Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

11th History Guide பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்.
அ) பிராமணங்கள்
ஆ) சங்கிதைகள்
இ) ஆரண்யகங்கள்
ஈ) உபநிடதங்கள்
Answer:
ஆ) சங்கிதைகள்

Question 2.
மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) குருபாஞ்சாலம்
ஆ) கங்கைச்சமவெளி
இ) சிந்துவெளி
ஈ) விதேகா
Answer:
அ) குருபாஞ்சாலம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
ஆதிச்சநல்லூர் ………………. மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அ) கோயம்புத்தூர்
ஆ) திருநெல்வேலி
இ) தூத்துக்குடி
ஈ) வேலூர்
Answer:
இ) தூத்துக்குடி

Question 4.
கீழ்க்காணும் இணைகளை கவனிக்கவும்.
(i) சேனானி – படைத்தளபதி
(ii) கிராமணி – கிராமத்தலைவர்
(iii) பலி – தன்னார்வத்தால் கொடுக்கப் பட்டது
(iv) புரோகிதர் – ஆளுநர்
மேற்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
அ) (i)
ஆ) (ii)
இ) (iii)
ஈ) (iv)
Answer:
ஈ) (iv) புரோகிதர் – ஆளுநர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
கூற்று (கூ): முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை
காரணம் (கா) :பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்
அ) கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை,
இ) கூற்று சரியானது. காரணம் தவறானது.
ஈ) கூற்று , காரணம் இரண்டும் சரியானவை.
Answer:
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை,

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

கூடுதல் வினாக்கள்

Question 1.
சிந்து நாகரீகம் மறைந்த கால கட்டம் ……………………..
அ) பொ.ஆ.மு. 1500
ஆ) பொ .ஆ.மு. 1700
இ) பொ.ஆ.மு. 1900
ஈ) பொ.ஆ.மு. 2100
Answer:
இ) பொ.ஆ.மு. 1900

Question 2.
வேதங்களில் பழைமையானது ………….. வேதம்.
அ) ரிக்
ஆ)யஜூர்
இ) சாம
ஈ) அதர்வண
Answer:
அ) ரிக்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
இசைப்பாடல்களாக அமைந்த ……….. இந்திய
இசை மரபின் அடித்தளமாகக் கருதப்படுகிறது.
அ) ரிக் வேதம்
ஆ) யஜுர் வேதம்
இ) சாம வேதம்
ஈ) அதர்வண வேதம்
Answer:
இ) சாம வேதம்

Question 4.
வேளாண் நிலம் ……………… என்று அறியப்
பட்டிருந்தது.
அ) சீத்தா
ஆ) சுரா
இ) கருஷி
ஈ) ஷேத்ரா
Answer:
ஈ) ஷேத்ரா

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
‘சத்யமேவ ஜயதே’ என்ற சொற்றொடர் …………….. என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
அ) மஹாபாரதம்
ஆ) ஜென்ட் அவெஸ்தா
இ) முண்டக உபநஷத்
ஈ) ராமாயணா
Answer:
இ) முண்டக உபநஷத்

Question 6.
கீழ்க்காணும் இணைகளை கவனிக்கவும்.
(i) இந்திரன் – விடியலின் கடவுள்
(ii) சூரியன் – புரந்தரா
(iii) உஷா – இருளை அகற்றும் கடவுள்
(iv) மாருத் – வலிமையின் கடவுள்
மேற்கண்டவற்றில் எந்த இணை சரியானது?
அ) (i)
ஆ) (ii)
இ) (iii)
ஈ) (iv)
Answer:
(ஈ) (iv) மாருத் – வலிமையின் கடவுள்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 7.
கூற்று (கூ) :ரிக் வேத காலத்தில் பதினாறு – பதினேழு வயதில் திருமணம் நடைபெற்றதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
காரணம் (கா) :அப்போது குழந்தைகள் திருமணம் நடைபெற்றதாக தெரியவில்லை.
அ) கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி. காரணம் தவறானது.
இ) கூற்று காரணம் இரண்டும் சரியானவை.
ஈ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
Answer:
அ) கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 8.
ரிக் வேதம் மொத்தம் …………. காண்டங்களைக் கொண்டுள்ளது
அ) 5
ஆ) 7
இ) 10
ஈ) 13
Answer:
இ) 10

