Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 25 நீதிநெறி விளக்கம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 25 நீதிநெறி விளக்கம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

வாங்க பேசலாம்

Question 1.
செய்யுளின் பொருள் உணர்ந்து படித்து மகிழ்க.
Answer:
மாணவர்களே தாங்களாகவே செய்யுளின் பொருள் உணர்ந்து படிக்க வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

Question 2.
முதன்முதலில் மேடையில் பேசிய அனுபவத்தை வகுப்பில் பகிர்ந்து கொள்க.
Answer:
நான் இரண்டாம் வகுப்புப் படிக்கும் போதுதான் முதன்முதலில் மேடையில் பேசினேன். விடுதலை நாளன்று விடுதலைக்குழைத்து தம் இன்னுயிர் ஈந்த திருப்பூர் குமரன் பற்றிப் பேசினேன்.

எனக்கு அப்போது சரளமாகப் படிக்கத் தெரியாது. என் அம்மாதான் எனக்கு மீண்டும் மீண்டும் பேச வைத்து எனக்குப் பயிற்சியளித்தார்கள். எப்படியோ பத்து நாட்களில் மனப்பாடம் செய்தேன்.

விடுதலை நாளன்று மேடையில் போய் நிற்கும்போது ஒரே பயம். என் உடல் நடுங்கிற்று. என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் வகுப்பாசிரியர் வந்தார். பயப்படாதே! நீ என்ன பேசுகிறாய் என்பது உனக்கு மட்டும்தான் தெரியும். பிறரைப் பற்றிக் கவலை கொள்ளாதே என்றும் உனக்கு நினைவிருக்கும் வரை பேசி முடித்து விடு என்றும் கூறினார்கள். ஒலி பெருக்கியின் முன் போய் நின்றேன். ஓரிரு விநாடிகள் படபடப்பாக இருந்தது.

அதற்குப் பிறகு படபடப்பு நீங்கியது. தடங்கல் இல்லாமல் பேசி முடித்துவிட்டேன். என்னை எல்லோரும் பாராட்டினர். வகுப்பாசிரியர் என்னைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். என் பெற்றோர் என்னை வாரி அணைத்துக் கொண்டனர். அந்த நிமிடம் நான் எங்கோ பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. என்னுடைய பயம் நீங்கியது. இப்போதெல்லாம் அச்சமின்றி மேடையில் பேசுகிறேன். இதற்குக் காரணமான என் வகுப்பாசிரியருக்கு நன்றி கூற வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

சிந்திக்கலாமா?

ஜீனத் நன்றாகப் படிப்பவள். ஆனால், வகுப்பில் ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்லத் தயங்குவாள். அவள் கூச்சத்தை எவ்வாறு போக்கலாம்?
Answer:
ஜீனத்தின் கூச்சத்தைப் போக்க அவள் அடிக்கடி வகுப்பில் பேச வேண்டும். வகுப்பில் நடைபெறும் செயல்பாடுகளில் கலந்து கொள்ள வேண்டும். பள்ளியில் காலையில் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டங்களில் ‘திருக்குறள்’, ‘இன்றைய சிந்தனைக்கு போன்ற ஏதாவது ஒன்றைப் பற்றி பேச வேண்டும். இவ்வாறு பல முறை பேசும்போது அவளுடைய கூச்சம் போய்விடும்.

படிப்போம். சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘நவை’ என்னும் சொல்லின் பொருள் …………………
அ) அச்சம்
ஆ) மகிழ்ச்சி
இ) வருத்தம்
ஈ) குற்றம்
Answer:
ஈ) குற்றம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

Question 2.
‘அவையஞ்சி’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) அவைய + அஞ்சி
ஆ) அவை + அஞ்சி
இ) அவை + யஞ்சி
ஈ) அவ் + அஞ்சி
Answer:
ஆ) அவை + அஞ்சி

Question 3.
‘இன்னலம்’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) இன் + னலம்
ஆ) இன் + நலம்
இ) இனிமை + நலம்
ஈ) இனிய + நலம்
Answer:
இ) இனிமை + நலம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

Question 4.
‘கல்லார்’ – இச்சொல்லின் எதிர்ச்சொல் ………………………..
அ) படிக்காதவர்
ஆ) கற்றார்
இ) அருளில்லாதவர்
ஈ) அன்பில்லாதவர்
Answer:
ஆ) கற்றார்

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
கல்வி கற்றவரின் இயல்பு எவ்வாறு இருக்க வேண்டும்?
Answer:
பலர் நிறைந்த அவையிலே உடல் நடுங்காமல் தம் கருத்தை தடுமாறாமல் எடுத்துக் கூறவேண்டும்.

