Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 19 நவீனத்தை நோக்கி Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 19 நவீனத்தை நோக்கி

11th History Guide நவீனத்தை நோக்கி Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவில் சீர்திருத்தங்கள் பற்றிய பல கருத்துக்கள் தோன்றிய முதல் மாகாணம்………………
அ) பஞ்சாப்
ஆ) வங்காளம்
இ பம்பாய்
ஈ) சென்னை
Answer:
ஆ) வங்காளம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 2.
“இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ” …………………. ஆவார்.
அ) சுவாமி விவேகானந்தர்
ஆ) தயானந்த சரஸ்வதி
இ) இராஜா ராம் மோகன் ராய்
ஈ) ஆத்மராம் பாண்டுரங்
Answer:
இ இராஜா ராம் மோகன் ராய்

Question 3.
தேசிய சமூக மாநாடு ………………….. முயற்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது.
அ) ரானடே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ கேசவ சந்திர சென்
ஈ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
Answer:
அ) ரானடே

Question 4.
“ வேதங்களை நோக்கி திரும்புக ”- என்று முழக்கமிட்டவர் ……………….. ஆவார்.
அ) இராஜா ராம் மோகன் ராய்
ஆ) தயானந்த சரஸ்வதி
இ) விவேகானந்தர்
ஈ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
Answer:
ஆ) தயானந்த சரஸ்வதி

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 5.
கதைகள் மற்றும் வியக்கத்தக்க உவமைகளின் மூலம் ………………. தனது கருத்துக்களை விளக்கினார்.
அ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
ஆ) தேவேந்திர நாத் தாகூர்
இ) கேசவ சந்திர சென்
ஈ) ஜோதிபா பூலே
Answer:
அ) இராமகிருஷ்ண பரமஹம்சர்

Question 6.
“ஒரு பைசா தமிழன்” என்ற வாரப் பத்திரிக்கையை நடத்தியவர்.. . ஆவார்.
அ) சுவாமி விவேகானந்தர்
ஆ) தயானந்த சரஸ்வதி
இ) வைகுண்ட சாமிகள்
ஈ) அயோத்திதாச பண்டிதர்
Answer:
ஈ) அயோத்திதாச பண்டிதர்

Question 7.
பிரம்மஞான சபை. .. ல் நிறுவப்பட்டது.
அ) இந்தியா
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இ) பிரான்சு
ஈ) இங்கிலாந்து
Answer:
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Question 8.
தமிழ் நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளராகத் திகழ்ந்த வர் ……. ஆவார்.
அ) இராமலிங்க அடிகளார்
ஆ) காசிவிசுவநாத முதலியார்
இ) அயோத்திதாச பண்டிதர்
ஈ) தேவேந்திரநாத்தாகூர்
Answer:
ஆ) காசிவிசுவநாத முதலியார்

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 9.
மேற்கத்திய அறிவியலை அறிமுகப்படுத்த சையது அகமதுகான் நிறுவிய அமைப்பு ………………..ஆகும்.
அ) சத்ய சோதக் சமாஜம்
ஆ) சிங் சபா இயக்கம்
இ) அறிவியல் கழகம்
ஈ) பிரம்ம ஞான சபை
Answer:
இ) அறிவியல் கழகம்

Question 10.
இஸ்லாமிய சமூகத்தினரின் சமய மீளுருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டிருந்த இயக்கம்…………………. ஆகும்.
அ) தியோபந்த் இயக்கம்
ஆ) அகமதியா இயக்கம்
இ) அலிகர் இயக்கம்
ஈ) வாஹாபி இயக்கம்
Answer:
அ) தியோபந்த் இயக்கம்

II. சரியான கூற்றினைத் தேர்வு செய்

அ. 1. சுத்தி இயக்கத்தை நிறுவியவர் டாக்டர் ஆத்மராம்பாண்டுரங்
2. ‘ சமத்துவ சங்கம் ‘ வைகுண்ட சாமிகளால் நிறுவப்பட்டது.
3. இராமகிருஷ்ண இயக்கத்தை நிறுவியவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார்.
4. அகமதியர்கள் பொதுவான மசூதியில் தங்கள்
வழிபாட்டினை மேற்கொண்டனர்.
Answer:
2. ‘சமத்துவ சங்கம்’ வைகுண்ட சாமிகளால் நிறுவப்பட்டது.