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 9.
அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான எ.ஜெ.ஸ்டுவர்ட், புகழ்பெற்ற மொழியில் அறிஞரான
…………………… ஆகிய இருவரும் ஆதிச்ச நல்லூர் சென்றனர்.
அ) ஆண்டிருஜாஹர்
ஆ) ஆர்.எஸ். சர்மா
இ) ராபர்ட் கால்டுவெல்
ஈ) ஜி.யு.போப்
Answer:
இ) ராபர்ட் கால்டுவெல்

Question 10.
ஆண்டிரு ஜாஹரால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடம்.
அ) சித்தன்னவாசல்
ஆ பையம்பள்ளி
இ கீழம்
ஈ) அதிச்சநல்லூர்
Answer:
ஈ) அதிச்சநல்லூர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

II. குறுகிய விடை தருக.

Question 1.
வேத கால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.
Answer:

  • வித் என்ற சொல்லிலிருந்து வேதம் என்ற சொல் பிறந்தது.
  • வேதங்கள் நான்கு – ரிக், யஜுர், சாம, அதர்வன. இதில் ரிக் வேதம் பழமையானது.
  • இது தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்ற சமய – இலக்கியங்களும் வேத கால இலக்கியங்கள் ஆகும்.

Question 2.
ஜென்ட் அவஸ்தாவைப் பற்றி எழுதுக.
Answer:

  • ஜென்ட் அவெஸ்தா எனப்படும் இப்பாரசீக – ஈரானிய நூல் ஜொராஸ்டிாய மதத்தைச் சேர்ந்த புனித நூலாகும்.
  • இந்தோ -ஈரானிய மொழிகளைப் பேசிவந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு, அவர்களின் கடவுள்கள் குறித்து இந்நூல் பல செய்திகளைக் கூறுகிறது.
  • இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன,
  • இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே அமைந்திருந்த ஆரியர்களின் தொடக்ககால வாழிடங்கள் பற்றி அறிந்துகொள்ள ஏதுவான துணைச்சான்றுகள் இந்நூல் கொண்டுள்ளது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
தொடக்க வேதகாலத்தில் பெண்களின் நிலையைக் கோடிட்டுக்காட்டுக.
Answer:

  • ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஆன்மீகம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
  • அபலா, விஸ்வவாரா, கோசா, லோபமுத்ரா -காத போன்ற பெண் கவிஞர்களும் ரிக் வேதகாலத்தில் வாழ்ந்தனர்.
  • சிறார் மணமோ , உடன்கட்டை ஏறும் சதி வழக்கமோ ரிக் வேதகாலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Question 4.
ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக.
Answer:

  • நிலம், நெருப்பு, காற்று, மழை, இடி மின்னல் போன்ற இயற்கை சக்திகளை ரிக் வேதகால மக்கள் வழிபட்டனர்.
  • பிருதிவி-பூமி, அக்னி-நெருப்பு, வாயு-காற்று, வருணன்-மழை, இந்திரன்-இடி மின்னல் ஆகிய கடவுளர்கள் ரிக் வேத காலத்தில் புகழ் பெற்றிருந்தனர்.
  • ஆதித்தி, உஷஸ் போன்ற பெண் கடவுளரும் இக்காலத்தில் வழிப்பட்டனர்.
  • ஆலயங்களோ, சிலை வழிபாடோ, முந்தைய வேதகாலத்தில் இல்லை. வழிபாட்டின் போது பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
இந்தியாவின் இரும்புக் காலம் குறித்து நீவீர் அறிந்ததென்ன?
Answer:

  • வட இந்தியாவின் இரும்புக் காலமானது ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாட்டோடு ஒத்துப்போகிறது.
  • சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இக்காலக்கட்டத்தின் குடியிருப்புகள் அளவில் பெரியதானவை. அவை வட இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட பெருமளவிலான மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காட்டுகிறது.
  • தென் இந்தியாவில் இரும்புக்காலம் ஈமச் சின்னங்களுடன கூடிய பெருங்கற்காலப் – பண்டமாக உள்ளது.

