Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

நேரம்: 3.00 மணி 
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 × 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்’ இவ்வடி குறிப்பிடுவது ………………
(அ) காலம் மாறுவதை
(ஆ) வீட்டைத் துடைப்பதை
(இ) இடையறாது அறப்பணி செய்தலை
(ஈ) வண்ணம் பூசுவதை
Answer:
(இ) இடையறாது அறப்பணி செய்தலை

Question 2.
மலர்கள் தரையில் நழுவுதல், எப்போது?
(அ) அள்ளி முகர்ந்தால்
(ஆ) தளரப் பிணைத்தால்
(இ) இறுக்கி முடிச்சிட்டால்
(ஈ) காம்பு முறிந்தால்
Answer:
(ஆ) தளரப் பிணைத்தால்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 3.
“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை” – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
(அ) தமிழ்
(ஆ) அறிவியல்
(இ) கல்வி
(ஈ) இலக்கியம்
Answer:
(இ) கல்வி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 4.
தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு: செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள்: கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.
(அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
(ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளன.
(இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
(ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
Answer:
(அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Question 5.
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ………………
(அ) வேற்றுமை உருபு
(ஆ) எழுவாய்
(இ) உவம உருபு
(ஈ) உரிச்சொல்
Answer:
(அ) வேற்றுமை உருபு

Question 6.
“இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும்…..” – இவ்வடிகளில் கற்காலம் என்பது ………………
(அ) தலைவிதி
ஆ) பழைய காலம்
(இ) ஏழ்மை
(ஈ) தலையில் கல் சுமப்பது
Answer:
(அ) தலைவிதி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 7.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என………. வகைப்பாக்கள் உள்ளன.
(அ) இரண்டு
(ஆ) நான்கு
(இ) மூன்று
(ஈ) ஐந்து
Answer:
(ஆ) நான்கு

Question 8.
கைக்கிளை என்பது………………..
(அ) அகப்பொருள்
(ஆ) பெருந்திணையை
(இ) புறப்பொருள்
(ஈ) ஒருதலைக்காமம்
Answer:
(ஈ) ஒருதலைக்காமம்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 9.
கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர் – இத்தொடருக்கான வினா எது?
(அ) கரகாட்டம் என்றால் என்ன?
(ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
(இ) கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?
(ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
Answer:
(ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

Question 10.
‘கத்தும் குயிலோசை’ – என்பது ………………
(அ) பால் வழுவமைதி
(ஆ) மரபு வழுவமைதி
(இ) திணை வழுவமைதி
(ஈ) கால வழுவமைதி
Answer:
(ஆ) மரபு வழுவமைதி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 11.
‘உனதருளே பார்ப்பன் அடியேனே ‘ – யாரிடம் யார் கூறியது?
(அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
(இ) மருத்துவரிடம் நோயாளி –
(ஈ) நோயாளியிடம் மருத்துவர்
Answer:
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

நின்று காவல் நெறிபூண்டு நெறியல்லது நினையாது
தந்தையில்லோர் தந்தையாகியுந் தாயரில்லோர் தாயராகியும் மைந்தரில்லொரு மைந்தராகியும் மன்னுயிர் கட்குயிராகியும்
விழிபெற்ற பயனென்னவும் மெய்பெற்ற அருளென்னவும்

Question 12.
தந்தைக்குத் தந்தையாய் இருந்தவர் யார்?
(அ) இராசராசசோழன்
(ஆ) இராசேந்திர சோழன்
(இ) இரண்டாம் இராசராசசோழன்
(ஈ) முதலாம் இராசராச சோழன்
Answer:
(அ) இராசராசசோழன்

Question 13.
இப்பாடலில் இடம் பெற்ற உறவு முறை யாது?
(அ) மாமன், அத்தை
(ஆ) சித்தன், சித்தி
(இ) தந்தை , தாய், மகன்
(ஈ) பாட்டி, தாத்தா
Answer:
(இ) தந்தை , தாய், மகன்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 14.
மைந்தரில்லாத – பிரித்து எழுதுக.
(அ) மைந்தர் + இல்லாத
(ஆ) மைந்து – இல்லாத
(இ) மை + தரி + இல்லாத
(ஈ) மைந்தரி + இல்லாத
Answer:
(அ) மைந்தர் + இல்லாத

Question 15.
மேற்கண்ட பாடலில் எதுகைச் சொற்களை எழுதுக.
(அ) நின்ற, நினையாது
(ஆ) தந்தை, தாயாரில்லோர்
(இ) தந்தையில்லோர், மைந்தரில்லொரு
(ஈ) பாட்டி, தாத்தா
Answer:
(இ) தந்தையில்லோர், மைந்தரில்லொரு

பகுதி – II (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4 × 2 = 8]

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க
(அ) வியாஸர் தர்மார்த்தங்களை உபதேசிக்கவே பாரதத்தை எழுதினார்.
(ஆ) நூலின் பயன், அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பயனுக்காக இருத்தல் வேண்டும்.
Answer:
விடை:
(அ) வியாஸர் பாரதத்தை எழுதிய நோக்கம் யாது?
(ஆ) நூலின் பயன் எத்தகையது?

