Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் Text Book Back Questions and Answers, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்
11th History Guide ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் Text Book Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
…………… இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் உண்மையில் நிறுவப்படக் காரணமான போராகும்.
அ) பிளாசிப் போர்
ஆ) முதலாம் கர்நாடகப் போர்
இ) பக்சார் போர்
ஈ) வந்தவாசிப் போர்
Answer:
இ) பக்சார் போர்
Question 2.
………… உடன்படிக்கையினால் இரண்டாம் ஷா ஆலம் வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸாவின் திவானி உரிமையை ஆங்கிலேயருக்கு வழங்க நேரிட்டது.
அ) அலகாபாத்
ஆ) மதராஸ்
இ) பூனா
ஈ) புதுச்சேரி
Answer:
அ) அலகாபாத்
Question 3.
………… வங்காளத்தில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தினார்.
அ) வாரன்ஹேஸ்டிங்ஸ்
ஆ) டியூப்ளே
இ காரன்வாலிஸ்
ஈ) ராபர்ட் கிளைவ்
Answer:
ஈ) ராபர்ட் கிளைவ்
Question 4.
………….. சட்டம் இந்தியாவில் ஆங்கிலேய வணிகக் குழு ஆட்சியை முறைப்படுத்தியது.
அ) ஒழுங்கு முறைச்சட்டம் (1773)
ஆ) பிட் இந்தியச் சட்டம் (1784)
இ) பட்டயச் சட்டம் (1813)
ஈ) பட்டயச் சட்டம் (1833)
Answer:
அ) ஒழுங்கு முறைச்சட்டம் (1773)
Question 5.
இந்தியாவில் முதல் ஆங்கிலேய அரசப் பிரதிநிதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்.
அ) காரன்வாலிஸ்
ஆ) கானிங்
இ வெல்லெஸ்லி
ஈ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
Answer:
ஆ) கானிங்
Question 6.
………… ஜமீன்தார்களோடு காரன்வாலிஸ் நிலையான நிலைவரித் திட்டத்தை மேற்கொண்டார்.
அ) மைசூர்
ஆ) பம்பாய்
இ வங்காளம்
ஈ) சென்னை
Answer:
இ வங்காளம்
Question 7.
இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர்……………
அ) காரன்வாலிஸ்
இ) ராபர்ட் கிளைவ்
ஆ) தாமஸ் மன்றோ
ஈ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
Answer:
இ) ராபர்ட் கிளைவ்
Question 8.
தக்கர்களை அடக்கிய ஆங்கிலேய அதிகாரி……………
அ) வில்லியம் ஆதம்
ஆ) வில்லியம் ஸ்லீமேன்
இ ஜேம்ஸ் ஹாலந்து
ஈ) ஜான் நிக்கல்சன்
Answer:
ஆ) வில்லியம் ஸ்லீமேன்
Question 9.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின்படி ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்ட முதல் மாகாணம்……………….
அ) நாக்பூர்
ஆ அவத்
இ ஜான்சி
ஈ) சதாரா
Answer:
ஈ) சதாரா
Question 10.
நிர்பந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக வரி வசூலிப்பதை ………….. நியாயப்படுத்தியது.
அ) இரயத்துவாரி சட்டம்
ஆ) பிட் இந்தியச் சட்டம்
இ) நிலையான நிலவரித் திட்டம்
ஈ) சித்திரவதைச் சட்டம்
Answer:
அ) இரயத்துவாரி சட்டம்
Question 11.
…………. இந்தியாவில் ஆங்கில மொழியை அலுவல் மொழியாகவும், பயிற்று மொழியாகவும் அறிமுகப்படுத்தினார்.
அ) காரன்வாலிஸ்
ஆ) வில்லியம் பெண்டிங்
இ தாமஸ் மெக்காலே
ஈ) தாமஸ் மன்றோ
Answer:
இ தாமஸ் மெக்காலே
Question 12.
சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு ……………………
அ) 1837
ஆ) 1861
இ) 1844
ஈ) 1857
Answer:
ஈ) 1857
Question 13.
……… என்பவரின் முயற்சியால் இந்தியாவில் சதி எனும் உடன்கட்டை ஏறும் முறை ஒழிக்கப்பட்டது.
அ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஆ) வில்லியம் ஜோன்ஸ்
இ) ராஜாராம் மோகன் ராய்
ஈ) தயானந்த சரஸ்வதி
Answer:
இ) ராஜாராம் மோகன் ராய்
Question 14.
தென் இந்தியாவில் முதல் இருப்புப் பாதை போக்குவரத்து 1856ல் சென்னையிலிருந்து …………….. வரை இயக்கப்பட்டது.
