடுத்துக் கூறுவது புறநானூறு.
ஆ) அதியமானிடம் நட்பு பாராட்டிய ஔவை அவருக்காகத் தூது சென்றவர்.
இ) ஒளவையார் பாடியதாக புறநானூற்றில் 33 பாடல்கள் உள்ளன.
ஈ) புறநானூறு பாடிய ஔவையார் அதியமானிடம் இருந்து நெல்லிகனியைப் பெற்றவர்.
Answer:
அ) தமிழரின் அகவாழ்வைப் பற்றி எடுத்துக் கூறுவது புறநானூறு.

Question 12.
புறநானூற்றில் பயின்று வரும் பா
அ) நேரிசை ஆசிரியப்பா
ஆ) குறள் வெண்பா
இ) சிந்தியல் வெண்பா
ஈ) கலிவிருத்தம்
Answer:
அ) நேரிசை ஆசிரியப்பா

Question 13.
பரிசில் துறை என்பது
அ) பரிசு வேண்டி வாயிலில் நிற்பது
ஆ) மன்னன் பரிசளித்துப் புலவரைப் பாராட்டுவது
இ) பரிசு பெற்ற புலவன் மகிழ்ச்சியாக இல்லறம் திரும்புவது
ஈ) இவற்றில் எதுவுமில்லை .
Answer:
அ) பரிசு வேண்டி வாயிலில் நிற்பது

Question 14.
பொருத்திக் காட்டுக.
அ) உரன் – 1. கோடரி
ஆ) கலன் – 2. கருவிகளை வைக்கும் பை
இ) கலப்பை – 3. யாழ்
ஈ) மழு – 4. வலிமை

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 15.
பொருத்திக் காட்டுக.
அ) பரிசிலர் – 1. காடு
ஆ) கல்வி – 2. மரங்க ள்
இ) திசை – 3. சிறுவர்
ஈ) உணவு – 4. கோடரி

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 4, 2, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 1, 2, 3
Answer:
அ) 3, 4, 1, 2

Question 16.
பொருத்திக் காட்டுக.
அ) வயங்குமொழி – 1. எண்ணும்மை
ஆ) அடையா – 2. இசைநிறை அளபெடை
இ) அறிவும் புகழும் – 3. வினைத்தொகை
ஈ) சிறாஅர் – 4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 4, 1
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 3, 4, 1, 2

Question 17.
‘வாயிலோயே! வாயிலோயே!’ என்னும் புறநானூற்றுப் பாடல் பாடப்பட்டதன் காரணம்
அ) சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தமையால் பாடியது.
ஆ) பேகன் இரவலர்க்கு இரங்காமையால் பாடியது.
இ) பாரி முல்லைத் தேர் கொடுத்தமையால் பாடியது.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தமையால் பாடியது.

Question 18.
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்னும் சொல்லுக்குரிய புணர்ச்சி விதிக்கு பொருத்தமானச் சொல்
அ) எத்திசை
ஆ) உரனுடை
இ) வலுந்தலை
ஈ) மாய்ந்தென
Answer:
அ) எத்திசை

Question 19.
புறநானூறு ………………. நூல்க ளுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) நீதி
Answer:
அ) எட்டுத்தொகை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 20.
அதியமானிடம் நட்புப் பாராட்டியவர்
அ) ஓதலாந்தையார்
ஆ) ஔவையார்
இ) கபிலர்
ஈ) பரணர்
Answer:
ஆ) ஔவையார்

Question 21.
ஔவை யாருக்காகத் தூது சென்றார்?
அ) அதியமானுக்காக
ஆ) பேகனுக்காக
இ) பாரிக்காக
ஈ) தொண்டைமானுக்காக
Answer:
அ) அதியமானுக்காக

Question 22.
ஔவையார் பாடிய பாடல்களில் நமக்குக் கிடைத்துள்ளவை
அ) 22
ஆ) 36
இ) 59
ஈ) 65
Answer:
இ) 59

Question 23.
ஔவையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கையும் நூல்களும் (பொருத்திக் காட்டுக).
அ) அகநானூறு – 1) 7
ஆ) புறநானூறு – 2) 15
இ) குறுந்தொகை – 3) 04
ஈ) நற்றிணை – 4) 33

அ) 3, 4, 2, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 3, 4, 2, 1

Question 24.
அதியமானின் அரசவைப் புலவர்
அ) கபிலர்
ஆ) பாணர்
இ) ஒளவையார்
ஈ) ஒக்கூர் மாசாத்தியார்
Answer:
இ) ஒளவையார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

குறுவினா

Question 1.
புறநானூற்றுப் பாடல்களால் அறியப்படுபவை யாவை?
Answer:
தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை .

Question 2.
ஔவையார் பாடியதாக நமக்குக் கிடைத்துள்ள சங்க இலக்கிய பாடல்கள் எத்தனை?
Answer:

  • அகநானூற்றில் 4 பாடல்கள்.
  • குறுந்தொகையில் 15 பாடல்கள்.
  • நற்றிணையில் 7 பாடல்கள்.
  • புறநானூற்றில் 33 பாடல்கள் என மொத்தம் 59 பாடல்கள்.

