Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

வாங்க பேசலாம்

Question 1.
கல்லணை பற்றி உனக்குத் தெரிந்த செய்திகளை உன் சொந்த நடையில் கூறு.
Answer:
(i) கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.

(ii) கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு. 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயம் ஆகும். 1839-இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது.

(iii) பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

(iv) இநத் அணையைக் கரிகாலன் என்ற சோழமன்னன் கட்டினான். தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போது புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத்திட்டம் என்றும் கூறப்படுகிறது.

(v) இவ்வணை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பூதலூர் வட்டத்தில் உள்ள தோகூர் கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டது. கல்லணையைப் பற்றிய செய்தி சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

Question 2.
உமது ஊரில் உள்ள மிகப் பழைமையான இடம் எது? அதுபற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
கலை :
பாண்டி! நமது ஊரில் உள்ள மிகப்பழமையான இடம் என்று எதை நினைக்கிறாய்?
விமல் : மதுரை மீனாட்சியம்மன் கோவில் தான் என்று நினைக்கின்றேன்.
கலை : சரி, கோவிலைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?
விமல் : தெரியுமே. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.

கலை : ஆமாம், இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலகோயிலாக உள்ளது.
விமல் : இக்கோயில் திராவிடக் கட்டக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாவும் விளங்குகிறது. 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது.

கலை : தேவலோகத்தின் அரசனான இந்திரனால் கட்டப்பட்டது என்பது நம்பிக்கையாக உள்ளது.
கலை : இக்கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

விமல் : இக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோயிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது.
கலை : அவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.
விமல் : உண்மையிலேயே இக்கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நன்றி பாண்டி!

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சிந்திக்கலாமா?

கோடைக்காலங்களில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்ன?
Answer:
கோடைக்காலங்களில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படக்காரணம், கோடைக் காலங்களில் மழை பொழிவது இல்லை. அதனால் நீர்நிலைகளில் நீர் வற்றி விடுகிறது வறண்டும் போய் விடுகிறது. இந்த நேரங்களில் தான் அதிகமாக நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகிறது. மனிதனின் பேராசையாலும் நீர் சுரண்டப்படுவதாலும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகிறது. பெரும்பாலான ஆறுகள், குளங்கள், ஏரிகள் தூர்வாரப்படாமல் இருப்பதும் காரணமாகும். இங்கு அதிகமான நீர்நிலைகள் இல்லாததும் இருப்பதை முறையாக பராமரிக்காமல் விட்டதாலும் பற்றாக்குறை ஏற்படுகிறது.

நீர்ப்பற்றாக்குறைறைப் போக்க என்ன செய்வாய்?
Answer:
நீர்ப்பற்றாக்குறையைப் போக்க பல அணைகள் கட்டலாம். ஆற்றின் குறுக்கே பல தடுப்பணைகளைக் கட்டலாம். நீர்நிலைகளைக் கோடைக்காலங்களில் முறையாக தூர்வாரி பராமரித்து, மழைக்காலங்களில் அதிக நீரை சேகரித்து வைக்கலாம். புதிய புதிய நீர்நிலைகளை உருவாக்கி நீரைச் சேமித்து நிலத்தடி நீரையும் உயர்த்தலாம். இருக்கின்ற நீரை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான பழத்தைத் தேர்ந்தெடுக்க

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 1
Answer:

1. துயரம் இச்சொல் குறிக்கும் பொருள் துன்பம்
2. வியத்தகு இச்சொல் குறிக்கும் பொருள் ஆச்சரியம் தரும்.
3. முறியடித்து இச்சொல் குறிக்கும் பொருள் தகர்த்து
4. சூழ்ச்சி இச்சொல் குறிக்கும் பொருள் தந்திரம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
பெருவெள்ளம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
அ) பெருமை + வெள்ளம்
ஆ) பெரு + வெள்ளம்
இ) பெரு + வுள்ளம்
ஈ) பெரிய + வெள்ளம்
Answer:
அ) பெருமை + வெள்ளம்

Question 2.
தங்கியிருந்த இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
அ) தங்கி + இருந்த
ஆ) தங்கி + யிருந்த
இ) தங்கியி + ருந்த
ஈ) தங்கு + இருந்த
Answer:
அ) தங்கி + இருந்த

Question 3.
அமைந்துள்ளது இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
அ) அமைந் + துள்ளது
ஆ) அமைந்து + உள்ளது
இ) அமைந்து + ள்ளது
‘ஈ) அமைந் + உள்ளது
Answer:
ஆ) அமைந்து + உள்ளது

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 4.
அரசு + ஆட்சி என்பதைச் சேர்த்து கிடைக்கும் சொல் …………………………
அ) அரசஆட்சி
ஆ) அரசாட்சி
இ) அரசுசாட்சி
ஈ) அரசு ஆட்சி
Answer:
ஆ) அரசாட்சி

Question 5.
நீர் + பாசனம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………
அ) நீர்பாசனம்
ஆ) நீர்ப்பாசனம்
இ) நீரப்பசனம்
ஈ) நீர்பாசனம்
Answer:
ஆ) நீர்ப்பாசனம்

