Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

நேரம்: 3.00 மணி 
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி
வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
(அ) செய்தி 1 மட்டும் சரி
(ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
(இ) செய்தி 3 மட்டும் சரி
(ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
Answer:
(இ) செய்தி 3 மட்டும் சரி

Question 2.
காசிக்காண்டம் என்பது …………..
(அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
(ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
(இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
(ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
Answer:
(இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

Question 3.
‘படித்து வந்தேன், வேலை தேடினேன்’ எனும் தொடரின் வகை …………..
(அ) பெயரெச்சத் தொடர்
(ஆ) வினையெச்சத் தொடர்
(இ) எழுவாய்த் தொடர்
(ஈ) முற்றெச்சத் தொடர்
Answer:
ஆ) வினையெச்சத் தொடர்

Question 4.
மலர்கள் தரையில் நழுவுதல், எப்போது?
(அ) அள்ளி முகர்ந்தால்
(ஆ) தளரப் பிணைத்தால்
(இ) இறுக்கி முடிச்சிட்டால்
(ஈ) காம்பு முறிந்தால்
Answer:
(ஆ) தளரப் பிணைத்தால்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 5.
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப்போரிடுவதன் காரணம் …………..
(அ) நாட்டைக் கைப்பற்றல்
(ஆ) ஆநிரைக் கவர்தல்
(இ) வலிமையை நிலைநாட்டல்
(ஈ) கோட்டையை முற்றுகையிடல்
Answer:
(இ) வலிமையை நிலைநாட்டல்

Question 6.
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது …………..
(அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்
(ஆ). பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
(இ) அறிவியல் முன்னேற்றம்
(ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
Answer:
(ஆ). பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

Question 7.
குறிஞ்சித் திணையின் சிறு பொழுது …………..
(அ) யாமம்
(ஆ) மாலை
(இ) எற்பாடு
(ஈ) நண்ப கல்
Answer:
(அ) யாமம்

Question 8.
“உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ) உருவகம், எதுகை
(ஆ) மோனை, எதுகை
(இ) முரண், இயைபு
(ஈ) உவமை, எதுகை
Answer:
(ஆ) மோனை, எதுகை

Question 9.
பின்பனிக்காலத்தை பெரும் பொழுதாய்க் கொண்ட திணை ………………… ஆகும்.
(அ) முல்லை
(ஆ) மருதம்
(இ) நெய்தல்
(ஈ) பாலை
Answer:
(ஈ) பாலை

Question 10.
இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரையுள்ள காலம் …………..
(அ) வைகறை
(ஆ) மாலை
(இ) நண்பகல்
(ஈ) எற்பாடு
Answer:
(அ) வைகறை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 11.
‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை …………..
(அ) நிலத்திற்கேற்ற விருந்து
(ஆ) இன்மையிலும் விருந்து
(இ) அல்லிலும் விருந்து
(ஈ) உற்றாரின் விருந்து
Answer:
(ஆ) இன்மையிலும் விருந்து

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

“அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு அடைந் திருந்த பாக்கம் எய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மான விறல்வேள் வயிரியம் என்னே

Question 12.
பாடலடியில் குறிப்பிடப்படும் மன்னர் …………..
(அ) சோழன்
(ஆ) பாண்டியன்
(இ) நன்னன்
(ஈ) சேரன்
Answer:
(இ) நன்னன்

Question 13.
பாடலின் ஆசிரியர் …………..
(அ) நன்ன ன்
ஆ) கூத்தர்
(இ) பெருங்கௌசிகனார்
(ஈ) பெருங்குன்றூர் கிழார்
Answer:
(இ) பெருங்கௌசிகனார்

Question 14.
வயிரியம் – பொருள் தருக.
(அ) வைரம்
(ஆ) பாணர்
(இ) சோறு
(ஈ) கூத்தர்
Answer:
(ஈ) கூத்தர்

Question 15.
இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.
(அ) சிலம்பு, நரலும்
(ஆ) அலங்கு , அடைந்திருந்த
(இ) மான, நோனா
(ஈ) வயிரியம், நோன்தாள்
Answer:
(ஆ) அலங்கு , அடைந்திருந்த

பகுதி – II (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4 x 2 = 8]

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
அ) வியாஸர் தர்மார்த்தங்களை உபதேசிக்கவே பாரதத்தை எழுதினார்.
(ஆ) சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இரட்டைக் காப்பியங்கள் என
வழங்குவர்.
Answer:
விடை:
அ) வியாஸர் பாரதத்தை எழுதிய நோக்கம் யாது?
ஆ) இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப்படும் நூல்கள் எவை? 150 5 Swaa20 தமிழ் – X RARE சாக்கமாக அSைents காக்கலை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 17.
“மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
Answer:

  • சீவகசிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி

Question 18.
வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
Answer:
இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.