அ) வாணியம் பாடி
ஆ) காட்பாடி
இ) விழுப்புரம்
ஈ) அரக்கோணம்
Answer:
ஈ) அரக்கோணம்
Question 15.
1869ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதன் விளைவாக இந்தியா ஐரோப்பாவிற்கிடையே பயண தூரம் …………… மைல்க ளாகக் குறைக்கப்பட்டது.
அ) 400
ஆ) 3000
இ) 4000
ஈ) 8000
Answer:
இ) 4000
II. அ.சரியான கூற்றினைத் தேர்ந்தெடு (மார்ச் 2019)
1. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநர் அதன் இயக்குநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2. துணைப்படைத் திட்டத்தால் கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவ வளங்களும் செயல்திறனும் குறைந்தன.
3. வெல்லெஸ்லி பிரபுவால் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் மதரசா (இஸ்லாமிய கல்வி நிறுவனம்) தொடங்கப்பட்டது.
4. டல்ஹௌசி பிரபு மார்ச் 1835 இல் கல்கத்தா மருத்துவக் கல்லூரியை நிறுவினார்.
Answer:
1. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநர் அதன் இயக்குநர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆ.கீழ்க்கண்டவற்றில் சரியான விடையைத் தேர்ந்தெடு
கூற்று (கூ) : ஆங்கிலேய அரசு அணைகளைக் கட்டுவதற்கான பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டது.
காரணம் (கா) : 19ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியாகக் கடைசி கால் நூற்றாண்டில்
அதிகமான பஞ்சங்கள் நிலவின.
அ) கூற்று சரி; காரணம் தவறு
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ) கூற்று தவறு; காரணம் சரி
Answer:
ஈ) கூற்றுதவறு; காரணம் சரி
III. அ. கீழ்க்க ண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
அ) 1.கங்காதர ராவ் – ஜான்சி
ஆ) 2. ரகுஜி போன்ஸ்லே – நாக்பூர்
இ) 3. ஷாஜி – சதாரா
ஈ) 4. சிந்தியா – கோலாப்பூர்
Answer:
ஈ) சிந்தியா – கோலாப்பூர்
ஆ. பொருத்துக
i) ஆர்தர் காட்டன் – 1. சமஸ்கிருத கல்லூரி
ii) வில்லியம் ஸ்லீமேன் – 2. கொள்ளிடம்
iii) வில்லியம் பெண்டிங் – 3.தக்கர்களை அடக்குதல்
iv) காரன்வாலிஸ் – 4.சதி ஒழிப்புச் சட்டம்
அ) 4, 1, 2, 3
ஆ) 2, 3, 4, 1
இ 3, 2, 1, 4
ஈ).2, 1, 4, 3
Answer:
ஆ) 2,3,4,1
I. கூடுதல் வினாக்கள்
Question 1.
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு …………….
அ) 1757
ஆ) 1764
இ) 1858
ஈ) 1864
Answer:
அ) 1757
Question 2.
நிலையான நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் …………
அ) தாமஸ் மன்றோ
ஆ) வெல்லெஸ்லி பிரபு
இ) வில்லியம் பெண்டிங்
ஈ) காரன்வாலிஸ் பிரபு
Answer:
ஈ) காரன்வாலிஸ் பிரபு
Question 3.
துணைப்படைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ……………….
அ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஆ) வெல்லெஸ்லி பிரபு
இ) டல்ஹௌசி
ஈ) சர் ஜான் ஷோர்
Answer:
ஆ) வெல்லெஸ்லி பிரபு
Question 4.
செல்வச் சுரண்டல் கோட்பாட்டைக் கூறியவர் …
அ) W.C. பானர்ஜி
ஆ) S.N. பானர்ஜி
இ) தாதாபாய் நௌரோஜி
ஈ) ராஜாராம் மோகன்ராய்
Answer:
இ) தாதாபாய் நௌரோஜி
Question 5.
இந்திய அரசின் பொறுப்பை இங்கிலாந்து அரசு நேரடியாக எடுத்துக்கொள்ள வகை செய்த விக்டோரியா மகாராணியாரின் பிரகடனம் செய்த ஆண்டு ………………..
அ) 1857
ஆ) 1858
இ) 1847
ஈ) 1848
Answer:
ஆ) 1858
Question 6.
பிட் இந்தியச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு…………….
அ) 1814
ஆ) 1764
இ) 1784
ஈ) 1774
Answer:
இ) 1784
Question 7.
மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் ………………….
அ) வெல்லெஸ்லி
ஆ) லிட்டன்
இ) வில்லியம் பெண்டிங் பிரபு
ஈ) டல்ஹௌசி பிரபு
Answer:
இ) வில்லியம் பெண்டிங் பிரபு
Question 8.
