Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

வாங்க பேசலாம்

Question 1.
“பணத்தையா சாப்பிடமுடியும்?” என்ற இளமாறனுக்கு நீங்களாக இருந்தால் என்ன விடை சொல்வீர்கள்?
Answer:
நான் கூறும் விடை :
பணத்தைச் சாப்பிட முடியாது. ஆனால் விவசாயத்தை மேம்படுத்த முடியும். உழவுத்தொழில் சிறப்பதற்கான பணியைச் செய்வேன். வீட்டில் கால்நடைகளை வளர்த்து இயற்கை உரத்தைப் பயன்படுத்துவேன். செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதிமொழியேற்பேன்.

சிந்திக்கலாமா?

நம் நாட்டில் பல தொழில்கள் நடைபெறுகின்றன. உழவுத்தொழில் செய்ய யாரும் விரும்பவில்லையெனில், உலகம் என்னவாகும்?
Answer:
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்று திருவள்ளுவரே கூறியுள்ளார். பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும், உழவுத்தொழிலே சிறந்தது. அத்தகைய உழவுத்தொழில் நடைபெறவில்லையெனில் நம் அனைவருக்கும் உண்ண உணவு இருக்காது. உணவுக்குப் பதிலாக காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளுக்கும் மாத்திரையை விழுங்கி உயிர் வாழ வேண்டிய நிலைதான் ஏற்படும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘பாய்ந்தோடும்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………………
அ) பாய் + தோடும்
ஆ) பாய்ந்து + ஓடும்
இ) பயந்து + ஓடும்
ஈ) பாய் + ஓடும்
Answer:
ஆ) பாய்ந்து + ஓடும்

Question 2.
காலை + பொழுது – இச்சொற்களைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது……………….
அ) காலைப்பொழுது
ஆ) காலைபொழுது
இ) காலபொழுது
ஈ) காலப்பொழுது
Answer:
அ) காலைப்பொழுது

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 3.
பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்லை?……………………..
அ) மலை
ஆ) காடு
இ) நெகிழி
ஈ) நிலம்
Answer:
இ) நெகிழி

Question 4.
குனிந்து – இச்சொல் குறிக்கும் பொருள்……………………
அ) வியந்து
ஆ) விரைந்து
இ) துணிந்து
ஈ) வளைந்து
Answer:
ஈ) வளைந்து

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 5.
தன் + உடைய இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது……………………………………..
அ) தன்னுடைய
ஆ) தன்உடைய
இ) தன்னுடைய
ஈ) தன்உடையை
Answer:
அ) தன்னுடைய

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
Answer:

  • நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து நோய்கள் வருகின்றன.
  • உணவுகள் உயிர்ச்சத்தின்றி இருக்கின்றன.
  • மண் வளம் அழிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 2.
நிலத்தைத் தெய்வமாக வணங்கவேண்டும் எனத் தாத்தா கூறக் காரணம் என்ன?
Answer:
நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய் வித்துகள், காய்கள், பழங்கள் எனப் பலவகையான உணவுப் பொருள்களை நிலம் கொடுப்பதால், நிலத்தைத் தெய்வமாக வணங்க வேண்டும்.

Question 3.
‘எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்’ என இளமாறன் ஏன் கூறினான்?
Answer:
இளமாறன் தன் தாத்தா கூறியவற்றைச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய அப்பா ”வயலுக்குச் சென்று வந்தாயா? உன் தாத்தாவை வயலுக்குப் போக வேண்டாம் என்று சொன்னால் அவர் எங்கே கேட்கிறார்?” என்று கூறினார்.

அதற்கு இளமாறன் “யாருமே வயலுக்குப் போகவில்லை என்றால் என்னவாகும்?” என்று கேட்டான். “எல்லாரும் இப்படியே இருந்து விட்டால் விவசாயத்தை யார் செய்வது?” என்று கேட்டுத் தன் தந்தையின் தவற்றைச் சுட்டிக் காட்டினான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சொந்த நடையில் கூறுக

உமக்குப் பிடித்த காய்கள், பழங்கள் எவை? ஏன்?
Answer:
எனக்குப் பிடித்த காய்கள், பழங்கள் : கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பாகற்காய், முள்ளங்கி, காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பூசணிக்காய், எல்லா வகையான கீரைகள், அன்னாசிப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம், திராட்சைப்பழம், பப்பாளிப்பழம் ஆகிய அனைத்தும் எனக்குப் பிடித்தவை.

