Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் Text Book Back Questions and Answers, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள்
11th History Guide ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் Text Book Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
உடையார் அரசர்களுக்கு எதிராக மராத்தியர்களை வெற்றிகரமாக கையாண்ட பின்……………. உண்மையான அரசர் ஆனார்.
அ) ஹைதர் அலி
ஆ) நஞ்சராஜா
இ) நாகம நாயக்கர்
ஈ) திப்பு சுல்தான்
Answer:
அ) ஹைதர் அலி
Question 2.
திப்பு சுல்தான் ……….. பகுதியைக் கைப்பற்றியதால் மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் தொடங்கியது.
அ) கள்ளிக்கோட்டை
ஆ) குடகு
இ) கொடுங்களூர்
ஈ) திண்டுக்கல்
Answer:
இ) கொடுங்களூர்
Question 3.
பாளையக்காரர் முறை முதன்முதலில் ………………………………….. பேரரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அ) விஜயநகர்
ஆ) பாமனி
இ) காகதிய
ஈ) ஹொய்சாள
Answer:
இ) காகதிய
Question 4.
நெற்கட்டும் செவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய புலித்தேவரின் மூன்று முக்கியமான கோட்டைகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்
அ) மாபுஸ்கான்
ஆ) யூ சுப்கான்
இ) கர்னல்ஹெரான்
ஈ) நபிகான் கட்டக்
Answer:
ஆ) யூ சுப்கான்
Question 5.
வேலு நாச்சியார் ……………….. அரசருடைய மகள்
அ) சிவகங்கை
ஆ) புதுக்கோட்டை
இ) இராமநாதபுரம்
ஈ) பழவநத்தம்
Answer:
இ) இராமநாதபுரம்
Question 6.
வீரபாண்டிய கட்டப்பொம்மன் தொடர்பான பிரச்சனைகளை தவறாகக் கையாண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய ஆட்சியர் ………. ஆவார்.
அ) W.Cஜாக்சன்
ஆ) A. பானர் மேன்
இ) S.Rலூஹிங்டன்
ஈ) P.A ஆக்னியூ
Answer:
அ)W.Cஜாக்சன்
Question 7.
வேலூர் புரட்சிக்கு உடனடிக் காரணமாக அமைந்த நிகழ்வு . .. ஆகும்.
அ) என்ஃபீல்டு ரக துப்பாக்கித் தோட்டாக்கள்
ஆ) நவீன சீருடை மாற்றம்
இ) புதிய தலைப்பாகை
ஈ) கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள்
Answer:
இ) புதிய தலைப்பாகை
Question 8.
கோல் எழுச்சிக்குக் காரணமானவர் ………………. ஆவார்.
அ) பின்த்ராய் மன்கி
ஆ) சிடோ
இ) புத்தபகத்
ஈ) கானூ
Answer:
இ) புத்தபகத்
Question 9.
1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் – ஜெனரலாக இருந்தவர்……………………. ஆவார்
அ) டல்ஹௌசி
ஆ) கானிங்
இ மின்டோ
ஈ) ஜேம்ஸ் அன்ட்ரியூ ராம்சே
Answer:
ஆ) கானிங்
Question 10.
1857 ஆம் ஆண்டு புரட்சியின்போது நானா சாகேப்பின் படைகளைத் தோற்கடித்தவர்…………..
அ) ஹென்றி லாரன்ஸ்
ஆ) மேஜர் ஜெனரல் ஹோவ்வாக்
இ) சர் ஹீயூக் வீலர்
ஈ) ஜெனரல் நீல்
Answer:
ஆ) மேஜர் ஜெனரல் ஹோவ்வாக்
II. அ.சரியான கூற்றினைத் தேர்வு செய்
1. வாரன் ஹேஸ்டிங்ஸ், திப்பு சுல்தானை பழிவாங்கும் நோக்கில் அணுகினார்.
2. திப்புவின் ஆட்சியை அகற்றியதும் மைசூரில் மீண்டும் உடையார் வம்ச ஆட்சி நிறுவியதும் தென்னிந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
3. ஆற்காட்டு நவாப் வேலு நாச்சியாருக்கு ஆதரவு அளித்தார்.
4. திருநெல்வேலி காடுகளின் மையத்தில் காளையார் கோயில் உள்ளது.
Answer:
2. திப்புவின் ஆட்சியை அகற்றியதும் மைசூரில் மீண்டும் உடையார் வம்ச ஆட்சி நிறுவியதும் தென்னிந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
ஆ. கூற்று (கூ) : சிவகிரி கோட்டைத் தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பானதாக இருந்தது. (மார்ச் 2019)
காரணம் (கா) : மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வலுவான அரண்களோடு அது அமைக்கப்பட்டிருந்தது.