Question 19.
“நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.
Answer:
முன்னாள் தான் பார்த்த அருச்சுனன் தபசுக் கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாகச் சேகர் என்னிடம் (அவனிடம்)
கூறினான்.

Question 20.
மொழிபெயர்ப்புக் குறித்து மணவை முஸ்தபா குறிப்பிடுவது யாது?
Answer:
“ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு ” என்கிறார் மணவை முஸ்தபா.

Question 21.
‘கண்’ என முடியும் குறள் எழுதுக.
Answer:
பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 x 2 = 10]

Question 22.
சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ) Answer:
விடை:
தேன்மழை, மணிமேகலை, செய்தேன், வான்மழை, பொன்மணி, பொன்விளக்கு,
விளக்கு செய்; விண்மழை, செய்விலங்கு, பூமழை

Question 23.
அடிக்கோடிட்ட சொல்லிற்கு பதிலாகப் பொருள் மாறாமல் வேறு சொல்லை
பயன்படுத்தவும்.
Answer:
உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.
Answer:
விடை:
பூமியில் வாழும் மானிடர்களில் சிலர் பழம் இருக்கக் காய் உண்ணுதலைப் போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 24.
இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்கவும்.
விதி – வீதி
Answer:
விடை:
வீதி தோறும் நூலகம் அமைந்தால் நாட்டின் தலைவிதி மாறிவிடும்.

Question 25.
கலைச்சொற்கள் தருக.
Answer:
(அ) Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்
(ஆ) Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்

Question 26.
பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம. பொ. சி.
Answer:
பழங்காலத்திலே, பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம. பொ. சி.

Question 27.
கொச்சைச் சொற்களைத் திருத்தி எழுதுக.
தலைக்கு சீக்கா தேச்சு முழுவனா ஒடம்புக்கு குளிர்ச்சி
Answer:
விடை:
தலைக்குச் சீகைக்காய் தேய்த்து முழுகினால் உடம்பிற்கு குளிர்ச்சி.

Question 28.
கிளர்ந்த, தோன்றி – இலக்கணக்குறிப்பு தருக.
Answer:
விடை :
கிளர்ந்த – பெயரெச்சம்
தோன்றி – வினையெச்சம்

பகுதி – III (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 29.
கரகாட்டம் விளக்குக.
Answer:

  • பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் உயர்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம்.
  • • கரகம் என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம்.
  • இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி, ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படி செய்கின்றனர். தலையில் செம்பு நிற்கும் அளவு எடையை ஏற்றுவதற்குச் செம்பில் மணலையோ பச்சரிசியையோ நிரப்புகின்றனர்.
  • கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின் நடுவில், கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியைச் செருகி வைத்து ஆடுகின்றனர்.
  • நையாண்டி மேள இசையும் நாதசுரம், தவில், பம்பை போன்ற இசைக்கருவிகளும் இசைக்கப்படுகின்றன.
  • ஆணும் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்தும் கரகாட்டத்தில் சில நேரங்களில் ஆண், பெண் வேடமிட்டு ஆடுவதும் உண்டு. கரகாட்டம் நிகழ்த்துதலில் இத்தனை பேர்தான் நிகழ்த்த வேண்டும் என்ற வரையறை இல்லை.
  • சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் குடக்கூத்து என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.

Question 30.
ம.பொ.சி.பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answer:
சிலம்புச்செல்வர் என்று போற்றப்படும் ம.பொ.சிவஞானம் (1906 – 1995) விடுதலைப் போராட்ட வீரர்; 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்; தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர். ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் இவருடைய நூலுக்காக 1966 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
மார்ஷல் ஏ. நேசமணி
இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்; வழக்கறிஞர். நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்; இதனால் மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டார். 1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது. இவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.

(அ) இளம் வயதில் சமூக விடுதலைக்காக போராடியவர் யார்?
Answer:
மார்ஷல் ஏ. நேசமணி

(ஆ) 1956 நவம்பர் 1-ல் தமிழ்நாட்டுடன் இணைந்த மாவட்டம் எது?
Answer:
கன்னியாகுமரி

(இ) நேசமணியின் சிறப்பைப் போற்றும் வகையில் தமிழக அரசு செய்தது யாது? Answer:
நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.[ 2 x 3 = 6]

Question 32.
மாற்றம் பற்றி காலக்கணிதத்தில் கண்ணதாசன் கூறுவன யாவை?
Answer:

  • மாற்றம் என்பது தான் மனிதகுலத் தத்துவம் ஆகும்.
  • மாறும் உலகின் மகத்துவத்தை அறிய வேண்டும்.
  • நன்மை தீமை அறிய வேண்டும்.
  • தலைவர் மாறுவர், சபைகளும் மாறும். ஆனால் தத்துவம் மாறாது.
  • கொடுக்க வேண்டியதைக் கொடுக்க வேண்டும்.
  • குறை கூறுபவர்கள் குறை கூறட்டும்.
  • நானே தொடக்கம் நானே முடிவு நானுரைப்பது தான் சட்டம்.

