Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 1 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Tamil Model Question Paper 1

நேரம்: 2.30 மணி 
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
ஓங்கலிடை எனத்தொடங்கும் தண்டிலங்காரப் பாடல்………….. அணியியலில் இடம் பெற்றுள்ளது.
(அ) பொது
(ஆ) பொருள்
(இ) சொல்
(ஈ) வனப்பு
Answer:
(ஆ) பொருள்

Question 2.
வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவத்தை அப்படியே பதிப்பித்தவர்……….. ஆவார்.
(அ) களந்தை மணி
(ஆ) வீரமணி
(இ) இளசைமணி
(ஈ) நெல்லை மணி
Answer:
(இ) இளசைமணி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 3.
மழையைக் கணிக்கம் அறிகுறிகளை வெளியிட்ட ஆனர்த் வேளாண் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம்……….. ஆகும்.
(அ) குஜராத்
(ஆ) அருணாசலப்பிரதேசம்
(இ) தமிழ்நாடு
(ஈ) ஆந்திரா
Answer:
(அ) குஜராத்

Question 4.
நாலடியார் பாடலின் பொருளுக்கேற்ற குறளை கண்டறிக.
நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய காரணம் – தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்
(அ) இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
(ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் தெள்ளியர் ஆதலும் வேறு
நல்லவாம் செல்வம் செயற்கு
(இ) ஊழில் பெருவலி யாஉள மற்று ஒன்று
சூழினும் தான்முந்து உறும்
Answer:
(ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் தெள்ளியர் ஆதலும் வேறு நல்லவாம் செல்வம் செயற்கு

Question 5.
‘குழிமாற்று’ என்பதன் கணிதமொழி
(அ) கூட்டம் வாய்பாடு
(ஆ) கழித்தல் வாய்பாடு
(இ) பெருக்கல் வாய்பாடு
(ஈ) வருத்தல் வாய்பாடு
Answer:
(இ) பெருக்கல் வாய்பாடு

Question 6.
இந்தோ – சாரசனிக் கட்டடக்கலை என்பது …………..
(அ) முகலாயக் கட்டடக்கலை
(ஆ) பிரித்தானியக் கட்டடக்கலை
(இ) இந்தியப் பாரம்பரியப்பாணி
(ஈ) மேற்கண்ட மூன்றும் இணைந்து உருவாக்கப்பட்டது
Answer:
(ஈ) மேற்கண்ட மூன்றும் இணைந்து உருவாக்கப்பட்டது

Question 7.
ஓசையும், பொருளும் இணைந்து உருவாவதுதான் ………..
(அ ) கலைவடிவம்
(ஆ) இலக்கணம்
(இ) ஒலிக்கோலம்
(ஈ) நடையழகு
Answer:
(அ ) கலைவடிவம்

Question 8.
இயற்கைச் சமநிலையை நாம் சீர்குலைத்ததன் விளைவுதான்…………..மாற்றம்.
(அ) இயற்கை
(ஆ) பருவநிலை
(இ) செயற்கை
(ஈ) இடம்
Answer:
(ஆ) பருவநிலை

Question 9.
நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடல் எழுதியவர்………. ஆவார்,
(அ) கம்பர்
(ஆ) சாந்தனார்
(இ) இமயவரம்பன்
(ஈ) நக்கீரர் .
Answer:
(ஈ) நக்கீரர்

Question 10.
சாலைப் போக்குவரத்து உதவுக்கான தொலை தொடர்பு எண் ………. ஆகும்.
(அ) 100
(ஆ) 101
(இ) 102
(ஈ) 103
Answer:
(ஈ) 103

Question 11.
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் ………………. தொடர்களில் வெளிப்படும் செய்திகள். ………..
1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
(அ) 1 சரி 2 தவறு
(ஆ) 1 தவறு, 2 சரி
(இ) 1, தவறு 2 தவறு
(ஈ) 1 சரி 2 சரி
Answer:
(ஈ) 1 சரி 2 சரி

Question 12.
‘யானை புக்கப் புலம் போல’ உவமைக்குப் பொருத்தமான தொடர் …………….
(அ) தனக்கு மட்டுமே பயன் தரும்
(ஆ) தனக்கும் பிறருக்கும் பயன் தரும்
(இ) தனக்கு மட்டும் பயன்தராது
(ஈ) தனக்கும், பிறருக்கும் பயன்தராது
Answer:
(ஈ) தனக்கும், பிறருக்கும் பயன்தராது

Question 13.
எளியது, சரியது எது?
(அ) தீயினத்தின் துணை – நல்லினத்தின் துணை
(ஆ) சொல்லுவது, சொல்லியபடி செய்வது
(இ) சிறுமை பல செய்வது – பகைவர் தொடர்பு
(ஈ) மெய்ப்பொருள் காண்பது – உருவு கண்டு எள்ளாதது
Answer:
(ஆ) சொல்லுவது, சொல்லியபடி செய்வது

Question 14.
‘அதிசய மலர்’ கவிதையைப் படைத்தவர்……………..
(அ) கவிஞர் வாலி
(ஆ) கவிஞர் தமிழ்நதி
(இ) கவிஞர் சுரதா
(ஈ) கவிஞர் சிற்பி
Answer:
(ஆ) கவிஞர் தமிழ்நதி

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12 × 2 = 24]

பிரிவு – I

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. Question 15.
கடையேழு வள்ளல்கள் யாவர்?
Answer:

  • பாரி
  • ஓரி
  • காரி
  • ஆய்
  • அதிகன்
  • பேகன்
  • நள்ளி என கடையேழு வள்ளல்கள்.

Question 16.
ஒளவையார் எதனை எல்லாம் எடுத்துச் செல்வதாக கூறுகிறார்?
Answer:
பரிசில் தர தாமதிக்கும் மன்னனை கடுஞ்சொல் கூறி, மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்லபிள்ளைகள், கோடாரியுடன் காட்டுக்கு மரம் வெட்டச் செல்வது போல், நான் என்யாழினையும் கருவிப்பையையும் சுருக்கிட்டுக் கட்டிக் கொண்டு எடுத்துச் செல்வதாகக் கூறினார் ஔவையார்.

Question 17.
இசைக்கருவிகள் ஒலித்த முறை யாது?
Answer:

  • குழலின் வழியே யாழிசை நின்றது.
  • யாழிசைக்கு ஏற்ப தண்ணுமையாகிய மத்தளம் ஒலித்தது.
  • தண்ணுமையோடு இயைந்து முழவு ஒலித்தது.
  • முழவுடன் இடக்கை வாத்தியம் கூடிநின்று ஒலித்தது.

Question 18.
இயேசு பெருமானின் இயல்பு எத்தகையது?
Answer:
நிறைய அன்பு, குறையாத ஆர்வம், தொடரும் நெகிழ்ச்சி, தொண்டில் மகிழ்ச்சி என்பன மனிதத்தின் இயல்புகள். இம்மனிதமே அனைத்துச் சமயங்களின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கையைப் பேச்சாலும் வாழ்வாலும் வதை பல பட்டும் வெளிப்படுத்தியவர், இயேசு பெருமானார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.

Question 19.
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் நூல் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • அழகுக் கலைகள் பற்றி தமிழில் வெளிவந்த முழுமையான நூல்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்து இயல்புவதாக அமைந்த நூல்.
  • தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்ற நூல்.

Question 20.
கீழ்த்திசைச் சுவடிகள் குறித்து எழுதுக.
Answer:
காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869 இல் உருவாக்கப்பட்ட இந்நூலகம் அரிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகளைக் கொண்டது.

Question 21.
பணித்திட்டப் பேரவையைப் பற்றிக் கூறுக.
Answer:

  • .ஐக்கிய நாடுகள் அவை 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியது.
  • இந்த அமைப்பில் தொடக்கத்தில் 50 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன.
  • பின்னர் இந்த எண்ணிக்கை 193 நாடுகளாக உயர்ந்தது. ஒவ்வோர் ஆண்டும் பசுமைக்குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்த உரையாடல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
வல்லினம் மிகா இடம் ஒன்றைச் சுட்டி எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது.
(எ.கா.) பொல்லாத பையன்

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக் குறிப்புத்தருக.
(அ) நகையும் உவகையும்
(ஆ) முத்தமிழ்
Answer:
விடை:
(அ) எண்ணும்மை
(ஆ) பண்புத்தொகை

Question 24.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) முழுங்கிய
(ஆ) காண்பன்
Answer:
(அ) முழங்கிய = முழங்கு + இ (ன்) + ய் + அ
முழங்கு – பகுதி
இ(ன்) – இறந்தகால இடைநிலை
ய் – உடம்படுமெய் சந்தி
அ – பெயரெச்ச விகுதி

(ஆ) காண்பன் = காண் + ப் – அன்
காண் – பகுதி
ப் – எதிர்கால இடைநிலை
அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

Question 25.
PERSONALITY என்பதன் தமிழாக்கம் …………… .
Answer:
ஆளுமை

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 26.
மரபுத் தொடரின் பொருள் வெளிப்படுத்திச் சொற்றொடர் அமைக்கவும்.
அம்பலப்படுத்துதல்
Answer:
இரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாதவர்கள் அதனை அம்பலப்படுத்திவிடுவார்கள்.

Question 27.
மரபுப்பிழை நீக்கி எழுதுக.
பசு மாட்டுக் கூட்டம் கண்ட ஆட்டுக் கூட்டம் அப்படியே பயந்து நின்றது.
Answer:
பசுநிரையைக் கண்ட ஆட்டுமந்தை அப்படியே பயந்து நின்றது.

Question 28.
மயங்கொலிப் பிழை நீக்கிப் பொருள் வேறுபாடு தோன்ற ஒரே தொடரில் அமைத்து எழுது.
உரவு – உறவு
Answer:
நாம் நமது உறவு சூழ வாழ்வதே உரவாகும்.

Question 29.
கொச்சை சொற்களை நீக்கி எழுதுக.
ஒடம்பு வலிக்கு வெண்ணீர் ஒத்தடம் நல்லது.
Answer:
உடல் வலிக்கு வெந்நீர் ஒற்றடம் நல்லது.

Question 30.
தனித்தமிழில் எழுதுக.
அமலில் உள்ள ஹெல்மெட் சட்டம் நாளை முதல் ரத்து செய்யப்படும். Answer:
நடைமுறையிலுள்ள தலைக்கவச விதிமுறை நாளை முதல் நீக்கம் செய்யப்படும்.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 × 4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக. 

Question 31.
‘நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்’ – இக்கவிதையின் அடி,
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதை நயவுரை செய்க.
Answer:
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே ஏங்கிவிழும் மழைநீரை ஈர்த்துக் கொள்ளும் பகலவனே ஓங்கிய உயரத்தில் ஒய்யாரமாய் ஒளிகொடுப்பவனே…. வாங்கிய நீரையெல்லாம் வான்மழையாக பொழிந்துவிடு …. உலகிலுள்ள உயிரனங்களுக்கு நீயே …. கடவுள் …………

Question 32.
தேவாரம் குறிப்பு வரைக.
Answer:

  • தேவாரம் = தே + வாரம் என்றும்
    தே + ஆரம் என்றும் பிரிக்கலாம்
  • தே + வாரம் என்றால் தெய்வத் தன்மையை உடைய இசைப் பாடல்கள்
  • தே + ஆரம் எனப்பிரித்தால் தெய்வத்திற்கு சூட்டப் பெற்ற பாமாலை என்று கூறுவர்.
  • சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் முதல் ஏழும் மூவர் தேவாரம் எனப்படும்.

Question 33.
கொடை வழங்குதலில் நீங்கள் பின்பற்ற விரும்புவனவற்றை எழுதுக.
Answer:

  • ஈகைப்பண்பு மனிதத்தின் அடையாளமாக இருக்கிறது. கொடுக்கிற பண்பு இருந்தால் எடுக்கிற நிலை இருக்காது என்பதனை உணர்ந்துள்ளேன். அத்தகைய கொடைத் தன்மையை தமிழ் இலக்கியங்கள் விதந்து போற்றுகின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த ஈகையைப் பின்பற்ற விரும்புகிறேன்.
  • ஏழை எளியோர்க்கு என்னால் முடிந்த உதவியை செய்வதன் மூலம் இரத்தல் தொழிலை அகற்ற முற்படுவேன்.
  • நான் கற்ற கல்வியைப் பிறருக்கு இலவசமாகக் கற்றுக் கொடுத்து வளமான நாடாக மாற்ற செயல்படுவேன்.
  • “பொருளாளியே திருடனை விளைவிக்கிறான் “ என்ற கூற்றை நன்கு உணர்ந்துள்ளேன். ஆதலால் என்னிடம் உள்ள பொருளை இயலாதவருக்கு வழங்குவேன்.
  • மனிதன் தன் பாவங்கள் தீரவும் இன்னல்களை நீக்கிக் கொள்ளவும் இறைவன் நமக்குக் கொடுத்த
    கொடையின் ஒரு வழிமுறையே தானம் என்பதனை நன்கு உணர்ந்துள்ளேன்.
  • முல்லைக் கொடி படரத் தேர் தந்த பாரியின் செயலும், மயிலுக்குத் தன் ஆடையைத் தந்த பேகனின் செயலும் அறியாமையால் செய்யப்பட்டவையல்ல. அஃது அவர்களின் ஈகை உணர்வின் காரணமாகச் செய்யப்பட்டவையாகும்.
  • ஈகைப் பண்பு பிறர் கூறி வருவது அல்ல. பிறர் துன்பத்தை பார்த்து தானே தோன்றுவது அத்தகைய ஈகைப் பண்பில் இல்லை என்று சொல்ல மனமில்லாமல் வாழ்ந்த கர்ணனைப் போல் இருக்க விரும்புகிறேன்.

