Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் Text Book Back Questions and Answers, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
11th History Guide தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் Text Book Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
கரிகாலன் …………….. மகனாவார்.
அ) செங்கண்ணன்
ஆ) கடுங்கோ
இ) இளஞ்சேட் சென்னி
ஈ) அதியமான்
Answer:
இ) இளஞ்சேட் சென்னி
Question 2.
கீழ்க்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
i) தலையாலங்கானம் – நெடுஞ்செழியன்
ii) பட்டினப்பாலை – உருத்திரங்கண்ணனார்
iii) கஜபாகு – இலங்கை
iv) திருவஞ்சிக்களம் – சோழர்
அ) i)
ஆ) ii)
இ) iii)
ஈ) iv)
Answer:
(ஈ) iv) திருவஞ்சிக்களம் – சோழர்
Question 3.
…………….. ராஜசூய யாகத்தை நடத்தினார்.
அ) பெருநற்கிள்ளி
ஆ) முதுகுடுமிப் பெருவழுதி
இ) சிமுகா
ஈ) அதியமான்
Answer:
அ) பெருநற்கிள்ளி
Question 4.
இந்திர விகாரம் பற்றி ………………….. குறிப்பிடுகிறது.
அ) மணிமேகலை
ஆ) சிலப்பதிகாரம்
இ) அசோகர் கல்வெட்டு
ஈ) சேரர் நாணயம்
Answer:
அ) மணிமேகலை
Question 5.
இக்சவாகுகள் ……………….. பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்.
அ) ஆந்திரா – கர்நாடகா
ஆ) ஒடிசா
இ) தக்காணப் பகுதி
ஈ) பனவாசி
Answer:
அ) ஆந்திரா – கர்நாடகா
Question 6.
கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்து தவறான கூற்றை வெளிக் கொணர்க.
i) களப்பிரர்கள் கலியரசர்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.
ii) களப்பிரர்கள் சைவத்தை ஆதரித்தனர்.
iii) பல்லவரையும் பாண்டியரையும் களப்பிரர் தோற்கடித்தனர்.
iv) இக்சவாகுகள் வேதவேள்விகளை ஆதரித்தனர்.
அ) i)
ஆ) ii)
இ) iii)
ஈ) iv)
Answer:
(இ) iii) பல்லவரையும் பாண்டியரையும் களப்பிரர் தோற்கடித்தனர்.
கூடுதல் வினாக்கள்
Question 1.
கௌதமிபுத்திர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர் ……………….
அ) வசிஷ்டபுத்ர புலுமாவி
ஆ) நாகப்பனா
இ) கடம்பர்
ஈ) யக்னஸ்ரீ சதகர்னி
Answer:
அ) வசிஷ்டபுத்ர புலுமாவி
Question 2.
…………………….. அரசர் ஹால் 700 காதற் பாடல்களைக் கொண்ட காதாசப்தசதி என்ற நூலை இயற்றினார்.
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) சாதவாகன
Answer:
ஈ) சாதவாகன
Question 3.
சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம் …………………….
அ) தஞ்சாவூர்
ஆ) காவிரிப்பூப்பட்டினம்
இ) உறையூர்
ஈ) சாகர்கள்
Answer:
இ) உறையூர்
Question 4.
சேரர்களின் துறைமுக நகரம் ………………….
அ) தொண்டி
ஆ) புகார்
இ) கொற்கை
ஈ) நெல்கிண்டா
Answer:
அ) தொண்டி
Question 5.
பாண்டியர்களின் துறைமுக நகரம் ……………………..
அ) முசிறி
ஆ) தொண்டி
இ) புகார்
ஈ) கொற்கை
Answer:
ஈ) கொற்கை
Question 6.
”மதுரை காஞ்சி” என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ள “அல்லங்காடி” என்பது …………………….
அ) பகல்
ஆ) இரவு
இ) மாலை
ஈ) பகல் மற்றும் இரவு
Answer:
ஆ) இரவு
Question 7.
தமிழகத்தில் “இருண்ட காலம்” என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது ……………………..
அ) சாதவாகனர்கள் ஆட்சிக்காலம்
ஆ) வெளிர்கள் ஆட்சிக்காலம்
இ) பகல்வர் ஆட்சிக்காலம்
ஈ) களப்பிரகர் ஆட்சிக்காலம்
Answer:
ஈ) களப்பிரகர் ஆட்சிக்காலம்
Question 8.