Question 3.
பாடாண் திணை என்றால் என்ன?
Answer:

  • பாடு + ஆண் + திணை – பாடாண் திணை
  • பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள். கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும்.
  • ஆண் மகனது ஒழுகலாற்றைக் கூறுவது பாடாண்திணையின் நோக்கமாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 4.
கல்வி கற்றோரின் சிறப்பு என்ன?
Answer:

  • கல்வி கற்றோர் எந்நிலையிலும் சிறந்தே இருப்பர்.
  • தாமும் எந்நிலை வந்தாலும் கலங்க மாட்டார்கள்.
  • அறிவால் உலகையே சொந்தமாக்கிக் கொள்வர்.
  • எங்கு சென்றாலும் மற்றவர் மதிப்பைப் பெறுவர்.

Question 5.
கற்றவர்க்கு எங்கு சென்றாலும் உணவு கிடைக்கும் என்பதற்கு ஔவையார் கூறும் உவமை யாது?
Answer:

  • மரம் வெட்டும் தச்சர் பெற்ற சிறுவர்கள் தங்கள் மழுவோடு (கோடாரி) காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு மரம் கிடைக்காமல் போகுமா? என்பதே உவமை.
  • பரிசிலருக்குச் சிறுவரும், கல்விக்குக் கோடரியும், போகும் திசைக்குக் காடும், உணவிற்குக் காட்டில் உள்ள மரங்களும் உவமைகளாகும்.

சிறுவினா

Question 1.
புறநானூறு – குறிப்பு வரைக.
Answer:

  • புறம் + நான்கு + நூறு
  • 400 பாடல்களைக் கொண்டது.
  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இது புறப்பொருள் பற்றியது.
  • புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
  • தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.
  • சங்ககால மக்களின் வாழ்க்கையை அறிவதற்கு கருவூலமாகத் திகழ்கிறது.

Question 2.
‘அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுத்தலை உலகமும் அன்றே ; அதனால்
காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை’ – இடஞ்சுட்டி பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் அடிகளானது அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் நீட்டித்தபோது ஔவையார் பாடியதாகும். இது புறநானூற்றின் 206 ஆம் பாடலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள் இன்னும் மாய்ந்துவிடவில்லை . இந்த உலகமும் வெற்றிடமாகவில்லை. அதனால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம். யாழ் முதலிய இசைக்கருவிகளையும் பைகளில் இட்டுக் கட்டிக் கொண்டோம்.

விளக்கம் :
அறிவு சார்ந்த கருத்துகளை எடுத்துக்கூறி அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசு பெற சென்றார் ஔவையார். அதியமான் நெடுமான் அஞ்சி பரிசு தர காலம் தாழ்த்தியதால் கோபமடைந்த ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி மட்டும்தான் இந்த உலகில் இருக்கிறானா, இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள் இன்னும் மாய்ந்துவிடவில்லை .

இந்த உலகமும் வெற்றிடமாகவில்லை உன் மன்னன் பரிசு தரவில்லை என்றால் என்ன ? கலைத்தொழிலில் வல்ல எங்களுக்கு எங்குச் சென்றாலும் உணவு கிடைக்கும். எனவே எங்கள் இசைக்கருவிகளைத் தோளில் எடுத்துவிட்டோம் இசைக்கருவிகளையும் பைகளில் இட்டுக்கட்டி விட்டோம் என்று கூறுமிடத்தில் இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 3.
‘எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே’ என்ற ஔவையாரின் செம்மாப்பு கருத்தின் உண்மையை ஆராய்க.
Answer:
(i) கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பாகும்.
(ii) கற்றோரின் சொல்லைக் கேட்டு அவர்களுக்கு வாரி வாரி வழங்கினர் பண்டைய தமிழ் மன்னர்கள்.

(iii) நல்ல கருத்துகளைக் கூறி அரசின் நிர்வாகத்தையும், அரசாட்சியின் நடைமுறையையும் சீர்ப்படுத்தும் பணியைக் கற்றறிந்த புலவர்கள் மேற்கொண்டனர்.

(iv) அத்தகைய கற்றறிந்தோரை அரசர்கள் மிகவும் கௌரவித்துப் பரிசுகள் பலவும் வழங்கினர்.

(v) பரிசு தர காலதாமதம் ஆனதால் ஒளவையார் வாயில் காவலனிடம் உன் அரசன் ஒருவனை மட்டுமே நம்பி இந்த உலகம் உள்ளது என்று அவன் நினைத்துள்ளானோ?

(vi) மரம் வெட்டும் தச்சனின் மகன் கோடரியுடன் காட்டிற்குச் சென்றால் அவர்கள் வெட்ட காட்டில் ஏதாவது ஒரு மரம் கிடைக்காமல் போய்விடுமா?

(vii) ‘அதுபோலவே, கற்றவர்கள் எத்திசை செல்லினும் அத்திசையில் உணவு கிடைக்கும்.’