கூடுதல் வினாக்கள்

Question 1.
ரிக் வேதம் குறிப்பு தருக.
Answer:

  • வேதங்களில் பழமையானது ரிக் வேதமாகும்.
  • இது மொத்தம் 10 காண்டங்களைக் கொண்டது,
  • அவற்றில் இரண்டிலிருந்து ஏழு வரையிலான காண்டங்கள் முதலில் எழுதப்பெற்றன.
  • 1, 8, 9, 10 ஆகிய காண்டங்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவை எனவும் கருதப்படுகின்றன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 2.
குறிப்பு தருக – கொடுமணல்.
Answer:

  • சங்க நூலான பதிற்றுப்பத்தில் சேர அரசனுக்குச் சொந்தமான கொடுமணம் என்ற ஊர் இங்கு கிடைக்கும் விலை மதிப்புமிக்க கற்களுக்காகப் புகழப்படுகிறது.
  • சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் கொடுமணம் தான் இன்றைய கொடுமணல் என சில தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
  • இங்கு ரோமானிய நாணயக் குவியல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • ஈமக் குழிகள், ஈமத் தாழிகள், கற்படுக்கைப் புதைப்பு எனப் பலவகைப்பட்ட புதைக்கும் முறைகள் கொடுமணலில் அகழ்ந்தெடுக்கப் பட்டன.

Question 3.
‘பத்து அரசர்களின் போர்’ பற்றி கூறுக.
Answer:

  • பரத குலமானது பத்து தலைவர்களால் எதிர்க்கப்பட்டது.
  • அவர்களுள் ஐவர் ஆரியர்களாவர். மற்றுமுள்ள ஐவர் ஆரியர் அல்லாதோர்.
  • இவர்களிடையே நடைபெற்ற போர் ‘பத்து அரசர்களின் போர்’ என அறியப்படுகிறது.
  • புருசினி ஆற்றங்கரையில் இப்போர் நடைபெற்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 4.
ரிக் வேதத்திலுள்ள ‘புருஷசுக்தம்’ கூறும் செய்திகள் யாவை?
Answer:
ரிக் வேதத்திலுள்ள புருஷசுக்தம்’ என்னும் பகுதியில் கூறப்பட்டுள்ளவாறு பல வர்ணங்கள் தோன்றியுள்ளன.

  • புருஷ பலியிடப்பட்டபோது அவனுடைய வாயிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள்.
  • இரண்டு கைகளிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள்.
  • தொடைகளிலிருந்து தோன்றியவர்கள் வைசியர்கள்.
  • கால்களிலிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் என்று கூறுகிறது.

Question 5.
பிந்தைய வேதகால சடங்குகள் பற்றி எழுதுக.
Answer:

  •  சமுதாயத்தில் சடங்குகள் முக்கியமாயின.
  • சடங்குகளும், வேள்விகளும், பலியிடுதலும் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் என மக்கள் நம்பினர்.
  • சடங்குகள் மிகச் சரியாக நடத்தப்பட வேண்டுமென வற்புறுத்தப்பட்டது.
  • சடங்குகளை நடத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் முடியும் என்ற மனப்போக்கு , செல்வமிருந்தால் எதையும் சாதிக்கலாம் எனும் எண்ணத்தை உருவாக்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

III. சுருக்கமான விடை தருக

Question 1.
தென் இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடுகளைச் சுருக்கமாக விவரிக்கவும்.
Answer:

  • ஒரு முழுமை பெற்ற செம்புக் கற்காலப் பண்பாடு தென்னிந்தியப் பகுதிகளில் நிலவியதற்கான சான்றுகள் இல்லை.
  • சில இடங்களில் துளையிட்ட பாண்டங்களும், கெண்டி வடிவிலான பாண்டங்களும் கிடைத்துள்ளன.
  • இப்பகுதிகளில் கல்லினாலான கருவிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
  • வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் இக்கால மக்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளன.
  • சிறுதானியங்கள், பயிறு வகைகள். கொள்ளு போன்றவைச் சாகுபடி செய்தன.
  • இம்மக்கள் பழங்களையும், இலைகளையும், கிழங்குகளையும் சேகரித்து உண்டு வாழ்ந்தனர்.

