Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்
Text Book Back Questions and Answers, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்
11th History Guide மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் Text Book Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
அலெக்சாண்டரின் திறன்மிக்க தளபதிகளுள் ஒருவர். ……………………
அ) செலியுகஸ் நிகேடர்
ஆ) அன்டிகோனஸ்
இ) அண்டியோகஸ்
ஈ) டெமெட்ரியஸ்
Answer:
அ) செலியுகஸ் நிகேடர்
Question 2.
செலியுகஸ் நிகேடரால் தலைநகரம் பாடலிபுத்திரத்துக்கு …………………… தூதராக மெகஸ்தனிஸ் அனுப்பப்பட்டார்.
அ) ரோமானிய
ஆ) கிரேக்க
இ) சீன
ஈ) பிரிட்டிஷ்
Answer:
ஆ) கிரேக்க
Question 3.
வழக்கமான தூதர்கள் மற்றும் கடிதப் பரிமாற்றம் ………………
அ) இந்தியாவிலிருந்து மேற்குக்கான வழக்கமான வணிகத்தைப் பாதித்தது.
ஆ) இந்தியாவிலிருந்து மேற்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது.
இ) இந்தியாவிலிருந்து கிழக்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது.
ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
Answer:
(ஆ) இந்தியாவிலிருந்து மேற்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது.
Question 4.
இந்தோ -கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவர் ……………………
அ) யூதிடெமஸ்
ஆ) டெமெட்ரியஸ்
இ) மினாண்டர்
ஈ) ஆன்டியால்ஸைடஸ்
Answer:
இ) மினாண்டர்
Question 5.
குஷாண நாணயங்கள் ……………………. நாணயங்களை விட உயர்ந்த தரத்தில் இருந்தன.
அ) ரோமானிய
ஆ) கிரேக்க
இ) குப்த
ஈ) சாதவாகன
Answer:
அ) ரோமானிய
Question 6.
இந்தோ -கிரேக்கக் கலை மற்றும் சிற்பப் பாணி …………………………. என்று குறிப்பிடப்பட்டது.
அ) மதுரா கலை
ஆ) காந்தாரக் கலை
இ) பாக்கலை
ஈ) பாலா கலை
Answer:
ஆ) காந்தாரக் கலை
Question 7.
கீழ்க்கண்டவற்றில் பொருத்தமற்றது எது?
அ) புத்தசரிதம் – அஸ்வகோஷர்
ஆ) எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ் – மெகஸ்தனிஸ்
இ) அர்த்தசாஸ்திரம் – கௌடில்யர்
ஈ) காமசூத்திரம் – வாத்சாயனர்
Answer:
ஆ) எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ் – மெகஸ்தனிஸ்
Question 8.
சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர் ……………………
அ) மொக
ஆ) ருத்ரதாமன்
இ) அஸிஸ்
ஈ) யசோவர்மன்
Question 9.
ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகத்தின் தன்மைகள் பொது ஆண்டின் தொடக்கத்தில் மாறியதற்குக் காரணம்.
i) பொ.ஆ.மு. கடைசி நூற்றாண்டின் முடிவில் மத்திய தரைக்கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோம் எழுச்சியுற்றது.
ii) அரேபியக் கடலில் வீசும் பருவக் காற்றுகளின் காலமுறை இயல்புகள் பொ.ஆ. முதல் நூற்றாண்டில் ஹிப்பால ஸால் கண்டுபிடிக்கப்பட்டது.
அ) (i) சரி
ஆ) (ii)சரி
இ) (i),(ii) இரண்டுமே சரி
ஈ) (i),(ii) இரண்டுமே தவறு
Answer:
இ) (i),(ii) இரண்டுமே சரி
Question 10.
………………………. பகுதியில் ரோமானிய நாணயங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
அ) அரிக்கமேடு
ஆ) ஆதிச்சநல்லூர்
இ) புகார்
ஈ) பல்லாவரம்
Answer:
அ) அரிக்கமேடு
கூடுதல் வினாக்கள்
Question 1.
கங்கை பகுதிகள் இருந்து தரிவிக்கப்பட்டு ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நறுமணத்தைலம் …………………..
அ) மிளகுத் தைலம்
ஆ) விளாமிச்சைவேர்த் தைலம்
இ) தாளிச பத்ரிதைலம்
ஈ) யூகலிப்டஸ் தைலம்
Answer:
ஆ) விளாமிச்சைவேர்த் தைலம்
Question 2.
முதன்முதலாக அறியப்பட்ட இந்தோ – கிரேக்க அரசர் …………………..
அ) டியோடோடஸ்
ஆ) ஆண்டியோகஸ்
இ) டெமிட்ரியஸ்
ஈ) யூதிடெமஸ்
Answer:
இ) டெமிட்ரியஸ்
Question 3.
பாகபத்ர அரசரின் அரச சபைக்குத் தூதராக மினாண்டரால் அனுப்பப்பட்டவர் ……………………
அ) ஹீயோடோரஸ்
ஆ) ஆண்டியால் சைடல்
இ) வோனேனெஸ்
ஈ) மித்ரடேட்ஸ்
Answer:
அ) ஹீயோடோரஸ்
Question 4.
புகழ்பெற்ற ஜீனாகத் பாறைக் கல்வெட்டில் போற்றப்பட்டுள்ள சாக சத்ரப். …………………….
