Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 9.4 மரபுத்தொடர்கள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. கீழ்க்காணும் தொடர்களில் ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நாங்கள் …………………… உழவுத்தொழில் செய்து வருகிறோம். (வாழையடி வாழையாக/விடிவெள்ளியாக)
Answer:
வாழையடி வாழையாக

2. அவனுக்கு நடைமுறை அறிவு எதுவும் கிடையாது. அவன் ஒரு…. (அவரசக்குடுக்கை /புத்தகப்பூச்சி) –
Answer:
புத்தகப்பூச்சி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

3. பாரதிதாசன் கவிதை உலகில் …………………ப் பறந்தார். (பற்றுக்கோடாக/கொடி கட்டி)
Answer:
கொடி கட்டி

ஆ. பொருத்துக
1. கயிறு திரித்தல் – பொய் அழுகை
2. ஓலை கிழிந்தது – விடாப்பிடி
3. முதலைக் கண்ணீ ர் – இல்லாததைச் சொல்லல்
4. குரங்குப்பிடி – மறைந்து போதல்
5. நீர் மேல் எழுத்து – வேலை போய்விட்டது
Answer:
1. கயிறு திரித்தல் – இல்லாததைச் சொல்லல்
2. ஓலை கிழிந்தது – வேலை போய்விட்டது
3. முதலைக் கண்ணீ ர் – பொய் அழுகை
4. குரங்குப்பிடி – விடாப்பிடி
5. நீர் மேல் எழுத்து – மறைந்து போதல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

இ. காலை வாரிவிடுகிறது – இம்மரபுத்தொடர், கீழ்க்காணும் எந்தத் தொடருக்குப் பொருத்தமாக அமையும்?

1. காலம் பொன் போன்றது. இருந்தாலும் நம்மைக் ………….
2. காலை எழுந்தவுடன் தூக்கம், நம்மைத் ……………
3. மறதி நம்மை அடிக்கடி …………
4. இளமைக்காலம் நம்மை அடிக்கடி.
Answer:
3. மறதி நம்மை அடிக்கடி காலை வாரிவிடுகிறது.

ஈ. மலையேறி விட்டது – இம்மரபுத்தொடர் குறிக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
1. மாயச் செயல்
2. கதை விடுதல்
3. மாற்றம் பெறுதல்
4. பயனில்லாது இருத்தல்
Answer:
3. மாற்றம் பெறுதல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
மரபுத்தொடர் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.
Answer:

 • இணைமொழிகள் போன்று கருத்தாழமும் நடையழகும் கொண்ட தொடர்கள் மரபாக தொன்று தொட்டு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வருவது மரபுத்தொடர் எனப்படும்.
 • எ.கா. கானல் நீர்

Question 2.
பின்வரும் மரபுத்தொடர்களைக் கொண்டு தொடரமைத்து எழுதுக.
Answer:
அ) தோலிருக்கச் சுளை விழுங்கி
தோலிருக்கச் சுளை விழுங்கியது போல் அத்தனை உப்புக்களையும் கபளீகரம் செய்திருக்கிறது இந்த பேயாறு.

ஆ) மதில் மேல் பூனை
கண்ணன் மதில் மேல் பூனை போல் படிப்பில் ஒரு நிலையில்லாமல் இருந்தான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

கற்பவை கற்றபின்

Question 1.
மரபுத்தொடர்களின் பொருளை அறிந்துகொள்க முயல்க.
Answer:
மரபுத்தொடர்களின் பொருள் :
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள் - 1 Question 2.
அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் பேச்சில் காணப்படும் மரபுத்தொடர்களைத் தொகுத்து வருக.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள் - 2

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 3.
மரபுத்தொடர்களைப் பயன்படுத்தி தொடர்கள் எழுதுக.
Answer:

 • அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பதற்கு என்று சொன்ன காலம் மலையேறிவிட்டது.
 • திருமணம் நிகழ்வதைப் பெரியோர் ஆயிரங்காலத்துப் பயிராகக் கருதுவர்.
 • அரசியல்வாதிகளின் வாக்குறுதி ஆகாயத்தாமரை போல் உள்ளது.
 • கந்தன் எடுத்ததெற்கெல்லாம் முதலைக்கண்ணீர் வடிப்பான்.
 • என் தங்கையின் செயல் எல்லாமே அவலை நினைத்து உரலை இடிப்பது போல இருக்கும்.

மொழியை ஆள்வோம்

பேசுதல்

Question 1.
உனது வாழ்வின் உயர்வுக்கு எந்தெந்தப் பண்புகள் உதவியாக இருக்கும்? கலந்துரையாடுக.
Answer:
மாணவன்-1 : வணக்கம்! நான் வாழ்வில் உயர்வதற்கு என்னென்ன பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று என் அப்பாவிடம் கேட்டேன்.
மாணவன்-2 : அப்படியா? என்னவென்று கூறேன். அனைவரும் அறிந்து கொள்ளலாம். மாணவன்-1 : முதல் பண்பு ஒழுக்கத்துடன் இருத்தல் வேண்டும்.

மாணவன்-2 : ஒழுக்கம் என்றால் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்?
மாணவன்-1 : பள்ளி மாணவர்களாகிய நமக்குத் தேவையான ஒழுக்கம்.
1. பள்ளிக்கு நேரத்துடன் செல்லல்.
2. ஒழுங்கான சீருடையுடன் பள்ளிக்குச் செல்லல்.
3. வாரம் ஒருமுறை நகம் வெட்டுதல்.
4. மாதம் ஒருமுறை தலைமுடியை வெட்டுதல்.
5. அன்றாட வீட்டுப் பாடங்களை எழுதுதல்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

மாணவன்-2 : இவையெல்லாம் நாம் கடைப்பிடிப்பதுதான்.
மாணவன்-1 : சரியாகச் சொன்னாய். இவற்றுடன் பெற்றோரை மதித்தல், பெற்றோர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடத்தல், அனைவரிடமும் அன்புடன் பழகுதல் ஆகியவையும் நற்பண்புகளாகும்.
மாணவன்-2 : அன்புடன் பழகுதல் மற்றும் அதனுடன் பணிவுடன் திகழ்தல் போன்றவையும் நற்பண்புகள்தான்.

மாணவன்-1 : ஆம்! மற்றவர்களைப் புண்படுத்தும்படிப் பேசக்கூடாது. பிறருடைய எண்ணங்களுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளித்தல். இந்தப் பணிவு, அன்புடன் பழகுதல், விட்டுக்கொடுத்துப் பழகும் குணம் இவையெல்லாம் பெற்றோரிடம் பாசமுடன் வளரும் குழந்தைகளிடன் இயல்பாகவே அமையும். இப்பண்புகளின் தொகுப்பே ஒழுக்கம் ஆகும்.
மாணவன்-2 : அப்படியா? இனிமேல் நாம் அனைவரும் இந்த நற்பண்புகளைப்
பின்பற்றி வாழ்வோம் என உறுதியேற்போம்.

Question 2.
அன்னை தெரேசாவின் தொண்டுகளைப் பற்றி 5 மணித்துளி பேசுக.
Answer:
அவையோர்க்கு வணக்கம்!
‘அன்னை ‘ என்று இந்திய மக்களால் பெருமையுடன் குறிப்பிடப்படுபவர் தெரேசா. இவர் அயல்நாட்டைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் இந்திய மண்ணையே தனது தாய் மண்ணாக எண்ணி வாழ்ந்து சிறந்தவர்தான் அன்னை தெரேசா.

இவர் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். இவர் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் நாள் யுகோஸ்லாவியா நாட்டில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் ஆக்னஸ் என்பதாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

அன்னை தெரேசா கிறித்துவ மதத்தைப் பரப்பும் எண்ணத்துடன்தான் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். கல்கத்தாவில் ஒரு ஆசிரியையாக தன் பணியினைத் தொடங்கினார். கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமாக மனம் கலங்கச் செய்தது. பஞ்சம் ஒரு புறம் இந்து – முஸ்லிம் வன்முறை மற்றொரு புறம். இதனால் தெரேசா மிகவும் மனம் வருந்தினார்.

1948 ஆம் ஆண்டு தனது சேவையை ஆரம்பித்தார். நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமையினைப் பெற்றுக் கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்தார்.
ஆதரவற்றோர் மற்றும் பசியினால் வாடுவோரின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அதனைத்தொடர்ந்து பிறர் அன்பின்பணியாளர் சபையைத் தொடங்கினார். உண்ண உணவற்றவர்கள், வீடற்றவர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களைக் கவனித்தல் போன்ற பணிகளைச் செய்வதனைக் குறிக்கோளாய்க் கொண்டார்.

1952 இல் கொல்கத்தா நகரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை தெரேசா இறப்பின் வாயிலிருப்போருக்கு முதல் இல்லத்தை ஏற்படுத்தினார். இந்திய அதிகாரிகளின் துணை கொண்டு அவர் புழக்கமற்ற ஒரு இந்துக் கோயிலை ஏழைகளுக்கான நல்வாழ்வு மையமாக மாற்றினார். இவ்வில்லத்திற்குக் கொண்டு வரப்படுபவர்களுக்கு அவரவர் சமயத்திற்கேற்ப நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

இவருக்கு இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் அவருடைய சேவைகளுக்காகப் பொருளுதவி செய்து மகிழ்ந்தன.

அன்பிற்கோர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த அன்னை தெரேசாவின் வாழ்க்கையை நினைவில் வைப்போம். நம்மால் இயன்றதொண்டினைச்செய்வோம். வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

எழுதுதல்

Question 1.
சொல்லக் கேட்டு எழுதுக.
Answer:
1. பெண்ணின் பெருமையைப் பாடியவர் பாரதிதாசன்.
பாரதிதாசன் பெயரால் விருது வழங்கப்படுகிறது. கவிஞர் வாணிதாசன் புதுச்சேரியைச் சேர்ந்தவர்.
வானம் வசப்படும் என்ற நூலை எழுதியவர், பிரபஞ்சன்.

Question 2.
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. பொறுமை – ………………………….
2. நூல்கள் – ………………………….
3. தமிழ்மொழி – ………………………….
4. அன்பு – ………………………….
5. கவிஞர் – ………………………….
Answer:
1. பொறுமை – நிலத்தைப் போல் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.
2. நூல்கள் – நூலகத்தில் பல துறை நூல்கள் பெருகி இருக்கும்.
3. தமிழ்மொழி – நம் தமிழ்மொழி மிகவும் தொன்மையானது.
4. அன்பு – எல்லோரிடமும் அன்புடன் பழகுதல் வேண்டும்.
5. கவிஞர் – இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் பாரதியார் பெரும்புகழ் பெற்றவர்.

Question 3.
பொருத்துக

பாரதியார் – என் தமிழ் இயக்கம்
பாரதிதாசன் – கொடி முல்லை
வாணிதாசன் – குயில் பாட்டு
திருமுருகன் – வானம் வசப்படும்
பிரபஞ்சன் – தமிழியக்கம்
Answer:
1. பாரதியார் – குயில் பாட்டு
2. பாரதிதாசன் – தமிழியக்கம்
3. வாணிதாசன் – கொடி முல்லை
4. திருமுருகன் – என் தமிழ் இயக்கம்
5. பிரபஞ்சன் – வானம் வசப்படும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 4.
அண்ணல் காந்தியடிகளின் உள்ளம் கவர்ந்த குஜராத்திய பாடலின் தமிழாக்கம்
தீமை செய்தவர்க்கும் நன்மை செய், எல்லாரும் ஒன்று என்பதைக் கூறும் மனித நேயப் பாடலைப் படித்து உணர்க.
Answer:
உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குக் கைம்மாறாய்
விண்ணமுதைப்போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய்!
அன்போடு கும்பிட்டால் அடிபணிந்து நீ தொழுவாய்!
செம்பான காசுக்குச் செம்பொன்னைத் தந்திடுவாய்!
உயிர்காத்தோன் துன்பத்தை உயிர்கொடுத்து நீ துடைப்பாய்!
செயலாலும் சொல்லாலும் சிந்தையினாலும் பெரியோர்
சின்னஞ்சிறு உதவி செய்தவர்க்கு எந்நாளும்
ஒன்றுக்குப் பத்தாய் உவந்து செய்வர் பேருதவி!
வையத்தார் எல்லாரும் ஒன்றெனவே மாண்புடையோர்
ஐயப்பாடின்றி அறிந்திருக்கும் காரணத்தால்
இன்னா செய்தாரை ஒறுக்க அவர் நாண
நன்னயம் செய்துவிடுவர் இந்த நானிலத்தே!

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 5.
ஆம் வகுப்பு பிறமொழிச் சொற்கள் கலவாமல் எழுதுக.
அழகன், பிரெண்ட்ஸோடு கிரவுண்டுக்குச் சென்றான். அங்கு அனைவருடனும் ஜாலியாகக் கிரிக்கெட் விளையாடினான். அதனால், அவன் மிகவும் டையர்டாக இருந்தான்.
Answer:
அழகன், நண்பர்களுடன் திடலுக்குச் சென்றான். அங்கு அனைவருடனும் மகிழ்ச்சியாகக் மட்டைப்பந்து விளையாடினான். அதனால், அவன் மிகவும் சோர்வாக இருந்தான்.

Question 6.
பாடலை நிறைவு செய்க.
im 7
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள் - 3

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 7.
பின்வரும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள் - 4

வினாக்கள் :

Question 1.
நீங்கள் மேலே படித்தது என்ன?
அ) பாடல்
ஆ) கதை
இ) விளம்பரம்
Answer:
இ) விளம்பரம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 2.
பயிற்சி அளிக்கப்படும் விளையாட்டு எது?
அ) மட்டைப்பந்து
ஆ) கபடி
இ) சதுரங்கம்
Answer:
ஆ) கபடி

Question 3.
மாணவர்களுக்கு எத்தனை மணி நேரம் பயிற்சி வழங்கப்படுகிறது?
அ) 1 மணி
ஆ) 2 மணி
இ) 3 மணி
Answer:
இ) 3 மணி

Question 4.
மைதானம் – இந்தச் சொல்லுக்குரிய பொருள் எது?
அ) பூங்கா
ஆ) அரங்கம்
இ) திடல்
Answer:
இ) திடல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 5.
விளம்பரத்திலிருந்து நீங்கள் புரிந்து கொண்டது என்ன?
அ) கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது.
ஆ) கபடி விளையாட்டில் மாணவர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.
இ) கபடி விளையாட்டு நடைபெறுமிடம் பெரியார் விளையாட்டு மைதானம்.
Answer:
அ) கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது

மொழியோடு விளையாடு

1. குறுக்கெழுத்து புதிர்
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள் - 5
இடமிருந்து வலம்

1. இவர் எட்டயபுரத்துக் கவிஞர்
Answer:
பாரதியார்

2. இது வெண்ணிறப் பறவை.
Answer:
புறா

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

3. தூக்கத்தில் வருவது.
Answer:
கனவு

கீழிருந்து மேல்

1. புத்தகத்தைக் குறிக்கும் சொல்
Answer:
நூல்

வலமிருந்து இடம்

1. பாராட்டி வழங்கப்படுவது
Answer:
விருது

2. மக்கள் பேசுவதற்கு உதவுவது
Answer:
மொழி

3. சுதந்திரத்தைக்  குறிக்கும் தமிழ்ச்சொல்
Answer:
விடுதலை

குறுக்கும் நெடுக்குமாக

Question 1.
முத்தமிழுள் ஒன்று
Answer:
நாடகம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 2.
குறிப்புகள் கொண்டு விடை எழுதுக.

1. தலைகீழாய் என் வீடு. -………………………………..
2. என் பார்வை கூர்நோக்கு. – ………………………………..
3. நானும் ஒரு தையல்காரி. – ………………………………..
4. வருமீன் வரும்வரை காத்திருப்பேன். – ………………………………..
5. எனக்கு வீடு கட்டத் தெரியாது. – ………………………………..
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள் - 6
Answer:
1. தலைகீழாய் என் வீடு. – தூக்கணாங்குருவி
2. என் பார்வை கூர்நோக்கு. – கழுகு
3. நானும் ஒரு தையல்காரி. – சிட்டுக்குருவி
4. வருமீன் வரும்வரை காத்திருப்பேன். – கொக்கு
5. எனக்கு வீடு கட்டத் தெரியாது. – குயில்

3. சொல்லிருந்து புதிய சொல்
1. பாரதியார் . – ……………………, ……………………, ……………………, ……………………
2. மணிக்கொடி – ……………………, ……………………, ……………………, ……………………
3. பாவேந்தர் – ……………………, ……………………, ……………………, ……………………
4. நாடகம் – ……………………, ……………………, ……………………, ……………………
5. விடுதலை – ……………………, ……………………, ……………………, ……………………
Answer:
1. பாரதியார் – பா, ரதி, யார், பார், பாதி
2. மணிக்கொடி – மணி, கொடி, மடி
3. பாவேந்தர் – பா, வேந்தர், வேர், பார்
4. நாடகம் – நா, நாம், நாகம், கடம்
5. விடுதலை – விடு, தலை, விலை, தடு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

4. சொற்களைக் கொண்டு புதிய தொடர் உருவாக்குக.
எ.கா. உண்மை – நாம் எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும்.
1. பெருமை – ……………………
2. பாடல் – ……………………
3. நாடகம் – ……………………
4. தோட்டம் – ……………………
5. பரிசு – ……………………
Answer:
1. பெருமை – நாம், பிறர் பெருமைப்படும் செயல்களைச் செய்ய வேண்டும்.
2. பாடல் – திருவிழாக்கள் என்றாலே மக்கள் ஆடல் பாடல் என்று
மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
3. நாடகம் – தொலைக்காட்சியில் வரும் நாடகங்களைப் பார்த்து நேரத்தை
வீணாக்கக்கூடாது.
4. தோட்டம் – கந்தன் அவன் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்துள்ளான்.
5. பரிசு – கோகிலா பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றாள்.

5. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடரமைக்க.