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 17.
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
Answer:
மல்லிகைப் பூவானது மெல்லிய தண்டுகளை உடையது. ஆனால் அது ஆறு இதழ்களைச் சுமந்து தனது வேதனையும் மிக அழகாக மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 18.
‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’

(அ) அடியெதுகையை எடுத்தெழுதுக.
Answer:
கொள், உள்

(ஆ) இலக்கணக் குறிப்பு எழுதுக – கொள்க, குரைக்க
Answer:
வியங்கோள் வினைமுற்று

Question 19.
மின்னணுப் புரட்சி என்றால் என்ன?
Answer:
எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை 1980களில் ஒவ்வொருவருக்குமான தனிநபர் கணினிகளின் வளர்ச்சியும் இணையப் பயன்பாட்டின் பிறப்பும் இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் காரணமாயின அவற்றுள் இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு.

Question 20.
‘இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
Answer:
நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 21.
‘விடல்’ என முடியும் குறள் எழுதுக.
Answer:
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்…

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 × 2 = 10]

Question 22.
சொற்களைப் பிரித்துப் பார்த்து பொருள் தருக.
வருந்தாமரை
Answer:
விடை:
வருந்தா மரை – வருந்தாத மான் (மரை)
வருந்தாமரை – வருகின்ற தாமரை

Question 23.
அரபு எண்ணை தமிழ் எண்ணாக மாற்றுக.
Answer:
(அ) 39 – ஙகூ
(ஆ) 148 – கசஅ
(இ) 260 – உகா
(ஈ) 357 – ஙருஎ

Question 24.
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைக்கவும்.
மலை – மாலை
Answer:
விடை:
காலையில் மலை ஏறியவர் மாலையில் இறங்கினார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 25.
கலைச்சொற்கள் தருக.
(அ) Document
(ஆ) patent
Answer:
(அ) Document – ஆவணம்
(ஆ) patent – காப்புரிமை

Question 26.
மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
(அ) மயில் கூவும், குதிரை கத்தும்.
Answer:
மயில் அகவும், குதிரை கனைக்கும்.

(ஆ) மாந்தோட்டத்தில் குயில் பேசியது.
Answer:
மாந்தோப்பில் குயில் கூவியது.

Question 27.
பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
Answer:
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி, வெற்பன், மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், கொல்லி வெற்பன் எனவும், பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள், மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

Question 28.
பதிந்து – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
பதிந்து = பதி + த்(ந்) + த் + உ
Answer:
பதி – பகுதி
த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம்
த் – இறந்த கால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

பகுதி – III (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 × 3 = 6]

Question 29.
தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்களை எழுதுக.
Answer:
ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.
நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி : தாள்
கீரை, வாழை முதலியவற்றின் அடி : தண்டு
நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி : கோல்
குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி : தூறு
கம்பு, சோளம் முதலியவற்றின் அடி : தட்டு அல்லது தட்டை
கரும்பின் அடி : கழி
மூங்கிலின் அடி : கழை
புளி, வேம்பு முதலியவற்றின் அடி : அடி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 30.
நான்கு திசையிலும் வீசும் காற்றைப் பற்றி எழுதுக.
Answer:
கிழக்கு: கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருமுண்டு. கிழக்கிலிருந்து வீசும்காற்று கொண்டல் எனப்படுகிறது. கொண்டலாகக் காற்று குளிர்ச்சி தருகிறது; இன்பத்தைத் தருகிறது.

மேற்கு: மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை – எனப்படுகிறது.

வடக்கு:
வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும்காற்று வாடைக்காற்று எனப்படுகிறது.

தெற்கு:
தெற்கிலிருந்து வீசும்காற்று தென்றல் காற்று எனப்படுகிறது; மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமான இயல்பு கொள்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் (98) குறிப்பிட்டுள்ளார். ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும், மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு, சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்துகிறது. வடமொழியில் வழங்கி வந்த இராமாயண, மகாபாரதத் தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன. இதுவும் பிறமொழிக் கருத்துகளை, கதைகளைத் தமிழ்ப்படுத்தியமையைப் புலப்படுத்துகிறது. பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்களும் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டவையே.

(அ) தொல்காப்பியர் மொழிப்பெயர்த்தல் பற்றிக் கூறிய இயல் எது?
Answer:
மரபியல்

(ஆ) சின்னமனூர்ச் செப்பேடு மொழிபெயர்ப்பு பற்றிக் கூறிய செய்தி யாது?
Answer:
“மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்”

(இ) வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட நூல் யாது?
Answer:
கம்பராமாயணம், வில்லிபாரதம், பெருங்கதை, சீவகசிந்தாமணி

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [2 × 3 = 6]

Question 32.
“சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது” – இடஞ்சுட்டிப் பொருள் தருக.
Answer:
இடம்:
செய்யுள் வரிகள் கவிஞர் நாகூர் ரூமியால் எழுதப்பட்ட ‘சித்தாளு’ கவிதைப் பேழையில் காணப்படுகிறது.

