Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 14 முகலாயப் பேரரசு Text Book Back Questions and Answers, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 14 முகலாயப் பேரரசு
11th History Guide முகலாயப் பேரரசு Text Book Questions and Answers
I. சரியான விடையினைத் தேர்வு செய்க.
Question 1.
1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் ……… யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்
அ) காலாட்படை
ஆ) குதிரைப்படை
இ) பீரங்கிப்படை
ஈ) யானைப்படை
Answer:
இ) பீரங்கிப்படை
Question 2.
கடைசிப்போரான காக்ரா போரில் பாபர் ……….. எதிராகப் போரிட்டார்
அ) ஆப்கானியர்களுக்கு
ஆ) ரஜபுத்திரர்களுக்கு
இ துருக்கியர்களுக்கு
ஈ) மராட்டியர்களுக்கு
Answer:
அ) ஆப்கானியர்களுக்கு
Question 3.
…………….. தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் சௌசாப் போரில் வெற்றி பெற்றார்.
அ) பாபர்
ஆ) ஹுமாயூன்
இ) ஷெர்கான்
ஈ) அக்பர்
Answer:
இ) ஷெர்கான்
Question 4.
………… நில உடைமை உரிமை முறையில், நிலத்திற்கான வரியை வசூலிக்கும் பொறுப்பும், அந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அ) ஜாகீர்தாரி
ஆ) மகல்வாரி
இ) ஜமீன்தாரி
ஈ) மன்சப்தாரி
Answer:
அ) ஜாகீர்தாரி
Question 5.
அக்பரது நிதி நிர்வாகம் …………… நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது
அ) பாபர்
ஆ) ஹுமாயூன்
இ) ஷெர்ஷா
ஈ) இப்ராஹிம் லோடி
Answer:
இ) ஷெர்ஷா
Question 6.
இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டி விட்டதற்காக ஜ ஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் …………. ஆவார்
அ) குரு அர்ஜூன் தேவ்
ஆ) குரு ஹர் கோபிந்த்
இ) குருதேஜ் பகதூர்
ஈ) குருஹர்ராய்
Answer:
இ) குருதேஜ் பகதூர்
Question 7.
………….. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பதினான்காம் லூயி ஆகியோர் சமகாலத்தவர்கள்
அ) அக்பர்
ஆ ஜஹாங்கீர்
இ) ஷாஜகான்
ஈ) ஒளரங்கசீப்
Answer:
இ) ஷாஜகான்
Question 8.
……………. தனது ஆட்சியின் போது ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார்
அ) அக்பர்
ஆ) ஜஹாங்கீர்
இ) ஷாஜகான்
ஈ) ஒளரங்கசீப்
Answer:
ஈ) ஒளரங்கசீப்
Question 9.
கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில் நுட்பத்தை உலகத்திலேயே கண்ட றிந்த முதல் அரசர் …………. ஆவார்
அ) அக்பர்
ஆ) ஷாஜகான்
இ) ஷெர்ஷா
ஈ) பாபர்
Answer:
அ) அக்பர்
Question 10.
ஜஹாங்கீர் மற்றும் ……… அமைத்தஷாலிமார் தோட்டங்கள், இந்திய தோட்டக் கலையில் குறிப்பிடத்தக்கவையாகும்.
அ) அக்பர்
ஆ) ஷாஜகான்
இ) ஹுமாயூன்
ஈ) ஒளரங்கசீப்
Answer:
ஆ) ஷாஜகான்
Question 11.
……………. சேர்ந்த தான் சேனை அக்பர்
ஆதரித்தார்
அ) ஆக்ராவை
ஆ) குவாலியரை
இ) தில்லியை
ஈ) மதுராவை
Answer:
Question 12.
பாதுஷாநாமா என்பது …… வாழ்க்கை வரலாறாகும்
அ) பாபர்
ஆ) ஹூமாயூன்
இ) ஷாஜகான்
ஈ) அக்பர்
Answer:
ஆ) ஹூமாயூன்
Question 13.
…………. ஒரு ஜோதிட ஆய்வு நூலாகும்
அ) தஜிகநிலகந்தி
ஆ) ரசகங்காதரா
இ மனுசரிதம்
ஈ) ராஜாவலிபதகா
Answer:
அ) தஜிகநிலகந்தி
Question 14.
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை இயற்றியவர் ……………..
அ) தாயுமானவர்
ஆ) குமரகுருபரர்
இ இராமலிங்க அடிகள்
ஈ) சிவப்பிரகாசர்
Answer:
ஆ) குமரகுருபரர்
Question 15.
கீழே உள்ள ஆட்சியாளர்களுள் யார் அக்பரின் சமகாலத்தவர் இல்லை ?
அ) இங்கிலாந்தின் எலிசபெத்
ஆ) ஷேக்ஸ்பியர்
இ பிரான்ஸின் நான்காம் ஹென்றி
ஈ) இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி
Answer:
ஈ) இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி
II. சரியான கூற்றினை தேர்ந்தெடு
அ. 1. இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலையின் பாணியில் முகலாயரின் கட்டடக்கலையின் மறுவடிவமாக தாஜ்மஹால் உள்ளது.
2. அக்பரது புதிய தலைநகரமான ஆக்ரா மற்றும் அதன் சுற்றுச் சுவர்களுக்குள் பல எழுச்சியூட்டும் கட்டடங்கள் உள்ளன.
3. மோதி மசூதி முழுவதும் பளிங்குக் கல்லால் கட்டப்பட்டது.
4. ‘புராண கிலா’ ஒரு உயர்ந்த கோட்டையாகும்.
Answer:
3. மோதி மசூதி முழுவதும் பளிங்குக் கல்லால் கட்டப்பட்டது.
ஆ. 1. ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 10 முதல் 10,000 வரையிலான படைவீரர்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித் தனர்.
2. ஷெர்ஷாவின் நாணய முறை, ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது.
3. முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்டி போர் மிகக் கடுமையான இறுதிப் போர் ஆகும்.
4. சீக்கியப் புனித நூலான “குருகிரந்த சாகிப்” குரு அர்ஜூன் தேவால் தொகுக்கப்பட்டது.
Answer:
2. ஷெர்ஷாவின் நாணய முறை, ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது.
