Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 5.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்
குறுவினாக்கள்
Question 1.
மருத்துவத்தின் பிரிவுகளாகக் குறள் கூறுவன யாவை?
Answer:
நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர் என்னும் நான்கு பிரிவுகளை உடையது மருத்துவம் எனக் குறள் கூறுகிறது.
Question 2.
படைக்குப் பாதுகாப்பாக இருப்பவை எவை?
Answer:
வீரம், மானம், முன்னோர்வழி நடத்தல், நம்பிக்கைக்கு உரியவராதல் என்னும் நான்கும் படைக்குப் பாதுகாப்பாக இருப்பவை ஆகும்.
Question 3.
பகைவர் வலிமையற்று இருக்கும்போதே வென்றுவிடவேண்டும் என்னும் குறட்பாவைக் கூறுக.
Answer:
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
Question 4.
எப்போது மருந்து தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
Answer:
“முன் உண்டது செரித்ததை அறிந்து, அடுத்து உண்டால், மருந்து என ஒன்று தேவையில்லை” என்று, திருவள்ளுவர் கூறுகிறார்.
கூடுதல் வினாக்கள்
Question 5.
இகழ்ச்சியில் கெட்டாரை எப்போது நினைத்தல் வேண்டும்?
Answer:
மகிழ்ச்சியில் தங்கள் கடமையை மறக்கும் போது, மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்த்தல் வேண்டும்.
Question 6.
எண்ணியதை அடைதல் எப்போது எளிதாகும்?
Answer:
எண்ணியதை எப்போதும் எண்ணிக் கொண்டிருந்தால், எண்ணியதை அடைதல் என்பது எளிதாகும்.
Question 7.
எதைக் கொடுத்து யாரைத் துணையாகக் கொள்ள வேண்டும்?
Answer:
முகக் குறிப்பா அகக் குறிப்பை அறிபவரை, எதையேனும் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும்.
Question 8.
கண் உரைப்பவை எவை?
Answer:
பகைைையயும், நட்பையும் கண் உரைத்துவிடும்.
Question 9.
நகையையும் வேண்டற் பாற்று அன்று – எது?
Answer:
கை என்னும் பண்பற்றதை, விளையாட்டிற்குக் கூட ஒருவன் விரும்பக்கூடாது.
Question 10.
திருவள்ளுவர் எவர் பகையைக் கொள்ளற்க என்கிறார்?
Answer:
திருவள்ளுவர், வில்லேர் உழவரின் பகையைக் கொண்டாலும், சொல்லேர் உழவரின் பகையைக் கொள்ளல் கூடாது என்கிறார்.
Question 11.
உலகியற்றியான் எவ்வாறு கெடல் வேண்டும் எனத் திருவள்ளுவர் கூறுகிறார்?
Answer:
பிறரிடம் யாசித்து உயிர் வாழும் நிலை இருக்குமானால், அப்படிப்பட்ட உயிர் வாழ்க்கையைப் படைத்தவன், இவ்வுலகில் அலைந்து கெடட்டும் என்கிறார் திருவள்ளுவர்.
Question 12.
ஏமாப்பில் தோணி எது? அது எப்போது பக்குவிடும்?
Answer:
பிறரை எதிர்பார்த்து யாசித்து வாழ்தல் என்பது, பாதுகாப்பு இல்லாத படகு ஆகும். ஈயாமை என்னும் பாறை மோதினால், அது உடைந்துவிடும்.
சிறுவினாக்கள்
Question 1.
உருவக அணிக்குத் திருக்குறள் ஒன்றை எடுத்துக்காட்டாகத் தந்து விளக்குக.
Answer:
உவமானத்தின் தன்மையை உவமேயத்தின்மேல் ஏற்றிக் கூறுவது உருவகம். இவ்வகை உருவகம் இடம் பெற்றுள்ள செய்யுளை, உருவக அணிச் செய்யுள் எனக் கூறுவர்.
எ – கா: இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
விளக்கம் : இக்குறளில் ‘இரவு’ (யாசித்தல்) ‘ஏமாப்புஇல்’ (பாதுகாப்பு இல்லாத) தோணியாகவும், ‘கரவு’ (ஈயாமை – கொடுக்காமை) ‘பார்’ (பாறை) ஆகவும் உருவகம் செய்யப் பெற்றுள்ளன. எனவே, உருவக அணி அமைந்துள்ளது.
