Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.3 தேவாரம் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.3 தேவாரம்
கற்பவை கற்றபின்
Question 1.
உங்கள் பகுதியில் கொண்டாடப்படும் திருவிழக்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி நாளிதழ் ஒன்றின் செய்திப்பிரிவிற்கு அளிக்கும் வகையில் செய்தியாக எழுதுக.
Answer:
மேலாளர்,
தினத்தந்தி நாளிதழ் (செய்திப்பிரிவு),
கடலூர் அலுவலகம்,
கடலூர்.
வணக்கம்,
சிதம்பரம் நடராசர் கோயில் ஆருத்ரா தரிசனம் விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அவ்விழாவினைப் பற்றிய தகவல்கள் நாங்கள் தருகிறோம். அதை உங்கள் நாளிதழிலில் வெளியிட்டு மக்கள் வருகைத்தந்து இறையருளை வேண்டுகிறோம்.
செய்தி
ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நிரல்
பஞ்சசபை, பொற்சபை, ஆகாய தலம் எனப் போற்றப்படும் சிதம்பரம் நடராசருக்கு ஆருத்ரா தரிசன விழா.
உலகப்புகழ் பெற்ற நடராசர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு விழாக்கள் நடைபெறும் ஆனி மாதம் திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கிய மறுநாள் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிவகாமிசுந்திரி அம்பாள் சமேத நடராஜ மூர்த்திக்குத் திருப்பள்ளி எழுச்சி, கோபூஜை, பஞ்சாங்கம் படித்தல்.
மார்கழி முதல் நாள் கொடியேற்றத்துடன் துவக்கம். தேரோட்டம் வரும் 25ஆம் தேதியும், 26ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராசமூர்த்திக்கு மகா அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
காலசந்தி பூஜை, ரகசிய பூஜை நடைபெறும். காலை 9.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நடராசர் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரம் முன்பு காட்சி தருவார்.
தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்வர். 9.30 மணியளவில் மகாதீபாரதனை காண்பிக்கப்படும். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் உட்பிரகாரம், வெளிப்பிரகாரத்தில் ஊர்வலமாகச் செல்வர்.
இரவு 8 மணிக்கு கொடிமர பூஜை பிறகு பஞ்சமூர்த்திகள் தங்கம் வெள்ளி வாகனத்தில் 4 வீதிகளில் உலா,
- ஞாயிறன்று வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா
- 21ஆம் நாள் கருட வாகனத்தில் வீதி உலா
- 22ஆம் நாள் யானை வாகனத்தில் வீதி உலா
- 23ஆம் நாள் தங்ககைலாச வாகனத்தில் வீதி உலா
- 24ஆம் நாள் தங்கரதத்தின் பிஷாடனர் வெட்டுக்குதிரையில் வீதி உலா.
- 25ஆம் நாள் தேரோட்டம்.
- 26ஆம் நாள் அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை ராஜசபை என்கிற
ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராச மூர்த்திக்கு மகா அபிஷேகத்துடன் மதியம் 2மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
இறையன்பர்கள் வருகை தந்து இறையருள் பெற வேண்டுகிறோம்.
பாடநூல் வினாக்கள்
குறுவினா
Question 1.
கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக.
Answer:
- கலிவிழா – திருமயிலையில் கொண்டாடும் எழுச்சிமிக்க விழா
- ஒலிவிழா – கபாலீச்சரம் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா.
சிறுவினா
Question 1.
பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞான சம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?
Answer:
- கோவில் திருவிழா மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு.
- ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று.
- விழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலை.
- இங்கு இளம் பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் விழாக்கள் நிறைந்த வீதியுடைய ஊர்.
- எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும்.
- மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் மிசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழாவினைக் கண்டு இறைவன் அருள்பெற திருஞானசம்பந்தர் பதிவு செய்கிறார்.
இலக்கணக் குறிப்பு
மாமயிலை – உரிச்சொற்றொடர்
உறுப்பிலக்கணம்
புணர்ச்சி விதி
1. பூம்பாவாய் = பூ + வாய்
பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும் என்ற விதிப்படி, பா-வுக்கு இனமானம் தோன்றி, பூம்பாவாய் என்று புணர்ந்தது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
மயிலாப்பூரில் இறைவனுக்குக் கொண்டாடப்படும் விழா
அ) பங்குனி உத்திர விழா
ஆ) திருக்கார்த்திகை விழா
இ) சித்திரா பௌர்ணமி விழா
ஈ) தைப்பூச விழா
Answer:
அ) பங்குனி உத்திர விழா
Question 2.
தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ள 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் அமைந்துள்ள இடம்
அ) மயிலாப்பூர்
ஆ) திருநெல்வேலி
இ) திருவொற்றியூர்
ஈ) வள்ளியூர்
Answer:
ஆ) திருநெல்வேலி
Question 3.
