Students can Download 9th Tamil Chapter 3.4 வல்லினம் மிகும் இடங்கள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 3.4 வல்லினம் மிகும் இடங்கள்
கற்பவை கற்றபின்
Question 1.
வல்லினம் மிகலமா?
Asnwer:
அ) பெட்டிச் செய்தி
ஆ) விழாக் குழு
இ) கிளிப் பேச்சு
ஈ) தமிழ்த் தேன்
உ) தைப் பூசம்
ஊ) கூடக் கொடு
எ) கத்தியை விடக் கூர்மை
ஏ) கார்ப் பருவம்
Question 2.
தொடர் தரும் பொருளைக் கூறுக.
Answer:
அ) சின்னக்கொடி – சின்னம் வரையப்பட்ட கொடி
சின்ன கொடி – சிறிய கொடி
ஆ) தோப்புக்கள் தோப்பிலிருந்து இறக்கிவரப்பட்ட கள்
தோப்புகள் – தென்னந்தோப்புகள் பலவுண்டு
இ) கடைப்பிடி கொள்கையைக் கடைப்பிடிப்பது
கடைபிடி – வாணிகம் தொடங்கக் கடை பிடித்தார்
ஈ) நடுக்கல் – அடையாளமாக நடுவது;
நடுக்கல் – ஊன்றினோம் நினைவுச் சின்னம்
உ) கைம்மாறு – செய்த உதவி
கைமாறு – கையில் உள்ள மாறு(விளக்குமாறு)
ஊ) பொய்ச்சொல் – நீ சொன்னது பொய்ச்சொல்
பொய் சொல் – பொய் சொல்வது தவறு
Question 3.
சிந்தனை வினா:
நாளிதழ்கள் சிலவற்றில் வல்லினம் மிகவேண்டிய இடத்தில் மிகாமல் எழுதி வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வாறு எழுதுவது மொழிக்கு வளம் சேர்க்குமா? வல்லினம் மிக வேண்டியதன் முக்கியத்துவத்தை எழுதுக.
Asnwer:
அதற்க்கு – தவறு
அதற்கு = அது + அன் + கு
அது (சுட்டுப்பெயர்) + அன்(சாரியை) + கு(வேற்றுமை உருபு)
அதன் + கு = அதற்கு – என்பதே சரி
வல்லொற்றுக்கு அருகில் இன்னொரு வல்லினம் மிகாது.
அதற்கு என்றே எழுத வேண்டும்
எ.கா: இந்தப் பொருள் வேண்டாம். அதற்குப் பதிலாக இதை வைத்துக்கொள்.
கடைபிடித்தல் – கடைப்பிடித்தல்
கடைபிடித்தல் – கடையைப் பிடித்தல்
கடைப்பிடித்தல் – பின்பற்றுதல்
இதில் கடைபிடி என்பது கடையைப்பிடி என்று பொருள், அதே சொல்லில் வல்லினம் மிகுந்து ‘கடைப்பிடி’ என வரும் போது பின்பற்றுதல் என்னும் பொருள் தரும்.
எ.கா: சேகர் புதிதாக வாணிகம் தொடங்கக் கடை பிடித்தார்.
நாங்கள் என்றும் தூய்மையைக் கடைப்பிடிப்போம்.
எனவே வல்லினம் இட்டு எழுதுவதில் கவனம் தேவை!
Question 4.
உரிய இடங்களில் வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
Answer:
பழங்கால மக்களின் நாகரிகம், பண்பாடு தொடர்பான வரலாறுகளை அகழாய்வில் கிடைக்கின்றப் பொருள்களும் உறுதிபடுத்துகின்றன. பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில் ஆய்வு நடைபெறுகின்ற இடங்களில் கீழடியும் ஒன்று.
மொழியை ஆள்வோம்
படித்துச் சுவைக்க.
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்காத கண்ணே உனைத் தூங்க வைப்பேன் ஆரிராரோ
மாம்பழத்தைக் கீறி வயலுக்கு உரம்போட்டுத்
தேன் பார்த்து நெல்விளையும் செல்வந்தனார் புத்திரனோ!