Question 2.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து – இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்குக.
Answer:
இக்குறட்பாவில் ‘பிறிதுமொழிதலணி’ பயின்று வந்துள்ளது.
உவமானத்தைக் கூறி, உவமேயத்தைப் பெறவைப்பது, பிறிதுமொழிதல் அணியாகம்
‘சிறியதாக இருக்கும்போதே முள்மரத்தைக் களைந்துவிட வேண்டும். முதிர்ந்தால் வெட்டுபவரின் கையை வருத்தும்’ என்னும் உவமானத்தைக் கூறி, “பகைவர் வலிமை பெற து இருக்கும்போதே அழித்துவிட வேண்டும். வலிமை பெற்றால் வெல்லுவது எளிதாக இருக்காது” என்னும் உவமேயத்தைப் பெறவைத்தமையால், ‘பிறிதுமொழிதலணி’ பயின்று வந்துள்ளது.
Question 3.
மருந்து, மருத்துவர், மருத்துவம் ஆகியன பற்றித் திருக்குறள் கூறுவன யாவை?
Answer:
முன்னர் உண்டது செரித்ததை அறிந்து உண்டால், மருந்து என ஒன்று உடலுக்குத் தேவை இல்லை .
நோயையும், அதன் காரணத்தையும் அதை நீக்கும் வழியையும் ஆராய்ந்து, நோயாளியின் வயதையும், நோயின் அளவையும், மருத்துவம் செய்தற்குரிய காலத்தையும் ஆராய்ந்து, அதன்பின் மருத்துவர் செயல்பட வேண்டும்.
மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவர், பருந்து, மருந்தாளுநர் என்னும் நான்கு வகைக்குள் அடங்கும் என்று, திருவள்ளுவர் கூறியுள்மாரர்.
கூடுதல் வினாக்கள்
Question 4.
மறதி குறித்துத் திருவள்ளுவர் சறுவன யாவை?
Answer:
மகிழ்ச்சி மிகுதியால் ஒருன் தான் ஆற்ற வேண்டிய கடமையை மறக்கும்போது, மறதியால் கெட்டவர்களை அவன் நினைத்துப் பார்த்தல் வேண்டும். மறவாமல் எப்போதும் எண்ணியதையே எண்ணிக்கொண்டு இருப்பதனால், எண்ணியதை அடைவது எளிதாகும் எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
Question 5.
‘குறிப்பறிதல்’ வாயிலாகத் திருவள்ளுவர் கூறும் செய்திகளை எழுதுக.
Answer:
முகக்குறிப்பினால் அகக்குறிப்பை அறிந்துகொள்ளும் ஆற்றலுடையவருக்கு, எப்பொருளையாவது கொடுத்து நமக்குத் துணையாக்கிக் கொள்ளல் வேண்டும்.
தொனன்றால், கண்ணின் குறிப்புகளை உணர்ந்து அறிபவரைப் பெற்றால், அவரது கண்ணே கைமை யையும் நட்பையும் அறிந்து உணர்த்தும் எனக் குறிப்பறிதல்’ சிறப்பைத் திருவள்ளுவர் கூறுகிறார்.
Question 6.
பகைத்திறம் தெளிதல்’ குறித்துத் திருவள்ளுவர் கூறுவனவற்றை விளக்குக.
Answer:
- ‘பகைமை’ என்பது பண்பற்ற செயல். அதனை ஒருவன் விளையாட்டுக்குக்கூட விரும்பக்கூடாது.
- வில்லைக் கருவியாக உடைய வீரனின் பகைமையைத் தேடிக் கொண்டாலும், சொல்லைக் கருவியாகக் கொண்ட அறிஞரின் பகையை உருவாக்கிக் கொள்ளல் கூடாது.
- முள்மரத்தை முதிர்ந்தபின் வெட்டுபவனின் கைகளை அது வருத்தும். அதனால் பகைமையை ஆராய்ந்து அறிந்து, வலிமை பெறும் முன்பே களைய வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.
Question 7.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். – இதில் பயின்றுள்ள அணியைச் சுட்டி விளக்குக.
Answer:
- இதில் ‘சொற்பொருட் பின்வரு நிலையணி’ அமைந்துள்ளது.