Question 1.
பெருமை பாரதிதாசன் தமிழுக்குச் சேர்த்துள்ளார்.
Answer:
பாரதிதாசன் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

Question 2.
பறவை அழகான புறா
Answer:
புறா அழகான பறவை.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 3.
தமிழ் உண்டாகிறது மேல் ஆர்வம்.
Answer:
தமிழ் மேல் ஆர்வம் உண்டாகிறது.

Question 4.
போற்றும் உலகம் எழுத்தாளர் உயர்ந்த
Answer:
உலகம் போற்றும் உயர்ந்த எழுத்தாளர்.

அறிந்து கொள்வோம்

மனிதநேயம்

அன்பென்று கொட்டு முரசே
மக்கள் மக்கள் அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்

நிற்க அதற்குத் தக

1. உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவேன்.
2. நல்ல நல்ல நூல்களைத் தேடிப் படிப்பேன்.
3, மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

செயல் திட்டம்

தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய கவிஞர்களுள் ஐவரின் படத்தை ஒட்டி, ஒவ்வொருவரையும் பற்றி 5 வரிகள் எழுதி வருக.
Answer:

1. மகாகவி பாரதியார் :

 • பெற்றோர் – சின்னசாமி அய்யர் – லட்சுமி அம்மாள்.
 • சிறுவயதிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்றதால் ‘பாரதி’ என்ற பட்டத்தைப் பெற்றவர்.
 • தமது கவிதைகள் மூலம் தமிழ் மக்களுக்குத் தமிழ்ப்பற்றையும், தேசபக்தியையும் ஊட்டி வளர்த்தவர் பாரதியார்.
 • சென்னையில் ‘இந்தியா’ என்ற வார இதழைத் தொடங்கியவர்.
 • பாரதியார் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
 • நிவேதிதா தேவியைத் தமது ஞானகுருவாக ஏற்றுக் கொண்டவர். ‘தேசிய கவி’, ‘மகாகவி’ எனப் பாராட்டப்பட்டவர்.

2. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் :

 • பெற்றோர் – கனகசபை – மகாலட்சுமி.
 • தமிழைத் தனது உயிராய்க் கொண்டு வாழ்ந்து, தனது புரட்சிக் கவிதைளால் தமிழில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர்.
 • பாரதியார் மீது கொண்ட பற்றினால் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டவர்.
 • இருண்ட வீடு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
 • புரட்சிக் கவிஞர், புதுமை கவிஞர், பாவேந்தர் என்றெல்லாம் போற்றப்பட்டார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

3. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை :

 • பெற்றோர் – வெங்கட்ராமன் – அம்மணி அம்மாள்.
 • தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்.
 • இவர் ஓவியம் வரைவதில் வல்லவர். 1912ஆம் ஆண்டு 5 ஆம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி டெல்லியில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இவரது ஓவியம் இடம் பெற்றுத் தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.
 • நாடகங்களுக்குப் பாட்டு எழுதிக் கொடுப்பார்.
 • காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். உப்புச் சத்தியாகிரகத்தின்போது வழிநடைப் பாடலாகக் ‘கத்தியின்றி ரத்தமின்றி’ பாடலைப் பாடிப் புகழ் பெற்றவர்.
 • ‘என் கதை’ என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதியுள்ளார்.
 • மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், கம்பனும் வால்மீகியும், திருக்குறளும் பரிமேலழகரும் ஆகிய நூல்கள் இவரது படைப்புகளுள் சில.

4. ஈரோடு தமிழன்பன் :

 • பெற்றோர் – செ.இரா. நடராசன், வள்ளியம்மாள்.
 • சிறந்த கவிஞராகவும், தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதிலும் முத்திரை பதித்தவர்.
 • புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் பழகியவர்.
 • அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து, இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.
 • “வசந்தத்தில் ஒரு வானவில்” என்ற படத்திற்குக் கதை எழுதினார். 1983ல் ரோம் நகரில் நடந்த சர்வதேசப் படவிழாவில் இப்படம் பரிசு பெற்றது. இவருடைய நூல்களில் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

5. உவமைக் கவிஞர் சுரதா ;

 • பெற்றோர் – திருவேங்கடம் – செண்பகம்.
 • புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பரம்பரையில் வந்தவர் முதுபெரும் கவிஞர் சுரதா.
 • பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக் கொண்டார். இதன் சுருக்கமே சுரதா என்றானது.
 • ‘காவியம்’ என்ற கவிதை வார இதழைத் தொடங்கி நடத்தியவர். கவிதைக்காகவே தொடங்கப்பட்ட முதல் வார இதழ் ஆகும்.
 • இவருடைய ‘தேன்மழை’ என்ற கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது. கலைமாமணி பட்டம் பெற்றவர். 1987-ல் தமிழக அரசு ஏற்படுத்திய பாரதிதாசன் விருதை முதன்முதலாகப் பெற்றவர் இவரே. ‘மூத்த தமிழறிஞர்’ என்ற விருதை 2000 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 9.3 நன்மையே நலம் தரும் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 9.3 நன்மையே நலம் தரும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பறவைக் குஞ்சுகளை எடுக்க நினைத்த தமிழ்மணிக்குத் தாய்கூறிய அறிவுரை யாது?
Answer:
பறவைக் குஞ்சுகளை எடுக்க நினைத்த தமிழ்மணிக்கு, அவனுடைய தாய் “நீ அப்படியெல்லாம் செய்யக்கூடாது. தாயிடமிருந்து பிரித்துவிட்டால், அவை மிகுந்த துன்பமடையும்” என்று அறிவுரை கூறினாள்.

Question 2.
தமிழ்மணியின் பிறந்தநாள் விழாவில், பீட்டர் செய்த செயல் யாது?
Answer:
தமிழ்மணியின் பிறந்த நாள் விழாவிற்கு வந்த பீட்டர், அங்கு மரத்தில் இருந்த பறவைக் கூட்டின் மீது கல்லெறிந்தான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

Question 3.
பீட்டரின் செயலைக் கண்ட தமிழ்மணி என்ன கூறினான்?
Answer:
பீட்டரின் செயலைக் கண்ட தமிழ்மணி, “பீட்டர், ஏன் இப்படிச் செய்தாய்? அந்தப் பறவைக் குஞ்சுகள் பாவம் இல்லையா? நீ எறிந்த கல் அந்தச் சின்னஞ்சிறிய பறவைக் குஞ்சுகளின் மேல் பட்டிருந்தால் என்னவாயிருக்கும்? உன் வீட்டை யாராவது இடித்துத் தள்ளினால், நீயும் உன் குடும்பத்தாரும் என்ன செய்வீர்கள்? அதுபோன்று தானே அந்தப் பறவைகளின் நிலையும். இதை ஏன் நீ புரிந்து கொள்ளவில்லை ” என்று கூறினான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

Question 4.
உயிர்களிடத்து அன்பு காட்டுவது குறித்துத் தமிழ்மணியின் தந்தை என்ன கூறினார்?
Answer:
தமிழ்மணியின் தந்தை கூறியது :
நம்மைப் போலத்தான் இவ்வுலகில் எல்லா உயிர்களும் வாழ்கின்றன. அவற்றிடம் நாம் அன்பு காட்ட வேண்டும். மற்ற உயிர்களுக்குச் செய்யும் தீங்கு, நமக்கு நேர்ந்தது போன்று உணர வேண்டும். நமக்கு வலித்தால் அவற்றிற்கும் வலிக்கும் அல்லவா” என்று தமிழ்மணியின் தந்தை உயிர்களிடத்து அன்பு காட்டுவது குறித்துக் கூறினார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

சிந்தனை வினா.

நீங்கள் செல்லும் வழியில் நாய்குட்டியொன்று நடக்க முடியாமல் துன்பப்படுகிறது. அதற்கு நீங்கள் எப்படி உதவுவீர்கள்?
Answer:
நான் ஒருநாள் பள்ளியில் இருந்து என் அப்பாவுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது சாலையோரத்தில் ஒரு நாய்க்குட்டியொன்று நடக்க முடியாமல் குரைத்துக் கொண்டிருந்தது. பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற மகிழுந்து வேகமாக வந்ததில் நாய்க்குட்டி பயந்து போய் ஓடியதில் அதனுடைய காலில் அடிபட்டுவிட்டது.

நான் என் அப்பாவிடம் அந்த நாய்க்குட்டியை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறினேன். அப்பாவும் சரியென்று கூறிவிட்டு அந்த நாய்க்குட்டியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றோம். அதற்கு ஊசி போட்டு, கொஞ்சம் மாத்திரைகளைக் கொடுத்தனர். வீட்டிற்குத் தூக்கி வந்து அதற்குப் பால் சாதம் கொடுத்தேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மாத்திரையைக் கரைத்துக் கொடுத்தேன். இரண்டு நாட்கள் தொடர்ந்து கொடுத்தேன். அந்த நாய்க்குட்டி பழையபடி நன்றாக நடந்தது. அதற்குப் பிறகுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

கற்பவை கற்றபின்

Question 1.
இக்கதையை உம் சொந்த நடையில் கூறுக.
Answer:
நன்மையே நலம் தரும்

தமிழ்மணியின் வீட்டில் உள்ள தோட்டத்தில் உள்ள மரம், செடி, கொடிகள் இருப்பதால், அங்கு எப்போதும் குளிர்ந்த தூய்மையான காற்று இருக்கும். மாலைநேரத்தில், தமிழ்மணி அங்குள்ள மரக்கிளையில் ஊஞ்சல் ஆடுவான். அம்மரக்கிளையில் பறவையொன்று கூடுகட்டியிருந்தது. அதில் இரண்டோ மூன்றோ பறவைக் குஞ்சுகள் இருந்தன.

தமிழ்மணி தன் தந்தையிடம் “தாய்ப் பறவை இல்லாத நேரத்தில் பறவைக் குஞ்சுகளை எடுக்கட்டுமா?” என்று கேட்டான். உடனே அவன் அம்மா, அவ்வாறு செய்யக்கூடாது என்றும், தாயிடமிருந்து பிரித்துவிட்டால் பறவைக் குஞ்சுகள் துன்பமடையும் என்றும் அறிவுறுத்தினாள்.

தமிழ்மணியின் பிறந்த நாளன்று அவனுடைய நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர். வந்தவர்கள் தோட்டத்தில் விளையாடினர். நண்பர்களுள் ஒருவரான ரஷீத் பறவைக் குஞ்சுகள் இருப்பதைப் பார்த்து அனைவருக்கும் கூறினான். அப்போது எதிர்பாரா வகையில் மற்றொரு நண்பன் பீட்டர் அந்தக் கூட்டின் மீது கல்லெறிந்தான். அக்கல் கிளையில் பட்டு பூந்தொட்டியின் மீது விழுந்தது. இதைக் கண்டதும் தமிழ்மணிக்குச் சினம் வந்தது.

பீட்டரிடம் “உன் வீட்டை யாராவது இடித்தால் நீயும் உன் குடும்பத்தாரும் என்ன செய்வீர்கள்?” அது போல் தானே இப்பறவைகளும், நீ ஏன் புரிந்து கொள்ளவில்லை” என்று படபடவெனப் பேசினான் தமிழ்மணி. பீட்டர் தன் தவற்றை உணர்ந்து தலைகுனிந்து நின்றான்.

அப்போது அங்கு வந்த தமிழ்மணியின் பெற்றோர் நடந்ததை அறிந்தனர். “இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களும் நம்மைப் போலத்தான். அவற்றிடம் அன்பு காட்ட வேண்டும். நமக்கு வலிப்பது போல் அவற்றிற்கும் வலிக்கும்.” என்று தமிழ்மணியின் தந்தை கூறினார்.

தமிழ்மணியும் நண்பர்களும் “இனி நாங்கள் யாரையும் துன்புறுத்தமாட்டோம்” என்று உறுதி கூறினர். மேலும், பறவைகளின் கூடுகளைப் பாதுகாப்போம் என்றனர்.

பறவைகளுக்குத் தானியங்களும் தண்ணீரும் கொடுத்து உதவுவோம் என்று உறுதி அளித்தனர். பிறர்க்கு உதவுவதே சிறந்த பிறந்த நாள் பரிசு என்று தமிழ்மணியை வாழ்த்திச் சென்றனர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

Question 2.
நீங்கள் விலங்குகளிடம் அன்பு காட்டிய நிகழ்வொன்றை அனைவருக்கும் கூறுக.
Answer:
நான் கோடை விடுமுறையில் என் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றேன். எங்கள் தாத்தா வீட்டில் பெரிய தோட்டம் உள்ளது. வீட்டைச் சுற்றியும் பூச்செடிகளும் மரங்களும் நிறைந்துள்ளன.

ஆடு, மாடுகள் உள்ளன. செல்லப் பிராணியான நாய், பூனையும் உள்ளன. பச்சைக்கிளி, புறா ஆகிய பறவைகளும் உள்ளன. கோழி, சேவல் ஆகியவற்றையும் – வளர்க்கின்றனர். என் தாத்தா வீட்டிற்குச் சென்றால் எனக்கு நேரம் போவதே தெரியாது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

தினமும் நான் அவற்றிற்கு வேண்டிய தீனியைப் போடுவேன். அவைகளுக்கென வைக்கப்பட்ட கிண்ணங்களில் தண்ணீர் ஊற்றுவேன். அங்குள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்வேன். விடுமுறை முழுவதும் அவற்றை அன்பாகப் பார்த்துக் கொள்வதுதான் என் முழுநேர வேலையாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
‘குயில்பாட்டு’ நூலை எழுதியவர் யார் …………………
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) புதுவை சிவம்
Answer:
அ) பாரதியார்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Question 2.
‘தமிழுக்கு அமுதென்று பேர்’ எனப் பாடியவர் …………
அ) பாரதிதாசன்
ஆ) வாணிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) பிரபஞ்சன்
Answer:
அ) பாரதிதாசன்

Question 3.
“பாரதிநாள் இன்றடா, பாட்டிசைத்து ஆட்டா ” எனப் பாடியவர் …………
அ) பாரதிதாசன்
ஆ) வாணிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) திருமுருகன்
Answer:
ஆ) வாணிதாசன்

Question 4.
பாட்டிசைத்து – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) பாட்டு + இசைத்து
ஆ) பாடல் + இசைத்து
இ) பா + இசைத்து
ஈ) பாட + இசைத்து
Answer:
அ) பாட்டு + இசைத்து

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Question 5.
மூன்று + தமிழ் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………….
அ) மூன்றுதமிழ்
ஆ) முத்துத்தமிழ்
இ) முதுதமிழ்
ஈ) முத்தமிழ்
Answer:
ஈ) முத்தமிழ்

ஆ. பொருத்துக

1. பாரதிதாசன் – கொடி முல்லை
2. தமிழ் ஒளி – பாஞ்சாலி சபதம்
3. பாரதியார் – பாவலர் பண்ணை
4. வாணிதாசன் – மாதவி காவியம்
5. திருமுருகன் – இருண்ட வீடு
Answer:
1. பாரதிதாசன் – இருண்ட வீடு
2. தமிழ் ஒளி – மாதவி காவியம்
3. பாரதியார் – பாஞ்சாலி சபதம்
4. வாணிதாசன் – கொடி முல்லை
5. திருமுருகன் – பாவலர் பண்ணை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

இ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பாரதியார் படைத்த முப்பெருங் காவியங்கள் யாவை?
Answer:

 • பாஞ்சாலி சபதம்
 • குயில் பாட்டு
 • கண்ணன் பாட்டு.

Question 2.
பாரதிதாசன் – பெயர்க் காரணம் தருக.
Answer:
பாரதிதாசன், பாரதியார் மீது அன்பும், பாசமும், பற்றும் உடையவர். அதனால்தான் கனகசுப்புரத்தினம் என்ற தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக் கொண்டார்.

Question 3.
பிரபஞ்சனுக்குச் சிறப்பைச் சேர்த்த நூல் எது?
Answer:
பிரபஞ்சனுக்குச் சிறப்பைச் சேர்த்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ‘வானம் வசப்படும்’ என்ற நூல் ஆகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Question 4.
பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் யாவர்?
Answer:
பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் ;

 • வாணிதாசன்
 • புதுவை சிவம்.

Question 5.
தமிழ்ஒளியின் படைப்புகளை எழுதுக.
Answer:
வீராயி, கவிஞனின் காதல், நிலை பெற்ற சிலை, கவிதைத் தொகுப்புகள், குழந்தைப் பாடல்கள், ஆய்வு நூல்கள், கதைகள், குறுநாவல்கள் முதலியன தமிழ் ஒளியின் படைப்புகளாகும்.

ஈ. சிந்தனை வினா.

தமிழின் வளர்ச்சிக்குக் கவிஞர்கள் எவ்வாறெல்லாம் தொண்டாற்றியுள்ளனர்?
Answer:
தமிழ் வளர்ச்சிக்குக் கவிஞர்கள் தொண்டாற்றிய விதம் ;
தமிழ்ப்பற்றும் நாட்டுப்பற்றும் மிகுந்த பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமது சுதேசமித்திரன் நாளிதழில் எழுதினார். இதன் மூலம் தமிழை மீட்சி பெறச் செய்தார்.

பாரதிதாசன் “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று பாடினார். தமிழைத் தன் உயிர் என்று பாடினார். இசையமுது, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு போன்ற பல நூல்களை எழுதி தமிழை வளர்த்தார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

தமிழில் பெரும்புலமை பெற்ற செய்குத்தம்பி பாவலர் பல அரிய தமிழ் நூல்களை எழுதி தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார். சீறாப்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார்.

அழ. வள்ளியப்பாகுழந்தைக் கவிஞர் என்ற பாராட்டுகுரியவர். சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தபோது தம் தமிழ்ப் பணியைத் தொடங்கினார். பிறகு வங்கிப் பணிக்குச் சென்றார். வங்கிப் பணியில் இருந்தாலும் அவருடைய தமிழ்ப்பணியை விடாமல் பலநூல்களை இயற்றித் தமிழுக்குத் தொண்டாற்றினார்.

இவ்வாறு எத்தனையோ கவிஞர்கள் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர். பிறநாட்டு அறிஞர்களும் தமிழை வளர்த்துள்ளனர்.

