Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைச் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
இம்மை என்ற சொல் குறிக்கும் பொருள் …………………………
அ) இப்பிறப்பு
ஆ) மறுபிறப்பு
இ) பிறப்பு
ஈ) முற்பிறப்பு
Answer:
அ) இப்பிறப்பு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

Question 2.
காரணமாகின்றது என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது …………………………
அ) காரண + மாகின்றது
ஆ) காரண + ஆகின்றது
இ) காரணம் + மாகின்றது
ஈ) காரணம் + ஆகின்றது
Answer:
ஈ) காரணம் + ஆகின்றது

Question 3.
வறுமை இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ………………………….
அ) செழுமை
ஆ) இன்மை
இ) செம்மை
ஈ) ஏழைமை
Answer:
அ) செழுமை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

Question 4.
பொருள் + செல்வம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………
அ) பொருள்செல்வம்
ஆ) பொருள்ச்செல்வம்
இ) பொருட்செல்வம்
ஈ) பொருட்ச்செல்வம்
Answer:
இ) பொருட்செல்வம்

Question 5.
பொருள் + இல்லார்க்கு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) பொருளில்லார்க்கு
ஆ) பொருள்ளில்லார்க்கு
இ) பொருலில்லார்க்கு
ஈ) பொருள் இல்லார்க்கு
Answer:
அ) பொருளில்லார்க்கு

ஆ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.

1. பழைமை + மொழி = …………………………….
2. நன்மை + வழி = …………………………….
Answers:
1. பழைமை + மொழி = பழமொழி
2. நன்மை + வழி = நல்வழி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

இ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக

1. பணமென்றால் = ……………………………. + …………………………….
2. தொலைக்காட்சி = ……………………………. + …………………………….
Answers:
1. பணமென்றால் = பணம் + என்றால்
2. தொலைக்காட்சி = தொலை + காட்சி

ஈ . தொடரை முழுமை ஆக்குக. (பத்தும், வளம், கல்வி)

1. பசி வந்திடப் ………………….. போகும்.
2. கேடில் விழுச்செல்வம்…………………..
3. பொருளால் நம் வாழ்வு ………………….. பெறும்.

1. பசி வந்திடப் பத்தும் போகும்.
2. கேடில் விழுச்செல்வம் கல்வி.
3. பொருளால் நம் வாழ்வு வளம் பெறும்.

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
களர்நிலத்துக்கு ஒப்பானவர் – யார்?
Answer:
கல்வி கற்காதவரே களர்நிலத்துக்கு ஒப்பாவர் ஆவர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

Question 2.
கள்வரால் கவர்ந்து செல்லக் கூடியது எது?
Answer:
பொருட்செல்வம் கள்வரால்(திருடரால்) கவர்ந்து செல்லக்கூடியது ஆகும்.

Question 3.
‘கல்விச் செல்வமே மிகவும் சிறந்த செல்வம்’ என்பதற்கு மலர்விழி கூறிய காரணங்களை உம் சொந்த நடையில் எழுதுக.
Answer:

  • கற்காதவன் பயன்படாத நிலம் போன்றவன்.
  • கல்வி கற்றவருக்கு மட்டுமே மதிப்பு கிடைக்கும்.
  • பொருட்செல்வம் கொடுத்தால் குறையும், திருடரும் திருடுவர். ஆனால் கல்வி குறையாது. திருடவும் முடியாது.
  • இப்பிறப்புக்கும் மறுபிறப்புக்கும் பயன் தருவது கல்வியே. ஆகியவை ‘கல்விச் செல்வமே மிகவும் சிறந்த செல்வம்’ என்பதற்கு மலர்விழி கூறிய காரணங்கள் ஆகும்.

Question 4.
பொருட்செல்வமே மிகவும் அவசியம் என்பதற்குத் தமிழரசி கூறிய காரணங்களைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • வள்ளுவரும் பொருள் இல்லாதவருக்கும் உலகம் இல்லை என்கிறார்.
  • கல்வி கற்பதற்கும் பணம் தேவை.
  • பணம் இல்லாதவன் பிணம் ஆகியவை பொருட்செல்வமே மிகவும் அவசியம் என்பதற்குத் தமிழரசி கூறிய காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

ஊ. சிந்தனை வினாக்கள்

Question 1.
கல்விச் செல்வம் அல்லது பொருட்செல்வம் இரண்டில் ஒன்றுதான் உனக்கு வழங்கப்படும் எனில், நீ எதைத் தெரிவு செய்வாய்? ஏன்?
Answer:
நான் கல்விச் செல்வத்தைத் தான் வாங்குவேன். ஏன் என்றால், கல்வியால் பொருட்செல்வத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம்.

Question 2.
‘நன்மை மேன்மைப்படுத்துவது கல்வி’ – இதைப் பற்றி உன் சொந்த நடையில் பேசுக.
Answer:
வணக்கம்! ‘நம்மை மேன்மைப்படுத்துவது கல்வி’ என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகின்றேன். மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது. எனவேதான் ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்னும் தொடர் மக்களிடையே நிலவுகிறது.

நம்மிடம் இருக்கும் அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குகிறது கல்வி. நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவானதால் கல்வியில் இன்பம் தோன்றுகிறது. கல்வி, அறியாமையைப் போக்குவது என்பதை நான்மணிக் கடிகையும் தெரிவித்துள்ளது. கற்றபடி வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதைத் திருக்குறளில் திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ (391) என்னும் அடியில் இதே கருத்து இடம் பெற்றிருப்பதை நீங்கள் காணமுடியும். கற்றவர்க்குக் கல்வியே ஒரு செல்வமாக உதவும் தன்மை கொண்டது.

