Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

11th History Guide பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம் Text Book Questions and Answers

I. சரியான விடையினைத் தேர்வு செய்க.

Question 1.
அத்வைதம் என்னும் தத்துவத்தை இந்து மதத்திற்கு வழங்கியவர்
அ) ஆதிசங்கரர்
ஆ) இராமானுஜர்
இ) இராமானந்தர்
ஈ) சைதன்யர்
Answer:
அ) ஆதிசங்கரர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 2.
வைதீக வேதப்பிரிவுகளுக்கும், சிரமணப் பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைப் பற்றிக் குறிப்பிடுவது
அ) இராமாயணம்
ஆ) பாகவத புராணம்
இ) திருத்தொண்டர்களின் புகழ் பாடும் தொகுப்புகள்
ஈ) பால லீலா
Answer:
இ) திருத்தொண்டர்களின் புகழ் பாடும் தொகுப்புகள்

Question 3.
கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர்……………………….
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) மாறவர்மன் அரிகேசரி
இ நரசிம்மவர்மன்
ஈ) சுந்தரபாண்டியன்
Answer:
ஆ) மாறவர்மன் அரிகேசரி

Question 4.
சமண மதத்திலிருந்த போது அப்பர் இவ்வாறு அறியப்பட்டார் ……………………….
அ) அரிசேனா
ஆ தீர்த்தங்கரர்
இ சிவஞான சித்தியார்
ஈ) தர்மசேனர்
Answer:
ஈ) தர்மசேனர்

Question 5.
பக்கீர் எனக் குறிப்பிடப்படுபவர் ………………………..
அ) இஸ்லாமிய ஞானி
ஆ) பௌத்தத் துறவி
இ) இந்துத் துறவி
ஈ) சீக்கிய குரு
Answer:
அ) இஸ்லாமிய ஞானி

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 7.
இராமானந்தரின் சீடர் (மார்ச் 2019 )
அ) சைதன்யர்
ஆ) ரவிதாஸ்
இ) குருநானக்
ஈ) கபீர்
Answer:
ஈ) கபீர்

Question 8.
முதன்முதலாக இந்தி மொழியில் தனது மதத் தத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர்……………………….
அ) ரவிதாஸ்
ஆ) இராமானந்தர்
இ) கபீர்
ஈ) நாமதேவர்
Answer:
ஆ) இராமானந்தர்

Question 9.
அக்பரின் அரசவையில் “ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகர்” என்று அறியப்பட்டவர்……………………….
அ) சூர்தாஸ்
ஆ) துக்காராம்
இ இராமானந்தர்
ஈ) மீராபாய்
Answer:
அ) சூர்தாஸ்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 10.
மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர் ……… ஆவார்
அ) இராமானந்தர்
ஆ) மீராபாய்
இ) சூர்தாஸ்
ஈ) துக்காராம்
Answer:
இ) சூர்தாஸ்

II. சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.

அ. அ. தனது தொடக்கக் கால வாழ்வில் சைவராக இருந்த அப்பர் தனது தமக்கையால் சைவ மதத்திலிருந்து சமண மதத்திற்கு மாறினார்
ஆ. சூஃபி இயக்கத்தவர் கடவுளை அழகின் உச்சமாகக் கருதினர்
இ. இராம பக்தியை முன்னிலைப்படுத்தி வங்காள வைணவர்கள் இந்து மதத்தைச் சீர்திருத்த முயன்றனர்.
ஈ. பௌத்த மத நூல்களில் ரவிதாஸின் பக்திப்பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Answer:
ஆ.சூஃபி இயக்கத்தவர் கடவுளை அழகின் உச்சமாகக் கருதினர்

அ. கூற்று : மத சீர்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையைப் போதித்தனர்
காரணம் : அவர்கள் சிலை வழிபாட்டை விமர்சித்தனர்

அ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
ஆ. கூற்று தவறு; காரணம் தவறு
இ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ. கூற்று தவறு; காரணம் சரி
Answer:
இ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

III. பொருத்துக

i) கபீர் – 1. சாகித்திய லாகிரி
ii) சூர்தாஸ் – 2.ஷேக் தாதி
iii) சூபியிஸம் – 3. சம்பந்தர்
iv) கூன் பாண்டியன் – 4. நெசவாளர்
அ) 2 3 4 1
ஆ) 4 3 2 1
இ) 2 4 3 1
ஈ) 3 4 2 1
Answer:
அ) 2 3 4 1