கற்பவை கற்றபின்

Question 1.
நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்திச் சரியான ஒலிப்புடன் படித்துக்காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Question 2.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய புதுவை படைப்பாளிகளைப் பற்றிய செய்திகளை திரட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. பாரதிதாசனின் இயற்பெயர் ……………
Answer:
னகசுப்புரத்தினம்

2. பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள் ……………………
Answer:
புரட்சிக் கவிஞர், பாவேந்தர்

3. பாரதிதாசனுக்கு புரட்சிக்கவி’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர்……..
Answer:
தந்தை பெரியார்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

4. பாரதியார் எழுதிய முப்பெருங்காவியங்கள் …………..
Answer:
பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, கண்ணன் பாட்டு

5. கல்வியின் உயர்வைச் சொல்லும் பாரதிதாசனின் நூல் ……………
Answer:
குடும்ப விளக்கு

6. கல்லாமையின் இழிவைக் கூறும் பாரதிதாசனின் நூல் ………..
Answer:
இருண்ட வீடு)

7. பாரதிதாசனின் நூல்களுள் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்ற நாடக நூல்
Answer:
பிசிராந்தையார் நாடக நூல்)

8. வாணிதாசன் அறிந்த மொழிகள் ………..
Answer:
தமிழ், பிரெஞ்சு , ஆங்கிலம்)

9. வாணிதாசனின் புனைப்பெயர் ……………
Answer:
ரமி

10. வாணிதாசனின் இயற்பெயர் .. ………….. என்கின்ற அரங்கசாமி.
Answer:
எத்திராசலு

11. வாணிதாசன் இலக்கண இலக்கியங்களைப் …………. கற்றுத் தேர்ந்தார்.
Answer:
பாரதிதாசனிடம்)

12. பாவேந்தரின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் ……………..
Answer:
வாணிதாசன், புதுவை சிவம்)

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

13. தமிழ் ஒளிக்கு பெற்றோர் வைத்த பெயர் …………….
Answer:
விஜயரங்கம்

14. தமிழ் ஒளி எழுதிய மேடை நாடகம் ……..
Answer:
சிற்பியின் கனவு

15. சிலப்பதிகாரத்திற்குப் பின் தோன்றிய இசை நாடகமாகக் கூறப்படுவது தமிழ் ஒளியின் …….. என்ற காவியம்.
Answer:
விதியோ, வீணையோ

16. பிரபஞ்சனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் ……….
Answer:
வானம் வசப்படும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

குறுவினா :

Question 1.
தமிழ் ஒளி பாரதியாரைப் பற்றி என்ன பாடியுள்ளார்?
Answer:
“சீறி அடித்துச் சுழன்ற அலைகளில் சிக்கிய ஒரு படகாய்த் தடுமாறி இளைத்து மடிந்த மகாகவி தன் சரிதம் உரைப்பேன்” என்று பாரதியாரைப் பற்றிப் பாடியுள்ளார் கவிஞர் தமிழ் ஒளி.

Question 2.
புதுவையில் பிறந்த தமிழ்ச் சான்றோர் யாவர்?
Answer:
வாணிதாசன், புதுவை சிவம், தமிழ் ஒளி, பிரபஞ்சன், திருமுருகன்.

சிறுவினா :

Question 1.
பாரதிதாசன் பற்றி நீ அறிந்தவற்றை எழுதுக.
Answer:

 • பாரதிதாசனின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.
 • இளமையிலேயே கவிபாடும் ஆற்றல் கொண்டவர். பாரதியார் முன் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்ற பாடலைப் பாடிக் காட்டினார்.
 • பாரதியார் மீது அன்பும் பாசமும் பற்றும் உடையவர். அதனால்தான், தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக் கொண்டார்.
 • தமிழின் சிறப்பை, பொதுவுடைமையை, பெண்ணின் பெருமையைப் பாடியவர். இயற்கை, பெண் விடுதலை போன்ற பல கருத்துகளை முன் வைத்து நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.
 • குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, தமிழியக்கம், குறிஞ்சித்திட்டு, புரட்சிக்கவி, இசையமுது என 72 நூல்களுக்கும் மேல் எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
 • இவருடைய பிசிராந்தையார் நாடக நூல் ‘சாகித்திய அகாதெமி’ விருதினைப் பெற்றுள்ளது.
 • தமிழக அரசு ஆண்டு தோறும் சிறந்த தமிழறிஞர்களுக்கு இவரது பெயரால் விருது வழங்கிச் சிறப்பு செய்கிறது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Question 2.
வாணிதாசன், புதுவை சிவம் பற்றி எழுதுக.
Answer:

 • வாணிதாசன் புதுவைக் கவிஞர்களுள் ஒருவர். இயற்பெயர் எத்திராசலு என்கிற அரங்கசாமி.
 • இவர் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளை அறிந்தவர். ‘ரமி’ என்று புனைபெயரில் எழுதியவர்.
 • பாரதிதாசன் நடத்திய தமிழ் வகுப்பில் அவரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் கவிஞர் வாணிதாசனும், புதுவை சிவமும் ஆவர்.
 • பாரதியார் பிறந்த நாளன்று, “பாரதிநாள் இன்றடா பாட்டிசைத்து ஆட்டா” என்று வாணிதாசன் பாடிய பாடல், அவருக்கு முதற்பரிசைப் பெற்றுத் தந்தது.
 • யாப்பு இலக்கணம் பயின்றதோடு புலவர் தேர்வு எழுதியும் இருவரும் தேர்ச்சி பெற்றனர்.
 • பாவேந்தரின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்ட இருவருமே பல்வேறு நூல்களை எழுதியுள்ளனர். வாணிதாசனின் ‘கொடிமுல்லை’ என்னும் நூல் சிறப்பு பெற்றது.
 • புதுச்சேரி அரசு இவர்கள் இருவரின் நூற்றாண்டு விழாக்களையும் மிகச் சிறப்பாக நடத்தியது. மேலும் ஆண்டுதோறும் பிறந்தநாள் விழாக்களையும் நடத்தி வருகிறது.
 • தமிழக அரசு, பாவேந்தர் விருதினை இவர்கள் இருவருக்கும் வழங்கிச் சிறப்பித்தது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Question 3.
தமிழ் ஒளி பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
Answer:
(i) தமிழ் ஒளிக்குப் பெற்றோர் வைத்த பெயர், விஜயரங்கம். இவரும் பாரதிதாசனின் மாணவர்தாம். தமிழ்ஒளி என்னும் பெயரில் இவர், தம்மைக் கவிஞராக அறிமுகப்படுத்திக் கொண்டவர்.

(ii) இவரது முற்போக்கான கருத்துகள், பாடலில் எதிரொலித்தன. கல்லூரிக் காலத்தில், ‘சிற்பியின் கனவு’ என்னும் மேடை நாடகத்தைப் படைத்துள்ளார். இந்த நாடகம்தான் பின்னாளில் ‘வணங்காமுடி’ என்னும் பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

(iii) வீராயி, கவிஞனின் காதல், நிலை பெற்ற சிலை என்னும் குறுங்காவியங்களைப் படைத்துள்ளார். இந்நூல்களைப் பற்றிய திறனாய்வு, சென்னை வானொலியிலும் திருச்சி வானொலியிலும் ஒளிபரப்பப்பட்டது.

(iv) இவை மட்டுமின்றிக் கவிதைத் தொகுப்புகள், குழந்தைப் பாடல்கள், ஆய்வு நூல்கள், கதைகள், குறுநாவல்கள் முதலியவற்றையும் படைத்துள்ளார். இவரது ‘விதியோ வீணையோ’ என்னும் காவியம், சிலப்பதிகாரத்திற்குப் பின் தோன்றிய இசை நாடகமாகக் கூறப்படுகிறது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

(v) ‘முன்னும் பின்னும்’, ‘அணுவின் ஆற்றல்’ ஆகிய இரண்டு பாடல்கள் பாடநூல்களில் இடம் பெற்றுள்ளது. இவரது ‘மாதவி காவியம்’ என்னும் நூல் கல்லூரிப் பாடநூலாக வைக்கப்பட்டது.

Question 4.
திருமுருகன் பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
Answer:
தமிழில் பிழையின்றி எழுதுவது குறித்த நூல்களைப் படைத்தவர் இலக்கணச் சுடர் இரா.திருமுருகன். இவர் தனித்தமிழ்ப் பற்றால் சுப்பிரமணியன் என்ற தம் பெயரைத் ‘திருமுருகன்’ என்று மாற்றி அமைத்துக் கொண்டவர்.

நூறு சொல்வதெழுதல், 17 தமிழ்ப் பாடநூல்கள், ஆய்வு நூல்கள், வரலாற்று நூல்கள், பாவலர் பண்ணை , என் தமிழ் இயக்கம் போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவரும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.லெனின் தங்கப்பாவும் இணைந்து நடத்திய ‘தெளிதமிழ்’ இதழ் இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Question 5.
எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றிய செய்திகளை எழுதுக.
Answer:
பிரபஞ்சன் தம் எழுத்தால் தாய்நாட்டைப் போற்றச் செய்தவர்; உலகம் போற்றும் உயர்ந்த எழுத்தாளர், எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள், வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

இவரது ‘வானம் வசப்படும்’ என்ற நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. இவரது உடல், புதுவை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது என்பது தமிழுக்குக் கிடைத்த சிறப்பாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 9.1 அறநெறிச்சாரம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 9.1 அறநெறிச்சாரம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
‘சொல்லாடல்’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………
அ) சொல் + லாடல்
ஆ) சொல + ஆடல்
இ) சொல் + ஆடல்
ஈ) சொல்லா + ஆடல்
Answer:
இ) சொல் + ஆடல்

Question 2.
‘பொழுதாற்றும்’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) பொழு + தாற்றும்
ஆ) பொழுது + ஆற்றும்
இ) பொழு + ஆற்றும்
ஈ) பொழுது + தூற்றும்
Answer:
ஆ) பொழுது + ஆற்றும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

Question 3.
வேற்றுமை – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ………
அ) பிரிவு
ஆ) வேறுபாடு
இ) பாகுபாடு
ஈ) ஒற்றுமை
Answer:
ஈ) ஒற்றுமை

ஆ. இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
………………………, ……………………..
………………………, ……………………..
………………………, ……………………..
………………………, ……………………..
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம் - 1

இ. எதிர்ச்சொல் எழுதுக.
1. துன்பம்  x
2. வேற்றுமை  x
3. மெய்ம்மை  x
Answer:
1. துன்பம் x இன்பம்
2. வேற்றுமை x ஒற்றுமை
3. மெய்ம்மை x பொய்ம்மை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
நாம் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டிய பண்பு யாது?
Answer:
நாம் பேசும்போது குற்றம் ஏற்படாமல் பேசுவதைக் கடைபிடிக்க வேண்டும்.

Question 2.
மிக உயர்ந்த பண்புகளாக அறநெறிச்சாரம் குறிப்பிடுவதை எழுதுக.
Answer:
உயர்ந்த பண்புகள் :

 • குற்றம் ஏற்படாமல் பேசுதல்.
 • துன்பங்கள் உண்டான போதும் மனம் தளராமலிருத்தல்.
 • தம்மை வெறுப்பவரிடத்தும் வேற்றுமை பாராட்டாத உண்மை நிலை.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

உ. சிந்தனை வினா.

உன் நண்பர் உன்னை விட்டுப் புதிய நண்பர்களுடன் பழகுவதாகக் கருதுகிறாய். இந்நிலையில், அவருக்குச் சிறு துன்பம் ஏற்படுகிது. இப்போது உன் நிலை என்ன?
1. அவர் என் நண்பர் இல்லை, அவருக்குத் துன்பம் வந்தால் தான் ஏன் கவலைப்பட வேண்டும்?
2. அவருக்குப் பல நண்பர்கள் இருக்கிறார்கள். நான் ஏன் உதவ வேண்டும்?
3. அவர் என்னை வெறுத்தாலும், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய
வேண்டும்.
Answer:
3. அவர் என்னை வெறுத்தாலும், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

கற்பவை கற்றபின்

Question 1.
சொற்குற்றத்தால் ஏற்படும் துன்பங்களைப் பிறர்க்கு எடுத்துக் கூறுக.
Answer:
அவையோர்க்கு வணக்கம்! நான் சொற்குற்றத்தால் ஏற்படும் குற்றங்கள் பற்றிக் கூற வந்துள்ளேன்.

நாம் நம் ஐம்புலன்களில் எதை அடக்குகிறோமோ இல்லையோ நாவைக் கட்டாயமாக அடக்க வேண்டும். அவ்வாறு அடக்காவிட்டால் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது பழமொழி. நுணல் என்றால் தவளை என்பது 2 பொருள். பேச்சுத் தன்மை, பகுத்தறிவு இவை இரண்டும் இல்லாத ஜீவராசி தவளை. அது 3 தன்னுடைய சப்தத்தினால், தன் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக் கொள்கிறது.

தீயினால் சுட்ட புண் உடம்பில் தழும்பு இருந்தாலும், உள்ளத்தில் ஆறி விடும். நாவினால் தீயச் சொல் கூறிச் சுடும் புண், என்றுமே ஆறாது. சொல்லினால் ஆக்கமும்,  அழிவும் ஏற்படும். கோபத்தை அடக்கிக் காக்க முடியாவிட்டாலும் நாக்கை அடக்க  வேண்டும். நாவை அடக்காமல், சொல்லத் தகாத சொற்களால் எடுத்தெறிந்து பேசுவதால், அச்சொற்கள் கேட்போர் மனதைப் புண்ணாக்கி, கடும் கோபத்தை உண்டாக்கும். இப்படி நாவை அடக்காது ஒருவர் மாறி ஒருவர் தாக்கப்படுவதால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும். அது உயிர் இழப்பையும்கூட உருவாக்கலாம். விளையாட்டாகப் பேசியது – வினையாக முடிவதும் உண்டு.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

நாம் நாவைக் காத்தல் வேண்டும். அதனைக் காக்காவிட்டால், குற்றமான சொற்களைச் சொல்லி துன்பம் அடைவர்.

Question 2.
பாடலின் பொருள் புரிந்து சரியான ஒலிப்புடன் படித்துக்காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 3.
பாடலை அடிபிறழாமல் எழுதுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. அறநெறிச்சாரம் நூலை இயற்றியவர் ………….
Answer:
முனைப்பாடியார்

2. அறநெறிக் கருத்துகளைக் கொண்டு வெண்பா வடிவில் இயற்றப்பெற்ற நூல்…………………
Answer:
அறநெறிச்சாரம்

விடையளி :

Question 1.
அறநெறிச்சாரம் நூல் குறிப்பு எழுதுக.
Answer:
அறநெறிக் கருத்துகளைக் கொண்டு வெண்பா வடிவில் இயற்றப் பெற்ற நூல் அறநெறிச்சாரம். இப்பாடல்கள் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய அழகுகளைப் பெற்று விளங்குகின்றன. இந்நூலை எழுதியவர் முனைப்பாடியார்.

பாடல் பொருள்

குற்றம் ஏற்படாமல் பேசுதல், துன்பங்கள் உண்டான போதும் மனம் தளராமலிருத்தல், தம்மை வெறுப்பவரிடத்தும் வேற்றுமை பாராட்டாத உண்மை நிலை ஆகிய இவை மூன்றும் மிக உயர்ந்த பண்புகளாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

நூல் குறிப்பு

அறநெறிக் கருத்துகளைக் கொண்டு, வெண்பா வடிவில் இயற்றப்பெற்ற நூல், அறநெறிச்சாரம், இப்பாடல்கள் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய அழகுகளைப் பெற்று விளங்குகின்றன. இந்நூலை எழுதியவர், முனைப்பாடியார்.

சொல்பொருள்

1. காய்விடத்து – வெறுப்பவரிடத்து
2. சால – மிகவும்
3. சாற்றுங்கால் – கூறுமிடத்து
4. தலை – முதன்மை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

மதிப்பீடு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
சாலையில் பள்ளம் இருந்ததால், …………… பேருந்தை மெதுவாக ஓட்டிச் சென்றார்.
அ) ஓட்டுநர்
ஆ) ஓட்டுனர்
இ) ஓட்டுணர்
Answer:
அ) ஓட்டுநர்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

Question 2.
கடவூருக்குச் செல்ல எந்த ………….. ப்போக வேண்டும்?
அ) வலியாக
ஆ) வளியாக
இ) வழியாக
Answer:
இ) வழியாக

Question 3.
கூண்டிலிருந்த ………….. யைச் சுதந்திரமாகப் பறக்கவிட்டான் எழிலன்.
அ) கிலி
ஆ) கிளி
இ) கிழி
Answer:
ஆ) கிளி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

Question 4.
நீரில் துள்ளி விளையாடுகிறது …………… மீன்.
அ) வாளை
ஆ) வாலை
இ) வாழை
Answer:
அ) வாளை

Question 5.
தாய்ப் பசு இல்லாமையால் நாளடைவில் கன்று ………….ப்போனது.
அ) இழைத்து
ஆ) இளைத்து
இ) இலைத்து
Answer:
ஆ) இளைத்து

Question 6.
கடல் …………….யில் கால் நனைத்து மகிழ்வது அனைவருக்குமே பிடிக்கும்.
அ) அளை
ஆ) அழை
இ) அலை
Answer:
இ) அலை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

ஆ. பொருத்தமான சொல்லை நிரப்பித் தொடர்களைப் படித்துக்காட்டுக.

1. நடனம் என்பது, ஒரு …………………… (களை /கலை/கழை)
Answer:
கலை

2. சோளம் என்பது, ஒரு ………………… (தினை /திணை )
Answer:
தினை

3. பெட்ரோல் என்பது, ஓர் …………………. (எரிபொருள்/எறிபொருள்)
Answer:
எரிபொருள்

4. ஒட்டகம் என்பது, ஒரு …. ……………… (விளங்கு/விலங்கு)
Answer:
விலங்கு

5. தென்னை என்பது, ஒரு ………………… (மறம்/மரம்)
Answer:
மரம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

இ. வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களைச் சரியான ஒலிப்புடன் படித்துக் காட்டுக.