அ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
ஆ) கூற்று மற்றும் காரணம் தவறானவை.
இ கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ) கூற்று தவறு; காரணம் சரி
Answer:
இ) கூற்று சரி, காரணம், கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
III. பொருத்துக
i) ஜில்லெஸ்பி – 1. ஸ்ரீரங்கப்பட்டினம்
ii) மஞ்சி – 2. பாரக்பூர்
iii) ஜாக்கோபியன் கழகம் – 3. வேலூர் கழகம்
iv) மங்கள் பாண்டே – 4. சந்தால்கள்
அ) 1,2,3,4
ஆ) 3,4,1,2
இ) 3,2,1,4
ஈ) 2,3,4,1
Answer:
ஆ) 3,4,1,2
I. கூடுதல் வினாக்கள்
Question 1.
ஹைதரின் மகன்
அ) ஹைதர்
ஆ) நாகம நாயக்கர்
இ நஞ்சப்பர்
ஈ) திப்புசுல்தான்
Answer:
ஈ) திப்புசுல்தான்
Question 2.
ஹைதரின் தளபதி
அ) நஞ்ச ராஜா
ஆ) ஹைதர்
இ பசலுல்லாகான்
ஈ) திப்பு சுல்தான்
Answer:
இ பசலுல்லாகான்
Question 3.
ஹைதர் அலிக்கு எதிராக மதராசை கடல் வழியே முற்றுகையிட வங்காளத்திலிருந்து அனுப்பப்பட்டவர்.
அ) நிசாமத்
ஆ) ஜெனரல் நீல்
இ) அயர் கூட்
ஈ) கானிங்
Answer:
இ) அயர் கூட்
Question 4.
ஹைதர் அலிக்கு “ஃபதே ஹைதர் பகதூர்” என்ற பட்டம் ……………. பகுதியை மீட்டதற்காக கொடுக்கப்பட்டது.
அ) மைசூர்
ஆ ஹைதராபாத்
இ மதராஸ்
ஈ) ஆற்காடு
Answer:
அ) மைசூர்
Question 5.
மூன்றாம் மைசூர் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை ……………
அ) சால்பை
ஆ) பசீன்
இ) ஸ்ரீரங்கப்பட்டினம்
ஈ) சால்பை
Answer:
இ) ஸ்ரீரங்கப்பட்டினம்
Question 6.
கட்ட பொம்மன் கலெக்டர் ஜாக்சனை சந்திக்க கூறிய இடம் ……….. ஆகும்
அ) சிவகிரி
ஆ) இராமநாதபுரம்
இ) சிவகங்கை
ஈ) சிவகிரி
Answer:
ஆ) இராமநாதபுரம்
Question 7.
யூசுப்கானின் இயற்பெயர்………………..
அ நானாசாகிப்
ஆ) புலித்தேவர்
இ) மருதநாயகம்
ஈ) கான்சாகிப்
Answer:
இ) மருதநாயகம்
Question 8.
புதுக்கோட்டை மன்னர் …………. காட்டிலிருந்த கட்ட பொம்மனை பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர்.
அ) இலுப்பூர்
ஆ) களப்பூர்
இ) ஊனையூர்
ஈ) களத்தூர்
Answer:
ஆ) களப்பூர்
Question 9.
வேலூர் பெருங்கிளர்ச்சியை 15 நிமிடங்களில் அடக்கி வேலூர் கோட்டையை கட்டுக்குள் கொண்டு வந்தவர் …………
அ) கர்னல் கில்லஸ்பி
ஆ) கிராடக்
இ) ஃப்ளாகிங்டன்
ஈ) வில்லியம் பெண்டிங்
Answer:
அ) கர்னல் கில்லஸ்பி
Question 10.
தீரன் சின்னமலையின் இறுதிப்போர்
அ) திருச்சி
ஆ) திண்டுக்கல்
இ) அரச்சலூர்
ஈ) காவிரி கரை
Answer:
இ) அரச்சலூர்
Question 11.
“முண்டாக்களின் ஆட்சியை நிறுவ வந்த புனித தூதர்” என தன்னை அழைத்துக் கொண்ட வர் ………
அ) கானு
ஆ) பிர்சா
இ) புத்தபகத்
ஈ) சித்தோ
Answer:
ஆ) பிர்சா
Question 12.
1857 பெருங்கிளர்ச்சியை இந்திய விடுதலைப்போர் என கருத்து தெரிவித்தவர் …………….. ..