“சேத்தன் ” , “கூற்றன் ” என்ற இரு அரசர்களின் பெயர்களை குறிப்பிடும் கல்வெட்டு ……………………..
அ) கூரம் செப்பு பட்டயம்
ஆ) ஐஹோல் கல்வெட்டு
இ) அலகாபாத் கல்வெட்டு
ஈ) பூலாங்குறிச்சி கல்வெட்டு
Answer:
ஈ) பூலாங்குறிச்சி கல்வெட்டு
Question 9.
வெண்ணிப்போரில் வெற்றி பெற்றவன் …………………….
அ) கரிகாலன்
ஆ) நெடுஞ்செழியன்
இ) செங்குட்டுவன்
ஈ) மகேந்திரன்
Answer:
அ) கரிகாலன்
II. குறுகிய விடை தருக.
Question 1.
பண்டமாற்று முறையை விளக்குக.
Answer:
பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமான பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்தது.
Question 2.
மதுரைக்காஞ்சியிலிருந்து நீ அறிவது என்ன ?
Answer:
மதுரைக்காஞ்சி முதுகுடுமிப் பெருவழுதியையும் மற்றொரு நெடுஞ்செழியனான தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும் வேறு சில பாண்டிய மன்னர்களையும் குறிப்பிடுகின்றது.
Question 3.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை பற்றி நீ அறிந்தது என்ன?
Answer:
மன்னர் நெடுஞ்செறலாதனின் மகன். சேரன் இரும்பொறையே ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என அழைக்கப்படுகிறார். இவர் வெற்றியை (ஆடு) தனது கொள்கையாகக் (கோட்பாடு) கொண்டு பல வெற்றிகள் குறித்து வீறு பெற்ற மன்னனாக வாழ்ந்தார்.
கூடுதல் வினாக்கள்
Question 1.
தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் நாணயச் சான்றுகள் யாவை?
Answer:
நாணயச் சான்றுகள் :
- ஆந்திரா – கர்நாடகா பகுதிகளின் சாதவாகனர் மற்றும் அவர்களுக்கு முந்தைய குறுநில மன்னர் வெளியிட்ட நாணயங்கள்.
- சங்க காலச் சேர, சோழ, பாண்டிய அரசர்களும் வேளிரும் வெயியிட்ட நாணயங்கள்.
- தங்கம், வெள்ளி, தாமிரத்தாலான ரோம நாணயங்கள்.
Question 2.
கல்வெட்டுகளைப் பற்றி எழுதுக.
Answer:
- ஆந்திரா – கர்நாடகப் பகுதிகளில் காணப்படும், பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்ட அசோகர் கல்வெட்டுகள்.
- தமிழக, கேரளக் குகைகளில் காணப்படும் தமிழ் – பிராமி கல்வெட்டுகள்: மாங்குளம், ஜம்பை, புகளூர் முதலானவை.
- ஆந்திரப் பகுதியிலுள்ள சாதவாகனர் கல்வெட்டுகளும் பிறபௌத்த கல்வெட்டுகளும்.
தமிழகப் பகுதியில் கிடைத்துள்ள மட்பாண்டங்கள், மோதிரம், கற்கள் ஆகியவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள்; இந்தியாவிற்கு வெளியே பெரனிக்கே, குவாசிர் அல் காதம் (எகிப்து), கோர் ரோரி ஓமன்), குவாங்லுக் (தாய்லாந்து) போன்ற இடங்களில் காணப்படும் ஆவணங்கள்.
Question 3.
தென் இந்திய வரலாற்றை அறிய உதவும் வெளிநாட்டவரது குறிப்புகள் யாவை?
Answer:
வெளிநாட்டவரது குறிப்புகள் :
கீழ்க்காணும் கிரேக்க, லத்தீன் சான்றுகள் தொலைதூர வணிகம், பண்பாட்டுத் தொடர்புகள் குறித்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.
- பொ. ஆ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான கிரேக்க நூலான எரித்தரியக் கடலின் பெரிப்ளஸ்.
- பொ. ஆ. முதலாம் நூற்றாண்டில் மூத்த பிளினி எழுதிய இயற்கை வரலாறு’ (Natural History).
- பொ. ஆ. இரண்டாம் நூற்றாண்டில் தாலமி எழுதிய ஜியோகிரபி (புவியியல்).
