Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 9.4 மரபுத்தொடர்கள் Text Book Back Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 9.4 மரபுத்தொடர்கள்
மதிப்பீடு
வினாக்களுக்கு விடையளிக்க.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. கீழ்க்காணும் தொடர்களில் ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நாங்கள் …………………… உழவுத்தொழில் செய்து வருகிறோம். (வாழையடி வாழையாக/விடிவெள்ளியாக)
Answer:
வாழையடி வாழையாக
2. அவனுக்கு நடைமுறை அறிவு எதுவும் கிடையாது. அவன் ஒரு…. (அவரசக்குடுக்கை /புத்தகப்பூச்சி) –
Answer:
புத்தகப்பூச்சி
3. பாரதிதாசன் கவிதை உலகில் …………………ப் பறந்தார். (பற்றுக்கோடாக/கொடி கட்டி)
Answer:
கொடி கட்டி
ஆ. பொருத்துக
1. கயிறு திரித்தல் – பொய் அழுகை
2. ஓலை கிழிந்தது – விடாப்பிடி
3. முதலைக் கண்ணீ ர் – இல்லாததைச் சொல்லல்
4. குரங்குப்பிடி – மறைந்து போதல்
5. நீர் மேல் எழுத்து – வேலை போய்விட்டது
Answer:
1. கயிறு திரித்தல் – இல்லாததைச் சொல்லல்
2. ஓலை கிழிந்தது – வேலை போய்விட்டது
3. முதலைக் கண்ணீ ர் – பொய் அழுகை
4. குரங்குப்பிடி – விடாப்பிடி
5. நீர் மேல் எழுத்து – மறைந்து போதல்
இ. காலை வாரிவிடுகிறது – இம்மரபுத்தொடர், கீழ்க்காணும் எந்தத் தொடருக்குப் பொருத்தமாக அமையும்?
1. காலம் பொன் போன்றது. இருந்தாலும் நம்மைக் ………….
2. காலை எழுந்தவுடன் தூக்கம், நம்மைத் ……………
3. மறதி நம்மை அடிக்கடி …………
4. இளமைக்காலம் நம்மை அடிக்கடி.
Answer:
3. மறதி நம்மை அடிக்கடி காலை வாரிவிடுகிறது.
ஈ. மலையேறி விட்டது – இம்மரபுத்தொடர் குறிக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
1. மாயச் செயல்
2. கதை விடுதல்
3. மாற்றம் பெறுதல்
4. பயனில்லாது இருத்தல்
Answer:
3. மாற்றம் பெறுதல்
உ. வினாக்களுக்கு விடையளிக்க.
Question 1.
மரபுத்தொடர் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.
Answer:
- இணைமொழிகள் போன்று கருத்தாழமும் நடையழகும் கொண்ட தொடர்கள் மரபாக தொன்று தொட்டு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வருவது மரபுத்தொடர் எனப்படும்.
- எ.கா. கானல் நீர்
Question 2.
பின்வரும் மரபுத்தொடர்களைக் கொண்டு தொடரமைத்து எழுதுக.
Answer:
அ) தோலிருக்கச் சுளை விழுங்கி
தோலிருக்கச் சுளை விழுங்கியது போல் அத்தனை உப்புக்களையும் கபளீகரம் செய்திருக்கிறது இந்த பேயாறு.
ஆ) மதில் மேல் பூனை
கண்ணன் மதில் மேல் பூனை போல் படிப்பில் ஒரு நிலையில்லாமல் இருந்தான்.
கற்பவை கற்றபின்
Question 1.
மரபுத்தொடர்களின் பொருளை அறிந்துகொள்க முயல்க.
Answer:
மரபுத்தொடர்களின் பொருள் :
Question 2.
அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் பேச்சில் காணப்படும் மரபுத்தொடர்களைத் தொகுத்து வருக.
Answer:
Question 3.
மரபுத்தொடர்களைப் பயன்படுத்தி தொடர்கள் எழுதுக.