- முன்னர் வந்த சொல், அதே பொருளில் பின்னரும் பலமுறை வருவது, சொற்பொருட் பின்வருநிலையணியாகும். இக்குறளில் ‘நாடி’ என்னும் சொல், ‘ஆராய்ந்து ‘ என்னும் பொருளில் பலமுறை வந்துள்ளது. எனவே, ‘சொற்பொருட் பின்வருநிலையணி’ பயின்றுள்ளது
நெடுவினா
Question 1.
வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக நீங்கள் கருதும் குறட்பாக்கள் சிலவற்றை விளக்கிக் கட்டுரையாக்குக.
Answer:
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அரிய பண்புகள் சிலவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு உறுதுணையாகப் பல செய்திகளைத் திருக்குறள் தன்னிடத்தில் பெற்றுள்ளது. இனிக் குறளின் துணையுடன் வாழ்வின் உயர்வுக்கு உதவும் செய்திகளை ஆராய்வோம்.
மறதியை விலக்கு :
‘மறதி’ என்பது மிகமிகக் கெட்ட பழக்கம். எதனையும் காலம் தாழ்த்திச் செய்வதால், ‘மறதி’ என்பது குடி கொள்ளும். மறதியைப் போக்க, நாம் எண்ணியதை மீண்டும் மீண்டும் நினைத்துச் செயல்பட வேண்டும்.
வாழத் தெரிந்துகொள் :
வாழ்க்கை என்பது பலருடன் சேர்ந்து வாழ்வதாகும். எனவேறெருடன் பழகும்போது அவர்தம் மனக் குறிப்பை அறிந்து பழகவேண்டும். மனக்கருத்தை முகக்குறிரே காட்டிவிடும். ஆகையால் எவருடனும் முகம் பார்த்துப் பழக வேண்டும். அதனால் பகைமையையும் நட்டையும், பிரித்துப் புரிந்துகொள்ள முடியும்.
பிறரிடம் பகைமை பாராட்டுவதனை விளையாட்டுக்காகக்கூட விரும்பக் கூடாது. அச்செயல், தெளிவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் பயன்படாது. முகக்குறிப்பால் அகக்குறிப்பை அறியும் ஆற்றலுடையவருக்கு, ஏதேனும் ஒன்றைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்வது, நம் வாழ்க்கைக்குப் பக்கபலமாக அமையும்.
பிரச்சனை போக்கு :
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அது தோன்றும்போதே களைந்து எறிந்து தீர்வு காண்பது நற்பயன் தரும். இல்லையானால் அது பெரித்த வளர்ந்து, பெருந்துன்பத்தை ஏற்படுத்தும். இதனையே திருவள்ளுவர்,
“இளைதாக மள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லிம் காழ்த்த இடத்து”
எனக் கூறியுள்ளார்.
நோயற்ற வாழ்வு:
உடல் நோயுற்றால், மருத்துவரையும் மருந்தையும் தேடிச் செல்லவேண்டி இருக்கும். இத்துன்ப நீக்கத்திற்கு எளியதொரு வழியைத் திருவள்ளுவர், ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளார். நாம் உண்ண வு செரித்ததை அறிந்து, அடுத்த வேளை உணவையும் அளவறிந்து உண்டால், மருந்து என ஒன்று தேவையில்லை என்று, திருவள்ளுவர் கூறுவதை அறிந்து கடைப்பிடிக்கலாம். அத்துடன் நோய் வந்தால், நோய்க்கான அடிப்படையை ஆராய்ந்து, அதைப் போக்குவதற்கு மருந்தளிக்கும் மருத்துவரைத் தேடிச்செல்ல வழியும் கூறுகிறார்.
கொடியது களைக :
உலகில் வறுமை என்பதே கொடியது. அந்தக் கொடுமையைப் போக்கப் பொருள் இல்லாதவர்க்கு நம்மால் இயன்ற பொருளைக் கொடுத்து வாழ்வது சிறந்த வாழ்வாக அமையும். இப்படி நம் வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாகும் கருத்துகள், திருக்குறட்பாக்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. வாழ்விற்குப் பெருமை சேர்க்கும் நெறிகளைக் கொண்டமைந்த நூல் திருக்குறள். எனவே, திருக்குறளைத் தெளிவாகக் கற்று, மனத்தில் இருத்தி, கற்றதன்வழி வாழ்வை நடத்தி உயர்வோமாக.