Question 2.
தொடக்ககால வேதகாலத்தின் புவியியல் பரவல்களைப் பட்டியலிடுக.
Answer:
இந்தியத் துணைக் கண்டத்தில், தொடக்க வேதகால ஆரியர்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், மேற்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் வாழ்ந்தனர்.

Question 3.
ரிக் வேத கால சமூகப் பிரிவுகளைக் கோடிட்டு காட்டுக.
Answer:

  • வேதகால ஆரிய மக்கள் ஆரியர் அல்லாத ஏனைய மக்களிடமிருந்து நிறத்தையும், வகையையும் சுட்டிக்காட்டுவதற்காக ஆரியர்கள் ‘வர்ண’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
  • ரிக் வேதம் ‘ஆரிய வர்ண’, ‘தச வர்ண’ என்று குறிப்பிடுகின்றது.
  • தாசர்களும், தசயுக்களும் அடிமைகளாகக் கருதப்பட்டு பிடிக்கப்பட்டனர்.
  • பிற்காலத்தில் இவர்கள் சூத்திரர் என்று அறியப்பட்டனர்.
  • சமூகத்தில் போர் புரிபவர்கள், மத குருமார்கள், சாதாரண மக்கள் என்னும் பிரிவுகள் தோன்றின.
  • ரிக் வேத காலத்தின் கடைப்பகுதியில் சூத்திரர் என்போர் தனிவகைப்பட்ட பிரிவாயினர். அடிமைகள் குருமார்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 4.
மேய்ச்சல் சமூகத்தின் இயல்புகளை ஆய்க.
Answer:

  • மேய்ச்சல் சமூகத்தினர் ஆரம்ப காலத்தில் நாடோடிகளாக இருந்து பிற்காலத்தில் நிலையான இடத்தில் வசித்தனர்.
  • வேளாண்மை செய்ய ஆரம்பித்தார்கள்.
  • கால்நடைகள் புனிதமாக கருதினர்.
  • பண்ட பரிமாற்றத்திலும், மறு விநியோகத்திலும் ஒரு பகுதியாக அது விளங்கியது.
  • கால்நடை மேய்ச்சல் வேளாண்மையின் துணைத் தொழிலானது.
  • கால்நடைகள் மற்றும் ஏனைய விலங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மேய்ச்சல் சமூகத்தின் சொத்துக்கள் மதிப்பிடப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
தொடக்க வேதகால சமூகத்திற்கும் பின் வேதகால சமூகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் காட்டுக.
Answer:

தொடக்க வேதகால சமூகத்திற்கும் பின் வேதகால சமூகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகள்.
தொடக்க வேதகால சமூகம் பிந்தைய வேதகால சமூகம்
1. செம்புக்கால பண்பாடுகளின் கூறுகளோடு பொருந்துகிறது. இரும்புக்கால பண்பாடுகளின் கூறுகளோடு பொருந்துகிறது.
2. செம்புக்கால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டன. சாம்பல் நிற (ஓவியம் தீட்டப்பட்ட) மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.
3. சமூகம் சமத்துவம் தன்மை கொண்டதாகவே இருந்துள்ளது. பிற்காலத்தில் சமூக வேறுபாடுகள் தோன்றியுள்ளன.
4. பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை வகித்தனர். யாகங்களிலும், சடங்குகளிலும் கலந்து கொண்டனர். பிந்தைய வேதகாலத்தில் அவ்வுரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது.
5. கால்நடை வளர்ப்பு என்பது முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இருந்தது கால்நடைகள் சொத்தாக கருதப்பட்டது. வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
6. இந்திரனே மிக முக்கிய கடவுளாவார் பிரஜாபதி முக்கியக் கடவுளானார். அக்னி, இந்திரன் ஆகிய கடவுள் செல்வாக்கை இழந்தனர்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
ஆதிச்சநல்லூரிலுள்ள புதை மேட்டிலிருந்து கிடைத்தவைகளை பட்டியலிடுக.
Answer:

  • அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் பல்வகைப்பட்ட தாழிகளும், மண்பாண்டங்களும்.
  • ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்புக் கருவிகள் (கத்தி, வாள், ஈட்டி, அம்பு), சில கல்மணிகள், ஒருசில தங்க நகைகள்.
  • வீட்டு விலங்குகளான எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, சேவல், காட்டு விலங்குகளான புலி, மிளா, யானை ஆகியவற்றின் வெண்கலப் பொம்மைகள்.
  • துணி, மரப் பொருள்கள் எச்சங்கள் ஆகியவைகள் ஆதிச்சநல்லூரில் உள்ள புதைமேட்டிலிருந்து கிடைத்தவைகளாகும்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 2.
ரிக் வேதகால பெண்களின் நிலையை பற்றி கூறுக.
Answer:

  • பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை வகித்தனர். என்ற போதிலும், அதைப் பொதுமைப்படுத்த முடியாது.
  • பெண்கள் கிராமக் கூட்டங்களில் கலந்து கொண்டனர். வேள்விகளில் பங்கெடுத்தனர்.
  • திருமணம் செய்துகொள்வது நடைமுறையில் இருந்தாலும் புராதன மணமுறைகளும் பின்பற்றப்பட்டன.
  • பலதார மணம் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. மறுமணமும் பழக்கத்தில் இருந்துள்ளது.
  • பதினாறு – பதினேழு வயதில் திருமணம் நடைபெற்றதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
  • வரலாற்று அறிஞர்கள் கருத்துப்படி அப்போது குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகத்
    தெரியவில்லை .

Question 3.
ரிக் வேதகால சமூகத்தின் சிறப்பியல்புகள் யாவை?
Answer:

  • தொடக்க வேத காலத்தில் குலங்களும் இனக்குழுக்களும் சமூகத்தைக் கட்டமைத்தனர்.
  • வர்ணக் கோட்பாடும் ஆரியர்களின் அடையாளப் பெருமிதங்களும் இருந்தபோதிலும் பொதுவாகச் சமூகத்தில் பாகுபாடுகள் ஆழமாக வேரூன்றவில்லை.
  • கால்நடை மேய்ச்சல் வாழ்க்கைமுறை முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.
  • கால்நடைகளை மையப்படுத்திய மோதல்கள் அன்றாடம் நடந்தன.
  • கால்நடை வளர்ப்பு, மேய்ப்பு ஆகியவற்றிற்கு அடுத்த நிலையில் வேளாண்மை முக்கிய இடம் வகித்தது.
  • உலோகத்தினாலான பொருள்களும், மட்பாண்டங்களும், மரத்தினாலான பொருள்களும், துணிகளும், இன்னும் பல பொருள்களும் உற்பத்தி செய்யப்பட்டதைத் தொல்லியல் ஆய்வு உணர்த்துகின்றது. சமூகம் இனக்குழுக்களையும் மரபுவழி குடும்பங்களையும் கொண்டிருந்தன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 4.
பிந்தைய வேதகாலத்தில் உருவான வர்ண (ஜாதி) முறையை கூறுக.
Answer:

  • வர்ண முறையில் பளிச்செனப் புலப்படும் மாற்றங்கள் ஏற்பட்டன.
  • சமூகத்தில் மேல் மட்டத்தில் இரு பிரிவினரான பிராமண, சத்திரியர் ஆகியோரின் அதிகாரம் பெருகியது.
  • நால்வர்ண முறை ஆழமாக வேர் கொண்டு காலப்போக்கில் மேலும் இறுகியது.
  • பஞ்சவம்ச பிராமணத்தில் சத்திரியர்களே பிராமணர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என முதலிடத்தில் வைக்கப்பட்டனர்.
  • ஆனால் சதபத பிராமணம் சத்திரியர்களைவிடப் பிராமணர்களே உயர்ந்தவர்கள் எனக் கூறுகிறது.

