Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 16 ஐரோப்பியரின் வருகை Text Book Back Questions and Answers, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 16 ஐரோப்பியரின் வருகை
11th History Guide ஐரோப்பியரின் வருகை Text Book Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
இந்தியாவில் போர்த்துகீசியரின் அரசியல் தலைமையிடம் ……. ஆகும்.
அ) கோவா
ஆ) டையூ
இ) டாமன்
ஈ) சூரத்
Answer:
அ) கோவா
Question 2.
மேற்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நுழைவாயிலாக இருந்த துறைமுகம் …………………ஆகும்.
அ) டையூ
ஆ) கல்கத்தா
இ பம்பாய்
ஈ) சூரத்
Answer:
ஈ) சூரத்
Question 3.
ஆங்கிலேயர் 1639ஆம் ஆண்டு உள்ளூர் ஆட்சியாளரிடமிருந்து பெற்ற நிலத்தில் ………………………….. கோட்டையைக் கட்டினர்.
அ) புனித ஜார்ஜ் கோட்டை
ஆ) புனித வில்லியம் கோட்டை
இ) வேலூர் கோட்டை
ஈ) கோல்கொண்டா கோட்டை
Answer:
அ) புனித ஜார்ஜ் கோட்டை
Question 4.
வண்ண ம் பூசப்பட்ட ‘ கலம்காரி’ எனப்படும் துணிவகைகளுக்குப் பெயர் பெற்ற பகுதி…… ஆகும்.
அ) வடசர்க்கார்
ஆ) மலபார்
இ) கொங்கணம்
ஈ) சோழமண்டலம்
Answer:
ஈ) சோழமண்டலம்
Question 5.
நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர்……………
அ) பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா
ஆ) அல்போன்ஸோ டி அல்புகர்க்
இ) நீனோ டா குன்கா
ஈ) ஆன்டோனியோ டி நாரான்கா
Answer:
அ) பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா
Question 6.
………….. ” தமிழ் அச்சுப்பதிப்பின் தந்தை ” என்று அழைக்கப்படுகிறார்.
அ) இராபர்டோ டி நொபிலி
ஆ) அல்போன்சா டி அல்புகர்க்
இ. ஹென்ரிக்ஸ்
ஈ) பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
Answer:
இ. ஹென்ரிக்ஸ்
Question 7.
…………………… போர்த்துகீசியரின் கருப்பர் நகரமாகும்.
அ) மயிலாப்பூர்
ஆ) சாந்தோம்
இ) பரங்கிமலை
ஈ) பழவேற்காடு
Answer:
அ) மயிலாப்பூர்
Question 8.
அம்பாய்னா படுகொலைக்குக் காரணமானவர்கள்………..
அ) ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி
ஆ) டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
இ) போர்த்து கீசு கிழக்கிந்தியக் கம்பெனி
ஈ) பிரெஞ்சு கிழக்கு இந்தியக் கம்பெனி
Answer:
ஆ) டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
Question 9.
டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் சோழமண்டலப் பகுதியின் தலைமையிடம் ……… ஆகும்.
அ) காரைக்கால்
ஆ) புலிகாட்
இ) மசூலிப்பட்டினம்
ஈ) மதராஸ்
Answer:
இ) மசூலிப்பட்டினம்
Question 10.
பிரான்சிஸ் மார்ட்டின் என்பவர் ……………. ஐ பிரெஞ்சுக் குடியேற்றங்களின் கேந்திர மையமாக ஆக்கினார்.
அ) மசூலிப்பட்டினம்
ஆ) நாகப்பட்டினம்
இ) கோவா
ஈ) புதுச்சேரி
Answer:
ஈ) புதுச்சேரி
Question 11.
இரண்டாம் சார்லஸ்வரதட்சணையாகப் பெற்ற ……………. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
அ) மதராஸ்
ஆ) கல்கத்தா
இ) பம்பாய்
ஈ) தில்லி
Answer:
இ) பம்பாய்
Question 12.
முதலாம் கர்நாடகப் போரின்போது ……….. புதுச்சேரியின் ஆளுநராக இருந்தார்.
அ) பீட்டன்
ஆ) லா போர்டோனாய்ஸ்
இ) துய்ப்ளே
ஈ) மோர்ஸ்
Answer:
இ) துய்ப்ளே
Question 13.
ராபர்ட் கிளைவ் ……… இல் வெற்றிபெற்று வங்காளத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை வலிமை பெறச்செய்தார்.
அ) கர்நாடகப் போர்கள்
ஆ) ஏழாண்டுப் போர்
இ) பக்சார் போர்
ஈ) பிளாசிப் போர்
Answer:
இ) பக்சார் போர்
Question 14.
வந்தவாசிப் போர் ………………. க்கிடையே நடைபெற்றது.
அ) அயர்கூட் மற்றும் லாலி
ஆ) ராபர்ட் கிளைவ் மற்றும் லாலி
இ அயர்கூட் மற்றும் புஸ்ஸி
ஈ) ராபர்ட் கிளைவ் மற்றும் புஸ்ஸி
Answer:
அ) அயர்கூட் மற்றும் லாலி
Question 15.
ஏழாண்டுப் போர் ……………… யுடன் முடிவுக்கு
வந்தது.
அ) புதுச்சேரி உடன்படிக்கை
ஆ) அலகாபாத் உடன்படிக்கை
இ பாரிஸ் உடன்படிக்கை
ஈ) ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
Answer:
இ பாரிஸ் உடன்படிக்கை
II. அ. சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
1. முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும், பொருளாதார வளம் பற்றியும் ஐரோப்பியர் நன்கு அறிந்திருந்தனர்.
2. டச்சுக்காரர் ஆங்கிலேயரைத் தொடர்ந்து பம்பாய்க்கு வந்தனர்.
3. தஞ்சாவூர் முகலாயரால் ஆளப்படும் அரசாக இருந்தது.
