Students can Download 10th Tamil Chapter 6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
கற்பவை கற்றபின்
Question 1.
சந்தநயமிக்க குழந்தைப் பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து, வகுப்பறையில் பாடி மகிழ்க.
Answer:
‘வாசித்துப் பழகுவோம் குழந்தைகளே!
‘வார்த்தை தொடரை’ வாசித்து
பழகி மகிழ்வோம் குழந்தைகளே!
‘பேசிப் பழகுவோம் குழந்தைகளே!
‘தூய தமிழில் பேசிப் பழகுவோம் குழந்தைகளே!
‘எழுதிப் பழகுவோம் குழந்தைகளே!
‘எழுத்துப் பிழைகளைத் தவிர்ப்போம் குழந்தைகளே!
நூலகம் செல்வோம் குழந்தைகளே!
நூல்களை அறிவோம் குழந்தைகளே!
பாடநூல் வினாக்கள்
சிறுவினா
Question 1.
வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
Answer:
வைத்தியநாதபுரி முருகன் செங்கீரை ஆடும் அழகு :
கிண்கிணி : கால்களில் அணிந்திருந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடின.
அரைஞாண் மணி : இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரை வட்டங்கள் ஆடின.
சிறு வயிறு : பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறு சரிந்தாடியது.
நெற்றிச் சுட்டி : பட்டம் கட்டிய நெற்றியில் பொட்டுடன் வட்டவடிவான சுட்டி பந்தாடியது.
குண்டலங்கள் : கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடின.
உச்சிக் கொண்டை : உச்சிக் கொண்டை அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளியுள்ள முத்துக்களோடு ஆடியது.
ஆடுக : வைத்திய நாதபுரி முருகனே! செங்கீரை ஆடி அருள்புரிவாயாக.
பவளம் போன்ற உன் திருமேனி ஆட, செங்கீரை ஆடுக.
இலக்கணக் குறிப்பு.
குண்டலமும் குழைகாதும் – எண்ணும்மை
ஆடுக – வியங்கோள் வினைமுற்று
கட்டிய – பெயரெச்சம்
வட்டச் சுட்டி – குறிப்புப் பெயரெச்சம்
செங்கீரை, செம்பொன்னடி – பண்புத் தொகை
பைம்பொன், சிறுகிங்கிணி – பண்புத் தொகை
பகுபத உறுப்பிலக்கணம்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்?
அ) குமரகுருபரர்
ஆ) இராமலிங்க அடிகள்
இ) தாயுமானவர்
ஈ) செயங்கொண்டார்
Answer:
அ) குமரகுருபரர்
Question 2.
செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஒன்று
Answer:
அ) இரண்டு
Question 3.
குமரகுருபரரின் காலம்…………… ஆம் நூற்றாண்டு.
அ) 16
ஆ) 17
இ) 18
ஈ) 19
Answer:
ஆ) 17
Question 4.
குமரகுருபரர் அறிந்திராத மொழியைக் கண்டறிக.
அ) தமிழ்
ஆ) வடமொழி
இ) இந்துஸ்தானி
ஈ) மலையாளம்
Answer:
ஈ) மலையாளம்
Question 5.
குமரகுருபரர் இயற்றாத நூலைக் கண்டறிக.
அ) கந்தர் கலிவெண்பா
ஆ) நீதிநெறி விளக்கம்
இ) மதுரைக் கலம்பகம்
ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்
Answer:
ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்
Question 6.
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சகலகலாவல்லி மாலை, திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூ ல்களை இயற்றியவர்.
அ) குமரகுருபரர்
ஆ) இராமலிங்க அடிகள்
இ) தாயுமானவர்
ஈ) ஞானியாரடிகள்
Answer:
அ) குமரகுருபரர்
Question 7.
சிற்றிலக்கியங்களின் வகைகள்……………
அ) 16)
ஆ) 64
இ) 96
ஈ) 108
Answer:
இ) 96
Question 8.
பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பருவங்கள் ……………
அ) 8
ஆ) 10
இ) 12
ஈ) 7
Answer:
ஆ) 10
Question 9.
பொருத்திக் காட்டுக :
i) அரை நாண் – 1. தலையில் அணிவது
ii) சுட்டி – 2. காதில் அணிவது
iii) குண்டலம், குழை – 3. நெற்றியில் அணிவது
iv) சூழி – 4. இடையில் அணிவது
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 1, 2, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1
Question 10.
ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.
அ) சிற்றில்
ஆ) சிறுபறை
இ) சிறுதேர்
ஈ) ஊசல்
Answer:
ஈ) ஊசல்
Question 11.
பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.
அ) கழங்கு
ஆ) அம்மானை
இ) ஊசல்
ஈ) சிற்றில்
Answer:
ஈ) சிற்றில்
Question 12.
பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் ……………
அ) 6
ஆ) 7
இ) 8
ஈ) 10
Answer:
ஆ) 7
Question 13.
பிள்ளைத் தமிழில் இருபாலருக்கும் இடையே வேறுபடும் பருவங்கள் ……………
அ) 6
ஆ) 3
இ) 7
ஈ) 5
Answer:
ஆ) 3
Question 14.