Question 33.
தமிழின் பெருமையை எங்கும் முழங்குவதற்கான காரணங்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  • செழிப்பு மிக்க தமிழே ! பழம்பெருமையும் தனக்கெனத் தனிச்சிறப்பும், இலக்கிய வளமும் கொண்ட தமிழே ! வியக்கத்தக்க உன் நீண்ட நிலைத்தன்மையும். வேற்று மொழியார் உன்னைப்பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன.
  • செந்தாமரையின் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடும் வண்டினைப் போன்று நாங்கள் ‘உன்னைச் சுவைத்து உள்ளத்தில் கனல் மூள உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
அ) “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனத் தொடங்கும் காலக்கணிதம்’ பாடலை எழுதுக.
Answer:
மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறும்
உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்! (- கண்ணதாசன்)

(அல்லது)

(ஆ) “செம்பொனடிச் சிறு கிங்கிணியோடு ” எனத் தொடங்கும் முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ்’ பாடலை எழுதுக.
Answer:
செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப் பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை .
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை (- குமரகுருபரர்)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 35.
குறிஞ்சித்திணை, கருப்பொருள் அட்டவணைப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 2
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 1

Question 36.
‘இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்’ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 3

Question 37.
கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
Answer:
தற்குறிப்பேற்ற அணி:
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

(எ.கா.) போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட’
பொருள்:
கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கை காட்டியது என்பது பொருள்.

அணிப்பொருத்தம்:
கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்ற போது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால், இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, ‘இம்மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 x 5 = 25]

Question 38.
அ) கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
Answer:

  • நான் உயிர்பிழைக்கும் வழி அறியேன்.
  • நினைந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்.
  • உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகைகளை அறியேன்.
  • காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்.
  • என் தாய் தன் கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிவேன். என்னைத் தவிக்க
    விட்டுவிட்டு என்தாய் தான் மட்டும் தனியாகப் போய்விட்டாள்.
  • நவமணிகள் பதித்த மணிமாலைகளைப் பிணித்தது போன்று நல்ல அறங்களை எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன், தாயின் பிரிவால் புலம்பிக் கூறினான்.
  • அது கேட்டுப் பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள மணம் வீசும் மலர்களும் மலர்ந்த சுனை தோறும் உள்ள பறவைகளும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன.

(அல்லது)

ஆ) நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க. . பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம் இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியல் நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கிவரும் தமிழ்மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இயக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்.
Answer:
விடை: சங்க இலக்கியமான பரிபாடலில் எதுவுமேயில்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக்
காரணமான கரு (பரமாணு) பேரொலியுடன் தோன்றியது. உருவம் இல்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதத்தின் ஊழி அது. அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. பிறகு நெருப்புப் பந்துபோலப் புவி உருவாகி விளங்கிய ஊழிக்கலாம் தொடர்ந்தது. பின்னர் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்து ஊழிக்கலாம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது. மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில் உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது. அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது. இவ்வாறு நம் முன்னோர் அறிவியலின் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுகிறார்கள்.

Question 39.
அ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் ‘மலரில், உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
மதுரை,
2.4.2019.

அனுப்புநர்:
தெ. தண்டபாணி,
35, மேற்கு மாடவீதி,
மதுரை – 625 001.

பெறுநர்
தினமணி ஆசிரியர்,
தினமணி அலுவலகம்,
எக்ஸ்பிரஸ் எஸ்டேட்,
மதுரை – 625 003.

பொருள்: எனது கட்டுரையை வெளியிட வேண்டி விண்ணப்பம்.

ஐயா,

வணக்கம்.
இந்த ஆண்டு பொங்கல் விழா எங்கள் ஊரில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற அந்நிகழ்வுகள் அனைவரையும் மிகவும் கவர்ந்தன. அதன் தொடர்பாக நான் ” உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அந்தக் கட்டுரையைத் தங்களின் நாளிதழில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

இடம் : மதுரை
தேதி : 2.04.2019

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள,
தெ. தண்டபாணி.

குறிப்பு
இத்துடன் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

உறைமேல் முகவரி
பெறுநர்
தினமணி ஆசிரியர்,
தினமணி அலுவலகம்,
எக்ஸ்பிரஸ் எஸ்டேட்,
மதுரை – 625 003.