4. பம்பாய் முக்கியமான வணிகமையமாக இருந்து, சூரத்திலிருந்தும் ஒரிசாவிலிருந்தும் வணிகர்களை ஈர்த்த து.
Answer:
1) முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும், பொருளாதார வளம் பற்றியும் ஐரோப்பியர் நன்கு அறிந்திருந்தனர்.
ஆ.கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றினைத் தேர்ந்தெடு
1. இந்திய அரசர்கள் அயல்நாட்டவரிடம் கொண்டிருந்த ஈர்ப்பினை ஐரோப்பியர் சாதகமாக்கிக் கொண்டனர்.
2. நறுமணத்தீவுகளில் டச்சுக்காரர் வெற்றி பெற்றனர்.
3. கோல்பெர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டதற்கு காரணமாக இருந்தார்.
4. புதுச்சேரியில் இன்றளவும் பிரெஞ்சுத்தாக்கத்தைக் காணமுடிகிறது.
Answer:
1) இந்திய அரசர்கள் அயல்நாட்டவரிடம் கொண்டிருந்த ஈர்ப்பினை ஐரோப்பியர் சாதகமாக்கிக் கொண்டனர்.
III. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
அ. (i)பிளாசிப் போர் வணிக நிறுவனமாக இருந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை, வங்காளத்தின் மீது இறையாண்மை கொண்ட அரசியல் சக்தியாக மாற்றியது.
(ii) பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த இங்கிலாந்து வந்தவாசிப் போருக்குப்பின், வணிக நிறுவனத்தை ஆளுகின்ற சக்தியாக எழுச்சி பெற்றது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) இரண்டும் சரி,
ஈ) இரண்டும் தவறு
Answer:
அ) (i) சரி
ஆ. (i) அல்புகர்க் இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசை உண்மையில் நிறுவியவர் ஆவார்.
(ii) உடன்கட்டை ஏறும் வழக்கத்தை நிறுத்த அல்புகர்க் முயன்றார்.
அ) (i) சரி
ஆ) (ii) தவறு
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி
இ. கூற்று : பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இந்தியாவிற்கு வருகை தந்தனர்.
காரணம் : அவர்களது உண்மையான நோக்கம் ஐரோப்பியச் சந்தைக்குத் தேவையான மிளகு, இலவங்கம், கிராம்பு ஏனைய நறுமணப் பொருட்களை கொள்முதல் செய்வதாகும்.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று சரி; காரணம் தவறு
இ) கூற்று தவறு; காரணம் சரி
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Answer:
இ) கூற்றுதவறு; காரணம் சரி
ஈ. கூற்று : இந்தியா பொருள் உற்பத்திக்கான வலுவான தளத்தையும், குறிப்பாகப் பருத்தியிழைத் துணிகளுக்காகவும் புகழ்பெற்றிருந்தது.
காரணம் : நாட்டின் முதல் முக்கியமான பொருளாதார நடவடிக்கை விவசாயம் ஆகும்.
அ) கூற்று மற்றும் காரணம் சரி
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
Answer:
இ) கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
IV. அ. கீழ்க்க ண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
அ) தரங்கம்பாடி – டேனியர்
ஆ) சர் தாமஸ் ரோ – பிரெஞ்சுக்காரர்
இ) அன்வாருதீன் – ஆற்காடு நவாப்
ஈ) அல்புகர்க் – போர்த்துக்கீசியர்
Answer:
ஆ) சர்தாமஸ் ரோ – பிரெஞ்சுக்காரர்
ஆ. பொருத்துக
i) சாமுத்ரி – 1.அச்சுப் பதிப்பு
ii) ஹென்ரிக்ஸ் – 2.ஹைதராபாத் நிஜாம்
iii) முசாபர் ஜங் – 3.சந்தா சாகிப்
iv) ஆற்காட்டு நவாப்- 4.கள்ளிக்கோட்டை அரசர்
அ) 4,1,2,3
ஆ) 4,3,2,1
இ) 3,2,1,4
ஈ) 2,1,4,3
Answer:
அ)4,1,2,3
I. கூடுதல் வினாக்கள்
Question 1.
இந்தியாவில் முதன் முதலாக வணிக மையத்தை அமைத்த ஐரோப்பியர் ……….
அ) ஆங்கிலேயர்
ஆ) பிரெஞ்சுக்காரர்
இ) டென்மார்க்
ஈ) போர்த்துக்கீசியர்
Answer:
ஆ) பிரெஞ்சுக்காரர்
Question 2.
“சராப்” எனப்படுபவர்……….
அ) பணம் பெறுவோர்
ஆ) பணம் மாற்றுவோர்
இ உள்ளூர் வணிகர்
ஈ) வெளியூர் வணிகர்
Answer:
ஆ) பணம் மாற்றுவோர்
Question 3.
……………… ஆங்கிலேயரின் கருப்பர் நகரமாகும்.
அ) மயிலாப்பூர்
ஆ) பழவேற்காடு
இ) ஜார்ஜ் டவுன்
ஈ) பரங்கிமலை
Answer:
இ) ஜார்ஜ் டவுன்
Question 4.
பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி தொடங்க காரணமானவர்……………….
அ) கால்பர்ட்
ஆ) வாஸ்கோட காமா
இ) டுப்ளே
ஈ) கவுண்டிலாலி
Answer:
அ) கால்பர்ட்
Question 5.
“பட்டாவியா” என்பது…… நாடகமாகும்.
அ) இலங்கை
ஆ) இந்தியா
இ) மலேசியா
ஈ) சிங்கப்பூர்
Answer:
அ) இலங்கை
Question 6.
வாஸ்கோட காமா முதலில் இந்தியாவில் வந்து இறங்கிய இடம் …..
அ) கண்ணனூர்
ஆ) கள்ளிக்கோட்டை
இ) கொச்சி
ஈ) மங்களூர்
Answer:
ஆ) கள்ளிக்கோட்டை
Question 7.
