Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி
குறுவினாக்கள் (கூடுதல்)
Question 1.
திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
குற்றாலக் குறவஞ்சி, குற்றால மாலை, குற்றாலச் சிலேடை, குற்றாலப் பிள்ளைத் தமிழ், குற்றால யமக அந்தாதி ஆகியன, திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்கள் ஆகும்.
Question 2.
சிங்கிக்குப் பரிசளித்த நாடுகள் எவை?
Answer:
சேலத்து நாடு, கோலத்து நாடு, பாண்டி நாடு, கண்டி நாடு ஆகியவை, சிங்கிக்குப் பரிசளித்த நாடுகளாகும்.
Question 3.
சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களுள் நான்கினைக் குறிப்பிடுக.
Answer:
சிலம்பு, தண்டை , பாடகம், காலாழி.
சிறுவினா
Question 1.
சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களாகக் குற்றாலக் குறவஞ்சி கூறுவன யாவை?
Answer:
- சேலத்து நாட்டில் பெற்ற சிலம்பு;
- கோலத்து நாட்டாரிடம் பெற்ற முறுக்கிட்ட தண்டை;
- பாண்டியனார் மகள் கொடுத்த பாடகம்;
- குற்றாலர் சந்நிதிப் பெண்கள் கொடுத்த அணிமணிக் கெச்சம்;
- கண்டி தேசத்தில் பெற்ற காலாழி.
கூடுதல் வினாக்கள்
Question 2.
குறவஞ்சி – பெயர்க்காரணம் குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:
- குறவஞ்சி, சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று; தமிழ்ப் பாடல் நாடக இலக்கிய வடிவாகும்.
- பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவி, அத் தலைவன்மீது காதல் கொள்வாள்.
- அப்போது வரும் குறவர்குலப் பெண் ஒருத்தி, தலைவிக்கு நற்குறி கூறிப் பரிசில்களைப் பெறுவாள்.
- இவ்வகையில் அமைவது, ‘குறவஞ்சி’ இலக்கியம். இதனைக் ‘குறத்திப் பாட்டு’ எனவும் கூறுவர்.
Question 3.
குற்றாலக் குறவஞ்சி – குறிப்புத் தருக.
Answer:
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான குற்றாலக் குறவஞ்சி, நாடக இலக்கிய வடிவில் அமைந்ததாகும். இது இயற்றமிழின் செழுமையையும், இசைத்தமிழின் இனிமையையும், நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்ட முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது. உலா வந்த தலைவன்மீது காதல் கொண்ட தலைவிக்குக் குறத்தி குறி சொல்லிப் பரிசு பெறுவதுபோன்ற அமைப்புடையது.
தென்காசிக்கு அருகிலுள்ள குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள குற்றாலநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய குறவஞ்சி, ‘திருக்குற்றாலக் குறவஞ்சி’ என வழங்கப்பெறுகிறது. இது ‘கவிதைக் கிரீடம்’ எனப் போற்றப்படுகிறது.
Question 4.
திரிகூட ராசப்பக் கவிராயர் குறித்து அறிவன யாவை?
Answer:
- திருநெல்வேலி விசய நாராயணம் என்னும் ஊரில் வாழ்ந்தவர், திரிகூட ராசப்பக் கவிராயர்.
- திருக்குற்றால நாதர் கோவிலில் பணிபுரிந்தார்.
- சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தவர்.
- குற்றாலத் தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றி யுள்ளார். திருக்குற்றாலநாதர் கோவிலின் ‘வித்துவான்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.
- மதுரை முத்து விசயரங்க சொக்கலிங்கனார் வேண்டுதலின்படி, திருக்குற்றாலக் குறவஞ்சியைப் பாடி அரங்கேற்றினார்.
நெடுவினா – கூடுதல் வினா
Question 1.
சிங்கன் சிங்கி – உரையாடலை விரித்துரைக்க.
Answer:
குறி சொல்லப் போன குறவஞ்சி :
குறி சொல்லிப் பரிசில்களைப் பெற்றுக்கொண்டு திரும்பிய குறத்தி சிங்கியை, அவள் கணவன் சிங்கன் சந்தித்தான். அவள் அணிந்திருந்த அணிவகைகளைக் கண்டு வியந்தான்.