வாரிசு இழப்புக் கொள்கையை அமுல்படுத்தியவர்
அ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஆ) காரன்வாலிஸ்
இ) டல்ஹௌசி
ஈ) ஹேஸ்டிங்ஸ்
Answer:
இ) டல்ஹௌசி
Question 9.
1812ல் சென்னையில் தூய ஜார்ஜ் கோட்டை கல்லூரியை உருவாக்கியவர்
அ) எல்லீ ஸ்
ஆ) காரன்வாலீஸ்
இ) லிட்டன்
ஈ) ஹேஸ்டிங்ஸ்
Answer:
அ) எல்லீ ஸ்
Question 10.
……………. ஆம் ஆண்டு வங்காள வாராந்திர இதழ் சமாச்சார்தர்பான் துவக்கப்பட்டது
அ) 1881
ஆ) 1818
இ) 1816
ஈ) 1814 பா
Answer:
ஆ) 1818
பொருத்துக
Question 11.
அ) சார்லஸ் உட் அறிக்கை -1. 1793
ஆ) வனச்சட்டம் -2. 1806
இ) நிலையான நிலவரித்திட்டம் – 3. 1829
ஈ) கிழக்கிந்தியக் கல்லூரி – 4. 1854
உ) சதி ஒழிப்பு -5. 1865
Answer:
அ – 4, ஆ – 5, இ -1, ஈ-2, உ – 3
எது சரியாக பொருந்தவில்லை
Question 12.
அ) நிலையான நிலவரித்திட்டம் – காரன்வாலிஸ்
ஆ) துணைப்படைத்திட்டம் – வெல்லெஸ்லி
இ மகல்வாரி -வில்லியம் பெண்டிங்
ஈ) ஒழுங்குபடுத்தும் சட்டம் – தாமஸ் மன்றோ
Answer:
ஈ) ஒழுங்குபடுத்தும் சட்டம்-தாமஸ் மன்றோ
Question 13.
” ரைய்யா” என்ற அரபு வார்த்தையின் திரிபே……………..
அ) வாரி
ஆ) மகல்
இ) ராயத்
ஈ) வரி
Answer:
இ) ராயத்
சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
Question 14.
அ) 1813 ஆம் அண்டு பதவி ஏற்ற ஹேஸ்டிங்ஸ் முகலாய முத்திரையை (மொய்ரா) பரிவர்த்தனைகளில் ஏற்றார்.
ஆ) டல்ஹௌசியின் வாரிசு இழப்புக் கொள்கை பிரிட்டிஷாரின் நேரடி கட்டுப்பாட்டிற்குள்ள பகுதியை விரிவாக்கியது.
இ) டல்ஹௌசி பிரபு ஆட்சியில் இரட்டை ஆட்சிமுறை தோன்றியது.
ஈ) 1764ல் பிளாசிப்போர் நடைபெற்றது.
Answer:
ஆ) டல்ஹௌசியின் வாரிசு இழப்புக் கொள்கை பிரிட்டிஷாரின் நேரடி கட்டுப்பாட்டிற்குள்ள பகுதியை விரிவாக்கியது.
Question 15.
வங்காளத்தின் ஆளுநராக வாரன்ஹேஸ்டிங்ஸ் நியமிக்கப்பட்ட ஆண்டு
அ) 1772
ஆ) 1773
இ) 1774
ஈ) 1775
Answer:
ஆ) 1773
Question 16.
‘ரயத்’ என்ற சொல்லுக்கு ……… என்று பொருள்
அ) உழவர்
ஆ) நாயக்கர்
இ) வரி
ஈ) ஜமீன்தார்
Answer:
அ) உழவர்
Question 17.
பட்டயச் சட்டங்கள் ………… ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டது
அ) 10
ஆ) 15
இ 20
ஈ) 25
Answer:
இ) 20
Question 18.
” வறுமையும் இந்தியாவில் ஆங்கிலேய முரண் ஆட்சியும்” என்ற நூலின் ஆசிரியர்
அ) வ.உ. சிதம்பரம்
ஆ) தாதாபாய் நௌரோஜி
இ கோபால கிருஷ்ண கோகலே
ஈ) திலகர்
Answer:
ஆ)தாதாபாய் நௌரோஜி
Question 19.
இந்தியாவில் தந்தி போக்குவரத்து
துவங்கப்பட்ட ஆண்டு …..
அ) 1851
ஆ) 1852
இ) 1853
ஈ) 1854
Answer:
ஈ) 1854
Question 20.
இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் இருப்புபாதை (1853)
அ) பம்பாய் – தானே
ஆ) பம்பாய் – பம்பாய்
இ) பம்பாய் – சூரத்
ஈ) சென்னை – அரக்கோணம்
Answer:
அ) பம்பாய் – தானே
IV. சுருக்கமான விடையளி
Question 1.