கல்கத்தாவில் புனித வில்லியம் கோட்டை கட்டப்பட்ட இடம் ………..
அ) காளிகட்டம்
ஆ) சுதநூதி
இ) கோவிந்பூர்
ஈ) பிளாசி
Answer:
ஆ) சுதநூதி
Question 8.
கல்கத்தாவில் புனித வில்லியம் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு ……..
அ) 1666
ஆ) 1676
இ) 1686
ஈ) 1696
Answer:
ஈ) 1696
Question 9.
சென்னை மாகாணமாக உருவான ஆண்டு ………………….
அ) 1684
ஆ) 1785
இ) 1784
ஈ) 1648
Answer:
அ) 1684
Question 10.
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ……………
அ) 1662
ஆ) 1663
இ) 1664
ஈ) 1674
Answer:
இ) 1664
Question 11.
புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு
அ) 1640
ஆ) 1641
இ) 1642
ஈ) 1643
Answer:
அ) 1640
Question 12.
கான்ஸ்டான்டி நோபிளை துருக்கியர்கள் கைப்பற்றிய ஆண்டு ………………..
அ) 1543
ஆ) 1453
இ) 1534
ஈ) 1463
Answer:
ஆ) 1453
Question 13.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உருவான ஆண்டு ……………
அ) 1664
ஆ) 1554
இ) 1600
ஈ) 1500
Answer:
இ) 1600
Question 14.
இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் தலைநகரம் …………………..
அ) பாண்டிச்சேரி
ஆ) காரைக்கால்
இ) ஏனாம்
ஈ) மாஹி
Answer:
அ) பாண்டிச்சேரி
Question 15.
புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் ………………..
அ) கல்கத்தா
ஆ) சென்னை
இ) மும்பை
ஈ) கொச்சி
Answer:
ஆ) சென்னை
Question 16.
டியூப்ளே பிரெஞ்சு கவர்னராக பொறுப்பேற்ற ஆண்டு ………………….
அ) 1642
ஆ) 1742
இ) 1724
ஈ) 1746
Answer:
ஆ) 1742
Question 17.
ஆங்கில இந்திய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வணிக மையம் அமைக்க அனுமதி கொடுத்த முகலாய மன்னர்…….
அ) பாபர்
ஆ) உமாயூன்
இ) அக்பர்
ஈ) ஜஹாங்கீர்
Answer:
ஈ) ஜஹாங்கீர்
Question 18.
மலாக்கா தீவை கைப்பற்றி பாரசீக வளைகுடாவில் ஆர்மசு துறைமுகத்தை அமைத்தவர் ………
அ) அல்மெய்டா
ஆ) அல்புகர்க்
இ) பிரான்சிஸ்டே
ஈ) வாஸ்கோட காமா
Answer:
ஆ) அல்புகர்க்
V. சுருக்கமான விடையளி
Question 1.
நாயக்க அரசுகள் யாவை? அவை நிறுவப்பட காரணம் என்ன?
Answer:
- 1. மதுரை, 2. தஞ்சாவூர், 3. செஞ்சி ஆகியவை விஜயநகர ஆட்சியின் போது தமிழகத்தில் நிறுவப்பட்ட நாயக்க அரசுகளாகும்.
- விஜயநகர மன்னர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணமும், ராணுவ வீரர்களை திரட்டிக் கொடுப்பதும் நாயக்க அரசுகளின் பணிகளாகும்.
Question 2.
ஆங்கிலேயர் மதராஸிஸ் தங்களது குடியேற்றத்தை எவ்வாறு நிறுவினர்?
Answer:
- தர்மலா வேங்கடாத்திரி நாயக்கர் என்பவரிடமிருந்து பெற்ற நிலத்தில் 1639ல் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினார்.
- சந்திர கிரியின் அரசர் கோட்டை கட்டிக் கொள்ள அனுமதி வழங்கினார்.
- 1684ல் ஒரு மாகாணமாக உருவானது. 1693ல் சென்னையை சுற்றியுள்ள மூன்று கிராமங்களை வாங்கினார்.
- 1702ல் மேலும் ஐந்து கிராமங்களை விலைக்கு வாங்கினார்.
Question 3.
கைவினைப் பொருள்கள் உற்பத்தி பற்றி ஒரு குறிப்பு வரைக.
Answer:
- கைவினைப் பொருளுற்பத்தி நகர்புற மற்றும் கிராமப்புறம் ஆகிய இரண்டிலும் நடைப்பெற்றது.
- உலோக வேலைகள் நகரத்திலும், நெசவுத் தொழில் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது.
- வேதியியல் பொருட்களை பயன்படுத்தி நிரந்தர வண்ணங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றிருந்தனர்.
- சோழ மண்டலம் கலம்காரி எனப்படும் வண்ணம் பூசப்பட்ட துணிவகைக்குப் பெயர்பெற்றது.
Question 4.
” சராப்” மற்றும் ” உண்டியல் ” பற்றி நீ அறிவன யாவை?
Answer:
- சராப் எனப்பட்டோர் நாணயங்களின் தூய்மை நிலையை பரிசோதித்து அவற்றின் மதிப்பை பணமாக மாற்றித்தந்தனர்.
- வணிகர்கள் பணத்தை ஓரிடம் விட்டு மற்றொரு இடத்திற்குப் பணத்தை ரொக்கமாக அனுப்புவதற்குப் பதிலாக பணமாற்ற முறிகளை வழங்கினார்.
- சராப்களால் இவ்வகை உண்டியல்கள் பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட தள்ளுபடியோடு பணமாக மாற்றிக்கொடுக்கப்பட்டது.
Question 5.
இந்தியாவின் முதல் போர்த்துக்கீசிய ஆளுநர் யார்? அவர் அறிமுகப்படுத்திய கொள்கையை விளக்குக.
Answer:
- இந்தியாவின் முதல் போர்த்துக்கீசிய ஆளுநர் பிரான்ஸிஸ்கோடி அல்மெய்டா ஆவார்.
- குடியிருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கடற்படையை வலுப்படுத்தும் “ நில நீர்க் கொள்கையை ‘ ‘ அவர் அறிமுகப்படுத்தினார்.
Question 6.
“கார்டஸ் (Cartaz) முறை” என்றால் என்ன?(மார்ச் 2019)
Answer:
- கடற்கொள்கையில் இருந்து வணிகர்களை பாதுகாப்பதாக போர்த்துக்கீசியர் கூறிக்கொண் டனர்.
- இதற்காக வணிகர்களை பாதுகாப்பதாக போர்த்துக்கீசியர் என்ற பெயரில் பணம் பறித்தனர்.
- கடற்கொள்ளை இடையூறுகளில் பலவற்றை செய்தவர்கள் போர்த்துக்கீசிய கடற்கொள்ளை யர்கள் ஆவார்கள்.
Question 7.
இந்தியாவில் டச்சுக்காரரின் காலனியாதிக்கக் கோட்டைகளையும் குடிற்ேறங்களின் பெயர்களையும் குறிப்பிடுக.
Answer:
- டச்சுக்காரர்களின் குடியேற்றங்கள் மசூலிப்பட்டினம், பழவேற்காடு.
- டச்சுக்காரர்களின் காலனியாதிக்க கோட்டைகள் நாகப்பட்டினம், நாகர்கோவில், புன்னைக்காயல் பரங்கிப்பேட்டை, கடலூர், தேவனாம்பட்டினம்.
Question 8.
“வணிக நிறுவனம் ” (factory) என்றால் என்ன? 16ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் யாவை?
Answer:
- நிறுவனம் என்பது அயல் நாடுகளிலுள்ள தங்கள் முதலாளிகளுக்காக வணிக முகவர்கள் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடமாகும்.
- 16ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஐரோப்பிய நிறுவனங்கள்
- பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி
- டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
- டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனி
- ஆங்கிலேயக் கிழக்கிந்தியக்கம்பெனி
Question 9.
முதலாம் கர்நாடகப் போருக்கான காரணங்கள் யாவை?
Answer:
- ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப்போர்.
- இந்தியாவில் பிரான்ஸ் மற்றும் ஆங்கிலேயரிடையே ஏற்பட்ட வணிகப் போட்டி
Question 10.
1765 இல் கையெழுத்தான உடன்படிக்கையின் பெயர் என்ன?அதன் கூறுகள் யாவை?
Answer:
- 765 ல் கையெழுத்தான உடன்படிக்கை அலகாபாத் உடன்படிக்கை ஆகும்.
- வணிகக் குழு வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் நிலவரி வசூலிக்கும் உரிமை பெற்றது.
- பர்த்தவான், மீட்னாபூர், சிட்டகாங், மாவட்டங்களோடு கல்கத்தாவின் மீதான இறையாண்மையையும் பெற்றனர்.
- ஆங்கிலேயர் வங்காளத்தின் ஆட்சியாளராக மாறினர்.
V. கூடுதல் வினாக்கள்
Question 1.
குறிப்பு வரைக: – அம்பாயினா படுகொலை.
Answer:
- ஐரோப்பியர்களிடையே எழுந்த ஆதிக்க போட்டியின் விளைவாக இந்தோனேஷியாவில் இப்படுகொலை நடந்தது.
- அம்பாய்னா என்னும் தீவில் 1623ல் ஆங்கிலேய கிழக்கிந்திய ஊழியர்கள், போர்ச்சுக்கீசியம், ஜப்பானியர் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவினரை டச்சுக்காரர்கள் படுகொலை செய்தனர்.
- எனவே இது அம்பாய்னா படுகொலை என அழைக்கப்படுகிறது.
Question 2.
இருட்டறைத் துயர சம்பவம் என்பது என்ன?
Answer:
- வங்காள நவாப் சிராஜ் – உத் – தௌலா 146 ஐரோப்பியர்களை சிறை பிடித்தார்.
- அனைவரையும் 18க்கு 15 அடி அளவுள்ள ஒரு இருட்டு அறையில் சிறைவைத்தார்.
- மறுநாள் பார்க்கும் பொழுது இவர்களில் 23 பேர் தவிர மீதம் உள்ள அனைவரும் இறந்து விட்டனர்.
- இந்நிகழ்ச்சியே இருட்டறைத் துயர சம்பவம் எனப்படுகிறது.
VI. குறுகிய விடை தருக.
Question 1.
1565 ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைக் கூறு?
Answer:
- 1565ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போருக்குப் பின் விஜயநகர பேரரசு வலிமை குன்றியது.
- நாயக்கர் தவிர பல்வேறு பகுதிகள் உள்ளூர் ஆட்சியாளர் வசம் இருந்தது. அவர்களில் இராமநாதபுரம் அரசின் சேதுபதி தன்னை சுதந்திர அரசராக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பினார்.
- நாயக்கர் தவிர பல்வேறு பகுதிகள் உள்ளூர் ஆட்சியாளர் வசம் இருந்தது. அவர்களில் இராமநாதபுரம் அரசின் சேதுபதி தன்னை சுதந்திர அரசராக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பினார்.
- இச்சூழ்நிலையில் தங்களுக்குள் மேலாதிக்கத்தை நிறுவ இவ்வரசுகள் 1590 முதல் மோதிக் கொண்டன.
- இச்சூழ்நிலையில் 1646 ல் கோல்கொண்டா படைகள் சோழ மண்டலத்திற்குட்பட்ட பழவேற்காட்டிற்கும் சாந்தோமுக்கும் இடைப்பட்ட பகுதிகளைகைப்பற்றிக்கொண்டன.
- டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் சில இடங்களை தங்களுக்கு சொந்தமாக பெற்று அவற்றின் மேல் தங்கள் உரிமையை நிறுவினர்.
Question 2.
வணிகர்கள் ஒரே வகையான குழு அல்ல என்பதை விளக்குக?