(அல்லது)

(ஆ) பழுதுப்பட்ட மின்கம்பிகளைச் சரிசெய்து அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்னழுத்த ஏற்ற இறக்கத்தை சரி செய்ய வேண்டி மின்வாரிய அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வரைக.
Answer:
அனுப்புநர்
கண்மணி,
புளியங்குடி நகராட்சி,
மதுரை – 625 008.

பெறுநர்
முதன்மை பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
புளியங்குடி நகராட்சி,
மதுரை – 625 008.

ஐயா,

பொருள்: அறிவிக்கப்படாத மின்வெட்டு மின்னழுத்த ஏற்ற இறக்கத்தைச்
சரி செய்தல் – தொடர்பாக.

வணக்கம், எங்கள் தெரு புளியங்குடி நகராட்சியில் உள்ளது. இங்கு 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குழந்தைகள் முதல் அரசு அலுவலர்கள் வரை, இச்சாலை வழியே தான் நகரின் பிரதான சாலைக்குச் செல்ல வேண்டும். இப்பகுதியில் ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை மின்வெட்டு ஏற்படுகிறது. மின்னழுத்த ஏற்ற இறக்கமும் ஏற்படுகிறது.

இவ்வீதியில் 28 மின்கம்பங்கள் உள்ளன. பாதிக்கு மேற்பட்ட கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் பழுதுபட்டு இருக்கின்றன. மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் வீதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. இருட்டைப் பயன்படுத்தி வழிப்பறி கொள்ளைகளும், திருட்டு நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.

பலமுறை முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் போதிய அக்கறை செலுத்தவில்லை. எங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தருமாறு பணிவோடு வேண்டுகிறோம்.

நன்றி,

இடம்: மதுரை,
தேதி: 08.04.2019

இங்ஙனம்,
கண்ம ணி.

உறைமேல் முகவரி
முதன்மை பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
புளியங்குடி நகராட்சி,
மதுரை – 625 008.

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற எழுதுக.
Answer:
ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டிக்கொண்டு கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் ஆட்டமே ஒயிலாட்டம் ஆகும்.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 4

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 41.
படிவத்தை நிரப்புக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2 - 5

Question 42.
(அ) அரசின் பொங்கல் விழாவில் சிற்றூர்க் கலைகளைக் காட்சியாக்கியிருக்கிறார்கள். ஒருபுறம் திரைகட்டித் தோற்பாவைக் கூத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் பொம்மலாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். சற்று நடந்தால் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம் ஆடியவாறு மண்ணின் மக்கள் …. இக்கலைகளை நீங்கள் நண்பர்களுடன் பார்த்தவாறும் சுவைத்தவாறும் செல்கிறீர்கள்.இக்கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்யவிருப்பனவற்றை வரிசைப்படுத்துக.
Answer:

  1. பிறந்த நாள் விழாக்களில் மயிலாட்டம் முதலான கலைகளை நிகழ்த்த முனைவேன்.
  2. எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்த ஏற்பாடு செய்வேன்.
  3. பள்ளி, கல்லூரி விழாக்களில் இக்கலை நிகழ்ச்சிகளை நாங்களே நடத்துவோம்.
  4. எம் ஊரில் பொம்மலாட்டம் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வேன்.
  5. எங்கள் ஊர் மக்கள் இணைந்து ஒயிலாட்டம் ஆடுவோம்.
  6.  எங்கள் ஊரில் நாட்டுப்புறக் கலையை வளர்ப்போம்

(அல்லது)

(ஆ) கீழ்க்காணும் பத்தியை மொழிபெயர்த்து எழுதுக.
Decision making is a process that plays a vital role in our daily lives. Some decisions are not very important whereas other imperative decisions, when cautiously carried out, can change the path of our lives. When faced with a crisis, one of the major issues is deciding the right thing. Decision making can be quite complicated and challenging in some cases. It is hence essential to gather as much information from different sources and assess all possible alternatives to the problem or situation at hand before making a decision. Doing so will permit us to land at the best possible result for the problem. Such decisions can’t be an overnight one. It takes a couple of months to investigate and consult with friends, family and university professors to make a decision. It is imperative that one makes decisions in consultation with parents opinions and check on other surveys and researches to avoid challenges.
Answer:
விடை:
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தீர்மானம் எடுப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சில தீர்மானங்கள் முக்கியமானதாக இல்லாமல் இருந்தாலும், சில முக்கிய தீர்மானங்கள் கவனத்துடன் மேற்கொண்டால் நம் வாழ்க்கை பாதையை செம்மையாக மாற்றி அமைக்க முடியும். ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் போது அதற்கு உரிய தீர்வைக் காண்பது கடினமான ஒன்றாகும். தீர்வு எடுப்பது என்பது சில சமயங்களில் சிக்கலானதாகவும் அல்லது சவாலாகவும் இருக்கலாம். ஆதலால் போதிய தகவலைப் பல வட்டாரத்தில் இருந்து சேகரித்து அதற்கு மாறான கருத்துக்களை ஆராய்ந்து தீர்வுக்கு வரவேண்டும். இங்ஙனம் தீர்வெடுப்பது பிரச்சனைக்குரிய தீர்வை துல்லியமாக அடைய உதவும். இது ஒரு நாளில் மட்டும் சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய தீர்மானமாக இருக்காது. இது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்கள் என இவர்களுடன் கலந்தாலோசிப்பதால் தீர்வுக்கு வருவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம். பெற்றோர்கள் அறிவுரைக் கேற்ப இருப்பினும் சவால்களைச் சமாளிப்பதற்கு ஏதுவாக பிற ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள கலந்தாலோசனை செய்வது நல்லது.