முல்லை : நிலா, நீ வரைந்த படம் மிகவும் அகாக உள்ளது. வெண்பஞ்சு போன்ற மேகங்கள் சூழ்ந்த மலை; அம்மலையினின்று வீழும் பாலாவி போன்ற அருவி; பசுமை மிகுந்த மம், செடி, கொடிகள்; துள்ளித் திரியும் புள்ளி மான்ள்; சிகடிக்கும் வண்ணப் பறவைகள்; மரக்கிளைளில் ஊஞ்சலாடும் குங்குக் குட்டிகள் அப்பப்பா! நீ எப்படி இவ்வாறு வரையக் கற்றுக் கொண்டாய்?

நிலா : இதிலென்ன புதுமை? முந்தைய வகுப்புத் தமிழ்ப் பாடநூல்ளில் வரைந்து பார்ப்போமா என்றொரு பயிற்சி இருந்ததே. நினைவிருக்கிதா? அந்தப் பயிற்சிகளை நான் மிகவும் ஆர்வத்துடன் செய்வேன். அதனால்தான் இப்போது நன்றாக வரைகிறேன்ன்று நினைக்கிறேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

ஈ. விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை எழுதுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 5
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 1

கற்பவை கற்றபின்

Question 1.
மயங்கொலி எழுத்துகள் இடம்பெறும் சொற்களை அடையாளம் காண்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
மயங்கொலிச் சொற்களின் பொருள் வேறுபாடு அறிக.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 2

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

கூடுதல் வினா

Question 1.
மயங்கொலி எழுத்துகள் யாவை?
Answer:
மயங்கொலி எழுத்துகள் – ணநன
ரற
– லழள.

மொழியை ஆள்வோம்

பேசுதல்

Question 1.
‘சிலம்பின் வெற்றி’ என்னும் தலைப்பில் பேசுவதற்கு ஏற்ற உரை தயாரிக்க.
Answer:
அவையோர்க்கு வணக்கம்! நான் ‘சிலம்பின் வெற்றி பற்றிப் பேச வந்துள்ளேன்.
கோவலன் தன் தீவினைப் பயனால் செல்வங்களை இழந்துவிட்டான். – பொருளீட்டுவதற்காக மதுரை நகருக்குக் கண்ணகியுடன் வந்தான். கோவலன் மட்டும் கண்ணகியின் ஒரு காற்சிலம்பை விற்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றான். ஆனால் அங்கு அவன் அரசியின் காற்சிலம்பைத் திருடிவிட்டான் என்று பொய்க் குற்றச்சாட்டுக்கு ஆளானான். அதனால் மரண தண்டனை பெற்றான்.

இதையறிந்த கண்ணகி அரண்மனைக்குச் சென்றாள். வாயிற்காவலன் அரசனிடம், “தலைவிரி கோலத்துடன் ஒரு பெண் வந்த நிற்பதாகவும், நீதி கேட்டு வந்திருப்பதாகவும்” கூறினான். மன்னன் “அவளை உள்ளே அனுப்பு” என்று கூறினான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

ஆன்றோர்களும் சான்றோர்களும் நிறைந்திருக்கும் அவையிலே நடுநாயகமாய் மன்னர் வீற்றிருக்க அரசவைக்குள் நுழைந்தாள் கண்ணகி. மன்னன், “நீ யார்? உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டான்.

கண்ணகி, “ஆராயாது நீதி வழங்கிய மன்னனே! ஒரு புறாவுக்காக தன் உடலையே தந்த சிபி மன்னனும், பசுவின் துயர் போக்க தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த புகார் நகரைச் சார்ந்தவள் நான். கண்ணகி என்பது என் பெயர். அவ்வூரில் பழியில்லாச் சிறப்பினையுடைய புகழ்மிக்க மாசாத்துவான் மகனாகிய கோவலன் என்பானின் மனைவி நான். மன்னன் ஏளனமாக “கோவலனின் மனைவியா நீ?” என்றான்.

கண்ணகி, “என் கணவனை இகழ்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? ஊழ்வினைப் பயனால் உன் ஊருக்கு வந்து என் கால் சிலம்பை விற்பதற்காக வந்த என் கணவனைக் கொன்று விட்டாயே, நீ செய்தது தகுமா?” என்று மன்னனிடம் கேட்டாள்.

“கள்வனைக் கொல்வது கொடுங்கோலன்று. இதை அனைவரும் அறிவர்” என்று மன்னன் கூறினான். “என் கணவன் கள்வனல்லன்; அவனிடமிருந்த சிலம்பும் அரசிக்குரிய சிலம்பன்று; அதன் இணைச் சிலம்பு இதோ என்னிடம் உள்ளது. என் கால்சிலம்பின் பரல் மாணிக்கக் கற்களால் ஆனது” என்று கண்ணகி கூறினாள்.

மன்னன் “தன் அரசியின் காற்சிலம்பு முத்துப்பரல்களால் ஆனது” என்று கூறினான். பிறகு , கோவலனிடமிருந்து பெற்ற காற்சிலம்பை எடுத்து வரச் செய்தான். கண்ணகி அச்சிலம்பை எடுத்துத் தரையில் போட்டு உடைத்தாள். அதிலிருந்த மாணிக்க கல் ஒன்று அரசனின் முகத்தில் பட்டுத் தெறித்து விழுந்தது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

மன்னன் தன் தவற்றை உணர்ந்தான். “யானோ அரசன் யானே கள்வன்” என்று கூறித் தன்னால் தன் குலத்திற்கு இழுக்கு ஏற்பட்டதாக எண்ணி உயிர் துறந்தான்.

Question 2.
சிலப்பதிகார வழக்குரை நிகழ்ச்சியில் வரும் கண்ணகிபோல் பேசிக் காட்டுக.
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
Answer:
1. சொல்லக்கேட்டு எழுதுக.

1. அன்னையும் தந்தையும் தெய்வம்.
2. கல்வியைக் கசடறக் கற்றிட வேண்டும்.
3. தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

2. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. ஆயிரம் – ………………………….
2. உண்மை – ………………………….
3. புகார் நகரம் – ………………………….
4. ஆடுகள்- ………………………….
Answer:
1. ஆயிரம் – தற்பொழுது ஆயிரம் ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லை.
2. உண்மை – நாம் எப்போதும் உண்மையைப் பேச வேண்டும்.
3. புகார் நகரம் – கண்ண கி புகார் நகரில் வாழ்ந்தவள்.
4. ஆடுகள்- ஆடுகள் மந்தை மந்தையாய் செல்கின்றன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

Question 3.
கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
கல்வி கண் போன்றது
நீதி தவறாதவன் அரசன்
சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது
ஏழைக்கிழவி பணப்பையுடன் வந்தாள்
தீங்கு செய்தால் தீமை விளையும்.

Question 1.
தீங்கு செய்தால் என்ன நேரிடும்?
Answer:
தீங்கு செய்தால் தீமை விளையும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

Question 2.
சிலம்பின் பரல் எவற்றால் ஆனது?
Answer:
சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது.

Question 3.
கல்வி எதனைப் போன்றது?
Answer:
கல்வி கண் போன்றது.

Question 4.
நீதி தவறாதவன் யார்?
Answer:
நீதி தவறாதவன் அரசன்.

Question 5.
பணப்பையுடன் வந்தது யார்?
Answer:
ஏழைக்கிழவி பணப்பையுடன் வந்தாள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

4. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

புறநானூறு என்னும் நூலில் அறப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. அரசன் ஒருவன் மற்றொரு நாட்டு அரசன்மீது போர் தொடுக்கும் முன்பு, பசுக்களையும், அறவோரையும், பெண்களையும், பிணியாளர்களையும் போர் நிகழும் இடத்தைவிட்டுப் புறத்தே போய்விடும்படி எச்சரித்த பின்னரே படையெடுப்பு நிகழும். இச்செய்தி முதுகுடுமிப்பெருவழுதியிடம் அமைந்திருந்ததாக நெட்டிமையார் என்னும் புலவர் பாராட்டுகிறார். மேலும், படையெடுத்து வரும் பகைவன் மீது, மறைந்து நின்று, அம்பு
எய்தும் நிலையங்கள் ஞாயில்கள்’ என்று அழைக்கப்பட்டன.

வினாக்கள் :

Question 1.
உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் யாது?
Answer:
உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் புறநானூறு.

Question 2.
நெட்டிமையாரால் பாராட்டப்படும் அரசர் யார்?
Answer:
நெட்டிமையாரால் பாராட்டப்படும் அரசர் முதுகுடுமிப் பெருவழுதி ஆவார்.

Question 3.
‘ஞாயில்கள்’ என்றால் என்ன?
Answer:
படையெடுத்து வரும் பகைவன் மீது மறைந்து நின்று, அம்பு எய்தும் நிலையங்கள் ‘ஞாயில்கள்’ என்று அழைக்கப்பட்டன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

4. பகைவன் – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்.
பகைவன் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் – நண்பன்.

5. ‘பிணி’ என்பதன் பொருள்
‘பிணி’ என்பதன் பொருள் – நோய்.

Question 5.
பொருத்தமான சொற்களால் பாடலை நிறைவு செய்க.
(சொல்லி, மீனவன், கடலிலே, பார்த்ததே, வலையில், விட்டதே, செய்ததே)
துள்ளி குதிக்கும் மீன் ……………………….
வெள்ளியை வானத்தில் ……………………….
………………………. வலை போட்டானே
………………………. சிக்கிய மீனுமே
வெளியேற முயற்சி ……………………….
நண்டு நண்பன் வந்ததே
வலையை வெட்டி ……………………….
மீன் நன்றி ………………………. சென்றதே.
Asnwer:
துள்ளி குதிக்கும் மீன் கடலிலே
வெள்ளியை வானத்தில் பார்த்ததே
மீனவன் வலை போட்டானே
வலையில் சிக்கிய மீனுமே
வெளியேற முயற்சி செய்ததே
நண்டு நண்பன் வந்ததே
வலையை வெட்டி விட்டதே
மீன் நன்றி சொல்லி சென்றதே.

மொழியோடு விளையாடு

Question 1.
பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
im 6
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 3

2. ஒரு சொல்லில் இரு தொடரை உருவாக்குவோம்.

Question 1.
திங்கள் வாரத்தின் இரண்டாம் நாள் திங்கள்
Answer:
பௌர்ணமி அன்று வானில் முழு திங்களைப் பார்த்தேன்.

Question 2.
ஞாயிறு கிழக்கே உதிக்கும். ஞாயிறு
Answer:
வாரத்தின் முதல் நாள் ஞாயிறு.

3. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் எழுதுக.

Question 1.
கல்விக் கண் திறந்தவர் போற்றப்படுகிறார் எனக் காமராசர்.
Answer:
கல்விக்கண் திறந்தவர் எனக் காமராசர் போற்றப்படுகிறார்.

Question 2.
கற்றிட வேண்டும் கல்வியைக் கசடறக்
Answer:
கல்வியைக் கசடறக் கற்றிட வேண்டும்.

Question 3.
மனுநீதிச் சோழன் மன்னர் சோழமன்னர்களுள் புகழ்வாய்ந்த
Answer:
சோழ மன்னர்களுள் புகழ் வாய்ந்த மன்னர் மனுநீதிச் சோழன்.

Question 4.
காற்சிலம்பு உடையது கண்ணகியின் மாணிக்கப்பரல்கள்
Answer:
கண்ணகியின் காற்சிலம்பு மாணிக்கப்பரல்கள் உடையது.

Question 5.
தந்தையும் தெய்வம் அன்னையும்
Answer:
அன்னையும் தந்தையும் தெய்வம்.

Question 4.
சொல்லிருந்து புதிய சொல் உருவாக்கலாமா?
E:\image\Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 7
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 4

நிற்க அதற்குத் தக

1. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று அறிந்து கொள்வேன்.
எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
என்ற குறளின் பொருளை நன்கு உணர்ந்து செயல்படுவேன்.

2. உண்மை, உழைப்பு, நேர்மை போன்றவை நம் வாழ்வை மேம்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அறிந்து கொள்வோம்

1. உலகின் முதன் தத்துவ ஞானி சாக்ரடீஸ்.
2. கணிதத் தத்துவத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் பிளாட்டோ.

கூட்டு விண்ணப்பம் எழுதுதல்

நூல் நிலையம்/ படிப்பகம் அமைக்க வேண்டி ஊர்ப் பொதுமக்களின் கூட்டு விண்ணப்ப
Answer:

(மாதிரி)

அனுப்புநர்
ஊர்ப் பொதுமக்கள்,
புலியூர் கிராமம்,
நீலகிரி மாவட்டம்.

பெறுநர்
மாவட்ட நூலக அலுவலர்,
நீலகிரி மாவட்டம்.
மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : நூல்நிலையம்/படிப்பகம் அமைக்கவேண்டிவிண்ணப்பித்தல் – சார்பு.

வணக்கம். நீலகிரி மாவட்டம், புலியூர் கிராமத்தில் மூவாயிரம் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலானோர் எழுத்தறிவு உடையவர்கள். அதனால், தங்களின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்கு நூலகம் அல்லது படிப்பகம் வேண்டும் என விரும்புகிறார்கள். நூலகம் அமைப்பதற்குத் தேவையான இடமும் கிராமத்தில் உள்ளது. ஆகவே, அறிவை விரிவு செய்யும் நூலகத்தை எங்களுக்கு விரைவில் அமைத்துத் தர வேண்டுகிறோம்.

தங்கள் உண்மையுள்ள,
ஊர்ப்பொது மக்கள்,
புலியூர் கிராமம், நீலகிரி.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.3 காணாமல் போன பணப்பை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 8.3 காணாமல் போன பணப்பை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 8.3 காணாமல் போன பணப்பை

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பணப்பையைப் பெற்றுக் கொண்ட வணிகன் என்ன கூறினான்?
Answer:
வணிகன், பணப்பையைப் பெற்றுக் கொண்டு “என் பையில் அதிகப் பணம் இருந்தது. இப்போது பணம் குறைகிறது” என்று பொய் சொன்னான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.3 காணாமல் போன பணப்பை

Question 2.
இக்கதையின் மூலம் நீ அறியும் நீதி என்ன?
Answer:
இக்கதையின் மூலம் நான் அறியும் நீதி – ‘நேர்மை நன்மை தரும்.’

Question 3.
இக்கதையில் நீ விரும்பிய கதைமாந்தர் யார்? அவர்ப் பற்றி ஐந்து வரிகளில் எழுதுக.
Answer:

 • இக்கதையில் நான் விரும்பிய கதைமாந்தர் மூதாட்டி.
 • மூதாட்டி நினைத்திருந்தால் அப்பணப்பையை அவளே எடுத்துக் கொண்டிருக்கலாம்.
  ஆனால் நேர்மையாக சிற்றரசரிடம் ஒப்படைத்துள்ளார்.
 • அம்மூதாட்டியின் நேர்மைக்குக் கிடைத்த பரிசுதான் அப்பணப்பை.
 • இச்செயலால் எனக்கு இம்மூதாட்டியைப் பிடிக்கும்.\

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.3 காணாமல் போன பணப்பை

சிந்தனை வினா.

Question 1.
நீங்கள் அரசராக இருந்தால், இந்தச் சிக்கலுக்கு என்ன முடிவெடுப்பீர்கள்?
Answer:
நான் அரசராக இருந்தால் அவர் செய்தபடியே அப்பணத்தை மூதாட்டியிடம் ஒப்படைத்து விடுவேன். மேலும், அவ்வணிகரை ஒரு மாதத்திற்கு அரண்மனையிலும் அரசாங்க நிலத்திலும் ஊதியமின்றிப் பணி செய்ய வேண்டும் என கட்டளையிடுவேன்.

கற்பவை கற்றபின்

Question 1.
நேர்மையால் ஒருவர் உயர்வதாக ஒரு பக்க அளவில் கதை எழுதுக.
Answer:
மன்னன் ஒருவன் தன் நாட்டு மக்கள் நேர்மையாக வாழ்கின்றனரா என்று அறிய விரும்பினான். அதனால் அரசுப் பணியாளரிடம் இரண்டு ரொட்டித் துண்டுகளைக் கொடுத்து இரண்டு பேரிடம் கொடுக்கச் சொன்னார். ஒரு ரொட்டியில் வைரக்கற்களை உள்ளே வைத்தும் ஒரு ரொட்டித் துண்டில் ஒன்றும் வைக்காமலும் கொடுத்து விட்டார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.3 காணாமல் போன பணப்பை

அரசுப் பணியாளர் அரண்மனையை விட்டு வெளியே சென்று வைரக்கற்கள் உள்ள ரொட்டியைச் சாது ஒருவரிடமும் சாதாரண ரொட்டியைப் பிச்சைக்காரரிடமும் கொடுத்தான்.

மன்னர் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். சாது ரொட்டியை வாங்கிப் பார்த்தார். பெரியதாகவும் கரடுமுரடாகவும் இருந்தால் அது வேகவில்லை என எண்ணி அதனைப் பிச்சைக்காரரிடம் கொடுத்துவிட்டுப் பிச்சைக்காரரிடம் இருந்த ரொட்டியை அவர் வாங்கிக் கொண்டும் சென்று விட்டார்.

சாது வீட்டுக்குச் சென்றார். தாடியை அகற்றி விட்டு ரொட்டியைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் தாடியைப் பொருத்திக் கொண்டார். வெளியே சென்றுவிட்டார். பிச்சைக்காரர் வீட்டிற்குச் சென்றார். தன் மனைவியுடன் ரொட்டியைப் பகிர்ந்து உண்பதற்காக எடுத்தார்.