Answer:
பல்வேறு குழுவை சேர்ந்தவர்களாக வணிகர்கள் இருந்தன.
அ) கீழ்நிலையில் சிறிய சந்தைகளில் வியாபாரிகளும் சில்லறை வர்த்தகர்களும் இருந்தனர்.
ஆ) இடைநிலையில் தரகர்கள் இருந்தனர். நாட்டின் உட்பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்களை கொள்முதல் செய்தனர்.
இ) மேல்நிலையில் பெரும் வர்த்தகர்கள் இருந்தனர். இவர்கள் வணிக இளவரசர்கள் அல்லது முதலாளிகளாக இருந்தனர். சூரத்தில் பனியா பார்சி வணிகர்கள், அகமதாபாத்தின் நகர் சேத்துகள், வங்காள ஜெகத் சேத்துகள், சோழ மண்டலத்து நகரத்தார் ஆகியோரை எடுத்துக்காட்டாய் கூறலாம். இவர்கள் வணிகத்தை கட்டுப்படுத்தினர்.
Question 3.
கிழக்குக் கடற்கரையில் ஐரோப்பியர் தங்களது குடியேற்றங்களை நிறுவக் காரணம் என்ன?
Asnwer:
- நறுமணப் பொருட்கள் உற்பத்தி செய்யும் இந்தோனேசியா தீவுகளுடனான வணிகத்திற்கு தேவைப்படும் சில்லரைப் பொருட்களை கொள்முதல் செய்யத் தங்களுக்கு சோழ மண்டலக் கடற்கரையில் வணிகத்தளம் தேவை
- இந்திய துணிகள் செலாவணி ஊடாகமாயிற்று.
- சோழ மண்டலத்தை சேர்ந்த வண்ணம் பூசப்பட்ட துணிகளுக்கான தேவை ஐரோப்பியரை கிழக்கு கடற்கரையில் தங்கள் வணிக நிறுவனங்களை அமைத்து கொள்ளச் செய்தது.
- துணிகளை கொள்முதல் செய்து அவற்றை இலாபகரமான நறுமணப் பொருட்களாகப் பண்டமாற்று செய்து கொண்டனர்.
Question 4.
இந்தியத் துணிகளுக்கான தேவை ஐரோப்பாவில் அதிகரித்ததோடு அது இந்தியப் பொருளாதாரத்தின் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது?
Asnwer:
- ஐரோப்பாவில் இந்திய துணிகளுக்கான தேவை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
- தொடக்கத்தில் இத்தேவை அதிகரிப்பு உள்ளூர் பொருளாதாரத்திற்கு பயனளிப்பதாக அமைந்தது.
- உற்பத்தி காரணிகள் (தொழிலாளர், கச்சாப் பொருள் , மூலதனம்) நேர்மறையாக வினையாற்றின.
- ஜரோப்பாவில் தேவை தொடர்ந்து அதிகரித்தபோது உற்பத்திக்காக கொடுக்கப்பட்ட நெருக்கடி மிக விரைவாக உற்பத்தி ஆதாரங்களை பாதித்தது.
- தெற்கே அடிக்கடி ஏற்பட்ட பஞ்சங்களும், கச்சாப் பொருட்களுக்கும் உணவு தானியங்களுக்கும் ஏற்பட்ட பற்றாக்குறையையும் நெசவாளர்களும் கூடுதலாக ஏற்க வேண்டிய சுமைகளாயின.
- அதிகமான வணிக வாய்ப்புகள் குறுகிய காலத்திற்கு பயனளித்தாலும் நீண்டகால விளைவெண்பது அவ்வாறு இருக்கவில்லை.
- இந்த 150 வருட காலத்தில் வணிகராக இந்தியா வந்த ஆங்கிலேயர் வணிக பேரரசை நிறுவியவர்களாக மாறி இறுதியில் நாட்டின் பெரும் பகுதி ஆட்சியாளராக மாறி இந்திய கைத்தொழிலை அழித்து தற்சார்பு விவசாயத்தை பாதிக்க செய்து நாட்டின் செல்வ வளத்தை சுரண்டும் ஆட்சியாளராக மாறினர்.
Question 5.
பழவேற்காடு
Answer:
- சென்னையில் இருந்து 60கி.மீ தொலைவில் உள்ள பழவேற்காட்டை போர்த்துக்கீசியரிடமிருந்து டச்சுக்காரர்கள் கைப்பற்றினர்.
- டச்சுக்காரர்கள் அங்கு ஜெல்டிரியா என்னும் பாதுகாப்பு கோட்டையைக் கட்டினர்.
- டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை பீடமாக இருந்தது.
- இக்கோட்டை 400 ஆண்டுகள் கடந்தும் அதன்
- 1610ல் பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் குடியேற்றங்களை நிறுவினர்.
Question 6.
தரங்கம்பாடி.
Answer:
- 1620ல் வணிக இயக்குநர் ராபர்ட் கிராப்பி தஞ்சாவூர் அரசோடு செய்து கொண்ட ஒப்பந்தப்படி தரங்கம்பாடியில் டேனியர்கள் கோட்டை கட்டிக் கொள்ள உரிமையை பெற்றனர்.
- இரண்டாவது டேனிய கிழக்கிந்திய கம்பெனி 1696ல் தொடங்கப்பட்டதும் டென்மார்க்குக்கும் தரங்கம்பாடிக்கும் இடையிலான வணிகம் மீண்டும் நடைபெறத்துவங்கியது.
- தஞ்சாவூர் நாயக் அரசர் தரங்கம்பாடியை சுற்றியிருந்த மேலும் மூன்று கிராமங்களை பரிசாக அளித்தார்.
- சீர்கெடாமல் உள்ளது.
- லுத்தரன், மதபரப்பாளர்களான பார்த்தலோமியஸ் சீகன் பால்கு, ஹென்ரின் புலுட்சா ஆகிய இருவரும் இங்கு வந்து இந்துக்களை கிருஸ்துவர்களாக மாற்றினர். அச்சுகூடம் உருவாக்கிபைபிளை மொழிபெயர்த்தனர்.