பகுதி – V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]

Question 43.
அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உ.ரைக் குறிப்புகளை எழுதுக.
Answer:
முன்னுரை:
கால வெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ் சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொது என்றாலும் தமிழ் மட்டுமே அதில் தலை சிறந்ததாகும். தமிழின் சொல் வளத்தை நாம் பலதுறைகளிலும் காணலாம்.

தமிழின் சொல் வளம்:
ஆங்கிலம் போன்ற மொழிகளில் இலையைக் குறிக்க ஒரே ஒரு சொல் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்மக்கள் இலையை அதன் வன்மை, மென்மை, இவற்றைக் கொண்டு இலை, தோகை, ஓலை எனப் பாகுபாடு செய்துள்ளனர். இதுமட்டுமன்றி தாவரங்கள், மணிவகை, இளம்பயிர்வகை, காய்கனி வகை, அடி, கிளை கொழுந்து என அனைத்து உறுப்புகளுக்கும் சொற்களைப் பகுத்து வைத்துள்ளனர்.

பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்:
அரும்பு: பூவின் தோற்றநிலை போது, பூ விரியத் தொடங்கும் நிலை மலர், பூவின் மலர்ந்த நிலை, வீ: மரம், செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை செம்மல், பூ வாடின நிலை

தமிழின் பொருள் வளம்:
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையது என்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். தமிழ் நாட்டு நெல்லில் செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும், சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சம்பாவில் மட்டும் ஆவிரம் பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டு சம்பா, குதிரை வாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள் வகைகள் உள்ளன. இவற்றோடு வரகு, காடைக்கண்ணி குதிரைவாலி முதலிய சிறு கூலங்கள் தமிழ் நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.

முடிவுரை:
பண்டைத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கு உதவுவது மொழியேயாகும். ஆகவே “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்ற கூற்றின்படி பொருட்களைக் கூர்ந்து நோக்கி நுண்பொருட் சொற்களை அமைத்துக் கொள்வது நம் தலையாய கடமையாகும்.

(அல்லது)

(ஆ) நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழைமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.
Answer:
நிகழ்கலை வடிவங்கள் நிலைக்குமா?! – கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவன. கருத்துடன் கலைத்திறனை நோக்காகக் கொண்டு காலவெள்ளத்தைக் கடந்து நிற்பன. ஆடல், பாடல், இசை, நடிப்பு ஒப்பனை உரையாடல் வழியாக மக்களை மகிழ்வடையச் செய்வன. சமூகப் பண்பாட்டுத்தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவன. நுட்பமான உணர்வுகளின் உறைவிடமாக இருப்பன. அவை யாவை? அவை தாம் மக்கள் பண்பாட்டின் பதிவுகளான நிகழ்கலைகள்.

சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்வை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன. சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணை செய்கின்றன.

நிகழ்கலைகள் ஊரக மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன. இவை கற்றோராலும் மற்றோராலும் விரும்பப்படும் கலைகளாக உள்ளன. உழைப்பாளிகளின் உணர்வுகளாக உள்ளன. மக்களின் எண்ண வெளிப்பாடாக, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக, மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்க முடியாத பண்பாட்டுக் கூறுகளாக விளங்குகின்றன.
நிகழ்கலைகளை வளரச் செய்வோம். என்றும் அழியாமல் நிலைக்கச் செய்வோம்.