ஆ. கூற்று (கூ) : சையது அகமது கான் அலிகரில் நிறுவிய நவீனப் பள்ளி, பின்னர் முகமதிய ஆங்கிலோ – ஓரியண்டல் கல்லூரியாக வளர்ச்சி பெற்றது.
காரணம் (கா) : முஸ்லீம்கள் ஆங்கிலக் கல்வி கற்பதை அவர் விரும்பினார்.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்றுதவறு; காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானவை.
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Answer:
இ) கூற்று சரி, காரணம், கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

III. பொருத்துக

i) ஆங்கிலேய சமயப் பரப்புக்குழு – 1. விடிவெள்ளி
ii) பார்சி செய்தித்தாள் – 2. வில்லியம் காரே மற்றும் ஜான் தாமஸ்
iii) தியோபந்த் இயக்கம் – 3.ராஸ்ட் கோப்தார்
iv) விவேகானந்தர் – 4.முகமது காசிம் நநோதவி
அ) 3,2,1,4
ஆ) 1,2,3,4
இ 4,1,2,3
ஈ) 2,1,4, 3
Answer:
ஆ) 4,1,2,3

I. கூடுதல் வினாக்கள்

Question 1.
சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது.
அ) பிரம்ம சமாஜம்
ஆ) ஆரிய சமாஜம்
இ பிரார்த்தனைசமாஜம்
ஈ) அலிகார் இயக்கம்
Answer:
ஆ) ஆரிய சமாஜம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 2.
வள்ளலாரின் பக்தி பாடல்கள் அடங்கிய தொகுப்பு
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) திருவருட்பா
ஈ) எட்டுத்தொகை
Answer:
இ) திருவருட்பா

Question 3.
சர் சையது அகமதுகான் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம்
அ) சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
ஆ) அலிகார் இயக்கம்
இ) பிரம்மஞான சபை
ஈ) முஸ்லீம் லீக்
Answer:
இ) பிரம்மஞான சபை

Question 4.
அ) வடலூர்
ஆ) கடலூர்
இ கூடலூர்
ஈ) சென்னை
Answer:
அ) வடலூர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 5.
ஐரோப்பா சென்ற ராஜாராம் மோகன்ராய் இறந்த இடம் ……….. நகரில்
அ) பாரிஸ்
ஆ) லண்டன்
இ) பிரிஸ்டல்
ஈ) ரோம்
Answer:
இ) பிரிஸ்டல்

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 6.
“உலகத்தில் நிறுவப்பட்ட அனைத்து மதங்களும் உண்மையான வையே” என்று கூறியவர்
அ) ராஜாராம் மோகன்ராய்
ஆ) கேசவசந்திரசென்
இ விவேகானந்தர்
ஈ) தயானந்த சரஸ்வதி
Answer:
ஆ) கேசவசந்திரசென்

Question 7.
பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு ……..
அ) 1822
ஆ) 1824
இ) 1826
ஈ) 1828
Answer:
ஈ) 1828

Question 8.
சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் ..
அ) ரவிந்திரநாத் தாகூர்
ஆ) தயானந்த சரஸ்வதி
இ இராமகிருஷ்ணர்
ஈ) நரேந்திர நாத் தத்தா
Answer:
ஈ) நரேந்திர நாத் தத்தா

Question 9.
சத்யசோதக்சமாஜத்தை நிறுவியவர்………
அ) சாவித்ரி பூலே
ஆ) ராஜாராம் மோகன்ராய்
இ) ஜோதிபா பூலே
ஈ) இராமகிருஷ்ணர்
Answer:
இ) ஜோதிபா பூலே

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 10.
கேரளாவைச் சேர்ந்த சிறந்த சமூக சீர்திருத்த வாதி……….
அ) குருநானக்
ஆ) குரு சாயி
இ) குரு கோவிந்
ஈ) ஸ்ரீ நாராயண குரு
Answer:
ஈ) ஸ்ரீ நாராயண குரு