1773 ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டத்தை விவரி.
Answer:
- வங்காளத்தின் ஆளுநராக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலானார் (தலைமை ஆளுநரானார்)
- கவர்னர் ஜெனரல் இயக்குநர் குழு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்
- வணிக குழுவின் வரவு செலவு கணக்கு பிரிட்டிஷ் கருவூலத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
- ஆளுநர், தலைமை தளபதி மற்றும் இரு ஆலோசகர்களைக் கொண்ட குழு வருவாய் வாரியமாக செயல்பட்டது.
Question 2.
ஆளுநர் தாமஸ் மன்றோ பற்றிச் சிறு குறிப்பு வரைக?
Asnwer:
- 1820 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றார்.
- 1822ம் ஆண்டு சென்னையில் இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தினார்
- ஆளுநராக இருந்த போது கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்
Question 3.
மாகாணம் மற்றும் மாநிலம் – வேறுபடுத்துக.
Answer:
- கிழக்கிந்திய கம்பெனியாரின் தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் அமையப்பெற்ற இடம் மாகாணம் ஆகும்.
- அவ்வகையில் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகியவை மாகாணங்கள் ஆகும்
- பின்னர் இம்மாகாணங்களை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதால் மத்திய மாநிலம், ஒருங்கிணைந்த மாநிலம் போன்ற பிராந்தியங்கள் உருவாக்கப்பட்டன.
Question 4.
இந்தியக் குடிமைப் பணிக்கு காரன்வாலிசின் பங்களிப்பினைப் பற்றிக் கூறுக?
Answer:
- காரான்வாலிஸின் தலையாய பங்களிப்பு குடிமைப் பணிகளின் சீர்திருத்தமே ஆகும்.
- அவர் திறமை வாய்ந்தவர்களையும் நேர்மையானவர்களையும் பணியமர்த்த வழிவகை செய்தார்.
- கம்பெனி அதிகாரிகளுக்கு குறைந்த சம்பளம் வழங்கிவிட்டு அவர்களை தனியாக வியாபாரம் செய்ய அனுமதித்த பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்
- கல்கத்தாவில் 1800ல் ஒரு கல்லூரி வணிக்குழுவின் குடிமைப் பணியாளர்களுக்காக துவங்கப்பட்டது.
Question 5.
ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நீர்ப்பாசன முறையின் வளர்ச்சி குறித்து எழுதுக?
Answer:
- பாசனவதி ஏற்படுத்திக் கொடுப்பதை பிரிட்டிஷ் அரசு புறக்கணித்தது.
- ஆர்தர் காட்டன் என்ற பொறியியல் அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் சிற்சில பாசன வேலைகள் நடந்தேறின.
- கொள்ளிடத்தின் குறுக்கே 1836 இல் அணையைக் கட்டினார்
- பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா செல்வதற்கு முன்பாக பாசன வசதி மேம்பாட்டில் நடைபெற்ற பணிகள் கீழ்வருமாறு
- அ) வட இந்தியாவில் 1830ல்யமுனா கால்வாய்
- ஆ) 1857ல் கங்கைக் கால்வாயை 450 மைல்கள் வரை நீட்டித்த பணி
- இ) 1856ல் பஞ்சாப் பகுதியில் அமைந்த பாரி இடைத்துறைக் கால்வாய் தோண்டும் பணி
Question 6.
டாக்காவின் மஸ்லின் துணி பற்றி ஓர் சிறு குறிப்பு வரைக?
Answer:
- வங்காளத்தில் முன்பு விளைந்த ஒரு வகை பட்டு போன்ற பருத்தியிலிருந்து மெல்லிய துணி நெய்வாளர்கள் இது டாக்கா மஸ்லின் என்றழைக்கப்பட்டது.
- ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய நெசவுக்கு ஆதரவளிக்காததால் அதை பார்ப்பதே அரிதாகிவிட்டது
- இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்ட நகரம் வறுமை சூழ்ந்து நெசவாளர்கள் பசியால் செத்து மடிந்தார்கள்.
Question 7.
“செல்வவளங்கள் நாட்டை விட்டு வெளியேறியது இந்தியாவை ஏழ்மையாக்கியது – எவ்வாறு?
Answer:
- இந்தியாவிலிருந்து பெருந்தொகை உள்நாட்டின் செலவுக் கட்டணம் என்ற வகையில் இங்கிலாந்து போய் சேர்ந்தது.
- கம்பெனியின் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட இலாபம், ஐரோப்பிய அதிகாரிகள், ஐரோப்பிய வியாபாரிகள், தோட்ட முதலாளிகள், இராணுவம், குடிமை பணி அலுவலர்கள் போன்றோரின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை.