வெள்ளித்தேர் பூட்டி மேகம்போல் மாடுகட்டி
அள்ளிப் படியளக்கும் அதிர்ஷ்டமுள்ள புத்திரனோ
முத்துச் சிரிப்பழகா முல்லைப்பூப் பல்லழகா
தொட்டில் கட்டித் தாலாட்ட தூக்கம் வருமோடா
கதிரறுக்கும் நேரத்திலே கட்டியுன்னைத் தோளிலிட்டால்
மதியத்து வெயிலிலே மயக்கமும்தான் வாராதோ
வயலிலே வேலை செய்வேன் வரப்பினிலே போட்டிடுவேன்
வயலைவிட்டு ஏறுமுன்னம் வாய்விட்டு அழுவாயோ? …………… – நாட்டுப்புறப்பாட்டு, தகவலாளர்: வேலம்மாள்
பொன்மொழிகளை மொழி பெயர்க்க.
Question 1.
A nation’s culture resides in the hearts and in the soul of its people -Mahatma Gandhi
Answer:
நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.
Question 2.
The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru
Answer:
மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி
Question 3.
The biggest problem is the lack of love and charity – Mother Teresa
Answer:
அன்பு செலுத்துதல், தர்மம் செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய பிரச்சனையாய் உள்ளது.
Question 4.
You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam
Answer:
உங்கள் கனவு நனவாகும் வரை, கனவு காணுங்கள்.
Question 5.
Winners don’t do different things; they do things differently – Shiv Khera
Answer:
வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக செய்கிறார்கள்.
வடிவம் மாற்றுக
பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, வரிசைப்படுத்தி முறையான பத்தியாக்குக.
- உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல் பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.
- இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
- தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.
Answer:
4 தமிழ் மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன. 2 டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ் மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. 3 இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன. 1 உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது
மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
Asnwer:
எ. கா : மேலும் கீழும்:
ஆரிப் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் குமார் மேலும் கீழும் பார்த்தான்.
1. மேடும் பள்ளமும்:
சேரி மக்களின் வாழ்க்கை மேடும் பள்ளமும் கொண்டதாக இருக்கிறது.
2. நகமும் சதையும்:
மும்தாஜும் தமிழரசியும் நகமும் சதையும் போல இணைபிரியாத் தோழிகள்.
3. முதலும் முடிவும்: இது போன்ற தவறுகள் முதலும் முடிவும் ஆக இருக்கட்டும் என்று ஆசிரியர் அவர்களிருவரையும் எச்சரித்தார்.
4. கேளிக்கையும் வேடிக்கையும்:
எங்கள் ஊர்த் திருவிழா கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்ததாக இருந்தது.
5. கண்ணும் கருத்தும்:
அன்பழகன் கண்ணும் கருத்துமாகப் படித்துத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.
தொகுப்புரை எழுதுக.
பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சிகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.
Asnwer:
தொகுப்புரை:
திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி, வித்யாபார்த்தி மேனிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றக் கூட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஜாக்குலின் மேரி தலைமை தாங்கினார். பள்ளித் தாளாளர் டாக்டர். ஆர். கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட அளவில் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற 12ஆம் வகுப்பு மாணவர் இன்ப வண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். இலக்கியங்களில் எவ்வாறு இன்பச்சுவை அமைந்து இருக்கிறது என்பது பற்றிப் பேசினார். முன்னிலை வகித்துப் பேசிய பள்ளித் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி முக்கூடற்பள்ளு போன்ற சிற்றிலக்கியங்களில் இன்பச் சுவையோடு நகைச்சுவையும் இருக்கிறது என்பது பற்றிப் பேசினார்.
தலைமை ஆசிரியர் தலைமை உரையில் இலக்கியத்தில் பாடுபொருள் எவ்வாறெல்லாம் காலத்திற்கேற்றாற் போல் மாறி வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டிப் பேசினார்.
சிறப்புச் சொற்பொழிவாற்றிய திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், ஒன்பான் சுவைகளை விளக்கி நகைச்சுவை உணர்வோடு “இலக்கியத்தில் இன்பச்சுவை” எனும் தலைப்பில் இலக்கிய விருந்து படைத்தார்.
நிறைவாக, இலக்கியமன்றச் செயலர் 12ஆம் வகுப்பு மாணவி அன்புச் செல்வி நன்றியுரை ஆற்றினார்.
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று காங்கேயம்’ கருதப்படுகிறது. பிறக்கும் போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேயம் மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர்
கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வினாக்கள்:
Question 1.
பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.
அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?
ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது?
இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?
ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?
Ansawer:
காங்கேயம் இனக் காளைகள்
Question 2.
பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
அ) கர்நாடகம்
ஆ) கேரளா
இ) இலங்கை
ஈ) ஆந்திரா
Answer:
இ) இலங்கை
Question 3.
பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன.
ஆ) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன.
இ) கண்டெடுக்க + பட்டு + உள்ளன.
ஈ) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன.
Answer:
அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன.
Question 4.
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?
அ) வினாத் தொடர்
ஆ) கட்டளைத்தொடர்
இ) செய்தித்தொடர்
ஈ) உணர்ச்சித்தொடர்
Asnwer:
இ) செய்தித்தொடர்
‘மொழியோடு விளையாடு
பொருள் எழுதித் தொடரமைக்க.
கரை, கறை; குளவி, குழவி; வாளை, வாழை; பரவை, பறவை; மரை, மறை;
Answer:
அகராதியில் காண்க.
இயவை, சந்தப்பேழை, சிட்டம், தகழ்வு, பௌரி
Answer:
இயவை : வழி, மூங்கில் அரிசி, துவரை, தோரை நெல், காடு
சந்தப்பேழை : சந்தனப் பெட்டி
சிட்டம் : நூல் சிட்டம், எரிந்து கருகியது, பெருமை அறிவு, நீதி, உயர்ந்து
தகழ்வு : அகழ், அறிவு, உண்கலம்
பௌரி : பெரும் பண்வகை.
பொருள்தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு பொருள்தரும் வகையில் ஒரு சொல்லில் தொடரைத் தொடங்குக. அத்துடன் அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்து, புதிய புதிய சொற்றொடர்களை உருவாக்குக. இறுதித் தொடர் அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக அமைய வேண்டும்.
காலங்களில் தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக் குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழைக் மின்கம்பிகள்.
Answer:
1. வைக்காதீர்கள்
2. மழைக் காலங்களில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்
3. மழைக் காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலைவைக்காதீர்கள்
4. மழைக் காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது கவனக் குறைவுடன் காலை வைக்காதீர்கள்
இடமிருந்து வலம்
2. விழாவறை காதை குறிப்பிடும் விழா (6)
5. சரி என்பதற்கான எதிர்ச்சொல் தரும் எழுத்துகள் இடம் மாறியுள்ளது (3)
7. பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் சிறுவர்களுக்கான போட்டிகளில் ஒன்று (7)
10. ஊழ் என்பதற்குத் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொல் (2)
13. மா + அடி – இதன் புணர்ந்த வடிவம் (3)
19. கொள் என்பதன் முதல்நிலை திரிந்த தொழிற்பெயர் (2)
வலமிருந்து இடம்
9. தூய்மையற்ற குருதியை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் (2)
11. ஆராய்ச்சி என்பதன் சொற்சுருக்கம் (3)
12. மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர் (5)
16. சல்லிக்கட்டு விளையாட்டுக்குரிய விலங்கு (2)
18. தனி + ஆள் – சேர்த்து எழுதுக. (4)
மேலிருந்து கீழ்
1. தமிழர்களின் வீர விளையாட்டு (7)
2. இவள் + ஐ – சேர்ந்தால் கிடைப்பது (3)
3. மரத்தில் காய்கள் …….. ஆகக் காய்த்திருந்தன (4)
உரிச்சொற்களுள் ஒன்று (2)
6. ……………… சிறந்தது (2)
8. நேர்ததைக் குறிப்பிடும் வானியல் சொல் (2)
12. அகழாய்வில் கிடைத்த கொள்கலன்களுள் ஒருவகை (4)
15. காய் பழுத்தால்…………. (2)
கீழிருந்து மேல்
14. ஒருவர் பற்றி ஒருவர் பிறரிடம் இதை வைக்கக் கூடாது (3)
17. யா முதல் வரும் வினாப்பெயர் (2)
18. தகவிலர் என்பதற்கு எதிர்ச்சொல்லாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது (4)
ம்ம்
Asnwer:
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Answer:
1. பரதம் பாரதத்தின் பண்பாட்டுக் கலையாகும்.
2. தமிழகத்தின் இசைக்கருவிகளுள் நாதசுரமும் ஒன்று. தவில் தோற் கருவிகளுள் ஒன்று.
