Students can Download 10th Tamil Chapter 1.1 அன்னை மொழியை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 1.1 அன்னை மொழியை
கற்பவை கற்றபின்
Question 1.
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகை”
இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க்காரணத்துடன் எடுத்துக்காட்டுக.
Answer:
1. நற்றிணை = நல் + திணை
தொகை நூல்களுள் முதல் நூல். நல் என்னும் அடைமொழி பெற்ற நூல்.
2. குறுந்தொகை:
நல்ல குறுந்தொகை எனவும் அழைக்கப்படும். குறைந்த அடியளவால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆதலால் குறுந்தொகை என அழைக்கப்பட்டது.
3. ஐங்குறுநூறு:
ஐந்திணைகளைப் பாடும் நூல். குறுகிய பாடலடிகள் கொண்ட நூல்.
4. பதிற்றுப்பத்து:
சேர அரசர்கள் பத்துப் பேரை 10 புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடியது பதிற்றுப்பத்து.
5. பரிபாடல்:
இது அகம், புறம் சார்ந்த நூல். தமிழின் முதல் இசைப்பாடல் நூல். வெண்பா , ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களாலும், பலவகையான அடிகளாலும் பாடப்பட்டுள்ளது.
6. கலித்தொகை:
ஐந்திணையும் ஐவரால் கலிப்பாவில் அமைந்த நூல். கலிப்பாவின் ஓசை துள்ளல் ஓசை. ‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ எனவும் கூறப்படுகிறது.
7. அகநானூறு :
அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டது. களிற்றியானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவுகளைக் கொண்டது.
8. புறநானூறு:
புறம் சார்ந்த நூல். 400 பாடல்களை உடையது. தமிழரின் வரலாற்றுப்பெட்டகம். இது பழந்தமிழரின்
வீரம், பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம், கொடை ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது.
Question 2.
“எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்” என்ற பாடலடியைக் கொண்டு வகுப்பறையில் ஐந்துநிமிட உரை நிகழ்த்துக.
Answer:
வணக்கம்!
தமிழ் இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. தமிழர் அகம், புறம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர். தமிழின் பழமையையோ அல்லது அதன் பெருமையையோ வேறு எம்மொழியும் நெருங்கவியலாது. தமிழ்மொழி இறவா இலக்கிய, இலக்கண வளங்கொண்டு தனக்கெனத் தனிநோக்கும் போக்கும் கொண்டுள்ளது. “தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும்” மாக்சு முல்லர் என்னும் மொழி நூலறிஞர் தமிழ்மொழியைச் சிறப்பித்துள்ளார்.
நிறைவாக, தமிழின் சிறப்பை நிலைக்கச் செய்வதும் மேலும் வளரச் செய்வதும் தமிழர்களாகிய நமது கடமையாகும். இதனை உணர்ந்து தமிழின் சீரிளமையைக் காக்க என்றும் பாடுபடுவோம்.
நன்றி!
வணக்கம்!!
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
Answer:
இ) எம் + தமிழ் + நா
குறுவினா
Question 1.
“மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!”
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
Answer:
- சீவக சிந்தாமணி,
- வளையாபதி,
- குண்டலகேசி
இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்.
சிறுவினா
Question 1.
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
Answer:
- அன்னை மொழியே! அழகான செந்தமிழே!
- பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
- குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!
- பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
- பாட்டும், தொகையும் ஆனவளே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகானமணிமேகலையே!
- கடல் கொண்ட குமரியில் நிலையாய் நின்று அரசாட்சி செய்த பெருந்தமிழ் அரசே!
- பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து தமிழே உன்னை வாழ்த்துகின்றோம்.
நெடுவினா
Question 1.
மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
Answer:
அறிமுக உரை:
தாயே! தமிழே! வணக்கம்.
தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்.
என்று தமிழ்த்தாயை வணங்கி, இங்கு மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலையும், பெருஞ்சித்திரனாரின் பாடலையும் ஒப்பிட்டுக் காண்போம்.
நிறைவுரை:
இருவருமே தமிழின் பெருமையைத் தம் பாடல்களில் பூட்டி, காலந்தோறும் பேசும்படியாக அழகுற அமைத்துப் பாடியுள்ளனர்.
கூடுதல் வினாக்கள்
இலக்கணக் குறிப்பு
செந்தமிழ், நறுங்கனி, பேரரசு, செந்தாமரை – பண்புத்தொகைகள்
பாடி, குடித்து – வினையெச்சங்கள்
பகுபத உறுப்பிலக்கணம்
முகிழ்த்த (முகிழ் = முகிழ் + த் + த் + அ
முகிழ் – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
பலவுள் தெரிக
Question 1.