அ) ருத்ராமன்
ஆ) ருத்ரமாறன்
இ) ருத்ரதாசன்
ஈ) ருத்ரதாமன்
Answer:
ஈ) ருத்ரதாமன்
Question 5.
சுங்கர்களைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் ……………………..
அ) சாகர்கள்
ஆ) சாதவாளனர்கள்
இ) மௌரியர்கள்
ஈ) யவனர்கள்
Answer:
ஆ) சாதவாளனர்கள்
Question 6.
கனிஷ்கர் கூட்டிய பௌத்த மகாசங்கம் …………………………..
அ) முதல் பௌத்த சங்கம்
ஆ) 2ஆம் பௌத்த சங்கம்
இ) 3ஆம் பௌத்த சங்கம்
ஈ) 4ஆம் பௌத்த சங்கம்
Answer:
ஈ) 4ஆம் பௌத்த சங்கம்
Question 7.
நாசிக் கல்வெட்டு இவருடைய சாதனைகளைக் குறிப்பிடுகிறது …………………..
அ) புஷ்யமித்ர சுங்கம்
ஆ)கௌதமிபுத்ரசதகர்னி
இ) கனிஷ்கர்
ஈ) மீனாந்தர்
Answer:
ஆ)கௌதமிபுத்ரசதகர்னி
Question 8.
புத்த சரிதம் என்ற நூல் ஆசிரியர் ……………………..
அ) வசுமித்திரர்
ஆ) அஸ்வகோசர்
இ) யுவான்சுவாங்
ஈ) ஹர்சர்
Answer:
ஆ) அஸ்வகோசர்
Question 9.
வாதஸ்யானர் எழுதிய நூல்.
அ) மனுஸ்மிருதி
ஆ) இனடிகா
இ) காமசூத்ரம்
ஈ) அர்த்தசாஸ்திரம்
Answer:
இ) காமசூத்ரம்
Question 10.
சோழமண்டலக் கடற்கரையில் இருந்த மிக முக்கியமான துறைமுகம்
அ) முசிறி
ஆ) தொண்டி
இ) கொற்கை
ஈ) புகார்
Answer:
ஈ) புகார்
Question 11.
கூற்று : பிளாண்டர் குறித்த தகவல்களை நாம் அறிவதற்கு அவரது தூதர் ஹீலியோடோரஸ் என்பவரே காரணம்
காரணம் : இவர் பாகபத்ர அரசரின் அரச சபைக்குத் தூதராக பினாண்டரால் அனுப்பப்பட்டார்.
i) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ii) கூற்று சரி, காரணம் தவறு
iii) கூற்று தவறு, காரணம் சரி
iv) கூற்றும் காரணமும் சரி, காரம் கூற்றை விளக்கவில்லை
Answer:
i) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
Question 12.
சரியான இணையை எடுத்து எழுதுக.
i) சாகாயா – அ. கனிஷ்கர்
ii) புருஷபுரம் – ஆ. புஷ்யமித்ர சுங்கர்
iii) பாடலிபுத்திரம் – இ. மீனாந்தம்
iv) தட்சசீலம் – ஈ. முதலாம் ஆசஸ்
Answer:
iv) தட்சசீலம் – ஈ. முதலாம் ஆசஸ்
II. குறுகிய விடை தருக.
Question 1.
இந்தியாவை மத்தியத் தரைக்கடல் உலகத்தோடும் மத்திய ஆசியாவோடும், சீனாவோடும் இணைப்பதற்கு இட்டுச் சென்றது எது?.
Answer:
பேரரசர் அசோகர் இரக்கத்தையும் அதன் விளைவாக மெளரியப் பேரரசின் வீழ்ச்சியயையும் தொடர்ந்து வந்த நான்கு நூற்றாண்டுகளில் இந்தியாவின் சில பகுதிகள் மேற்காசியா, மத்திய ஆசியாவைச் சேர்ந்த இந்தோ – கிரேக்கர், சாகர், குஷாணர் ஆகியோரின் படையெடுப்புகளுக்கு உள்ளாயின.
- இவர்கள் அனைவருமே இந்தியாவின் பெறும்பகுதிகளில் தங்களின் ஆட்சிகளை நிறுவினர்.
- இது இந்தியச் சமூகத்திற்குள் , பண்பாட்டுமயமாக்கம், அந்நிய நாடுகளின் பண்பாடுகள், கலை வடிவங்கள் ஆகியவற்றைத் தன்வயப்படுத்துதல் ஆகிய செயல் முறைகளை வலுப்படுத்தியது.
- மேலும், இது விரிவான வணிகத் தொடர்புகள் மூலம் மத்தியத் தரைக்கடல் பகுதிகள், மத்திய ஆசியா சீனா ஆகியவற்றோடு இந்தியாவை ஒருங்கிணைத்தது.
Question 2.
சந்திரகுப்தருக்கும் செலியுகஸ் நிகேடருக்கும் இடையே நிகழ்ந்த போரின் விளைவு என்ன?
Answer:
- பொ. ஆ.மு. 305 வாக்கில் சந்திரகுப்தர் செலியுகஸை எதிர்த்துப் போரிட்டு அவரைத் தோற்கடித்தார்.