விளக்கம்:
அடுக்குமாடி, அலுவலகம் எதுவாயினும் அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் இவள் சுமக்கும் கற்களெல்லாம் அடுத்தவேளை உணவுக்காக மட்டுமே. இவள் செத்தாலும் சிறிதளவே சலனங்கள் ஏற்படுத்தும். சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது என்று ஏழையின் நிலையை எடுத்துக்காட்டுகிறார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 33.
மழைநின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக. (குறிப்பு: இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் ‘சளப் தளப்’ என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்.
Answer:

  • மழைநீரில் குளித்துவிட்டுத் தென்னந்தோப்பில் தலை உலர்த்தவரும் தென்றல் காற்று.
  • அணில்களின் சடுகுடு விளையாட்டால் மரங்களின் இலைகளில் சொட்டும் நீர், ஆர்மோனியம் இல்லாமலேயே சுருதியோடு பாடும் குயில் மழலை மாறாத நதியோசை, தாழ்வாரங்களில் சொட்டும் நீர் போடும் தாளம்.
  • உடலில் உரசும் மெல்லிய குளிர் காற்று தெருக்களில் தேங்கிய குட்டைகளில் சளப்தளப் என குதித்து விளையாடும் குழந்தைகள்.
  • வண்டு இசைக்கும் சத்தத்துடன் காகித கப்பல் விட்டு மகிழும் சிறுவர்களின் கூச்சல் என
    இயற்கை, பூமி என்னும் பேரேட்டை எழுதியுள்ளது.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
(அ) “அன்னை மொழியே!” எனத் தொடங்கும் பாடல்.
Answer:
அன்னை மொழியே! அழ்கார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே ! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே ! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! (- பாவலரேறு பெருஞ்சித்திரனார்)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

(அல்லது)

(ஆ) “மாற்றம் எனது” எனத் தொடங்கும் காலக்கணிதம்’ பாடல்.
Answer:
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம் ! (- கண்ணதாசன் )

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 × 3 = 6]

Question 35.
தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.
Answer:

  • மல்லிகைப்பூ – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
    மல்லிகை ஆகிய பூ
  • பூங்கொடி – அன்மொழித்தொகை
    பூங்கொடி (பெண்ணைக் குறித்தது)
  • ஆடுமாடு – உம்மைத்தொகை
    ஆடும் மாடும்
  • குடிநீர் – வினைத்தொகை
    குடித்தநீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர்
  • தண்ணீர்த்தொட்டி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை தண்ணீரை உடைய தொட்டி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 36.
‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்’ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4 - 1

Question 37.
கொண்டு கூட்டுப் பொருள்கோள் விளக்குக.
Answer:
ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோளாகும்.

(எ.கா.) ஆலத்து மேல குவளை குளத்துள
வாலின் நெடிய குரங்கு – மயிலைநாதர் உரை

மேற்கண்ட பாடலில் ஆலத்து மேல் குவளை என்றும் குளத்தில் வாலின் நெடிய குரங்கு என்றும் பொருள் கொண்டால் பொருத்தமற்றதாகிவிடும். இதில் ஆலத்து மேல குரங்கு, குளத்துள குவளை – என்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் கொண்டு பொருள்கோள் அமைந்திருப்பதால் இது கொண்டு கூட்டுப் பொருள்கோள் எனப்படும்.

யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை
ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க [5 × 5 = 25]

Question 38.
அவள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.
Answer:
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு

பொருள்: தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து உரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு

பொருள்: மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல் நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.

மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை

பொருள்: இயற்கையான நுண்ணறிவும், நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான சூழ்ச்சிகள் நிற்க முடியும்? (எந்தச் சூழ்ச்சியும் நிற்க இயலாது)

செயற்கை அறிந்துக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்

பொருள். ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும், உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

(அல்லது)

(ஆ) இறைவன், புலவர். இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
Answer:
இடைக்காடனார் இறைவனை வணங்குதல்:

  • இடைக்காடனார் இறைவன் திருமுன் விழுந்து வணங்கி எழுந்து, “தமிழறியும் பெருமானே! அடியார்க்கு நல்நிதி போன்றவனே! திருஆலவாயிலில் உறையும் இறைவனே ! அழகிய வேப்பமலர் மாலையை அணிந்த பாண்டியன், பொருட்செல்வத்தோடு கல்விச் செல்வமும் மிக உடையவன் எனக் கூறக்கேட்டு.
  • அவன் முன் சொற்சுவை நிரம்பிய கவிதை பாடினேன். அவனோ சிறிதேனும் சுவைத்துத் தலை அசைக்காமல் புலமையை அவமதித்தான்” என்றார்.

இடைக்காடனாரின் சினம்:

  • இடைக்காடனார் இறைவனிடம், “பாண்டியன் என்னை இகழவில்லை, சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்” என்று சினத்துடன் கூறிச் சென்றார்.
  • அவரது சொல் வேற்படைபோல் இறைவனின் திருச்செவியின் சென்று தைத்தது.

இறைவன் இலிங்க வடிவை மறைத்தல்:

  • கோவிலை விட்டு வெளியேறிய இடைக்காடனாருக்கும் அவர் நண்பராகிய கபிலருக்கும் மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார்.
  • இறைவன் ஞானமயமாகிய தம்முடைய இலிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியாரோடும் திருக்கோவிலைவிட்டு வெளியேறி நேர் வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோவிலை ஆக்கி அங்கு சென்று இருந்தார்.