Question 11.
அகமதியா இயக்கத்தை உருவாக்கியவர்….
அ) உமர் சேக் மிர்சா
ஆ) நவாப் சலிமுல்லகான்
இ) மிர்சாகுலாம் அகமது
ஈ) சர் சையத் அகமதுகான்
Answer:
இ) மிர்சாகுலாம் அகமது

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 12.
அனைத்து மதக்கருத்துக்களும் “ஒரே
இலக்கை சென்றடையும் பல்வேறு பாதைகள்” என கூறியவர்.
அ) இராம கிருஷ்ணபரமஹம்சர்
ஆ) சுவாமி தயானந்த சரஸ்வதி
இ) பண்டித ரமாபாய்
ஈ) சுவாமி விவேகானந்தர்
Answer:
அ) இராம கிருஷ்ணபரமஹம்சர்

IV. குறுகிய விடையளி.

Question 1.
சமூக சீர்திருத்தத்திற்கு இராஜா ராம்மோகன் ராயின் பங்களிப்புகள் யாவை?
Answer:

  • ராஜா ராம்மோகன்ராய் பல்துறை புலமை பெற்றவராவார்.
  • அவர் 1828ல் பிரம்ம சமாஜத்தை நிறுவினார்.
  • எங்கும் நிறைந்துள்ள, கண்டறிய முடியாத, மாற்ற முடியாத, இவ்வுலகத்தை உருவாக்கி பாதுகாக்கும் சக்தியை வணங்கி வழிபடுவதில் பிரம்மசமாஜம் உறுதியாயிருந்தது.
  • இந்து மதத்தைத் தூய்மைப்படுத்துதல், ஒரு கடவுள் வழிபாட்டைப் போதித்தல், மனித கண்ணியத்திற்கு முக்கியத்துவம் தருதல், உருவ வழிபாட்டை எதிர்த்தல், சமூகத்தீமையான உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல் ஆகியன அவருடைய பங்களிப்பாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 2.
சமூக நீதிக்கு ஜோதிபா பூலேயின் பங்கு என்ன ?
Answer:

  • ஜோதிபா பூலே மேல் ஜாதியினரின் அடக்கு முறைக்கு எதிராக வாழ்நாள் முழுவதுமான நீண்ட போராட்டத்தை மேற்கொண்டார்.
  • பிராமணர் அல்லாத தாழ்வு நிலை மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி, அவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை மேற்கொண்டார்.
  • இந்த லட்சியங்களை அடைவதற்காக “ சத்ய சோதக் சமாஜம் ” என்ற அழைப்பை 1873ல் நிறுவினார்.
  • மக்களுக்கு கல்வி அறிவு வேண்டும் அதுவே புரட்சிக்கான காரணியாய் இருக்கும் என்று நம்பினார்.

Question 3.
‘சுத்தி’ (சுத்திகரிப்பு) இயக்கம் ஏன் ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகக் கருதப்படுகிறது?
Answer:

  • சுவாமி தயானந்த் சரஸ்வதியால் தோற்றுவிக்கப்பட்டு ஆரிய சமாஜம் சுத்தி இயக்கமாக செயல்பட்டது.
  • இவர் சுத்தி இயக்கம் மூலம் இந்துக்கள் அல்லாதவர்களையும் இந்துக்களாக மாற்ற முயன்றனர்.
  • இதனால் இவர் அகமதியா இயக்கத்தின் பெரும் எதிர்ப்புகளை சந்தித்தார்.
  • சுத்தி இயக்கம் ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகவே செயல்பட்டது

Question 4.
ஸ்ரீ நாராயண குருவின் தர்ம பரிபாலன இயக்கத்தின் பங்களிப்பை எழுதுக.
Answer:
கேரளாவை சேர்ந்த ஸ்ரீ நாராயண குரு “ஈழுவ” சமுதாய மக்களுக்காக போராடினார்
அவர்களுக்கு

  • பொதுப்பள்ளிகளில் சேர்வதற்கான உரிமை
  • அரசுப் பணிகளில் பங்கெடுப்பு
  • பொதுச் சாலையை பயன்படுத்தும் உரிமை
  • கோவில்களுக்குள் நுழைவதற்கான உரிமை
  • அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவைகளை பெற்றுத்தர முனைந்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 5.
இராமலிங்க அடிகளார் பற்றி நீவிர் அறிவன் யாவை?
Answer:

  • இராமலிங்க அடிகள் சிதம்பரத்திற்கு அருகே ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து தன் இளமைக் காலத்தில் சென்னையில் வாழ்ந்தார்.
  • முறையான கல்வியைப் பெறாத அவர் பெரும் புலமையை வெளிப்படுத்தினார்.
  • தேவார, திருவாசகப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர், மனம் உருகும் பாடல்களைச் சொந்தமாக இயற்றினார்.
  • 1860களில் பஞ்சங்களும் கொள்ளை நோயும் ஏற்பட்ட போது சாதி மத வேறுபாடின்றி உணவளித்தார்.
  • தன்னைப் பின்பற்றுவோரை ஒருங்கிணைப்பதற்காக சத்ய ஞான சபை எனும்
    அமைப்பை நிறுவினார்.

V. கூடுதல் வினாக்கள்

Question 1.
அலிகார் இயக்கத்தின் கொள்கைகள் யாவை?
Answer:
1875 ம் ஆண்டு சர் சையது அகமது கானால் அலிகார் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
இதன் கொள்கை

  • நவீன கல்வி முறையை பரப்புதல்
  • பர்தா முறையைகைவிடல்.
  • பலதார மண முறையை ஒழித்தல் iv)

மறுமணத்தை ஊக்குவித்தல் ஆகியவை ஆகும்.

Question 2.
பிரார்த்தனை சமாஜம் ; குறிப்பு வரைக.
Answer:

  • ஆத்ம பாண்டுரங் என்பவரால் ‘ பிரார்த்தனை சமாஜம்’ தோற்றுவிக்கப்பட்டது.
  • பெண்கள், தொழிலாளர்கள், ஆகியோருக்கு கல்வி வழங்குவதன் மூலம் சமூகப் பணியாற்றியது.
  • சாதி மறுப்புத் திருமணம், விதவை மறுமணம் போன்றவற்றில் தனிகவனம் செலுத்தியது.
  • தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மைக்காக பாடுபட்டது.

Question 3.
பிரம்ம சமாஜத்தின் பங்களிப்பைக் கூறுக.
Answer:

  • பல தெய்வ வழிபாடு, உருவ வழிபாடு, தெய்வ அபதாரங்கள் மீதான நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படையாக கண்டித்தது.
  • சாதிமுறை, மூட நம்பிக்கைகள், குழந்தை திருமணம், பர்தா முறை, உடன்கட்டை ஏறுதல் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்று கூறியது.
  • விதவைகள் மறுமணத்தை ஆதரித்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

V. சுருக்கமான விடையளி

Question 1.
எம்.ஜிரானடே.
Answer:

  • எம்.ஜி ரானடேவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட “ தேசிய சமூக மாநாடு” எனும் அமைப்பு மேற்கு இந்திய பகுதிகளில் சமூக சீர்திருத்தங்களை செயலாக்கம் செய்தது.
  • விதவை மறுமணச் சங்கம், தக்காணக் கல்வி கழகம் போன்ற அமைப்புகளையும் தோற்றுவித்தார்.
  • நாட்டுக்கு தன்மை மற்ற சேவை செய்வதற்கு எத்தகைய கல்வி அவசியமோ அக்கல்வியை இளைஞர்களுக்கு வழங்குவதை இவ்வமைப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது.

Question 2.
சுவாமி விவேகானந்தர்
Answer:

  • சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திர தத்தா
  • நவீன இந்தியாவின் விடிவெள்ளி என போற்றப்படுகிறார்.
  • தனது குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்துக்களை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டுசென்றார்.
  • 1893ல் இவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் பங்கேற்று ஆற்றிய உரை இவருக்கு உலகப் புகழ் பெற்று தந்தது.
  • இவருடைய ஆன்மீக ஆளுமை இந்தியா முழுவதும் இவருக்கு சீடர்களைபெற்றுத்தந்தது.