அ) கர்னல் மல்லீசன்
ஆ) கீன்
இ) வீரசவார்க்கர்
ஈ) தாதாபாய் நௌரோஜி
Answer:
இ) வீரசவார்க்கர்
Question 13.
பரக்பூரில் நடைபெற்ற இராணுவக்கலகத்தில் தனது மேலதிகாரியை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் ……………….
அ) கான்பகதூர்கான்
ஆ) மங்கள் பாண்டே
இ) கில்லஸ்பி
ஈ) சர் அயர் கூட்
Answer:
ஆ) மங்கள் பாண்டே
Question 14.
பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும். (மார்ச் 2019 )
அ) இராஜராம் மோகன்ராய்
ஆ) வீரபாண்டியன் கட்டபொம்மன்
இ) தீரன் சின்னமலை
ஈ) மருது சகோதரர்கள்
Answer:
அ) இராஜராம் மோகன்ராய்
பொருத்துக
i) முதல் மைசூர் போர் – 1.ஸ்ரீரங்கப்பட்டினம்
ii) 2ம் மைசூர் போர் – 2.புதிய தலைப்பாகை
iii) 3ம் மைசூர் போர் – 3.சென்னை
iv) வேலூர் புரட்சி – 4.மங்களூர்
Answer:
i-3, ii – 4, iii -1, iv – 2
V. குறுகிய விடை தருக.
Question 1.
திப்பு சுல்தான் மீது சுமத்தப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின் (1792) அவமானகரமான விதிமுறைகளைப் பற்றி ஒருசிறு குறிப்பு வரைக.
Answer:
- மூன்றாம் மைசூர் போரின் முடிவில் ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை திப்புவிற்கும் ஆங்கிலேயருக்கும் இடையே கையெழுத்தானது.
- ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின்படி, திப்பு அவருடைய ஆட்சிப்பகுதிகளில் பாதி இடங்களை ஆங்கிலேயருக்குக் கொடுக்க வேண்டும். போர் இழப்பீடாக மூன்று கோடி ரூபாய் அளிக்க வேண்டும். அவருடைய மகன்களில் இருவரைப் பிணைக்கைதிகளாக அனுப்பிவைக்க வேண்டும்.
- திப்புவின் அதிகாரம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டது. சென்னையில் பிணைக்கைதிகளாகயிருந்த திப்புவின் மகன்கள் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகு ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு 1794ம் ஆண்டு மே 29 அன்று திருப்பியனுப்பி வைக்கப்பட்டார்கள்.
- இந்த உடன்படிக்கை மூலம் ஏற்பட்ட அவமானத்தையும் பொருளாதார இழப்பையும் திப்புவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
Question 2.
வராகன்’ (பகோடா) என்றால் என்ன?
Answer:
- விஜய நகரத்தில் அறிமுகமான தங்கநாணயம் பகோடா எனப்பட்டது.
- ஐரோப்பிய வணிகர்கள் இந்தியாவுக்கு வந்த கால கட்டத்தில் இப்பயணம் செல்வாக்கு பெற்று விளங்கியது.
- திப்பு சுல்தான் ஆட்சியில் மைசூரில் ஒரு பகோடா மூன்றரை ரூபாய்க்குக் சமமாகக் கொள்ளப்பட்டது.
- தமிழில் இதனை வராகன் என்பர்.
Question 3.
கொங்குப் பகுதியில் தீரன் சின்னமலையின் கிளர்ச்சிகள் பற்றி நீவிர் அறிவது யாது?
Answer:
- தீரன் சின்னமலை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட கொங்கு நாட்டுப் பாளையக்காரர் ஆவார்.
- இவர் பிரெஞ்சுக்காரர்களாலும் திப்புவாலும் பயிற்சி அளிக்கப்பட்ட பாளையக்காரர்களில் ஒருவர்.
- சின்னமலையின் போர்களில் முக்கியமானவை மூன்று :
- 1801ம் ஆண்டு காவிரிக்கரையில் நடைபெற்ற போர்,
- 1802ம் ஆண்டு ஓட நிலையில் நடந்த போர்,
- 1804ல் நடந்த அரச்சலூர் போர் ஆகும். அவரது இறுதிப்போர் 1805ல் நடைபெற்றதாகும்.
- இப்போரில் தீரன் சின்னமலை அவருடைய சமையல்காரரால் காட்டி கொடுக்கப்பட்டு சிவகிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
Question 4.
‘ செயில் ராகப்’ பற்றி விளக்கு.
Answer:
- முண்டாக்கள் பீகார் பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் ஆவார்கள்.