அதற்குள் விலையுயர்ந்த வைரக் கற்களைப் பார்த்ததும் அதனை அரசுப் பணியாளரிடம் கொடுக்க 5 முன் வந்தார். மனைவியோ தானே வைத்துக் கொள்ளலாம் என்று கூறினாள். அவர் அவளுடைய பேச்சைக் கேட்காமல் அரண்மனைக்கு எடுத்துச் சென்றார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.3 காணாமல் போன பணப்பை

மன்னரிடம் நடந்தவற்றைக் கூறினான். மன்னன் அவனுடைய நேர்மையைப் பாராட்டி E அவர் கொண்டு வந்த வைரத்தை அவனுக்கே திருப்பிக் கொடுத்தார். பிச்சைக்காரரும் – தனது நேர்மைக்குக் கிடைத்த பரிசாக எண்ணி வாங்கிக் கொண்டார். கொஞ்சம் வைரத்தை : விற்றுப் புதிய தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேறினார்.

நீதி : நேர்மைக்கு கிடைத்த பரிசு

Question 2.
‘காணாமல் போன பணப்பை’ – இக்கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 3.
‘காணாமல் போன பணப்பை’ – கதையை உரையாடல் வடிவில் எழுதுக.
Answer:
காணாமல் போன பணப்பை
(வணிகன் ஒருவன் தன்னிடமிருந்த ஆடுகளை விற்று, பணத்துடன் தன் ஊருக்குத் திரும்பினான். “இப்பணத்தில் ஆடுகள் வாங்கி விற்றால் லாபம் கிடைக்கும். நான் பெரும் பணக்காரன் ஆவேன்” எனக் கற்பனை செய்தவாறு தன் கையில் இருந்து பணப்பையை நழுவ விட்டான். மறுநாள் சிற்றரசனிடம் சென்று முறையிட்டான்.)

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.3 காணாமல் போன பணப்பை

வணிகன் : அரசே! என் பணப்பையை வரும் வழியில் தொலைத்து விட்டேன். அதை எடுத்தவர்கள் திருப்பிக் கொடுத்தால் நாற்பது பணம் சன்மானமாகக் கொடுத்து விடுகிறேன். அருள் கூர்ந்து இதை ஊர் மக்களுக்கு அறிவிக்க வேண்டுகிறேன்.

அரசன் : அவ்வாறே ஆகட்டும்!
முரசு அறைந்து நாட்டு மக்களுக்கு அறிவித்தான்.)
(மூன்று நாட்களுக்குப் பிறகு)

மூதாட்டி : அரசே! இப்பணப்பையை நான் சென்ற வழியில் பார்த்தேன். இதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
சிற்றரசன் : உங்கள் நேர்மையையும், நாணயத்தையும் கண்டு மெச்சுகிறேன்.
சிற்றரசன் : (வணிகரிடம்) மூதாட்டிக்கு தக்க வெகுமதியை கொடுத்துவிடு.

வணிகன் : (பணத்தை எண்ணிப் பார்த்தான். சன்மானம் அளிக்க மனமில்லை இப்பையில் அதிகப் பணம் இருந்தது. இப்போது பணம் குறைகிறது.

சிற்றரசன் : (வணிகருக்கு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்) “வணிகனே! உன்பையில் இப்போது இருப்பதைக் காட்டிலும் அதிகமாகப் பணம் இருந்தது இல்லையா? எனவே, இது உன் பை இல்லை, வேறு யாருடையதோ தெரியவில்லை. பணத்திற்குச் சொந்தக்காரன் வந்து கேட்கும்வரை என்னிடமே இருக்கட்டும். நீ இவ்விடத்தைவிட்டுப் போகலாம்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.3 காணாமல் போன பணப்பை

சிற்றரசன் : பணத்தை வைத்திருப்பவன் மட்டுமே பணக்காரன் அல்லன்; சொன்ன சொல்லை மறவாது மற்றவர்க்குப் பெருந்தன்மையுடன் கொடுக்கும் உள்ளம் படைத்தவனே பணக்காரன்.

(மூதாட்டியின் நேர்மையைப் பாராட்டிப் பணப்பையை அவருக்கே பரிசாகக் கொடுத்துவிட்டார்.)
(வணிகன் பணத்தையும் இழந்தான். மற்றவர்களின் கேலிப்பேச்சுக்கு ஆளானான்.)

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.3 காணாமல் போன பணப்பை

கூடுதல் வினாக்கள்

நிரப்புக .

1. பணப்பையை நழுவ விட்டவன்
Answer:
வணிகன்

2. நேர்மையுற்றவனாய் இருந்தவன் …………………..
Answer:
வணிகன்

3. நேர்மையுடன் பணப்பையைக் கொண்டு வந்தவர் …………………………
Answer:
மூதாட்டி

4. வணிகன் நேர்மையற்றவனாய் இருந்ததனால் மற்றவர்களுடைய ……………….., ……………………..ஆளானான்.
Answer:
இகழ்ச்சிக்கும், கேலிப்பேச்சுக்கும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.3 காணாமல் போன பணப்பை

விடையளி :

Question 1.
வணிகன் பணப்பையை நழுவ விட்டதற்கான காரணம் என்ன?
Answer:
வணிகன் ஆடுகளை விற்ற பணத்தை எடுத்துக் கொண்டு வரும்போது அளவுக்கு மிஞ்சிய கனவில் மிதந்துகொண்டே நடந்தான். இந்தப் பணத்தில் நிறைய ஆடுகள் வாங்கி விற்று பெரும் பணக்காரன் ஆக வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டே அவனையும் அறியாமல் தான் வைத்திருந்த பணப்பையை நழுவவிட்டான்.

Question 2.
வணிகன் சிற்றரசனிடம் என்னவென்று முறையிட்டான்?
Answer:
“அரசே! என் பணப்பையை வரும் வழியில் தொலைத்துவிட்டேன். அதை எடுத்தவர்கள் திருப்பிக் கொடுத்தால் நாற்பது பணம் சன்மானமாகக் கொடுத்து விடுகிறேன். அருள் கூர்ந்து இதை ஊர் மக்களுக்கு அறிவிக்க வேண்டுகிறேன்” என்று வணிகன் சிற்றரசனிடம் முறையிட்டான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.3 காணாமல் போன பணப்பை

Question 3.
வணிகனுக்குச் சிற்றரசன் எவ்வாறு பாடம் கற்பித்தார்?
Answer:
வணிகன் பணம் குறைகிறது என்று பொய் சொன்னதை அறிந்து கொண்ட அரசன், “வணிகனே உன் பையில் இப்போது இருப்பதைக் காட்டிலும் அதிகமாகப் பணம் இருந்தது இல்லையா? எனவே, இது உன் பை இல்லை; வேறு யாருடையதோ தெரியவில்லை. பணத்திற்குச் சொந்தக்காரன் வந்து கேட்கும் வரை என்னிடமே இருக்கட்டும். நீ இவ்விடத்தைவிட்டுப் போகலாம்” என ஆணையிட்டார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 8.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 8.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு

மதிப்பீடு 

படிப்போம்! சிந்திப்போம்!

அ. எழுதுவோம்! சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
புறாவிற்காகத் தன் உடலையே தந்த மன்னன் ………….
அ) மனுநீதிச்சோழன்
ஆ) பாண்டியன்
இ) சிபி மன்ன ன்
ஈ) அதியமான்
Answer:
இ) சிபி மன்னன்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு

Question 2.
கண்ண கியின் சிலம்பு …………….. ஆல் ஆனது.
அ) முத்து
ஆ) மாணிக்கம்
இ) பவளம்
ஈ) மரகதம்
Answer:
ஆ) மாணிக்கம்

Question 3.
அறநெறி – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) அறி + நெறி
ஆ) அற + நெறி
இ) அறம் + நெறி
ஈ) அறு + நெறி
Answer:
இ) அறம் + நெறி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு

Question 4.
கால் + சிலம்பு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………..
அ) காற்சிலம்பு
ஆ) கால்சிலம்பு
இ) கற்சிலம்பு
ஈ) கல்சிலம்பு
Answer:
அ) காற்சிலம்பு

Question 5.
தண்டித்தல் – இச்சொல்லின் பொருள் ………..
அ) புகழ்தல்
ஆ) நடித்தல்
இ) வழங்குவதல்
ஈ) ஒறுத்தல்
Answer:
ஈ) ஒறுத்தல்

ஆ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.
1. அ + ஊர் = ……………………….
2. தகுதி + உடைய = ……………………….
Answer:
1. அ + ஊர் = அவ்வூர்
2. தகுதி + உடைய = தகுதியுடைய

இ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
1. கள்வனல்லன் = ………………………. + ……………………….
2. செங்கோல் – = ………………………. + ……………………….
Answer:
1. கள்வனல்லன் = கள்வன் + அல்லன்
2. செங்கோல் – = செம்மை + கோல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு

ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
கண்ணகிக்கு ஏற்பட்ட துன்பம் யாது?
Answer:
கண்ணகியின் கணவனான கோவலன் பாண்டிய மன்னனால் தவறான தீர்ப்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டான். இதுவே கண்ணகிக்கு ஏற்பட்ட துன்பம் ஆகும்.

Question 2.
புகார் நகரின் சிறப்புகள் யாவை?
Answer:
ஒரு புறாவுக்காக தன் உடலையே தந்த சிபி மன்னனும், பசுவிற்கு நீதி வழங்குவதற்காக, தன் மகனைத் தேர்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த சிறப்புக்குரியது புகார் நகரம்.

Question 3.
பாண்டிய மன்னனின் வெண்கொற்றக் குடை வீழக் காரணமென்ன?
Answer:
பொற்கொல்லன் கூறியதைக் கேட்டு ஆராயாமல் கோவலனுக்குத் தண்டனை அளித்தான் பாண்டிய மன்னன். ஆதலால் அவனுடைய வெண்கொற்றக்குடை வீழ்ந்தது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு

உ. சிந்தனை வினாக்கள்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. – இந்தக் குறள் கருத்து யாருக்குப் பொருந்தும்?
கண்ணகிக்காக? பாண்டிய மன்னருக்கா? சிந்தித்து விடை தருக.
Answer:
இந்தக் குறள் பாண்டிய மன்னருக்குப் பொருந்தும்.

 • பாண்டிய மன்னன் பொற்கொல்லன் கூறிய பொய்யை உண்மை என நம்பி ஆராய்ந்து முடிவெடுக்கவில்லை.
 • பிறர் சொல் கேட்டுப் பிழை செய்து விட்டான்.
 • ஆட்சிப் பொறுப்பில் மன்னன் இருதரப்பினரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். தீர விசாரிக்காமல் தீர்ப்பளித்துவிட்டான். ஆகையால் இக்குறள் பாண்டிய மன்னருக்கே பொருந்தும்.

கற்பவை கற்றபின்

Question 1.
நீதிநெறி தொடர்புள்ள கதை அல்லது உண்மை நிகழ்வுகள் பற்றிய செய்திகளைக் கூறி வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
ஆசிரியர் : வணக்கம் மாணவர்களே! நீங்கள் படித்த நீதிக்கதைகள் பற்றி பேசுங்கள்.
மாலா : அனைவருக்கும் வணக்கம்! நான் நேற்று நூலகத்தில் மரியாதை ராமன் கதையைப் படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. மரியாதைராமன் வசித்த ஊரில் சோமன் என்பவர் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்குச் சரியான கூலி கொடுக்கமாட்டார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு

அவர் ஒருமுறை தன்னுடைய பணப்பையைத் அவர் தவறவிட்டுவிட்டார். அந்த பணப்பையைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் தருவதாகக் கூறினார். ஒரு வாரத்திற்குப் பிறகு பூபாலன் என்பவரின் கையில் அப்பணப்பை கிடைத்தது. அப்பணப்பை சோமனுடையது என்று அறிந்து அவனிடம் கொண்டு சென்று கொடுத்தார். ஆனால் அவன் பணம் மட்டும் இருப்பதாகவும் வைர மோதிரம் இல்லையென்றும் கூறினான்.

சன்மானம் கொடுக்க மனமில்லாததால் பொய் கூறுகிறான் என்பதை அறிந்த ஊர் மக்கள் மரியாதைராமனிடம் சென்றனர். மரியதைராமன் நடந்தவற்றைக் கேட்டு அறிந்து, “பையில் வைரமோதிரம் இல்லாததால் அது சோமனுடைய பை இல்லை என்றும் பணப்பையைத் தொலைத்ததாக வேறு யாரும் கூறவில்லை என்பதாலும் இப்பையைப் பூபாலனுக்குக் கொடுத்துவிடலாம்” எனத் தீர்ப்பு கூறினார். ஏமாற்ற நினைத்த சோமன் ஏமாந்து போனான். நல்லது செய்ய நினைத்த
பூபாலன் நன்மையடைந்தான்.

நிலா : நான் தெனாலிராமன் கதைகளுள் ‘நீர் இறைத்த திருடர்கள்’ என்ற
கதையைப் படித்தேன். அதில் தெனாலிராமனின் கிணற்றில் நீர் மிகவும் ஆழத்தில் இருந்தது. தண்ணீர் இறைப்பது அவனுக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஒருநாள் இரவு நான்கு திருடர்கள் அவனுடைய தோட்டத்தில் ஒளிந்திருப்பதைக் கண்டான். தன் மனைவியிடம் வீட்டில் உள்ள நகைகளைப் பெட்டியில் போட்டு எடுத்து வரும்படிக் கூறினான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு

“அவற்றைக் கிணற்றில் போட்டு விடலாம். இப்போது வறுமை நீடிப்பதால் திருடர்கள் பயம் அதிகமாக உள்ளது” என்று கூறினான். அதில் கல், மண் போன்றவற்றை வைக்கும்படி மனைவியிடம் சைகை செய்தான். அவ்வாறே பெட்டியைக் கிணற்றில் போட்டுவிட்டு உள்ளே சென்றனர். திருடர்கள் தங்கள் வேலை எளிமையாகிவிட்டது என எண்ணி கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து ஊற்றிய படியே இருந்தனர்.

பொழுதும் விடிந்தது. அவர்கள் மறுநாள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டுச் செல்லும்போது, தெனாலிராமன் அங்கு வந்து இரண்டு நாட்கள் கழித்து வரும்படிக் கூறினான். “இன்று இறைத்த நீர் இரண்டு நாட்களுக்குப் போதுமானது” என்று கூறினான். இதனைக் கேட்ட திருடர்கள் தெனாலிராமன் புத்திசாலித்தனமாக தங்களை வேலை வாங்கியதை எண்ணியும், கொஞ்சம் தயங்கினாலும் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்றும் பயந்து ஓடினர்.

மாலா : இதுபோல நீதிக்கதைகள் நம்மைப் போன்ற மாணவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாய் இருக்கின்றன.

நீலா : சரியாகச் சொன்னாய் மாலா. நான் தெனாலிராமன் கதைகள், அக்பர் பீர்பால் கதைகளைப் படித்தேன். இக்கதைகளும் நமக்கு நீதியைப் புகட்டுகின்றன. தெனாலிராமனின் அறிவுக்கூர்மையும் பீர்பாலின் புத்திக் கூர்மையும் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

ஆசிரியர் : மாலா, நீலாவைப் போல் மற்றவர்களும் நூலகம் செல்லும்போது நீதிக்கதையைப் படித்து பயனடையுங்கள். வேறு யாராவது பேச விரும்புகிறீர்களா!

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு

கலா : நான்கூட இதுபோன்ற கதைகளை என் தாத்தா பாட்டியிடம் கேட்டிருக்கிறேன். என்னுடைய தாத்தா நேரம் இருக்கும் போதெல்லாம் ! என்னைப் பூங்காவிற்கு அழைத்துச் செல்வார். அப்போது நிறைய கதைகளைக் கூறியுள்ளார். இவர்கள் படித்துப் பெற்ற அனுபவத்தைக் கேட்டுப் பெற்றிருக்கிறேன்.

ஆசிரியர் : நன்று. தாத்தா பாட்டி இருவரும் நடமாடும் நூலகங்கள், அவர்களுடைய அனுபவமே ஒரு புத்தகம்தான். நாளைய வகுப்பில் தொடரலாம்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. பசுவிற்கு நீதி வழங்க தன் மகனைத் தேர்க்காலில் இட்டவர்
Answer:
மனுநீதிச்சோழன்

2. கண்ண கி …………. மனைவி.
Answer:
கோவலனின்

3. பழியில்லாச் சிறப்பினையுடைய புகழ்மிக்கவன் …………. .
Answer:
மாசாத்துவான்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு

4. புகார் நகரில் வாழ்ந்த மன்னர்கள்………………..
Answer:
சோழ மன்னர்கள்

5. பழிச்சொல்லுக்கு அஞ்சி உயிர் நீத்தவர் …………..
Answer:
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு

விடையளி :

Question 1.
கண்ணகி அரண்மனை வாயிலின் முன் எவ்வாறு நின்றாள்?
Answer:
கண்ணகி, அழுத கண்களோடும் தலைவிரி கோலத்துடனும் அரண்மனை வாயிலின் முன் நின்றாள்.

Question 2.
புகார் நகரில் வாழ்ந்த மன்னர்களாக கண்ணகி குறிப்பிட்டவர் யாவர்?
Answer:
(i) உலகம் வியக்கும் வண்ணம் ஒரு புறாவுக்காக தன் உடலையே தந்த சிபி மன்னன்.

(ii) பார் போற்றும் பசுவை மக்கள் தெய்வமென வணங்க அதன் கன்றைத் தேர்க்காலிலிட்டுக் கொன்ற தன் மகனையும் அதே தேர்க்காலிலிட்டுக் கொன்றவன் மனுநீதிசோழன் ஆகிய இருமன்னர்களும் புகார் நகரில் வாழ்ந்தவர்கள் என்று கண்ண கி குறிப்பிடுகிறாள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு

Question 3.
தாம் செய்தது பிழை என்றறிந்த பாண்டிய மன்னனின் செயல் யாது?
Answer:
“ஆ! தவறிழைத்து விட்டேனே! பிறர் சொல் கேட்டுப் பெரும்பிழை செய்தேனே! யானோ அரசன், யானே கள்வன். இதுவரை என் குலத்தில் எவரும் செய்யாத பழிச் சொல்லுக்கு ஆளாகிவிட்டேனே! இனிமேலும் யான் உயிரோடு இருத்தல் தகுமோ? இனி எனக்கு வெண்கொற்றக்குடை எதற்கு? செங்கோல்தான் எதற்கு? என் வாழ்நாள் இன்றோடு முடிவதாக!” என்று கூறிவிட்டு, பழிச் சொல்லுக்கு அஞ்சி, அரியணையிலிருந்து தரைமீது வீழ்ந்து தன் உயிரை இழந்தார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு

Question 4.
கோவலன் கள்வனல்லன் என்பதைக் கண்ணகி எவ்வாறு நிரூபித்தாள்?
Answer:
“என் கணவன் கள்வனல்லன் அவனிடம் இருந்த சிலம்பும் அரசிக்குரிய சிலம்பன்று; அதன் இணைச் சிலம்பு இதோ என்னிடம் உள்ளது. என் கால்சிலம்பின் பரல் மாணிக்கக் கற்களால் ஆனது” என்று கூறியதும் மன்னன் “ அரசிக்குரிய சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது” என்று கூறிவிட்டு கோவலனிடமிருந்து பெற்ற சிலம்பைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டான்.