- இருப்பினும், இது அலெக்ஸாண்டரின் ஏனைய ஆளுநர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற கொடுரமான தோல்வி அல்ல.
- மாறாக, சந்திரகுப்தர் செலியுகஸுடன் ஓர் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார்.
- சிந்து வரையிலும் தான் வெற்றி கொண்டிருந்த நிலப்பரப்பை ஒப்படைத்த செலியுகஸ், அதற்கு பதிலாக 500 போர் யானைகளைப் பெற்றுக் கொண்டார்.
Question 3.
“யவன” என்ற சொல்லுக்குப் பொருள் என்ன ?
Answer:
- இந்தியா முழுவதும் கிரேக்கர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட யவன (அல்லது யோன) என்ற சொல்லை இப்பொழுது பார்ப்போம்.
- இச்சொல், பாரசீக மொழியில் கிரேக்கர்களைக் குறிக்கும். “யயுனா” என்றும் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
- இந்தியாவில் இச்சொல்லானது கலப்பின மக்கள் உட்பட கிரேக்கத்தை பிறப்பிடமாகக் கொண்ட அனைவரையும் மேலும் பொனீசியர்களைக் கூடக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
Question 4.
“நாட்டின் வட மேற்கில் ஒரு பெரிய அரசை மினாண்டர் ஆட்சி செய்ததாகக் கூறப் படுகிறது” விவரிக்கவும்?
Answer:
- இந்தோ – கிரேக்க அரசர்களிலேயே நன்கறியப்பட்டவரான மினாண்டர், (சுமார் பொ.ஆ.மு. 165/145-130) நாட்டின் வடமேற்கில் ஒரு பெரிய பகுதியை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.
- அவரது நாணயங்கள், காபூல், சிந்து நதிகளின் சமவெளிகளிலிருந்து மேற்கு உத்திரபிரதேசம் வரையிலுமான விரிந்து பரந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Question 5.
“சத்ரப்கள்” பற்றி நீவீர் அறிவது யாது?
Answer:
- சாகர்களின் ஆட்சிக்காலத்தில் மாகாண ஆளுனர்கள் “சத்ரப்கள்” என்று அழைக்கப்பட்டனர்.
- சத்ரப்க்கள் பலரும் தங்களை சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டு தங்களுக்கு மஹாசத்ரபாக்கள் என்ற பட்டப் பெயரை சூட்டிக் கொண்டார்கள்.
- புகழ் பெற்ற சாக சத்ரப்களில் புகழ் பெற்றவர் ”ருத்ரதாமன்” என்பவராவார்.
- இவர் சாதவாகனர்களையும் போரில் தோற்கடித்துள்ளார்.
Question 6.
பின்வருவன குறித்து ஒரு பட்டியலைத் தயாரிக்கவும்
அ) இந்தியாவிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்.
ஆ) ரோமிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்.
Answer:
ஏற்றுமதிப் பொருட்கள்
இந்தியாவிலிருந்து ரோமுக்கு மிளகு , முத்துக்கல், தந்தம், பட்டுத்துணி, விளாமிச்சை வேர் தைலம், தாளிசபத்திரி என்ற நறுமணப் பொருள், நீலக்கல், கோமேதகம், வைரம், ஆமை ஓடு மற்றும் பருத்தி துணிகள் ஆகியவை ஏற்றுமதி ஆகியன.
இறக்குமதிப் பொருட்கள்
ரோமிலிருந்து இந்தியாவிற்கு நாணயங்கள், புஷ்பராசக்கல், அஞ்சனம், பவழம் கச்சா கண்ணாடி, தாமிரம், தகரம், ஈயம், மது வகைகள் போன்றவை இறக்குமதி செய்யப் பட்டன.
Question 7.
பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்திற்குமான வணிகர்களின் பங்களிப்பை விவரிக்கவும்?
Answer:
- வணிகம் பெருமளவும் வளர்ந்த நிலையில் வணிகர்கள் எண்ணிக்கையில் பெருகி சமுதாயத்தில் முக்கியமானோர் ஆயினர்.
- கடல் கடந்த வணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள்.
- வெளிநாடுகளுடன் தரை வழியாகவும் வாணிபத்தில் ஈடுபட்டனர்.
- இந்த வளர்ச்சியானது விரிவடைந்து வரும் வணிக நடவடிக்கைகளுக்கு உதவியது.
- எனவே வணிகம் விரிவடைந்து பொருளாதார உற்பத்தியின் அடித்தளத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியது.
கூடுதல் வினாக்கள்
Question 1.
காந்தாரக்கலையைப் பற்றி கூறுக.
Answer:
பண்பாட்டுத் தாக்கங்கள் சங்கமிக்குமிடத்தில் அமைந்துள்ள காந்தாரம் கிரேக்க மற்றும் ரோமானியப் பண்பாடுகளின் செல்வாக்குக்கு ரோமானியம் உட்பட்டது. பொ.ஆ. முதல் நூற்றாண்டில் காந்தாரக் கலை வடிவங்கள் வளர்ச்சியடைந்தன.
குஷாணப் பேரரசுக் காலத்தில் ரோமுடனான அதன் தொடர்புகளினால் ரோமானியக் கலைநுட்பங்கள் இந்தியக் கலை நுட்பங்களோடு கலந்து, வடமேற்கு இந்தியா முழுவதும்
பின்பற்றப்பட்டன.