இவற்றை உண்பதற்கான தனித்தனிக் காரணங்கள் ஏதும் இல்லை. காய்கறிகளிலும் பழங்களிலும் தனித்தனி மருத்துவக்குணம் உள்ளது.

பொதுவாகக் காய்கறிகளையும் பழங்களையும் உண்பதால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. உயிர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் கிடைக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. அதனால் நோயற்ற வாழ்வு வாழ இயலும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

அகரமுதலிப் பார்த்துப் பொருளறிக

மாசு – ………………………..
வேளாண்மை – ……………………
Answer:
மாசு – அழுக்கு, குற்றம், மாறுபாடு
வேளாண்மை – உழவு

சொற்களை இணைத்துத் தொடரை நீடித்து எழுதுக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

நிறுத்தக் குறியிடுக

Question 1.
நெல் கம்பு கேழ்வரகு போன்றவை தானியங்கள்
Answer:
நெல், கம்பு, கேழ்வரகு போன்றவை தானியங்கள்.

Question 2.
வெண்டைக்காய் உடலுக்கு நல்லது
Answer:
‘வெண்டைக்காய் உடலுக்கு நல்லது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 3.
ஆகா பயிர் அழகாக உள்ளதே
Answer:
ஆகா, பயிர் அழகாக உள்ளதே!

Question 4.
அடப்பாவமே அப்படின்னா நாம எதைத்தான் சாப்பிடுவது
Answer:
அடப்பாவமே! அப்படின்னா, நாம எதைத்தான் சாப்பிடுவது?

புதிய சொற்களை உருவாக்கலாமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 4

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

படத்தைப் பார்த்து விடுகதைகள் உருவாக்குக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

அகர வரிசைப்படுத்துக

தேன், தாளம், தௌவை, துடுப்பு, தென்னை , தையல், தோழமை, தீ, தூய்மை, தொகை, திட்பம், தளிர்.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 7
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சொல்லக்கேட்டு எழுதுக

1. இயற்கை வேளாண்மை
2. உயிர்ச்சத்துகள்
3. செயற்கை உரங்கள்
4. நெல் மணிகள்
5. நண்டுகள்

கலையும் கைவண்ணமும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 9
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 10

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

செயல் திட்டம்

உங்கள் வீட்டில் உருவாகும் காய்கறிக் கழிவுகளையும் மட்கும் குப்பைகளையும் பயன்படுத்தி, இயற்கை உரம் தயார் செய்க. அந்த உரத்தை வீட்டிலோ பள்ளியிலோ உள்ள தாவரங்களுக்குப் பயன்படுத்துக.

குழுவாக விளையாடலாமா?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 11

(i) படத்தில் உள்ளதுபோல் அட்டைகளைத் தயார் செய்து கொள்க.
(ii) முதல் அட்டையை அசையாமல் இருக்குமாறு வைத்துக்கொள்க.
(iii) இரண்டாவது அட்டை மட்டும் சுழலுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். மேல் பக்கமாகக் கடிகார முள் போன்று செய்துவைத்துக் கொள்க.

(iv) மாணவர் ஒருவரை அழைத்து, முதல் அட்டையிலிருந்து ஏதாவது ஒரு படத்தின் பெயரைக் கூறச் சொல்லவேண்டும். அந்த மாணவரையே இரண்டாவது அட்டையையும் சுழற்றச் சொல்ல வேண்டும். கடிகார முள்ளிற்கு நேராக முதல் அட்டையில் கூறிய படத்திற்குப் பொருத்தமான படம் வந்தால் அவர் வெற்றி பெற்றதாகவும், இல்லையெனில் அடுத்தடுத்த சுற்றுக்கு வாய்ப்பு வழங்கியும் விளையாட்டைத் தொடரலாம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

அறிந்து கொள்வோம்

திருக்குறள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
– உழவு, குறள் 1033