கண்ணகி அச்சிலம்பை எடுத்துத் தரையில் போட்டு உடைத்தாள். அச்சிலம்பில் மாணிக்கப் பரல்கள் இருந்தன. இதைக் கண்டதும் மன்னன் தன் தவற்றை உணர்ந்தான். இவ்வாறு கண்ணகி, கோவலன் கள்வனல்ல என்பதனை நிரூபித்தாள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 8.1 கல்வியே தெய்வம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 8.1 கல்வியே தெய்வம்

மதிப்பீடு 

படிப்போம்!‌ ‌சிந்திப்போம்!‌ ‌எழுதுவோம்!‌ ‌

அ.‌ ‌சரியான‌ ‌சொல்லைத்‌ ‌தெரிவு‌ ‌செய்து‌ ‌எழுதுக.‌

‌Question 1.‌
‌கசடற‌ ‌-‌ ‌இச்சொல்லின்‌ ‌பொருள்‌ ‌………………….‌ ‌
அ)‌ ‌தவறான‌ ‌
ஆ)‌ ‌குற்றம்‌ ‌நீங்க‌ ‌
இ)‌ ‌குற்றமுடன்‌ ‌
ஈ)‌ ‌தெளிவின்றி‌ ‌
Answer:
‌ஆ)‌ ‌குற்றம்‌ ‌நீங்க

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம்

‌Question 2.
வளமதை‌ ‌-‌ ‌இச்சொல்லைப்‌ ‌பிரித்து‌ ‌எழுதக்‌ ‌கிடைப்பது‌ ‌………………….‌ ‌
அ)‌ ‌வள‌ ‌+‌ ‌மதை‌ ‌
ஆ)‌ ‌வளமை‌ ‌+‌ ‌அதை‌ ‌
இ)‌ ‌வளம்‌ ‌+‌ ‌அதை‌ ‌
ஈ)‌ ‌வளம்‌ ‌+‌ ‌மதை‌ ‌
Answer:
‌இ)‌ ‌வளம்‌ ‌+‌ ‌அதை

‌Question 3.
‌வெளிச்சம்‌ ‌-‌ ‌இச்சொல்லின்‌ ‌எதிர்ச்சொல்‌ ‌………………….‌
‌அ)‌ ‌இருட்டு‌ ‌
ஆ)‌ ‌வெளிப்படையான‌
‌இ)‌ ‌வெளியில்‌ ‌
ஈ)‌ ‌பகல்‌ ‌
Answer:
அ)‌ ‌இருட்டு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம்

ஆ. ஒன்றுபோல்‌ ‌வரும்‌ ‌சொற்களைப்‌ ‌பாடலிலிருந்து‌ ‌எழுதுக.‌
E:\image\Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம் - 2
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம் - 1

‌இ. எதிர்ச்சொல்‌ ‌எழுதுக.‌ ‌
1.‌ ‌நன்மை‌ ‌x‌ ‌………………….
‌2.‌ ‌புகழ்‌ ‌x‌ ‌‌ ‌………………….
3.‌ ‌வெற்றி‌ ‌x‌ ‌‌ ‌………………….
4.‌ ‌வெளிச்சம்‌ ‌x‌ ‌‌ ‌………………….
5.‌ ‌தோன்றும்‌ ‌x‌‌ ‌………………….
Answer:
1.‌ ‌நன்மை‌ ‌x‌ ‌தீமை‌ ‌
‌2.‌ ‌புகழ்‌ ‌x‌ ‌இகழ்‌ ‌
3.‌ ‌வெற்றி‌ ‌x‌ ‌தோல்வி‌
4.‌ ‌வெளிச்சம்‌ ‌x‌ ‌இருட்டு‌
5.‌ ‌தோன்றும்‌ ‌x‌ ‌மறையும்‌

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம்

ஈ. “உம்” என முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

‌1. அன்னையும் தந்தையும்
‌………………………………….
‌ ‌………………………………….
‌ ‌………………………………….
‌ ‌………………………………….
Answer:
1. அன்னையும் தந்தையும்
கண்ணெனும் கல்வியும்
பொன்னையும் மண்ணையும்
நன்மையும் மென்மையும்.

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பொன்னையும் மண்ணையும் விடச் சிறந்தது எது?
Answer:
பொன்னையும் மண்ணையும் விடச் சிறந்தது கல்வி.

Question 2.
கல்வியை எவ்வாறு கற்க வேண்டும்?
Answer:
கல்வியைக் குற்றம் நீங்கக் கற்க வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம்

ஊ. சிந்தனை வினா.

கல்வியோடு நற்பண்புகளும் அமைவதுதான் சிறப்பு என்று கூறுகிறார்களே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
Answer:
(i) கல்வியோடு நற்பண்புகள் அமைவதுதான் சிறப்பு என்று கூறுவது சரியே.

(ii) நற்பண்பு என்பது பல செயல்களின் கூட்டமைப்பே ஆகும். கருணை, நாணயம், நேர்மை, கவனமாகச் செயல்படுதல், எடுத்த காரியத்தில் உறுதியாக இருத்தல் ஆகியவை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியவை ஆகும்.

(iii) கல்வி ஒருவருக்கு நல்ல வேலையைக் கொடுத்து செல்வந்தனாக்கும். ஆனால் செல்வத்தை அவன் நல்ல வழியில் செலவு செய்தால் மட்டுமே அச்செல்வத்தினாலும் கற்ற கல்வியினாலும் அவனுக்குப் பயன் கிடைக்கும்.

(iv) தற்காலத்தில் மாணவர்கள் புற உலகைப் பார்த்து தங்களைச் சீரழித்துக் கொள்கிறார்கள். அப்போது அவன் கற்ற கல்வியினால் பயன் இல்லாமல் போய்விடும். எனவே, கல்வியோடு நற்பண்புகள் ஒரு சேர அமைய வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம்

கற்பவை கற்றபின்

Question 1.
பாடலை ஓசைநயத்துடன் பாடி மகிழ்க.
Asnwer:
பாடலை ஓசைநயத்துடன் பாட வேண்டும்.

Question 2.
கல்வியின் சிறப்பை உம் சொந்த நடையில் கூறுக.
Answer:
கல்வியின் சிறப்பு :

 • கல்வி பிற செல்வங்களைப் போல அழியாதது. எவராலும் எடுத்துச் செல்ல இயலாதது. கல்வி என்பது வாழ்க்கைத் தரத்தையும் அறிவையும் உயர்த்துகிறது.
 • ஒழுக்கத்தை மேம்படுத்தும், நற்பண்புகளை அளிக்கிறது.
 • அவனுடைய திறமைகளை வெளிப்படுத்த உதவுகிறது.
 • கற்றவன் எங்கு சென்றாலும் சிறப்பிக்கப்படுவான்.
 • கற்றவனுக்குத் தனது நாடு மட்டுமின்றி அனைத்து நாடுகளும் சொந்தமாகும்.
 • கல்வி உடையவர் எல்லோரிடமும் நன்றாகப் பழகிக் கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அனைவருடனும் மகிழ்ச்சியாக வாழவும் செய்கின்றனர்.
 • உலகில் உயர்ந்த மனிதனாக்கும் கல்வியைப் பெறுவோம்.

Question 3.
கல்வியின் சிறப்பை உணர்த்தும் வேறு பாடல்களை அறிந்து வந்து பாடுக.
Answer:
1. திருக்குறள் :
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம்

2. புறநானூறு :
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்.

3. பாரதியார் பாடல் :
தேடு கல்வியிலாதொரு ஊரைத்
தீயினுக்கிரையாக மடுத்தல்
கேடுதீர்க்கும் அமுதம் என் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்!

4. பழமொழி :
உரைமுடிவு காணான் இளமையோன்; என்ற
நரை முது மக்கள் உவப்ப… நரைமுடித்துச்
சொல்லால் முறை செய்தான் சோழன் குல விச்சை
கல்லாமல் பாகம் படும்.

5. நான்மணிக்கடிகை :
திரிஅழல் காணின் தொழுப விறகின்
எரிஅழல் காணின் இகழ்ப – ஒரு குடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமை பாராட்டும் உலகு. (பாடல் 66)

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம்

6. வெற்றி வேற்கை :
கற்கை நன்றே; கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.

Question 4.
கல்வியினால் மேன்மை அடைந்தவர்களைப் பற்றிக் கலந்துரையாடுக.
Answer:
கல்வியினால் மேன்மை அடைந்தவர்கள் பற்றி கலந்துரையாடல் :
காவியா : என்ன மலர்விழி வானத்தையே பார்த்தபடி உள்ளாய்?
மலர்விழி : வானத்தைப் பார்க்கவில்லை. நாளைக்கு வீட்டுப்பாடம் பற்றிதான் சிந்தித்துக் கொண்டுள்ளேன்.
காவியா : நானும் அதற்குத்தான் வந்தேன். உனக்குத் தெரிந்ததைக் கூறு. எனக்குத் தெரிந்தவற்றைக் கூறுகிறேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம்

மலர்விழி : கல்வியால் மேன்மை அடைந்தவர் எனில் என் நினைவுக்கு வருபவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்தான். இவர் இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பணியாற்றியவர். அது மட்டுமல்லாமல் அணுசக்தி விஞ்ஞானியும் ஆவார்.

காவியா : அப்துல்கலாம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். வறுமையை ஒழிக்க இளம் வயதிலேயே வேலைக்குச் சென்றார்.
மலர்விழி : வேலைக்குச் சென்றுகொண்டே படித்துள்ளார். கணிதப் பாடத்திற்காகப் பல மணிநேரம் செலவு செய்துள்ளார். அவருடைய கடின உழைப்பினால் சென்னை எம்.ஐ.டியில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். படிப்படியாக வளர்ந்து சிறந்த விஞ்ஞானி ஆனார். பல உயர்ந்த விருதுகளைப் பெற்றுள்ளார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம்

காவியா : இவரைப்போலவே படிப்பால் உயர்ந்தவர். இஸ்ரோவின் தலைவரான
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன். இவர் நாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்.

மலர்விழி : என்ன தமிழ்வழியிலா கல்வி பயின்றார்?
காவியா :பி.யு.சி படிப்பை நாகர்கோவிலில் முடித்தார். பி.எஸ்.சி கணிதம் படித்தார். – 1980ல் எம்.ஐ.டியில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் முடித்தார். பிறகு பெங்களூருவில் படித்தார். பிறகு இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் இணைந்து அப்பணியில் முக்கிய பணியாற்றினார்.

மலர்விழி : ஆமாம் நான்கூட படித்துள்ளேன். இவ்வாறு வளர்ந்த சிவன் அவர்கள் இஸ்ரோவின் தலைவராகித் தமிழ்நாட்டுக்கே சிறப்பு சேர்த்துள்ளார்.
காவியா : இவர்களைப் போன்று கல்வியால் மேன்மையடைந்த பெண்களும்
உள்ளனர். இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் புலே, முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி அம்மையார், இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி போன்ற பலரும் கல்வியால் உயர்ந்து உலகிற்கு அறிமுகமானவர்கள்.

மலர்விழி : எப்படியோ இருவருமாக சேர்ந்து நம் வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டோம்.
நாம் கலந்துரையாடியதை எழுதிவிடுவோம்.
காவியா : சரி, நானும் உன் வீட்டுக்கு வந்து இரண்டு மணி நேரமாகிவிட்டது. அம்மா தேடுவார்கள். நான் வீட்டிற்குப் புறப்படுகிறேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. பெற்றோர்களுடன் நாம் கற்கும் கல்வியும் ……………. ஆகும்.
Answer:
தெய்வம்

2. கல்வியைக் ………………. நீங்க கற்றிட வேண்டும்.
Answer:
குற்றம்

3. நம்மை விடியலாய் எழச் செய்வது
Answer:
கல்வி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம்

4. கல்வி, மனத்தினில் தெளிந்த ………..வளரச் செய்கிறது.
Answer:
நல்லறிவை

5. கல்வி ………………. அளக்கச் செய்யும்.
Answer:
விண்ணையும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம்

விடையளி :

Question 1.
கல்வி கற்றால் நம்மை நெருங்கி வருபவை எவை?
Answer:
கல்வி கற்றால், நன்மையும் மென்மையும் நல்லருளும் நம்மை நெருங்கி வரும்.

Question 2.
கற்ற கல்வி நெஞ்சில் பதியும். எப்போது?
Asnwer:
கல்வியை நாள்தோறும் கற்றிட கற்பன யாவும் மனக்கணக்கைப் போல் நெஞ்சில் பதியும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம்

Question 3.
‘கல்வியே தெய்வம்’ என்ற பாடல் பொருளை உம் சொந்த நடையில் எழுதுக.
Answer:

 • அன்னை , தந்தை இவர்களுடன் நாம் கற்கும் கல்வியும் தெய்வமாகும்.
 • பொன்னையும் மண்ணையும்விட மேலானது கல்வி. நமக்குப் புகழையும் பெற்றுத் தரும்.
 • கல்வி கற்றால் நன்மையும் மென்மையும் நல்லருளும் நம்மை நெருங்கி வரும். ஆகையால், கல்வியைக் குற்றம் நீங்க கற்றிட வேண்டும்.
 • ஆற்றலையும் நல்ல வளத்தையும் நாம் பெறவேண்டும். நாள்தோறும் கற்றிட, கற்பன யாவும் மனக்கணக்கைப் போல் நெஞ்சில் பதியும். வெற்றிகிட்டும். புகழ் தோன்றும்.
 • விண்ணையும் அளக்கச் செய்யும் நம்மை விடியலாய் எழச் செய்யும். நம்மிடத்தே வலிமையையும் சேர்க்கும் மனத்தினில் தெளிந்த நல்லறிவை வளரச் செய்யும்.

பாடல் பொருள்

கல்வி குறித்த விரிசிந்தனையைத் தருகிறது. அன்னை , தந்தை இவர்களுடன் நாம் கற்கும் கல்வியும் தெய்வமாகும். பொன்னையும் மண்ணையும்விட மேலானாது கல்வி. நமக்குப் புகழையும் தந்து நிற்கும். கல்வி கற்றால், நன்மையும் மென்மையும் நல்லருளும் நம்மை நெருங்கி வரும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.1 கல்வியே தெய்வம்

ஆகையால், கல்வியைக் குற்றம் நீங்க கற்றிட வேண்டும். ஆற்றலையும் நல்ல வளத்தையும் நாம் பெற வேண்டும். நாள்தோறும் கற்றிட, கற்பன யாவும் மனக்கணக்கைப் போல நெஞ்சில் பதியும். வெற்றி கிட்டும். புகழ் தோன்றும். விண்ணையும் அளக்கச் செய்யும். நம்மை விடியலாய் எழச் செய்யும். நம்மிடத்தே வலிமையையும் சேர்க்கும். மனத்தினில் தெளிந்த நல்லறிவை வளரச் செய்யும்.

சொல்பொருள்

1. விஞ்சும் – மிகும்
2. கசடற – குற்றம் நீங்க
3. திண்மை – வலிமை
4. அண்டும் – நெருங்கும்
5. ஊறும் – சுரக்கும்
6. செழித்திட – தழைத்திட

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 7.4 இணைச்சொற்கள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 7.4 இணைச்சொற்கள்

மதிப்பீடு 

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. கீழ்க்காணும் தொடர்களில் பொருத்தமான இணைச்சொற்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.
(ஈடும் எடுப்புமாக, கண்ணுங்கருத்துமாக, அடுக்கடுக்காக,
இன்பமும் துன்பமும், கீரியும்பாம்பும் )
1. பானைகள் ……………………………..  வைக்கப்பட்டிருந்தன.
2. நேற்றுவரை  …………………………….. போல் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுகிறார்கள்.
3. தேர்வில்  …………………………….. படித்ததால், நான் வகுப்பில் முதலாவதாக வந்தேன்.
4. வாழ்வில் …………………………….. உண்டு. அதனைக் கண்டு நாம் சோர்வடையக்கூடாது.
5. மன்ற விழாக்களில் எங்கள் ஆசிரியரின் பேச்சு  ……………………………..  இருக்கும்.
Answers:
1. பானைகள் அடுக்கக்காக வைக்கப்பட்டிருந்தன.
2. நேற்றுவரை கீரியும்பாம்பும் போல் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுகிறார்கள்.
3. தேர்வில் கண்ணுங்கருத்துமாக படித்ததால், நான் வகுப்பில் முதலாவதாக வந்தேன்.
4. வாழ்வில் இன்பமும் துன்பமும் உண்டு. அதனைக் கண்டு நாம் சோர்வடையக்கூடாது.
5. மன்ற விழாக்களில் எங்கள் ஆசிரியரின் பேச்சு ஈடும்எடுப்புமாக இருக்கும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

ஆ. விடுபட்ட இடங்களில் உரிய எதிரிணைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

1. இன்பமும் – துன்பமும் – இன்பமும் துன்பமும்
2. அன்றும் – ……………………………. – ……………………………
3. அங்கும் –  ……………………………. – ……………………………
4. உயர்வும் –  ……………………………. – ……………………………
5. விண்ணும் –  ……………………………. – ……………………………
Answer:
1. இன்பமும் துன்பமும் – இன்பமும் துன்பமும்
2. அன்றும் இன்றும்அன்றும் இன்றும்
3. அங்கும் இங்கும்அங்கும் இங்கும்
4. உயர்வும் தாழ்வும்உயர்வும்தாழ்வும்
5. விண்ணும் மண்ணும்விண்ணும் மண்ணும்

கற்பவை கற்றபின்

Question 1.
நீங்கள் படிக்கும் நூல்களிலிருந்து இணைமொழிகளைத் தொகுக்க.
Answer:
இணை மொழிகள் :
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள் - 1

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

Question 2.
இணைமொழிகளைப் பயன்படுத்தி, சிறு உரையாடல் எழுதுக.
Answer:
உரையாடல் :
அம்மா : முருகா! நான் கடைக்குப் போய்விட்டு வருகிறேன். நீங்க கிண்டலும் கேலியும் பண்றேன்னு சண்டை போடாதீங்க.
முருகன் : நாங்க சண்டையெல்லாம் போடமாட்டோம் நீ போய்விட்டு ஆர அமர வாம்மா.
அம்மா : சரி சரி! வீட்டைத் திறந்து விட்டுட்டு வீடு வீடாய்ப் போகாதீங்க.
முருகன் : ஓடியாடி விளையாடக் கூடாது. பேசக்கூடாது. என்னம்மா சொல்றீங்க.
அம்மா : இதெல்லாம் தங்குதடையின்றிப் பேசு. படிக்கச் சொன்னா மட்டும் படிக்காதே!
முருகன் : அக்கம்பக்கத்தில் பேசாதே என்று சொன்னீங்க, பேசறதே இல்லை. விளையாட போவதும் இல்லை.
அம்மா : சரி சரி! பத்திரமாக இரு.
முருகன் :நீ பத்திரமா போய்விட்டு வாம்மா! மழைக்காலம் சாலையெல்லாம் பல்லாங்குழி போல் மேடும் பள்ளமுமாய் உள்ளது.
அம்மா : சரி சரி!