Question 3.
அகமதியா இயக்கம்
Answer:

  • அகமதியா இயக்கம் 1889ல் மிர்சா குலாம் அகமது என்பவரால் உருவாக்கப்பட்டது. ‘
  • இஸ்லாமிய மக்கள் குரானில் சொல்லப்பட்டுள்ள உண்மையான கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும்’ என அழைப்பு விடுத்தார்.
  • இவரின் முக்கியமான பணி இந்து சமய மற்றும் கிறித்துவ மதப்பரப்பாளர்கள் இஸ்லாமுக்கு எதிராகவைத்த வாதங்களை எதிர்கொள்வதாகும்.
  • இவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி என கூறி சர்ச்சையை உருவாக்கினார்.

Question 4.
சிங் சபா இயக்கம் :
Answer:

  • சிங் சபா இயக்கம் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக உருவானது
    1. நவீன மேற்கத்தியக் கல்வியை சீக்கியருக்குக் கிடைக்கச் செய்தல்
    2. கிறிஸ்துவ மதப்பரப்பாளர்கள் மற்றும்
  • இந்து சமய மீட்டெடுப்பாளர்களின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளுதல் ஆகியவை சிங் சபா இயக்கவாதிகளின் நடவடிக்கையாக அமைந்தது அகாலி இயக்கம் என்பது சிங் சபா இயக்கத்தின் கிளை இயக்கமாகும்.

Question 5.
வைகுண்டசாமிகள்
Answer:

  • கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பு எனும் ஊரில் 1809ல் பிறந்தவர் ஆவார். இயற்பெயர் முத்துக்குட்டி
  • ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து அதிக வரியை வசூலிக்கும் திருவிதாங்கூர் அரசை கடுமையாக விமர்சித்தார்.
  • விவிலியத்தை கற்றறிந்தார்
  • 22 வது வயதில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று நீராடும் போது தனது சரும நோய் நீங்கப்பெற்றார்.
  • விலங்குகளை பலியிடும் வழக்கத்தை கைவிடும்படி கூறிய இவர் சைவ உணவு பழக்கத்தை கைகொள்ள அறிவுறுத்தினார்.
  • நிழல் தங்கல்’ என்றழைக்கப்பட்ட அவர் உருவாக்கிய உணவுக் கூடங்களில் சாதிக்கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டன.
  • இவரை பின்பற்றியவர்கள் அய்யா வழி வந்தவர்கள் என அழைக்கப்பட்டனர். ஸ்ரீவைகுண்ட சாமிகள் வழிபாடு 1830களில் நிறுவப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

கூடுதல் வினாக்கள்- சுருக்கமான விடையளி

Question 1.
இராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி சுருக்கமாக கூறுக.
Answer:

  • இராமகிருஷ்ண பரமஹம்சர் கல்கத்தாவில் ஒரு கோவிலின் ஏழை பூசாரி
  • முறையாக கல்வி கற்கவில்லை என்றாலும் ஆன்மீகத்தில் சிறப்புற்றார்.
  • இவரைப் பொருத்த மட்டில் ” அனைத்து மதக்கருத்துக்களும் ஒரே இலக்கைச் சென்றடையும் பல்வேறு பாதைகள் ” என்பதாகும்.
  • இவரது இறை உணர்வும், பரந்த பார்வையும் பெருவாரியான மக்களை ஈர்த்தன.
  • தனது கருத்துக்களை கதைகள் மற்றும் வியக்கத்தக்க உவமைகள் மூலமாக விளக்கினார்.
  • இவர் மேல் பற்றுக்கொண்ட ஒருவர் இவரது செய்திகளை “ இராமகிருஷ்ண காதா மிர்தா ” என்னும் தலைப்பில் தொகுத்துள்ளார்.

Question 2.
பண்டிதரமாபாயின் தொண்டுகளைக் கூறுக.
Answer

  • பண்டித ரமாபாய் பெண் விடுதலைக்காக போராடிய முன்னணித்தலைவர்களுள் ஒருவர்
  • சமுதாயத்தில் கீழ்மட்டக் குடும்பத்தைச் சேர்ந்த வங்காளியைத் திருமணம் செய்து கொண்டார்.
  • விதவைகளுக்கான சாரதா சதன் என்னும் அமைப்பை துவங்கினார்
  • “முக்தி சதன்” என்னும் அமைப்பை துவங்கி சுமார் 2000 பெண்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கினார்.
  • புனேயில் 1822ல் “ஆரிய மகிளா சமாஜம் ” என்ற அமைப்பை தொடங்கினார். இதில் 300 பெண்கள் கல்வி கற்றனர்.

