Students can Download 6th Tamil Chapter 2.4 கிழவனும் கடலும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.4 கிழவனும் கடலும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.4 கிழவனும் கடலும்

Question 1.
கடல் காட்சி ஒன்றைப் படம் வரைந்து வண்ணம் தீட்டுக. அப்படத்திற்குப் பொருத்தமாக நான்கு வரிகளுக்குள் குறிப்பு எழுதுக.
Answer:
மாணவர்கள் கடல் காட்சி ஒன்றைப் படம் வரைந்து வண்ணம் தீட்டுதல்.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.4 கிழவனும் கடலும் 1
படத்திற்கு பொருத்தமான தலைப்பு : கடல் வாழ் உயிரினங்கள்.
குறிப்பு : கடல் அலை – நண்டுகள் – மணல்வீடு – கடற்கரை மணல் – சூரியன் மறைதல்.

Question 2.
இக்கதையின் வழியாக நீங்கள் உணர்ந்தவற்றை வகுப்பில் பகிர்க.
Answer:
(i) முயற்சி செய்வதற்கு வயது வேறுபாடு இல்லை. எவ்வயதினராக இருந்தாலும் விடா முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்பதை இக்கதை மூலம் உணரலாம்.

(ii) எண்பத்து நான்கு நாட்கள் கிழவர் தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடிக்காமல் வந்தார். எண்பத்தைந்தாவது நாள் ஒரு பெரிய மீன் கிடைத்தது. அதனையும் எளிதில் அவரால் பிடிக்க இயலவில்லை. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்புதான் அதனையும் பிடிக்க முடிந்தது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.4 கிழவனும் கடலும்

(iii) அந்த மீனையும் அவரால் முழுமையாக காப்பாற்ற முடியவில்லை சுறாமீன்களுக்கு இரையாக்கிவிட்டு தலையும் எலும்பும்தான் மிஞ்சியது. இவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும் மனம் தளராமல் இருந்தார்.

(iv) இனிமேல் தன்னைப் பழித்துப் பேசமுடியாது என்று கூறினார். முயற்சி செய்து பயன் கிடைக்கவில்லை என்றாலும் உலகம் குறை கூறாது. ஆனால் முயற்சியே செய்யாமல் இருந்தால் பழிச் சொற்களைக் கேட்கும்படியதான சூழல் உண்டாகும்.

Question 3.
சாண்டியாகோ குறித்து உங்கள் கருத்து யாது?
Answer:
(i) சாண்டிய கோவயதில் முதிர்ந்தவர். பல நாட்கள் மீன்பிடிக்கச்சென்று மீன் கிடைக்காமல் கரையை அடைந்தவர். ஆனால் எண்பத்தைந்தாவது நாளில் ஒரு பெரிய மீன் கிடைக்கிறது. பலமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அதனைப் பிடிக்கிறார். அதையும் சுறாமீன்களிடமிருந்து காப்பாற்ற முடியாமல் தலையும் எலும்பும் மட்டுமே எஞ்சியது.

(ii) இவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டும் தன்னை யாரும் பழித்துப் பேசக்கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தார். தன்மானம் மிக்கவராகத் திகழ்ந்தார்.
(iii) சாண்டியாகோ விடா முயற்சியும், ஊக்கமும் ஒருங்கே பெற்றவர். தன்மானம்மிக்கவர்.

மதிப்பீடு

Question 1.
கிழவனும் கடலும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் கதையாக எழுதுக.
Answer:
சாண்டியாகோ என்பவர் வயது முதிர்ந்த மீனவர். அவர் கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல், திரும்ப மாட்டார். ஆனால் கடந்த எண்பத்து நான்கு நாள்களாக அவருக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை . மனோலின் என்னும் சிறுவன் மீன் பிடிக்கக் கற்றுக் கொள்வதற்காக முதல் நாற்பது நாள்களும் அவருடன் கடலுக்கு வந்தான்.