II. பின்வருவனவற்றில் சரியான கூற்றினைக் கண்டுபிடி
அ. (i) ராணா சங்காவின் மூர்க்கமான வலிமை வாய்ந்த படைகள் பாபரின் சக்திவாய்ந்த படையை எதிர்கொண்டது.
(ii) கன்னோசிப் போருக்குப்பின் அக்பர் நாடு இல்லாத ஒரு இளவரசர் ஆனார்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) சரி (ii) தவறு
ஈ) (i)மற்றும் (ii) சரியானவை
Answer:
இ) (i) சரி (ii) தவறு
ஆ. (i) ஷெர்ஷா மேற்கில் உள்ள சிந்து முதல் வங்காளத்தில் உள்ள சோனர்கான் வரையிலான கிராண்ட் டிரங்க் சாலையை சீர்படுத்தினார்.
(ii) அக்பர் தனது மிகப் பெரிய படையெடுப்பு களின் மூலமாக மாபெரும் பேரரசிற்கு
அடித்தளம் இட்டார்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (i) மற்றும் (ii) சரியானவை
ஈ) (i) மற்றும் (ii) தவறானவை
Answer:
ஈ) (i) மற்றும் (ii) தவறானவை
இ. கூற்று (கூ) : பாபர் முதலாம் பானிப்பட் போரில் வெற்றிபெற்றார்
காரணம் (கா) : பாபர் பீரங்கிப் படையை போரில் பயன்படுத்தினார்
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம்
ஆகும். ஆ) கூற்று தவறு; காரணம் சரி
இ) கூற்றுதவறு; காரணமும் தவறு
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Answer:
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ. கூற்று (கூ) : ஒளரங்கசீப்பின் ஆட்சியின் இறுதியில் முகலாயப் பேரரசின் அழிவு ஆரம்பமாயிற்று
காரணம் (கா) : ஒளரங்கசீப் தக்காண அரசர்களிடம் நட்புறவாக இருந்தார்.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
இ கூற்று தவறு; காரணம் சரி
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
Answer:
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியானவிளக்கம் அல்ல.
IV. அ. கீழ்க்க ண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது
1. பாஸ்கராச்சார்யா – நீதி நெறி விளக்கம்
2. ஆமுக்தமால்யதா – கிருஷ்ண தேவராயர்
3. ஜகன்னாத பண்டிதர்-ரசகங்காதரா
4. அல்லசானிபெத்தண்ணா -மனுசரித்ரா
Answer:
1. பாஸ்கராச்சார்யா – நீதி நெறி விளக்கம்
ஆ. பொருத்துக
i) அபுல் பாசல் – 1. ஔரங்கசீப்
ii) ஜூம்மா மசூதி – 2. அக்பர்
iii) பாதுஷாஹி மசூதி – 3. ஷெர்ஷா
iv) புராண கிலா – 4. ஷாஜகான்
அ) 2 4 1 3
ஆ) 3 2 1 4
இ 3 1 4 2
ஈ) 1 3 2 4
Answer:
அ) 2 4 1 3
I. கூடுதல் வினாக்கள் சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
முகலாயப் பேரரசை நிறுவியவர் ……………
அ) அக்பர்
ஆ) ஒளரங்கசீப்
இ) பாபர்
ஈ) உமாயூன்
Answer:
இ) பாபர்
Question 2.
முதல் பானிபட் போர் நடைபெற்ற நாள் ….
அ) 1526 ஏப்ரல் 24
ஆ) 1526 ஏப்ரல் 21
இ 1526 மார்ச் 24
ஈ) 1526 மார்ச் 21
Answer:
ஆ) 1526 ஏப்ரல் 21
Question 3.
முதன் முதலில் வெடி மருந்தை கண்டுபிடித்தவர்கள் …………..
அ) இந்தியர்
ஆ) ரஷ்யர்
இ) சீனர்
ஈ) ஜப்பானியர்
Answer:
இ) சீனர்
Question 4.
1528ல் மேதினிராய் எதிராக நடைபெற்ற போர் ……….
அ) கான்வா போர்
ஆ) சந்தேரிப் போர்
இ) 2ம் பானிபட் போர்
ஈ) காக்ரா போர்
Answer:
ஆ) சந்தேரிப் போர்
Question 5.
முதல் பானிபட் போர் பாபருக்கும் ………… இடையில் நடந்தது.
அ) தௌலத்கான்லோடி
ஆ) கான்ஜஹான் லோடி
இ) இப்ராஹிம் லோடி
ஈ) முகமதுலோடி
Answer:
இ) இப்ராஹிம் லோடி
Question 6.
‘தீன் பணா’ என்னும் புதிய நகரத்தை உருவாக்கியவர்
அ) பாபர்
ஆ) ஹூமாயூன்
இ) அக்பர்
ஈ) ஜஹாங்கீர்
Answer:
ஆ) ஹூமாயூன்
Question 7.
ஷெர்ஷாவின் இயற்பெயர் ………..
அ) பரீத்
ஆ) சலீம்
இ ஹெமு
ஈ) ஜலாலுதின்
Answer:
அ) பரீத்
Question 8. ‘
பதேபூர் சிக்ரி ‘ என்ற புதிய தலைநகரை உருவாக்கியவர் …………..
அ) பாபர்
ஆ) உமாயூன்
இ) அக்பர்
ஈ) ஒளரங்கசீப்
Answer:
இ) அக்பர்
Question 9.
‘சௌசாப்போர் நடைபெற்ற ஆண்டு ….
அ) 1519
ஆ) 1529
இ 1539
ஈ) 1549
Answer:
இ 1539
Question 10.
……………….”விவசாயி சீர் குலைந்தால் அரசன் சீர்குலைவான்” என்ற கூற்றை நம்பிய அரசர் …
அ) பாபர்
ஆ) அக்பர்
இ ஜஹாங்கீர்
ஈ) ஷெர்ஷா
Answer:
ஈ) ஷெர்ஷா
Question 11.
அக்பரின் பாதுகாவலர் …………..
அ) ஹெமு
ஆ) பரீத்
இ) பைராம்கான்
ஈ) ஆசப்கான்
Answer:
இ) பைராம்கான்
Question 12.
இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1526
ஆ) 1536
இ) 1546
ஈ) 1556
Answer:
ஈ) 1556
Question 13.
