Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 7.4 புறநானூறு Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 7.4 புறநானூறு
கற்பவை கற்றபின்
Question 1.
சிறந்த அரசு நிர்வாகத்திற்கு நீவிர் அளிக்கும் பரிந்துரைகளை நாளிதழ்த் தலையங்கமாக எழுதுக.
Answer:
நாட்டிற்கு வேண்டிய நல்லமைச்சு :
- நாடோறும் நாடி முறை செய்யா மன்னன் நாள்தோறும் நாடு கெடும்.
- நாள்தோறும் மக்களின் தேவையைப் புரிந்து அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
- காட்சிக்கு எளியன் கடுஞ்சொல் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்.
- காட்சிக்கு எளியவனாக, கடுஞ்சொல் பேசாதவனாக மன்னன் இருக்க வேண்டும்.
- அரசின் எல்லாத்துறைகளும் போர்க்கால அடிப்படையில் இயக்க வேண்டும்.
- தண்ணீ ர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, பேருந்து வசதி போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
- கல்வியில் காமராசராக விளங்க வேண்டும்.
- நியாய விலைக் கடைகளில் முறையான வர்த்தகம் நடைபெற வேண்டும்.
- எரிபொருட்கள் விலையைப் போல ஒரே விலை ஒரு நாளைக்கு என எல்லா பொருள்களுக்கும் நிர்ணயம் செய்ய வேண்டும்.
- விலையெல்லாம் பொருட்கள் தவிர்த்து வரி விதிப்பில் குறைவாக வசூலிக்க வேண்டும்.
- தொழில், தொழில்நுட்பக் கல்லூரிகளில் பாடத்திறனை வெளிநாட்டினர் போல் மேம்படுத்த வேண்டும்.
- விவசாயத்திற்குத் தட்டுப்பாடில்லாமல் பாசனத் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
- சிறுபான்மையினருக்கும், மகளிருக்கும் உரிய நலன்களைப் பெற்றுத்தர வேண்டும்.
- பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்ததே என்பதை மறத்தல் கூடாது.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
யானை புக்க புலம்போலத் – இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர்
அ) தனக்குப் பயன்படும் பிறருக்குப் பயன்படாது
ஆ) தனக்கும் பயன்படாது பிறருக்கும் பயன்படாது
இ) பிறருக்குப் பயன்படும் தனக்குப் பயன்படாது
ஈ) தனக்கும் பயன்படும் பிறருக்கும் பயன்படும்
Answer:
அ) தனக்குப் பயன்படும் பிறருக்குப் பயன்படாது
குறுவினா
Question 1.
அறிவுடை வேந்தனின் நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன யாவை?
Answer:
- அறிவுடை அரசன் வரிதிரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரி திரட்டினால், நாடு கோடிக்கணக்கில் செல்வம் பெற்று செழிப்படையும்.
- அறிவில் குறைந்து முறை தெரியாது வரி திரட்டினால் யானை புகுந்த நிலம் போல் ஆகிவிடும்.
Question 2.
செவியறிவுறூஉ துறையை விளக்குக.
Answer:
அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்குமாறு அறிவுறுத்தல் செவியறிவுறூஉ துறையாகும்.
சிறுவினா
Question 1.
யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே – உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.
Answer:
உவமை :
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்கள் உணவாகும்.
பொருள் :
அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரிதிரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.
உவமை :
பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் வாயில் புகுந்த நெல்லைவிடக் காலில் மிதிப்பட்ட நெல்தான் அளவு அதிகமாகும்.
பொருள் :
அறிவில்லா அரசன் முறை தெரியாமல் வரிதிரட்டுவானாயின் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல ஆகிவிடும். அரசன் தானும் பயன்படமாட்டான் நாட்டு மக்களும் துன்புறுவர்.
இலக்கணக் குறிப்பு
காய்நெல் – வினைத்தொகை
புக்க – பெயரெச்சம்
அறியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
உறுப்பிலக்கணம்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
‘காய்நெல் அறுத்து’ என வரும் புறநானூற்றுப் பாடலின் பாவகை
அ) கலி விருத்தம்
ஆ) அறுச்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) நேரிசை ஆசிரியப்பா
ஈ) சிந்தியல் வெண்பா
Answer:
இ) நேரிசை ஆசிரியப்பா
Question 2.
பொருத்திக் காட்டுக.
அ) மா – 1. முறைமை
ஆ) கல் – 2. வரி
இ) பிண்ட ம் – 3. ஒலிக்குறிப்பு
ஈ) வரிசை – 4. ஒருநில அளவு
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 1, 4, 3, 2
ஈ) 3, 2, 4, 1
Answer:
அ) 4, 3, 2, 1
Question 3.
பொருத்திக் காட்டுக.
அ) காய்நெல் – 1. வினையெச்சம்
ஆ) புக்க – 2. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ) அறியா – 3. பெயரெச்சம்
ஈ) அறுத்து – 4. வினைத்தொகை
அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 4, 2, 1
ஈ) 4, 2, 3, 1
Answer:
அ) 4, 3, 2, 1
Question 4.
‘காய்நெல் அறுத்து’ எனத் தொடங்கும் பாடல் புறநானூற்றில் …………….. ஆவது பாடல் ஆகும்.
அ) 154
ஆ) 184
இ) 204
ஈ) 214
Answer:
ஆ) 184
Question 5.
புறநானூற்றை உ.வே.சா. அச்சில் பதிப்பித்த ஆண்டு
அ) 1884
ஆ) 1894
இ) 1896
ஈ) 1910
Answer:
ஆ) 1894
Question 6.
ஜார்ஜ். எல். ஹார்ட் …………… பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்.
அ) கொலம்பியா
ஆ) ஆக்ஸ்போர்டு
இ) கலிபோர்னியா
ஈ) கேம்பிரிட்ஜ்
Answer:
இ) கலிபோர்னியா
Question 7.
ஜார்ஜ். எல். ஹார்ட் புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆண்டு
அ) 1988
ஆ) 1990
இ) 1999
ஈ) 2000
Answer:
இ) 1999
Question 8.
‘காய்நெல் அறுத்து’ என்னும் புறநானூற்றுப் பாடலின்வழி மக்களிடம் அதிக வரியைத் திரட்டக் கூடாது என அறிவுறத்தியவர் ……………. அறிவுறுத்தப்பட்டவர் …………….
அ) பிசிராந்தையார், அறிவுடைநம்பி
ஆ) கபிலர், பாரி
இ) கோவூர்கிழார், கிள்ளிவளவன்
ஈ) வெள்ளக்குடி நாகனார், நலங்கிள்ளி
Answer:
அ) பிசிராந்தையார், அறிவுடைநம்பி
Question 9.
பிசிர் என்பது
அ) எஞ்சிய வாழ்க்கை
ஆ) பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்
இ) சோழநாட்டில் கிடைத்த பொருள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்
Question 10.
ஆந்தையார் என்பது
அ) இயற்பெயர்
ஆ) காரணப்பெயர்
இ) பட்டப்பெயர்
ஈ) குலப்பெயர்
Answer:
அ) இயற்பெயர்
Question 11.
அறிவுடை நம்பி ஆண்ட நாடு
அ) சேரநாடு
ஆ) சோழநாடு
இ) பாண்டிய நாடு
ஈ) பல்லவ நாடு
Answer:
இ) பாண்டிய நாடு
Question 12.
பொருத்திக் காட்டுக.
அ) தமித்து – 1. கெட
ஆ) புக்கு – 2. சேர்த்து
இ) யாத்து – 3. புகுந்து
ஈ) தப – 4. தனித்து
அ) 4, 3, 2, 1
ஆ) 3. 4. 1. 2
இ) 1. 2. 3. 4
ஈ) 3.2.1.4
Answer:
அ) 4, 3, 2, 1
Question 13.
‘பரிவுதப எடுக்கம் பிண்டம் நச்சின்’ என்னும் அடிகளில் வரும் ‘நச்சின்’ என்பதன் பொருள்
அ) குலைந்தால்
ஆ) இழந்தால்
இ) விரும்பினால்
ஈ) அலைந்தால்
Answer:
இ) விரும்பினால்
குறுவினா
Question 1.
பிசிராந்தையார் குறிப்பு வரைக.
Answer:
ஆசிரியர் – பிசிராந்தையார்
பிசிர் என்பது பாண்டிய நாட்டில் ஓர் ஊர்
இயற்பெயர் – ஆந்தையார்
பாண்டிய மன்னர் அறிவுடை நம்பியின் அரசவைச் சான்றோர்.