பந்தை அதன் எதிர்ச்சொல் கூடையில் போடலாமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 2
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 3

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சரியானதை எடுத்து எழுதுக

1. கல்லணை அமைந்துள்ள மாவட்டம் ………………………… (திருச்சி/ தஞ்சாவூர்)
Answer:
தஞ்சாவூர்

2. தமிழ்நாட்டில் காவிரியின் முக்கிய துணையாறு ………………………… (வைகை / கொள்ளிடம்)
Answer:
கொள்ளிடம்

3. கல்லணையைக் கட்டிய அரசன் ………………………… . (கரிகாலன்/இராசராசன்)
Answer:
கரிகாலன்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

4. கல்லணை ………………………… தொழில்நுட்பத்திற்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது. (பழந்தமிழர்/இன்றைய)
Answer:
பழந்தமிழர்

வினாக்களுக்கு ஏற்ற விடையளிக்க

Question 1.
கரிகாலனின் இயற்பெயர் என்ன?
Answer:
கரிகாலனின் இயற்பெயர் வளவன்.

Question 2.
கரிகாலன் என்று பெயர் வரக் காரணம் என்ன?
Answer:
கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.

Question 3.
கரிகாலன் கல்லணையைக் கட்ட காரணம் யாது?
Answer:
காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வரும். ஆனால் அந்த நீர் எதற்கும் பயன்படாமல் கடலுக்குச் சென்றுவிடும். மக்கள் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்காலும், கோடைக்காலத்தில் நீர் இன்றியும் மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதனைத் தடுக்கும் பொருட்டு பெரியதோர் அணையைக் கட்டினான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 4.
கல்லணையின் சிறப்பாக நீ நினைப்பதை எழுதுக.
Answer:
தற்போது பயன்பாட்டில் உள்ள மிகப்பழமையான ஒரே அணை கல்லணை. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத்திட்டம் எனவும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்துக் கட்டியுள்ளார்கள். இது பழந்தமிழரின் தொழில் நுட்பத்திற்குச் சான்றாகும். இன்று வரை இது வியத்தகு சாதனையாக உள்ளது.

மொழியோடு விளையாடு

ஒரே எழுத்தைக் கண்டுபிடி, நான்கு சொல்லைப் பெறலாம்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 4
Asnwer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 5

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

செயல் திட்டம்

Question 1.
நூலகத்திற்குச் சென்று வரலாற்று நூல்களைப் படித்து யாரேனும் ஐந்து அரசர்களின் பெயர்களையும், அவர்கள் செய்த நற்செயல்களையும் தெரிந்து கொண்டு அட்டவணையை நிரப்பி வருக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 6
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 7

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
கல்லணை திருச்சியிலிருந்து ………………………… கி.மீ. தொலைவில் உள்ளது.
அ) 15
ஆ) 20
இ) 10
ஈ) 25
Answer:
ஆ) 20

Question 2.
மணிமொழியும், கனிமொழியும் ………………….. க்குச் சென்றனர்.
அ) திருச்சி
ஆ) பெரியகோவில்
இ) கல்லணை
ஈ) வேலூர்
Answer:
இ) கல்லணை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 3.
கரிகாலன் ………………………… யின் மகன் ஆவான்
அ) வீரய்ய ன்
ஆ) பொம்மு நாயக்கர்
இ) இராஜராஜன்
ஈ) இளஞ்சேட் சென்னி
Answer:
ஈ) இளஞ்சேட் சென்னி

Question 4.
உலகின் மிகப் பழமையான ஆணை …………………..ஆகும்.
அ) மேட்டூர் அணை
ஆ) பவானி சாகர் அணை
இ) கல்லணை
ஈ) வைகை அணை
Answer:
இ) கல்லணை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 5.
காவிரி ஆறு ………………….. ஆகப் பிரிகிறது.
அ) 3
ஆ) 5
இ) 4
ஈ) 6
Answer:
இ) 4

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
கல்லணை எங்கு உள்ளது?
Answer:
கல்லணை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இது திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 2.
கல்லணை கட்டப்பட்ட முறையை எழுதுக.
Answer:

  • காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன.
  • அந்தப் பாறையின் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கறையாத ஒரு வித ஒட்டும் களிமண்ணைப் பூசி, இரண்டும் ஒன்றோடும் ஒன்று ஒட்டிக் கொள்ளும்படி செய்தனர்.

Question 3.
கல்லணை எப்போது கட்டப்பட்டது?
Answer:
கல்லணை இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

Question 4.
காவிரி ஆறு எந்தெந்த ஆறுகளாகப் பிரிகிறது?
Answer:

  • காவிரி
  • கொள்ளிடம்
  • வெண்ணாறு
  • புது ஆறு.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 5.
கல்லணை பயன்பெறும் மாவட்டங்கள் யாவை?
Answer:
திருச்சி, தஞ்சாவூர்.

அகர முதலி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 9

Leave a Reply