Question 44.
(அ) அனுமான் ஆட்டத்தை கூறுக.
Answer:

  • திடீரென்று மேளமும் நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின.
  • எதற்கென்று தெரியாமல் கூட்டம் திகைத்துப் பந்தலை நோக்குகையில் பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.
  • அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். ஜ்வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. கூட்டம் தானாகவே பின்னால் நகர்ந்தது.
  • அனுமார் கால்களைத் தரையில் பதித்து உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கினார். தீயின் ஜ்வாலை மடிந்து அலை பாய்ந்தது. கைகளைத் தரையில் ஊன்றி அனுமார் கரணமடித்தார்.
  • சுருண்ட வால் இவன் பக்கமாக வந்து விழுந்தது.
  • கூட்டம் அச்சத்தோடு கத்தியபடி அலைக்கழிந்தது.
  • அனுமார் பெரிதாகச் சிரித்துக்கொண்டு நின்றார். அனுமார் நின்றதும் கூட்டம் கொஞ்சம் அமைதியுற்றது.
  • முன்நோக்கி நகர்ந்து வந்தது. அனுமார் நேசப்பான்மையோடு சிரித்து வாலை மேலே தூக்கிச் சுற்றினார்.
  • தீ வட்டமாகச் சுழன்றது. வேகம் கூடக்கூட, கூட்டம் இன்னும் முன்னால் நகர்ந்து வந்தது. இவன் நெருங்கி அனுமார் பக்கம் சென்றான்.
  • அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார்.
    வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது. பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார்.
  • ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்துமணி அறுந்து கீழே விழுந்தது. • ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார்.
  • மேளமும் நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை,
    தடுமாறிவிட்டது
  • மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.
  • அயர்ச்சியோடு மேளக்காரன் தோளிலிருந்து தவுலை இறக்கிக் கீழே வைத்தான். • ஆட்டம் முடிந்தது. தீர்மானமாகியது போல எஞ்சி இருந்த கூட்டமும் அவசர அவசரமாகக் கலைய ஆரம்பித்தது.

(அல்ல து)

(ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க. Answer:
கதைக்கரு :
கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல், பகிர்ந்து கொடுக்கிற நேயம். கதைமாந்தர்கள்:

  • சுப்பையா
  • கிராமத்து மக்கள்
  • அன்னமய்யா
  • மணி

முன்னுரை:
கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுக்கிற மனித நேயம் ஆகியவற்றை இக்கதைப்பகுதி எடுத்துக்கூறுகிறது.

கிராமத்து காட்சி:
அதிகாலை நேரத்தில் பாச்சல் அருகு எடுத்து முடித்துவிட்டுக் காலைக் கஞ்சியைக் குடிக்க – உட்காரும் வேளையில் அன்னமய்யா யாரோ ஒரு சன்னியாசியைக் கூட்டிக் கொண்டு வருவகை கண்டான் சுப்பையா வரட்டும் வரட்டும். ஒரு வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றார் கொத்தாளி அந்தப் புஞ்சை சாலையோரத்தில் இருந்ததால் தேசாந்திரிகள் வந்து இவர்களிடம் தண்ணீரோ, கஞ்சியோ சாப்பிட்டு விட்டுப் போவது வழக்கம். .

அன்னமய்யா கண்ட காட்சி:
நடக்க முடியாமல் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருந்து ஆயாசமாக மெதுவாக நடந்து வந்து தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாட்டமுமாக நடந்து வந்து கொண்டிருந்தவனைப் பார்க்கும் போது வயோதிகனாகவும் சாமியாரைப்போலவும் எண்ண வைத்தது. தற்செயலாக இவனைக்கண்ட அன்னமய்யா அவன் அருகில் சென்று பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன் என்று. கால்களை நீட்டி புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனை நெருங்கிப் பார்த்தபோது பசியால் அவன் முகம் வாடிப்போயிருந்தது.

அன்னமய்யாவின் செயல்:
பசியால் வாடிப்போயிருந்த அவன் முகத்தில் தீட்சணியம் தெரிந்தது தன்னைப் பார்த்து ஒரு நேசப்புன்னகை காட்டிய அந்த வாலிப மனிதனைப் பார்த்துக்கொண்டே நின்றான் அன்னமய்யா. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்ற அவனைத் தன்னோடு மெதுவாக நடக்க வைத்து அழைத்துச் சென்றான் அன்னமய்யா.

அன்னமய்யாவின் விருந்தோம்பல்:
வேப்பமரத்தின் அடியில் ஏகப்பட்ட மண் கலயங்கள் இருந்தன. அதில் அன்னமய்யா ஒரு கலயத்தின் மேல் வைக்கப்பட்ட கல்லை அகற்றிச் சிரட்டையைத் துடைத்துச் சுத்தப்படுத்தி அந்த கலயத்தில் பதனமான வடித்த நீரை அவனிடம் உறிஞ்சி குடிங்க எனக் கொடுத்தான். உட்கார்ந்து குடிங்க என்று உபசரித்தான். பிறகு கலயத்தைச் சுற்றி ஆட்டியதும் தெளிவு மறைந்து சோற்றின் மகுளி மேலே வந்ததும் வார்த்துக் கொடுத்தான். பிறகு அன்னமய்யா அந்த புது ஆளைச் சுப்பையாவின் வயலுக்கு அழைத்துச் சென்று கம்மஞ்சோற்றைச் சாப்பிட வைத்தான். அந்த வாலிபன் அன்னமய்யா என்ற பெயரை மனசுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான்.

முடிவுரை:
வந்தவனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ அதை விட மேலான ஒரு நிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. வயிறு நிறைந்ததும் தூங்கிவிடும் குழந்தையைப் பார்ப்பதுபோல அவனை ஒரு பிரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அன்னமய்யா

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 2

Question 45.
(அ) கர்மவீரர் காமராசர் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதுக.
Answer:
கர்ம வீரர் காமராசர்
முன்னுரை:
தென்னாட்டு காந்தியாய் தமிழ் மண்ணில் அவதரித்து தமிழகத்தை மலர்ச்சியுறச் செய்த காமராசர், 1903-ஆம் ஆண்டு ஜூலை 15ல் விருதுநகரில் பிறந்தார். இவர் பெற்றோர் குமாரசுவாமி-சிவகாமியம்மாள் என்பவர்கள் ஆவர். தமிழ் மண்ணின் தவப்புதல்வராய் இருந்து ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ எனும் நோக்கில் இம்மண்ணிற்காக வாழ்ந்த திருமகன் இவர் என்றால் மிகையாகாது.

வளர்ச்சி:
நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் அஞ்சாமல் கருத்தினை எடுத்து வைப்பவர் திருநாட்டிற்காக திருமணத்தைத் துறந்தவர்.

முயற்சி:
1954-ஆம் ஆண்டு காமராசர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் ஆட்சிக் காலத்தினைத் தமிழகத்தின் பொற்காலம் எனக் கூறலாம். மக்களோடு மக்களாய்க் கலந்து மக்கள் படும் துன்பத்தினைத் தீர்த்து வைக்கும் இவர் ‘ஏழைகளின் நண்பன்’ எனப் போற்றப்பட்டார்.

நெகிழ்ச்சி:
கிராமங்கள்தோறும் பள்ளிகள் திறந்திடச் செய்தார். ஏழை மாணவர்களின் அல்லல் கண்டு இலவச மதிய உணவுத் திட்டத்தை’ வகுத்து செயல்படுத்தினார்.
சின்னஞ்சிறுவர்களிடையே வேறுபாடுகளைக் களைந்திட சீருடைத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். தொழில் துறையில் தம் பார்வையைத் திருப்பி பல்வேறு தொழிலகங்களுக்கு வழிகளை ஏற்படுத்தினார்.

மகிழ்ச்சி :
1963 வரை ஒன்பது ஆண்டு காலம் அரும்பணிகள் ஆற்றிய இவர், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் மூத்த தலைவர்களை பதவி விலகச் சொல்லி தாமும் தம்முடைய முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

முகமலர்ச்சி:
மக்கள் அவரை பல்வேறு பெயர்களாலும், படிக்காத மேதை, ஏழைகள் நண்பன், கரும வீரர், காலாகாந்தி என அழைத்தலால் அனைத்துப் பெயர்களும் காமராசருக்கே உரித்தாயிற்று.

அழற்சி:
காமராசரின் நிலச் சீர்திருத்த உச்சவரம்பு சட்டமும், மும்மொழியாக்கத் திட்டமும் (இந்தியுடன்) பின்னடைவை ஏற்படுத்தின. திராவிடக் கட்சியானது தனது பேச்சு, எழுத்து மூலம் தடுமாற்றம் ஏற்பட வழிவகை செய்தது.

முடிவுரை:
‘காலா காந்தி’ என்ற பெயரினுக்கு ஏற்ப காந்தி பிறந்த தினத்தன்று, 1975 அக்டோபர் 2ல் காமராசர் மறைந்தார். காந்தி பிறந்த தினமானது காமராசரின் நினைவு தினமாக ஆயிற்று. காமராசரின் பிறந்த தினம், இனி ‘தியாகிகள் தின’ மாகக் கொண்டாடப்படுகிறது.

(அல்லது)

(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – முறையான ஒப்பந்தம் – நீர் தேவையை சமாளித்தல் – குறைபாடுகள் – திட்டம் – நன்மைகள் – முடிவுரை.
Answer:
தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்
முன்னுரை:
21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுப்பது தண்ணீர் பிரச்சினையாகும். இதனைத் தீர்க்க தண்ணீர் பிரச்சினையைச் சமாளிக்க நதிகளை இணைக்க வேண்டும் என்பது. பல்லாண்டுகளாகப் பேசப்பட்டு வருவதொன்றாகும். இதற்கு ஓராண்டில் 56 கோடி ரூபாய் செலவாகும் என்று திட்டமிடப்படுகிறது.