Question 2.
சங்க காலத்தில் மன்னன் எவ்வாறு திகழ்ந்தான்?
Answer:
நல்வழிப்படுத்தும் புலவர்கள் அரசவையில் இருந்தனர். புலவர்களின் அறிவுரைகளைத் தலைமேற் கொண்டு குடிமக்களின் உளப்பாங்கை அறிந்து ஆட்சி செய்தனர்.
Question 3.
பாடாண் திணை விளக்குக.
Answer:
ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.
சிறுவினா
Question 1.
புறநானூறு குறிப்பு வரைக.
Answer:
- புறம் + நான்கு + நூறு = புறநானூறு.
- 400 பாடல்கள் கொண்டது.
- பண்டையத் தமிழ்களின் அரசியல் சமூக வரலாற்றின் அரியக் கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது.
- முடியுடை வேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள் போர்ச் செய்திகள், கையறு நிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்துகிறது.
- உ.வே.சா. 1894இல் பதிப்பித்தார்.
- 1999இல் ஜார்ஜ் எல் ஹார்ட் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர்.
- The Four hundred songs of war and wisdom. An Anthology of poems from classical Tamil, the Purananuru என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
Question 2.
புறநானூற்றுப் பாடல் வாயிலாக மன்னனின் நிருவாக சீர்மையை விளக்குக.
Answer:
- குடிமக்களின் உளம் அறிந்து ஆட்சி செய்பவனே சிறந்த அரசன்.
- மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசன் செயல்பட்டால் நாடும் மக்களும் வீழ்வர் என்பதைப் : புறநானூற்று பாடல் மூலம் பிசிராந்தையார் கூறினார்.
- ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு குறைந்த நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாக யானைக்குப் பல நாட்கள் கொடுக்கலாம்.
- இதைவிட நூறு மடங்கு பெரிய வயலில் யானை தனித்துச் சென்று வயலில் உண்ணுமாயின் உண்ணும் அளவைவிட காலில் மிதிபட்டு அழிந்ததே அதிகம் ஆகும்.
- அறிவுடைய அரசன் வரிதிரட்டும் முறை அறிந்து வரிதிரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.
- அரசன் அறிவில் குறைந்து முறை தவறி, ஆரவாரமாக மக்களின் அன்பு கெடுமாறு வரிதிரட்டினால் யானை புகுந்த நிலம் போல தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது ஆகும்.
- அரசன் தானும் பயன்படமாட்டான். நாட்டு மக்களையும் துன்புறுத்துவான் என்பதை என்னும் நிர்வாக சீர்மையை விளங்குகிறது.
Question 3.
பாடாண் திணையை சான்றுடன் விளக்குக. திணை
Answer:
விளக்கம்:
ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.
சான்று:
காய்நெல் அறுத்துக் கவனம் கொளினே;
மனநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்.” எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல்.
பொருத்தம்:
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்கள் உணவாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் : வரிதிரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.
பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் வாயில் புகுந்த நெல்லைவிடக் காலில் மிதிப்பட்ட நெல்தான் அளவு அதிகமாகும். அறிவில்லா அரசன் முறை தெரியாமல் வரி திரட்டுவானாயின் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல ஆகிவிடும். அரசன் தானும் பயன்படமாட்டான் நாட்டு மக்களும் துன்புறுவர்.
Question 4.
செவியறிவுறூஉ துறையைச் சான்றுடன் விளக்கு.
Answer:
துறைவிளக்கம்:
அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்குமாறு அறிவுறுத்தல் செவியறிவுறூஉ துறையாகும்.
சான்று:
காய்நெல் அறுத்துக் கவனம் கொளினே;
மனநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்.” எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல்.
பொருத்தம் :
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்கள் உணவாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரிதிரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.
பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் வாயில் புகுந்த நெல்லைவிடக் காலில் மிதிப்பட்ட நெல்தான் அளவு அதிகமாகும். அறிவில்லா அரசன் முறை தெரியாமல் வரி திரட்டுவானாயின் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல ஆகிவிடும். அரசன் தானும் பயன்படமாட்டான் நாட்டு மக்களும் துன்புறுவர்.