3. தம்புரா சுருதி தவறாமல் இருப்பதற்கு இசைக்கப்படுவது.
4. பறை, தோல் கருவிகளுள் தொன்மையானது. நல்லதுக்கும் கெட்டதுக்கும் இசையில் நுண்ணிய வேறுபாடு உண்டு.
5. தமிழ்நாட்டுப் பெண்களில் எண்ணங்களை வாசல் முன் வெளிப்படுத்துவது. எரியும்
குத்துவிளக்கு மங்கலம் சின்னங்களில் ஒன்று.
6. தமிழர்களின் காதலும் வீரமும் இருகண்கள், காளையை அடக்கி பெண்ணைத் திருமணம் செய்தனர். இஃது ஒரு பண்பாட்டு நிகழ்வு.
செயல்திட்டம்
தமிழ்நாட்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் குறித்த செய்திகளை, நாளிதழ்களிலோ புத்தகங்களிலோ திரட்டிச் செய்திப் படத்தொகுப்பினை உருவாக்குக.
Answer:
தொல்லியல் பற்றிய செய்திகள்:
தேனி மாவட்டம், போடி, சி.பி.ஏ., கல்லூரி வரலாற்றுத்துறை மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியியல் துறை மூலம், இந்த ஆய்வு நடந்தது.
உதவி பேராசிரியர், மாணிக்கராஜ் கூறியதாவது:
தே.கல்லுப்பட்டி அருகே, கவசகோட்டை கிராமத்தில், பண்ணைமேடு எனப்படும், அக்ரஹாரமேடு பகுதியில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில், ஆய்வு மேற்கொண்டோம். இதில், தமிழரின் தொன்மை எழுத்து வடிவமான, தமிழ், ‘பிராமி’ எழுத்துக்கள் பொறித்த, கருப்பு, சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, சுடுமண் பொம்மைகள், மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பானை ஓடுகளில், கி.பி. 1 மற்றும் 2ம் நூற்றாண்டை சேர்ந்த, தமிழ் பிராமி எழுத்து வடிவம் இடம் பெற்றுள்ளது. தொடர் எழுத்துகள் கிடைக்காததால், முழுவதும் படித்து அறிய முடியவில்லை. இங்கு காணப்படும் செங்கல்கள், கீழடி அகழ்வாய்வு கட்டுமானத்தில் இருந்த
செங்கல்களின் அமைப்பை போன்றே காணப்படுகிறது. துவாரங்கள் உள்ளது இதன் சிறப்பு. மற்றொரு பானை ஓட்டில், மீன் உருவம் பொறித்துள்ளது.
முதுமக்கள் தாழிகளின் மேற்கு பகுதியில் வட்டவடிவமான அலங்காரங்கள் மூன்று மற்றும் நான்கு அடுக்கில் பொறிக்கப்பட்டுள்ளது.
தாழியின் விளிம்பு பகுதியில் கயிறு போன்ற அலங்கார குறியீடுகள் காணப்படுகின்றன. இவை மண்பாண்டங்கள் சுடுவதற்கு முன் வரையப்பட்டவை என தெரிகிறது.
விரிவான தொல்லியியல் ஆய்வு மேற்கொண்டால், பண்டைய தமிழர்களின் சிறப்புகளையும், வாழ்வியல் முறை, நாகரீகத்தையும் பண்பாட்டு அடையாளங்களையும் வெளிக்கொணர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
நிற்க அதற்குத்தக…..
Answer:
நான் பாராட்டுப் பெற்ற சூழல்கள்
அ) கூடுதலாக மீதம் கொடுத்த கடைக்காரரிடம் அந்தப் பணத்தை மீண்டும் அளித்தபோது.
ஆ) கட்டுரை ஏடுகளைக் கீழே தவறவிட்ட என் ஆசிரியருக்கு அதை எடுத்துத் தந்தபோது.
இ) நகரப் பேருந்து நிலையத்தில் வழிகேட்ட பெரியவருக்கு வழிகாட்டிய போது.
ஈ) பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது முதியவரின் பழுதாகி நின்ற இருசக்கர வாகனத்தைச்
செய்த போது.
நிறைவுரை :
வித்யானந்தன் எழுதிய இந்நூல் பல கலைச் சொற்களையும் விளக்குகின்றது.