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

Question 3.
இணைமொழிகள் வருமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.
Answer:
(i) ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைப் பார்க்க கூட்டங்கூட்டமாய் மக்கள் வந்தனர்.
(ii) தஞ்சை பெரியகோவில் தலைமுறை தலைமுறையாய் நின்று தமிழரின் பெருமையைப் பறைசாற்றுகின்றன.
(iii) மழையில்லாமல் பயிர்கள் வாடி வதங்கி உள்ளன.
(iv) குழந்தைகள் ஓடியாடி விளையாட வேண்டும்.
(v) நாளும்கிழமையும் எவருக்காகவும் காத்திருக்காது.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. இணைச்சொற்கள் …………. என மூவகைப்படும்.
Answer:
நேரிணை, எதிரிணை, செறியினை

2. வாடிவதங்கி ………………. இணைச்சொல்
Answer:
நேர்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

3. வெற்றியும் தோல்வியும் ………….. இணைச்சொல்
Answer:
எதிர்

4. பச்சைப்பசேல் ………………. சொல்
Answer:
செறியினைச்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

மொழியை ஆள்வோம்

பேசுதல்

Question 1.
அன்றாட வாழ்க்கைச் சூழலில் நீங்கள் காணும் சிக்கல்கள் பற்றிக் கலந்துரையாடுக.
Answer:
மாணவன்-1 : என்னடா குமரா! இன்றைக்கு பள்ளிக்கு ஒன்பது மணிக்குத்தான் வந்தாய்? என்னவாயிற்று?
மாணவன்-2 : என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாங்கள் வரும் வழியில் ஒரே போக்குவரத்து நெரிசல்.
மாணவன்-1 : கொஞ்சம் சீக்கிரம் புறப்படுவதுதானே!
மாணவன்-2 : சீக்கிரம்தான் புறப்படுகிறோம். சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வேகமாக வரவே இயலவில்லை .

மாணவன்-1 : நீ சொல்வதும் சரிதான். இந்தச் சிக்கல் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இப்பிரச்சனைகூட சீக்கிரம் புறப்பட்டு வந்தால் நேரத்துக்கு வந்துவிடலாம் என்ற தீர்வைத் தரும். குடிநீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பு இவற்றையெல்லாம் என்ன சொல்வது?
மாணவன்-2 : ஆமாம்… ஆமாம்.
மாணவன்-1 : கொஞ்சம் மழை வந்தால் மின்சாரத்தைத் துண்டித்து விடுகின்றனர். கேட்டால் பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகின்றனர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

மாணவன்-2 : அதேபோல்தான் குடிநீரும், மழைக்காலத்தில் ஐம்பது சதவீதம் குழாய்களில் சேறும் சகதியும் கலந்து வருகிறது. கோடைக்காலத்தில் தண்ணீர் வருவதே இல்லை.
மாணவன்-1 : இந்தச்சிக்கல்கள் நமக்கு மட்டும் இல்லை. நகரவாசிகள் அனைவருக்கும் உள்ள சிக்கல்தான்.
மாணவன்-2 : இவற்றிற்குத் தீர்வு காண வேண்டுமானால் அரசாங்கம் செய்யட்டும் என்று எதிர்பார்க்காமல் பொதுமக்கள் சேர்ந்து ஆவன செய்ய வேண்டும்.
மாணவன்-1 : நாமும் நம்மால் இயன்றவரை இச்சிக்கல்கள் தீர பணிபுரிவோம் என உறுதியேற்போம்.

Question 2.
உங்கள் மனம் கவர்ந்த தலைவர்களுள் ஒருவரைப் பற்றி 5 மணித்துளி பேசுக.
Answer:
என்னைக் கவர்ந்த தலைவர் “ஜெய்ஹிந்த்” செண்பகராமன்.
இந்திய விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துப்பாக்கி ஏந்தியபோது, “ஜெய்ஹிந்த்” என்று கோஷம் எழுப்பினார். இம்மந்திர கோஷத்தை உருவாக்கியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான செண்பகராமன். நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த புத்தன் சந்தை என்ற ஊரில் 1891 செப்டம்பர் 15ந்தேதி செண்பகராமன் பிறந்தார். பெற்றோர் சின்னசாமி பிள்ளை , நாகம்மாள் ஆவர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

மாணவப் பருவத்திலேயே தேசபக்தி மிகுந்தவராகத் திகழ்ந்தார். செண்பகராமனின் அறிவும் சுதந்திர வேட்கையும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வால்டர் வில்லியம் ஸ்டிரிக்லாண்ட் என்பவரைக் கவர்ந்தன. அதனால் செண்பகராமனை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றார். செண்பகராமன் அங்கு பொறியியல் கல்வியில் டாக்டர் பட்டம் பெற்றார். அங்கிருந்து கொண்டே “சர்வதேச இந்திய ஆதரவுக் குழு” என்ற அமைப்பை உருவாக்கினார்.

முதல் உலகப்போரின்போது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கடற்படையை அழிப்பதற்காக ஜெர்மனி ஒரு நீர் மூழ்கிக் கப்பலை உருவாக்கியது. அந்தக் கப்பலின் பெயர் ‘எம்டன்’. இக்கப்பலின் என்ஜினியராகவும், இரண்டாவது கமாண்டராகவும் செண்பகராமன் நியமிக்கப்பட்டார். இக்கப்பல் சென்னை கடற்கரையில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் மக்களை மிரளச் செய்தது. முதல் உலகப்போர் முடிந்தது. ஆனால் சுதந்திரம் கிடைக்கவில்லை.

செண்பகராமன் பல அயல்நாடுகளுக்குச் சென்று வந்தார். ஜவஹர்லால் நேரு ஜெர்மனிக்குச் சென்றபோது செண்பகராமன் வீட்டில் தங்கியுள்ளார். நேதாஜியுடன் நிகழ்ந்த சந்திப்பிற்குப் பிறகு இந்திய தேசிய ராணுவம்’ நேதாஜியில் உருவாக்கப்பட்டது.

முதல் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் பொறுப்பேற்றார். அவருக்கும் செண்பகராமனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் ஹிட்லரின் ஆதரவாளர்களான ‘நாஜிக்கள்’ அவருடைய உணவில் மெல்ல மெல்ல விஷத்தைக் கலந்து விட்டனர். இதனால் அவர் உடல்நிலை நலிவுற்றது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

அவருடைய இறுதி விருப்பம் “இந்தியா விடுதலை பெறுவதற்கு முன் தான் இறந்துவிட்டதால் அஸ்தியைப் பத்திரமாக வைத்திருந்து, தேசியக் கொடி பறக்கும் கப்பலில் நமது நாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பாதி அஸ்தியைக் கரமனை ஆற்றிலும் குமரிமுனை கடலிலும் மீதியை நாஞ்சில் நாட்டின் வளம் மிக்க வயல்களில் தூவ வேண்டும்” என்று கூறினார்.

அதன்படி இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது 1966 செப்டம்பரில் இந்தியாவின் கொடிக் கப்பலில் செண்பகராமனின் அஸ்தி கொச்சிக்குக் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆசை நிறைவேற்றப்பட்டது.

Question 3.
வல்வில் ஓரியின் கொடைச் சிறப்பைப் பற்றி பேசுக.
Answer:
அவையோர்க்கு வணக்கம்!
நான் கடையெழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரியின் கொடைச் சிறப்பைப் பற்றிப் பேசவந்துள்ளேன்.

சங்க இலக்கியங்கள் கடையெழு வள்ளல்கள் பற்றிப் பாடியுள்ளன. பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி இவர்கள் எழுவரும் தங்களுடைய கொடைத்திறத்தால் பெயர் பெற்றவர்கள். அவர்களுள் ஒருவர் ஓரி.

இவர் கொல்லிமலையை ஆண்டு வந்தவர். விற்போரில் சிறந்தவர் என்பதால் வல்வில் ஓரி என்று அழைக்கப்பட்டார். இவன் புன்னை மரங்களையும் குன்றுகளையும் உடைய நாடுகளைக் கூத்தருக்குக் கொடுத்த ஓரி எனப் புகழப்படுபவர். தன்னை நாடி வரும் புலவர்களுக்கும் பிறருக்கும் பொன்னையும், தேர், யானை போன்றவற்றையும் வழங்கிய வள்ளல்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

ஒருநாள் ஓரி வேட்டையாட கானகத்துக்குச் சென்றான். அப்போது பெரும்புலவர் வன்பரணர் தனது பாணர் கூட்டத்துடன் அங்கு வந்து தங்கியிருந்தார்.

அப்போது ஒரு புலி சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்த யானையைத் தாக்க தயாராக இருந்தது. இதைக் கண்ட ஓரி, யானையைக் குறிவைத்து அம்பைத் தொடுத்தான். அந்த அம்பு யானையை வீழ்த்தி விட்டுப் புலியைக் கொன்று, காட்டுப் பன்றியைத் துளைத்துவிட்டு, ஒரு புற்றுக்குள் பாய்ந்தது. புற்றுக்குள் இருந்த முள்ளம் பன்றியும் அம்புக்கு இரையாயிற்று. இந்தக் காட்சியைக் கண்ட வன்பரணரும் உடன் இருந்தவர்களும் வியப்படைந்தனர். ஓரியின் இத்திறமையைப் பாடலாக்கினார் பரணர். உடனிருந்தவர்கள் இசைக்கருவிகளை இசைத்தனர்.

அவர்களுக்குத் தான் வேட்டையாடிய விலங்கின் ஊனைத் தந்து நிறைய தேனையும் வழங்கினான் ஓரி. இசைவாணர்களுக்கு யானைகளைப் பரிசிலாகக் கொடுத்தான். வெள்ளி நாரிலே நீலமணியால் செய்த குவளை மலர்களைத் தொடுத்து அவர்களுக்கு வழங்கினான் என்று சங்கப்பாடல் கூறுகிறது.

இசைப்புலவர்கள் அவனை நாடி வந்தால், ‘நீங்கள் பாடுங்கள்’ என்று சொல்லமாட்டான். அவர்களுக்கு அறுசுவை உணவளித்து உறங்குவதற்கு மெத்தென்று படுக்கையைக் கொடுப்பான். பாணர்கள் பாடுவதும் இல்லை ஆடுவதும் இல்லை. அரச குமாரர்களைப் போல் கவலையின்றி இன்பம் துய்ப்பார்கள். இசைவாணர்கள் தானாகப் பாடும் போதுதான் உண்மையான இசை வெளிவரும் என்பது அவனுடைய எண்ணமாக இருந்தது.

இவ்வாறு சிறந்த கொடையாளியாகத் திகழ்ந்தான் ஓரி.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

எழுதுதல்

Question 1.
சொல்லக்கேட்டு எழுதுக.
Answer:

 1. கண்ணுக்கு அழகு பிறருக்கு இரக்கம் காட்டல்.
 2. கொல்லிமலையை வல்வில் ஓரி என்ற மன்னர் ஆட்சி செய்தார்.
 3. பாலன் அவ்வூர் மக்களுக்கு அறுசுவை விருந்தளித்தார்.

Question 2.
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. பொருளுதவி – ………………………………………………………………….
2. திறமைசாலி – ………………………………………………………………….
3. நம்பிக்கை – ………………………………………………………………….
4. ஆராய்ச்சி – ………………………………………………………………….
5. வான்புகழ் – ………………………………………………………………….
Answer:
1. பொருளுதவி – செல்வந்தர்கள் வறியவர்களுக்குப் பொருளுதவி செய்து உதவ வேண்டும்.

2. திறமைசாலி – தெனாலிராமன் திறமைசாலியாக இருந்ததனால் கிருஷ்ணதேவராயரின் அவையில் விகடகவியாக இருந்தார்.

3. நம்பிக்கை – நாம் எச்செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிக்க வேண்டும்.

4. ஆராய்ச்சி – எதனையும் ஏன்? எதற்கு? என்று ஆராய்ச்சி செய்து கூறுவது அறிவியல்.

5. வான்புகழ் – என் நண்பன், வெள்ளத்தில் அடித்துச் சென்ற சிறுவனைக் காப்பாற்றி ஒரே நாளில் வான்புகழ் பெற்றான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

3. பொருத்தமான சொற்களைக் கொண்டு, தொடரை முழுமையாக்குக.
(பாணர், ஊர்த்தலைவர், வல்வில் ஓரி, பூவண்ணன், பாலன்)

1. கொடைத்திறத்தில் சிறந்தவர் …………………………………….
Answer:
வல்வில் ஓரி

2. மக்களுக்கு அறுசுவை விருந்தளித்தவர் …………………………………….
Answer:
பாலன்

3. திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்தவர் …………………………………….
Answer:
பூவண்ணன்

4. இசைப் பாடல்களைப் பாடுபவர் …………………………………….
Answer:
பாணர்

5. மூதாட்டிபோல் வேடமிட்டவர் …………………………………….
Answer:
ஊர்த்தலைவர்

மொழியோடு விளையாடு

1. சரியான எழுத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வல்வில் ஓரி வாரித் தரும் வ……….ள………. (ள், ல், ழ்)
2. பாணரே! உம் வ……….மையைப் போக்குவது என் பொறுப்பு (று, ரு)
3. களிறும் கொடையாய் நல்கும் வா……….. புக……….வல்வில் ஓரி (ன், ண்/ல், ள்,ழ்)
4. மக்களுக்குப் பாலன் மீது அளவ……….ற நம்பிக்கை ஏற்பட்டது. (ர்/ற்)
5. பூவண்ணன் மூதாட்டிக்கு உ……….வு வாங்கிக் கொடுத்தான். (ண, ன, ந)
Answer:
1. வல்வில் ஓரி வாரித் தரும் வள்ல் (ள், ல், ழ்)
2. பாணரே! உம் வறுமையைப் போக்குவது என் பொறுப்பு (று, ரு)
3. களிறும் கொடையாய் நல்கும் வான் புகழ் வல்வில் ஓரி (ன், ண்/ல், ள்,ழ்)
4. மக்களுக்குப் பாலன் மீது அளவற்ற நம்பிக்கை ஏற்பட்டது. (ர்/ற்)
5. பூவண்ணன் மூதாட்டிக்கு உவு வாங்கிக் கொடுத்தான். (ண, ன, ந)

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

2. சொல்லிருந்து புதிய சொல் உருவாக்கலாமா?
கொடுக்கப்பட்ட சொற்களையும், குறிப்புகளையும் கொண்டு புதிய சொல் உருவாக்குக.

1. விடுகதை – மரத்திற்கு ஆதாரம் ……………………..
Answer:
விதை

2. திருநெல்வேலி – பயிர்களைப் பாதுகாக்கும் ……………………..
Answer:
வேலி

3. நகர்புறம் – விரலின் மணிமகுடம் ……………………..
Answer:
நகம்

4. இமயமலை – உண்க லம் ……………………..
Answer:
இலை

5. உருண்டை – நமது அடிப்படைத் தேவைகளுள் ஒன்று ……………………..
Answer:
உடை

3. சொற்களைக் கொண்டு புதிய தொடர்களை உருவாக்குக.