ஆன்மநிலையில் – கண்கள் பாதி மூடிய நிலையில் தியானத்திலிருக்கிற புத்தரைச் சித்தரித்ததற்காகக் காந்தாரக்கலை புகழ் பெற்றது.
Question 2.
குறிப்பு வரைக : செலியுகஸ் நிகேடர்
Answer:
அலெக்ஸாண்டரின் திறமை மிக்க தளபதிகளுள் ஒருவரான செலியுகஸ் நிகேடர் பொ.ஆ.மு 311க்குப் பிறகு பிரிஜியா (துருக்கி) தொடங்கி சிந்து நதி வரையிலுமான ஒரு மிகப்பெரிய பரப்பில் வெற்றிகரமாக தனது ஆட்சியை நிறுவினார்.
பொ.ஆ.மு. 305 வாக்கில் சந்திரகுப்தர் செலியுகஸை எதிர்த்துப் போரிட்டு அவரைத் தோற்கடித்தார். இருப்பினும் இது அலெக்ஸாண்டரின் ஏனைய ஆளுநர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற கொடூரமான தோல்வி அல்ல
Question 3.
ரோமானிய பேரரசு குடியரசு பற்றி கூறுக
Answer:
- ரோமானியக் குடியரசு பொ.ஆ.மு. 27ல் பேரரசர் அகஸ்டஸின் கீழ் ஒரு பேரரசு ஆயிற்று.
- ஐரோப்பாவிலும் வடஆப்பிரிக்காவிலும் பெற்ற வெற்றிகள் மூலம் குவித்திருந்த மிகப்பெரும் செல்வங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரோம்தான் உலகிலேயே மிகப்பெரிய செல்வச் செழிப்பு மிக்க நகரமாகும்.
- ரோமின் செல்வச் செழிப்பு, இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பொருள்களின் வணிகத்தை பெருக்கியது.
- குறிப்பாக தமிழ்நாட்டின் நறுமணப் பொருள்கள் மற்றும் துணி வகைகளின், தேவையை அங்கு பெருமளவிற்கு அதிகரித்து ஒரு பெரும் வணிக விரிவாக்கத்தை ஏற்படுத்தியது.
Question 4.
கனிஷ்கரைப் பற்றிய குறிப்பு தருக (அல்லது) குஷானர்களில் புகழ்பெற்ற அரசர் யார்? அவரைப் பற்றிக் கூறுக.
Answer:
- குஷான அரசர்களில் புகழ் பெற்றவர் கனிஷ்கர் ஆவார்.
- பௌத்தத்தின் மகாயானப்பிரிவை இவர் ஆர்வமுடன் பின்பற்றினார். நான்காம் பௌத்த மகா சங்கத்தை கூட்டியவர்.
- இவரது காலத்தில் தான் காந்தாரக் கலை வளர்ச்சியுற்றது.
- அஸ்வகோஷர், பார்ஸ்வர். வசுமித்ரர். நாகார்ஜுனர் ஆகிய பௌத்தத் தத்துவ ஞானிகளை ஆதரித்தவர் கனிஷ்கர்.
III. சுருக்கமான விடை தருக
Question 1.
டெமெட்ரியஸீடைய நாணயங்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டுக.
Answer:
- இந்தோ – கிரேக்க அரசர்களில் அறியப்பட்ட முதல் அரசர் டெமெட்ரியஸ் ஆவார்.
- இந்தோ – கிரேக்கர்கள் நேர்த்தி மிக்க நாணயங்களை வெளியிட்டனர்.
- இந்நாணயங்கள் அவர்களின் ஆட்சியை வேறுபடுத்தி காட்டுகின்ற அம்சங்களோடு வெளியிடப்பட்டன.
- நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிற அரசரின் உருவமும், பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.
- அரசர்கள் பல விதமான தலைக்கவசங்களோடு இருப்பது தனிச்சிறப்பு.
- இந்நாணயங்கள் தனிமுக மற்றும் உடல் கூறுகளையும் கொண்ட அரசரின் தோற்றத்தைக் காட்டுகின்றன.
Question 2.
மினாண்டர் குறித்து நீங்கள் அறிந்தவை யாது?.
Answer:
- மீனாத்தார், மிலித்தா என்றும் அழைக்கப்படுகிறார்.
- அவர் புத்த சமயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்.
- புத்த சமயத் துறவி நாகபாணருடன் அவர் உரையாடியது மிலிந்த பின்ஹோ ன்ற பாலிமொழி நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
- மீனாந்தர் புத்த சமயத்தை தழுவினார்.
- கிரேக்கத் தூதரான ஹீலியோடோரஸ் வைணவ சமயத்தை தழுவியதோடு பெஸ் நகரில் கருடத்தூணையும் நிறுவினார்.
Question 3.
“முற்பட்ட கால ரோமானிய நாணயங்கள் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் அதிகம் கிடைக்கின்றன” ஏன்?
Answer:
- மேற்குக் கரையிலிருந்து, ரோமானிய வணிகர்கள் நிலவழியே பாலக்காடு கணவாயைக் கடந்து கிழக்கேயுள்ள உற்பத்தி மையங்களுக்கு வந்தனர்.
