Students can Download 6th Tamil Chapter 2.2 காணி நிலம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.2 காணி நிலம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 காணி நிலம்
Question 1.
பாடலை ஓசைநயத்துடன் படித்து மகிழ்க.
Answer:
காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும் – அங்குத்
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்குக்
கேணி அருகினிலே – தென்னைமரம்
கீற்றும் இளநீரும்
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர் போலே – நிலாவொளி
முன்பு வரவேணும் – அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதில் படவேணும் – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாய் இளம்
தென்றல் வரவேணும். – பாரதியார்

Question 2.
காணி என்பது நில அளவைக் குறிக்கும் சொல். இதுபோல நிலத்தை அளக்கப் பயன்படும் சொற்களைப் பட்டியலிடுக.
Answer:
நிலத்தை அளக்கப் பயன்படும் சொற்கள் : சென்ட், ஏக்கர், ஹெக்டேர், ஏர்ஸ், மர, குழி, வேலி.

Question 3.
என் கனவு இல்லம் என்னும் தலைப்பில் பேசுக.
Answer:
(i) ஒரு ஏக்கர் அளவில் இடம் வேண்டும். அங்கு மிகவும் அழகான ஒரு மாளிகை கட்ட வேண்டும். ஒவ்வொரு தூண்களும் மிகவும் அழகாக இருக்க வேண்டும்,
தூய்மையான நிறமுடைய மாடங்களையும் கொண்டிருக்க வேண்டும்.

(ii) நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும்.

(iii) மனிதனுக்குப் பயன் தரும் பல பழ மரங்களும், மூலிகைத் தாவரங்களும் இருக்க வேண்டும். காலையில் எழுந்ததும் சூரியனைப் பார்க்கும்படி வாசற்படி இருக்க வேண்டும். அங்கே முத்துபோன்ற நிலவொளி வீச வேண்டும்.

(iv) காதுக்கு இனிய குயிலோசையும். மற்ற பறவைகளின் ஓசையும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
(v) மிக அழகாக மின்னும்படி மாளிகை போல் இருக்க வேண்டும். இதுவே என் கனவு இல்லமாகும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
‘கிணறு’ என்பதைக் குறிக்கும் சொல் ………..
அ) ஏரி
ஆ) கேணி
இ) குளம்
ஈ) ஆறு
Answer:
ஆ) கேணி

Question 2.
‘சித்தம்’ என்பதன் பொருள் . ………..
அ) உள்ளம்
ஆ) மணம்
இ) குணம்
ஈ) வனம்
Answer:
அ) உள்ளம்

Question 3.
மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ………….
அ) அடுக்குகள்
ஆ) கூரை
இ) சாளரம்
ஈ) வாயில்
Answer:
அ) அடுக்குகள்

Question 4.
நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) நன் + மாடங்கள்
ஆ) நற் + மாடங்கள்
இ) நன்மை + மாடங்கள்
ஈ) நல் + மாடங்கள்
Answer:
இ) நன்மை + மாடங்கள்

Question 5.
நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) நிலம் + இடையே
ஆ) நிலத்தின் + இடையே
இ) நிலத்து + இடையே
ஈ) நிலத் + திடையே
Answer:
ஆ) நிலத்தின் + இடையே

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 காணி நிலம்

Question 6.
முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) முத்துசுடர்
ஆ) முச்சுடர்
இ) முத்துடர்
ஈ) முத்துச்சுடர்
Answer:
ஈ) முத்துச்சுடர்

Question 7.
நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) நிலாஒளி
ஆ) நிலஒளி
இ) நிலாவொளி
ஈ) நிலவுஒளி
Answer:
இ) நிலாவொளி

பொருத்துக

1. முத்துச்சுடர்போல – மாடங்கள்
2. தூய நிறத்தில் – மாடங்கள்
3. சித்தம் மகிழ்ந்திட – நிலாஒளி
விடை :
1. முத்துச்சுடர்போல – நிலாஒளி
2. தூய நிறத்தில் – தென்றல்
3. சித்தம் மகிழ்ந்திட – தென்றல்

நயம் அறிக

Question 1.
காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
காணி – ட்டி
த்தும் – காதில்
கேணி – கீற்று
த்து – க்கத்திலே
முத்துச்சுடர் – முன்பு