- ஆர்.சி. தத் என்பவரின் மதிப்பீட்டின்படி மகாராணி விக்டோரியாவின் ஆட்சிக்காலத்தின் கடைசி 10 ஆண்டுகளில் (1891 – 1901) மொத்த வருவாயான 647 பவுண்டுகளில், 159 மில்லியன் பவுண்டுகள் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டிருந்தது என தெரியவருகிறது.
- இது மொத்த வருவாயில் 24 சதவீதம் என்று சொல்லப்படுகிறது.
- இவ்வாறு செல்வ வளங்கள் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவை ஏழ்மையாக்கியது.
V. கூடுதல் வினாக்கள் – சுருக்கமான விடையளி
Question 1.
மகல்வாரி முறை பற்றி சிறு குறிப்பு தருக.
Answer:
- வில்லியம் பெண்டிங் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்டது மகல்வாரி முறை (1833)
- நில வருவாய்க்கான ஒப்பந்தம் நிலத்தின் உரிமையாளரோடு மேற்கொள்ளப்பட்டது.
- ஆனால் நிலவரியானது பயிர் சாகுபடி செய்பவரிடமிருந்தே வசூலிக்கப்பட்டது.
Question 2.
சதி ஒழிப்பிற்கு பெண்டிங் பிரபு செய்த பணிகள் யாது?
Answer:
- கணவனை இழந்த மனைவியை சிதையோடு சேர்த்து எரிப்பதே சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கமாகும்.
- வில்லியம் பெண்டிங் பிரபுவிற்கு முன் ஆட்சி தலையிடவில்லை .
- ஆனால் பெண்டிங் பிரபு தயக்கமின்றி 1829 ஆம் ஆண்டு சதி ஒழிப்புச்சட்டம் இயற்றி இக்கொடூர முறைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.
- இராஜாராம் மோகன்ராயின் பிரச்சாரங்களும் முயற்சியும் இந்த மனிதத் தன்மையற்ற முறை ஒழிய முக்கிய காரணமாயிருந்தன.
V. குறுகிய விடையளி.
Question 1.
இரட்டை ஆட்சி முறை மார்ச் 2019
Answer:
- பிளாசிப்போருக்கு பின் வணிகக்குழு முழு அதிகாரத்தை தன்வசம் வைத்துக் கொண்டு நிர்வாகச் சுமையை மட்டும் நவாபிடம் விட்டு வைத்த இத்தகைய நிர்வாக முறையே இரட்டை ஆட்சி முறை எனப்பட்டது.
- இம்முறையின் கீழ் மேலளவில் ஓர் அதிகாரமற்ற அரசரை வைத்துக் கொண்டு அவரது பின்புலத்தில் வணிகக்குழு அதிகாரிகள் செயாற்றினர்.
Question 2.
ஜமீன்தார்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலங்களுக்குப் பரம்பரை உரிமைகளை எவ்வாறு பெற்றனர்.
Answer:
- 1793 வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் அமுல் செய்யப்பட்டது.
- சாசுவதம் என்ற பெயரில் நிலத்தை அளவிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜமீன்தாரும் வழங்க வேண்டிய வருவாயை நிர்ணயம் செய்தது.
- இம் முறையின் மூலமாக வரி வசூலிப்போராக இருந்தோர் வாரிசுரிமை கொண்ட ஜமீன்தார்களாக மாறி அரசு வழங்கிய நிலத்தின் பயன்களை அனுபவிக்கலானார்கள்.
Question 3.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கை
Answer:
- இந்து சம்பிரதாயங்களின்படி வாரிசு இல்லாத இந்து அரசர் ஓர் ஆண் மகனை தத்தெடுக்க முடியும்.
- அவ்வாறு தத்தெடுக்கப்பட்ட மகனுக்கு சொத்தில் முழு உரிமை உண்டு.
- ஆனால் டல்ஹௌசி ஆங்கில அரசின் பாதுபாப்பில் உள்ள அரசு , வாரிசு நியமனம் பெற அரசு அனுமதி அவசியம் என கூறினார். தத்தெடுக்க ஆங்கில அரசு மறுத்தால் அவ்வரசு (வாரிசு இல்லாத அரசு) ஆங்கில அரசுடன் இணைக்கப்படும் என்றார். இது வாரிசு இழப்புக் கொள்கை எனப்படும்.
- வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் கீழ் முதலில் வீழ்ந்த அரசு சதாரா ஆகும்.
Question 4.
காரன்வாலிஸின் நீதித்துறை நிர்வாகம்
Answer:
- சர் வில்லியம் ஜோன்ஸ் ஆலோசனையின்படி நீதித்துறையை காரன்வாலிஸ் சீரமைத்தார்.
- ஆட்சியாளர்களை நீதித்துறை பொறுப்பிலிருந்து விடுவித்தார்.
- குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்களை முழுமையாக சீரமைத்தார்.
- நீதித்துறையின் உச்சங்களாக சதர் திவானி அதாலத்தும் திகழ்ந்தன.
- நான்கு பிராந்திய முறையீட்டு நீதிமன்றங்கள் கல்கத்தா, தக்காணம், மூர்ஷிதாபாத், பாட்னா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன.
Question 5.
சார்ல்ஸ் உட் அறிக்கை .
Answer:
- 1854ல் சார்ல்ஸ் உட்கல்வி அறிக்கை வெளியிடப்பட்டது
- ஆரம்பகல்வி முதல் உயர்நிலைப்பள்ளியையும், கல்லூரிப் படிப்பையும் உள்ளடங்கிய ஒரு விரிவான வரைவாகும்.
- பொதுக்கல்வித்துறை துவங்கப்பட்டு மூன்று மாகாணத் தலை நகரங்களிலும் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- இதன் தொடர்ச்சியாக 1857 ல் சென்னை பல்கலைக்கழகமும், பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்களும் தோற்றுவிக்கப்பட்டன.
Question 6.
பிண்டாரிகள் மற்றும் தக்கர்கள்
Answer:
1. பிண்டாரிகள் : .
- பிண்டாரிகள் கொள்ளைக் கூட்டத்தில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்ற இரு சமயத்தவர்களும் இருந்தனர்.
- துணைப்படைத் திட்டத்தில் வேலையிழந்த படை வீரர்கள் இதில் பெருமளவில் சேர்ந்தனர். பிரிட்டிஷார் போரின் மூலம் அவர்களை ஒழித்தனர்.
2. தக்கர்கள் :
- 14ம் நூற்றாண்டில் தில்லிக்கும் ஆக்ராவுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர்.
- தக்கர்களை ஒடுக்க பெண்டிங் ஒரு திட்டம் வகுத்து அவர்களை அழிக்க வில்லியம் ஸ்லிமேனை நியமித்தார்.
- 1860ம் ஆண்டு வாக்கில் தக்கர்கள் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
Question 7.
இந்திய கைத்தறி நெசவாளர்கள் மீது தொழில் துறை புரட்சியின் தாக்கம்
Answer:
- உலகின் துணி ஏற்றுமதியில் முதன்மை பெற்று விளங்கிய இந்தியா, இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியின் பருத்தி ஆடை தேவைக்கு சந்தையாக மாற்றப்பட்டது.
- இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பிரிட்டிஷ் பொருள்கள் இந்திய சந்தைகளில் குவிந்தன.
- சொற்ப விலைக்கு விற்கப்பட்டதாலும், நீண்ட கால பயன்பாட்டுக்கு தகுந்ததாக இருந்ததாலும் இந்திய கைத்தறி பொருட்கள் உற்பத்தி குறைந்தது.
- இதுநெசவாளர்களை வேலை இழக்கச் செய்தது.
Question 8.
ஒப்பந்தக்கூலிமுறை
Answer:
- இன்றைய நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர் திட்டத்திற்கு முற்றிலும் மாறான, தண்டனைக்குரிய ஒப்பந்த முறை ஆகும் அது.
- இம்முறையின் படி ஒப்பந்த தொழிலாளர்கள் (கூலி) சிறைச்சாலை போன்ற சூழலில் பணி செய்ய வேண்டும்.
- பணியில் அலட்சியம் காட்டினாலோ, பணி செய்ய மறுத்தாலோ அலட்சியம் காட்டினாலோ, பணி செய்ய மறுத்தாலோ கூலியை மறுக்கவும், சிறைதண்டனை வழங்கவும் முடியும்.
- உத்தரவுக்கு கீழ்படிய மறுத்தாலும், ஒப்பந்த காலத்திற்கு முன்பு பணியை விட்டு விலகினாலும் கூலியை மறுக்கவும், சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.
- அற்ப காரணங்களுக்காக கூட கூலி மறுக்கப்பட்டும், சிறைத்தண்டனை வழங்கப்பட்டும் வந்தது.
கூடுதல் வினாக்கள் – குறுகிய விடையளி
Question 1.
மாகாணம் என்பதற்கும் மாநிலம் என்பதற்குமான வேறுபாடு யாது?
Answer:
மாகாணம் (Presidency) : கிழக்கிந்திய கம்பெனியாரின் தலைமை நிர்வாக
அதிகாரியின் அலுவலகம் அமையப்பெற்றிருக்கும் இடம் மாகாணம் ஆகும். அவ்விதத்தில் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகியவை மாகாணங்கள் ஆகும்.
மாநிலம் (Province) : பின்னர் இம்மாகாணங்களை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதால் மத்திய மாநிலம், ஒருங்கிணைந்த மாநிலம் போன்ற பிராந்தியங்கள் உருவாக்கப்பட்டன.