- ரோமானியரின் வரைபடமான பீயூட்டெஞ்செரியன் அட்டவணை (Peutingerian Table).
Question 4.
பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் கூறுக.
Answer:
நெடுஞ்செழியன் சேரர், சோழர், ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள் (திதியன் , எழினி , கொற்கையின் தலைவனென்றும், திருநெல்வேலி கடற்கரைப் பகுதியில் வாழும் மீன் பிடிக்கும், போர்புரியும் திறன் பெற்ற தென்பகுதி பரதவர்களின் தலைவனென்றும் இவர் புகழப்படுகிறார்.
எருமையூரான், இருங்கோவேண்மான், பொருநன்miss கானத்துப் போரில் வெற்றி கொண்டதற்காகப் புகழப்படுகிறார்.
மேலும் சிற்றரசர்களிடமிருந்து (வேளிர்) மிலலை, முத்தூர் (புதுக்கோட்டை மாவட்டம்) என்னும் இடங்களைக் கைப்பற்றிய பெருமை இவரையே சாரும்.
III. சிறு குறிப்பு வரைக
Question 1.
சங்க காலத்தில் தமிழ் நிலத்தின் ஐந்து திணைகள்.
Answer:
திணைக் கோட்பாட்டின் பின்புலத்தின் தமிழகம் குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து முக்கிய நிலப்பரப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
- குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த பகுதியுமாகும்.
- முல்லை – காடும் காடு சார்ந்த பகுதியுமாகும்.
- மருதம் – வயலும் வயல் சார்ந்த பகுதியுமாகும்.
- நெய்தல் – கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகும்.
- பாலை – மணலும் மணல் சார்ந்த வறண்ட பகுதியுமாகும்.
Question 2.
சோழ அரசர்களில் தலை சிறந்தவன்
Answer:
கரிகாலன்.
இளஞ்சேட் சென்னியின் மகனான கரிகாலன் சங்க கால சோழ அரசர்களில் தலையாயவராக அறியப்படுகிறார். “பட்டினப்பாலை” அவருடைய ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. கரிகாலனுடைய தலையாய போர் வெற்றி என்பதுவெண்ணி போர்களத்தில் சேரரையும் பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய பதினோரு வேளிர் குலத் தலைவர்களையும் வெற்றி கொண்டதாகும்.
காட்டை வெட்டி நாடாக்கியதற்காகவும், குளம் வெட்டி வளம் பெருக்கியதற்காகவும், காவிரியில் அணை கட்டி, வாய்க்கால்கள் வெட்டி நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தன் மூலம் வேளாண்மையே வளரச் செய்தார் என்பதற்காகவும் இவர் போற்றப்படுகிறார்.
Question 3.
கெளதமி புத்திர சதகர்னியின் சாதனைகளை எழுதுக.
Answer:
- சாதவாகன அரசர்களுள் கௌதமபுத்ர சதகர்னி பெரும் அரசனாவார்.
- சாக அரசர் ‘நாகப்பனா’ வை வென்ற அவர் நாகபனாவின் நாணயங்களைத் தன் அரசமுத்திரையோடு மீண்டும் வெளியிட்டார்.
அவருடைய தாயான கௌதம பாலஸ்ரீ என்பாரின் நாசிக் கல்வெட்டு, சாகர் பகல்வர், யவனர்கள் ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாக ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாகக் கூறுகிறது. பெருமைக்குரிய அஸ்வமேத யாகத்தை இவர் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
Question 4.
கிழார் – வேளிர் இருவருக்குமுள்ள வேறுபாடுகள்.
Answer:
கிழார் :
கிழார் என்போர் கிராமங்களின் அல்லது ஒரு சிறிய பகுதியின் தலைவராக இருந்து, பின்னர் நாடு என்றறியப்பட்ட நிர்வாகப் பிரிவின் தலைவராவர். இவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழும் பழங்குடிச் சமூகங்களின் தலைவர்களாவர்.
வேளிர் :
வேளிர்கள், பல்வேறு புவியியல் தன்மைகளைக் கொண்ட, குறிப்பாக மூவேந்தர்களின் வளம் நிறைந்த பகுதிகளின் இடையே அமைந்திருந்த மலைப்பாங்கான காட்டுப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர்.
கூடுதல் வினாக்கள்
Question 1.
தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் இலக்கியச் சான்றுகள் யாவை?
Answer:
இலக்கியச் சான்றுகள் :
- சங்க நூல்களும் சங்கம் மருவிய இலக்கியங்களும்
- பொருளாதாரம், அரசாட்சிக் கலை ஆகியன குறித்து கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம்.
- ஆந்திரர் / சாதவாகனர் வம்சாவளி வரலாற்றினைக் குறிப்பிடும் புராணங்கள்.
- மகாவம்வம் முதலான பௌத்த வரலாற்று நூல்கள்.
- சாதவாகன அரசர் ஹால் பிராகிருத மொழியில் எழுதிய காதாசப்தசதி.
Question 2.
தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.
Answer:
தமிழ் செவ்வியல் இலக்கியத் தொகுப்பானது தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதையியலைப் பற்றி மட்டும் பேசவில்லை . அக்காலத்து சமூகப் பண்பாட்டையும் பேசுகிறது.
சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும்காப்பியங்களும் (பொ. ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை) இதற்கடுத்த காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலைச் சார்ந்தவையாகும்.
Question 3.
சாதவாகனர் காலத்தின் முக்கியத்துவம் யாது?
Answer:
நிலமானியம் வழங்குவது சாதவாகனர் காலத்தின் முக்கிய அம்சமாகும். இதன் பயனாளிகள் பெரும்பாலும் பௌத்தர்களும் பிராமணர்களும் ஆவர். பௌத்தத் துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை நனிகாட் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
இவ்வாறு மதகுருமார்களைக் கொண்ட குழுக்கள் செல்வாக்குப் பெற்று உயரிடத்தை வகிக்கத் தொடங்கியதைக் காண முடிகிறது. நிலங்களைக் கொடையாக வழங்கும் இம்முறை நிலங்களில் வேளாண்மை செய்யாமல், நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய ஒரு பிரிவினரை உருவாக்கியது.
இது காலப்போக்கில் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் படிநிலைகளும் பிரிவுகளும் உருவாவதற்கு இட்டுச் சென்றது.
IV. விரிவான விடை தருக :
Question 1.
“சங்க கால அரசியல் முறையானது அரசு உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்த தலைமையுரிமையே ஆகும்” இக்கூற்றை ஆதரித் தோ எதிர்த்தோ உனது காரணங்களை வழங்கு.
Answer:
சங்க கால சேர, சோழ, பாண்டிய அரசுகளின் அரசியல் அமைப்பைப் பொறுத்த மட்டிலும் அறிஞர்களிடையே பல மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. தொடக்க காலத்தைச் சேர்ந்ததும் பெரும்பான்மையோரால் ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்தும் யாதெனில் சங்ககாலச் சமுதாயமானது நன்கு கட்டமைக்கப்பட்ட அரசைக் கொண்ட ஒரு சமூகம் என்பதாகும்.
அ. தங்கள் கருத்துக்கு ஆதரவாக முன் வைக்கும் வாதங்கள் வருமாறு :
- சமூகப் பிரிவினைகள் வெளிப்படவில்லை .
- எல்லைகள் தெளிவாக வரையறை செய்யப்படாத நிலையிருந்தது.
- ஒரு அரசின் உருவாக்கத்திற்குத் தேவைப்படும். வேளாண் வளர்ச்சியும் வேளாண் உபரியும் நாசம் ஏற்படுத்தும் போர்களால் தடுக்கப்பட்டன.
- வட இந்திய அரசுகளைப் போல வரி விதிப்பு இருந்ததாகச் சான்றுகள் இல்லை.
ஆ. மேற்கண்ட கருத்திற்கு எதிரானவர்கள் முன் வைக்கும் காரணங்கள்:
- சங்க இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்தோமேயானால் மருத நிலப்பகுதி வாழ் சமூக;ததில் வேற்றுமைகள் தோன்றிவிட்டதை அறியலாம்.
- தங்கள் நிலத்தின் மீது மூவேந்தர் கொண்டிருந்த பற்றையும் இவர்கள் பெற்றிருந்த செல்வாக்கையும் கிரேக்க – ரோமானிய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன.
- ஆட்சிப் பகுதிகளை விரிவுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட போர்களே புறத்திணை இலக்கியங்களின் முக்கியப்பாடு பொருளாக இருக்கின்றன.