- செயில் ரகப் என்னுமிடத்தில் முண்டா சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டார்கள்.
- செயில் ரகப் படுகொலை பிர்சா ஆதரவாளர்களைத் தடுத்து நிறுத்தவில்லை.
- ஆங்கிலேய அதிகாரிகள் பிர்சாவைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
- இறுதியில் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா 1900ம் ஆண்டு ஜீன் 9ம் நாளில் தியாகி ஆனார்.
Question 5.
கான்பூர் படுகொலை. (மார்ச் 2019 )
Answer:
- கான்பூர் நானாசாகிப் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
- பெண்களும் குழந்தைகளும் உட்பட சுமார் 125 ஆங்கிலேயர்களும் ஆங்கில அதிகாரிகளும் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் ஒரு கிணற்றுக்குள் வீசப்பட்டன.
- கான்பூர் படுகொலை என்றறியப்பட்ட இந்நிகழ்வு ஆங்கிலேயரைக் கோபம் கொள்ளச்செய்தது.
- நிலைமைகளை எதிர்கொள்ள அனுப்பப்பட்ட தளபதி ஹென்றி ஹேவ்லக் படுகொலைக்கு மறுநாளே நானாசாகிப்பைத் தோற்கடித்தார்.
V. கூடுதல் வினாக்கள்
Question 1.
வேலூர் நாச்சியார் பற்றி குறிப்பு தருக.
Answer:
- வேலூ நாச்சியார் இராமநாதபுரம் அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார்.
- அவர் சிவகங்கை அரசரான முத்து வடுகர் பெரிய உடையாரை மணந்தார். அவர்களுக்கு வெள்ளச்சி நாச்சியார் என்ற மகள் இருந்தார்.
- வேலு நாச்சியாரின் கணவர் நவாப்பின் படைகளால் கொல்லப்பட்டதும், தன் மகளுடன் தப்பித்து, திண்டுக்கல் அருகே விருப்பாச்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் எட்டு ஆண்டுகாலம் இருந்தார்.
- இக்காலக்கட்டத்தில் வேலு நாச்சியார் ஒரு படையைக் கட்டமைத்தார். ஆங்கிலேயரை தாக்கும் நோக்கத்துடன் கோபால நாயக்கர், ஹைதர் அலி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார்.
- 1780ல் இவர்களின் துணையோடு, போரிட்டு வென்றார். பிறகு ஆற்காட்டு நவாப்பையும் வென்று மருது சகோதரர்களின் துணையுடன் சிவகங்கையின் அரசியாக முடி சூட்டிக் கொண்டார்.
Question 2.
பாளையக்காரர் முறை என்றால் என்ன?
Answer:
- பாளையக்காரர் முறை 1530 ம் ஆண்டு தோன்றியது.
- வாரங்கல்லை ஆண்டு வந்த காகதிய அரசில் இம்முறை பின்பற்றப்பட்டு வந்ததாக கருதப்படுகிறது.
- அரசுக்கு தேவையான போது போரில் வீரர்களுடன் பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு பாசறையையும், பெரும் நிலப்பரப்பை வைத்திருப்போரையே பாளையக்காரர் என்று அழைத்தனர்.
- பாளையக்காரர்கள் தங்கள் பகுதிகளில் நிலவரி வசூலும் செய்து வந்தார்கள்.
Question 3.
தீரன் சின்னமலை போர்களில் முக்கியமானவை யாவை?
Answer:
- ‘சின்னமலையின் போர்களில் முக்கியமானவை
மூன்று: - காவிரிக்கரையில் நடைபெற்ற 1801 போர்,
- 1802ம் ஆண்டு ஓட நிலையில் நடந்த போர்,
- 1804ல் நடந்த அரச்சலூர் போர் ஆகும். அவரது இறுதிப்போர் 1805ல் நடைபெற்றதாகும்.
VI. சுருக்கமான விடை தருக.
Question 1.
ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே கையெழுத்தான மதராஸ் உடன்படிக்கைக்கான சூழ்நிலைகளை விளக்குக.
Answer:
- மதராஸ் உடன்படிக்கை முதல் ஆங்கில மைசூர் போரின் முடிவில் ஏற்பட்டது.
- ஹைதர் அலி தஞ்சாவூர், கடலூர் என முன்னேறி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
- அந்த வேளையில் மராத்தியர் படையெடுத்து வருவதாக அச்சுறுத்தல் இருந்ததால் ஆங்கிலேயருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் வேறு வழியின்றி ஆங்கிலேயருடன் சென்னை உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.
Question 2.