Answer:
- அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பதற்கு என்று சொன்ன காலம் மலையேறிவிட்டது.
- திருமணம் நிகழ்வதைப் பெரியோர் ஆயிரங்காலத்துப் பயிராகக் கருதுவர்.
- அரசியல்வாதிகளின் வாக்குறுதி ஆகாயத்தாமரை போல் உள்ளது.
- கந்தன் எடுத்ததெற்கெல்லாம் முதலைக்கண்ணீர் வடிப்பான்.
- என் தங்கையின் செயல் எல்லாமே அவலை நினைத்து உரலை இடிப்பது போல இருக்கும்.
மொழியை ஆள்வோம்
பேசுதல்
Question 1.
உனது வாழ்வின் உயர்வுக்கு எந்தெந்தப் பண்புகள் உதவியாக இருக்கும்? கலந்துரையாடுக.
Answer:
மாணவன்-1 : வணக்கம்! நான் வாழ்வில் உயர்வதற்கு என்னென்ன பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று என் அப்பாவிடம் கேட்டேன்.
மாணவன்-2 : அப்படியா? என்னவென்று கூறேன். அனைவரும் அறிந்து கொள்ளலாம். மாணவன்-1 : முதல் பண்பு ஒழுக்கத்துடன் இருத்தல் வேண்டும்.
மாணவன்-2 : ஒழுக்கம் என்றால் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்?
மாணவன்-1 : பள்ளி மாணவர்களாகிய நமக்குத் தேவையான ஒழுக்கம்.
1. பள்ளிக்கு நேரத்துடன் செல்லல்.
2. ஒழுங்கான சீருடையுடன் பள்ளிக்குச் செல்லல்.
3. வாரம் ஒருமுறை நகம் வெட்டுதல்.
4. மாதம் ஒருமுறை தலைமுடியை வெட்டுதல்.
5. அன்றாட வீட்டுப் பாடங்களை எழுதுதல்.
மாணவன்-2 : இவையெல்லாம் நாம் கடைப்பிடிப்பதுதான்.
மாணவன்-1 : சரியாகச் சொன்னாய். இவற்றுடன் பெற்றோரை மதித்தல், பெற்றோர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடத்தல், அனைவரிடமும் அன்புடன் பழகுதல் ஆகியவையும் நற்பண்புகளாகும்.
மாணவன்-2 : அன்புடன் பழகுதல் மற்றும் அதனுடன் பணிவுடன் திகழ்தல் போன்றவையும் நற்பண்புகள்தான்.
மாணவன்-1 : ஆம்! மற்றவர்களைப் புண்படுத்தும்படிப் பேசக்கூடாது. பிறருடைய எண்ணங்களுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளித்தல். இந்தப் பணிவு, அன்புடன் பழகுதல், விட்டுக்கொடுத்துப் பழகும் குணம் இவையெல்லாம் பெற்றோரிடம் பாசமுடன் வளரும் குழந்தைகளிடன் இயல்பாகவே அமையும். இப்பண்புகளின் தொகுப்பே ஒழுக்கம் ஆகும்.
மாணவன்-2 : அப்படியா? இனிமேல் நாம் அனைவரும் இந்த நற்பண்புகளைப்
பின்பற்றி வாழ்வோம் என உறுதியேற்போம்.
Question 2.
அன்னை தெரேசாவின் தொண்டுகளைப் பற்றி 5 மணித்துளி பேசுக.
Answer:
அவையோர்க்கு வணக்கம்!
‘அன்னை ‘ என்று இந்திய மக்களால் பெருமையுடன் குறிப்பிடப்படுபவர் தெரேசா. இவர் அயல்நாட்டைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் இந்திய மண்ணையே தனது தாய் மண்ணாக எண்ணி வாழ்ந்து சிறந்தவர்தான் அன்னை தெரேசா.
இவர் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். இவர் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் நாள் யுகோஸ்லாவியா நாட்டில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் ஆக்னஸ் என்பதாகும்.