VI. விரிவான விடையளி

Question 1.
இந்தியாவில் கிறித்தவ மதப்பரப்பாளர்கள் ஆற்றிய பணிகளை விளக்குக.
Answer:

  • செராம்பூர் மதப்பரப்பாளர்களே முதன் முதலில் இந்தியா வந்த நற்செய்தி மன்றப் பணியாளர்கள் ஆவர்.
  • கிறித்துவ மதத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த மதப்பரப்பாளர்கள் இந்தியாவில் பல பணிகளை மேற்கொண்டனர்.

அவை

  • சமூக பொருளாதார ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கெனப் பள்ளிகளை நிறுவினார்.
  • அரசுப்பணிகளை அவர்களுக்கு பெற்றுத் தருவதன் மூலம், அவர்களின்  பொருளாதாரத்தை உயர்த்தப்பாடுபட்டனர்.
  • பொது சாலைகளைப் பயன்படுத்துதல், தாழ்த்தப்பட்ட பெண்களை மேலாடைகள் அணிந்து கொள்ள செய்தல் போன்ற சமூக உரிமைகளுக்காக பேராடினார்கள்.
  • அனாதை குழந்தைகளுக்கு உண்டி, உறைவிடப்பள்ளிகளை ஏற்படுத்தி அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கினார்.
  • பஞ்ச காலங்களில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
  • மருத்துவமனைகள், மருந்தகங்கள் அமைத்து சமூக சேவையாற்றினார்கள்.
  • பள்ளி, கல்லூரிகளை ஏற்படுத்தி ஏழை மக்களுக்கு கல்வி கொடுக்கும் பொறுப்பை இவர்களே ஏற்றுக்கொண்டனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Question 2.
தமிழ்நாட்டில் நடந்த சமூக சீர்திருத்த இயக்கங்களை எடுத்துக்காட்டுக.
Answer:
வைகுண்டசாமிகள்:

  • கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பு என்னும் ஊரில் பிறந்தவர் முத்துக்குட்டி. இவரே பின்னாளில் வைகுண்ட சாமிகள் என அழைக்கப்பட்டார்.
  • ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து அதிக வரியை வசூலிக்கும் திருவிதாங்கூர் அரசை கடுமையாக விமர்சித்தார்.
  • இவருடைய ” நிழல் தங்கள் ” என்று அழைக்கப்படும் உணவு கூடங்கள் சாதிக் கட்டுப்பாடுகளை உடைத்து எறிந்தன.
  • தன்னைப் பின்பற்றுவோர் எதிர்ப்பின் அடையாளமாக தலைப்பாகை அணியும்படி வலியுறுத்தினார்.
  • இவருடைய கொள்கைகளை பின்பற்றியவர்கள்
    அய்யா வழி வந்தவர்கள் என அழைக்கப்பட்டனர்.

இராமலிங்க அடிகள் :

  • சிதம்பரத்திற்கு அருகே ஓர் எளியக் குடும்பத்தில் பிறந்த இராமலிங்க அடிகளார் முற்போக்கு சிந்தனை கொண்ட பாடல்களை இயற்றினார்.
  • அவர் சத்ய தர்ம சாலையை வடலூரில் நிறுவினார். இந்த தர்மச்சாலையில் ஏழைகளுக்கு சமபந்தி விருந்து அளித்தார்.
  • இவருடைய பாடல்களின் தொகுப்பு “திருவருட்பா” என்ற பெயரில் அவர்களது சீடர்களால் வெளியிடப்பட்டது.
  • தன்னை பின்பற்றுவோரை ஒருங்கிணைப்பதற்காக ” சத்திய ஞான சபை
    என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

பௌத்தத்தின் மீட்டுருவாக்கம் :