Question 2.
குறிப்பு தருக: தாமஸ் மன்றோ
Answer:
- தாமஸ் மன்றோ 1820ல் மெட்ராஸ் மாகாணத்திற்கு ஆளுநர் ஆனார்.
- 1822ல் இரயத்து வாரி முறையை செம்மையாக அறிமுகப்படுத்தி செயலூட்டினார்.
- இவர் ஆளுநராக இருந்த காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு கல்விக்கான செலவீனங்களை எதிர்காலத்திற்கான முதலீடாகவே கருதினார்.
- இந்தியர்கள் பெருமளவில் இவர் நிர்வாகத்தில் பங்காற்றுவதை ஆதரித்தார்.
- ஜூலை 1827ல் காலரா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
- மக்களிடையே பிரபலமாகியிருந்த அளுநரான் எழுப்பப்பட்டதோடு குழந்தைகள் பலருக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது.
Question 3.
பட்டயம் (Charler) என்றால் என்ன ?
Answer:
பட்டயம் (Charler) :
- பட்டயம் என்பது ஒரு நாட்டின் இறையாண்மை அதிகாரத்தை மையமாகக் கொண்டு சகல அதிகாரங்களும் சலுகைகளும் உள்ள ஒருவணிக நிறுவனத்தையோ, பல்கலைக்கழகத்தையோ, நகரத்தையோ உருவாக்க வழங்கப்படும் சட்டமாகும். உதாரணம் : கிழக்கிந்திய வணிகக் கம்பெனி, மகாராணி எலிசபெத் 1600ல் வழங்கிய பட்டயத்தின் மூலம் துவங்கப்பட்டது.
- 1773 ஆம் ஆண்டு வரான்ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக பதவியேற்றது முதல் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியமாயிற்று
- பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா வருவதற்கு முன்பு வழங்கப்பட்ட 1853 ஆம் ஆண்டின் பட்டயமே கடைசியானது ஆகும்.
VI. விரிவான விடைளி
Question 1.
வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணைப் படைத்திட்டத்தினைப்பற்றி விவரி. (மார்ச் 2019)
Answer;
- கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி பிரிட்டிஷ் ஆட்சியை உறுதி செய்யும் பொருட்டு துணைப்படைத்திட்டத்தைக் கொண்டுவந்தார் அதன்படி
- அ. துணைப்படைத்திட்டத்தில் சேரும் இந்திய ஆட்சியாளர் தனது சொந்தப்படைகளை கலைத்துவிட்டு பிரிட்டிஷ் படைகளை ஏற்க வேண்டும். அனுப்பும் அதிகாரி ஒருவரை ஸ்தானிகராக ஏற்க வேண்டும்.
- ஆ. பிரிட்டிஷ் படைகளுக்கான பராமரிப்புச் செலவை ஏற்க வேண்டும் இல்லையெனில் மாகாணத்தின் ஒரு பகுதியை பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும்.
- பாதுகாப்புக்குட்பட்ட அரசர் பிரஞ்சு உட்பட பிற ஐரோப்பிய நாடுகளுடனான தொடர்பை துண்டித்துக்கொள்ள வேண்டும்.
- பிரிட்டிஷார் அனுமதி இல்லாமல் மற்ற ஐரோப்பியரை பணியில் அமர்த்தக்கூடாது.
- பிற இந்திய அரசுகளோடு கம்பெனியின் அனுமதி இல்லாமல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது.
- எந்த அரசும் பிற அரசுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடக்கூடாது.
- இத்துணைப்படைத்திட்டம் கம்பெனி அரசின் இராணுவ பலத்தை உயர்த்தியதோடு அதன் ஒட்டு மொத்தத்திறனையும் கூட்டியது
- சுதேச அரசுகள் தங்களது இறையாண்மையை இழந்து எல்லா வகையிலும் கம்பெனியைச் சார்ந்து இருக்கும் நிலை உருவாக்கப்பட்டது.
Question 2.
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?
Answer:
- வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒரு ‘மதராசாவை ‘ உருவாக்கியதே பிரிட்டிஷார் கல்விக்கு ஆற்றிய முதல் தொண்டு ஆகும்.
- இம்மதரசா 40 மாணவர்களைக் கொண்டு துவங்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கியது.
- காரன்வாலிஸ் வாரணாசியில் ஒரு சமஸ்கிருதக் கல்லூரியை 1791ல் நிறுவினார்.
- ஹேஸ்டிங்ஸ் தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்தினார்.
- 1813 ஆம் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியருக்கு ஒரு தெளிவான கல்விக் கொள்கையை வகுக்க வலியுறுத்தியது.