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 காணி நிலம்

Question 2.
காணி நிலம் பாடலில் இடம்பெற்ற எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
காணி – கேணி – தூணில்
தென்றல் – முன்பு
முத்து – கத்து
சித்தம் – பத்து

குறுவினா

Question 1.
காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?
Answer:
பாரதியார் விரும்பும் மாளிகை :
(i) அழகான தூண்களையும், தூய்மையான நிறமுடைய மாடங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
(ii) அங்கே நல்ல நீரையுடைய கிணறு இருக்க வேண்டும்.
(iii) அதனருகில் இளநீரையும், கீற்றுகளையும் தரும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள் இருக்க வேண்டும் என்று பாரதியார் விரும்புகிறார்.

Question 2.
பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.
Answer:
இயற்கையின் மீது அதிக விருப்பம் கொண்டு தன்னுடைய மாளிகையின் அருகில் கிணற்றையும், அதனருகில் இளந்தென்றல் விழக்கூடிய பத்துப் பன்னிரெண்டு தென்னை மரங்ளையும் வளர்க்க வேண்டும் எனவும், முத்துச்சுடர் போல நிலாவொளி வீசவேண்டும் எனவும், குயில்களின் குரலோசைகளைக் கேட்கவேண்டும் எனவும், பாரதியார் பெரிதும் விரும்புகிறார்.

சிந்தனை வினா

Question 1.
பாரதியார் வீட்டின் அருகில் தென்னை மரங்கள் வேண்டும் என்கிறார். நீங்கள் எந்தெந்த மரங்களை வளர்ப்பீர்கள் என எழுதுக.
Answer:
எங்கள் வீட்டில் கொய்யாமரம், மாமரம், வாழைமரம், பலாமரம், வேப்பமரம், தேக்கு, பூவரசு மரங்களை வளர்ப்பேன். மேலும் நிறைய பூச்செடிகள் வளர்ப்பேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 காணி நிலம்

நூல் வெளி
இப்பாடல் பாரதியார் கவிதைகள் தொகுப்பில் காணி நிலம்’ என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

பொருளுரை
காணி அளவு நிலம் வேண்டும். அந்நிலத்தில் ஒரு மாளிகை கட்டித் தர வேண்டும். அது அழகான தூண்களையும், தூய்மையான நிறமுடைய மாடங்களையும் கொண்டிருக்க வேண்டும். அங்கே நல்ல நீரையுடைய கிணறு இருக்க வேண்டும். அதனருகில் இளநீரையும், கீற்றுகளையும் தரும் பத்து, பன்னிரண்டு தென்னை மரங்களும் வேண்டும்.

அவ்விடத்தில் முத்தின் ஒளிபோல நிலவொளி வீச வேண்டும். காதுக்கு இனிய குயிலின் குரலோசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும்.

விளக்கவுரை
காணி அளவு நிலத்தில், ஒரு பெரிய மாளிகை கட்ட வேண்டும். அந்த மாளிகை மிக அழகான தூண்கள் இருக்கும்படியும், தூய்மையான வெண்மை நிறமுடைய மாடங்களையும் கொண்டிருக்க வேண்டும். அங்கே நல்ல சுவையான நீரையுடைய கிணறு இருக்க வேண்டும். அந்த மாளிகையின் அருகில் குளிர்ச்சியான தென்றல் காற்றை வீசக்கூடிய மரங்களையும் மற்றும் நல்ல இளநீரையும் கீற்றுகளையும் தரும் பத்து பன்னிரண்டு தென்னை மரங்களையும் கொண்டிருக்க வேண்டும்.

அந்த மாளிகையின் அருகில் இரவு நேரத்தில் முத்து போன்ற வெளிச்சத்தைத் தரக்கூடிய நிலவொளி வீச வேண்டும். காதுக்கு இனிமையான குயில்களின் குரலோசை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும். குளிர்ந்த இளந்தென்றல் தவழ வேண்டும் எனப் பாரதியார் கூறுகிறார்.

சொல்லும் பொருளும்
1. காணி – நில அளவைக் குறிக்கும் சொல்
2. மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்
3. சித்தம் – உள்ளம்

Leave a Reply