- ஈரோட்டிலுள்ள கொடுமணல், படியூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் ரோம் நாட்டில் அதிக தேவையில் இருந்த நவரத்தினக் கல்லான கோமேதகம் கிடைக்கின்ற சுரங்கங்களிருந்தன.
- மேலும், ஈரோடு அருகேயுள்ள சென்னிமலையில் உற்பத்தி செய்யப்பட்ட இரும்பும் எஃகும் ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
- உருக்காலை மற்றும் உருக்கு எச்சங்கள் இங்கே அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இதனால்தான் முற்பட்ட காலத்திய ரோமானிய நாணயங்கள், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் அதிக அளவில் கிடைப்பதைக் காண்கிறோம்.
Question 4.
“இரண்டு வணிகச் சுற்றுகளின் மையமாக முசிறி இருந்தது” எவ்வாறு?
Answer:
- சங்கப் பாடல்களின் படி முசிறி நகரம் இரண்டு வணிகச் சுற்றுகளின் மையமாக இருந்துள்ளது.
- நாட்டின் உள்பகுதிகளிலிருந்து அரிசியை ஏற்றிவந்த படகுகள் திரும்பிச் செல்கையில் மீன்களை ஏற்றிச் சென்றன.
- இது அடிப்படையான நுகர்வுப் பொருள்களின் வணிகத்தில் பண்டமாற்று முறை பின்பற்றப்பட்டதைச் சுட்டுகிறது.
அதே நேரத்தில், சந்தைக்குக் கொண்டு வரப்பட்ட கருமிளகு மூட்டைகள், கப்பலில் வந்த தங்கத்திற்குப் பண்டமாற்று செய்துகொள்ளப்பட்டு, பின் அத்தங்கம் படகுகளில் கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
Question 5.
பரிமாற்றத்துக்கான ஒர ஊடகமாகப் பணத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கவும்?
Answer:
நவீனத்துக்கு முந்தைய அனைத்துப்பொருளாதாரங்கலும் பரிமாற்றத்துக்கு ஒரு முக்கியமான ஊடகமாகப் பண்டமாற்று முறை விளங்கியிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த உப்பு வணிகர்கள், கிழக்கு உட்புறக் கடற்கரைப் பகுதிகளிலிருந்துத் தங்களின் வண்டிகளில் உப்பை ஏற்றிக் கொண்டு குழுக்களாகச் சேர்ந்து சென்றனர்
அவர்கள் தங்களின் உப்பைப் பணத்துக்கு விற்காமல் ஏனைய பண்டங்களுக்காவும் இதரத் தேவைகளுக்காகவும் பண்டமாற்று செய்து கொண்டிருக்கவே வாய்ப்பு அதிகம்.
இருப்பினும், தரைவழி, கடல்வழி, வணிகம் ஆகியவற்றின் அளவும், கூடவே நகர அங்காடிகள் குறித்து இலக்கியத்திலுள்ள சித்தரிப்புகளில் பணம்தான் பரிமாற்றத்துக்கான முக்கிய ஊடகமாக இருந்தது என்பதை உணர்த்துகின்றன.
Question 6.
கிரேக்கருடனான இந்தியத் தொடர்பின் விளைவான பண்பாட்டுத் தாக்கத்தின் சிறப்புகளைக் கூறவும்.
Answer:
- கிரேக்கர்களின் படையெடுப்பு, பரஸ்பரப் பண்பாட்டுத் தாக்கம் ஏற்படுவதற்கு இட்டுச் சென்றது.
- இந்தியாவில் அலெக்ஸாண்டர் இறந்த பிறகு, அவரத தளபதி செலியுகஸ் நிகேடர், தொடர்ந்து வடமேற்கு இந்தியப் பகுதிகளில் ஆட்சி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து இராஜாங்க உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.
- பாடபுத்திரத்தில் உள்ள நினைவு சின்னங்களில் கிரேக்க பண்பாட்டுத் தாக்கம் தெரிந்தது..
- மௌரியப் பேரரசின் விரிவான நிர்வாக அமைப்பு கிரேக்க நிர்வாக அமைப்பு முறையை ஒத்திருந்தது.
- மேற்கு இந்தியாவில் இந்தோ – கிரேக்க அரசாட்சிகள் தோன்றியது. இந்திய வரலாற்றில் மாறுபட்ட பண்பாட்டின் தாக்கத்தை ஏற்படுத்தியது.
- மேலும் மாறுபட்ட தனித்தன்மை கொண்ட கலைச் சிந்தனையும், போக்கையும் இந்தியாவில் ஏற்படுத்தியது.
கூடுதல் வினாக்கள்
Question 1.
காந்தாரக்கலையை பற்றி கூறுக?.
Answer:
சிலை வடிப்புக் கலையில் கிரேக்க தாக்கத்தின் காரணமாக இந்திய – கிரேக்க பாணியிலான கூறுகள் ஒன்றிமைந்து புதியமுறை உருவானது.
இது காந்தாரக்கலை எனப்படுகிறது. இந்தோ கிரேக்க பாணியிலான சிற்பங்களும் கலையும்
தோன்றுவதற்கு வழிவகுத்தது.
தட்சசீலத்திலும் வடமேற்குப் பகுதியிலும் செதுக்கப்பட்ட புத்தரின் சிலைகள் கிரேக்க மரபால் ஊக்கம் பெற்று, கண்ணியமான ஆடைகளில் தேவதூதர்களாலும் சிலைகளாலும் சூழப்பட்டு உள்ளதாக அவரைக் காட்டுகின்றன.