இரண்டாம் பானிபட் போரில் அக்பருடன் போரிட்ட ஆப்கானிய படைத்தளபதி……….. அ) பைராம்கான்
ஆ) ஹெமு
இ) ஜெய்மால்
ஈ) பட்டா
Answer:
ஆ) ஹெமு
Question 14.
ஜஹாங்கீரின் இயற்பெயர் ………
அ) பரீத்
ஆ) சலீம்
இ) ஹெமு
ஈ) ஜலாலுதீன்
Answer:
ஆ) சலீம்
Question 15.
பிரான்சு அரசன் 14ம் லூயி சமகாலத்து அரசன் ……………
அ) பாபர்
ஆ) உமாயூன்
இ) ஷாஜகான்
ஈ) நூர்ஜஹான்
Answer:
இ) ஷாஜகான்
Question 16.
அல்புகர்க் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவை கைப்பற்றிய ஆண்டு ……….
அ) 1510
ஆ) 1520
இ 1530
ஈ) 1540
Answer:
அ) 1510
Question 17.
தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் 1620ல் குடியேற்றத்தை நிறுவியவர்
அ) ஹாலந்து நாட்டினர்
ஆ) பிரஞ்சு நாட்டினர்
இ) டென்மார்க் நாட்டினர்
ஈ) போர்ச்சுக்கீசியர்
Answer:
இ) டென்மார்க் நாட்டினர்
Question 18.
அய்னி அக்பரி என்ற நூலை எழுதியவர் …………….
அ) அபுபக்கர்
ஆ) அக்பர்
இ அபுல்பாசல்
ஈ) பீர்பால்
Answer:
இ அபுல்பாசல்
Question 19.
ஜஹாங்கீர் மன்னரின் பாரசீக மனைவியின் இயற்பெயர் (அல்லது) நூர்ஜஹானின் இயற்பெயர் ……………
அ) மும்தாஜ்
ஆ) அணாப்
இ) மெகருன்னிசா
ஈ) ஹர்க்காபாய்
Answer:
இ) மெகருன்னிசா
Question 20.
எந்த முகலாய மன்னரின் காலத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை பாரசீகமொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. (மார்ச் 2019)
அ) அக்பர்
ஆ) ஜஹாங்கீர்
இ பாபர்
ஈ) ஹீமாயூன்
Answer:
அ) அக்பர்
V. சுருக்கமான விடையளி
Question 1.
பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது எது?
Answer:
- பாபர் பதினொரு வயதுச் சிறுவனாகத் தனது தந்தையிடமிருந்து சாமர் கண்டை மரபுரிமைச் சொத்தாகப் பெற்றார்.
- ஈரானில் வலிமை வாய்ந்த சபாவிகளின் ஆட்சி நடந்ததினாலும் மத்திய ஆசியாவிலும் உஸ்பெக்குகள் இருந்ததினாலும் தனக்கென ஒரு பேரரசைத் தென்கிழக்கே இந்தியாவில் தான் அமைக்க முடியுமென உணர்ந்தார்.
- இந்துஸ்தானில் அரசியல் சூழலும் அவருடைய துணிச்சலான நடவடிக்கைகளுக்குச் சாதகமாக இருந்தது.
- பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வரவேண்டும் என்ற வேண்டுகோளோடு இப்ராகிம் லோடியின் எதிரியான தௌலத்கான் லோடியாலும், மேவாரின் அரசனும் ரஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பின் தலைவருமான ராணா சங்காவாலும் அனுப்பப்பட்ட தூதுக்குழுவான பாபர் சந்தித்தார்.
- இதுவே பாபரை இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது.
Question 2.
அக்பர், பைராம்கானை எவ்வாறு கையாண்டார்?
Answer:
- அக்பரின் பாதுகாவலராக பைராம்கான் விளங்குகிறார்.
- தன் சாதனைகளின் காரணமாய் பைராம்கான் தன் போன்ற ஏனைய பிரபுக்களிடம் ஏளனத்துடனும் இறுமாப்போடும் நடந்து கொள்ளத்துவங்கினார்.
- இதனால் கோபம் கொண்ட அக்பர் பைராம்கானைப் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்
- இதன் விளைவாகப் பைராம்கான் கலகம் செய்ய அக்பர் அதை சாதுர்யமாகக் கையாண்டார்.
- இறுதியில் அக்பர் முன் ஒப்படைக்கப்பட்ட பைராம்கான் மெக்காவுக்கு அக்பரின் அறிவுரையின்படி புறப்பட்டார்.
Question 3.
சிறு குறிப்பு வரைக அ)வில்லியம் ஹாக்கின்ஸ் ஆ) சர் தாமஸ் ரோ
Answer:
- ஜஹாங்கீரின் ஆட்சி வில்லியம் ஹாக்கின்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ என்ற இரு ஆங்கிலேயரின் வருகைக்கு சாட்சியமானது
- இந்தியாவில் ஆங்கிலேய வணிகக் குடியேற்றம் ஒன்றை நிறுவுவதற்குப் பேரரசின் அனுமதியை முதலாமவரால் பெற இயலவில்லை .
- ஆனால் தாமஸ் ரோ இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் அனுப்பிய தூதுவராய் சூரத் நகரில் ஒரு வணிகக் குடியேற்றத்தை அமைத்துக் கொள்வதற்கான அனுமதியை பேரரசரிடம் பெறுவதில் வெற்றி பெற்றார்.
Question 4.
“ஜஹாங்கீரின் அரியணைக்குப் பின்னால் அதிகார மையமாகச் செயல்பட்டவர் நூர்ஜஹான்” – விளக்குக?
Answer:
- அரசரின் பாரசீக மனைவி மெகருன்னிசா நூர்ஜகான் அரியணையின் பின்னே உண்மையான அதிகாரம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
- நூர்ஜகான் மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சிகளின் காரணமாக இளவரசர் குர்ரம் தனது தந்தைக்கு எதிராகக் கிளர்ச்சிசெய்தார்.
- ஆனால் ஜஹாங்கீரின் விசுவாசமிக்க தளபதி மகபத்கான் மேற்கொண்ட முயற்சிகளால் வெற்றிபெற இயலாத நிலையில் குர்ரம் தக்காணம் திரும்பினார்.