- வணிகப் பெருவழிகளிலும், காவிரிப் பூம்பட்டிணம் துறைமுகத்திலும் வரி வசூலிக்கப் பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
- பொ. ஆ. மு. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, பொ. ஆ. மூன்றாம் நூற்றாண்டு வரை வணிகம் மிகப்பெரும் பங்கை வகித்துள்ளது.
Question 2.
மூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.
Answer:
சங்க காலத்தில் மூவேந்தர் என்றறியப்பட்ட மணிமுடி சூடிய அரசர்களான சேர, சோழ, பாண்டியர் பெரும்பாலான வேளாண் நிலங்களையும், வணிகப் பெருவழிகளையும் நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
சோழர்:
- தமிழகத்தின் மத்திய வட பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டிருந்தனர்.
- அவர்களது ஆட்சியின் மையமாக இருந்த பகுதி காவிரியாற்றின் கழிமுகப் பகுதியாகும்.
- இதுவே பின்னர் சோழ மண்டலம் என்றழைக்கப்பட்டது. அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும். (திருச்சிராப்பள்ளி நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது.
- மேலும் புகார் அல்லது காவிரிப்பூம்பட்டினமானது முக்கியத் துறைமுகமாகவும் திகழ்ந்தது.
- சோழரின் சின்னம் புலி ஆகும்.
சேரர் :
- மத்திய, வடக்கு கேரளப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியினையும் ஆட்சி செய்தனர்.
- வஞ்சி அவர்களின் தலைநகராகும். மேலைக் கடற்கரைத் துறைமுகங்களான முசிறியும் தொண்டியும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தன.
- சில அறிஞர்கள் கேரளத்திலுள்ள திருவஞ்சைக்களம் என்னும் ஊரே வஞ்சி என்று அடையாளங்காண்கின்றனர்.
- சேரர்களின் சின்னம் வில் அம்பு ஆகும்.
பாண்டியர் :
- மதுரையிலிருந்து ஆண்டர். தாமிரபரணி நதி வங்காள விரிகுடாக் கடலில் கலக்குமிடத்தில் அமைந்துள்ள கொற்கை அவர்களின் முக்கியத் துறைமுகமாகும்.
- இது முத்துக் குளிப்பிற்கும் சங்குகள் சேகரிப்பிற்கும் பெயர் பெற்றதாகும். கொற்கை பெரிப்ளசின் குறிப்புகளில் கொல்கொய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- பாண்டியரின் சின்னம் மீன்.
- மரபுவழிச் செய்தியின்படி பாண்டியர் தமிழ்ச் சங்கங்களை ஆதரித்து சங்க நூல்களைத் தொகுப்பித்தனர்.
Question 3.
களப்பிரர் என்போர் யார்? அவர்கள் குறித்து பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலிருந்து அறிந்து கொள்வதென்ன?
Answer:
சங்க காலத்திற்கும், பல்லவர், பாண்டியர் காலத்திற்கும் இடைப்பட்ட (தோராயமாக, பொ. ஆ. 300 – 600க்கும்) காலமே, தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் என அறியப்படுகிறது.
களப்பிரர்கள் என்போர் தமிழகத்தைக் கைப்பற்றித் தமிழகத்தின் பாரம்பரிய அரசுகளான மூவேந்தர்களையும் தோற்கடித்ததால் இக்காலமானது களப்பிரர்களின் இடைக்கால ஆட்சி என்றும், இருண்ட காலமென்றும் தொடக்க கால வரலாற்று ஆசிரியர்கள் சித்தரித்தனர்.
தமிழ்ப்பண்பாட்டின் பல சிறந்த கூறுகள் இக்காலத்தில்தான் தோன்றியிருக்கிறது. இக்காலத்தில்தான் உன்னதமான தமிழ் இலக்கியமான திருக்குறளும் அதோடு ஏனைய பதினென் கீழ்க்கணக்கு நூல்களும் இயற்றப்பட்டன.
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சிறந்த காப்பியங்களும் இக்காலத்தைச் சார்ந்தவையே.
இக்கால கட்டம் ஒரு பெறும் மாற்றத்தை நோக்கி இட்டுச் சென்ற மாறுதல் காலமாகும்.
இந்த மாறுதல்களின் விளைவாகவே, பொ. ஆ. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் வட தமிழகத்தில் பல்லவரும், தென்தமிழகத்தில் பாண்டியரும் அரசு மற்றும் சமூகத்தை உருவாக்க வழி உருவானது.
தொடக்கத்தில் இந்நாடுகளின் அரசர்கள் சமண பௌத்த மதங்களையே ஆதரித்தனர். ஆனால் அவர்கள் படிப்படியாக சைவ – வைணவ பக்தி இயக்கத்தால் புத்துயிர் பெற்ற வேத புராண மதங்களின் செல்வாக்கிற்கு உள்ளாயினர்.
சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகளில் ஒன்று சேந்தன், கூற்றன் என்ற இரு அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது.
அவர்களின் குடும்பம் வம்சாவளி ஆகியன குறித்து எக்குறிப்பும் காணப்படாவிட்டாலும் சில அறிஞர்கள் அவர்களைக் களப்பிர அரசர்கள் எனக் கருதுகின்றனர். பொ. ஆ. ஆறாம் நூற்றாண்டின் மூன்றாவது கால்பகுதி காலத்தில் களப்பிரர்கள் ஆட்சி பாண்டியர்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது.
கூடுதல் வினாக்கள்
Question 1.
சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.
Answer:
சங்க கால வணிகர்கள் பற்றிய சான்றுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. தமிழ் – பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாந்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.
கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க ஆபரணங்கள் செய்தல், மட்பாண்டம் செய்தல் போன்ற உற்பத்தி நடவடிக்கைகள் குறித்த சான்றுகள் உள்ளன. மதுரைக் காஞ்சி பகல் நேரத்தில் நாளங்காடியிலும், இரவு நேரங்களில் அல்லங்காடியிலும் நடைபெற்ற வாணிபம் குறித்து கூறுகின்றது.
மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள சில பெயர்கள், தமிழ்மொழி பேசாத ஏனைய மக்கள் பெரும்பாலும் வணிகர்கள், நகரங்களிலும், தொழில் மையங்களிலும் இருந்ததை தெரிவிக்கின்றன. தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். உப்பு வணிகர்கள் உமணர் என அழைக்கப்பட்டனர்.
அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வாணிபத்தில் ஈடுபட்டனர். சாத்து எனும் சொல் இடம் விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கும்.
ரோமப் பேரரசு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு வாணிபத் தொடர்புகள் இருந்ததை தொல்பொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. இந்தியா எளிதில் தொடர்புகொள்ள கூடிய பூகோள அமைப்பை பெற்றிருப்பதால் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள் எளிதில் ஏற்பட்டன. ரோமானியர்களால் கொண்டு வரப்பட்ட செல்வம், அயல்நாட்டு வணிகர்கள் வருகை போன்றவை குறித்த தொல்லியல் சான்றுகள் ஏராளமாய் கிடைத்துள்ளன.
எனவே சங்க காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்நாட்டு வாணிபமும், தொலைதூர வாணிகமும் சிறந்து விளங்கியதில் எவ்வித ஐயமும் இல்லை .
Question 2.
சங்க கால தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் தொல்பொருள் மற்றும் நாணயச் சான்றுகளை விவரி.
Answer:
பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டில் தக்காணத்தில் ஒரு வலுவான அரசை சாதவாகனர்கள் நிறுவினர். அதே காலகட்டத்தில் தமிழக பகுதியில் சேர, சோழ, பாண்டியர் என்று அழைக்கப்பட்ட மூவேந்தர்கள் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தனர். இவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளமான தொல்பொருள் மற்றும் இலக்கியச் சான்றுகள் நமக்கு கிடைத்துள்ளன. அவை முறையே
தொல்பொருள் :
- தொடக்க வரலாற்றுக் காலத்தை சார்ந்த பெருங்கற்காலப் புதைவிடங்கள்.
- அரிக்கமேடு, கொடுமணல், ஆலங்குளம், உறையூர் போன்ற இடங்களில் காணப்பட்ட கட்டிட இடிபாட்டுத் தடயங்கள்.
- துறைமுகங்கள், நகரங்கள் உள்ளிட்ட பழங்கால இடங்களில் அகழ்வாய்வின் மூலம் பெறப்பட்ட பொருள்கள்.
- ஆந்திரா – கர்நாடகப் பகுதிகளில் அமைந்துள்ள ஸ்தூபிகளும், சைத்யங்களும்.
நாணயச் சான்றுகள் :
பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமான பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்தது.