பாண்டிய மன்னனின் வேண்டுதல்:

  • “இறைவனே, என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் இத்தமிழ்நாட்டில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் நல் ஒழுக்கத்தில் குறைந்தனரோ? தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோ? எமது தந்தையே யான் அறியேன்” என்று வேண்டினான் பாண்டிய மன்னன்.
  • இறைவன் மன்னனிடம், “சிறந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த கடம்பவனத்தை விட்டு ஒருபோதும் நீங்கமாட்டோம்.
  • இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர வேறு குற்றம் உன்னிடம் இல்லை.
    இடைக்காடனார் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு இங்கு வந்தோம்” என்றார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 39.
(அ) வி.கே. எலக்ட்ரானிக் மென்பொருள் நிறுவனத்திடமிருந்து தவறுதலாக குறைபாடுள்ள கணினியை வாங்கிக் கொண்ட்தை தெரியப்படுத்தி அதற்கு மாற்றாக குறைபாடற்ற கணினியை மாற்றி தருமாறு கடிதம் வரைக.
Answer:
அனுப்புநர்
பூங்குழலி,
சென்னை – 600 013.

பெறுநர்
வி.கே. எலக்ட்ரானிக் நிறுவனம்
காமராஜ் நகர்,
சென்னை . – 600 009.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: குறைபாடு உடைய கணினியை மாற்றுவது – தொடர்பாக

வணக்கம், நான் சென்ற வாரம் 03.04.2019 அன்று உங்கள் நிறுவனத்தில் கணினி ஒன்று வாங்கி இருந்தேன். அதை வீட்டிற்கு கொண்டு வந்து, இயக்கி பார்க்கும் போதுதான் தெரிகிறது அது குறைபாடு உடைய கணினி என்றும், நான் கேட்ட கணினி அது அல்ல என்பதும் அதனால் குறைபாடு உடைய கணினியை எடுத்துக் கொண்டு சரியான கணினியைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

இடம் : சென்னை
தேதி : 10.04.19

இங்ஙனம்,
பூங்குழலி

குறிப்பு:

தாங்கள் கொடுத்த கணினியில் கீழ்க்கண்ட குறைகள் உள்ளன.

  • நான் வாங்க விரும்பியது விண்டோ 8 ஏசர் கணினி. ஆனால் நீங்கள் அனுப்பியது விண்டோ 7, கணினி.
  • கணினியில் திரை தரம் குறைந்ததாகவும் அளவு மிகச் சிறிதாகவும் உள்ளது.
  • கணினியிலிருந்து வரும் ஒலி கேட்பதற்கு சற்று ஏதுவாக இல்லை.
  • சுட்டெலி இயங்கவில்லை. உறைமேல் முகவரி

பெறுநர்
வி.கே. எலக்ட்ரானிக் நிறுவனம்
காமராஜ் நகர்,
சென்னை – 600 009.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

(அல்லது)

(ஆ) உன் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்றத் தொடக்க விழா பற்றி நண்பனுக்குக் கடிதம்.
Answer:

தேனாம்பேட்டை,
சென்னை – 18.
11-05-2019

அன்புள்ள நண்பா,

நலம் நலமறிய ஆவல். சென்ற வாரம் எனது பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா திரு. கே.ஏ. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. இறை வணக்கத்திற்குப் பின் தமிழாசிரியர் திரு.குமாரசுவாமி அவர்கள் இனிய வரவேற்புரை ஆற்றினார். தலைவர் அவர்கள் இலக்கியத்தின் பயன் பற்றி இனிய சொற்பொழிவு ஒன்று ஆற்றினார். மாணவர்கள் மிக அமைதியுடனும் ஒருமித்த மனத்துடனும் கேட்டனர்.

சிறப்புச் சொற்பொழிவாற்றிய சிலம்பொலி திரு. செல்லப்பன் அவர்கள் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்தாற் போல கருத்து மழை பொழிந்தார். இலக்கியம் தரும் அறவாழ்வு, அனைவரின் மனத்திலும் பசுமரத்தாணிபோல் பதிந்தது. இராமாயணம், சிலப்பதிகாரம், மகாபாரதம் போன்ற பல காப்பியங்களிலிருந்து கவிதைக் காட்சிகளை மாணவர் கண்முன் கொணர்ந்து நிறுத்தினார். கடல் மடை திறந்த வெள்ளமென ஆற்றிய சொற்பொழிவிற்கிடையே நகைச்சுவை கலந்த மாட்சி மனத்திற்கினிமை தந்தது. இலக்கியத்தின்பால் அனைவருக்கும் ஓர் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்தது.

பின்பு தலைவர் முடிவுரைக்குப் பின், மன்றச் செயலர் நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் விழா இனிது நிறைவேறியது.

இங்ஙனம்,
உன் அன்புள்ள நண்பன்,
நா. செழியன்.

உறைமேல் முகவரி

பெறுநர்
அ. அன்புமணி,
36, வ.உ.சி. தெரு,
தூத்துக்குடி – 1.