- பின்னர் நூர்ஜகானின் சதி நடவடிக்கைகளின் காரணமாக மகபத்கான் கலகத்தில் இறங்க, அக்கலகம் நூர்ஜகானால் திறமையுடன் கையாளப்பட்டது.
Question 5.
முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்.
Answer:
- முகலாயக் கட்டடக்கலையின் மறு வடிவமாக கருதப்படுவதுதாஜ்மஹால்
- இந்தியப் பாரசீக இஸ்லாமிய கட்டடக் கலையின் கூட்டு கலவையாகும்.
- இது தலைவாயில் தோட்டம், மசூதி, கல்லறை மாடம், மினார் என்று அழைக்கப்படும் நான்கு கோபுரங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுத் தனித்தன்மை வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டது.
Question 6.
ஒளரங்கசீப்பிற்கு எதிராக வடபகுதியில் மூண்ட மூன்று எழுச்சிகள் யாவை?
Answer:
வட இந்தியாவில் ஒளரங்கசீப்பிற்கு எதிராக மூன்று முக்கிய கிளர்ச்சிகள் அரங்கேறின அவை.
- மதுரா பகுதியை சேர்ந்த ஜாட்டுகள்
- ஹரியானாப்பகுதியை சேர்ந்த சத்னாமியர்
- பஞ்சாப் பகுதியை சேர்ந்தச் சீக்கியர் ஆகிய கிளர்ச்சிகள் ஆகும்.
Question 7.
சிறு குறிப்பு வரைக. (i) சீக்கிய மதம் (ii) சூபியிஸம்
Answer:
- சீக்கிய மதத்தை குருநானக் தோற்றுவித்தார். கடவுள் ஒருவரே எனக் கூறிய அவர்,
- கடவுள் உருவமற்றவர், எங்கும் நிறைந்திருப்பார் என்று போதித்தார்.
- சூபியிஸம் இஸ்லாமின் ஒரு புதிய பரிமான மதக் கோட்பாடு ஆகும்.
- ஈரானில் தோன்றிய இக்கோட்பாடு இந்தியாவில் செழித்து வளர்ந்தது.
Question 8.
மக்களிடையே பக்தி இயக்கத் துறவிகள் எவ்வாறு புகழ் பெற்றனர்?
Answer:
- பக்தி இயக்கப் பெரியோர்கள் சடங்குகளையும், சாதி முறைகளையும் விமர்சனம் செய்து கேள்விக்குள்ளாக்கினர்.
- பக்தியை வெளிப்படுத்துவதற்கு சமஸ்கிருத மொழியை பயன்படுத்தாமல் அப்பகுதி மக்களின் பிராந்திய மொழியை பயன்படுத்தினர்.
- அவர்களின் முற்போக்கான சிந்தனைகள் கருத்தைக் கவரும் மொழி நடைமுறையில் இசையோடு பாடப்பட்ட போது அவர்கள் மக்களின்
மனதில் இடம் பிடித்தனர்.
Question 9.
முகலாயர் காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி பற்றி எழுதுக. (மார்ச் 2019 )
Answer:
- முகலாயர் ஆட்சிக்காலத்தில் சைவ, வைணவ இலக்கியங்கள் தமிழகத்தில் பெரும் செல்வாக்கோடு திகழ்ந்தது.
- சைவ புலவரான குமர குருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நீதி நெறி விளக்கம் போன்ற இலக்கியங்களை இயற்றினார்.
- தாயுமானவர் சமர சன்மார்க்கம் எனும் பக்திப் பாடல்ளை இயற்றினார்.
Question 10.
“முகலாயர் ஒவியத்துறையில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருந்தனர்” – விவரிக்கவும்.
Answer:
- முகலாயரின் நுண் ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றது ஆகும்.
- இந்திய ஓவிய மரபும், மேற்காசிய ஓவிய மரபும் இணைந்து ஒவியகலையின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
- ஹூமாயூன் தன்னோடு அழைத்து வந்து நுண் ஓவியக் கலைஞர்கள், இந்திய ஓவியக் கலைக்கு புத்துயிர் ஊட்டினார்.
- எனவே முகலாயர் கால ஓவியம் பன்னாட்டு அளவிலான அங்கீகாரத்தை பெற்றது.
V. கூடுதல் வினாக்கள் – சுருக்கமான விடையளி
Question 1.
உமாயூனின் சூனார் கோட்டை முற்றுகை பற்றி கூறுக.
Answer:
- 1532ல் தெளரா என்னுமிடத்தில் ஆப்கானியரை தோற்கடித்த ஹூமாயூன் பலம் வாய்ந்த சுனார் கோட்டையை முற்றுகையிட்டார்.
- நான்கு மாதங்களுக்குப் பின் ” முகலாயருக்கு விசுவாசமாயிருப்பேன் ” என்ற ஷெர்ஷாவின் பொய் வார்த்தைகளை நம்பி ஹூமாயூன் முற்றுகையைக் கைவிட்டார்.
- ஹுமாயூன் எடுத்த இந்த தவறான முடிவு அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
Question 2.
பாபர் இந்தியா எதைப் பெற்றிருந்தது என விவரிக்கிறார்?
Answer:
- இந்துஸ்தானத்தின் தலையாய மேன்மை – எதுவெனில் இது ஒரு மிகப்பெரிய நாடு
- பெருமளவிலான தங்கத்தையும், வெள்ளியையும் கொண்டுள்ளது.
- இந்துஸ்தானத்தின் மற்றொரு வசதி யாதெனில் இங்குள்ள தொழிலாளர்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் முடிவே இல்லாத வகையில் கடுமையாக உழைத்தனர்.
- மேற்கண்டவாறு பாபர் இந்தியாவைப் பற்றி கூறுகிறார்.
Question 3.
முதல் பானிபட் போர் போற்றி பற்றி எழுதுக.
Answer:
- 1526 ஏப்ரல் 21ம் நாள் பாபருக்கும் இப்ராஹிம் லோடிக்கும் இடையே பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. இது முதல் பானிபட் போர் எனப்படுகிறது.