ஐம்பெருங்காப்பியங்களுள் பொருந்தாததைத் தேர்க.
அ) யசோதர காவியம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) சீவக சிந்தாமணி
Answer:
அ) யசோதர காவியம்
Question 2.
உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?
அ) தேன்சிட்டு
ஆ) வண்டு
இ) தேனீ
ஈ) வண்ணத்துப்பூச்சி
Answer:
ஆ) வண்டு
Question 3.
“அன்னை மொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்
அ) சேரன்
ஆ) சோழன்
இ) பாண்டியன்
ஈ) பல்லவன்
Answer:
இ) பாண்டியன்
Question 4.
பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) பாவியக்கொத்து
ஆ) நூறாசிரியம்
இ) தென்தமிழ்
ஈ) பள்ளிப்பறவைகள்
Answer:
இ) தென்தமிழ்
Question 5.
பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தமிழ்ச்சிட்டு
ஆ) பள்ளிப்பறவைகள்
இ) எண்சுவை எண்பது
ஈ) உலகியல் நூறு
Answer:
அ) தமிழ்ச்சிட்டு
Question 6.
பொருத்துக.
1. மாண்புகழ் – அ) சிலப்பதிகாரம்
2. மன்னும் – ஆ) திருக்குறள்
3. வடிவு – இ) பத்துப்பாட்டு
4. பாப்பத்தே – ஈ) மணிமேகலை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
இ) 1.ஆ 2.இ 3.ஈ. 4.அ
ஈ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
Question 7.
‘அன்னை மொழியே’ கவிதை இடம் பெறும் நூல்
அ) நூறாசிரியம்
ஆ) கனிச்சாறு
இ) எண்சுவை எண்பது
ஈ) பாவியக்கொத்து
Answer:
ஆ) கனிச்சாறு
Question 8.
“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே”- என்று பாடியவர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) க.சச்சிதானந்தன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
Answer:
அ) பெருஞ்சித்திரனார்
Question 9.
“முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே” – என்று பாடியவர்
அ) க.சச்சிதானந்தன்
ஆ) துரை. மாணிக்கம்
இ) வாணிதாசன்
ஈ) முடியரசன்
Answer:
ஆ) துரை. மாணிக்கம்
Question 10.
“நற்கணக்கே” என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?
அ) 18
ஆ) 10
இ) 8
ஈ) 5
Answer:
அ) 18
Question 11.
“மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!” எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை?
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) எட்டு
Answer:
ஆ) மூன்று
Question 12.
துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பெரியவன்கவிராயர்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) தமிழண்ணல்
Answer:
அ) பெருஞ்சித்திரனார்
Question 13.
பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல்.
அ) முன்னை முகிழ்ந்த
ஆ) முன்னைக்கும் முன்னை
இ) முன்னும் நினைவால்
ஈ) முந்துற்றோம் யாண்டும்
Answer:
ஆ) முன்னைக்கும் முன்னை
Question 14.
‘பாப்பத்தே எண் தொகையே’ – சரியான பொருளைக் கண்டறி.
அ) பாடல் பத்து, எண் தொகை
ஆ) பா பத்து, எட்டுத் தொகை
இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
ஈ) பத்தும் எட்டும்
Answer:
இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
Question 15.
பெருஞ்சித்திரனாரின் ‘முந்துற்றோம் யாண்டும்’, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ என்னும் இரு தலைப்பிலுள்ள பாடல்கள் எத்தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றன? அ) எண்சுவை எண்பது
ஆ) உலகியல் நூறு
இ) நூறாசிரியம்
ஈ) கனிச்சாறு
Answer:
ஈ) கனிச்சாறு
Question 16.
செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அது போல – பயின்று வரும் அணி
அ) உவமையணி
ஆ) உருவக அணி
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ) தற்குறிப்பேற்றணி
Answer:
அ) உவமையணி
Question 17.
செந்தமிழ் – பிரித்து எழுதுக.
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) செ + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
Answer:
ஈ) செம்மை + தமிழ்
Question 18.
செந்தமிழ், செந்தாமரை ஆகிய சொற்களில் இடம் பெறும் இலக்கணக் குறிப்பைச் சுட்டுக.
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத் தொகை
ஈ) அன்மொழித்தொகை
Answer:
அ) பண்புத்தொகை
Question 19.
உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள – இவ்வடியில் காணும் நயம்
அ) மோனை
ஆ) எதுகை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
அ) மோனை
Question 20.
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே
மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
இப்பாடலில் அமைந்த எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
அ) தென்னன்
ஆ) மன்னும்
இ) இன்ன றும்
ஈ) இவையனைத்தும்
Answer:
ஈ) இவையனைத்தும்
Question 21.