அவன் அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு பேச்சுத் துணையாகவும் இருந்தான். அவரோடு கடலுக்குச் சென்றால் ஒரு மீனும் கிடைப்பதில்லை என்று அவனை அவனது பெற்றோர் வேறு படகிற்கு அனுப்பிவிட்டனர். அதிலிருந்து சாண்டியாகோ தனியாகவே மீன் பிடிக்கச் செல்கிறார்.

எண்பத்தைந்தாவது நாள் தனக்கு மீன்கள் கிடைக்கவே கிடைக்காது என்று எல்லோரும் சொல்கிறார்கள். அதை எப்படியாவது மாற்றிக் காட்ட வேண்டும் என எண்ணியபடி கடலில் தூண்டிலைப் போட்டுவிட்டுக் காத்துக் கொண்டிருந்தார். தூண்டிலில் சூரைமீனை மாட்டி வைத்திருந்தார். இரவு முழுவதும் காத்திருந்தார். மறுநாள் காலையிலும் மீன் இல்லாமல் திரும்பப் போவதில்லை என்ற முடிவுடன் இருந்தார்.

மதிய வேளையில் தூண்டில் கயிற்றை ஏதோ இழுப்பது போல் தெரிந்தது. மீன்தான் வந்திருக்கும் என நினைத்து மகிழ்ந்தார். தூண்டலில் சிக்கிய தூண்டிலை மீன் வேகமாக இழுத்தது. சாண்டியாகோவும் விடாமல் இழுக்கிறார். மீனோ சாண்டியாகோவைக் கடலுக்குள் இழுத்துத் தள்ளிவிடுவது போல் இழுத்தது. இப்படியாக நாலுமணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு களைத்துப் போய் சற்று கண்ணயர்ந்து விட்டார் சாண்டியாகோ.

மீன் மீண்டும் தூண்டிலை இழுத்தபோது சாண்டியாகோவின் உறக்கம் கலைந்தது. மீண்டும் சுறுசுறுப்பாக தூண்டிலை இழுத்தார். நீண்ட நேரம் போராடி ஒருவழியாக மீனைப் பிடிக்க முடியாமல் அதனை ஈட்டியில் குத்திக் கொன்று விடுகிறார். பிறகு பெரிய மீனாக இருந்ததனால் படகுக்குள் போட இயலாமல் படகின் பக்கவாட்டில் இழுத்துக் கட்டினார். தன்னுடைய விடாமுயற்சியின் பயனை உணர்ந்தார். படகைக் கரையை நோக்கிச் செலுத்தினார். அப்போது சுறாமீன்கள் இவர் படகில் கட்டி வைக்க மீனைச் சாப்பிடுவதற்காகச் சூழ்ந்தன. அவற்றைத் தன் ஈட்டியால் வீழ்த்தினார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.4 கிழவனும் கடலும்

ஒரு வழியாகக் கரை சேர்ந்தார். இன்று நடந்த எல்லாவற்றையும் மனோலினுக்குச் சொல்ல வேண்டும் என்று எண்ணியபடி படகை இழுத்துக் கட்டினார். பிறகு படகோடு கட்டிய மீனைப் பார்த்தார். அது சுறாமீன்களால் உண்ணப்பட்டு அதன் தலையும் எலும்பும் தாம் மிஞ்சியிருந்தன.

சாண்டியாகோவைப் பார்க்க மனோலின் வந்தார். “அடேயப்பா! எவ்வளவு பெரிய மீன் அது! மீன் பிடிப்பதில் பெரிய வீரன் தாத்தா நீ!” என்றான் மனோலின். கிழவர் “நான் பிடித்த மீனைப் பார்த்தாயா?” கடைசியில் எலும்பும் தலையும்தான் மிச்சம்!” என்றார்.

மனோலின் “அதனால் என்ன தாத்தா? உன் திறமையும் விடாமுயற்சியும் வென்றுவிட்டதே! .9 இனி உன்னை யாரும் பழித்துப் பேச முடியாது தாத்தா! உன்னிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இனி நான் உன்னோடுதான் மீன் பிடிக்க வருவேன்” 9 என்று கூறினான். இக்கதை மூலம் நாம் உணர்வது ‘விடாமுயற்சி வெற்றியைத் தரும்’ என்பதாகும்.
முதல் பருவம்

Leave a Reply