- எண்ணிக்கையில் அதிக படைவீரர்கள் கொண்ட இப்ராஹிம் லோடியை குறைந்த வீரர்களை கொண்ட பாபரின் பீரங்கிப்படை எளிதில் வெற்றி கண்டது.
- இந்த வெற்றியின் மூலம் பாபர் இந்தியாவில் முகலாய ஆட்சியை தொடங்கினார்.
Question 4.
ஜாகீர்தாரி முறை
Answer:
- இது ஒரு நில உடைமை முறையாகும்.
- தில்லி சுல்தானியர் காலத்தில் இம்முறை வளர்ச்சி பெற்றது.
- இம்முறையின் கீழ் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் வரிவசூல் செய்கின்ற அதிகாரமும் அப்பகுதியை நிர்வகிக்கின்ற அதிகாரமும் அரசாங்கத்தைச் சார்ந்த ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். இது ஜாகீர்தாரி முறை எனப்படும்.
VI. குறுகிய விடையளி
Question 1.
“வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹூமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து இறந்தார்”- விவரிக்கவும்.
Answer:
- ஹீமாயூன் வாழ்நாள் முழுவதும் தனது உடன் பிறந்த சகோதரர்களாலேயே ஏமாற்றப்பட்டார்.
- சூனார் கோட்டை முற்றுகையின் போது ஷெர்கானின் பொய்யான வார்த்தைகளை நம்பி அவரை விட்டுவிட்டார். கடைசியில் அவரிடமே நாட்டை இழந்தார்.
- மீண்டும் போராடி வெற்றி பெற்று அரியணையில் அமர்ந்த நேரத்தில் தன் நூலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
- வரலாற்றாளர் ஸ்டேன்லி லேன்பூல் “வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹீமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து இறந்தார்” என்கிறார்.
Question 2.
‘தீன் இலாஹி பற்றி நீவிர் அறிவது யாது?
Answer:
- அக்பர் பல்வேறு மதங்களைச் சார்ந்த புகழ்பெற்ற அறிஞர்களோடு கலந்துரையாடினார்.
- இதன் விளைவாக “கடவுள் ஒருவரே” என்ற உண்மையை உணர்ந்தார்.
- அக்பருடைய தத்துவத்தை விளக்குவதற்கு அக்பரும் பதானியும் பயன்படுத்திய சொல் “தௌகித் – இ – இலாஹி (தீன் இலாஹி)”
என்பதாகும். - இச்சொல்லின் நேரடி பொருள் “ தெய்வீக ஒரு கடவுள்” கோட்பாடாகும்.
Question 3.
அக்பரது சித்தூர் முற்றுகை
Answer:
- இராஜபுத்ர அரசர் ராணா உதயசிங்கிடம் சித்தூர் கோட்டை இருந்தது.
- ஆறு மாத கால முற்றுகைக்கு பின்னர் அக்பர் இக்கோட்டையைக் கைப்பற்றினார்.
- ராணா உதயசிங் தோற்று பின் வாங்கினாலும் அவரது தளபதிகள் ஜெய்மால், பட்டா ஆகியோர் போரை திறம்பட நடத்தினார்கள்.
- இப்போரில் ஜெய்மால், பட்டா ஆகியோரோடு 30,000 ராஜபுத்ர வீரர்கள் போர்க்களத்தில் மாண்டனர்.
Question 4.
அக்பரது மன்சப்தாரி முறை
Answer:
- அக்பர் முறைப்படுத்தப்பட்ட மைய நிர்வாக முறையை உருவாக்க மன்சப்தார் ‘ என்ற பட்டத்தை உருவாக்கினார்.
- ஒவ்வொரு மன்சப்தார்களின் கீழ் 10 முதல் 10,000 வரை ராணுவ வீரர்கள் இருந்தனர்.
- இராணுவம், குடிமைப்பணிகள் சார்ந்த அதிகாரிகளுக்கு இப்பட்டம் கொடுக்கப்பட்டது.
- மன்சப்தார் பதவி பரம்பரை உரிமை அல்ல. இது திறமைக்கு கொடுக்கப்பட்ட பதவியாகும்.
Question 5.
முகலாயர் ஆட்சியில் நிறுவப்பட்ட ஐரோப்பியக் குடியேற்றங்கள்
Answer:
- முதலில் இந்தியாவில் குடியேற்றத்தை அமைத்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். இவர்கள் கோவா, டாமன், சால்செட், பம்பாய் போன்ற இடங்களில் தங்கள் குடியேற்றங்களை அமைத்தனர்.
- டச்சுக்காரர்கள் மசூலிப்பட்டினம் புலிகாட், சூரத், காரைக்கால், கொச்சி ஆகிய இடங்களில் வாணிக நிலையங்களை உருவாக்கினார்கள்.
- ஆங்கிலேயர்கள் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் தங்களது வணிக நிலையங்களை உருவாக்கினர்.
Question 6.
தாராகோ
Answer:
- ஷாஜகானின் மூத்த மகன் தாராஷுகோ.
- தனக்குப்பின் இவரை அரசராக்க விரும்பிய ஷாஜகான் பட்டத்து இளவரசராக அறிவித்தார்.
- மற்ற சகோதரர்கள் இதனை வெறுத்தனர்.
- தராஷுகோ சன்னி இஸ்லாமிய பிரிவை சேர்ந்தவராயினும் சூபி தத்துவங்கள் மீது ஆர்வம் கொண்டவராயிருந்தார்.
Question 7.
கர்கானா
Answer:
- முகலாயர் கால தொழிற்கூடங்களுக்கு கர்கானா என்று பெயர்.
- இங்கு விலை உயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
- அரச குடும்பங்களுக்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் அரண்மனை சார்ந்த கர்கானாக்களில் உற்பத்தி செய்யப்பட்டன.
- இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உள்ளூர் சந்தைகளிலும், தொலை தூர சந்தைகளிலும் விற்கப்பட்டன.
Question 8.
கபீர்
Answer:
- கபீர் ஒரு நெசவாளர்
- இவர் பக்தி இயக்கத்தின் மிக முக்கியமான ஆளுமை ஆவார்.
- ஒரு கடவுள் கோட்பாட்டை வலியுறுத்தினார்
- உருவ வழிபாட்டையும், சடங்குகள் மற்றும் சாதிமுறைகளையும் கண்டித்தார்.