Question 34.
குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வினை விளக்கி எழுதுக.
Answer:

  • இராமனின் தம்பிகள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம் குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் ஆனோம்.
  • பின்னர் மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம். உள்ளத்தில் அன்புகொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம்.
  • புகுதற்கரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தயரதன், இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
ஆற்றங்கரை படிவு என்றால் என்ன? அவற்றின் பயன்கள் யாவை?
Answer:

  • தமிழ்நாட்டில் மழைக்காலங்களில் பெறும் நீரைச் சேமித்து வைக்கும் நீர் மேலாண்மை அமைப்புகள் இருந்தன.
  • வெள்ளச் சமவெளி என்பது ஆற்றின் நீரோட்ட வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரண். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வரும் காலங்களில் அடித்து வரப்படும் பொருள்கள் ஆற்றின் ஓரங்களில் படிந்துவிடும்.
  • இது ஆற்றங்கரைப்படிவு எனப்படும். இதில் படிகின்ற பொருள்களால் ஆற்றுச் சமவெளியில் அடர்த்தியான மணலாலும் மற்றும் சேற்றினாலும் அடுக்குப் படிவம் உருவாகும்.
  • அப்படிவம் வெள்ளப் பெருக்குக் காலங்களில் நீரை உறிஞ்சுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறையும், நீர் மாசடைவதைத் தடுக்கும், மண் அரிப்பைத் தடுக்கும், வறட்சிக் காலங்களில் நீர்மட்டம் குறைந்துவிடாமல் பாதுகாக்கும். உபரிநீர்க் கால்வாய்களும் வெள்ளக்காலங்களில் உதவியாக இருக்கும்.

Question 36.
உ.வே.சா. குறித்து எழுதுக.
Answer:

  • தமிழ்த் தாத்தா என அழைக்கப்பெற்ற உ.வே.சா. இணையற்ற ஆசிரியர், புலமைப் பெருங்கடல், சிறந்த எழுத்தாளர், பதிப்பாசிரியர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்.
  • மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாக்ஷிணாத்திய கலாநிதி ‘ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்.
  • கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • 1932 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.
  • அவரது திருவுருவச் சிலை சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.
  • சென்னை திருவான்மியூரில் உவே. சாவின் பெயரில் நூலகம் அமைந்துள்ளது.

Question 37.
நிருவாக மேலாண்மை குறித்து நாலடியார் கூறும் கருத்தை எழுதுக.
Answer:

  •  உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை
  • ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக்கொண்டால் போதும்.
  • தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால், யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.
  • நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.

“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு”

  • நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன், அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.

Question 38.
மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள் குறித்து எழுதுக.
Answer:

  • ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பாடம் கற்பிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவர் வளாகம் சாராத ஆய்வாளராகத் தம்மை உருவாக்கிக் கொண்டார்.
  • கட்டுரையோ, நூலோ எழுதும் முன் தரவுகளைச் சேகரித்துத் தமது ஆய்வுக்கு ஏற்றதை ஒப்பிட்டு
    ஐயமிருப்பின் மற்றவர்களைக் கேட்டுத் தெளிந்த பிறகே வெளியிடுவார். •
  • மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ. அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகங்களே அவரது தாயகங்களாயின. அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துக்களைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்.
  • புதிய செய்தி தருதல், புது விளக்கமளித்தல், இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டுதல், தவறுகளை மறுத்து உண்மையை எடுத்துரைத்தல் என்பவற்றை ஆய்வு அணுகு முறைகளாகக் கொண்டார்.

மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள்:

  • விபுலானந்த அடிகள்…… இதழ்களில் வெளியாகின.
  • பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும்
  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
  • தமிழ்நாட்டு வரலாறு
  • சாசனச் செய்யுள் மஞ்சரி
  • மறைந்து போன தமிழ் நூல்கள்

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
பொருண்மொழிக்காஞ்சித் துறை அல்லது குறிஞ்யீசத்திணையை விவரி.
பொருண்மொழிக்காஞ்சித் துறை
Answer:
துறை: நற்றாய் கூற்று
இது உடன் போகிய தலைமகள் மீண்டும் வருதற் பொருட்டுத் தாய் காகத்திற்குப் பராய்க்கடன் உரைத்தது.

துறை விளக்கம்:
தலைவி தலைவனோடு உடன்போக்குச் சென்றுவிட்டதை அறிந்த பின்னர், தலைவி மீது பேரன்பு கொண்ட நற்றாய் தன் மகள் தன் கணவனோடு மீண்டும் தன் இல்லத்திற்கே வருதல் வேண்டும் என்றும், அவ்வாறு திரும்பி வந்தால் அவர்களுக்குத் திருமணம் செய்வித்துக் கண் குளிரக் காணல் வேண்டும் என்றும் விரும்புகின்றாள். அதனால் தலைவனும், தலைவியும் திரும்பி வருமாறு நன்னிமித்தமாக (சகுனமாக) கரையும்படி காக்கையை இரந்து வேண்டுகிறாள். அவ்வாறு கரைந்தால் காக்கைக்குப் ‘பலிக்கடன் கொடுப்பதாகவும் கூறுகின்றாள்.

இவ்வாறு தான் வேண்டியவை நிறைவேறுமானால் இன்னது படைப்பேன் என்று கடவுளரையோ, பிறவற்றையோ வேண்டிக்கோடல் பராய்க்கடன் உரைத்தல் என்பர். காக்கை கரைந்தால் விருந்தினரோ, உறவினரோ வீட்டிற்கு வருவர் என்பது நம் மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும்.

(அல்லது)

குறிஞ்சித்திணை
Answer:
அகத்திணைகள் ஐந்து, அவற்றுள் ஒன்று குறிஞ்சித்திணை.
முதற்பொருள்
நிலம் – மலையும் மலை சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – யாமம்
பெரும்பொழுது – கூதிர், முன்பனி

கருப்பொருள்
தெய்வம் – முருகன்
மக்கள் – சிலம்பன், வெற்பன், பொருப்பன், கொடிச்சி, குறத்தி, குறவர், குறத்தியர் கானவர்
பறவை – கிளி, மயில்
விலங்கு – புலி, கரடி, யானை, சிங்கம்
பூ – காந்தள், குறிஞ்சி, வேங்கை
தொழில் – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல், தினைகாத்தல்
உணவு – தினை, மலைநெல், மூங்கிலரிசி
ஊர் – சிறுகுடி

உரிப்பொருள்:
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

சான்று:
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே

விளக்கம்:
தலைவன் நெடுங்காலம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாமல் காலந்தாழ்த்த அதனால் வருந்திய தலைவி “தலைவர் கருணைகொண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டாலன்றி எனக்கு உதவியாகச் சான்று கூறுவார் வேறு ஒருவரும் இலர்” என்று தோழியிடம் கூறியது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 40.
பின்வரும் பாடலைப் படித்துணர்ந்து நயம் பாராட்டுக.
Answer:
படையாமல் உண்ணாத தமிழ்நாடு வாழ்க!
பகையாரும் எண்ணாத தமிழ்நாடு வாழ்க!
அடையாத துன்பங்கள் அவைவந்த போதும்
அநியாயம் எண்ணாத தமிழ்நாடு வாழ்க!
கொல்லாமை உயர்வென்னும் தமிழ்நாடு வாழ்க!
கொடைவள்ளல் பலர்நின்ற தமிழ்நாடு வாழ்க!
இல்லாமை அறியாத தமிழ்நாடு வாழ்க!
இரவாமை அறம் என்னும் தமிழ்நாடு வாழ்க! (- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்)

திரண்ட கருத்து:
கடவுளுக்கு உணவு படைக்காமல் உண்ணாத தமிழ்நாடு வாழ்க! பகையென எவரையும் எண்ணாத தமிழ்நாடு அடையக் கூடாத துன்பங்கள் பல வந்த போதும் அநீதி எண்ணங்களை எண்ணாத தமிழ்நாடு வாழ்க. ஒரு உயிரைக் கொலை செய்யாமல் இருப்பது உயர்ந்தது என்னும் எண்ணம் கொண்ட தமிழ்நாடு வாழ்க. கொடை வள்ளல்கள் பலர் வாழ்ந்த தமிழ்நாடு வாழ்க. எவரேனும் இல்லை என கேட்டால் கொடுக்கும் தமிழ்நாடே வாழ்க. பிறரிடம் கேட்காமல் வாழ்வதே அறம் என்னும் தமிழ்நாடே வாழ்க.

மையக் கருத்து:
துன்பங்கள் பல வந்தாலும் கெட்ட எண்ணங்களை எண்ணக்கூடாது. உயிரை மதிக்க வேண்டும். பிறருக்கு உதவி செய்ய வேண்டும். பிறரிடம் கையேந்தக் கூடாது.

மோனை:
மோனை – சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது
படையாமல், பகையாரும்,
அடையாத, அநியாயம்

எதுகை:
அடிதோறும் இரண்டாவது எழுத்து ஒன்று வருவது அடி எதுகை. படையாமல், அடையாத,
கொல்லாமை, இல்லாமை

சந்தநயம்: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அணி: சொல்லும் பொருளும் மறுபடியும் வந்துள்ளதால் சொற்பொருள் பின்வருநிலையணியாகும்.

Question 41.
பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
ஆழம் தெரியாமல் காலை விடாதே
Answer:
பழமொழி விளக்கம்:
எந்தச் செயலைச் செய்வதற்கு முன்பும் அதன் விளைவை அறிந்து செயலைச் செய்ய வேண்டும்.