‘அன்னை மொழியே’ என்னும் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர்
அ) சுந்தரனார்
ஆ) பாரதிதாசன்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) பாவாணர்
Answer:
இ) பெருஞ்சித்திரனார்
Question 22.
“சாகும் போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று பாடியவர் யார்?
அ) பாரதிதாசன்
ஆ) பெருஞ்சித்திரனார்
இ) சச்சிதானந்தன்
ஈ) ஆறுமுகநாவலர்
Answer:
இ) சச்சிதானந்தன்
Question 23.
பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது?
அ) பாவியக்கொத்து
ஆ) கனிச்சாறு
இ) திருக்குறள் மெய்ப்பொருளுரை
ஈ) உலகியல் நூறு
Answer:
இ) திருக்குறள் மெய்ப்பொருளுரை
Question 24.
தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர் யார்?
அ) கண்ண தாசன்
ஆ) பாரதிதாசன்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) திரு.வி.க
Answer:
இ) பெருஞ்சித்திரனார்
குறுவினா
Question 1.
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தமிழுணர்வை உலகெங்கும் பரப்ப காரணமாய் இருந்த இதழ்கள் யாவை?
Answer:
- தென்மொழி
- தமிழ்ச்சிட்டு
Question 2.
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் யாவை?
Answer:
- உலகியல் நூறு
- கனிச்சாறு
- பாவியக்கொத்து
- மகபுகுவஞ்சி
- நூறாசிரியம்
- பள்ளிப் பறவைகள்
- எண்சுவை எண்பது
Question 3.
வண்டு – தேன் தமிழர் – தமிழ்ச்சுவை இவற்றை ஒப்பிட்டுப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:
வண்டு – தேன் :
உள்ளத்தில் கனல் மூள வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுகின்றது.
தமிழர் – தமிழ்ச்சுவை: தமிழர் செந்தமிழைச் சுவைத்து தமிழின் பெருமையை எங்கும் முழங்குகின்றனர்.
Question 4.
“அன்னை மொழியே” என்ற பாடலில் அமைந்துள்ள விளிச்சொற்களை எழுதுக.
Answer:
- செந்தமிழே!
- மாண்புகழே!
- நறுங்கனியே!
- எண்தொகையே!
- பேரரசே!
- நற்கணக்கே !
- தென்னன் மகளே!
- சிலம்பே !
Question 5.
பதினெண் மேற்கணக்கு நூல்கள் எவை?
Answer:
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு.
Question 6.
தமிழ் எவற்றின் காரணமாகத் தமக்குள் பற்றுணர்வை ஏற்படுத்துவதாகப் பெருஞ்சித்திரனார் கூறுகிறார்?
Answer:
- பழம்பெருமையும் தனக்கெனத் தனிச்சிறப்பும் இலக்கிய வளமும் கொண்டது தமிழ்.
- நீண்ட நிலைத்த தன்மை உடையது.
- வேற்றுமொழியார் தமிழைக் குறித்து உரைத்த புகழ்மொழிகள்.
ஆகிய இவையே தமக்குள் பற்றுணர்வை ஏற்படுத்துவதாகப் பெருஞ்சித்திரனார் கூறுகிறார்.
Question 7.
“இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே!”
– இவ்வடியில் சுட்டப்படும் மொத்த நூல்கள் எத்தனை?
Answer:
சிறுவினா
Question 1.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இயற்பெயர் : துரை. மாணிக்கம்
ஊர் : சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்
பெற்றோர் : துரைசாமி, குஞ்சம்மாள்
இயற்றிய நூல்கள் : கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகு வஞ்சி.
சிறப்பு : இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தது.
காலம் : 10.03.1933 முதல் 11.06.1995 வரை
Question 2.
‘முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே’ என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் கூறக் காரணம் யாது?
Answer:
- செழுமை மிகுந்த தமிழே! என்னுயிரே! சொல்லுவதற்கு அரிதான உன்னுடைய பெருமைகளை என் தமிழ் நாக்கு எவ்வாறு தான் விரித்துரைக்கும்.
- பழம்பெருமை, தமக்கெனத் தனிச்சிறப்பு, இலக்கிய வளம் கொண்ட தமிழே! .
- உன்னுடைய நிலைத்த தன்மையும் வேற்றுமொழி பேசுபவர்கள் உன்னைப் பற்றிக் கூறிய புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன.
- என் தனித்தமிழே! வண்டு செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போல நாங்கள் உன்னைச் சுவைத்து உள்ளத்தில் கனல் மூள, உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.