1. மதிவாணன் பலம் மிக்கவன்
Answer:
காற்றடித்ததால் மரத்திலிருந்து பழம் விழுந்தது. (பழம்)

2. இந்த மரம் உயரமாக உள்ளது.
Answer:
வீரபாண்டிய கட்டபொம்மன் மறம் மிகுந்தவன்.
(மறம்)

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

3. நிலா தன் கையில் வளை அணிந்திருந்தாள்.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள் - 4
Answer:
எலி, கொசுவலையைக் கடித்துவிட்டது. (வலை )

4. சூரியனில் இருந்து ஒளி கிடைக்கிறது.
Answer:
பேக்குவரத்துப் பெருக்கத்தினால் ஒலிமாசு ஏற்படுகிறது. (ஒலி)

5. பரிமளா கடையில் வெல்லம் வாங்கினார்.
Answer:
தொடர்மழையால் ஆற்றில் வெள்ளம் வந்தது. (வெள்ளம்)

4. கீழ்க்காணும் குறுக்கெழுத்துப் புதிரில் உள்ள வினாக்களுக்குச் சிந்தித்துச் சரியான விடையைக் கண்டுபிடிக்க.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள் - 2
இடமிருந்து வலம்

1. அறிவியல் அறிஞர்கள் செய்வது ………
Answer:
ஆராய்ச்சி

2. இரக்கம் என்ற சொல்லை இப்படியும் கூறலாம்………
Answer:
பரிவு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

வலமிருந்து இடம்

1. உலகின் மற்றொரு பெயர் ……………
Answer:
தரணி

2. மக்களைக் காப்பவர் …………….
Answer:
வேந்தன்

3. நவதானிய வகைகளுள் ஒன்று ………..
Answer:
கம்பு

மேலிருந்து கீழ்

1. அரசரின் ஆலோசகர் ……….
Answer:
அமைச்சர்

2. கொல்லிமலை நாட்டின் அரசன் …..
Answer:
வல்வில் ஓரி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

கீழிருந்து மேல்

1. இது வந்திட பத்தும் பறக்கும் ……….
Answer:
பசி

2. விரைந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்……………….
விடை:
மெதுவாக

3. இதைக் கேட்டால் மனம் மயங்கும் ……….
Answer:
இசை

5. வரிசைமாறியுள்ள தொடர்களை நிகழ்வுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.

1. மூதாட்டி ஒருவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
2. ஊர்த்தலைவர் நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார்.
3. ஊர்த்தலைவரின் முடிவை மக்கள் மகிழ்ந்து ஏற்றனர்.
4. பாலன், பூவண்ண ன் இருவரும் நிருவாகி பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர்.
5. பூவண்ணனே நிருவாகியாகத் தகுதியானவர் என்றார் ஊர்த்தலைவர்.
Answer:
1. ஊர்த்தலைவர் நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார்.
2. பாலன், பூவண்ண ன் இருவரும் நிருவாகி பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர்.
3. மூதாட்டி ஒருவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
4. பூவண்ணனே நிருவாகியாகத் தகுதியானவர் என்றார் ஊர்த்தலைவர்.
5. ஊர்த்தலைவரின் முடிவை மக்கள் மகிழ்ந்து ஏற்றனர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

நிற்க அதற்குத் தக

1. நாட்டு உடைமைகளான பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பேன்.
2. அனைவருடனும் ஒற்றுமையாக வாழ்வேன்.

அறிந்து கொள்வோம்

பிறநாட்டு நாணயங்களை அறிவோமா?

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள் - 3

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

குறிப்புச் சட்டகத்தைப் பயன்படுத்திச் சிறு சிறு கட்டுரை எழுதுதல்

கல்வியின் சிறப்பு

குறிப்புச் சட்டகம் :

 • முன்னுரை
 • கல்வியின் தேவை
 • கல்வியின் சிறப்பு
 • கல்வியால் உயர்ந்தவர்கள்
 • கல்வியால் விளையும் பயன்
 • முடிவுரை

முன்னுரை :
இன்றைய உலகின் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். அத்தகைய கல்வியைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

கல்வியின் தேவை :
கல்வி ஓர் ஒளிவிளக்கு. விளக்கானது தன்னைச் சுற்றியுள்ள இடத்தை ஒளி வீசச் செய்யும். அதுபோல் ஒருவர் கற்ற கல்வியானது பலருக்கும் பயன்தரும். கல்விதான் ஒருவனை அறிவாளி ஆக்குகிறது. நல்ல புத்தகங்களைப் படித்து அறிவுக் கண்களைத் திறக்கும் திறவுகோல் கல்வியாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

கல்வியின் சிறப்பு :
கல்வி கற்றவர் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிறரால் மதிக்கப்படுவான். கற்றவனுக்குத் தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும். கல்வியறிவு பெற்றவர் எல்லா மக்களிடமும் நன்றாக பழகிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் சந்தோசமாக சேர்ந்து வாழ்வதையே விரும்புவர்.

கல்வியால் உயர்ந்தவர்கள் :
அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன், அம்பேத்கர், சுந்தர் பிச்சை, கல்பனா சாவ்லா, டாக்டர் முத்துலட்சுமி, ஆர். வெங்கட்ராமன் போன்றோர் கல்வியால் உயர்ந்தவர்கள் ஆவர்.

கல்வியால் விளையும் பயன் : –
கல்வியால் எல்லா வளங்களும் கிடைக்கும். கல்வியால் வாழ்க்கையில் எதிர்ப்படும் இடர்களையெல்லாம் விரட்டமுடியும். கல்வியால் நாட்டில் நன்னெறி படரும். மக்கள் மாண்புறுவர். கல்வி போல மனபயத்தைப் போக்கும் மருந்து வேறொன்றுமில்லை. கல்வித் துணை வறுமையில் கை கொடுக்கும். கல்வியின் பயனே மனித வாழ்வின் பெரும் பேறாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.4 இணைச்சொற்கள்

முடிவுரை :
கல்வியினால் மட்டுமே உலக அறிவினை வளர்த்துக் கொள்ள முடியும். உலகை முழுமையாகப் படிக்கவும் முடியும். கல்வி மனிதனுக்கு ஓர் உன்னதமான தேவையாகும். தாய் போலத் தாலாட்டி தந்தை போல காக்கும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.3 தலைமைப் பண்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 7.3 தலைமைப் பண்பு Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 7.3 தலைமைப் பண்பு

மதிப்பீடு 

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
வேம்பன் எதற்காகப் பலரை நாடிச் சென்று பொருளுதவி பெற்றார்?
Answer:
வேம்பன் செந்தூர் என்ற ஊருக்கு ஊர்த்தலைவராக இருந்தவர். அவ்வூரின் முன்னேற்றத்திற்காகப் பலரை நாடிச் சென்று பொருளுதவி பெற்றார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.3 தலைமைப் பண்பு

Question 2.
ஊர்த்தலைவர் அறிவித்த இரண்டாவது போட்டி என்ன?
Answer:
செந்தூர் மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த வேண்டும் என்பது இரண்டாவது போட்டியாகும்.

Question 3.
செந்தூர் மக்களுக்குப் பாலன் மீது நம்பிக்கை ஏற்படக் காரணம் என்ன?
Ansewr:

 • பாலன் மக்களுக்கு அறுசுவை உணவளித்தார்.
 • தம் செல்வங்களை மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.
 • இச்செயல்களால் செந்தூர் மக்களுக்கு பாலன் மீது நம்பிக்கை ஏற்பட்டது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.3 தலைமைப் பண்பு

Question 4.
சிறந்த நிருவாகி என ஊர்த்தலைவர் யாரை அறிவித்தார்?
Answer:
ஊர்த்தலைவர் பூவண்ணனைச் சிறந்த நிருவாகி என அறிவித்தார்.

Question 5.
பூவண்ணன் மக்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ததாகக் கூறினார்?
Answer:
மக்களின் முன்னேற்றத்திற்குப் பூவண்ணன், திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்துக் 9 கல்வியுடன் தனியாகத் தொழில் செய்து, பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பயிற்சிகள் – கொடுத்திருப்பதாகவும் மற்றக் கலைகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்திருப்பதாகவும்” கூறினார்.

சிந்தனை வினாக்கள்.

Question 1.
உங்கள் ஊரை முன்னேற்றம் பெறச் செய்ய நீங்கள் எந்த வகையில் உதவுவீர்கள்?
Answer:

 • ஊரை முன்னேற்றம் பெறச் செய்ய முதலில் செய்ய வேண்டியது கல்வி கற்காத மாணவர்கள் இவ்வூரில் இல்லை என்று கூறும் நிலையை ஏற்படுத்துவேன்.
 • மழைக்காலங்களில் சாலையில் உள்ள மேடு பள்ளங்களைச் சரிசெய்வேன்.
 • பொதுக்குழாய்களில் நீர் வரும் நேரத்தை அதிகப்படுத்துவேன். குழாய்கள் சரியாக மூடப்படாமல் இருந்தால் அவற்றை மாற்றிப் புதிய குழாய் அமைப்பேன்.
 • மின் விளக்குகள் பகல் நேரங்களில் தெருக்களில் எரிந்தால் அதனை மின்வாரியத்திற்குத் தெரிவிப்பேன்.
 • சிறியவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சத்து மிகுந்த இயற்கை உணவு கிடைக்க வழி வகை செய்வேன்.
 • மழைநீர் தேங்கி அதனால் கொசுக்கள் பெருகுவதைத் தவிர்க்க மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வேன்.
 • நோய்கள் வராமல் இருக்க சுற்றுச்சூழலைப் பாதுகாப்பேன். மேற்கூறிய அனைத்தையும் செய்தால் ஊர் முன்னேற்றம் அடையும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.3 தலைமைப் பண்பு

Question 2.
உங்களுக்குத் தலைமைப் பண்பு கிடைக்கிறது எனில், என்னவெல்லாம் செய்ய நினைப்பீர்கள்? பட்டியலிடுக.
Answer:
எனக்குத் தலைமைப் பண்பு கிடைத்தால் நான் செய்ய நினைப்பவை :

 • நாட்டின் முன்னேற்றத்திற்குக் கல்வி மிக மிக அவசியம் என்பதால் கல்வி நிலையங்களை உருவாக்கிப் புதிய கல்வி முறை மூலம் பல சான்றோர்களை உருவாக்குவேன்.
 • வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு உதவி புரிவேன்.
 • கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு உதவுவதற்கு படித்த இளைஞர்களை நியமித்து இலவசமாகக் கற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்வேன்.
 • போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவேன்.
 • சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை உண்டாக்கித் தருவேன்.
 • ஏரி, குளங்களை அமைத்து நீர் நிலைகளைப் பலப்படுத்துவேன்.
 • பொதுப்பணிகளைச் செய்வதற்கு அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் வீட்டிற்கு ஒருவரை வரவழைத்து செவ்வனே செய்வேன்.
 • உழவுத்தொழிலில் புதிய உத்திகளை ஏற்படுத்துவேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.3 தலைமைப் பண்பு

கற்பவை கற்றபின்

Question 1.
இக்கதையை உம் சொந்த நடையில் கூறுக.
Answer:
செந்தூர் என்ற சிற்றூரில் வேம்பன் என்ற ஊர்த்தலைவர் வாழ்ந்து வந்தார். அவ்வூரை முன்னேற்றுவதற்காக திறமையான நிருவாகி ஒருவரை நியமிக்க விருப்பதாக மக்களுக்கு முரசு அறைந்து அறிவித்தார். அவ்வூரை சேர்ந்த பாலன் பூவண்ணன் இருவரும் நிருவாகியாக இருப்பதற்கு விருப்பம் தெரிவித்தனர். இருவருக்கும் மூன்று போட்டிகள் வைக்கப்பட்டன.

முதல் போட்டி மக்களுக்குப் பிடித்தவராக இருக்க வேண்டும். பாலன் அவ்வூர் மக்களுக்கு விருந்தளித்தார். பூவண்ணன் திறமைசாலிகள் சிலரைத் தேர்ந்தெடுத்துத் தொழில் சார்ந்த பயிற்சிகளை அளித்தார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.3 தலைமைப் பண்பு

இரண்டாவது போட்டி, அவ்வூர் மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த வேண்டும். பாலன் தம்மிடமிருந்த செல்வத்தை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தார். மக்கள் மகிழ்ந்தனர். பூவண்ணன், தாம் தேர்ந்தெடுத்த திறமைசாலிகளுக்குக் கல்வியுடன் மற்ற கலைகளையும் சேர்த்துக் கற்றுக் கொடுத்தார். மக்கள் ஏளனமாகப் பார்த்த னர்.

மூன்றாவது போட்டி, மக்களிடம் பரிவு காட்ட வேண்டும். மறுநாள் பாலன் சென்ற வழியில் மரத்தடியில் படுத்திருந்த மூதாட்டி ஒருவர் பாலனைப் பார்த்து, “தம்பி என்னைத் தூக்கிவிடு, என்னால் எழுந்திருக்க முடியவில்லை” என்றார். பாலன் தனக்கு அவசர வேலை இருப்பதாகக் கூறிச் சென்றுவிட்டார். அதே வழியில் வந்தார் பூவண்ணன். அவர் அந்த வயதான மூதாட்டியின் அருகில் சென்று “என்ன வேண்டும்?” என்று கேட்டார். அம்மூ தாட்டி தன்னைத் தூக்கிவிடும்படிக் கூறினார். பூவண்ணன் மூதாட்டியைத் தூக்கி உட்கார வைத்து மூதாட்டியின் களைப்பைப் போக்க உணவும் வாங்கிக் கொடுத்தார்.

மறுநாள் ஊர் மக்கள் முன்னிலையில் பாலன், பூவண்ணன் இருவரில் சிறந்த நிருவாகி யார் என்பது அறிவிக்கப்படவிருந்தது. பெரும்பாலானோர் பாலன் தகுதியானவர் என்று முணுமுணுத்தனர். இருவரும், மூன்று போட்டிகளுக்காக செய்த செயல்களைக் கூறினர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.3 தலைமைப் பண்பு

ஊர்த் தலைவர் மக்களிடம், “பாலன் செய்த செயல்கள் தற்கால உதவி என்றும், பூவண்ணன் செய்தவை எதிர்காலத் தேவையை நிறைவு செய்யும்” என்று கூறினார். அதனால் பூவண்ணனே தகுதியானவர் என்று கூறினார். மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். ஊர்த் தலைவர் கூட்டத்தை விட்டு “சிறிது நேரத்தில் வருகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து பூவண்ண னிடம் உதவி கேட்ட மூதாட்டி அங்கே தட்டுத் தடுமாறி நடந்து வந்தார். கீழே விழப்போன மூதாட்டியைப் பூவண்ணன் தாங்கிப் பிடித்தார். அம்மூதாட்டி தன் வேடத்தைக் கலைந்தார். ஊர்த் தலைவர்தான் மூதாட்டி என்பதை உணர்ந்தனர். ஊர்த் தலைவர் நடந்தவற்றை மக்களிடம் எடுத்துக் கூறி பூவண்ணனை நிருவாகியாக்கினார்.

Question 2.
உமக்கு மிகவும் பிடித்த போட்டி எது? அதில் பங்கேற்றிருப்பின் அந்த அனுபவத்தைப் பற்றிக் கூறுக.
Answer:
எமக்கு மிகவும் பிடித்த போட்டி சதுரங்கப் போட்டி.
எங்கள் வீட்டில் நான் என் அண்ணன், அப்பா இருவருடனும் விளையாடுவேன். விளையாடத் தொடங்கிய காலத்தில் ஓரிருமுறை தோற்றுவிட்டேன். தோல்வியே வெற்றிக்கு முதற்படி’ அல்லவா?

என்னுடைய தோல்வி என்னை மீண்டும் மீண்டும் விளையாடத் தூண்டியது. நான் அதற்குப் பிறகு என் அப்பா, அண்ணன் இருவரிடமும் தோற்கவே இல்லை. இதனால் எனக்குச் சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் ஏற்பட்டது. என் பள்ளியில் உள்ள உடற்பயிற்சி ஆசிரியரிடம் என் விருப்பத்தைக் கூறி பள்ளியின் மூலம் பல போட்டிகளில் கலந்து கொள்வேன்.

நான் போட்டிக்குச் சென்றாலே பரிசுடன்தான் வருவேன். எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும்.
நான் இப்போட்டியில் நன்கு பயிற்சி பெற்றுள்ளேன். ஒவ்வொரு போட்டியின் போதும் பல அனுபவங்களைப் பெற்றுள்ளேன். இப்போது மாநில அளவில் முதலிடத்தில் உள்ளேன். என்னால் என் பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை கிடைத்துள்ளது.
கூடுதல் வினாக்கள்

விடையளி :

Question 1.
பாலன் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்காகச் செய்த செயல்கள் யாவை?
Answer:
(i) முதல் போட்டி – மக்களுக்குப் பிடித்தவராக இருக்க வேண்டும்.
அவ்வூர் மக்களுக்கு அறுசுவை விருந்தளித்தார்.

(ii) இரண்டாவது போட்டி- மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த வேண்டும். தம்மிடமிருந்த செல்வங்களை மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.

(iii) மூன்றாவது போட்டி – மக்களிடம் பரிவு காட்ட வேண்டும்.
அவர் சென்ற வழியில் மூதாட்டி ஒருவர் மரத்தடியில் படுத்திருந்தார். “தம்பி, என்னைத் தூக்கிவிடு, என்னால் எழுந்திருக்க முடியவில்லை ” என்றார். “எனக்கு அவசர வேலை இருக்கிறது” என்று கூறிக்கொண்டே பாலன் வேகமாகச் சென்றுவிட்டார்.

Question 2.
பூவண்ணன் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்காகச் செய்த செயல்கள் யாவை?
Answer:
(i) முதல் போட்டி – மக்களுக்குப் பிடித்தவராக இருக்க வேண்டும். அவ்வூரிலுள்ள திறமைசாலிகள் சிலரைத் தேர்ந்தெடுத்துத் தொழில் சார்ந்த பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார்.

(ii) இரண்டாவது போட்டி- மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த வேண்டும். தாம் தேர்ந்தெடுத்த திறமைசாலிகளுக்குக் கல்வியுடன் மற்ற கலைகளையும் சேர்த்துக் கற்றுக் கொடுக்க ஏற்பாடுகளைச் செய்தார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 7.3 தலைமைப் பண்பு

(iii) மூன்றாவது போட்டி – மக்களிடம் பரிவு காட்ட வேண்டும்.
அவர் சென்ற வழியில் மூதாட்டி ஒருவர் மரத்தடியில் படுத்திருந்தார். பூவண்ண ன், அந்த வயதான மூதாட்டியின் அருகில் சென்று, “என்ன வேண்டும்” என்று கேட்டு அம்மூதாட்டியைத் தூக்கி உட்கார வைத்து, அம்மூதாட்டியின் களைப்பைப் போக்க உணவும் வாங்கிக் கொடுத்தார்.