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக…
Answer:
தான் பசியுடன் இருந்தாலும்
தனக்குக் கிடைத்த உணவு
குறைவா இருந்தாலும்
மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு
உண்ண வேண்டும் என்ற எண்ணம்
உள்ளவராக இருக்க வேண்டும்.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4 - 2

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 41.
வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் படிவம் நிரப்புதல்.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4 - 3
Answer:

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4 - 4

Question 42.
(அ) இன்சொல் பேசுதலும், வன்சொல் பேசுதலையும் பட்டியலிடுக. Answer:
இன்சொல் வழி:

  1. பிறர் மனம் மகிழும்
  2. அறம் வளரும்
  3. புகழ் பெருகும்
  4. நல்ல நண்பர்கள் சேருவர்
  5. அன்பு நிறையும்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

தீய சொல் வழி :

  1. பிறர் மனம் வாடும்
  2. அறம் தேயும்
  3. இகழ் பெருகும்
  4. நல்ல நண்பர்கள் விலகுவர்
  5. பகைமை நிறையும்

இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
விடை :
நாங்கள் செல்லும் வழி. இன்சொல் வழி என் நண்பர்களுக்கும் அவ்வழியையே காட்டுவேன்.
அதனால் அவர் அறம், புகழ் போன்றவற்றில் சிறந்து நல்ல நண்பர்களுடன் அன்புடன் பழகுவார்.

(அல்லது)

(ஆ) மொழிபெயர்க்க. Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had the inost fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensible by the ancient Tamils.
Answer:
விடை :
சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற தமிழ்நாட்டின் 5 புவியியல் பாகுபாட்டின்படி, மருத நிலப் பகுதியே பயிரிடுவதற்குச் செழுமையான பகுதியாகக் கருதப்பட்டது. விவசாயியின் சொத்து அங்கு கிடைக்கும் வெயில், பருவ மழை மற்றும் நிலத்தின் செழுமையைச் சார்ந்திருந்தது. இயற்கையில் கிடைக்கும் மூலக்கூறுகளில் சூரிய ஒளியே இன்றியமையாததாகப் பழந்தமிழர்களால் கருதப்பட்டது.

பகுதி – V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 × 8 = 24)

Question 43.
(அ) நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.
Answer:

  • அனைவருக்கும் வணக்கம். பொம்மலாட்டம் என்பது மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு வகை கூத்துக் கலையாகும்.
  • பார்ப்பவரின் கண்ணையும் கருத்தையும் மனதையும் ஒரே நேரத்தில் ஆட்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
  • நெகிழிப்பைகளின் வரவால் மக்கள் எவ்வாறு அவதிப்படுகின்றனர் என்பதை இந்த பொம்மலாட்டம் மூலம் மாணவர்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக விளக்கினார்கள். பொம்மலாட்டத்தைத் தோற்பாவைக் கூத்து என்றும் அழைப்பர்.
  • தோலில் செய்தவெட்டு வரைபடங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி உரையாடியும் ‘பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.
  • தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை என்னும் பெயர் பெற்றது.
  • இசை, ஓவியம், நடனம், நாடகம், பலகுரலில் பேசுதல் ஆகியவை இணைந்துள்ளன.
  • கூத்து நிகழ்த்தும் திரைச் சீலையின் நீளம், அகலம் ஆகியன பாவையின் அமைப்பையும் எண்ணிக்கையையும் பொறுத்து வேறுபடுகின்றன.
  • இந்நிகழ்ச்சியில் பாவையின் அசைவு உரையாடல் இசை ஆகியனவற்றோடு ஒளியும் முதன்மை பெறுகின்றது.
  • பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
  • திருக்குறளில் பரப்பாவையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக் கூத்து விளங்குகிறது.
  • தோற்பாவைக் கூத்து கையுறைப் பாவைக் கூத்து. பொம்மலாட்டம் என்பனவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
  • நெகிழி அல்லது பிளாஸ்டிக் என்பது ஒரு பொருள்.
  • ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுதி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும்.
  • பொருள் மண்ணுக்குள் சென்றால் சீக்கிரம் மக்காமல் அப்படியே இருந்து விடுகிறது.
  • அதனால் மரங்களில் வேர்களுக்கு ஆக்கிஜன் கிடைக்கக் கடினமாக இருக்கிறது.
  • எந்த ஒரு பொருள் பூமியில் மக்கவில்லையோ அது மனித இனத்திற்கே பேராபத்து என்பதை இந்தப் பொம்மலாட்டம் மூலமாக மாணவர்களுக்கு மிக எளிதாகச் சென்று சேர்ந்தது.
  • பொம்மலாட்டம் கலைஞர் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(அல்லது)

(ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
Answer:

  • எங்கள் இல்லத்திற்கு என் தந்தையின் நண்பர்கள் பொங்கல் திருநாளன்று வந்தனர்.
  • நாங்கள் அவர்களை அன்போடு வரவேற்றோம். வந்தவர்களை வாருங்கள் என்று அழைத்து அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தோம்.
  • அவர்களை அமரவைத்து அவர்களிடம் நலம் விசாரித்தும் என் தாய், தந்தையர் பேசிக் கொண்டு இருந்தனர்.
  • சிறிது நேரம் கழித்து அவர்கள் குடிக்கப் பழச்சாற்றினைக் கொடுத்தோம். •
  • பிறகு அவர்கள் உணவருந்த சுவையான உணவு சமைத்து வைத்திருந்தோம்.
  • வந்தவர்களை உணவருந்த அழைத்து வந்து வாழையிலை போட்டு கூட்டு, பொரியல் இனிப்பு, வடை, பாயசம் என்று அறுசுவை உணவைப் படைத்தோம். .
  • அவர்கள் உண்டபின் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து இளப்பாற வைத்தோம்.
  • பின் அவர்கள் வீட்டிற்குச் சொல்லும் போது அவர்களுக்குப் பரிசுப்பொருள் கொடுத்து வீட்டின் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தோம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

Question 44.
(அ) உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி
வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
Answer:

  • கல்வி என்பது நம் வாழ்க்கையில் முன்னேறக் கூடிய ஒரு ஏணிப்படி அதைக் கற்றால் நம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
  • நம் தாய் தந்தை தான் படிக்கவில்லை நாம் படித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் எண்ணமும் செயலும் உயர்வாக இருந்தால், நாம் உயர்வாக இருக்க முடியும்.
  • நம் பெற்றோர்களின் ஆசைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். கல்வி கற்பதன் மூலம் நாம்வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதைச் சமாளிக்க முடியும்.
  • வாழ்க்கையில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதைச் சமாளித்து இந்த வருடம் படிப்பை நீ முடித்து விடு.
  • இந்த வருடப் படிப்பை முடித்து விட்டால் அடுத்த வருடம் வேலைக்குச் சென்று கொண்டே கூட நீ படித்து விடலாம்.
  • எந்த சூழ்நிலை வந்தாலும் படிப்பை மட்டும் பாதியில் விட்டு விடக்கூடாது என்பதில் நீ உறுதியாக இருக்க வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

(அல்லது)

(ஆ) ஒருவன் இருக்கிறான் கதையைச் சுருக்கி வரைக.
Answer:
முன்னுரை:
துணையின்றி வாழும் நிலை இரங்கத்தக்கது ! எப்படிப்பட்டவராக இருந்தாலும் பிறரது துணையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. எப்படிப் பட்டவருக்கும் ஒரு துணை இருக்கும் அந்தத் துணைதான் மனிதத்தின் வேருக்கு நீ’. அதில் மாதம் துளிர்க்கும்.

குப்புசாமியின் தோற்றம்:
வயது இருபத்தைந்து எலும்பும் தோலுமான உடம்பு. எண்ணெய் காணாத தலை, காடாக வளர்ந்து கிடந்தது. சட்டையும் வேஷ்டியும் ஒரே அழுக்கு. சட்டையில் ஒரு பொத்தான் கூட இல்லை கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த அவன் இடது கையால் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தான் காய்ந்து போன விழிகள் அவற்றில் ஒரு பயம் தன் நிலையை எண்ணிக் கூசும் ஓர் அவமானம்.

குப்புசாமியின் உறவு நிலை:
குப்புசாமிக்கு தாய், தகப்பன் கிடையாது அவனுக்கு இருந்த உறவு தங்கவேலுவின் மனைவியான அவனுடைய சித்தியும் காஞ்சிபுரத்திலேயே உள்ள தாய்மாமன் ஒருவனுந்தான்.

தங்கவேலுவின் மனநிலையும் செயலும்:
தங்கவேலுவுக்கு குப்புசாமி எதற்காக இங்கே வந்தான் என்று கேட்பது போலவும் அவன் வீட்டை விட்டு உடனே தொலைந்தால் நல்லது எனவும் நினைத்தான். ஆறாம் நாள் தங்கவேலு குப்புசாமியை சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட கிளம்பினார். குப்புசாமிக்கு மருத்துவமணையில் ஆபரேஷனும் செய்யப்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

வீரப்பனின் மனிதாபிமானம்:
குப்புசாமியின் நண்பன் வீரப்பன் ஒரு மேஸ்திரியிடம் சிப்பந்தியாக வேலை செய்பவன் சில நாட்கள் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிற குப்புசாமிக்கு கடன் வாங்கியாவது உதவியும் சாப்பாடும் போடுகின்ற இவன் உயிருக்கு மதிப்புக் கொடுக்கிற நல்ல ஆத்மா அவனுக்கு உதவ தன்னால் முடிந்த பணத்தையும் கடிதத்தையும் தன் ஊர்காரனிடம் கொடுத்து குப்புசாமிக்கு உதவ முயன்றுள்ளான்.

முடிவுரை:
குப்புசாமியின் உயிருக்குக் கொடுக்கும் மதிப்பைக் கண்டுதான் கொடுத்தானோ? என்று அழகிரிசாமியின் ‘ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை
மாந்தரான குப்புசாமியை ஆசிரியர் காட்டுகின்றார்.