  • அயோத்திதாசப் பண்டிதர் ஒருபைசாத் தமிழன்
  • 1861ல் சீவகசிந்தாமணி, 1898ல் மணிமேகலை ஆகிய இரண்டும் முழுமையாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட இந்த பின்னணியில் மிக முக்கியமான ஆளுமை அயோத்தி தாசப் பண்டிதராவார்.
  • 1890களில் ஆதி திராவிடர்களிடையே இயக்கத்தை தொடங்கிய அவர் ஆதிதிராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் என்றும், வேத பிராமணியத்தை எதிர்த்ததன் விளைவாக அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்று வாதிட்டனர்.
  • மக்கள் பெளத்த மதத்திற்கு மாறுவதை ஊக்குவித்தனர்.
  • வட தமிழகப் பகுதிகளில் அதிக மக்களும், கோலார் தங்க வயல் தொழிலாளர்கள் பலரும் இவரது கொள்கையை பின்பற்றினர். இவ்வியக்கத்தில் சிங்கார வேலரும் லட்சுமி தாசும் முக்கிய பங்கு வகித்தனர்.
  • அயோத்தி தாசப் பண்டிதர் 1908 முதல் “ ஒரு பைசா தமிழன்” என்ற பெயரில் வாரப்பத்திரிக்கை ஒன்றை துவங்கி தான் இயற்கை எய்தும் காலம் வடை நடத்தினார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

கூடுதல் வினாக்கள்- விரிவான விடையளி

Question 1.
இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்களைப் பற்றி கூறுக.
Answer:
1. அலிகார் இயக்கம்

  • அலிகார் இயக்கம் 1875 ஆம் ஆண்டு சர் சையது அகமது கானால் தொடங்கப்பட்டது.

அலிகார் இயக்கத்தின் கொள்கைகள்

  • முஸ்லீம்கள் இஸ்லாமின்மேல் கொண்டிருக்கும் பற்றினை பலவீனப்படுத்தாமல் நவீனக் கல்வியை அவர்களிடையே பரப்புதல்
  • பர்தாமுறை, பலதாரமணம், கைம்பெண் மறுமணம், விவாகரத்து போன்றவற்றோடு தொடர்புடைய சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்வது போன்றவையாகும்.

2. அகமதியா இயக்கம்:

  • 1889ல் மிர்சாகுலாம் அகமது என்பரால் உருவாக்கப்பட்ட இவ்வியக்கம் ஒரு மாறுபட்ட போக்கினை ஏற்படுத்தியது.
  • குரானில் சொல்லப்பட்டுள்ள உண்மையான கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும் என்று கூறிய அவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
  • அவருடைய முக்கியப்பணி ஆரிய சமாஜமும், கிறித்துவ சமய பரப்பாளர்களும் இஸ்லாமுக்கு எதிராக வைத்த விவாதங்களை எதிர்கொண்டு மறுத்ததாகும்.

3. தியோபந்த் இயக்கம் 1866:

  • தியோபந்த் இயக்கம் முஸ்லீம் கல்வியாளர்களில் வைதீகப் பிரிவைச் சார்ந்தவர்களால் மீட்டெடுப்பு இயக்கமாக இரு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது.
  • ஒன்று குரானின் தூய்மையான கருத்துக்களையும் ஹதீஸ் எனப்படும் மரபுகளையும் பரப்புரை செய்தல்.
  • இரண்டு, அந்நிய ஆட்சிக்கு எதிராக ஜிகாத் (புனிதபோர்) எனும் உத்வேகத்தை உயிரோட்டமாக வைத்திருப்பது.
  • இஸ்லாமிய சமூகத்தினரிடையே சமயப் புத்துயிர்ப்பை ஏற்படுத்துதல் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • கியோபந்தில் கொடுக்கப்பட்ட குறிப்பாணைகள் செவ்வியல் இஸ்லாமிய மரபுகளை பின்பற்ற வேண்டும் என்பதே.

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

4. நட்வத்- அல் – உலாமா

  • நவீன காலத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுத்த இவ்வியக்கம் 1894ல் லக்னோவில் சிப்லி நுமானி என்னும் வரலாற்று ஆசிரியராலும் வேறுசில அறிஞர்களாலும் உருவாக்கப்பட்டது.
  • நவீன மேற்கத்தியக் கல்வியின் வருகையைத் தொடர்ந்து வந்து இறை மறுப்புக்கொள்கை, லோகாயத வாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள அறிவார்ந்த முறையில் சமயத்திற்கு விளக்கமளிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது.