கூடுதல் வினாக்கள்

Question 1.
வைணவ அடியாளர்களான ஆழ்வார்களின் பாடல்கள் ………… தொகுக்கப்பட்டுள்ளன.
அ) தேவாரம்
ஆ) பெரிய புராணம்
இ) நாலாயிர திவ்யபிரபந்தம்
ஈ) ஆதிகிரந்தம்
Answer:
இ) நாலாயிர திவ்யபிரபந்தம்

Question 2.
இராமானுஜர் ……. என்னும் தத்துவத்தை உருவாக்கினார்
அ) துவைதம்
ஆ) விசிஷ்டாத்வைதம்
இ) வைணம்
ஈ) சமணம்
Answer:
ஆ) விசிஷ்டாத்வைதம்

Question 3.
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டல்ல ஒன்றே என்று கூறியவர் ……….
அ) நாம தேவர்
ஆ) ஆதிசங்கரர்
இ) கபீர்
ஈ) இராமானுஜர்
Answer:
ஆ) ஆதிசங்கரர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 4.
பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள் ……….. கொள்கையைப் போதித்தனர்
அ) பல கடவுள்
ஆ) சில கடவுள்
இ) ஒரு கடவுள்
ஈ) இதில் ஏதும் இல்லை
Answer:
இ) ஒரு கடவுள்

Question 5.
குரு நானக்கின் போதனைகள் ………….. ஆகும்
அ) ஆதிகிரந்தம்
ஆ) விவிலியம்
இ) கிரந்த சாகிப்
ஈ) களவுளின்மை
Answer:
அ) ஆதிகிரந்தம்

Question 6.
நாமதேவர் ………….. எனும் துறவியினால் ஈர்க்கப்பட்டு பக்தி இயக்கத்தில் பங்கெடுத்தார்
அ) சைதன்யர்
ஆ) ஜனதேவர்
இ) ரவிதாஸ்
F) ராமானந்தர்
Answer:
ஆ) ஜனதேவர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 7.
வல்லபாச்சாரியார் …………… மார்க்க த்தை நிறுவியராவார்
அ) எண்வ ழி
ஆ) நான்குவழி
இ) புஷ்தி
ஈ) முக்தி
Answer:
இ) புஷ்தி

Question 8.
சூர்தாஸின் கவிதைகளில் கிருஷ்ணருடைய  ………. முக்கியகருப்பொருளாகவிளங்கியது
அ) கிருஷ்ண னின் பிறப்பு
ஆ) பால லீலா
இ) தெய்வீக சக்தி
ஈ) இதில் ஏதும் இல்லை
Answer:
ஆ) பால லீலா

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 9.
சிந்து கங்கை சமவெளியில் தோன்றிய இரண்டு மதங்கள்
அ) புத்தம், சமணம்
ஆ) இந்து, முஸ்லீம்
இ) இந்து, சமணம்
ஈ) சைவம், வைணவம்
Answer:
அ) புத்தம், சமணம்

Question 10.
முற்காலத்தில் வணிக வர்க்கத்தினரால் ஆதரிக்கப்பட்ட மதங்கள்…………………
அ) சூபி
ஆ) இந்து
இ) புத்த, கிறித்துவ
ஈ) புத்த, சமண
Answer:
ஈ) புத்த, சமண

Question 11.
பௌத்த சமண தத்துவ மோதல்களை விரிவாக விளக்கும் சைவ சித்தாந்த நூல் …………..
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) பரபக்கம்
ஈ) பெரிய புராணம்
Answer:
இ) பரபக்கம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 12.
இராமானுஜர் உருவாக்கிய தத்துவம் ……………………..ஆகும்
அ) துவைதம்
ஆ) அத்வைதம்
இ விசிஷ்டாத்வைதம்
ஈ) வைணவம்
Answer:
இ விசிஷ்டாத்வைதம்

Question 13.
இஸ்லாமிய ஞானிகளை குறிக்கும் பெயர் ……………………
அ) ஆசிக்
ஆ) பக்கீர்
இ) சன்னி
ஈ) சிஸ்டி
Answer:
ஆ) பக்கீர்