முறையான ஒப்பந்தம்:
ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குக் கால்வாய்கள் அமைத்து 30 நதிகளை அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒன்றாக இணைக்கலாம். 10 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் எடுக்க முடியும். 11 ஆயிரம் 164 Super20 தமிழ் கியூசெக்ஸ் நீர் தேவைப்படும். இதற்கு 400 புதிய நீர்நிலைகள் அமைக்கப்பட்டு நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த எந்த இடத்தின் வழியாகக் கால்வாய் அமைத்தால் பயனுள்ளதாக அமையும் எனத் திட்டமிட வேண்டும். மகாநதி, கோதாவரி ஆகிய நதிகளில் நீர் அதிகம் உள்ளது. ஆனால் வல்லுநர்களிடையே விவாதம் நடத்தி முறையான ஒப்பந்தம் ஏற்படவேண்டும்.

நீர் தேவையை சமாளித்தல்:
மழைக் காலங்களில் வட இந்தியாவில் பாயும் பல நதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானால், கால்வாய்கள் வெட்டி அந்நீரை ஒருநிலை படுத்தவேண்டும். இதற்காக வெட்டப்படும் கால்வாய்கள் மூலம் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதுடன் கூடுதல் வருவாயும் கிடைக்கும். அதிகமாகக் கிடைக்கும் மழைநீரைச் சேமித்து வைக்கத் தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும். இந்தியாவில் வறட்சி ஏற்படும் பெரும்பாலான பகுதிகளில் நீர் தேவையை எளிதாகச் சமாளிக்க முடியும்.

குறைபாடுகள்:
தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகள் இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நீர் பெறமுடியும். காவிரி டெல்டா பகுதியிலுள்ள நிலத்தடி நீர்வளம், குடிநீருக்கு ஆதாரமாக உள்ளது. இதனால் இப்பகுதிகளில் தண்ணீருக்காகக் கிணறுகள் தோண்ட வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் வற்றாத ஜீவநதிகளான கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி போன்ற தென்னிந்திய நதிகளை தமிழகத்தின் நதிகளோடு இணைத்தால் மட்டுமே ஆண்டு முழுவதும் நீர்வளம் குறையாமல் இருக்கும். இன்றைய நிலையில் பல கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குச் சராசரி இரண்டு லிட்டர் குடிநீர் கூடக் கிடைப்பதில்லை.

மூன்று நீர்வழித்திட்டம்:
மூன்று நீர்வழிகளைக் கொண்டதாக இத்திட்டம் அமைக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றலாம்.
1. இமயமலை நீர்வழி: இது கங்கை பிரம்மபுத்திரா நதிகளை இணைக்கும்.
2. மத்திய நீர்வழி: கங்கை, மகாநதி, தபதி ஆகிய நதிகளை இணைக்கிறது.
3. தென்னக நீர்வழி: இது கோதாவரி, கிருஷ்ணா , காவிரி மற்றும் கேரள நதிகளை இணைக்கும் இந்நீர்நிலைகள் 120 மீட்டர் அகலமும் 10 மீட்டர் ஆழமும். கொண்டதாக இருக்கும். இவை உரிய வழியில் ஒன்றுடன் ஒன்று இணைக்கும். நீர் சேமிப்பு போக்குவரத்து மற்றும் நீரைப் பல்வேறு நதிகளில் பகிர்ந்தளித்தல் போன்ற பல நன்மைகளைக் கொண்டதாக விளங்கும்.

நன்மைகள்:
மழைக்காலங்களில் ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத வெள்ளத்தை இத்திட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம். இதனால் அசாம், பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஏற்படும் அபாய வெள்ள அளவைக் குறைக்கலாம்.
வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பு குறைந்து வெள்ள நிவாரணப் பணிக்கு ஒதுக்கப்படும் தொகையும் வெகுவாகக் குறையும். அனைத்து முக்கிய நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் போதுமான குடிநீர் வசதியை ஆண்டு முழுவதும் வழங்க முடியும்.

முடிவுரை:
தேவையான அளவு நீர்வள மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தாத காரணத்தால் கிடைக்கும் மழைநீர் அனைத்தும் கடலில் வீணாகக் கலந்து நாட்டில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு உழல்கிறோம். அதனால் தேசிய நதிகளை இணைத்து சிறந்த முறையில் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து வாழ்வோம்.

Leave a Reply