- 1817 ஆம் ஆண்டு கல்கத்தாவில் இந்துக் கல்லூரியை ஹேஸ்டிங்ஸ்துவக்கினார்.
- 1835 ஆம் ஆண்டு கல்கத்தா மருத்துவக்கல்லூரியை வில்லியம் பெண்டிங் பிரபு நிறுவினார்.
- 1835ல் மெக்காலே பிரபு ஆங்கிலக் கல்வி முறையை புகுத்தினார்.
- 1847ல் ரூர்க்கியில் பொறியியில் கல்லூரி ஒன்றும்
- 1849ல் கல்கத்தாவில் பெண்களுக்கான பள்ளியும் துவக்கப்பட்டது.
- 1854ல் உட்கல்வி அறிக்கை ஆரம்பக்கல்வி, உயர்நிலைக்கல்வி, கல்லூரிப்படிப்பை உள்ளடக்கிய தெளிவான மற்றும் விரிவான வரைவுகளை அரசாங்கத்தில் சமர்ப்பித்தது.
Question 3.
1865 ஆம் ஆண்டு இந்திய வனச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை?
Answer:
வன சட்டம் இயற்றப்படுவதற்கான சூழ்நிலைகள் :
- பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கக்கூடியதாக நிலமே விளங்கியது.
- வேளாண் நிலத்தை விரிவுப்படுத்தும் பொருட்டு காடுகள் அழிக்கப்பட்டன.
- முதலில் அழிக்கப்பட்ட காடுகள் “ஜங்கிள் மஹல் பகுதி
- இங்கு சாந்தால் இனபழங்குடிமக்கள் வாழ்ந்தனர்.
- இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து கலகம் செய்தனர்.
- காபி விளைவிப்பதற்காக காடுகள் அழிக்கப்பட்டன. ஆனால் காபி செழித்து வளரவில்லை .
- இருப்பு பாதை அமைக்க 1870ல் ஆண்டுக்கு 10 லட்சம் மரங்கள் என்ற அளவில் வெட்டப்பட்டன.
- இங்கிருந்து மரப்பலகைகள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
சட்டம் :
- காட்டு வளங்களை பாதுகாக்கும் பொருட்டு 1865 ஆம் ஆண்டு இந்திய வனச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
- இச்சட்டம் காட்டுவளங்களை பூர்விக குடிமக்கள் தடை விதித்தது. இதனால் பூர்வீக குடிமக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
- அவர்களை கட்டுப்படுத்த 1871 ஆம் ஆண்டு குற்றப்பழங்குடியினர் சட்டம் இயற்றப்பட்டது.
- காலணி ஆட்சியில் இயற்றப்பட்ட வனச்சட்டங்கள் இன்றளவும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
VI. விரிவான விடைளி
Question 1.
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் இருப்புப் பாதையும், தபால் தந்தி முறையும் வளர்ச்சிபெற்றதை விவரி.
Answer:
இருப்புப்பாதை :
- இருப்புப்பாதை அமைக்க முதல் கோரிக்கையை வைத்தது ஐரோப்பிய வியாபாரச்சமூகமே ஆகும்.
- இந்தியாவில் வெற்றிகரமாக இருப்புப் பாதை போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற முடியுமா எனகம்பெனியாருக்கு சந்தேகமே இருந்தது.
- இருப்புப்பாதை போக்குவரத்தின் மூலமாக பொருளாாதார சாதகங்கள் ஏற்படும் என்று டல்ஹௌசிவாதிட்டு அதை வலியுறுத்தினார்.
- எனினும் 1857 பெருங்கிளர்ச்சிக்கு முன்பு வெறும் 300 மைல் தூரம் மட்டுமே இருப்புப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.
- 1853 ஆம் ஆண்டு பம்பாய்க்கும் தானேவுக்கும்
- 1854 – 55 ஆண்டுகளில் ஹௌராவுக்கும் – ராணி கஞ்சுக்கும் இடையே இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.
- தென் இந்தியாவில் முதல் இருப்புப்பாதை 1856 ஆம் ஆண்டு மதராசுக்கும் அரக்கோணத்திற்கும் இடையே அமைக்கப்பட்டது.
தபால் தந்தி :
- தந்தி போக்குவரத்து இந்தியாவில் 1854 ஆம் ஆண்டுதான் தொடங்கியது.
- 1857 ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சிக்கு பின் அது அதிக முக்கியத்துவம் தேவையென்ற நிலையை எட்டியது.
- லண்டனுக்கும், கல்கத்தாவிற்கும் இடையே தொடர்பு கொள்ள பல மாதங்கள் ஆன சூழல் மாறி 28 நிமிடங்களில் தொடர்பு கொள்ள தந்தி வழி வகை செய்தது.