Question 2.
சாகர்களைப் பற்றி எழுதுக.
Answer:
- இந்தியாவின் முதல் சாக ஆட்சியாளர் மௌஸ் அல்லது மொ/மொகா ஆவார்.
- காந்தாரத்தைக் கைப்பற்றிய அவர், இந்தோ – கிரேக்க அரசாட்சியில் ஒரு பிளவை ஏற்படுத்தினார்.
- அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அஸிதான் இந்தோ – கிரேக்க அரசாட்சிகளின் கடைசி மிச்சங்களை இறுதியாக அழித்து கிழக்கே மதுரா வரையிலும் சாகர்களின் ஆட்சியை விரிவுப்படுத்தினார்.
- இந்தியாவில் சாகர்கள், இந்து சமூகத்துக்குள் இரண்டறக் கலந்து விட்டனர்.
- இந்தப் பெயர்களையும், மத நம்பிக்கைகளையும் கைக்கொள்ளத் தொடங்கினர்.
- அவர்களது நாணயங்களின் ஒருபக்கத்தில் இந்துக் கடவுள்களின் உருவம் பொறிக்கப்பட்டது.
- சாகர்கள் தங்களின் ஆட்சிப் பகுதிகளை நிர்வகிக்க சத்ரப்களை மாகாண ஆளுநர்களாக நியமித்தனர்.
- சத்ரபாக்கள் பலரும் தங்களுக்கு மஹாசத்ரபாக்கள் எனப்பட்டம் சூடிக் கொண்டதோடு நடைமுறையில் சுதந்திர ஆட்சியாளர்களாயினர்.
- புகழ் பெற்ற சாக சத்தரப்களில் ஒருவர்தான் ருத்ரதாமன்.
Question 3.
கனிஷ்கர் கால இலக்கியங்கள் யாவை?
Answer:
பௌத்த ஆசான் நாகார்ஜுனர், பௌத்தத் தத்துவஞானிகள் அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்திரர், போன்றோரின் புரவலராகப் பேரரசர் கனிஷ்கர் திகழ்ந்தனர்.
“அஸ்வகோஷர்” அவரது “புத்த சரிதம் ” நூலுக்காகப் புகழ் பெற்றவர் என்பதோடு ஒன்பது காட்சிகளில் அமைந்த சரிபுத்ரப்ரகரண என்ற முதல் சமஸ்கிருத நாடகத்தின் ஆசிரியர் என்பதற்காகவும் போற்றப்படுகிறார்.
மாபெரும் நாடகாசிரியர் பாசன், பெரும்பாலும் இந்தக் காலத்தைச் சேர்ந்தவராவார்.
இந்து மத நூல்களில் மனு ஸ்மிருதி, வாத் சயாயனரின் காமசூத்ரம், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்கள் இதே பொ.ஆ. 2ம் நூற்றாண்டில் தான் இறுதி வடிவம் பெற்றன என்பதை அறிகிறோம்.
IV. விரிவான விடை தருக :
Question 1.
மேற்கு இந்தியாவில் இந்தோ – கிரேக்க அரசர்களின் எழுச்சி, வணிக , பண்பாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்தியது விவரிக்கவும்.
Answer:
அலெக்சாண்டர் படையெடுப்பும் இந்தியத் தொடர்பும்: அலெக்சாண்டர் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்து பஞ்சாப் பகுதியை கைப்பற்றியதிலிருந்து கிரேக்கர்களுடனான இந்திய தொடர்பு தொடங்கியது.
அலெக்சாண்டருக்குப்பின் அவரது தளபதிகளில் ஒருவரான செல்யூகஸ் நிகேடர் இந்தியாவின் சிந்து பகுதி வரை ஆட்சி செய்தார்.
பின்னர் இந்தோ – கிரேக்க அரசர்களின் முக்கியமானவர்களாக “டெமட்ரியஸ்”, “மினான்டர்”, “ஆண்டியால் சைடஸ்’ போன்றோர் எழுச்சி பெற்றனர்.
நாணயங்கள் :
இந்தோ – கிரேக்க அரசர்களின் தனிச் சிறப்பு நேர்த்திமிக்க நாணயங்களை வெளியிடுவது ஆகும். மீனாள்டரின் நாணயங்கள் இந்தியாவில் மேற்கு உத்தரபிரதேசம் வரை கிடைத்துள்ளது. இதிலிருந்து இந்தோ – கிரேக்க உறவு எவ்விதம் இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
நினைவுச் சின்னங்கள் :
பாடலிபுத்திரத்தில் உற்ற நினைவுச் சின்னங்கள் இந்தோ – கிரேக்க கலையை பிரதிபலிக்கின்றன. மேலும் மௌரியப் பேரரசின் விரிவான நிர்வாக அமைப்பு கிரேக்கர்களுடைய நிர்வாக அமைப்பை ஒத்து இருந்தன.
மேலும் மேற்கு இந்தியாவில் இந்தோ – கிரேக்க அரசாட்சிகள் தோன்றியது ஒரு மாறுபட்ட பண்பாட்டின் தாக்கத்தை ஏற்படுத்தியது. கட்டிடக்கலையில் தனித்தன்மை கொண்ட போக்கை ஏற்படுத்தியது.