Question 14.
பெரியபுராணத்தை இயற்றியவர் …………………
அ) அப்பர்
ஆ) சம்மந்தர்
இ) சேக்கிழார்
ஈ) இதில் யாரும் இல்லை
Answer:
இ) சேக்கிழார்

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

IV.சுருக்கமான விடையளி

Question 1.
பக்தி இயக்கத்திற்கு இராமானுஜர் ஆற்றிய சேவைகள் யாவை?
Answer:
இராமானுஜர் போன்ற இறையியலாளர்களால் அது பதினோராம் நூற்றாண்டில் ஒரு தத்துவ சித்ததாந்த இயக்கமாக மறுவடிவம் கொண்டது. இராமானுஜர் சமய சமத்துவத்திற்குப் பெரும் ஆதரவாளராகத்திகழ்ந்தார்.

இராமானுஜர் விசிஷ்டாத்வைதம் என்னும் தத்துவத்தை உருவாக்கினார். அவருடைய போதனைகள் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டல்ல ஒன்றே என்ற ஆதி சங்கரின் கருத்தை மறுத்தன.

Question 2.
பக்தி இயக்கத்தில் ரவிதாஸின் பங்கினைப் பற்றி நீவிர் அறிவன யாவை?
Answer:

  • இயற்றிய பக்திப்பாடல்கள் பக்தி இயக்கத்தின் மேல் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
  • சீக்கியரின் மதப் பாடல்களில் ரவிதாசரின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
  • சாதி அடிப்படையிலான சமூகப் பிரிவுகள் ஆண், பெண் சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராகப் பேசினார். ஆன்மீக விடுதலையைப் பெறும் முயற்சியில் ஒற்றுமையை ஊக்குவித்தார்.

Question 3.
இராமானந்தரின் போதனைகள் யாவை?
Answer:

  • இராமானந்தர் இராமானுஜரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார்.
  • கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைகளைப் போதித்தார்.
  • சாதி முறையை நிராகரித்த அவர் குறிப்பாக இந்து மதத்தின் பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் பிராமணர்களின் மேலாதிக்கத்தை நிராகரித்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 4.
பண்பாட்டுப் பாரம்பரியத்தின் சிறப்பிற்குக் காரணமாக மீராபாயின் பாடல்களும் கவிதைகளும் அமைந்தனவிளக்குக.
Answer:
கிருஷ்ணரின் தீவிர பக்தையாக மாறிய அவர் அரண்மனையை விட்டு வெளியேறி, அன்பே கடவுளை அடையும் வழியென போதனை செய்யவும் பஜனைப் பாடல்களையும் பாடவும் தொடங்கினார். கடவுளை கிருஷ்ணர் என்னும் பெயரில் வணங்க வேண்டுமென்றும், பிறப்பு, செல்வம், வயது, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் கிருஷ்ணருடைய அருள் யாருக்கும் மறுக்கப்படக் கூடாது எனப் போதித்தார்.

Question 5.
இந்துத் துறவிகள் இஸ்லாமின் மீது கொண்டிருந்த இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகள் யாவை?
Answer:

  • புதிய மதத்தின் மூலம் வரும் சவால்களை சந்திக்க இந்து மதத்திற்குள் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நம்பினர்.
  • ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்ற இயக்கங்கள் தேவை என்பதை உணர்ந்தனர். கபீர் போன்றோர் இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

IV.கூடுதல் வினா

Question 1.
குருநானக்கின் போதனைகள் யாவை?
(அல்லது) சீக்கிய மத கோட்பாட்டினை கூறுக.
Answer:

  • குரு நானக்கால் நிறுவப்பட்ட சீக்கிய மதம் ஒற்றுமை சிந்தனையை பறைசாற்றுகிறது.
  • ஒரு கடவுள் கோட்பாட்டைக் கொண்ட சீக்கிய மதம் கடவுள் ஒருவரே என்ற கருத்தையும்,
  • ஒழுக்க நெறிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறியது. குருநானக்கின் போதனைகள் ஆதிகிரந்தம்’ ஆகும்.

Question 2.
சூர்தாஸின் முக்கிய படைப்புகள் யாவை?
Answer:
சூர்சாகர், சூர்சரவளி, சைத்யலகிரி ஆகியன சூர்தாஸின் முக்கியப் படைப்புகளாகும்.