Question 45.
(அ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – பாரதத்தில் கணினியின் வளர்ச்சி – கணினியின் பயன்கள் – பிறதுறைகளில் கணினி – கல்வி நிலையிகளிலும் கணினி – முடிவுரை.
Answer:
இந்தியாவின் கணினிப் புரட்சி

முன்னுரை:
உலக நாடுகளிடையே இந்தியாவும் முன்னேற்ற மடைந்த வளர்ச்சியுற்ற நாடாக வேண்டும். இக்கனவு நனவாகுமா? இதற்குப் பாரதம் பல துறைகளிலும் நன்கு உழைக்க வேண்டும். அவற்றுள் ஒன்றுதான் கணினிப் புரட்சி. உலக நாடுகள் அனைத்தும் கணினித் துறையில் வளர்ந்த அளவிற்கு நாமும் உயர வேண்டும் என்ற எண்ணம் தான் 1984இல் கணினியைக் கொணர்ந்தோம். அன்றைய பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் கணினிக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலிடம் அளித்தார்.

பாரதத்தில் கணினியின் வளர்ச்சி:
முதன்முதலாக மும்பையிலுள்ள டாடா ஆய்வு மையம் தான் 1966இல் கணினியை செயல்படத் தொடங்கியது. நம் நாட்டிலுள்ள மின்னியல் கழகம் கணினிகளை வாணிக நோக்குடன் தயாரிக்கத் தொடங்கியது. மின்னியல் துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் இந்தியாவிற்கு நல்ல எதிர்காலம் நல்கும் என வலியுறுத்தினார். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் அளவிற்கு மின்னியல் துறையை வளர்த்தார். தற்போது நல்ல அடிப்படையுடன் கணினித் துறை பல துறைகளிலும் நிலைபெற்று விட்டது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

கணினியின் பயன்கள்:
மக்கள் சபையிலும், மாநில சட்டமன்றங்களிலும் கூட கணினி பயன்படுகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பதிலும், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் கணினித் தொழில் நுட்பம் அங்கம் வகிக்கிறது. எல்லா மாநிலத் தலைநகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டது. போர்க்கால அடிப்படையில் வங்கிகள் யாவும் கணினியை ஏற்றுக் கொண்டுவிட்டன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைக் கணினியைக் கொண்டு கண்காணிக்க உதவுகிறது. தேசிய காப்பீட்டுக் கழகம் பெரிய அளவில் கணினி மயமாக்கப்பட்டு விட்டது.

பிற துறைகளில் கணினி:
போக்குவரத்துத் துறையான விமான, இரயில் துறைகளில் இருக்கை முன்பதிவு செய்யவும், அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் செயல்படவும் கணினி பயன்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கூடிய முறைகள் கையாளப்படுகின்றன. மருத்துவத் துறையில் இரத்தப் பரிசோதனை, இருதய ஆய்வு, அறுவைச் சிகிச்சையிலும் கூட குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது.

கல்வி நிலையங்களிளும் கணினி:
வணிகம், தொழில், தபால், தந்தி போன்ற பல துறைகளிலும் கணினிபுரட்சி ஏற்பட்டு விட்டது. கல்வி நிலையங்களில், பல்கலைக் கழகங்களில் கல்வி மேம்பாட்டுப் பணிகளைச் செய்து விடுகிறது. பலரும் கணினி பற்றிய கல்வி நிலையங்களைத் துவங்கி பட்டம். பட்டமேற்படிப்பு என வகைப்படுத்தி இந்தியாவில் அனைவருமே கணினி பற்றிய கல்வி நிலையங்களைத் துவங்கி பட்டம். பட்ட மேற்படிப்பு என வகைப்படுத்தி இந்தியாவில் அனைவருமே கணினி அறிவு பெற்றுத் திகழ வாய்ப்பினை ஏற்படுத்தி விட்டது. இதன்மூலம் நம்நாட்டு இளைஞர்கள் மேனாடுகளில் சென்று வேலைவாய்ப்பு பெற்று நிரம்பப் பொருளீட்டும் வாய்ப்பும் பெற்றுள்ளனர். கணினித் தொழில் நுட்பம் செய்திகளை அனுப்பவும், தொலை தூர நாடுகளிடையே தொடர்பு ஏற்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. கல்வி நிலையங்களில் கணினி ஒரு பாடத் திட்டமாக அமைந்துள்ளது. தற்கால இளைஞர்கள் கணினியை விரும்பிக் கற்று புரட்சி ஏற்படுத்துவதில் முனைந்துவிட்டனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

முடிவுரை:
கணினித்துறை, நம் நாட்டின் எதிர்காலத்தில் மிக விரைவாகவும், திறமையாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை. பாரதத்தின் தொழில் வளர்ச்சிக்கேற்ப கணினித் துறை பெருமளவில் வளர்ச்சி பெறுவது இயற்கை நியதிகளில் ஒன்றாகிவிடும்.

(அல்லது)

(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக. முன்னுரை- அயர்வு – குறைவு – தளர்வு – உயர்வு – நகர்வு – முடிவுரை.
Answer:
நூலகம் காட்டும் அறிவு
முன்னுரை:

“வாழ்க்கை என்றொரு புத்தகம்
பக்கங்கள் எத்தனை யார் அறிவார்?” – எனும்

வினாவால் வாழ்க்கையே புத்தகம்தான் என எடுத்தியம்பும் வல்லிக்கண்ணனின் பார்வை வீச்சு சிறப்புடையதாகும். வாழ்க்கையையே புத்தக நோக்கினில் பார்த்ததற்கும், வாழ்க்கையில் பள்ளிப் புத்தகம் தவிர வேறு புத்தகங்களைப் பார்த்ததேயில்லை என்பதற்கும் எத்தனை வேறுபாடு. இங்குதான் நூலகத்தை மறந்த நிலை என்பது வெளிப்படுகிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

அயர்வு:
அடுத்தவரைப் பற்றி பேசிப்பேசி நாட்களை ஓட்டியும், போட்டியும், வஞ்சமும் நிறைந்த உலகில் ஒரு நிமிடம் நூலகத்தை நோக்கிப் பயணத்தைத் திருப்புங்கள். அயர்வுகளைத் தீர்க்கும் அருமருந்து அங்குதான் உள்ளது. பல்வேறு அறிவியலறிஞர்களும், அறிஞர்களும் இங்கிருந்துதான் வெளிப்படுகின்றனர்.