“நெடுநாள் பிரிந்திருந்தமையால், “என்னிடம் சொல்லாமல் இத்தனை நாள்களாக எங்கே சென்றாய்?” என வினவினான்.
அதற்குச் சிங்கி :
“கொத்தான மலர்களால் அலங்கரித்த கூந்தலையுடைய பெண்களுக்குக் குறி சொல்லப் போனேன்” என்று கூறினாள்.
சிங்கனின் வினா – சிங்கி விடை :
சிங்கன் : “உன்னைப் பார்க்க அதிசயமாகத் தோன்றுகிறது! ஆனால் அது பற்றிப் – இருக்கிறது!”.
சிங்கி : “எவர்க்கும் பயப்படாமல் தோன்றுவதை அஞ்சாமல் சொல்”,
சிங்கன் : “காலுக்கு மேல் பெரிய விரியன் பாம்புபோல் கடித்துக் கிடப்பது என்ன?”
சிங்கி : “சேலத்து நாட்டில் குறி சொல்லியதற்குப் பரிசாகப் பெற்ற சிலம்
சிங்கன் : “அதற்கு மேல் திருகு முருகாகக் கிடப்பது என்ன?”
சிங்கி : “கலிங்க நாட்டில் கொடுத்த முறுக்கிட்ட தண்டை”
சிங்கன் : “சரி, நாங்கூழ்ப் புழுபோல் நீண்டு நெளிந்து குறுதிக் கிடப்பது என்ன?”
சிங்கி : “பாண்டியனார் மகளுக்குச் சொன்ன குறிக்குப் பரிசாக அளித்த பாடகம்” என்றாள்.
சிங்கன் : “உன் காலிலே பெரிய தவளைபோல் கட்டியள்ளது என்னடி?”,
சிங்கி : “இறைவன் குற்றாலநாதர் சந்நிதிப் பெண்கள் கொடுத்த அணிமணிக் கெச்சம்”.
சிங்கன் : “அப்படியானால் சுண்டு விரலிலே கண்டலப் பூச்சிபோல் சுருண்டு கிடப்பது என்ன?”
சிங்கி : “கண்டி தேசத்தில் முன்பு நான் பெற்ற காலாழி”.
இப்படி உரையாடிக் கொண்டு, தம் உறைவிடம் நோக்கிச் சென்றனர்.
இலக்கணக்குறிப்பு
மாண்ட, பெற்ற, இட்ட, கொடுத்த கட்டிய – பெயரெச்சங்கள்
சொல்ல, கடித்து, சொல்லி நீண்டு, நெளிந்து, சுருண்டு – வினையெச்சங்கள்
சுண்டுவிரல் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
திருகுமுருகு – உம்மைத்தொகை
உறுப்பிலக்கணம்
1. பெற்ற பெறு (பெற்று) + அ
பெறு பகுதி, ‘பெற்று’ என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது, அ – பெயரெச்ச விகுதி.
2. நடந்தாய் – நட + த் (ந்) + த் + ஆய்
நட – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.
3. சொல்ல – சொல் + ல் + அ
சொல் – பகுதி, ல் – சந்தி, அ – வினையெச்ச விகுதி.
4. கடித்து – கடி + த் + த் + உ
கடி – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.
5. சொல்லி – சொல் + ல் + இ
சொல் – பகுதி, ல் – சந்தி, இ – வினையெச்ச விகுதி.
6. கொடுத்த – கொடு + த் + த் + அ
கொடு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.
7. நெளிந்த – நெளி + த் (ந்) + த் + அ
நெளி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.
புணர்ச்சி விதிகள்
1. பயமில்லை – பயம் + இல்லை
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பயமில்லை)
2. காலாழி – கால் + ஆழி
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (காலாழி)
3. விரியன் – விரி + அன்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (விரி + ய் + அன் )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (விரியன்)
4. குண்டலப் பூச்சி – குண்டலம் + பூச்சி
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்புவும் ஆகும்” (குண்டல + பூச்சி)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (குண்டப்பூச்சி)
பலவுள் தெரிக
Question 1.
கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை தேர்க.
அ) விரியன் – 1. தண்டை
ஆ) திருகுமுருகு – 2. காலாழி
இ) நாங்கூழ்ப்புழு – 3. சிலம்பு
ஈ) குண்டலப்பூச்சி – 4. பாடகம்
i – 3 4 2 1
ii – 3 1 4 2
iii – 4 3 2 1
iv – 4 1 3 2
Answer:
ii – 3 1 4 2
கூடுதல் வினாக்கள்
Question 2.
திரிகூட ராசப்பக் கவிராழரின் கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்பட்ட நூல் ………………
அ) குற்றால மாலை
ஆ) குற்றாலக் கோவை
இ) நன்னகர் வெண்பா
ஈ) குற்றாலக் குறவஞ்சி
Answer:
ஈ) தற்றாகக் குறவஞ்சி
Question 3.
முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிற்றிலக்கியம் ………………
அ) காவடிச்சிந்து
ஆ) திருமலை முருகன் பள்ளு
இ) குற்றாலக் குறவஞ்சி
ஈ) திருச்சாழல்
Answer:
இ) குற்றாலக் குறவஞ்சி
Question 4.
நாடக இலக்கிய வடிவத்தில் அமைந்தது ………………
அ) பரணி
ஆ) கலம்பகம்
இ) குறவஞ்சி
ஈ) காவடிச்சிந்து
Answer:
இ) குற்றாலக் குறவஞ்சி
Question 5.
‘குறத்திப்பாட்டு’ என வழங்கப் பெறுவது ………………
அ) பள்ளு
ஆ) காவடிச்சிந்து
இ) பரணி
ஈ) குறவஞ்சி
Answer:
ஈ) குறவஞ்சி
Question 6.
குற்றாலக் குறவஞ்சி பாடியவர் ………………
அ) வில்வரத்தினம்
ஆ) பெரியவன் கவிராயர்
இ) திரிகூட ராசப்பக் கவிராயர்
ஈ) அழகிய பெரியவன்
Answer:
இ) திரிகூட ராசப்பக் கவிராயர்
Question 7.
குற்றாலக் குறவஞ்சி இயற்றி அரங்கேற்றக் காரணமானவர் ………………
அ) வள்ளல் சீதக்காதி
ஆ) சென்னிகுளம் அண்ணாமலையார்
இ) மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்
ஈ) இராசராசசோழன்
Answer:
இ) மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்
Question 8.
சிங்கிக்குச் சிலம்பைப் பரிசளித்த நாடு ………………
அ) கோலத்து நாடு
ஆ) பாண்டி நாடு
இ) சேலத்து நாடு
ஈ) கண்டிதேசம்
Answer:
இ) சேலத்து நாடு
Question 9.
‘திருகுமுருகு’ என்று சிங்கன் குறிப்பிட்டது ………………
அ) காலாழி பீலி
ஆ) பாடகம்
இ) முறுக்கிட்ட தண்டை
ஈ) அணிமணிக்கெச்சம்
Answer:
இ) முறுக்கிட்ட தண்டை
Question 10.
அரசர்களையும், வள்ளல்களையும், வீரர்களையும், தனி மனிதர்களையும் பாடியவை………………
அ) சமய நூல்கள்
ஆ) சங்க இலக்கியங்கள்
இ) சிறுகாப்பியங்கள்
ஈ) சிற்றிலக்கியங்கள்
Answer:
ஆ) சங்க இலக்கியங்கள்
Question 11.
கடவுளோடு மனிதர்களைப் பாடியவை ………………
அ) சங்க இலக்கியங்கள்
ஆ) சிற்றிலக்கியங்கள்
இ) சமய இலக்கியங்கள்
ஈ) காப்பியங்கள்
Answer:
ஆ) சிற்றிலக்கியங்கள்
Question 12.
பொருத்துக.
1. குழல் – அ. சன்மானம்
2. நாங்கூழ் – ஆ. பூமாலை
3. வரிசை – இ. கூந்தல்
4. கொத்து – ஈ. கோலம்
– உ. மண்புழு
Answer:
1-இ, 2-உ, 3-ஆ 4.ஆ