மயிலையில் வீற்றிருக்கும் இறைவன்
அ) கபாலீசுவரர்
ஆ) தான்தோன்றிநாதர்
இ) லிங்கேசுவரர்
ஈ) பெருவுடையார்
Answer:
அ) கபாலீசுவரர்
Question 4.
‘மாமயிலை’ என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) பெயரெச்சம்
ஆ) வினையெச்சம்
இ) உரிச்சொற்றொடர்
ஈ) உவமைத்தொடர்
Answer:
இ) உரிச்சொற்றொடர்
Question 5.
பொருத்திக் காட்டுக.
அ) ஐப்பசி – 1. விளக்குத் திருவிழா
ஆ) கார்த்திகை – 2. திருவாதிரைவிழா
இ) மார்கழி – 3. ஓணவிழா
ஈ) மாசி – 4. கடலாட்டு விழா
அ) 3, 1, 2, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 1, 2, 4, 3
Answer:
அ) 3, 1, 2, 4
Question 6.
பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர்
அ) திருநாவுக்கரசர்
ஆ) திருஞானசம்பந்தர்
இ) சுந்தரர்
ஈ) மாணிக்கவாசகர்
Answer:
ஆ) திருஞானசம்பந்தர்
Question 7.
திருஞானசம்பந்தரின் பாடல்களைத் தொகுத்தவர்
அ) சேக்கிழார்
ஆ) இராசராச சோழன்
இ) நம்பியாண்டார் நம்பி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
இ) நம்பியாண்டார் நம்பி
Question 8.
கண்டான் என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை
அ) காண்(கண்) + ட் + ஆன்
ஆ) கண் + ட் + ஆன்
இ) காண் + ட் + ட் + ஆன்
ஈ) காண்டு + ஆன்
Answer:
அ) காண்(கண்) + ட் + ஆன்
Question 9.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு பன்னிரு திருமுறைகளில் ……………… என்று அழைக்கப்படுகின்றன.
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) திருச்சதகம்
ஈ) திருத்தொண்டத்தொகை
Answer:
அ) தேவாரம்
குறுவினா
Question 1.
திருஞானசம்பந்தர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகக் குறிப்பிடுவன யாவை?
Answer:
- கோவில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக உள்ளது.
- ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.
Question 2.
திருஞானசம்பந்தர் எங்கு வீற்றிருக்கும் இறைவனுக்குப் பங்குனி உத்திர விழா கொண்டாடுகிறார்?
Answer:
திருமயிலை என்று அழைக்கப்படும் மயிலாப்பூர் நகரில் வீற்றிருக்கும் இறைவனுக்கு விழா கொண்டாடுகிறார்.
Question 3.
மலி விழா, கலி விழா, பலி விழா, ஒலி விழா விளக்கம் தருக.
Answer:
- மலி விழா – விழாக்கள் நிறைந்தது
- கலி விழா – எழுச்சி தரும் விழா
- பலி விழா – பூசையிடும் உத்திர விழா
- ஒலி விழா – ஆரவார விழா
Question 4.
திருமுறைகள் எத்தனை? தொகுத்தவர் யார்?
Answer:
திருமுறைகள் – 12, தொகுத்தவர் – நம்பியாண்டார் நம்பி.
Question 5.
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் திருமுறையில் எந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன?
Answer:
பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடியவை.
Question 6.
சம்பந்தர் பாடலில் விரவிக் கிடக்கும் செய்திகள் சில கூறுக.
Answer:
- சமயக் கோட்பாடுகள்.
- இசை தத்துவம்.
- தமிழுக்கு இருந்த உயர்நிலை.
- சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள்.
சிறுவினா
Question 1.
திருஞானசம்பந்ார் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் – சம்பந்தன்
பிறப்பு – சீர்காழி
பெற்றோர் – சிவபாதவிருதயர் – பகவதி அம்மையார்
காலம் – 7ஆம் நூற்றாண்டு
சிறப்பு – அறுபத்து மூவருள் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவர். முதல் மூன்று திருமுறைகள் எழுதியவர்.
Question 2.
தேவாரம் – குறிப்பு வரைக.
Answer:
- தேவாரம் – தே + வாரம் – பாமாலை; தே + ஆரம் – பூமாலை.
- அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
- தேவாரம் மொத்தப் பாடல்கள் – 8227.
- நம் பாடப்பகுதி முதல் மூன்று திருமுறையில் இரண்டாவது திருமுறை சம்பந்தர் பாடிய திருமயிலாப்பூர் பதிகம்.
- தொகுத்தவர் – நம்பியாண்டார் நம்பி,
Question 3.
மயிலாப்பூரின் சிறப்புகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
Answer:
- மடலார்ந்த தெங்கின் மயிலை
- இருளகற்றும் சோதித் தொன்மயிலை
- கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்
- கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்
- கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்
- மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்
- ஊர்திரை வேலை உலாவும் உயர்மலை
Question 4.
மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்களைக் குறிப்பிடுக.
Answer: