Students can Download 9th Tamil Chapter 6.5 புணர்ச்சி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 1.
எழுத்து வகை அறிந்து பொருத்துக.
1. இயல் – அ) உயிர் முதல் உயிரீறு
2. புதிது – ஆ) உயிர் முதல் மெய்யீறு
3. ஆணி – இ) மெய்ம்முதல் மெய்யீறு
4. வரம் – ஈ) மெய்ம் முதல் உயிரீறு
Answer:
1) ஆ, 2) ஈ, 3) அ, 4) இ

Question 2.
புணர்ச்சிகளை “முதல், ஈற்றுச்” சொல் வகையால் பொருத்துக.
1. செல்வி + ஆடினாள் – அ) மெய்யீறு + மெய்ம்முதல்
2. பாலை + திணை – ஆ) மெய்யீறு + உயிர் முதல்
3. கோல் + ஆட்டம் – இ) உயீரிறு + உயிர் முதல்
4. மண் + சரிந்தது – ஈ) உயிரீறு + மெய்ம் முதல்
Answer:
1) இ, 2) ஈ, 3) ஆ, 4) அ

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 3.
சேர்த்து எழுதுக:
அ) தமிழ் + பேசு = ………………….
ஆ) தமிழ் + பேச்சு = ………………….
இ) கை + கள் = ………………….
ஈ) பூ + கள் = ………………….
Answer:
அ) தமிழ் + பேசு – தமிழ் பேசு
ஆ) தமிழ் + பேச்சு – தமிழ்ப்பேச்சு
இ) கை + கள் = கைகள்
ஈ) பூ + கள் = பூக்கள்

Question 4.
பொருத்தமான உடம்படு மெய்யுடன் இணைக்க.
அ) பூ + இனம் = ………………….
ஆ) இசை + இனிக்கிறது = ………………….
இ) திரு + அருட்பா = ………………….
ஈ) சே + அடி = ………………….
Asnwer:
அ) பூ + இனம் – பூவினம் (வகர உடம்படு மெய்)
ஆ) இசை + இனிக்கிறது – இசையினிக்கிறது (யகர உடம்படுமெய்)
இ) திரு + அருட்பா – திருவருட்பா (வகர உடம்படு மெய்)
ஈ) சே + அடி – சேவடி(வகர உடம்படுமெய்)

சிந்தனை கிளர் வினாக்கள்:

அ) குற்றியலுகரம், முற்றியலுகரம் இவற்றின் வேறுபாட்டை எழுதுக.
Answer:

  • குற்றியலுகரத்தில் வரும் “உ” கரமானது தனக்குரிய ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாக குறுகி ஒலிக்கும்.
  • முற்றியலுகரத்தில் வரும் “உ” கரமானது தன் ஒரு மாத்திரை அளவில் குறையாது ஒலிக்கும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

ஆ) புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுதுவதற்கு உதவும் – இக்கூற்றை ஆய்க.
Answer:
ஒரு சொல்லைப் பிரித்தால் வரும் நிலைமொழி + வருமொழி – எவ்வாறு புணரும் என்பதை அறியும் பொழுதுதான் உரைநடை எழுதும் போது ஏற்படும் ஒலி நிலை மாற்றங்களை உணர்ந்து எழுத இயலும். வல்லினம், மிகும் மற்றும் மிகாவிடங்கள், சொற்சேர்க்கை ஆகியன உரைநடைக்கு இன்றியமையாதாகும். அவற்றைத் தெறிவாகத் தருவது புணர்ச்சி இலக்கணம் எனவே புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுத உதவும்.

இ) கீழ்க்காணும் பத்தியில் உள்ள சொற்களைச் சேர்த்து எழுதுக.
தமிழின் ‘தொன்மை + ஆன’ இலக்கண ‘நூல் + ஆகிய’ ‘தொல்காப்பியம் + இல்’ ‘சிற்பம் + கலை’ பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும். ‘அ + கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும். ‘தமிழக + சிற்பம் + கலை’ யின் தோற்றத்திற்கான சான்றாக ‘இதனை + கொள்ளலாம்’. சிலப்பதிகாரத்தில் ‘கண்ணகிக்கு + சிலை’ வடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. மாளிகைகளில் பல ‘சுதை + சிற்பங்கள்’ இருந்ததை மணிமேகலை மூலம் அறிய + முடிகிறது’.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

1. தொன்மை +ஆன = தொன்மையான
2. நூல் + ஆகிய = நூலாகிய
3. தொல்காப்பியம் + இல் = தொல்காப்பியத்தில்
4. சிற்பம் + கலை = சிற்பக்கலை
5. அ + கல்லில் = அக்கல்லில்
6. தமிழக + சிற்பம் + கலை = தமிழகச் சிற்பக்கலை
7. இதனை + கொள்ளலாம் = இதனைக் கொள்ளலாம்
8. கண்ணகிக்கு + சிலை = கண்ணகிக்குச் சிலை
9. சுதை + சிற்பங்கள் = சுதை சிற்பங்கள்
10. அறிய + முடிகிறது = அறிய முடிகிறது

ஈ) படக்காட்சியிலிருந்து இரு சொல் தொடர்களை அமைத்து, அவற்றின் புணர்ச்சி வகையினைக் கண்டறிக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி - 1

(எ.கா) மரக்கிளை = மரம் + கிளை
மரக்கிளை – திரிதல் விகாரப்புணர்ச்சி,
மூன்று பெண்கள் = மூன்று + பெண்கள்
மூன்றுபெண்கள் – இயல்புப் புணர்ச்சி
Answer:
அ) நிறைகுடம் = நிறை + குடம்
நிறைகுடம் – இயல்புப் புணர்ச்சி
ஆ) உழவுத் தொழில் = உழவு + தொழில்
உழவுத் தொழில் – தோன்றல் விகாரப் புணர்ச்சி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

மொழியை ஆள்வோம்.

படித்துச் சுவைக்க.

வான் தந்த பாடம்
எத்தனை பெரிய வானம்!
எண்ணிப்பார் உனையும் நீயே;
இத்தரை, கொய்யாப் பிஞ்சு,
நீ அதில் சிற்றெறும்பே,
அத்தனை பேரும் மெய்யாய்
அப்படித்தானே மானே?
பித்தேறி மேல்கீழ் என்று
மக்கள் தாம் பேசல் என்னே !
-பாவேந்தர் பாரதிதாசன்
Answer:
The Lesson the sky Teaches
How Vast is the sky!
Think you of yourself;
The earth is a tiny
Guava fruit; you. like all
Others are a tiny ant
In it? is that not so?
Why talk madly of
The high and the low?
Pavendar Bharatidasan
(translated by P. Parameswaran)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

மொழி பெயர்க்க:

1. Strengthen the body. :
2. Love your food :
3. Thinking is great :
4. Walk like a bull. :
5. Union is strength :
6. Practice what you have learnt :
Asnwer:
1. Strengthen the body. : உடலினை உறுதி செய்
2. Love your food : ஊண் மிக விரும்பு
3. Thinking is great : எண்ணுவது உயர்வு
4. Walk like a bull. : ஏறு போல் நட
5. Union is strength : ஒற்றுமை வலிமையாம்
6. Practice what you have learnt : கற்றது ஒழுகு
இவை அனைத்தும் “பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி”

மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க:

எட்டாக்கனி, உடும்புப்பிடி, கிணற்றுத்தவளை, ஆகாயத்தாமரை, எடுப்பார் கைப்பிள்ளை, மேளதாளத்துடன்.

எ.கா: எட்டாக்கனி :
முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை.
Asnwer:
உடும்புப்பிடி : என் தம்பிக்கு பிடிவாத குணமாததால் பிடித்தால் உடும்புப்பிடிதான்.

கிணற்றுத் தவளை : கிணற்றுத் தவளை போல் உன் வாழ்வை ஒரு குறுகிய எல்லைக்குள் சுருக்கிக் கொள்ளாதே! (அல்லது) கிணற்றுத் தவளை போல் எதுவும் தெரியாமல் இருக்காதே.

ஆகாயத்தாமரை :
ஆகாயத் தாமரையைப் பறிக்க விரும்புவது போல் இல்லாத ஒன்றை விரும்பி ஏற்காதே.

எடுப்பார் கைப்பிள்ளை : என் நண்பன் எடுப்பார் கைப்பிள்ளை போல் யார் எதனைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வான்; நம்பி விடுவான்.

மேளதாளத்துடன் :
எம் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சரை மேளதாளத்துடன் வரவேற்றோம்.

பத்தியில் இடம் பெற்றுள்ள இயல்புப் புணர்ச்சிகளையும், விகாரப் புணர்ச்சிகளையும் எடுத்து எழுதுக:

காஞ்சி கயிலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது. அதே போன்று காஞ்சி வைகுந்த பெருமாள் கோவிலிலும் பல்லவர் காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. இங்குத் தெய்வச்சிற்பங்கள் மட்டுமல்லாது பிற சிற்பங்களும் கோவில் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.
Asnwer:
இயல்புப் புணர்ச்சி சொற்கள்:
நுழைவு வாயிலின் – நுழைவு + வாயிலின்
நிற்பது போன்று – நிற்பது + போன்று

விகாரப்புணர்ச்சிச் சொற்கள்

1. தோன்றல் விகாரப் புணர்ச்சி
சுற்று + சுவர் → சுற்றுச்சுவர்
கலை + கூடம் → கலைக்கூடம்
தெய்வம் + சிற்பங்கள் → தெய்வச்சிற்பங்கள்
குடைவரை + கோயில் → குடைவரைக்கோயில்

2. கெடுதல் விகாரப் புணர்ச்சி
வைகுந்தம் + பெருமாள் → வைகுந்த பெருமாள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

3. திரிதல் விகாரப் புணர்ச்சி
பல்லவர் காலம் + குடைவரைக் கோவில் → பல்லவர் காலக் குடைவரைக் கோவில்

மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

Question 1.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
Answer:
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.

Question 2.
கயல்பானை செய்யக் கற்றுக் கொண்டாள்.
Answer:
கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்.

Question 3.
நேற்று தென்றல் காற்று அடித்தது.
Answer:
நேற்று தென்றல் வீசியது

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 4.
தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்.
Answer:
தென்னங்கீற்றில் இருந்து நார் கிழித்தனர் (கிழித்தார்)

Question 5.
அணில் பழம் சாப்பிட்டது
Answer:
அணில் பழம் தின்றது

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 6.
கொடியிலுள்ள மலரை எடுத்து வா.
Answer:
கொடியில் உள்ள மலரைக் கொய்து வா. (அல்லது) கொடியில் உள்ள பூக்களைப் பறித்து வா?

கவிதை படைக்க.

மூடநம்பிக்கை, புவியைப் போற்று, அன்பினவழி
எ.கா:
மூட நம்பிக்கை
பூனை குறுக்கே போனதற்குக்
கவலைப்படுகிறாயே!
அந்தப் பூனைக்கு என்ன ஆனதோ?
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி - 2

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

மொழியோடு விளையாடு

விடையைத் தமிழ் எண்களில் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி - 3
கண்டுபிடிக்க.

1. எண்ணும் எழுத்தும் கண் – இத்தொடரை ஒருவர் 1, 2, 3, 4, 1, 5, 6, 7, 4, 8, 2 என்று குறிப்பிடுகிறார். இதே முறையைப் பின்பற்றி கீழ்க்காணும் சொற்களை எப்படிக் குறிப்பிடுவார்.
அ) எழுது – ……………………
ஆ) கண்ணும் – ……………………
இ) கழுத்து – ……………………
ஈ) கத்து – ……………………
Answer:
அ) எழுது – 1, 5, 7
ஆ) கண்ணும் – 8, 2, 3, 4
இ) கழுத்து – 8, 5, 6, 7
ஈ) கத்து – 8, 6, 7

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 2.
என் வகுப்பில் படிக்கும் அனைவரும் புதிய புத்தகம் வைத்திருந்தனர். இராமனும் புதிய புத்தகம் வைத்திருந்தான். எனவே, இராமன் என் வகுப்பு மாணவன் – இக் கூற்று.
அ) உண்மை
ஆ) பொய்
இ) உறுதியாகக் கூறமுடியாது
Answer:
இ) உறுதியாகக் கூறமுடியாது
காரணம் : அனைவரும் என்று கூறிய பின் இராமன் வேறு வகுப்பு மாணவனாகக் கூட இருக்கலாம்.

அகராதியில் காண்க.
ஏங்கல், கிடுகு, தாமம், பான்மை, பொறி
Answer:
அ) ஏங்கல் – ஓசை, மயிற்குரல், அழுதல், குழந்தைகளுக்கு வரும் ஒருவகை நோய்
ஆ) கிடுகு – கேடகம், முடைந்த ஓலைக் கீற்று, சட்டப்பலகை
இ) தாமம் – பூமாலை, வடம், புகழ், ஒளி, பரமபதம்
ஈ) பான்மை – குணம், தகுதி, முறைமை, சிறப்பு
உ) பொறி – புள்ளி, தழும்பு, எந்திரம், ஒளி, ஐம்பொறி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.

1. மலர்விழி வீணை வாசித்தாள்: கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.
Asnwer:
மலர்விழி வீணை வாசித்தாள். கேட்டவர் இன்ப வெள்ளத்தில் நீந்தினர்.

2. குழலியின் இசையைச் சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர்.
Asnwer:
குழலியின் இசையைச் சுவைத்தவர் கவலைக்கடலில் இருந்து நீங்கினர்.

3. தேன் போன்ற மொழியைப் பவள வாய் திறந்து படித்தாள்
Asnwer:
பவளவாய் திறந்து மொழித்தேனைப் படித்தாள்.

4. முத்துநகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.
Asnwer:
முத்துநகை தன் புருவவில்லில் மை தீட்டினாள்.

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி - 4
Asnwer:
என்னை நானே
செதுக்கும் சிற்பியாவேன் – ஆம்
கல்வி எனும் உளி கொண்டு
உயரிய சிந்தனை செயல் எனும்
நுட்பங்களுடன் என்னை நானே
வடித்து கொள்கிறேன் சிற்பமாக

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

செயல்திட்டம்

உங்கள் மாவட்டத்தின் கலைநயம் மிக்க இடங்களின் சிறப்புகளைப் படங்களுடன் திரட்டிப் பள்ளியில் காட்சிப்படுத்துக.
Asnwer:
அந்தந்த மாவட்டத்தின் சிறப்புகளைக் குறிக்கும் தொகுப்பேட்டை, மாணவர்களே உருவாக்குங்கள்.

நிற்க அதற்குத்தக….

என்னை மகிழச் செய்த பணிகள்
(எ.கா)
1. இக்கட்டான நேரத்தில் தம்பிக்கு உதவியதற்காக அப்பாவிடம் பாராட்டுப் பெற்றேன்.
2. எனது வகுப்பறையில் கரும்பலகையின் கீழ் சிதறிக் கிடந்த சுண்ணக் கட்டித்துண்டுகளைத் திரட்டி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டதற்கு ஆசிரியர் மற்றும் வகுப்புத் தோழர்களிடம் கைதட்டல் பெற்றேன்.
3. ……………………………………………………………………………………………………………………………………………………….
Asnwer:
1. இக்கட்டான நேரத்தில் தம்பிக்கு உதவியதற்காக அப்பாவிடம் பாராட்டுப் பெற்றேன்.
2. எனது வகுப்பறையில் கரும்பலகையின் கீழ் சிதறிக் கிடந்த சுண்ணக் கட்டித்துண்டுகளைத் திரட்டி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டதற்கு ஆசிரியர் மற்றும் வகுப்புத் தோழர்களிடம் கைதட்டல் பெற்றேன்.
3. வயதான என் பாட்டியின் விருப்பத்தை நிறைவேற்ற அவர்களைப் பாதுகாப்பாகக் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். அம்மா பாராட்டினாள் – மகிழ்ந்தேன்.
4. செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து மாணவப் பருவத்திலே சேவை செய்து அனைவரது பாராட்டையும் பெற்றேன்; மகிழ்ச்சியடைந்தேன்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

கலைச்சொல் அறிவோம்

குடைவரைக்கோயில் – (Cave temple)
கருவூலம் – (Treasury)
மதிப்புறு முனைவர் – (Honorary Doctorate)
மெல்லிசை – (melody)
ஆவணக் குறும்படம் – (Document short film)
புணர்ச்சி – (combination
Answer:
குடைவரைக்கோயில் – (Cave temple)
பெரிய மலை (வரை) களைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்களைக் குறிப்பது

கருவூலம் – (Treasury)
அரசின் செல்வம் மற்றும் நிதி சார்ந்த அனைத்தும் பாதுகாக்கப்படும் இடம்.

மதிப்புறு முனைவர் – (Honorary Doctorate)
தொழில்துறை, கலை, அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றி வாழ்நாள் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்படும் கௌரவ பட்டம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

மெல்லிசை – (melody)
இனிமையான இசையை மென்மையாக வெளிப்படுத்துதல்

ஆவணக் குறும்படம் – (Document short film)
ஒரு சமூகப் பிரச்சனை, அதன் தீவிரம் அதற்கான தீர்வுகள் ஆகியவற்றை குறைந்த நேரத்தில் மக்கள் மனதில் பதியும் வண்ணம் எடுத்துச் சொல்லும் படம்.

புணர்ச்சி – (combination)
தமிழ் இலக்கணத்தில் இடம் பெறுவது. ஒரு சொல்லைப் பிரித்து நிலைமொழியும் வருமொழியும் எவ்வாறு இணைகின்றன என்பதைக் கூறும் இலக்கணம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மரவேர் என்பது ……………. புணர்ச்சி
அ) இயல்பு
ஆ) திரிதல்
இ) தோன்றல்
ஈ) கெடுதல்
Answer:
ஈ) கெடுதல்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

சிறுவினா

Question 1.
கைபிடி, கைப்பிடி – சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.
Answer:
“கை பிடி” – கையைப் பிடித்துக் கொள் என்று பொருள்.
“கைப்பிடி” – கைப்பிடி அளவைக் குறிப்பது. (ஒரு கைப்பிடி பருப்பு கொடு)
கை + பிடி → கைபிடி – இயல்புப் புணர்ச்சி ஆகும்.
கை + பிடி → கைப்பிடி (தோன்றல்) – விகாரப்புணர்ச்சி ஆகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
எழுத்து வகையால் சொற்கள் ………… வகைப்படும்.
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
Answer:
இ) 4

Question 2.
நிலை மொழி ஈற்றில் இ, ஈ, ஐ வரும் போது இடம்பெறும் உடம்படுமெய் …………..
அ) யகர உடம்படுமெய்
ஆ)வகர உடம்படுமெய்
இ) இரண்டும் வரும்
ஈ) இரண்டும் வராது
Answer:
யகர உடம்படுமெய்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 3.
வட்டு + ஆடினான் = எவ்வகை புணர்ச்சியில் வரும்?
அ) பண்புப்பெயர்ப் புணர்ச்சி
ஆ) குற்றியலுகரப்புணர்ச்சி
இ) இயல்பு புணர்ச்சி
ஈ) திசைப்பெயர் புணர்ச்சி
Answer:
ஆ) குற்றியலுகரப்புணர்ச்சி

Question 4.
விகாரப் புணர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களில் இடம்பெறுபவை
அ) தோன்றல்
ஆ) திரிதல்
இ) கெடுதல்
ஈ) விரிதல்
i) முதல் மூன்றும் சரி
ii) முதல் இரண்டும் சரி
iii) இறுதி மூன்றும் சரி
iv) அனைத்தும் சரி
Answer:
i) முதல் மூன்றும் சரி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 5.
காது, பேசு – இது எவ்வகைக் குற்றியலுகரம்.
அ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்
இ) வன்தொடர்க் குற்றியலுகரம்
ஈ) மென்தொடர்க் குற்றியலுகரம்
Answer:
ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்

Question 6.
பொருத்தமானதைத் தேர்க.
1. நாக்கு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
2. நெஞ்சு – இடைத்தொடர்க் குற்றியலுகரம்
3. மார்பு – மென்தொடர்க் குற்றியலுகரம்
4. முதுகு – வன்தொடர்க் குற்றியலுகரம்
அ) 4, 3, 2, 1
ஆ) 4, 2, 3, 1
இ ) 3, 2, 1, 4
ஈ) 1, 2, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

குறுவினா

Question 1.
உடம்படு மெய் என்றால் என்ன? அவை யாவை?
Answer:

  • உயிர் எழுத்தை இறுதியில் கொண்ட சொல்லும், உயிர்எழுத்தை முதலாக உடைய சொற்களும் வரும்போது, அவற்றை ஒன்று சேர்க்க ஒரு மெய் தோன்றும் அதுவே உடம்படுமெய் ஆகும்.
  • அவை: யகர உடம்படுமெய், வகர உடம்படுமெய் ஆகும்.

சிறுவினா

Question 1.
இயல்புப் புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி – விளக்குக.
Answer:
இயல்புப் புணர்ச்சி

  • புணர்ச்சியின் போது மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது இயல்புப்புணர்ச்சி எனப்படும்.
  • சான்று : மண் + மலை = மண்மலை

விகாரப் புணர்ச்சி

  • புணர்ச்சியின் போது மாற்றங்கள் நிகழ்ந்தால் அது விகாரப்புணர்ச்சி எனப்படும். மாற்றம் மூன்று நிலைகளில் வரும். [தோன்றல், திரிதல், கெடுதல்)
  • சான்று : கல்லூரி + சாலை = கல்லூரிச்சாலை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 2.
குற்றியலுகரப் புணர்ச்சியைச் சான்று தந்து விளக்குக.
Answer:

  • வட்டு + ஆடினான் = வட்(ட்+உ) + ஆடினான் = வட்ட் + ஆடினான் = வட்டாடினான்
    நிலைமொழியாக வரும் குற்றியலுகரத்தின் முன் உயிரெழுத்துகள்வந்தால், நிலைமொழியிலுள்ள உகரம் கெடும். வருமொழியிலுள்ள உயிரெழுத்து நின்ற மெய்யுடன் இணையும்.
  • குற்றியலுகரத்தைப் போலவே சில முற்றியலுகரத்துக்கும் இவ்விரு விதிகளும் பொருந்தும். உறவு + அழகு = உற(வ்+உ) + அழகு = உறவ் + அழகு = உறவழகு

Leave a Reply