அன்னை தெரேசா கிறித்துவ மதத்தைப் பரப்பும் எண்ணத்துடன்தான் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். கல்கத்தாவில் ஒரு ஆசிரியையாக தன் பணியினைத் தொடங்கினார். கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமாக மனம் கலங்கச் செய்தது. பஞ்சம் ஒரு புறம் இந்து – முஸ்லிம் வன்முறை மற்றொரு புறம். இதனால் தெரேசா மிகவும் மனம் வருந்தினார்.
1948 ஆம் ஆண்டு தனது சேவையை ஆரம்பித்தார். நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமையினைப் பெற்றுக் கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்தார்.
ஆதரவற்றோர் மற்றும் பசியினால் வாடுவோரின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அதனைத்தொடர்ந்து பிறர் அன்பின்பணியாளர் சபையைத் தொடங்கினார். உண்ண உணவற்றவர்கள், வீடற்றவர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களைக் கவனித்தல் போன்ற பணிகளைச் செய்வதனைக் குறிக்கோளாய்க் கொண்டார்.
1952 இல் கொல்கத்தா நகரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை தெரேசா இறப்பின் வாயிலிருப்போருக்கு முதல் இல்லத்தை ஏற்படுத்தினார். இந்திய அதிகாரிகளின் துணை கொண்டு அவர் புழக்கமற்ற ஒரு இந்துக் கோயிலை ஏழைகளுக்கான நல்வாழ்வு மையமாக மாற்றினார். இவ்வில்லத்திற்குக் கொண்டு வரப்படுபவர்களுக்கு அவரவர் சமயத்திற்கேற்ப நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார்.
இவருக்கு இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் அவருடைய சேவைகளுக்காகப் பொருளுதவி செய்து மகிழ்ந்தன.
அன்பிற்கோர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த அன்னை தெரேசாவின் வாழ்க்கையை நினைவில் வைப்போம். நம்மால் இயன்றதொண்டினைச்செய்வோம். வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
எழுதுதல்
Question 1.
சொல்லக் கேட்டு எழுதுக.
Answer:
1. பெண்ணின் பெருமையைப் பாடியவர் பாரதிதாசன்.
பாரதிதாசன் பெயரால் விருது வழங்கப்படுகிறது. கவிஞர் வாணிதாசன் புதுச்சேரியைச் சேர்ந்தவர்.
வானம் வசப்படும் என்ற நூலை எழுதியவர், பிரபஞ்சன்.
Question 2.
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. பொறுமை – ………………………….
2. நூல்கள் – ………………………….
3. தமிழ்மொழி – ………………………….
4. அன்பு – ………………………….
5. கவிஞர் – ………………………….
Answer:
1. பொறுமை – நிலத்தைப் போல் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.
2. நூல்கள் – நூலகத்தில் பல துறை நூல்கள் பெருகி இருக்கும்.
3. தமிழ்மொழி – நம் தமிழ்மொழி மிகவும் தொன்மையானது.
4. அன்பு – எல்லோரிடமும் அன்புடன் பழகுதல் வேண்டும்.
5. கவிஞர் – இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் பாரதியார் பெரும்புகழ் பெற்றவர்.
Question 3.
பொருத்துக
பாரதியார் – என் தமிழ் இயக்கம்
பாரதிதாசன் – கொடி முல்லை
வாணிதாசன் – குயில் பாட்டு
திருமுருகன் – வானம் வசப்படும்
பிரபஞ்சன் – தமிழியக்கம்
Answer:
1. பாரதியார் – குயில் பாட்டு
2. பாரதிதாசன் – தமிழியக்கம்
3. வாணிதாசன் – கொடி முல்லை
4. திருமுருகன் – என் தமிழ் இயக்கம்
5. பிரபஞ்சன் – வானம் வசப்படும்
Question 4.