Question 7.
ஆம்பூர் போர்.
Answer:
- ஹைதராபாத் நிஜாமிற்கு ஏற்பட்ட வாரிசுரிமை போட்டி ஆம்பூர் போருக்கு வழிவகுத்தது.
- ஹைதராபாத் உரிமை கோரிய முஜாபர்ஜங் கர்நாடகத்திற்கு உரிமை கோரிய சந்தாசாகிப் ஆகிய இருவரும் பிரெஞ்சு படை உதவியுடன் அன்வருதீனை தோற்கடித்தனர். போரில் அன்வருதீன் இறந்தார்.
- சந்தாசாகிப் ஆற்காடு நவாப் ஆனார்.
- அன்வருதீன் மகன் திருச்சிக்கு தப்பியோடினார்.
Question 8.
“ஆனந்தரங்கர் நாட்குறிப்பு”.
Answer:
- ஆனந்தரங்கள் பிள்ளை புதுச்சேரியின் தலைசிறந்த வணிகர்.
- ஆனந்தரங்கள் பிள்ளையை துப்ளே தலைமை தூபாஷியாகவும் (இரு மொழிகள் அறிந்தவர்) வணிகமுகவராகவும் நியமித்தார்.
- ஆனந்தரங்க பிள்ளையின் (1709 – 1761) நாட்குறிப்பு தமிழில் எழுதப்பட்ட ஏராளமான செய்திகளை உள்ளடக்கி உள்ளது.
- அவரின் நாட்டு குறிப்பு 1736 முதல் 1760 வரையிலான காலத்திற்க்கு (துய்ப்ளே ஆளுநராக இருந்த காலம்) முக்கியமான வரலாற்று சான்றாக உள்ளது.
- இந்நாட்டு குறிப்பு சமகால நிகழ்வுகள் குறித்து அவருடையப் பார்வை மற்றும் அவரது கருத்துக்களின் பதிவாகும்.
கூடுதல் வினாக்கள்
Question 1.
அல்புகர்க் குறிப்பு வரைக.
Answer:
- அல்மெய்டாவுக்குப் பின் போர்ச்சுக்கீசிய ஆளுநராக அல்புகர்க் பதவி ஏற்றார்.
- பீஜப்பூர் சுல்தானை தோற்கடித்து 1510ல் கோவாவைகைப்பற்றினார்.
- கோவாவை முக்கிய வாணிக மையமாகவும், தலைநகரமாகவும் மாற்றினர்.
- இந்தியப் பெண்களை ஐரோப்பியர்கள் திருமணம் செய்து கொண்டு போர்ச்சுக்கீசிய கட்டுப்பாட்டு பகுதியில் குடியேற அனுமதித்தார்.
- முஸ்லீம் வணிகர்களை வீழ்த்தி ஐரோப்பிய வணிகர்களின் மேலாதிக்கத்தை நிலை நாட்டினார்.
- இவர் இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தை உண்மையாக நிலை நாட்டியவர் என போற்றப்படுகிறார்.
- உடன்கட்டை ஏறும் பழக்கத்தை நிறுத்த அல்புகர்க் முயன்றார்.
Question 2.
குறிப்பு வரைக. ராபர்ட் கிளைவ்;
Answer:
- 1757 ம் ஆண்டு பிளாசிப் போரில் வங்காள நவாப் சிராஜ் உத் தௌலாவை வெற்றி கண்டு இந்தியாவில் ஆங்கில பேரரசிற்கு அடித்தளமிட்டவர்.
- 1764 ம் ஆண்டு பக்சார் போரில் வெற்றி பெற்று ஆங்கில ஆட்சியை இந்தியாவில் உறுதிப்படுத்தினார்.
- இவர் இங்கிலாந்து திரும்பிய போது தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்ற விசாரணையை எதிர்கொண்டார்.
- ராபர்ட் கிளைவ் தன் மீதான குற்றச்சாட்டிலிருந்து விடுதலை பெற்றாலும் இறுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
Question 3.
போர்ச்சுக்கீசியர்களின் ஆதிக்கம் இந்தியாவில் வீழ்ச்சி அடையக் காரணங்கள் யாவை?
Answer:
- அல்புகர்க்குப்பின் வந்த ஆளுநர்கள் திறமை அற்றவர்கள்.
- போர்ச்சுக்கீசியர்கள் இந்தியர்களை கிறித்துவ மதத்திற்கு கட்டாய மத மாற்றம் செய்தனர். இது இந்தியர்களை போர்ச்சுக்கீசியர் மீது வெறுப்புக் கொள்ளச்செய்தது.
- போர்ச்சுக்கீசியர்கள் விஜயநகர பேரரசுடன் மட்டுமே உறவு கொண்டிருந்தனர். விஜயநகர பேரரசு வீழ்ச்சியடைய துவங்கியதும் போர்ச்சுக்கீசிய அரசும் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது.
VII. விரிவான விடையளி
Question 1.
இந்தியாவில் போர்த்துக்கீசியரின் வருகையினால் ஏற்பட்ட தாக்கத்தை விவரி (மார்ச் 2019)
Answer:
- இந்திய அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஐரோப்பியர் இந்திய அரசர்களை வென்று அவர்களின் பகுதிகளைகைப்பற்றினர்.
- இந்திய அரசர்களிடையே இருந்த ஒற்றுமை இன்மையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டனர். ஐரோப்பியர்கள் போரில் வெடி மருந்துகள்,
- போர்ச்சுக்கீசியர்கள் அரேபிய முஸ்லீம்களை வாணிபத்தில் தோற்கடித்தனர். ஆனால் அது ஆங்கிலேயருக்கு உதவியது.
- ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் இடையிலான திருமணங்களை ஊக்குவித்ததன் மூலம் புதிய யுரேசிய இனக்குழு உருவானது.