1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.
Answer:
- 1801 மே மாதத்தில் அக்னியு தலைமையிலான ஒரு படைப்பிரிவுதன் நடவடிக்கைகளைத் துவக்கியது.
- இப்படை மானா மதுரை, பார்த்திபனூர் வழியாகப் பயணித்து, கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பரமக்குடி அரண்களை ஆக்கிரமித்தது.
- மோதலின் போது இரு தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.
- ஆனால் கிளர்ச்சியாளர்களின் அடங்காத எதிர்ப்பும் மருது சகோதரர்களின் வீரம் செறிந்த சண்டைகளும் ஆங்கிலேயரின் நடவடிக்கையை மிகவும் கடினமாக்கியது.
- முடிவில், ஆங்கிலேயரின் படை வலிமையும் தளபதிகளின் திறமையுமே வெற்றி பெற்றன.
Question 3.
1806 ஆண்டு வேலூர் புரட்சி பற்றி எழுதுக.
Answer:
- மருது சகோதரர்களின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் வேலூரை மையமாகக் கொண்டு செயல்பட்டனர்.
- எண்ணிக்கையில் 3000க்குக் குறையாத திப்பு சுல்தானின் விசுவாசிகள் வேலூரிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் குடியேறியிருந்ததால் ஆங்கிலேய எதிர்ப்புக் கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் அங்கு தங்கள் இரகசிய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
- ஆங்கிலேயரால் பதவியோ, சொத்தோ பறிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்தனர்.
- இது போல் பாதிக்கப்பட்ட பலரை வேலூர் கோட்டையின் படைமுகாம் உள்ளடக்கியிருந்தது. இவ்வாறு வேலூர் கோட்டை தென்னிந்தியாவின் புரட்சியாளர்கள் சந்தித்துக் கொள்ளுமிடமாக ஆனது.
- சிப்பாய்களும் வேலூ ருக்கு இடம் பெயர்ந்தவர்களும் கோட்டையில் அடிக்கடி கூடித் தீவிரமாகக்கலந்தாலோசித்தனர்.
- அவற்றில் திப்பு மகன்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று வந்தனர்.
Question 4.
கோல் பழங்குடியினரின் எழுச்சியைப் பற்றி விளக்குக.
Answer:
- கோல் பழங்குடியினர் பீகார், ஒரிசா, சோட்டா நாக்பூர், சிங்பும் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த னர்.
- சோட்டா நாகபூர் ராஜா பல கிராமங்களைப் பழங்குடி அல்லாதோருக்குக்குத்தகைக்கு விட்டதே கோவில்களின் கிளர்ச்சிக்கு காரணம் ஆகும்.
- கொள்ளை அடிப்பதும், சொத்துக்களுக்கு தீ வைப்பதுமே அவர்களின் வழிமுறையாய் இருந்தது.
- மிகத் தீவிரமாக ஒரு குறுகிய பரப்புக்குள் நடந்த சண்டையில் கோல் கிளர்ச்சியின் தலைவரான புத்த பகத்கொல்லப்பட்டார்.
- கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்த பிந்த்ராய் மன்கி 1832 மார்ச் 19ம் நாள் சரணடைந்ததும், கோவில்களின் போராட்டம் ஒரு துயரமான முடிவுக்கு வந்தது.
Question 5.
1857 ம் ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை?
Answer:
- கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு
- இந்தியாவின் ஆட்சி அரசியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
- புதிய பகுதிகள் இணைக்கப்பட மாட்டாது. இந்திய அரசுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என
அறிவித்தனர். - 1861ல் அமைக்கப்படும் சட்டமன்றத்தில் இந்திய பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் எனக்கூறியது.
- இந்திய தலைமை ஆளுநர் அரசப் பிரதிநிதி வைஸ்ராய்) என அழைக்கப்பட்டார். (கானிங் பிரபு
கூடுதல் வினாக்கள்
Question 1.
குறிப்பு எழுதுக. குயிலி மற்றும் உடையாள்.
Answer:
- இராமநாதபுர அரசரான செல்லமுத்து – சேதுபதியின் மகள் வேலுநாச்சியார் ஆவார்.
- வேலு நாச்சியார் ஒரு பெண்கள் படையை உருவாக்கி இருந்தார்.
- ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்குகளைக் கண்டுபிடிக்க உளவாளிகளை பயன்படுத்தினார்.
- நாச்சியாரின் படையில் குயிலி , உடையாள், போன்றோர் பணி புரிந்தனர்.
- இவர்கள் ஆங்கிலேயரின், ஆயுத கிடங்கை அழிக்க தன் உயிர் தந்தனர்.