அண்ணல் காந்தியடிகளின் உள்ளம் கவர்ந்த குஜராத்திய பாடலின் தமிழாக்கம்
தீமை செய்தவர்க்கும் நன்மை செய், எல்லாரும் ஒன்று என்பதைக் கூறும் மனித நேயப் பாடலைப் படித்து உணர்க.
Answer:
உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குக் கைம்மாறாய்
விண்ணமுதைப்போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய்!
அன்போடு கும்பிட்டால் அடிபணிந்து நீ தொழுவாய்!
செம்பான காசுக்குச் செம்பொன்னைத் தந்திடுவாய்!
உயிர்காத்தோன் துன்பத்தை உயிர்கொடுத்து நீ துடைப்பாய்!
செயலாலும் சொல்லாலும் சிந்தையினாலும் பெரியோர்
சின்னஞ்சிறு உதவி செய்தவர்க்கு எந்நாளும்
ஒன்றுக்குப் பத்தாய் உவந்து செய்வர் பேருதவி!
வையத்தார் எல்லாரும் ஒன்றெனவே மாண்புடையோர்
ஐயப்பாடின்றி அறிந்திருக்கும் காரணத்தால்
இன்னா செய்தாரை ஒறுக்க அவர் நாண
நன்னயம் செய்துவிடுவர் இந்த நானிலத்தே!
Question 5.
ஆம் வகுப்பு பிறமொழிச் சொற்கள் கலவாமல் எழுதுக.
அழகன், பிரெண்ட்ஸோடு கிரவுண்டுக்குச் சென்றான். அங்கு அனைவருடனும் ஜாலியாகக் கிரிக்கெட் விளையாடினான். அதனால், அவன் மிகவும் டையர்டாக இருந்தான்.
Answer:
அழகன், நண்பர்களுடன் திடலுக்குச் சென்றான். அங்கு அனைவருடனும் மகிழ்ச்சியாகக் மட்டைப்பந்து விளையாடினான். அதனால், அவன் மிகவும் சோர்வாக இருந்தான்.
Question 6.
பாடலை நிறைவு செய்க.
im 7
Answer:
Question 7.
பின்வரும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
Answer:
வினாக்கள் :
Question 1.
நீங்கள் மேலே படித்தது என்ன?
அ) பாடல்
ஆ) கதை
இ) விளம்பரம்
Answer:
இ) விளம்பரம்
Question 2.
பயிற்சி அளிக்கப்படும் விளையாட்டு எது?
அ) மட்டைப்பந்து
ஆ) கபடி
இ) சதுரங்கம்
Answer:
ஆ) கபடி
Question 3.
மாணவர்களுக்கு எத்தனை மணி நேரம் பயிற்சி வழங்கப்படுகிறது?
அ) 1 மணி
ஆ) 2 மணி
இ) 3 மணி
Answer:
இ) 3 மணி
Question 4.
மைதானம் – இந்தச் சொல்லுக்குரிய பொருள் எது?
அ) பூங்கா
ஆ) அரங்கம்
இ) திடல்
Answer:
இ) திடல்
Question 5.
விளம்பரத்திலிருந்து நீங்கள் புரிந்து கொண்டது என்ன?
அ) கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது.
ஆ) கபடி விளையாட்டில் மாணவர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.
இ) கபடி விளையாட்டு நடைபெறுமிடம் பெரியார் விளையாட்டு மைதானம்.
Answer:
அ) கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது
மொழியோடு விளையாடு
1. குறுக்கெழுத்து புதிர்
இடமிருந்து வலம்
1. இவர் எட்டயபுரத்துக் கவிஞர்
Answer:
பாரதியார்
2. இது வெண்ணிறப் பறவை.
Answer:
புறா
3. தூக்கத்தில் வருவது.