- சென்னை சாந்தோம் போர்த்துக்கீசியரின் வருகைக்கான முக்கிய சான்றாக உள்ளது.
- போர்த்துக்கீசியரின் குடியேற்றங்களுக்குப் பிறகு சேசு சபையைச் சார்ந்த சமய பரப்பாளர்கள் வந்தனர்.
- இந்துக்கள் கிறித்தவர்களாக மதம் மாற்றப்பட்டார்கள்.
Question 2.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி மதராஸ், பம்பாய் , கல்கத்தா ஆகிய இடங்களில் வணிகம் செய்யும் உரிமையை எவ்வாறு நிலை நாட்டியது?
Answer:
மதராஸ் :
- 1639ல் சந்திர கிரியின் அரசர் சென்னையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தார்.
- அங்கு ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் – கோட்டையை கட்டினர்.
- இந்திய மண்ணில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழு முதன் முதலாக பெற்ற நிலப்பகுதி இது.
- குறுகிய காலத்திலேயே சோழ மண்டலக் கடற்கரையின் தலைமையிடமாக சென்னை மாறியது.
- 1648ல் சென்னை ஒரு மாகாணமாக உருவானது. 1688ல் சென்னை ஒரு மேயரையும் 10 உறுப்பினர்களையும் கொண்ட நகராட்சி அரசாக வளர்ந்தது.
பம்பாய் :
- இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸின் திருமணப்பரிசாக பெற்ற பம்பாய் தீவு 1668ல் ஆங்கில கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது.
- இதன் மூலம் பம்பாய் பிற்காலத்தில் சிறந்த வணிக மையமாகவும், மாகாணமாகவும் வளர்ச்சியுற்றது.
கல்கத்தா :
- நீண்ட கால போரட்டத்துக்குப் பிறகு 1608ல் உரிமைகளை பெற்றனர்.
- 1690ல் சுதநுதி என்ற இடத்தில் தனது முதல் குடியேற்றத்தை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி அமைத்தது.
- பிற்காலத்தில் இது கல்கத்தாவாயிற்று. இங்கு 1690ல் புனித வில்லியம் கோட்டையை கட்டினார்கள்.
- 1698ல் சுதநுதி, காளிகட்டா, கோவிந்தப்பூர் ஆகிய பகுதிகளின் வரிவசூல் உரிமையை பெற்றது.
- கல்கத்தாவில் கட்டப்பட்ட புனித வில்லியம் கோட்டை 1770 ல் இப்பகுதியின் தலைமையிடமாயிற்று.
- இவ்வாறு ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி வணிகம் செய்யும் உரிமையை நிலைநாட்டியது.
Question 3.
கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை?
Asnwer:
ஆங்கிலேயர் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்ட பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான மூன்று போர்களை நடத்தினார். இது கர்நாடகப் பகுதியில் நடைபெற்றதால் இது கர்நாடகப் போர்கள் எனப்படுகின்றன.
முதல் கர்நாடகப் போர்:
- ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இந்தியாவிலும் எதிரொலித்தது.
- ஐரோப்பாவில் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே ஏற்பட்ட போர்களால் இந்தியக் குடியேற்றத்திலும் போர்கள் ஏற்பட்டன.
- போர் வெடித்த போது புதுச்சேரியின் புதிய ஆளுநர் டூப்ளே சென்னை ஆளுநர் மோர் சிடம் ஐரோப்பாவில் போர் மூன்டாலும் இங்கு நடுநிலை காக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இரண்டாம் கர்நாடகப் போர்:
- இந்தியாவில் ஆற்காடு, ஹைதராபாத் அரசுகளின் வாரிசுரிமைப் போர்களில் தலையிடுவதன் மூலம் இந்தியாவில் பிரான்சின் செல்வாக்கை உயர்த்த டூப்ளே விரும்பினார்.
- ஹைதராபாத்தில் முசாபர் சங்கையும், ஆற்காட்டில் சந்தா சாகிப்பையும் ஆதரித்தார். இது இரண்டாம் கர்நாடகப் போருக்கு காரணமாயிற்று.
மூன்றாம் கர்நாடகப் போர்:
- ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழாண்டுப் போரின் விளைவாக இந்தியாவிலும் 3ம் கர்நாடகப் போர் ஏற்பட்டது.
- ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் வெடித்தவுடன் ராபர்ட் கிளைவ் வங்காளத்திலிருந்த பிரெஞ்சுக் குடியேற்றத்தை தாக்கினார். இது 3 வது கர்நாடகப் போருக்கு வித்திட்டது.
Question 4.
வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர் எவ்வாறு, எப்பொழுது மாறினர்.?
Answer:
- 1757ல் பிளாசி யுத்தத்தில் ராபர்ட் கிளைவ் வங்காள நவாப் சிராஜ் உத்தௌலாவை தோற்கடித்தார். வங்காள அரசை தனக்கு சாதகமாக மாற்ற முயற்சித்தார்.
- வங்காள நவாப் முகலாயப் பேரரசர்ஷாஆலமுடன் இணைந்து 1764ல் பக்சார் என்னுமிடத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர்.
- ஆங்கிலேயப்படைகள் வெற்றிபெற்றது.
- அலகாபாத் உடன்படிக்கையின்படி போர் முடிவடைந்தது.
- இதன்படி வணிகக்குழு வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் வரி வசூல் செய்யும் உரிமையையும்,
- வங்காளத்தில் பர்த்தவான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய மூன்று மாவட்டங்களின் மீது
- ஆங்கிலேயர் வங்காளப் பகுதியின் முழு ஆட்சியாளராக மாறினர்.
Question 5.
இந்தியாவில் துய்ப்ளேவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றிச் சுருங்கக் கூறுக.
Answer:
- ஜனவரி 1,1697 அன்று துய்ப்ளே ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார்.