V. குறுகிய விடையளி

Question 1.
மத மறுமலர்ச்சியின் உறைவிடமாகத் தென்னிந்தியா விளங்கியதை விளக்குக?
Answer:
பகவத்கீதை போன்ற மத நூல்கள் பக்திக்கான பாதை அல்லது பக்தி மார்க்கத்தைப் பற்றி பேசியதாலும் இவ்வியக்கம் பௌத்தம், சமணம் ஆகியவற்றின் ஒழுக்க நெறி, கடவுள் மறுப்புக் கோட்பாடுகளுக்கு எதிராகவே இவ்வியக்கம் தோன்றியது.

ஆதிசங்கரர் புற மதக் கோட்பாடுகளை எதிர்கொள்ளும் பொருட்டு இந்து மதத்திற்கு அத்வைதம் எனும் தத்துவக் கோட்பாட்டை வழங்கினார்.

புகழ்பெற்ற சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் உள்ளத்தை உருக்கும் பாடல்களால் பக்திக் கோட்பாட்டிற்கும் ஒரு வடிவம் கொடுத்து மக்களின் ஆதரவைப் பெற்றனர்.

பக்தி இயக்கம் அரச ஆதரவோடு சமூகம், அரசியல், மதம், பண்பாடு, மொழி ஆகிய தளங்களில் மிக ஆழமான, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு தென்னிந்தியா 7ஆம் நூற்றாண்டிலிருந்து 10 ஆம் நூற்றாண்டு வரை மத மறுமலர்ச்சியின் இல்லமாக விளங்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 2.
சூர்தாஸ், துக்காராம் ஆகியோரின் போதனைகளை ஆய்க.
Answer:

  • சூர்தாஸ் அன்பெனும் மதத்தையும் தனிபட்ட கடவுளிடம் பக்தியோடிருப்பதையும் போதித்தார்.
  • சூர்தாஸின் கவிதைகளில் கிருஷ்ணருடைய பால லீலா முக்கிய கருப்பொருளாக விளங்கியது.
  • கோபியர் வெளிப்படுத்திய காதலின் தீவிரம் என்பது ஒரு தெய்வீக ஆன்மாவின் மேல் மனித ஆன்மா கொண்டிருக்கும் இயற்கையான கவர்ச்சியின் வெளிப்பாடென்றார்.

துக்காராம் :

  • துக்காராம் வடிவமற்றவர் கடவுள் என நம்பினார்.
  • வேள்விகள், சடங்குகள். புனிதப் பயணங்கள் உருவவழிபாடு அகியவற்றை நிராகரித்தார்.
  • கடவுள் பற்று, மன்னிக்கும் மனப்பாங்கு , மன அமைதி ஆகியவற்றைப் போதித்தார்.
  • சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய செய்திகளைப் பரப்பினார். இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

Question 3.
கபீரின் போதனைகளை விவரி.
Answer:

  • கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற கருத்தை முன்வைத்தன.
  • இந்து இஸ்லாமிய மதங்களிலுள்ள பிரிவினை வாதங்களையும் குறுகிய மனப்பான்மைகளையும் எதிர்த்தார்.
  • உருவ வழிபாடு, பல கடவுள் வழிபாடு, சாதிமுறை ஆகியன கைவிடப்பட வேண்டுமென உறுதிபடக் கூறினார்.

Question 4.
கபீரிடமிருந்து சைதன்யர் எவ்வாறு வேறுபடுகிறார்?
Answer:

  • வங்காளத்தைச் சேர்ந்த சைதன்யர் கபீர் மற்றும் அவரை தொடர்ந்து வந்த பக்தி இயக்கத் துறவிகளின் போதனைகளிலிருந்து அவர் வேறுபட்டார்.
  • சைதன்யர் ஏனைய கடவுள்களைக் காட்டிலும் கிருஷ்ணர் உயர்வானவர் எனக் கொண்டார்.
  • சைதன்யருடைய இயக்கம் ஒருமைப்பாட்டிற்கான இயக்கமல்ல, மாறாக இது ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 5.
பக்தி இயக்கத்தின் விளைவுகளைச் சுட்டிக்காட்டுக.
Answer:

  • முக்தி ‘ என்பது அனைவருக்கும் உரியது என்ற கருத்தை முன்வைத்தது.
  • பக்தி இயக்கம் பெண்களுக்கும் சமூகத்தின் அடித்தட்டிலிருந்த மக்களுக்கும் சேர்ந்து ஆன்ம விடுதலைக்கான வழியைக் காட்டியது.
  • பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்கள் எண்ணிக்கையில் பெருகின.
  • பக்தி இயக்கத்தைச் சேர்ந்த துறவிகள் தத்துவ ஞானத் துறையில் சிறந்து விளங்கி துவைதம், அத்வைதம் ஆகிய தத்துவக் கோட்பாடுகளை வழங்கினர்.
  • இக்காலத்தில் பிராந்திய அளவில் நடைமுறையிலிருந்த பண்பாட்டுப் பழக்கங்களான, அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுவது பண்டிகைகள், விழாக்கள் நடத்துவது, புனிதப் பயணங்கள் செல்வது, சைவ, வைணவச் சடங்குகளை செய்வது ஆகியன இன்று வரை நடைமுறையில் உள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

V. கூடுதல் வினா

Question 1.
நாமதேவரின் இறைவழிபாட்டு தன்மை பற்றி கூறுக.
Answer:

  • முழுமையான இதயத்தோடு இறைவனை வணங்குங்கள்
  • மதப்பணி சார்ந்த வாழ்வை வாழுங்கள்
  • உறுதியான பக்தியுடன் அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள் என்பவையே நாமதேவரின் இறைவழிபாட்டு தன்மையாகும்.

Question 2.
சூபியிஸம் பற்றி கூறுக.
Answer:

  • சூபியிஸம் என்பது இஸ்லாம் மதத்தில் பக்தி – இயக்கம் ஆகும்.
  • சூபி, வாலி, தர்வீஷ், பக்கீர் ஆகிய பெயர்கள் இஸ்லாமியஞானிகளைக் குறிப்பதாகும்.
  • தியானம், யோகப் பயிற்சிகள், துறவறம், தியாகம் போன்றவற்றின் மூலம் உள்ளுணர்வைப் பெருக்கி இறைநிலையை உணர்ந்தவர்களாவர்.
  • 12 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியரின் சமூக வாழ்வில் சூபியிஸம் செல்வாக்குப் பெற்ற சக்தியாக விளங்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

VI. விரிவான விடையளிக்க

Question 1.
சூபியிஸத்தின் தாக்கம் பற்றி விவரி.
Answer:

  • சூபியிஸம் என்பது இஸ்லாம் மதத்தில் தோன்றிய பக்தி இயக்கம் ஆகும்.
  • சூபி, வாலி, தர்வீஷ், பக்கீர் ஆகிய பெயர்கள் இஸ்லாமிய ஞானிகளைக் குறிப்பதாகும்.
  • தியானம், யோகப் பயிற்சிகள், துறவறம், தியாகம் போன்றவற்றின் மூலம் உள்ளுணர்வைப் பெருக்கி இறைநிலையை உணர்ந்தவர்களாவர்.
  • மதம், சமூக வேறுபாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி சூபிகள் ஒட்டுமொத்த மனித குலத்தின் மேம்பாட்டிற்காகப் பணி செய்தனர்.
  • அவர்கள் கடவுளை மஸ்க் (நேசிக்கப்பட வேண்டியவர்) என்றும் தங்களை ஆசிக் (நேசிப்பவர்கள்) என்றும் நம்பினர்.
  • சூ பி யி ஸம் நகரப் புறங்க ளிலும் , கிராமப்புறங்களிலும் வேர்க் கொண்டது.
  • சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • ஆன்மீகப் பேரின்ப நிலையை மட்டும் இலக்காகக் கொண்ட புதிய உலக ஒழுங்கை உருவாக்க ஆசை கொண்டது.
  • அரசியல் அதிகாரத்திற்காக மோதிக்கொள்வதை இயல்பாக இருந்த நிலையில் சூபிகள் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்டப் பணியாற்றினார்.
  • சூபிகளின் மகத்தான பங்களிப்பு இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான சகோதரத்துவத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தியதாகும்.

Question 2.
பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளை வரிசைப்படுத்துக.
Answer:

  • பக்தி இயக்கச் சீர்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையைப் போதித்தனர்.
  • பிறப்பு, இறப்பு எனும் சுழற்சியிலிருந்து விடுபட முடியும் என நம்பினர். இறைவனிடம் ஆழமான பற்றும் நம்பிக்கையும் கொள்வதன் மூலம் முக்தி அடைய முடியும் எனும் கருத்தை முன்வைத்தனர்.
  • இறைவனுடைய அருளைப் பெற அர்ப்பணிப்பை வற்புறுத்தினர்.
  • குருவானவர் வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் இருத்தல் வேண்டும்.
  • உலக சகோதரத்துவம் எனும் கொள்கையைப் போதித்தனர்.
  • உருவ வழிபாட்டை விமர்சனம் செய்தனர்.
  • ஆழ்ந்த பக்தியுடன் பாடல்கள் பாட வேண்டுமென வலியுறுத்தினர்.
  • மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் கடவுளின் குழந்தைகளே எனக் கூறினர். பிறப்பின் அடிப்படையில் மக்களைப் பிரித்து வைக்கும் சாதி முறையைக் கண்டனம் செய்தனர்.
  • சடங்குகள், சம்பிரதாயங்கள், புனித யாத்திரைகள், விருந்துகள் ஆகியவற்றைக் கண்டனம் செய்தனர்.
  • எந்த மொழியையும் புனிதமான மொழி என அவர்கள் கருதவில்லை மக்களின் மொழிகளில் பாடல்கள் இயற்றினர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

IV. கூடுதல் வினா

Question 1.
குருநானக்கும் சீக்கிய மதமும் விவரி.
Answer:

  • ருநானக்கால் நிறுவப்பட்ட சீக்கிய மதம் அவருடைய ஐயப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சிந்தனையை பறை சாற்றுகிறது.
  • கடவுள் ஒருவரே என்ற கருத்தையும் ஒழுக்க நெறிகளையும் தவறாமல் பின்பற்ற வலியுறுத்தியது.
  • சீக்கிய மதம் பஞ்சாப் முழுவதும் பத்து சீக்கிய குருக்களின் தலைமையில் விரிவடைந்தது.
  • பெருவாரியான மக்களை ஈர்த்தது.
  • சீக்கியமத போதனைகள் வலிமை வாய்ந்த சமூக உணர்வை ஏற்படுத்தின.
  • முகலாயப் பேரரசுடன் பகைமையை உருவாக்கி இறுதியில் குருக்களின் உயிர்த் தியாகத்தில் முடிந்தது.
  • குரு கோவிந்சிங் சீக்கிய மதத்தின் கடைசி குரு ஆவார் அவருக்குப் பின்னர் கிரந்தசாகிப் (புனித நூல்) குருவாக கருதப்பட்டது.
  • குருநானக்கின் போதனைகள் ஆதிகிரந்தம் எனப்படும்.
  • ஏனைய சீக்கிய குருக்களின் போதனைகளும், இராமானந்தர், நாம தேவர், கபீர், ஷேக்பரீத் போன்ற பக்தி இயக்க கவிஞர்களின், சூபி துறவிகளின் போதனைகளும். ஆதிகரந்தத்தோடு சேர்த்து குரு கிரந்த சாகிப் எனப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

Question 2.
பக்தி இயக்கத்திற்கு மீராபாய் பங்களிப்பை விவரி.
Answer:

  • மீராபாய் ஜோத்பூர் அரசை நிறுவிய ஜோதாஜியின் கொள்ளு பேத்தி ஆவார்.
  • இவர் மேவார் அரசர் ராணாசங்காவின் மகன் போஜராஜன் என்பவரை மணந்தார்.
  • கிருஷ்ணரின் தீவிர பக்தையாக மாறினார்.
  • அன்பே கடவுளை அடையும் வழி என போதனை செய்யவும் பஜனைப் பாடல்களை பாடவும் தொடங்கினார்.
  • கடவுளை கிருஷ்ணர் என்னும் பெயரில் வணங்க வேண்டும் என்றும்
  • பிறப்பு, செல்வம், வயது, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் கிருஷ்ணருடைய அருள் யாருக்கும் மறுக்கப்பட கூடாது எனவும் போதித்தார்.
  • இவருடைய பக்தி பாடல்கள் மற்றும் இசைப்பாடல்கள் வளமான பண்பாட்டு மரபாகும்.
  • இவருடைய போதனைகள் தெய்வீக பக்தி என்னும் செய்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்றது.

Leave a Reply