Answer:
கனவு
கீழிருந்து மேல்
1. புத்தகத்தைக் குறிக்கும் சொல்
Answer:
நூல்
வலமிருந்து இடம்
1. பாராட்டி வழங்கப்படுவது
Answer:
விருது
2. மக்கள் பேசுவதற்கு உதவுவது
Answer:
மொழி
3. சுதந்திரத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல்
Answer:
விடுதலை
குறுக்கும் நெடுக்குமாக
Question 1.
முத்தமிழுள் ஒன்று
Answer:
நாடகம்
Question 2.
குறிப்புகள் கொண்டு விடை எழுதுக.
1. தலைகீழாய் என் வீடு. -………………………………..
2. என் பார்வை கூர்நோக்கு. – ………………………………..
3. நானும் ஒரு தையல்காரி. – ………………………………..
4. வருமீன் வரும்வரை காத்திருப்பேன். – ………………………………..
5. எனக்கு வீடு கட்டத் தெரியாது. – ………………………………..
Answer:
1. தலைகீழாய் என் வீடு. – தூக்கணாங்குருவி
2. என் பார்வை கூர்நோக்கு. – கழுகு
3. நானும் ஒரு தையல்காரி. – சிட்டுக்குருவி
4. வருமீன் வரும்வரை காத்திருப்பேன். – கொக்கு
5. எனக்கு வீடு கட்டத் தெரியாது. – குயில்
3. சொல்லிருந்து புதிய சொல்
1. பாரதியார் . – ……………………, ……………………, ……………………, ……………………
2. மணிக்கொடி – ……………………, ……………………, ……………………, ……………………
3. பாவேந்தர் – ……………………, ……………………, ……………………, ……………………
4. நாடகம் – ……………………, ……………………, ……………………, ……………………
5. விடுதலை – ……………………, ……………………, ……………………, ……………………
Answer:
1. பாரதியார் – பா, ரதி, யார், பார், பாதி
2. மணிக்கொடி – மணி, கொடி, மடி
3. பாவேந்தர் – பா, வேந்தர், வேர், பார்
4. நாடகம் – நா, நாம், நாகம், கடம்
5. விடுதலை – விடு, தலை, விலை, தடு
4. சொற்களைக் கொண்டு புதிய தொடர் உருவாக்குக.
எ.கா. உண்மை – நாம் எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும்.
1. பெருமை – ……………………
2. பாடல் – ……………………
3. நாடகம் – ……………………
4. தோட்டம் – ……………………
5. பரிசு – ……………………
Answer:
1. பெருமை – நாம், பிறர் பெருமைப்படும் செயல்களைச் செய்ய வேண்டும்.
2. பாடல் – திருவிழாக்கள் என்றாலே மக்கள் ஆடல் பாடல் என்று
மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
3. நாடகம் – தொலைக்காட்சியில் வரும் நாடகங்களைப் பார்த்து நேரத்தை
வீணாக்கக்கூடாது.
4. தோட்டம் – கந்தன் அவன் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்துள்ளான்.
5. பரிசு – கோகிலா பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றாள்.
5. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடரமைக்க.
Question 1.
பெருமை பாரதிதாசன் தமிழுக்குச் சேர்த்துள்ளார்.
Answer:
பாரதிதாசன் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
Question 2.
பறவை அழகான புறா
Answer:
புறா அழகான பறவை.
Question 3.
தமிழ் உண்டாகிறது மேல் ஆர்வம்.
Answer:
தமிழ் மேல் ஆர்வம் உண்டாகிறது.
Question 4.
போற்றும் உலகம் எழுத்தாளர் உயர்ந்த
Answer:
உலகம் போற்றும் உயர்ந்த எழுத்தாளர்.
அறிந்து கொள்வோம்
மனிதநேயம்
அன்பென்று கொட்டு முரசே
மக்கள் மக்கள் அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்
நிற்க அதற்குத் தக
1. உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவேன்.
2. நல்ல நல்ல நூல்களைத் தேடிப் படிப்பேன்.
3, மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.