வாழ்க்கை நிகழ்வு:
ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் எப்போதும் ஒன்றாகத் தான் இருப்பார்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரியமாட்டார்கள். ஆனால் அதில் ஒருவன் மட்டும் எந்தச் செயலை எடுத்தாலும் அதை உடனே செய்து விடுவான். அதனால் என்ன விளைவு வரும் என்பதை யோசிக்காமல் செய்து விடுவான். அவன் நண்பன் அதில் இருந்து காப்பதுமே வேலையாக இருக்கும். எப்போதும் அவன் நண்பன் கூறுவான் நான் எந்தச் செயலை எடுத்தாலும் அதன் ஆழம் தெரிந்து செயலைத் தொடங்க வேண்டும் என்று கூறுவான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 42.
தமிழாக்கம் தருக.
1. As you sow, so shall you reep.
2. Death keeps no calender.
3. Charity begins at home.
4. East or west home is best.
Answer:

  1. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
  2. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு,
  3. தனக்கு மிஞ்சியே. தானமும் தருமமும்.
  4. எலி வளையானாலும் தனிவளை வேண்டும்.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக. சுற்றுச்சூழல் (அல்லது) தாயன்பு சுற்றுச்சூழல்
தாயன்பு
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 1 - 1

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3 × 6 = 18]

Question 44.
(அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
தமிழின் சீரிளமைத் திறத்தை வியந்த கவிஞர் சிற்பி பின்வருமாறு கூறுகிறார்.

  • செம்மை மிகுந்த சூரியன் மாலையில் மலை முகட்டில் மறையும் பொழுது வானம் செந்நிறப்பூக்காடாய் காட்சி தருகிறது.
  • தொழிலாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக காணப்படும்.
  • இக்காட்சிகளை எல்லாம் நான் வியந்து பாடி அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
  • பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே.
  • பாரி முதல் வள்ளல்களை இவ்வுலகிற்குத் தந்த தாயோ !
  • உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கக் கூவி வா.
  • கூண்டினை உடைத்தெறிந்த சிங்கம் போல வா!
  • குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா.
    இவ்வாறே தமிழின் சீரிளமைத்திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகின்றார்.

(அல்லது)

Question 44.
ஆ) எளிய மக்களின் வலிகளை நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே முழுமையாகப் பிரதிபலிக்கின்றன – நிறுவுக.
Answer:
மனிதன் என்று தோன்றினானோ மொழி என்று பிறந்ததோ அன்றே நாட்டுப்புறப் பாடல்கள் தோன்றிவிட்டன எனலாம். நாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பாலும் பாமரமக்கள் பாடியவையாகவே உள்ளன. எளிய மக்கள் பாடல்கள் என்பதால் அதில் வறுமை, சோகம் என வலிகளைப் பிரதிபலிப்பதாய் காணப்படுகின்றாள். வறுமையில் வாழும் ஒருவன் மனிதர்களைப் பற்றிய பாடல் ஒன்றை எழுதுகிறாள்.

வாழும் நேரத்தில் வருகின்றாள்
வறுமை வந்தால் பிரிகுறா
பேய் போல பணத்த காக்குறா
பெரியவர் தம்மை பழிக்குறா

மனிதன் பணம் வரும் போது மாறிவிடுகிறான் என்பதை வெளிப்படுத்துகிறது. வறுமையினால் வேலைப்பார்க்கும் பெண்களைப் பற்றிய பாடலில்,

வேகாத வெயிலுக்குள்ளே
விறகொடிக்கப் போறபெண்ணே
காலுனக்குப் பொசுக்கலையோ
கற்றாழைமுள்ளுக் குத்தலையோ
காலக் கொடுமையாலே
கஷ்டப்பட காலமாச்சு

என பெண் வெயிலிலும், காலணி இன்றி வேலைப்பார்த்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதாக கூறப்பட்டுள்ளது.

காட்டுக்குள்ளே விறகொடித்து
சாமி வீட்டுகதைச் சுமந்துவந்து
கால் ரூபாய்க்கு விறகுவிற்று
கஞ்சி கண்டு குடிக்கணும்

ஒரு வேலை உணவிற்காக நாள் முழுக்க வேலைப்பார்க்கும் பெண்ணின் வலியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

வெள்ளாம நமக்கு வேணாம்
வெவசாயம் ஒண்ணு வேணாம்
வௌச்சலும் ஒன்றுமில்ல
விட்டுப்புட்டு போயிடலாம்
வேற வேல பாத்துக்கலாம்
வெளிநாடுபோயி அங்க வேலகீல
பாப்போம்
வெள்ளக் காரங்க போல நாம
வசதியாக இருப்போம்

விவசாயம் பொய்த்து போய் வெளிநாட்டிற்குச் சென்று கூலி வேலை பார்த்துப் பிழைத்துக் கொள்ளும் பாமர மக்களின் வலியை வெளிப்படுமாறு இப்பாடல் அமைந்துள்ளது. நாட்டுப்புற இலக்கியங்களைப் பாமர இலக்கியம் எனலாம். பாமர மக்களின் வலியைப் பிரதிபலிப்பதால் அவ்வாறு அழைக்கப்படும்.

Question 45.
(அ) திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக.
Answer:
கலை நம் வாழ்வின் உயிர்நாடி. கலையில்லையோல் வாழ்வில் சுவையிருக்காது. திரைப்படம் ஓர் அற்புதமான கலை. உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும் மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் உலக மொழி திரைப்படம். மக்களைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் திரைப்படத்திற்கு உண்டு. இத்துறையின் வளர்ச்சி திரை பின்னால் எத்தனைத் துறைகளின் வாழ்வு அடங்கியுள்ளது.

ஊமைப்படங்களைப் பேசும்படங்களாக மாற்றுவதற்குப்பல்வேறு அறிவியல் அறிஞர்கள் அயராது உழைத்தார்கள். அதனால் திரைப்படத்துறை மாபெரும் வளர்ச்சியை எட்டியது. திரைப்படத்திற்குக் கதை, கதைமாந்தர் தேர்வு, உரையாடல், பாடல், ஆடை, அணிகலன். உடைவடிவமைப்பாளர், நடிகர், நடிகையர், தோழர், தோழியர், பணியாளர் எனப் பலர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கலைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இத்துறை மாபெரும் வெற்றி பெற்றதாக மாறியுள்ளது. ஒரு திரைப்படம் எடுக்க பல கோடிகள் செலவீனங்கள் ஆகின்றன. இப்பாடங்கள் பலவிதங்களில் எடுக்கப்படுகின்றன. அரசியல், குடும்பப்படங்கள், பக்திப்படம், திகில் படங்கள் என பல பிரிவுகள் உள்ளன.

திரைப்படத்துறையில் முழு ஈடுபாடு உள்ளவர்களால் மட்டுமே இதில் வெற்றிபெற இயலும். திரைப்படத்துறையை ஒரு பல்கலைக்கழகம், பலகலைகளின் சங்கமம் என்றே கூறலாம். திரைத்துறைச் சார்ந்த பல பட்டப்படிப்புகள் தற்போது உருவாகி உள்ளன.

இதில் பல கலைகள் வளர்ந்து வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை . நடிப்புக்கலை, நாடகக்கலை, ஓவியக்கலை, அழகியல் கலை, கட்டடக்கலை போன்ற பல கலைகளை வளர்த்து வருகின்றன. ஒரு திரைப்படம் என்பது கேளிக்கை மட்டுமே அல்ல. பல குடும்பங்களின் வாழ்வியல் ஆதாரம் எனலாம். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதை நம்பியே உள்ளன எனலாம்.

மக்களைத் தம்பால் ஈர்த்துக்கட்டிப் போடும் ஆற்றல் கொண்டது திரை உலகம். “கல்லார்க்கும் கற்றோர்க்கும் களிப்பருளும் களிப்பே” என்னும் வரிகள் திரைப்படத்திற்கும் பொருந்தும். இத்திரைப்படம் கலைகளின் சங்கமமாகவும் பல குடும்பங்களை வாழ வைக்கும் இடமாகவும் விளங்குகிறது எனலாம்.

(அல்லது)

(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு
கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  • குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம்:
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

வாழிடம்:
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம்:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம்:
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறன்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் ‘இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம்:
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம்:
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம்:
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Question 46.
(அ) ‘உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்….. கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
Answer:

  • மேலூர் பங்காருசாமியிடம் தன் நிலப்பத்திரத்தைக் கொடுத்துப் பணம் பெற்ற வெள்ளைச்சாமி அதை அவனால் மீட்டுக்கொள்ள முடியவில்லை. தேவையான பணத்தைத் தயார் செய்ய முடியவில்லை. மேலும் வட்டியும் அதிகமாகிக் கொண்டே போனது.
  • இதை எப்படியோ தெரிந்து கொண்ட வெள்ளைச்சாமியின் அண்ணன் முத்தையா
    பங்காருசாமியிடம் சென்று பத்திரத்தை மீட்பதற்காகப் பேசினான்.
  • ஆனால் அவன் தம்பி என் சொந்த பிரச்சனைகளில் தலையிட வேண்டாம் என்று சொல்லித் திட்டி அனுப்பிவிட்டான்.
  • காலம் கடத்து கொண்டே இருந்தது வெள்ளைச்சாமிக்குப் போதிய பணம் கிடைக்கவே இல்லை. வட்டியும் கொடுக்கவில்லை.
  • பிறகு இறுதியாக வெள்ளைச்சாமியின் புஞ்சை நிலம் ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் அவனுடைய நிலம் கைமாறிப்போனது.
  • வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் நிலத்தையும், தன் உறவுகளையும் பறிகொடுத்துவிட்டோம் என எண்ணி வெள்ளைச்சாமி மனநிம்மதியில்லாமல் இருந்தான்.
  • தன்னுடைய நிலத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனவேதனையில் துடித்தான்.
  • நாட்கள் பல கடந்தது. மழைக்காலம் தொடங்கியது. மழைபெய்யோ பெய்யென பெய்தது. அதற்கு அடுத்த நாள் காட்டுமேட்டுப் பகுதியில் வெள்ளைச்சாமி செல்லும்போது அவனுடைய புஞ்சை நிலத்தினால் அவனுடைய அண்ணன் முத்தையா ஏர் உழுதுகொண்டு இருந்தான்.

அதைப் பார்த்த பிறகுதான் விசாரித்தான், யார் அந்த நிலத்தை ஏலத்தில் வாங்கியது என்று, அப்பொழுது தான் அவனுக்குத் தெரிந்தது தன்னுடைய அண்ணன் நிலத்தை வாங்கியுள்ளான் என தன்கையிலிருந்து சென்றாலும் என் அண்ணன் கையில் என் நிலம் உள்ளது என்ற சந்தோசத்தில் சென்றான் வெள்ளைச்சாமி. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுகிறது என்று சொல்லியதெல்லாம் உண்மைதான்.

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 1

Question 46.
(ஆ) ‘கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன’ – தலைக்குளம் கதையின்றி
உங்கள் கருத்தை விவரிக்க.
Answer:
குளத்துக்கரை விநாயகரும், அரசமரமும், சுத்தமான காற்றும், காதிற்கினிய குயில் ஓசையும் கோடிக்கணக்கான பணம் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் தரும் இடமாக கிராமங்கள் திகழ்கின்றன.

எந்தத் தொழில் முறை மாறினாலும் அழிந்தாலும் உலகம் இயங்குவது பாதிக்காது. ஆனால் உயிர் கொடுக்கும் உழவுத்தொழில் அழிந்தால் உலகம் இருக்கும். ஆனால் உயிர்கள் இருக்காது. அப்படிப்பட்ட உழவுத்தொழில் செய்யும் கிராமங்கள் நகரை நோக்கி திரும்பிச் செல்வது காலத்தின் கட்டாயம் என்றாலும், கஷ்டகாலம் நம்மை நோக்கி வருகிறது என்பதும் நம் அறிய வேண்டியதும் கட்டாயம். நம் கிராமங்கள் அழிந்து வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகின்றோம்.

நகரத்திற்கு வரும் கிராமத்தினர் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 14.5% பேர் கிராமங்களை காலி செய்துவிட்டு நகருக்குள் வந்துவிட்டனர். மொத்தமுள்ள மக்களின் 48.40% பேர் நகரங்களில் வசிப்பது உணவு உற்பத்திக்கு விடப்பட்ட அபாய எச்சரிக்கை. ஏற்கனவே கேரளா, கர்நாடகா, ஆந்திராவிடம் தண்ணீருக்காக போராடிவரும் நாம், இனிவரும் காலங்களில் உணவுக்கு அண்டை மாநிலத்தை நம்பி இருக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.

கிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. வயல்வெளி, திண்ணைவீடுகள், மரத்தடி, கோயில், குளம் இவற்றுடன் மண் மணக்கும் விளையாட்டுகள் – கபடி தமிழக கிராமங்களுக்கே உரிய அடையாளம். ஒரு காலத்தில் ஊருக்கு ஊர் கேட்ட சடு ….. குடு சப்தங்களை இப்போது கேட்க முடியவில்லை. எங்கே செல்கிறோம் நாம் என்றே புரியவில்லை.

“ஆற்றங்கரை ஓரம் அமைந்த வீடுகள்
பச்சை கம்பளம் விரித்தாற் போல
பசுமை நிறைந்த வயல் வெளிகள்
குடும்பத்தோடு அகம் மகிழும்
திண்ணை அமர்வு”

என அனைத்தையும் தொலைத்துவிட்டு ஆன்ராய்ட் அலை பேசியின் தொடு திரையில் அழகிய படங்களைத் தேடுதலால் மட்டுமே தொலைந்த நம் கிராமத்தைத் திருப்பி விட முடியாது. இயன்ற வரை இயற்கையைப் போற்றி வாழ்வோம்.
கிராமத்தை அழிவிலிருந்து மீட்போம்!

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.

Question 47.
அ) குழல்வழி’ என்று துவங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுது.[1 ×4 = 4]
இசைக்கருவிகள் ஒலித்த முறை
Answer:
குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை (- இளங்கோவடிகள்)

(ஆ) ‘அது’ என முடியும் குறளை எழுதுக.[1 × 2 = 2]
Answer:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (- திருவள்ளுவர்)

Leave a Reply