அசோகர் காலம்:
அசோகர் காலத்தில் ஏற்பட்ட மௌரிய பேரரசின் விரிவாக்கம் ஆஃப்கானிஸ்தான் வரை இருந்தது. இதனால் மேற்கே எகிப்து வரை முறையான வாணிபம் நடைபெறுவதற்கு உதவி புரிந்தது.
தரைவழி வணிகமானது வடமேற்கு ஆஃகானிஸ் வழியாக நடைபெற்றது.
ஏற்றுமதி :
இந்தியாவிலிருந்து தந்தம், ஆமை ஓடுகள், முத்துக்கள், அவுரி, விளாமிச்சை, வேர்த்தைலம், தாளிசபத்ரி மற்றும் அரியவகை மரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இவ்வாறாக இந்தோ – கிரேக்க வணிகம், பண்பாடு வலுபடுத்தப்பட்டது.
Question 2.
கலைக்கும் இலக்கியத்துக்குமான கனிஷ்கரின் பங்களிப்பு குறித்து விவாதிக்கவும்.
Answer:
குஷாணர்கள் காலத்தில் நிலவிய பெருமளவிலான படைப்பாற்றல் காரணமாக கலையும், இலக்கியமும் செழித்து இருந்தன. கனிஷ்கரும் கலை, இலக்கியத்தில் ஆர்வமிக்கவராய் இருந்ததால் பல படைப்புகள் உருவாயின
கலை – மகாயான புத்தமதம் :
கனிஷ்கர் காலத்தில் கலை வளர்வதற்கு மஹாயான புத்தமதப்பிரிவும் ஒருகாரணமாகும். மகாயான பிரிவு புத்தரை கடவுளாக சித்தரித்தது. உருவ வழிபாட்டை ஆதரித்தது. புத்தரை மனித வடிவில் சிலை வடிப்பதை ஊக்குவித்தது.
சிலை வடிவமைப்பு :
கிரேக்கத் தாக்கத்தின் காரணமாக இந்தோ – கிரேக்க கூறுகள் ஒன்றிணைந்து புதிய கலை படைப்பு உருவானது. இது காந்தாரக்கலை என அழைக்கப்படுகிறது.
ஆன்ம நிலையில், கண்களை பாதி மூடிய நிலையில், தியான நிலையில் புத்தர் இருப்பது போன்ற சிலைகள் வடிவமைக்கப்பட்டன.
புத்தரின் சிலைகள் :
குறிப்பாக தட்சசீலத்திலும், வடமேற்குப் பகுதிகளில் செதுக்கப்பட்ட புத்தரின் சிலைகள் கண்ணியமான ஆடைகளாலும் , தேவ தூதர்களாலும், இலைகளாலும் சூழப்பட்டிருப்பது போன்று வடிவமைக்கப்பட்டன.
மதுரா அருகே செம்மணற்கல்லில் மிக நுட்பமாக செதுக்கப்பட்ட புத்தரின் சிலைகள் இக்காலகட்ட சிற்பக்கலையின் உச்சம் ஆகும்.
குகைகள்:
அஜந்தா குகைகள் முதல் மும்பையின் கன்ஹேரி குகைகள் வரை பௌத்தர்கள் பாறைகளைக் குடைந்து குகைகள் அமைத்தனர். இக்குகைகளில் பெரிய அளவு புத்தரின் சிலைகள் வடிவமைக்கப்பட்டன.
இலக்கியம்:
பௌத்த ஆசான் நாகார்ஜுனர், பௌத்தத் தத்துவஞானிகள் அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்திரர், போன்றோரின் புரவலராகப் பேரரசர் கனிஷ்கர் திகழ்ந்தனர்.
“அஸவகோஷர்” அவரது “புத்தசரிதம்” நூலுக்காகப் புகழ் பெற்றவர் என்பதோடு ஒன்பது காட்சிகளில் அமைந்த சரிபுத்ரப்ரகரண என்ற முதல் சமஸ்கிருத நாடகத்தின் ஆசிரியர் என்பதற்காகவும் போற்றப்படுகிறார்.
மாபெரும் நாடகாசிரியர் பாசன், பெரும்பாலும் இந்தக் காலத்தைச் சேர்ந்தவராவார்.
இந்து மத நூல்களில் மனு ஸ்மிருதி, வாத் சயாயனரின் காமசூத்ரம், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்கள் இதே பொ.ஆ. 2ம் நூற்றாண்டில் தான் இறுதி வடிவம் பெற்றன என்பதை அறிகிறோம்
Question 3.
மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ் சக்தியாக ரோமானிய அரசு மேலெழுந்த விதத்தை விவரி.
Answer:
ரோம் குடியரசும் மத்தியத் தரைகடலும் :
பொது ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முக்கியமான வளர்ச்சியின் காரணமாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வாணிபத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பொ.ஆ.மு. கடைசி நூற்றாண்டின் முடிவில் கிரேக்க அரசுகளை அகற்றி விட்டு மத்திய தரைகடல் உலகின் வல்லரசாக ரோம் எழுந்தது. மேலும் பொ.ஆ. மு. 27ல் பேரரசர் அகஸ்டஸின் கீழ் ஒரு பேரரசாக ரோம் உருவெடுத்தது.