- இவரது அறிவியல் நாட்டத்தை திருப்பி வணிகத்தில் ஈடுபடுத்த 1715ல் பிரெஞ்சு கிழக்கிந்திய கப்பல் ஒன்றில் அனுப்பிவைத்தார்.
- 1720ல் பாண்டிச்சேரியின் பிரெஞ்சு கவுன்சில் அவையில் உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.
- கல்கத்தா அருகில் உள்ள சந்திர நாகூரில் பிரெஞ்சு விவகாரங்களுக்கான மேலதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
- அவரது இறப்பான பணியால் 1742ல் இந்தியக் குடியேற்றங்களுக்கான தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிரெஞ்சு ஆட்சிப்பகுதியின் எல்லைகளை விரிவாக்குவதை தமது நோக்கமாகக் கொண்டு தமது நடை, உடை, பாவனைகளில் இந்தியப் பண்பாட்டைக் கடைப்பிடித்தார்.
- இந்தியக் குடிமக்களைக் கொண்டே ராணுவப் படையை உருவாக்கினார்.
- பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவன முன்னேற்றத்திற்காக சொந்த உடைமைகளை செலவிட்டு டூப்ளே வறுமையில் வாடினார்.
- பிரெஞ்சு அரசு அவருக்கு நிதி உதவி செய்ய மறுத்துவிட்டது.
- இறுதியில் வறுமை நிலையில் யாரும் அறியாத நிலையில் நவம்பர் 10,1763ல் உயிர் நீத்தார்.
கூடுதல் வினாக்கள்
Question 1.
வாஸ்கோடகாமா இந்தியாவில் போர்ச்சுக்கீசிய வாணிக மையத்தை ஏற்படுத்தியதை விவரி.
Answer:
- தனது முதல் பயணத்தில் வாஸ்கோடகாமா மூன்று கப்பல்களில் 170 நபர்களோடு வந்தார்.
- கள்ளிக் கோட்டை அரசர் (சாமரின்) சாமுத்ரியினுடைய நட்புறவு வாஸ்கோட காமாவிற்கு மகிழ்ச்சி அளித்தது.
- 1498 ஆகஸ்ட் 29 ம் நாள் தன்னுடன் வந்தவர்களில் 55 மாலுமிகளுடனும் இரண்டு கப்பல்களில் இந்தியச் சரக்குகளுடனும் ஊர் திரும்பினார்.
- வாஸ்கோட காமாவின் வெற்றி போர்ச்சுக்களை 1200 மாலுமிகளை 13 கப்பல்களுடன் பெட்ரோ ஆல்வரிஸ் கேப்ரல் என்பவரின் தலைமையில் மீண்டும் அனுப்பிவைக்க தூண்டியது.
- 1502 அக்டோபர் 29 ம் நாள் 20 கப்பல்களுடன் மீண்டும் வாஸ்கோட காமா கள்ளிக்கோட்டை வந்தார்.
- அங்கிருந்து அதிக வசதிகளை கொண்டு கொச்சிக்கு சென்றார்.
- ஐரோப்பாவில் வணிகம் பெருக வேண்டுமெனில் வணிகத்தின் மீது அராபியர்கள் கொண்டிருந்த முற்றுரிமையை உடைக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்தார்.
- கொச்சி மற்றும் கள்ளிக்கோட்டையின் இந்து மன்னர்களிடையே நிலவிய பகைமையை நன்கு பயன்படுத்திக்கொண்டார்.
- இந்தியப் பெருங்கடல், செங்கடல் வணிகத்தில் அராபியர் கொண்டிருந்த முற்றுரிமையை ஒழித்தார்.
- போர்ச்சுக்கல்லுக்கு திரும்பும் முன்னர் கொச்சியில் ஒரு சரக்கு கிடங்கையும் கண்ணூரில் ஒரு சிறைச் சாலையையும் நிறுவினார்.
- வாஸ்கோட காமா மேற்கண்டவாறு இந்தியாவில் போர்ச்சுக்கீசிய வாணிக மையங்களையும் போர்ச்சுக்கீசிய ஆட்சி நடப்பதற்குமான அடித்தளம் இட்டார் என்றால் அது மிகையாகாது.
Question 2.
பரதவ குல மக்கள் எவ்வாறு கிறித்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதை விவரி.
Answer:
- மீன்பிடிக்கும் உரிமை, படகோட்டும் உரிமை முத்துக்குளித்தல் ஆகியவை தொடர்பாக போர்த்துக்கீசியருக்கும் கீழைக் கடற்கரையைச் சார்ந்த முஸ்லீம்களுக்கிடையே 1530களில் மோதல்கள் நடந்தன.
- இதை பொருத்தமட்டில், பரதவ மக்களின் ஒரு குழுவானது, ஆயுதம் பூண்ட முஸ்லீம் வணிகர்களின் தாக்குதல்களால் தாங்கள் பட்ட துயரங்களை கொச்சியிலிருந்த போர்ச்சுக்கீசிய அதிகாரிகளிடம் முறையிட்டு உதவி கேட்டனர்.
- இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட போர்ச்சுக்கீசியர் தங்களது ரோமன் கத்தோலிக்க குருமார்களை கீழைக் கடற்கரைக்கு அனுப்பினர். ஆயிரக்கணக்கான பரதவ குல மக்கள் இக்குருமார்களால் கத்தோலிக்க கிறித்தவ மதத்திற்கு மாறினர்.
- இதனைத் தொடர்ந்து சேசு சபையை உருவாக்கியவர்களில் ஒருவரான புனித பிரான்சிஸ் சேவியர் 1542ல் கோவா வந்தார்.
- பின்னர் மதம் மாறியவர்களுக்கு திருமுழுக்கு நடத்துவதற்காகத் தூத்துக்குடி, புன்னைக்காயல் வரை பயணம் செய்தார்.
- சோழ மண்டல கடற்கரைக் கிராமங்களில் உயர் கோபுரங்களோடு உருவான தேவாலயங்களை இன்றும் காணலாம்.