செயல் திட்டம்
தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய கவிஞர்களுள் ஐவரின் படத்தை ஒட்டி, ஒவ்வொருவரையும் பற்றி 5 வரிகள் எழுதி வருக.
Answer:
1. மகாகவி பாரதியார் :
- பெற்றோர் – சின்னசாமி அய்யர் – லட்சுமி அம்மாள்.
- சிறுவயதிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்றதால் ‘பாரதி’ என்ற பட்டத்தைப் பெற்றவர்.
- தமது கவிதைகள் மூலம் தமிழ் மக்களுக்குத் தமிழ்ப்பற்றையும், தேசபக்தியையும் ஊட்டி வளர்த்தவர் பாரதியார்.
- சென்னையில் ‘இந்தியா’ என்ற வார இதழைத் தொடங்கியவர்.
- பாரதியார் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
- நிவேதிதா தேவியைத் தமது ஞானகுருவாக ஏற்றுக் கொண்டவர். ‘தேசிய கவி’, ‘மகாகவி’ எனப் பாராட்டப்பட்டவர்.
2. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் :
- பெற்றோர் – கனகசபை – மகாலட்சுமி.
- தமிழைத் தனது உயிராய்க் கொண்டு வாழ்ந்து, தனது புரட்சிக் கவிதைளால் தமிழில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர்.
- பாரதியார் மீது கொண்ட பற்றினால் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டவர்.
- இருண்ட வீடு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
- புரட்சிக் கவிஞர், புதுமை கவிஞர், பாவேந்தர் என்றெல்லாம் போற்றப்பட்டார்.
3. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை :
- பெற்றோர் – வெங்கட்ராமன் – அம்மணி அம்மாள்.
- தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்.
- இவர் ஓவியம் வரைவதில் வல்லவர். 1912ஆம் ஆண்டு 5 ஆம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி டெல்லியில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இவரது ஓவியம் இடம் பெற்றுத் தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.
- நாடகங்களுக்குப் பாட்டு எழுதிக் கொடுப்பார்.
- காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். உப்புச் சத்தியாகிரகத்தின்போது வழிநடைப் பாடலாகக் ‘கத்தியின்றி ரத்தமின்றி’ பாடலைப் பாடிப் புகழ் பெற்றவர்.
- ‘என் கதை’ என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதியுள்ளார்.
- மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், கம்பனும் வால்மீகியும், திருக்குறளும் பரிமேலழகரும் ஆகிய நூல்கள் இவரது படைப்புகளுள் சில.
4. ஈரோடு தமிழன்பன் :
- பெற்றோர் – செ.இரா. நடராசன், வள்ளியம்மாள்.
- சிறந்த கவிஞராகவும், தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதிலும் முத்திரை பதித்தவர்.
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் பழகியவர்.
- அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து, இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.
- “வசந்தத்தில் ஒரு வானவில்” என்ற படத்திற்குக் கதை எழுதினார். 1983ல் ரோம் நகரில் நடந்த சர்வதேசப் படவிழாவில் இப்படம் பரிசு பெற்றது. இவருடைய நூல்களில் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
5. உவமைக் கவிஞர் சுரதா ;
- பெற்றோர் – திருவேங்கடம் – செண்பகம்.
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பரம்பரையில் வந்தவர் முதுபெரும் கவிஞர் சுரதா.
- பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக் கொண்டார். இதன் சுருக்கமே சுரதா என்றானது.
- ‘காவியம்’ என்ற கவிதை வார இதழைத் தொடங்கி நடத்தியவர். கவிதைக்காகவே தொடங்கப்பட்ட முதல் வார இதழ் ஆகும்.
- இவருடைய ‘தேன்மழை’ என்ற கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது. கலைமாமணி பட்டம் பெற்றவர். 1987-ல் தமிழக அரசு ஏற்படுத்திய பாரதிதாசன் விருதை முதன்முதலாகப் பெற்றவர் இவரே. ‘மூத்த தமிழறிஞர்’ என்ற விருதை 2000 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார்.