Question 2.
தென்னிந்தியாவில் கம்பெனி ஆட்சியை
missing
Answer:
- நான்காம் மைசூர் போரின் முடிவே தென்னிந்தியாவில் கம்பெனி ஆட்சி தொடங்க காரணம் ஆகும்.
- நான்காம் மைசூர் போரில் திப்பு ஓர் ஐரோப்பிய படைவீரனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- திப்புவின் மறைவுமைசூரில் உடையார் வம்ச ஆட்சிக்கு வித்திட்டது.
- திப்புவின் மகன்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டார்கள்.
- இந்நிகழ்வுகள் தென்னிந்தியாவில் கம்பெனி ஆட்சி அமைக்க காரணமாய் அமைந்தது.
VII. விரிவான விடை தருக
Question 1.
தென் தமிழகத்தில் பாளையக்காரர் அமைப்பு முறை பற்றி விவரிக்கவும்.
Answer:
- பாளையக்காரர் முறை 1530களில் தோன்றியது. வாராங்கல்லை ஆண்டுவந்த காகதிய அரசில் இந்த முறை பின்பற்றப்பட்டு வந்ததாகக் கருதப்படுகிறது.
- விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, அரசப் பிரதிநிதியாக மதுரை வந்த நாகம நாயக்கரும் அவருடைய மகன் விசுவநாத நாயக்கரும் மதுரை, திருநெல்வேலி ஆகியவற்றின் சுதந்திரமான ஆட்சியாளராக தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
- தளவாய் அரிய நாயக முதலியாரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் முன்னாள் பாண்டிய பேரரசின் அனைத்து சிற்றரசுகளும் வழிகாட்டப்பட்டு 72 பாளையங்களாக மாற்றப்பட்டன.
- விஸ்வநாத நாயக்கர் மதுரையைச் சுற்றி வலிமை மிகுந்த ஒரு கோட்டையை எழுப்பினர். அதில் 72 அரண்கள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைமையின் கீழ் இருந்தன.
- பாளையக்காரர் அரசருக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை கப்பமாகச் செலுத்துவதற்கும், தேவையானபோது படை வீரர்களை அனுப்புவதற்கும் பாளையத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் கடமைப்பட்டவர்.
- இந்த கடமைகளையும் பிற பணிகளையும் செய்வதற்கு தேவையான நிதி ஆதாரத்தை பெற சில கிராமங்கள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன. அக்கிராமங்களில் அவர் வரிவிதித்து நிதி திரட்டினார்.
- பாளையங்கள் உட்பட்ட பகுதியில் குடிமையியல் பிரச்சனைகளிலும் குற்ற வியல் பிரச்சனைகளிலும் விசாரணை நடத்தி நீதி வழங்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு.
- பாளையங்கள் பூகோள ரீதியாக மேற்கு பாளையங்கள், கிழக்கு பாளையங்கள் என பிரிக்கலாம்.
- மறவர் குறுநில மன்னர்களிடமிருந்த பாளையங்கள் பெரும்பாலும் திருநெல்வேலியின் மேற்குப்பகுதியில் அமைந்திருந்தன. தெலுங்கு பேசுவோர் கிழக்குப்பகுதியில் உள்ள கரிசல் நிலப்பரப்புகளில் குடியேறி இருந்தார்கள். அவை நாயக்கர் பாளையக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
Question 2.
1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கான காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்.
Answer:
காரணங்கள் :
- அரியணையை இழந்த அரசர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரின் சந்ததியினர் ஆங்கிலேய ஆட்சி சுமத்திய அடிமைத்தளையைத் தகர்க்க மேற்கொண்ட மொத்த முயற்சிகளின் விளைவுதான் 1806 ஆம் ஆண்டின் வேலூர் புரட்சி ஆகும்.
- இந்திய சிப்பாய்கள் எந்தவித ஜாதி மற்றும் மதக் குறியீட்டை நெற்றியில் இட அனுமதி மறுக்கப்பட்டது.
- சிப்பாய்கள் தங்கள் மீசையை ஒரே மாதிரியான முறைக்கு பொருந்தும்படி வெட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டனர்.
- துணை ஜெனரல் அக்னி யூ புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார். இது மிருகங்களின் தோலினால் ஆனது. இந்து, முஸ்லீம், சிப்பாய்கள் இதை எதிர்த்தனர்.
- மேற்கூறிய காரணங்களால் வேலூர் புரட்சி வெடித்தது.