கற்பவை கற்றபின்
Question 1.
படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.
Answer:
அ) வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை.
ஆ) இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.
இ) உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான் உள்ளியது உள்ளப் பெறின்.
Question 2.
கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக.
Answer:
கொடி தவித்ததைப் பாரி
அறிந்துகொண்டான்
மயில் தவித்ததைப் பேகன்
உணர்ந்துகொண்டான்
பிள்ளையின் பரிதவிப்பைத்
தாய் அறிவாள்
பளிங்கு முகத்தைப் படித்துக்கொள்
அப்படிப் படித்தவர்களைப்
பிடித்துக்கொள்.
அ) இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
ஆ) குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்.
இ) இளைதாக முள்மரம் கொல்க களையும் கைகொல்லும் காழ்த்த விடத்து.
Question 3.
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ………………. நினை.
அ) முகக்குறிப்பை அறிந்தவரை
ஆ) எண்ணியதை எண்ணியவரை
இ) மறதியால் கெட்டவர்களை
ஈ) கொல்லேர் உழவரை
Answer:
இ) மறதியால் கெட்டவர்களை
Question 4.
பொருள் கூறுக.
அ) ஏமம் – பாதுகாப்பு
ஆ) மருந்துழைச் செல்வான் – மருந்தாளுநர்.
Question 5.
இலக்கணக்குறிப்புத் தருக.
அ) கெடுக – வியங்கோள் வினைமுற்று
ஆ) குறிப்புணர்வார் – வினையாலணையும் பெயர்
கூடுதல் வினாக்கள்
Question 6.
முகக்குறிப்பால் அகக் குறயை அறிபவரை………………ஆக்கிக்கொள்ள வேண்டும்.
அ) பகை
ஆ) நகை
இ) துணை
ஈ) இணை
Answer:
இ) துணை
Question 7.
பகைமை என்னும் பண்பை ………………. கூட ஒருவன் விரும்பக் கூடாது.
அ) மறதியாக
ஆ) இகழ்ச்சியாக
இ) குறிப்பாக
ஈ) விளையாட்டாக
Answer:
ஈ) விளையாட்டாக
Question 8.
எவருடைய பகையைக் கொள்ளக்கூடாது?
இ) வில்லேர் உழவர்
ஆ) உழவர்
இ) மருத்துவர்
ஈ) சொல்லேர் உழவர்
Answer:
ஈ) சொல்லேர் உழவர்
Question 9.
பாதுகாப்பற்ற படகு போன்றது ……………….
அ) மறதியுடன் வாழ்வது
ஆ) கண்ணோட்டமின்றி வாழ்தல்
இ) இரந்து வாழ்தல்
ஈ) பகையோடு வாழ்தல்
Answer:
இ) இரந்து வாழ்தல்
Question 10.
மகிழ்ச்சியின் மைந்துறும்போது ………………..உள்ளுக.
அ) குறிப்பில் குறிப்புணர்வாரை
ஆ) மானம் மாண்ட வழிச்செலவு
இ) பகை என்னும் பண்பில் அதனை
ஈ) இகழ்ச்சியின் கெட்டாரை
Answer:
ஈ) இகழ்ச்சியின் கெட்டாரை
Question 11.
கொடுத்தும் கொளல் வேண்டும் – எவரை ?
அ) இகழ்ச்சியில் கெட்டாரை
ஆ) பகைமையைக் கொண்டாரை
இ) குறிப்பில் குறிப்புணர்வாரை
ஈ) கண்ணியம் இல்லாரை
Answer:
இ) குறிப்பில் குறிப்புணர்வாரை
Question 12.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் – இதில் பயின்றுள்ள அணி
அ) பிறிதுமொழிதலணி
ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பின்வருநிலையணி
ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி
Answer:
ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி
Question 13.
‘இளைதாக முள்மரம்’ எனத் தொடங்கும் குறளில் ஈற்றடி ஈற்றுச்சீர், என்னும் வாப்பாட்டால் முடிந்துள்ளது.
அ) நாள்
ஆ) மலர்
இ) காசு
ஈ) பிறப்பு
Answer:
ஈ) பிறப்பு
அலகிடுதல்
Question 1.
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல் – அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Question 2.
குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொலை – அலகிட்டு வாய்பாடு தருக.
Answer: