Students can Download 10th Tamil Chapter 3.2 காசிக்காண்டம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 3.2 காசிக்காண்டம்
கற்பவை கற்றபின்
Question 1.
நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக ஒரு பத்தியளவில் எழுதிப் படித்துக் காட்டுக.
Answer:
உறவினரை வியந்து உரைத்து நல்லச் சொற்களை இனிமையாகப் பேசி முகமலர்ச்சியுடன் அவர்களை நோக்கினேன். வீட்டிற்குள் வருக! வருக! என்று வரவேற்றேன். அவர் எதிரில் நின்று முகமும் மனமும் மலரும்படி உணவருந்திச் செல்லுங்கள் எனக் கூறி உணவு சமைத்து, தலைவாழை இலையில் உணவிட்டேன். அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டேன். அவர் விடை பெற்றுச் செல்லும் போது வாயில் வரை பின் தொடர்ந்து சென்று அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்பினேன்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
காசிக்காண்டம் என்பது…………………..
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறு பெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
Answer:
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
குறுவினா
Question 1.
விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
Answer:
- வாருங்கள் ஐயா, வணக்கம்!
- அமருங்கள்.
- நலமாக இருக்கிறீர்களா?
- தங்கள் வரவு நல்வரவு
இலக்கணக் குறிப்பு.
நன்மொழி – பண்புத்தொகை
வியத்தல், நோக்கல், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் – தொழிற்பெயர்கள்
வருக – வியங்கோள் வினைமுற்று
பகுபத உறுப்பிலக்கணம்.
இலக்கணக் குறிப்பு.
வந்து – வினையெச்சம்
நன்முகமன் – பண்புத்தொகை
பொருந்து – வினையெச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்.
வந்து – வா(வ) + த(ந்) + த் + உ
வா – பகுதி (வ) எனக் குறுகியது விகாரம்
த் – சந்தி (ந்) ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி
பலவுள் தெரிக
Question 1.
காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்? அ) துளசிதாசர்
ஆ) அதிவீரராம பாண்டியர்
இ) ஔவையார்
ஈ) பெருஞ்சித்திரனார்
Answer:
ஆ) அதிவீரராம பாண்டியர்
Question 2.
காசிக்காண்டத்தின் இல்லொழுக்கம் பற்றிய பகுதி எத்தனையாவது பாடல்?
அ) பதினான்காவது
ஆ) பதினாறாவது
இ) பதின்மூன்றாவது
ஈ) பதினேழாவது
Answer:
ஈ) பதினேழாவது
Question 3.
முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர்?
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கிள்ளிவளவன்
இ) செங்குட்டுவன்
ஈ) இரண்டாம் புலிகேசி
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்
Question 4.
அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்
அ) சீவலபேரி பாண்டி
ஆ) சீவலமாறன்
இ) மாறவர்மன்
ஈ) மாறன்வழுதி
Answer:
ஆ) சீவலமாறன்
Question 5.
அதிவீரராம பாண்டியர் இயற்றாத நூலைக் கண்டறிக.
அ) நைடதம்
ஆ) வாயு சம்கிதை
இ) திருக்கருவை அந்தாதி
ஈ) சடகோபர் அந்தாதி
Answer:
ஈ) சடகோபர் அந்தாதி
Question 6.
பொருத்திக் காட்டுக.
i) நன்மொழி – 1. பெயரெச்சம்
ii) வியத்தல் – 2. வியங்கோள் வினைமுற்று
iii) வருக – 3. தொழிற்பெயர்
iv) உரைத்த – 4. பண்புத்தொகை
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1
Question 7.
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் – என்று குறிப்பிடும் நூல் எது?
அ) சீவக சிந்தாமணி
ஆ) விவேக சிந்தாமணி
இ) மணிமேகலை
ஈ) நளவெண்பா
Answer:
ஆ) விவேக சிந்தாமணி
Question 8.
‘அருகுற’ என்பதன் பொருள் என்ன?
அ) அருகில்
ஆ) தொலைவில்
இ) அழிவில்
ஈ) அழுகிய
Answer:
அ) அருகில்
Question 9.
முகமன் எனப்படுவது ……………………
அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்
ஆ) ஒருவரை எதிர்த்துப் பேசும் சொற்கள்
இ) பெரியோர்களின் கருத்துகளை வரவேற்கும் சொற்கள்
ஈ) மன்னரும் அமைச்சரும் உரையாடும் சொற்கள்
Answer:
அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்
Question 10.
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை?
அ) எட்டு
ஆ) ஒன்பது
இ) ஆறு
ஈ) பத்து
Answer:
ஆ) ஒன்பது
Question 11.
வெற்றிவேற்கை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கரிகாலன்
இ) பாரி
ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்
Question 12.
நறுந்தொகை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கரிகாலன்
இ) பாரி
ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்
Question 13.
நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?
அ) கொன்றைவேந்தன்
ஆ) காசிக்கலம்பகம்
இ) வெற்றிவேற்கை
ஈ) காசிக்காண்டம்
Answer:
இ) வெற்றிவேற்கை
Question 14.
பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) நைடதம்
ஆ) விவேகசிந்தாமணி
இ) வெற்றிவேற்கை
ஈ) காசிக்காண்டம்
Answer:
ஆ) விவேகசிந்தாமணி
குறுவினா
Question 1.
காசிக்காண்டம் நூல் குறிப்பு வரைக.
Answer:
- காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்.
- துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது.
Question 2.
அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
காசிக்காண்டம், நைடதம், லிங்க புராணம், வாயுசம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம், வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை.
Question 3.
“முகமன்” என்னும் சொல் உணர்த்தும் செய்தி யாது?
Answer:
ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்லாகும்.
Question 4.
“பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல்” – தொடர் பொருள் விளக்கம் தருக.
Answer:
தொடர் இடம்பெறும் நூல் : காசிக்காண்டம்
தொடர் விளக்கம் : விருந்தினர் அருகிலேயே விருந்து மேற்கொள்பவர் அமர்ந்து கொள்ளுதல்.
சிறுவினா
Question 1.
அதிவீரராம பாண்டியர் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : அதிவீரராம பாண்டியன்
சிறப்பு : கொற்கையின் அரசர் தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்தார்.
பட்டப் பெயர் : சீவலமாறன்
இயற்றிய நூல்கள் : காசிக்காண்டம், நைடதம், லிங்க புராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம், வெற்றிவேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை.’
Question 2.
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கம் குறித்து காசிக்காண்டம் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:
- விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை எதிர்கொண்டு வியந்து உரைத்தல் வேண்டும்.
- நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல் வேண்டும்.
- முகமலர்ச்சியுடன் அவரை நோக்கி, வீட்டிற்குள் வருக’ என்று வரவேற்று, அவர் எதிரில் நின்று, அவர் முன் மனம் மகிழும்படி பேசுதல் வேண்டும்.
- அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டு, அவர் விடை பெற்றுச் செல்லும் போது, வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல் வேண்டும்.
- வந்தவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் வேண்டும். மேற்கண்ட செயல்கள் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக காசிக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.