Question 5.
பிந்தைய வேதகால பெண்கள் நிலையை கூறுக.
Answer:

  • சமூகம் பல்வேறு பிரிவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கொண்டதாக மாறியதாலும், தந்தை வழிக் குடும்ப அமைப்புகள் முக்கியம் பெற்றிருந்தாலும் சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது.
  • தந்தை குடும்பத்தின் தலைவனாக இருந்தார். அடுத்த நிலையில் மூத்த மகன் முக்கியத்துவம் பெற்றிருந்தான்.
  • ரிக் வேத காலத்தில் பெண்கள் யாகங்களிலும், சடங்குகளிலும் கலந்து கொண்டனர்.
  • பின் வேதகாலத்தில் அவ்வுரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
  • பெண் குழந்தைகள் பிரச்சனைகளின் தோற்றுவாயாகக் கருதப்பட்டனர்.
  • பெண்கள் கால்நடைகள் வளர்ப்பது, பால்கறப்பது, தண்ணீர் இறைப்பது போன்ற பணிகளைச் செய்தனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 6.
பின் வேதகாலத்தில் தனிச்சிறப்பியல்புகள் யாவை?
Answer:

  • இனக்குழுக்களில் வம்சாவளித் தோன்றல்கள், கங்கைச் சமவெளியில் பல குறு அரசுகளின் ஆட்சி உருவாகியது.
  • வளர்ச்சிப் போக்கில் பொ.ஆ.மு. 600க்குப் பின்னர் அவை அரசுகளின் வளர்ந்ததே என்பது பின் வேதகாலத்தின் சிறப்பியல்புகளாகும்.
  • ஜனபதங்கள், ராஷ்டிரங்கள் எனும் பெயர்களில் நிலப்பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
  •  அரசர் அதிக அதிகாரங்களைப் பெற்றார்.
  • சமூகப் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆழமாக வேர்கொண்டன. வர்ண முறை வளர்ச்சியடைந்தது.

IV. விரிவான விடை தருக :

Question 1.
இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.
Answer:

பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகள்:
வட இந்தியாவில் செம்புகால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.

மட்பாண்டங்கள்:
பழுப்பு நிற மஞ்சள் நிற பண்பாடுகளில் ஜாடிகள் கொள்கலன்கள், தட்டுக்கள், அகலமான கிண்ணங்கள் ஆகிய வகைகள் உள்ளன.

காலம்:
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு. 1200 வரையாகும்.

செம்பு பொருட்குவியல் பண்பாடு:
ஆய்விடங்களில் செம்பினால் செய்யப்பட்ட உருவங்களும் ஏனைய பொருட்களும் அதிகம் கிடைப்பதால் இது செம்புப் பொருட்குவியல் பண்பாடு என்றும் அறியப்படுகிறது.

விளை பொருட்கள் :
நெல், பார்லி, பட்டாணி மற்றும் காய் வகைகள் விளைவிக்கப்பட்டன.

கால்நடை வளர்ப்பு:
எருது, பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை, நாய், பன்றி ஆகியவற்றை வளர்த்து வந்தனர்.

வீடு:
மரதட்டிகளின்மேல் களிமண் பூசிக் கட்டப்பட்ட சுவர், மேல் கூரை கொண்ட வீடுகளில் வசித்தனர். சுட்ட களிமண்ணில் அணிகலன்கள் மற்றும் சுடுமண் உருவங்களையும் செய்தனர். இப்பண்பாடு ஒரு கிராமிய பண்பாடு ஆகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 2.
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய் விடங்களைப் பற்றி விவாதிக்க.
Answer:
ஆதிச்சநல்லூர், பையம்பள்ளி, கொடுமணல் ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஆய்வுகள் நடைபெற்றது.

ஆதிச்சநல்லூர்:
திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டு ஆண்டிரு ஜாஹர் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டார்.
அன்றைய மாவட்ட ஆட்சியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட், மொழியியல் வல்லுநர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியினால் அலக்ஸாண்டர் ரீ என்பாரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின.

தாழிகள், மட்பாண்டங்கள், ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்பு கருவிகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள், வீட்டு விலங்குகளின் வெண்கல மொம்மைகள், துணி, மரப்பொருள்களின் எச்சங்கள் ஆகியவை அங்கு கிடைத்ததன் வாயிலாக பெருங்கற்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி நன்கு அறியலாம்.

பையம்பள்ளி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்காவைச் சேர்ந்த கிராமம் பையம்பள்ளி.
1906ல் நடத்திய அகழ்வாய்வில் கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக்கொணர்ந்தது. ஈமத்தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு. 1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.

கொடுமணல் :
ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் ஆற்றின் வடகரையில் உள்ளது கொடுமணல்.
1980, 1990 மற்றும் 2012ல் அகழ்வாய்வு நடைபெற்றது.
மட்பாண்டங்கள், ஆயுதங்கள், கருவிகள், அணிகலன்கள், மணிகள் மற்றும் செம்மணிக்கற்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.

சிப்பிகள், வளையல்கள், எச்சங்கள், சூளைச் சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் கிடைத்துள்ளன. ஈமக்குழிகள், தாழிகள், கற்படுக்கை புதைப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதைக்குழிக்கு அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தை சேர்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல் அகழ்வாய்வில் கிடைத்தவை சங்கத்தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒருகட்டுரை வரைக.
Answer:
அரசுமுறை:

  • வேதகால அரசு முறை என்பது இனக்குழு சமூகத்தின் அரசியலே ஆகும்.
  • இனக்குழுவின் தலைவரே அரசியல் தலைமையாக இருந்தார். அவர் ராஜன் (அரசன்) எனப்பட்டார்.
  • ராஜன் பல தூண்களைக் கொண்ட அரண்மனையில் வாழ்ந்தார். மதக்குருமார் களுக்கு கால்நடைகளையும், தேர்களையும், தங்க அணிகலன்களையும் பரிசாக வழங்கினார்.
  • ராஜன் ஒரு பாரம்பரியத் தலைவரானார்.
  • அரசருடைய முக்கிய பணி இனக்குழுக்களை காப்பதாகும். மக்களின் சொத்துக்களை பாதுகாத்தார்.
  • நிலப்பரப்பின் மீதும், மக்களின் மீதும் அதிகாரம் இருந்தது.
  • சாதாரண மக்களோடு நெருக்கமாய் இருந்தார். அவர்களோடு பொதுவில் உணவருந்தினார்.

நிர்வாகம்:

  • வேத காலத்தில் சபா, சமிதி, விததா, கணா என்ற அமைப்புகள் காணப்பட்டுள்ளன.
  • சபா என்பது மூத்தோர் அல்லது செல்வர்கள் பங்கேற்ற அமைப்பு.
  • சமிதி என்பது மக்கள் கூடும் இடமாகும். விததா என்பது இனக் குழுக்களின் அமைப்பாகும். ராணுவம் மற்றும் மதம் சார்ந்த பணிகளை இவை மேற்கொண்டன.
  • அரசர்கள் தங்களுடைய செயல்பாடுகளுக்கு சபா, சமிதி ஆகிய அமைப்புகளின் ஆதரவை நாடினார்.
  • மதகுருக்கள் அரசருக்கு ஆலோசனை வழங்கி, ஊக்கப்படுத்தி, புகழ்ந்து தங்கள் செல்வாக்கைப் பெற்றனர்.
  • சேனானி என்பவர் படைத்தலைவர் ஆவார். பலி எனப்பட்ட வரிமுறை தானாகவோ அல்லது கட்டாயப்படுத்தி பெறப்பட்டது.
  • நிலப்பரப்பை கட்டுப்படுத்திய அதிகாரி விராஜபதி எனப்பட்டார். படைக்குழுக்களின் தலைவர் களான குலபா அல்லது கிராமணி என்பவர் களுக்கு இவர் உதவி செய்வார். கிராமங்களின் தலைவரும் கிராமணியே ஆவார்.

Leave a Reply