எல்லா நூலையும் நாம் விலை கொடுத்து வாங்கிக் கற்க முடியாது. ஆனால் எல்லா நூல்களின் இருப்பிடமான நூல் நிலையம் சென்றால் அங்கிருந்து நாம் பல நூல்களைக் கற்கலாம் அல்லவா?

குறைவு:
நூலகத்தினை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றனர் எனில், பத்திரிகை படிக்க வருபவர் சிலர்; விளையாட்டுச் செய்திகளை விருப்பமுடன் படிப்பவர் பலர்; இதழ்களில் அட்டைப் படங்களைக் காண வருபவர்கள் சிலர்; திரையுலகை தரிசிக்க வருபவர் பலர் என எண்ணற்ற முகங்களை வழி நடத்துவது இந்நூல் நிலையங்களாகும்.

நூல்களைக்கூட படித்திட வாங்கிச்சென்று, வேண்டிய பக்கங்களைக் கிழித்து எடுத்துத் திருப்பித் தருபவர் உண்டு. நூலினில் பல படங்களை வரைந்து வைத்தல், சில பெயர்களை எழுதுதல் என எண்ணற்ற சிறு செயல்கள் செய்து தமது சிறுமையை வெளிப்படுத்துபவர் உளர்.

தளர்வு:
பிறமொழி அறிவு வளர்ந்திட உதவும் நூல்கள் உதவியால், பிற மொழியாளரிடம் பேசும் அளவிற்கு தம்மை உயர்த்திக் கொண்டவர் உண்டு. மொழிகளைப் பற்றி நூல்கள் மட்டுமல்லாமல் அறிவியல், பழங்கால வரலாறுகள், கதைகள், நாவல்கள், கவிதை நூல்கள், கட்டுரைத் தொகுப்புகள், சிறு தொழில் கற்றிட உதவும் நூல்கள், சமையல் குறிப்புகள் எனப் பல்வேறு பிரிவுகளில் அமைந்து அறிவுக் களஞ்சியமாய்த் திகழ்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

உயர்வு:
நூலகங்கள் இல்லாத இடங்களில்லை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் முதலிய இடங்களில் உள்ளது. ஊர்கள் தோறும், மாவட்டங்கள் தோறும் நூலகங்கள் உண்டு. மாநிலத்தின் தலைமையிடத்திலும் நூலகம் உண்டு. சென்னையில் மாநில மைய நூலகமான ‘கன்னிமாரா நூலகம்’ அமைந்துள்ளது. தேவநேயப் பாவாணர் நூலகம், மறைமலையடிகள் நூலகம், சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நூலகம், சாது சேஷய்யா ஒரியண்டல் நூலகம், வ.உ.சி. நூலகம், கவிமணி நூலகம் என்பன போன்ற பல நூலகங்கள் மாவட்டங்கள் வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வள்ளுவரின் பெயரில் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

நகர்வு:
நூலகங்களில் நூல்கள் பெற வேண்டுமானால், நூலக உறுப்பினராகிக் கொண்டு அதன் பிறகு நூலை எடுத்துக் கொள்ளலாம். மனிதன் அறிவுச் சுரங்கமாய் விளங்க நூலகமே முக்கியக் காரணம். பள்ளிகளில் மாணவர்கள் பேச்சுப் போட்டியில், கட்டுரைப் போட்டியில் பரிசுகளைப் பெற்றிட நூலகமும் ஒரு காரணமே.

எவரொருவர் அறிவின் பிறப்பிடமாகத் திகழ்கிறாரோ அவரைத் துன்பம் நெருங்குவதில்லை. அவரது அறிவுத் திறனால் துன்பம் வராமல் காக்கப்படுகிறது. இதையே வள்ளுவர்,

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்” (- எனும் )

குறள் மூலம் அறிவுறுத்துகிறார். இவ்வாறு ஒருவர் அறிவின் சுடராய்த் திகழ நூலகம் மிக முக்கியமான வழிகாட்டியாகும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 4

முடிவுரை:
இவ்வாறு நூலகமானது ஒரு மனிதனுக்கு அறிவு, சிந்திக்கும் ஆற்றல் வழங்குவதோடு தகுதியுடையவராய் எழச் செய்யும் அற்புத மருந்தாகும். மாணவப் பருவத்திலேயே நூலகத்தினைப் பயன்படுத்துதல் இன்றியமையாதது.

எங்கே கிளம்பி விட்டீர்கள், நூலக உறுப்பினர் ஆகத்தானே!

Leave a Reply