Question 2.
பொருளற்ற சொற்களை அவையினர் முன் பேசுபவர் யார்?
Answer:
பொருளற்ற சொற்களை அவையினர் முன் பேசுபவர் கல்வியறிவில்லாதவர் ஆவர்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

Question 3.
பூத்தலின் பூவாமை நன்று என்று நீதிநெறி விளக்கம் எவற்றைக் குறிப்பிடுகிறது?
Answer:

  • அவைக்கு அஞ்சி தம் கருத்தை எடுத்துக் கூற முடியாமல் தடுமாறுபவர் கல்வி.
  • கல்வியறிவில்லாதவர் பேசம் பொருளற்ற ஆரவாரச் சொல்.
  • செய்யத்தக்கவற்றைச் செய்யாமையால் ஏற்படும் குற்றத்துக்கு அஞ்சிப் பிறருக்குக் கொடுத்து எஞ்சியவற்றை உண்ணாதவரின் செல்வம்.
  • வறுமையுற்றவரிடத்தே உள்ள ஈகை போன்ற இனிய பண்புகள் – ஆகியவற்றை நீதிநெறி விளக்கம் பூத்தலின் பூவாமை நன்று என்று குறிப்பிடுகிறது.

முதல் எழுத்து ஒன்றி வரும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம் 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம் 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

மொழியோடு விளையாடு

குறிப்புகளைப் படி, சொல்லிருந்தே சொல்லைக் கண்டுபிடி
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம் 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம் 4

இணைந்து செய்வோம்

சங்குச் சக்கரத்தைச் சுழற்றிக் கல்வியின் பெருமைகளை உணர்த்தும் சொற்றொடர்களை முறையாக எழுதுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம் 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம் 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

அறிந்து கொள்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம் 7
Answer:
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – சபை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டா தவன்நல் மரம்.

பாடலின் பொருள் :
காட்டினுள்ளே நிற்கின்ற அந்த மரங்கள் நல்ல மரங்கள் ஆகா கற்றோர் சபையின் நடுவே கையில் கொடுத்த ஏட்டை படிக்க முடியாமல் நின்றவனும் ஒருவன் கருத்தின் அடையாளத்தை தெரிந்துகொள்ள முடியாதவனும் (ஆகிய இவர்களே) சிறந்த மரங்களுக்குச் சமம் ஆவார். இதன் மூலம் கல்வியறிவில்லாதவனும், பிறர் கருத்தின் குறிப்பை உணரமுடியாதவனும் மரங்களுக்கு சமமாகும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

கூடுதல் வினாக்கள்

நீரப்புக:

1. ‘மெய்’ என்பதன் பொருள் …………………
2. ‘நல்கூர்ந்தார்’ என்ற சொல்லின் பொருள் …………………
3. நீதிநெறிகளை விளக்குவதால் ………………… எனப்படுகிறது.
4. நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் …………………
Answer:
1. ‘மெய்’ என்பதன் பொருள் உடல்.
2. ‘நல்கூர்ந்தார்’ என்ற சொல்லின் பொருள் வறுமையுற்றார்.
3. நீதிநெறிகளை விளக்குவதால் நீதிநெறி விளக்கம் எனப்படுகிறது.
4. நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் குமரகுருபரர்.

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
‘ஆகுலச்சொல்’ என்றால் என்ன?
Answer:
ஆகுலச்சொல் என்றால் பொருளற்ற ஆரவாரச் சொல் எனப்படும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 25 நீதிநெறி விளக்கம்

Question 2.
நீதிநெறி விளக்கம் குறிப்பு எழுதுக.
Answer:
நீதிநெறிகளை விளக்குவதற்குக் கருவியாக இருப்பதால் இந்நூல், நீதி நெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. திருக்குறளில் கூறப்பெற்றுள்ள அறிவுரைகள் பலவற்றையும் தொகுத்துச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்நூல் விளக்குகிறது. இந்நூலை இயற்றியவர் குமரகுருபரர்.

Leave a Reply