வெற்றியும் செல்வகுவிப்பும் :
ஐரோப்பாவிலும், வடஆப்பிரிக்காவிலும் பெற்ற வெற்றிகள் மூலம் குவிந்திருந்த மிகப் பெரிய செல்வங்களை ரோம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
இச்செல்வங்கள் ரோமின் புகழை உலகறியச் செய்தன அன்றைய காலகட்டத்தில் ரோம் தான் உலகிலேயே மிகப் பெரியதும், செல்வச் செழிப்பு மிக்க நகரமாகும் இதன் மூலம் மத்தியத் தரைக்கடல் வழியாக நடைபெறும் வணிகம் ரோமானியர்களின் கைகளில் வந்தது.
குறிப்பாக தமிழ்நாட்டின் நறுமணப் பொருள்கள் மற்றும் அணிவகைகளின் தேவை ரோமுக்கு அவசியமாயிற்று. இந்த அவசியம் ஒரு பெரும் வணிக விரிவாக்கத்தை ஏற்படுத்தியது.
ஹிப்பாலஸ்காலக்கணிப்பு :
பொ.ஆ. முதலாம் நூற்றாண்டில் எகிப்தின் கடலோடி “ஹிப்பாலஸ்” என்பவர் அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலத்தை கணித்தார். இந்தக் கண்டுபிடிப்பு மிகப்பெரிய அளவில் மத்திய தரைக்கடல் வாணிபத்திற்கு உதவியது.
இதுவரை அரேபியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய தரைக்கடல் வாணிபம் மெல்ல மெல்ல ரோமாபுரியின் கைகளுக்கு மாறின.
மேலும் இதுவரை அரேபியருக்கு ஏகபோகமாய் இருந்த இரகசியங்கள் வெளி உலகத்திற்கு வெட்ட வெளிச்சமாயின.
நேரடி கடல் வழி :
ரோமானியக் கப்பல்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரையை நோக்கி நேரடியாக பயணிக்கத் தொடங்கின. பயம் நிறைந்த கடல் வழிகளையும் தரை வழி வாணிபத்தையும் ரோமானியர்கள்
தவிர்த்த னர்.
இதன்மூலம் அவர்களுக்கு பயணப்பாதுகாப்பு எட்டியது. இந்தியாவிற்கான நேரடி கடல் வழி திறப்பின் இறுதி விளைவாக இந்தியாவிற்கு வரும் ரோமானிய கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
ஆண்டுக்கு 20 கப்பல்கள் என்பதிலிருந்து ஏறக்குறைய அன்றாடம் ஒரு கப்பல் என்று அதிகரித்தது. இவ்வாறு மத்தியத் தரைக்கடல் உலகின் தனிப்பெரும் சக்தியாக ரோமானிய அரசு உருவெடுத்தது.
Question 4.
பொ.ஆ. 1 ஆம் நூற்றாண்டு தமிழ் அரசாட்சிகள் குறித்த விவரங்கள் தருக.
Answer:
சாதவாகன ஆட்சி :
இந்தியாவின் வடபகுதியில் நிகழ்ந்து வந்த அரசியல் மாறுதல்களினால் தென்னிந்தியா பாதிக்கப்படாமல் இருந்தது. பொ.ஆ. முதல் நூற்றாண்டில் நவீன ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை உள்ளடக்கிய தக்காணப் பகுதியில் சாதவாகன ஆட்சி நிறுவப்பட்டது.
இது மௌரிய ஆட்சியை போன்று ஒரு மையப்படுத்தப்பட்ட ஆட்சியாக அமையவில்லை. சாதவாகன மாகாண ஆட்சியாளர்கள் பலம் தன்னாட்சி உரிமை பெற்றிருந்தனர்.
மூவேந்தர்கள் :
வட இந்தியாவில் அமைந்த பரந்த பேரரசுகள் போல் அல்லாமல் தென்னிந்தியாவின் தமிழ் பகுதியில் சிற்றரசர்கள் ஆட்சியில் இருந்தனர். அவர்கள் மூவேந்தர்கள் என அழைக்கப்பட்டனர்.
- மதுரையை தலைமையிடமாக கொண்டு பாண்டியர்களும்
- உறையூரை தலைமையிடமாகக் கொண்டு சோழர்களும்
- வஞ்சியை தலைமையிடமாகக் கொண்டு சேரர்களும் ஆட்சி புரிந்தனர்.
மௌரியக் கால கல்வெட்டில் :
பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே மௌரிய அரசர்கள் தமிழக மூவேந்தர்களைப் பற்றிய செய்திகளை தங்கள் கல்வெட்டுக்களில் பொறித்து வைத்துள்ளார்கள்.
அசோகரின் 2வது கல்வெட்டு ஆணையில் தனது பேரரசின் எல்லையில் அமைந்த அரசுகளைப் பற்றி கூறியுள்ளார்கள்.
மூவேந்தர்கள் மட்டும் தென்னிந்தியாவை ஆண்டனர் என கூற இயலாது. சிறிய பகுதிகளை ஆட்சி புரிந்த ஏராளமான சிற்றரசர்களும் இருந்தனர் என்பதில் ஐயமில்லை . இந்த சிற்றரசர்கள் அந்த காலத்தில் வேளிர் என அழைக்கப்பட்டனர்.