வேலூர் புரட்சியின் போக்கு:
- வேலூர் கோட்டையில் ஜுலை 10 ம் நாள் அதிகாலை இரண்டு மணி முதல் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
- கிளர்ச்சியாளர்கள் தூங்கிக் கொண்டிருந்த அதிகாரிகளையும், ஐரோப்பியர்களையும் சுலபமாக சுட்டுக் கொன்றனர்.
- 13 அதிகாரிகள், 82 ராணுவ வீரர்கள், கொல்லப்பட்டனர். 91 பேர் காயம் அடைந்தனர்.
- கோட்டைக்கு வெளியே இருந்த மேஜர் ஆம்ஸ்ட்ராங், கோட்டையில் என்ன நடக்கிறது என பார்க்க சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
- கர்னல் கில்லஸ்பி வேலூர் கோட்டைக்கு காலை 9 மணி அளவில் வந்தடைந்தார்.
- கில்லஸ்பி 15 நிமிடங்களில் வேலூர் கோட்டையை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். புரட்சி கொடூரமாக அடக்கப்பட்டது.
Question 3.
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களையும் , மற்றும் விளைவுகளையும் விவரிக்கவும்.
Answer:
1857ம் ஆண்டு புரட்சிக்கான காரணங்கள்:
- நாடுகளை ஆக்கிரமித்தல்: டல்ஹௌசி பிரபுவின் வாரிசு இழப்பு கொள்கை மூலமாக அவத்தையும், ஜான்சியையும் இணைத்ததும் , நானாசாகிப் அவமானப்படுத்தப்பட்டதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின.
- இணைக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிலவருவாய் ஏற்பாடுகள் தாலுக்தாரின் நலன்களுக்கு பாதகமாக அமைந்ததால் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக திரும்பின.
- டல்ஹெளசி தன்னுடைய விரிவாக்கக் கொள்கையின் மூலமாக பெருவாரியான மக்களுக்கு துன்பத்தை விளைவித்தார்.
அநியாயமான நிலவருவாய் :
- நிலவரி மிக அதிகமாக இருந்தது. ஆங்கிலேயர் நிலத்தில் விவசாயம் செய்தாலும் செய்யாவிட்டாலும் வாடகையைக் கருதி வசூலித்தனர்.
- காலணி அரசு கடனை குறைக்கவோ நிவாரணம் வழங்கவோ முன்வராத சூழலில் சிறு விவசாயிகளும் குத்தகைத் தாரர்களும் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாயினர்.
முஸ்லீம் உயர்குடியினரும் கற்றறிருந்தோரும் அந்நியமாதல்:
- முஸ்லீம்கள் கம்பெனியின் ஆட்சிக்கு முன்னர் முந்தைய அரசுகளில் மதிப்பு மிகுந்த பணிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
- ஆனால் கம்பெனியின் ஆட்சியில் அவர்கள் துயரத்திற்கு ஆளாயினர்.
- ஆங்கில மொழியும் மேலைக்கல்வியும் மூஸ்லீம் அறிவு ஜீவிகளை முக்கியமற்றவர்களாக்கியது. பாரசீக மொழி பயன்பாடு ஒழிக்கப்பட்டது.
- அரசுப் பணியில் மூஸ்லீம்கள் சேர்வதற்கான வாய்ப்புகளை குறைத்தது .
மத உணர்வுகள்:
- 1856 ம் ஆண்டு சட்டமானது வங்காளப்படையில் உயர் ஜாதியினரும் சேர்ந்து கொள்ள வழிவகை செய்தது.
- சதி ஒழிப்புச்சட்டம், விதவை மறுமணம் சட்ட பூர்வமாக்கியது, பெண் குழந்தைகளை கொல்வதற்கான சட்டம் ஆகியவை சமய நம்பிக்கைகளில் ஆங்கில அரசு தலையிடுவதாக கருதப்பட்டது.
- லெக்ஸ் லோசி சட்டம் (1850) கிறித்துவர்களாக மதம் மாறியவர்களுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு பெறும் உரிமையை அளித்தது. இது வைதீக இந்துக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.
புரட்சியின் விளைவுகள் :
- அலகாபாத்தில் 1858 நவம்பர் 1ல் அரசு தர்பார் கட்டப்பட்டது.
- விக்டோரியா மகாராணி வெளியிட்ட பிரகடனம் தர்பார் மண்டபத்தில் கானிங் பிரபுவால் வாசிக்கப்பட்டது.
- இந்தியா ஆங்கில முடியரசின் பெயரால் அரசுச் செயலர் மூலம் ஆளப்படும் என்று கூறப்பட்டது.
- இந்திய அரசர்களின் உரிமைகளும் , கண்ணியமும், கௌரவமும் காக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
- இந்திய சட்டமன்றத்தில் இந்திய பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் என கூறப்பட்டது.
- வாரிசு இழப்பு கொள்கை கைவிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
- கல்வி, பொதுப்பணி திட்டங்கள் முடக்கிவிடப்படும் என அறிவித்தது.
- இதன் மூலம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி என்பது மாறி பிரிட்டிஷ் ராணியாரின் நேரடி ஆட்சிக்கு வழிவகுத்தது.
VII . கூடுதல் வினாக்கள்
Question 1.
வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டன விவரி.
Answer:
- 1799 ஜீன் 1 கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கைக்குச் சென்றார். சிவகங்கையிலிருந்து ஆயுதம் தரித்து வந்த 500 பேருடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக்கு திரும்பினார்.
- 1799 செப்டம்பர் 1ல் மேஜர் பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுத்தார்.
- கட்டபொம்மன் சந்திப்பை தவிர்த்ததால், பானர்மேன் போர் தொடுக்க முடிவெடுத்தார்.
- செப்டம்பர் ஐந்தாம் நாள் கம்பெனி படை பாஞ்சாலங்குறிச்சியை சென்றடைந்தது.
- ஆங்கிலப்படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் தகவல் தொடர்புக்கான வழிகளைத் தூண்டித்தது.
- கட்டபொம்மனின் வீரர்கள் கம்பீரத்துடனும், வீரத்துடனும் போரிட்டார்கள்.
- கம்பெனிக்கு கூடுதல் படை வரவழைக்கப்பட்டு, தொடர்ச்சியான தாக்குதல் கொடுத்தனர்.
- தொடர் தாக்குதலால் கோட்டைச்சுவர் உடைந்து, கோட்டைக்கான காவல் படை வெளியேறியது.
- கோலார்பட்டி மோதலில் கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை பிடித்து வைக்கப்பட்டார்.
- நாலாபுறமும் எதிர்ப்புக்காட்டிய பிற பாதுகாப்பு அரண்கள் அனைத்தும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
- ஆங்கிலேயப் படையைக் கண்டதும் மேற்கு பாளையத்தாரும் சரண் அடைந்தனர்.
- புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டை மான் களப்பூர் காட்டிலிருந்த கட்டபொம்மனை பிடித்து, ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்.
- 1799 அக்டோபர் 16ல் பானர்மேன் கட்டபொம்மனை கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் முன்னிலை விசாரணை செய்தார்.
- கட்டபொம்மன் மரணத்தைப்பற்றி பயப்படாமல் உண்மையை உணர்ந்தார்.
- அக்டோபர் 17ம் நாளில் கட்டபொம்மன் கயத்தாறு பழைய கோட்டைக்கு அருகில் தூக்கிலிடப்பட்டார்.
Question 2.
1857 ம் ஆண்டு புரட்சியில் நானா சாகிப்பின் பங்கினை எடுத்துக்கூறுக.
Answer:
- 6ஜீன் 1857ல் நானா சாகிப்பின் தலைமையிலான 15,000 சிப்பாய்கள் கொண்ட படைகள் கான்பூரில் இருந்த கிழக்கிந்திய ராணுவத்தின் ஒரு பெரும்படையை மூன்று வாரங்கள் முற்றுகையிட்டது.
- 2ம் பகதூர்ஷா படைகளுடன் இணைந்து நின்று கிழக்கிந்திய ராணுவத்துடன் போரிட்டது.
- போரில் பல ஆங்கிலேய மக்கள் நானா சாகிப் மக்களால் கைது செய்யப்பட்டனர்.
- ஆங்கிலேய படைத்தலைவன் வீலர் நானா சாகிப்பிடம் சரண் அடைந்தான். பிறகு ஆங்கிலேய பொது மக்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
- 27 ஜீன் 1857 அன்று வீலர் கான்பூரை விட்டு அலகாபாத்திற்கு அகன்றான்.
- 6 ஜீலை 1857ல் கிழக்கிந்திய ராணுவத்தினர் பெரும்படையுடன் திரும்பி நானாசாகிப் கைவசம் இருந்த கான்பூரை மீட்டனர்.
- கான்பூரை ஆங்கிலேயரிடம் இழந்த நானாசாகிப் தலைமறைவானார்.
- நானாசாகிப்பின் படைத்தலைவரான தாந்தியா தோபே கான்பூரை முற்றுகையிட்டு வெற்றி பெற்றும், 2ம் கான்பூர் போரில் ஆங்கிலேயரிடம் வீழ்ந்தார்.