5. பிரங்கி மஹால் :

  • காலத்தால் மூத்த இச்சிந்தனைப்பள்ளி லக்னோவில் உள்ள பிரங்கி மஹாலில் உருவானது.
  • பிரங்கி மஹால் பள்ளி சூபியிஸத்தை மதிப்பு வாய்ந்த அனுபவமாகவும் அறிந்து கொள்வதற்கான களமாகவும் ஏற்றுக்கொண்டது.
  • மற்றொரு மரபு சார்ந்த இயக்கம் அல் – இ – ஹதித் அல்லது நாயகம் கூறியவற்றை அப்படியே பின்பற்றுபவர்களாவர்.

காலக்கோடு -1

கி.பி. 1500 முதல் 1600 வரையிலான காலக்கோடு வரைந்து விஜயநகர – பாமினி பேரரசு கால நிகழ்ச்சிகளில் ஐந்தினை குறித்து விவரிக்கவும்
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 1

காலக்கோடு-2

கி.பி. 1500 முதல் கி.பி. 1550ஆம் ஆண்டு வரையிலான (பாபர் கால போர் நிகழ்ச்சிகள்) காலக்கோடு வரைந்து ஏதேனும் ஐந்து வரலாற்று நிகழ்ச்சிகளை காலக்கோட்டில் குறித்து விளக்கவும்.
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 2

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

காலக்கோடு – 3

கி.பி. 1530 லிருந்து 1580 ஆம் ஆண்டு வரையிலான காலக்கோடு வரைந்து அதில் ஏதேனும் முக்கிய (முகலாயர் கால) வரலாற்று நிகழ்ச்சிகளை குறித்து விளக்கவும்.
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 3

காலக்கோடு – 4

கி.பி. 1600லிருந்து 1700 ஆண்டு வரையிலான காலக்கோடு வரைந்து முகலாயர் ஆட்சிகால முக்கிய நிகழ்வுகளை காலக்கோட்டில் குறித்து விளக்குக.
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 4

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

காலக்கோடு – 5

கி.பி. 1600 முதல் 1700 வரையிலான காலகோடு வரைந்து வரலாற்று நிகழ்ச்சிகளை குறித்தல்
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 5

காலக்கோடு – 6

மராட்டிய சிவாஜியின் ஆட்சிகால நிகழ்வுகளை காலக்கோட்டில் குறித்து விளக்குக.
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 6

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

காலக்கோடு – 7

கி.பி. 1750 லிருந்து 1850 ஆம் ஆண்டு வரையிலான காலக்கோடு வரைந்து முக்கிய போர் நிகழ்ச்சிகளைக் காலக்கோட்டில் குறித்து விளக்குக.
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 7

காலக்கோடு – 8

19ஆம் நூற்றாண்டின் சமய சீர்திருத்த இயக்கங்கள் பற்றிய காலக்கோடு வரைந்து குறிக்க
Answer:
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 8

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

காலக்கோடு – 9

கி.பி. 1750 முதல் 1860 வரையிலான காலக்கோடு வரைந்து முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகளை குறித்து விளக்குக.
Answer:
1750 – 1860 வரையிலான காலக்கோடு
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 9

காலக்கோடு – 10

கி.பி. 1700 முதல் 1800 வரையிலான காலக்கோடு வரைந்து முக்கிய போர் நிகழ்ச்சிகளை குறிக்க
Answer:
1700 முதல் 1800 வரை காலக்கோடு
Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 10

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 11

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 12

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 13

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 14

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 15

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

 

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 17
இந்திய வரைப்படத்தில் அக்பரின் முகலாய பேரரசு எல்லையை வரைந்து கொடுக்கப்பட்டுள்ள இடங்களைக் குறிக்கவும்
1. காபூல் 2. ஆக்ரா 3.அஜ்மீர் 4. பானிப்பட் 5. பாட்னா

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 18

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 19
இந்திய வரைப்படத்தில் ஒளரங்கசீப் பேரரசு எல்லையை வரைந்து கொடுக்கப்பட்டுள்ள இடங்களைக் குறிக்கவும் (i) பானிப்பட் (ii) அலகாபாத் (iii) வங்காளம் (iv) குஜராத்

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 20

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி

Samacheer Kalvi 11th History Guide Chapter 19 நவீனத்தை நோக்கி 21

Leave a Reply