காற்றில் ஆடுவது போன்று மிகவும் மென்மையாகக் குழந்தை ஆடும் பருவம்
அ) காப்பு
ஆ) செங்கீரை
இ) தால்
ஈ) சப்பாணி
Answer:
ஆ) செங்கீரை
Question 15.
செங்கீரைப் பருவத்தில் குழந்தையின் தலை அசைந்தாடும் மாதம் எது?
அ) 3 – 4
ஆ) 5 – 6
இ) 7 – 8
ஈ) 9 – 10
Answer:
ஆ) 5 – 6
Question 16.
கிண்கிணி என்ற அணிகலன் அணியும் இடம் ……………
அ) காலில்
ஆ) இடையில்
இ) நெற்றியில்
ஈ) காதில்
Answer:
அ) காலில்
Question 17.
குண்டலமும், குழைகாதும், ஆடுக. இச்சொற்களுக்கான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.
அ) எண்ணும்மை, வினையெச்சம்
ஆ) எண்ணும்மை, வியங்கோள் வினைமுற்று
இ) முற்றும்மை, வினையெச்சம்
ஈ) உம்மைத்தொகை, வியங்கோள் வினைமுற்று
Answer:
ஆ) எண்ணும்மை, வியங்கோள் வினைமுற்று
Question 18.
‘பதிந்து’ என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை ……………
அ) பதி + த்(ந்) + த் + உ
ஆ) பதி + த் + த் + உ
இ) பதி + த் + ந் + உ
ஈ) பதிந்து + உ
Answer:
அ) பதி+த்(ந்)+த்+உ
Question 19.
குமரகுருபரர் எவ்விறைவனைச் செங்கீரை ஆடுமாறு வேண்டுகிறார்?
அ) சுவாமி மலை முருகன்
ஆ) வைத்தியநாத முருகன்
இ) திருக்கழுக்குன்ற முருகன்
ஈ) திருச்செந்தூர் முருகன்
Answer:
ஆ) வைத்தியநாத முருகன்
Question 20.
“கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட” – என்ற அடிகளில்
இடம்பெற்றுள்ள இலக்கிய நயங்கள் ……………
அ) மோனை, இயைபு
ஆ) மோனை, எதுகை
இ) எதுகை, இயைபு
ஈ) இயைபு, முரண்
Answer:
அ) மோனை, இயைபு
Question 21.
‘சிறு பண்டி சரிந்தாடப்’ என்பதில் ‘பண்டி’ என்பதன் பொருள் ……………
அ) வயிறு
ஆ) பெருக்கம்
இ) தலை
ஈ) சுருக்கம்
Answer:
அ) வயிறு
குறுவினா
Question 1.
குமரகுருபரர் குறிப்பு வரைக.
Answer:
ஆசிரியர் பெயர் – குமரகுருபரர்
காலம் – கி.பி. 17ஆம் நூற்றாண்டு
புலமை பெற்ற மொழிகள் – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி.
இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை.
Question 2.
பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
பிள்ளைத்தமிழ் இரண்டு வகைப்படும். அவை:
ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ்.
Question 3.
ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்களையும் எழுதுக.
Answer:
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
Question 4.
பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்களையும் எழுதுக.
Answer:
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல்.
Question 5.
ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் உரிய பொதுவான பருவங்கள் எத்தனை? அவை யாவை?
Answer:
பொதுவான பருவங்கள் ஏழு. அவை:
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.
Question 6.
பிள்ளைத்தமிழில் குமரகுருபரர் குறிப்பிடும் அணிகலன்கள் யாவை? அவை எவ்விடங்களில் | அணியப்படும் என்பதையும் பட்டியலிடுக.
Answer:
Question 7.
செங்கீரைப் பருவம் குறிப்பு வரைக.
Answer:
- செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போல குழந்தையின் தலை 5-6ஆம் மாதங்களில் மென்மையாக அசையும்.
- இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகம் அசைந்தும் ஆடும்.
Question 8.
பிள்ளைத்தமிழில் பாட்டுடைத் தலைவராகக் கருதப்படுவோர் யார்?
Answer:
இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு குழந்தையாகக் கருதிப் பாடப்படும்.
Question 9.
குமரகுருபரர் சுட்டி குறித்து கூறுவது யாது?
Answer:
பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்டவடிவான சுட்டி பதிந்தாடட்டும்.
சிறுவினா
Question 1.
பிள்ளைத்தமிழ் குறிப்பு வரைக.
Answer:
வகை :
96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
வரையறை :
இறைவனையோதலைவரையோ அரசனையோ பாட்டுடைத்தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதி பாடப்படும். பாட்டுடைத் தலைவனின் செயற்கரிய செயலை எடுத்தியம்பும்.
வகைகள் : இரண்டு வகைப்படும். அவை: ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ்.
பருவங்களின் எண்ணிக்கை :
பத்து. பருவத்துக்குரிய 10 பாடல்கள் வீதம் 100 பாடல்கள் உள்ளன.
ஆண்பால் பிள்ளைத்தமிழின் பருவங்கள் :
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்கள் :
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல்.
பொதுவான பருவங்கள் :
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, வருகை, முத்தம், அம்புலி.