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
இளமாறன் மாடியிலிருந்து பார்த்தக் காட்சிகள் யாவை?
Answer:

  • மாமரத்திலிருந்த கிளிகள் கீச் கீச் எனக் குரலெழுப்பி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.
  • வைக்கோல்போரின் மீது சேவலொன்று மெதுவாக நடைபயின்று கொண்டிருந்தது.
  • தோட்டத்தில் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்த கன்றைக் கண்டு பசு, “ம்மா…” எனக் குரலெழுப்பியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 2.
இளமாறன் வயலுக்கு ஏன் சென்றான்?
Answer:
இளமாறன் தன் தாத்தாவிற்கு சாப்பாடு கொடுப்பதற்காக வயலுக்குச் சென்றான்.

Question 3.
நெல்மணிகள் எவ்வாறு இருந்தன?
Answer:
நெல்மணிகள் கற்றறிந்த சான்றோர் போலக் குனிந்து நின்றன.

Question 4.
இளமாறன் எதைப் பார்த்து வியப்படைந்தான்?
Answer:
வளையிலிருந்து நண்டுகள் எட்டிப் பார்த்து, தம் கொடுக்குகளை மேலும் கீழுமாக அசைத்து நகர்ந்தன. அதைப் பார்த்து இளமாறன் வியப்படைந்தான்.

Question 5.
நிலத்தில் வேலை செய்வது பற்றி இளமாறன் கேட்ட கேள்விக்குத் தாத்தா என்ன பதில் கூறினார்?
Answer:
வயலில் வேலை செய்ததால்தான் தன் உடல் வலிமையாக உள்ளது என்றும், வலிமையாக இருப்பதால் நோய்நொடியின்றி இருப்பதாகவும் கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 6.
வயலைப் பற்றி இளமாறனின் தாத்தா கூறியது யாது?
Answer:
வயல்தான் தமக்குச் சொத்து. இங்கு விளைகின்ற பயிர்கள் மக்களை வாழவைக்கின்றன. உண்ணுகின்ற உணவுப் பொருள்களெல்லாம் தம்மைப் போன்ற உழவர்களின் உழைப்பின் மூலமாகவே கிடைப்பதாக தாத்தா கூறினார்.

Question 7.
உழவர்கள் விளைவிப்பவை யாவை?
Answer:
நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய்வித்துகள், காய்கள், பழங்கள்.

Question 8.
ஈடு இணை இல்லாதது என்று தாத்தா குறிப்பிட்டது என்ன?
Answer:
உழவர்களின் தேவைக்குப் போக விளைந்ததைப் பிறருக்குக் கொடுக்கும் போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை என தாத்தா குறிப்பிட்டார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சிறுவினா:

Question 1.
தாத்தா இயற்கை உரம், செயற்கை உரம் பற்றிக் கூறியனவற்றை எழுதுக.
Answer:
இயற்கை உரம்:

  • ஆடு மாடுகளின் சாணத்தை ஒன்று சேர்த்து எருவாக்கி, நிலத்தில் போடுதல்.
  • தாவரங்களின் தழைகளை மண்ணிலிட்டு மட்கச் செய்தல்.
  • இந்த இயற்கை உரங்களைப் பயன்படுத்தினால் நல்ல விளைச்சல் கிடைக்கும். நாம் நல்ல உடல் நலத்தோடும் நோய் எதிர்ப்புச் சக்தியோடும் வாழலாம்.

செயற்கை உரம்:

  • செயற்கை உரங்களைத் தெளிப்பதனால் தேனீ, வண்ணத்துப்பூச்சி, மண்புழு போன்றவை அழிந்து விடுகிறது. அதனால் மண் மாசடைகிறது.
  • செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை மண்ணில் தெளிப்பதனால் தண்ணீர் மாசடைகிறது. தொழிற்சாலைக் கழிவுகளை அப்படியே நிலத்தில் விடுவதால் நிலத்தடிநீர் மாசடைகிறது.
  • இவற்றைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுகளை உண்பதால் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து புதிய புதிய நோய்கள் வருகின்றன.

Leave a Reply