- எளிய மொழி நடையில் இவருடைய பாடல்கள் அமைந்திருந்தன.
- இவரின் பாடல்கள் வாய்மொழியாகவே வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் பரவின.
Question 9.
அபுல் பாசல்
Answer:
- அக்பர் அவை அறிஞர்களில் முதன்மையானவர் அபுல்பாசல்
- இவர் தான் எழுதிய அயினி அக்பரியில் ஜமீன்தார்கள் ஆவதற்கான தகுதியுடைய சாதிகளை பட்டியலிடுகிறார்.
- அறிவியல், புள்ளியியல், புவியியல், பண்பாடு ஆகியவைகளை மிக அழகாக விளக்கியுள்ளார்.
- இவர் ‘அக்பர்நாமா’ என்ற நூலில் அக்பரின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்துள்ளார்.
Question 10.
சூபி இயக்கம்
Answer:
- சூபி இயக்கம் ஈரானில் தோன்றியது இது இந்தியாவில் செழித்து வளர்ந்தது.
- சூபிகள் மதம் சமூக வேறுபாடுகள் என்ற எல்லையைத் தாண்டி ஒட்டுமொத்த மனித குல மேம்பாட்டிற்காக பணிகளை செய்தனர்.
- பழைமையான இஸ்லாமியர்களின்ஷரியத்கமிட்டு கூறும் கட்டுப்பாடுகளை ஏற்கும் வரை சூபி இயக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருந்தது.
- இது இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்டது.
கூடுதல் வினாக்கள்
Question 1.
முகலாயர்களின் கால ஏற்றுமதி, இறக்குமதி பொருள்கள் யாவை?
Answer:
ஏற்றுமதி : முகலாயர் காலத்தில் ஐரோப்பியர்களுக்கு நறுமண பொருள்கள், சாயங்கள், வங்காளப்பட்டு, மஸ்லின், சொர சொரப்பான அச்சிடப்பட்ட துணி, பளபளப்பான பருத்தி துணி ஆகியவற்றை ஏற்றுமதி செய்தனர்.
இறக்குமதி : இந்தியாவிற்கு பெருமளவில் தங்கத்தையும், வெள்ளியையும் இறக்குமதி செய்தனர்.
Question 2.
ஜமீன்தாரி
Answer:
- பாரசீக மொழியில் ஜமீன்தாரி என்ற வார்த்தைக்கு நிலத்தின் உடைமையாளர் என்று பொருள்.
- முகலாயர் காலத்தில் பிரபுக்கள் வர்க்கத்தைச் சேர்ந்தோரே ஜமீன்தாரர்களாக இருந்தனர்.
- ஜமீன்தாரர்கள் குத்தகைதாரர்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும் வரிவசூல் செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்தினர்.
Question 3.
மாலிக் ஆம்பர்
Answer:
- எத்தியோப்பியாவிலிருந்து இந்தியாவுக்கு ஓர் அடிமையாக கொண்டுவரப்பட்டவர்.
- அகமது நகர பிரதம மந்திரி செங்கிஸ்கானிடம் அரசியல் நிர்வாகம், ராணுவம் மற்றும் நிர்வாக விஷயங்களை கற்றுக்கொண்டார்.
- தன்னுடையத் தனித்தன்மையாலும், அரசியல் சாதுர்யத்தாலும் தென்னிந்தியச் சுல்தானியங்கள் ஒன்றின் ராணுவத் தளபதியாகவும், பகர ஆளுநராகவும் உயர்த்தப்பட்டார்.
- மராத்தியர்களுடன் இணைந்து முகலாயர்களுக்கு எதிராக செயல்பட்டவர். மராத்தியர்களை ஓர் அங்கீகரிக்கப்பட்ட சக்தியாக மாற்றியவர் இவர்.
VII. விரிவான விடையளி
Question 1.
“வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி – விளக்குக.
Answer:
விவசாயம்:
- ஷெர்ஷா நெகிழ்வுத்தன்மையுடைய வருவாய் முறையை பின்பற்றினார்.
- நிலங்களின் வளத்திற்கேற்ப வரி நிர்ணயம், வரிவசூல் செய்ய சில பகுதிகளில் ஜாகீர்தாரர்கள் நியமிக்கப்பட்டனர். சில இடங்களில் ஜமீன்தாரி முறை அனுமதிக்கப்பட்டது.
- பல இடங்களில் மொத்த விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கு மட்டும் வரியாக வசூலிக்கப்பட்டது.
வணிகத்துறை :
- ஷெர்ஷா விவசாயிகளை எவ்விதம் நடத்தினாரோ அதே போல வரிகளை எளிமைப்படுத்தி அதன் மூலம் வாணிபத்தை ஊக்குவித்தார்.
- நுழைவு வரி, விற்பனை வரி போன்ற வரிகள் வசூலிக்கப்பட்டன.
நாணய முறை :
- தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்களில் இடம் பெறும் உலோக அளவுகள் இறுதிசெய்யப்பட்டன.
- இது வாணிபத்திற்கு பெரும் உதவி செய்தது.
- இந்த நாணய முறையானது முகலாயர் காலம் முழுவதும் பின்பற்றப்பட்டு பின் ஆங்கிலேயர் காலத்து நாணய முறைக்கு அடித்தளமிட்டது.
சாலை:
- வணிகத்தையும், வர்த்தகத்தையும் ஊக்குவிக்கும் பொருட்டு உறுதியான சாலை வசதிகளை பின்பற்றினர்.
- பழைய சாலைகள் புதுப்பிக்கப்பட்டன. புதிய சாலைகள் அமைக்கப்பட்டன.
- அனைத்து சாலைகளிலும் ‘ சராய் ” எனப்படும் சத்திரங்கள் கட்டப்பட்டன.
- அக்பர் மற்றும் இராஜா தொடர்மாலின் நிதி நிர்வாக முறை ஷெர்ஷாவின் நிர்வாக முறையை இவ்வாறு பின்பற்றி இருந்தது
Question 2.
அக்பரின் மதக் கொள்கை எவ்வாறு ஔரங்கசீப்பின் மதக் கொள்கையிலிருந்து மாறுபட்டிருந்தது?
Answer:
ஒளரங்கசீப்பின் மதக்கொள்கை:
- அக்பரால் நீக்கப்பட்ட ஜிஸியா வரியை ஒளரங்கசீப் மீண்டும் இந்துக்கள் மீது விதித்தார்.
- புதிய இந்துக் கோயில்கள் கட்டப்படக் கூடாது என ஆணைகள் பிறப்பித்தார்.
- பழையக் கோயில்கள் மட்டும் பழுது பார்க்க அனுமதிக்கப்பட்டன.
- முஸ்லீம் சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி அப்வாப் எனப்படும் வரிவசூலை தடை செய்தார்.
- தனக்கு கீழ்படிந்துள்ள பகுதிகளில் கோவில் கட்ட கொடைகள் அளித்தார்.
- இவரது தகப்பனார் ஆட்சியை விட இவரது ஆட்சியில் இந்து அரசு அதிகாரிகள் அதிகமாக பணியாற்றினர்.
அக்பரின் மதக்கொள்கை :
- அக்பரின் மதக்கொள்கை ஒளரங்கசீப் மதக் கொள்கையை விட முற்றிலும் வேறுபட்டதாகும்.
- அக்பர் இபாதத் கானா என்னும் வழிபாட்டுக் கூடத்தை நிறுவி, அங்கு அனைத்து மதத் தலைவர்களைக் கூட்டி விவாதங்கள் நடத்தினார்.
- இவ்விவாதங்களின் விளைவாக “ ஒரே ஒரு கடவுள் மட்டும்” இருப்பதை உணர்ந்தார்.
- அக்பர் தான் அறிந்த தத்துவத்தை விளக்குவதற்காக “ தௌகித் – இ – இலாகி ” என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இதுவே “தீன் இலாஹி ” எனப்பட்டது.
- தீன் இலாஹி ஒரு மதம் அல்ல. இதன் நோக்கம் சம, சகிப்பு கொண்ட சம மதிப்பை வழங்கும் ஓர் அரசை உருவாக்குவதே ஆகும்.
Question 3.
ஒளரங்கசீப்பின் தக்காணக் கொள்கை எவ்வாறு முகலாயப் பேரரசின் அழிவுக்கு வழி வகுத்தது?(மார்ச் 2019)
Answer:
- மராத்தியர்களின் செல்வாக்கை கட்டுப்படுத்துதல்
- பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்களின் கிளர்ச்சியை அடக்குதல்
- தன் மகன் இளவரசர் அக்பரின் கிளர்ச்சியை அடக்குதல்
- தக்காணத்தில் மராத்தியர்கள் சிவாஜியின் தலைமையில் ஒளரங்கசீப்பை எதிர்த்தனர். ஔரங்கசீப் ஜெய்சிங், செயிஸ்டகான் என்று பலரை அனுப்பியும் சிவாஜியை ஒன்றும் செய்ய இயலவில்லை .
- மேலும் இவரது மகன் இரண்டாம் அக்பரும் தக்காணத்தில் தங்கி தன்னை சுதந்திர அரசராக அறிவித்தார். ஒளரங்கசீப் நீண்ட காலம் தக்காணத்தில் தங்க வேண்டி இருந்ததால் நிர்வாகம் ஆட்டம் காண ஆரம்பித்தது. இது முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.
Question 4.
முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம் பற்றி ஆராய்க.
Answer:
பொருளாதாரம் :
முகலாயப் பொருளாதாரம் காடு சார்ந்த வேளாண் பொருளாதாரம் ஆகும். காடுகள், கைவினை கலைஞர்கள், கப்பல் கட்டுவோர், மேல்பூச்சு சாயம் தயாரிப்போர், நெசவு செய்வோர், மற்றும் உலோகங்கள் உருக்குவோர் போன்றவர்களுக்கு தேவையானவற்றை வழங்கியது.
கிராமப்புற பொருளாதாரம் :
- கிராமப்புற மக்கள் வேளாண்மையை சார்ந்தே இருந்தனர். ஏழை விவசாயிகள் சொத்துகள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
- ரபி, காரிப் ஆகிய இரு பருவங்களில் பயிர்கள் பயிரிடப்பட்டன. நிலத்தின் அளவு மற்றும் பயிரிடக் கூடிய பயிர்கள் அகியவற்றின் அடிப்படையில் நிலவரி நிர்ணயம் செய்யப்பட்டது.
நகர்ப்புற பொருளாதாரம் :
நகர்ப்புற பொருளாதாரம் கைவினைத் தொழில்கள் சார்ந்திருந்தது. “ கர்கானா ” என்று அழைக்கப்படும் தொழிற்கூடங்களில் விலையுயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
வணிகம்:
- நாட்டின் அரசியல் ஒருங்கிணைப்பும், திறமையான சட்டங்களும், ஒழுக்க பராமரிப்பும் சுறுசுறுப்பான வர்த்தகத்தையும் வாணிகத்தையும் உறுதிப்படுத்தின.
- உபரியான வர்த்தகப் பொருட்கள் ஆறுகள் வழியாகவும், மாட்டு வண்டிகளிலும், ஒட்டக வண்டிகளிலும், சாலை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டன.
- பஞ்சாரா என்னும் நாடோடி வணிகக் குழுக்கள் பொருட்களை வெகு தூரம் கொண்டு செல்வதில் நிபுணத்துவம் பெற்றிருந்தனர்.
- அரிசி, சர்க்கரை, மஸ்லின்பட்டி, பருத்தி துணிகள், சால்வைகள் போன்றவைகள் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.
- தங்கமும், வெள்ளியும் இறக்குமதி செய்யப்பட்டன.
Question 5.
முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
Answer:
முகலாயர் காலத்தில் கட்டிடக் கலையில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி உலகக் கலையில் குறிப்பிடத்தக்க கட்டமாகும். கூண்டு வடிவிலான குமிழ்களைக் கொண்ட கவிகை மாடங்களாலும், ஒப்பனை மிகுந்த கலங்கரை விளக்கம் போன்ற கோபுரங்களாலும் நான்கு மூலைகளிலும் எழுப்பப்பட்டுள்ள ஸ்தூபி மாடங்களாலும் கட்டப்பட்ட முகலாய கட்டிடங்கள் உலகப் புகழ் பெற்றவை.
- சூர் வம்சத்து மன்னர்களால் டில்லியில் கட்டப்பட்ட புராணகிலா, பீகாரில் சசாரம்
- அக்பர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஹீமாயூன் கல்லறை, பதேபூர் சிக்ரி.
- ஜஹாங்கீர் கட்டிய முதல் வெள்ளை நிற பளிங்கு கற்கள் கொண்ட கல்லறை
- ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டியதாஜ்மஹால், செங்கோட்டை.
- ஷாஜஹானால் கட்டப்பட்ட திவானி ஆம், திவானி காஸ், மோதி மஹால் போன்ற பிரம்மிப்பூட்டும் கட்டிடங்கள்.
- ஜஹாங்கீர் உருவாக்கியஷாலிமர் தோட்டங்கள்
- ஜான்பூரில் கோமதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம், மேற்கு யமுனைக் கால்வாய் போன்றவை முகலாயக் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த சான்றுகளாகும்.
- இவை முகலாயக் கட்டடக்கலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவில் கட்டுமானங்களின் மீதும் செல்வாக்கு செலுத்தியது.
கூடுதல் வினாக்கள்
Question 1.
பாபர் இந்தியாவில் எவ்வாறு முகலாயப் பேரரசை நிலை நிறுத்தினார்?
Answer:
முதலாம் பானிபட் போர் வாயிலாக டெல்லியைக் கைப்பற்றிய பாபர், கான்வாப்போர், சந்தேரிப் போர் மற்றும் காக்ரா நதிப்போர் வாயிலாக டெல்லியில் முகலாயப் பேரரசை நிலைநிறுத்தினார்.
முகலாயப் பேரரசை இந்தியாவில் நிலைநிறுத்த நடைபெற்ற போர்கள் :
1. முதலாம் பானிபட் போர் (1526 ஏப்ரல் 21) : டெல்லி மன்னரான இப்ராஹிம் லோடிக்கும் பாபருக்கும் இடையே பானிபட் என்னுமிடத்தில் 1526 ஏப்ரலில் நடைபெற்றது. பாபர் தனது சிறிய பீரங்கி படையால் பெரிய இப்ராஹிம் படையை தோற்கடித்தார். டெல்லியைக் கைப்பற்றினார்.
2. கான்வாப்போர் (1527) :
- மேவார் அரசர் ராணா சங்காவிற்கும் பாபருக்கும் இடையே 1527ல் கான்வா என்ற இடத்தில் இப்போர் நடைபெற்றது.
- பாபர் வெற்றி கண்டார். குவாலியர், தோல்பூர் கோட்டைகள் பாபருக்கு கிடைத்தது.
3. சந்தேரிப்போர் (1528) :
- மாளவப் பகுதியை தன் பகுதியோடு இணைக்க மாளவ அரசர் மேதினிராய் மீது போர் தொடுத்தார்.
- இவரை எதிர்த்த மேதினிராயை சந்தேரி போரில் எளிதில் பாபர் தோற்கடித்தார்.
4. காக்ராநதிப்போர் (1529) :
- இப்ராஹிம் லோடியின் சகோதரரான முகமது லோடியும் அவரது மருமகன் நஸ்ரத்ஷாவும் பாபரை வீழ்த்த சதி செய்தனர்.
- இதை அறிந்து கொண்ட பாபர் காக்ரா நதிக்கரையில் நடைபெற்ற போரில் ஆப்கானிய படைகளை வீழ்த்தினார்.
- இவ்வாறாக பாபர் போரின் மூலம் வெற்றிபெற்று கைப்பற்றிய பகுதிகளை இணைத்து முகலாயப் பேரரசை உருவாக்கினார்.
Question 2.
முகலாயர் காலத்து ஐரோப்பியக் குடியேற்றங்கள் பற்றி விவரி.
Answer:
1. போர்ச்சுக்கீசியர் :
- 1510ல் அல்புகர்க் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றி அதை கீழ்த்திசை போர்த்துகீசிய பேரரசின் தலைநகராக்கினார்.
- மேற்கு கடற்கரையில் டாமன், சால்செட், பம்பாய், கிழக்கு கடற்கரையில் சாந்தோம், வங்காளத்தில் ஹூக்ளி ஆகிய இடங்களில் போர்ச்சுகீசியர் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.
2. டச்சுக்காரர் :
டச்சுக்காரர்கள் மசூலிப்பட்டணம், புலிகாட் (பழவேற்காடு, சூரத், பிமிலிப்பட்டணம், காரைக்கால், சின் சுரா, காசிம்பஜார், பாராநகர், பாட்னா, பாலசேகர், நாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் தங்களது வணிக நிலையங்ளை ஏற்படுத்தினார்.
3. டேனியர் :
டென்மார்க் நாட்டினரும் இந்தியாவில் வணிகக் குடியிருப்புகளை ஏற்படுத்தினர். தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் 1620ல் குடியேற்றத்தை நிறுவினர். வங்காளத்தில் செராம்பூர் அவர்களின் தலைமையிடமாக இருந்தது.
4. பிரெஞ்சுக்காரர் :
- சூரத், மசூலிப்பட்டினம் அப்போது சிறு கிராமமாக இருந்த புதுச்சேரி (1673) வங்காளத்தின் சந்தன நகர் அகியவை பிரெஞ்சுக்காரரின் தொடக்ககாலக் குடியேற்றங்களாகும்.
- பின்னர் மலபாரில் உள்ள மாஹி, சோழ மண்டலக் கடற்கரையில் ஏனாம் (1725) காரைக்கால் (1739) ஆகியவற்றைக் கைப்பற்றினார்.
5. ஆங்கிலேயர்:
- முதன் முதலில் ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தில் 1612ல் சூரத்தில் ஒருவணிகச் சாவடியை நிறுவியது.
- பின்னர் சென்னை (1639) – பம்பாய் (1668) கல்கத்தா (1690) ஆகியவற்றை பெற்றது.
- கம்பெனி பல வணிகக் குடியேற்றங்களை பெற்றிருந்தாலும் கல்கத்தா – வில்லியம் கோட்டையும், சென்னை – புனித ஜார்ஜ் கோட்டையும், பம்பாய் – மாளிகையும் ஆங்கிலேயரின் மிக முக்கியமான வணிகக் குடியேற்றங்களாகும்.