கல்வி ஒன்று மட்டுமே ஒருவனை நல்லவனாகவும், அறிவுள்ளவனாகவும் ஆக்கும். எனவே ‘நம்மை மேன்மைப்படுத்துவ கல்வி’ என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன். நன்றி.

கூடையில் உள்ள சொற்களுக்கு உரிய எதிர்ச்சொற்களைத் தொட்டியிலிருந்து கண்டறிந்து எழுதுக.
“>Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் - 1<
Answer:
1. இம்மை × மறுமை
2. நல்வழி × தீயவழி
3. வருத்தம் × மகிழ்ச்சி
4. நேற்று × இன்று
5. புதுமை × பழமை
6. வறுமை × செழுமை
7. நன்மை × தீமை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

கற்பவை கற்றபின்

Question 1.
கல்விச் செல்வமா? பொருட்செல்வமா? எது அவசியம் என்று நீ நினைக்கிறாய்? ஏன்?
Answer:
கல்விச் செல்வத்தையே அவசியம் என்று நினைக்கின்றேன். ஏனென்றால், பொருளால் புகழ் அடைந்தவர் மக்கள் மனதில் இருப்பதில்லை. கல்வியால் புகழ் அடைந்தவர் மட்டுமே மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பர்.

Question 2.
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை – இது பற்றி உன் கருத்து என்ன?
Answer:
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். ஏனென்றால், இறைவன் மனிதனைப் படைக்கும்போது, எந்த ஒரு பணத்தையும் படைக்கவில்லை. அவன் ஒவ்வொன்றாகக் கற்று தான், பணத்தை உண்டக்கினான். பணம் இல்லாமல் வாழ முடியாது என்ற மாயை உருவாக்கியவன் மனிதன். எனவே இக்கூற்றை நான் ஏற்க மாட்டேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

Question 3.
கல்வியால் சிறந்தவர்கள், பொருளால் சிறந்தவர்கள் – யாரால் நம் நாடு முன்னேற்றம் அடையும்? வகுப்பறையில் விவாதம் செய்க.
Answer:
கல்வியால் சிறந்தவர்களால் நம் நாடு முன்னேற்றம் அடையும் :
கல்வி ஒரு மனிதனை நற்பண்புள்ளவனாகவும், நல்லறிவு உடையவனாகவும் ஆக்கும். பாரதியும்கூட கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்று பாடியிருக்கின்றார். பொருளால் ஒன்றை வாங்க முடியுமே தவிர, அதனை உருவாக்க கல்விதான் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கணித மேதையாலும் அறிவியல் மேதைகளாலும் தொழில்நுட்ப வல்லுநர்களாலும் என எத்தனையோ கற்றறிந்த சான்றோர்களால் இன்று நம்நாடு வளர்ச்சியின் முன்னணியில் உலகில் உள்ளது. கல்வியால் சிறந்தவர்களால் தான் நாடு வளர்ச்சி அடையும்.

பொருளால் சிறந்தவர்களால் நம் நாடு முன்னேற்றம் அடையும் :
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றார் வள்ளுவர். பொருள் இல்லை என்றால் ஒரு சிறு துரும்புகூட அசையாது.

பல தலைவர்கள் வாழ்ந்து நம் நாட்டை உயர்த்தி இருந்தாலும் பல தலைவர்கள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பல லட்சக்கணக்கான தொழிற்சாலைகள் நம் நாட்டின் வளர்ச்சிக்குக் காரணம். அந்த நிறுவனங்களை உருவாக்கியவர்கள் பொருள் படைத்தவர்கள். பொருளால் சிறந்தவர்களால் நம் நாடு முன்னேற்றம் அடையும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
கேடில் விழுச்செல்வம் கல்வி என்று கூறுபவர் ……………..
அ) திருவள்ளுவர்
ஆ) ஒளவையார்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
Answer:
அ) திருவள்ளுவர்

Question 2.
கல்வி கற்காதவன் ‘களர்நிலத்துக்கு ஒப்பானவன்’ என்று கூறுபவர் …….
அ) ஔவையார்
ஆ) பாரதியார்
இ) திருவள்ளுவர்
ஈ) பாரதிதாசன்
Answer:
ஈ) பாரதிதாசன்

Question 3.
நல்வழி என்ற சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது ……………..
அ) நல் + வழி
ஆ) நன்மை + வழி
இ) நல்ல + வழி
ஈ) நன் + வழி
Answer:
ஆ) நன்மை + வழி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

விடையளி :

Question 1.
இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது எது?
Answer:
இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது கல்வி ஆகும்.

Question 2.
பொருள் பற்றி வள்ளுவரின் கருத்து யாது?
Answer:
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை.

Question 3.
பணம் பற்றிய பழமொழிகள் யாவை?
Answer:

  • பணம் இல்லாதவன் பிணம்.
  • பணம் என்றால் பிணம்கூட வாயைத் திறக்கும்.

Question 4.
நிலையில்லாத செல்வம் எது?
Answer:
பொருட்செல்வமே நிலையில்லாத செல்வம் ஆகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.2 கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

Question 5.
கல்வி எதற்கு வழி செய்கின்றது?
Answer:
கல்வி நன்மை, தீமைகளைப் பகுத்தறிந்து நல்வழியில் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள உதவுகின்றது.

Leave a Reply