(viii) கற்றவர்களுக்கு அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் புகழ் உண்டாகும்.

(ix) கல்விக்கு அத்தகைய சிறப்புண்டு என்பதை அறிந்ததால் ஔவையார் செம்பாப்புடன் வாயிற்காவலனிடம் எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே என்று வாயிற்காவலனிடம் கூறினார்.

Question 4.
பாடாண் திணை சான்றுடன் விளக்குக.
Answer:
திணை விளக்கம்:
பாடு + ஆண் + திணை – பாடாண் திணை. பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள். கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும். ஆண் மகனது ஒழுகலாற்றைக் கூறுவது பாடாண்திணையின் நோக்கமாகும்.

சான்று:
வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வத்தித் தாம் ……
என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள்.

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் 12 பாடாண்திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 5.
பரிசில் துறை சான்றுடன் விளக்குக.
Answer:
துறை விளக்கம்:
பரிசு வேண்டி வாயிலில் நிற்பது பரிசில் துறையாகும்.

சான்று:
வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வத்தித் தாம் ……
என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள்.

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மையை நோக்கி பரிசிலர் அரண்மனையின் வாயிலில் நிற்பது பரிசில் துறையாகும்.

Question 6.
“பரிசிலிர்க்கு அடையா வாயிலோயே” என்று வாயிற்காவலளிடம் தன் வருத்தத்தைப் பதியவும் புலவரின் மனக்குமுறல்களை எடுத்தியம்புக.
Answer:
பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத காவலனே!

  • விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி, தன்னுடைய தகுதியை அறியானோ?
  • இவ்வுலகில், அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை, இந்த உலகமும் வெற்றிடமாகிவிடவில்லை.
  • ஆகவே, எம் யாழினை எடுத்துக் கொண்டோம்; கருவிப்பையையும் சுருக்கிட்டுக் கட்டிக் கொண்டோம்.
  • மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள், கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு ஏதாவது ஒரு மரம் கிடைக்காமலா போகும்?
  • அதுபோல, கலைத்தொழில் வல்ல எங்களுக்கும் இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு, தவறாமல் கிட்டும்.
  • என்று தன் மனக்குமுறலை வாயிற்காப்பானிடம் புலவர் எடுத்துரைக்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

“அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே”

நெடுவினா

Question 1.
அதியமான் நெடுமான் அஞ்சியின் பரிசு நீட்டித்தல் குணம் தவறு என்பதை ஔவையாரின் புறநானூற்றுப் பரிசில் துறை பாடல் எங்ஙனம் உணர்த்துகிறது ?
Answer:
(i) வாயில் காவலனே ! வாயில் காவலனே ! புலவர்களாகிய எங்களைப் போன்றவர்களின் வாழ்நிலையானது வள்ளல்களை அணுகி அவர்தம் செவிகளிலே உரைப்பதாகும்.

(ii) அவர்களிடம் அறிவார்ந்த சொற்களைத் துணிச்சலுடன் விதைத்துத் தாம் எண்ணியதை முடிக்கும் வலிமையுடையது.

(iii) வள்ளல்கள் பற்றித் தாங்கள் எழுதிய கவிதையின் சிறப்பை அறிந்து பரிசளிக்க வேண்டும் என நினைத்து வருந்துவர்.

(iv) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி தன்னுடைய தகுதியை அறியாமல் இருக்கின்றான்.

(v) அவனை நம்பித்தான் இவ்வுலகில் வறுமை நிலையில் உள்ளோர் வாழ்கின்றனர் என்று நினைக்கின்றானோ ? காலம் நீட்டிப்பது சரியான முறையல்ல.

(vi) பரிசிலர் அரண்மனை வருவதை விரும்பும் அதியாமன் நெடுமான் அஞ்சி பரிசு தர நீட்டிப்பது முறையாகாது.

(vii) இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் இன்னும் அழிந்து போகவில்லை . இந்த உலகமும் வெற்றிடமாகி விடவில்லை.

(viii) பரிசு தரக் காலம் நீட்டித்தான் என்றால், எங்களை அறிந்து பரிசு தருவதற்குப் பல பேர் உள்ளனர்.

(ix) மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள் கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்ட ஒரு மரம் கிடைக்கும்.

(x) அதியமான் நெடுமான் அஞ்சி பரிசு தர காலம் நீட்டித்தான் என்றால், நான் என் இசைக்கருவியைத் தோளில் சுமந்துக் கொண்டும், என் இசைக்கருவிகளைக் கருவிப்பைக்குள் சுருக்கிட்டுக் கொண் டும் புறப்படப் போகின்றேன்.

(xi) கலைத்தொழில் புரியும் எங்களைப் போன்றோரைக் காத்து வைக்க நினைக்கும் எண்ணம் சரியானது அன்று. ஏனெனில் இவ்வுலகின் எத்திசைச் சென்றாலும் அத்திசையில் உணவு தவறாமல் கிடைக்கும் என்று உணர்த்துகிறார்.

Leave a Reply