Students can Download 6th Tamil Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்

Question 1.
முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் தொடர்பைப் பற்றி விவாதிக்க.
Answer:
மாணவன் 1 : வணக்கம்! இன்று வகுப்பில் ஆசிரியர் இலக்கணம் கற்பித்ததில் எனக்கு 3 ஓர் ஐயம் உள்ளது. அதனைக் கொஞ்சம் தீர்த்து வைக்க இயலுமா.

மாணவன் 2 : உன்னுடைய ஐயம் என்னவென்று கூறு. என்னால் இயன்றவரை கூறுகிறேன். முதலெழுத்து, சார்பெழுத்து பற்றித்தானே!

மாணவன் 1 : ஆமாம்… ஆமாம்… முதலெழுத்து என்பது முப்பது. அவை உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஆகும்.

மாணவன் 2 : சரிதான். எழுதப்படுவதால் எழுத்து எனக் கூறப்படுகிறது. எழுத்துக்கள் ஒலி வடிவம், வரி வடிவம் என்ற இருவகை வடிவினை உடையன. இதில் வரி வடிவ எழுத்துகளையே நாம் முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகையாகப் பகுத்துக் கூறுகிறோம்.

மாணவன் 1 : முதலெழுத்து எனக் கூறக் காரணம் என்ன?

மாணவன் 2 : இம்முப்பது எழுத்துகள் இல்லாமல் தமிழ்மொழி இல்லை. ஆதலாலும் இவ்வெழுத்துகள் ஏனைய உயிர் மெய்யெழுத்துகள் பிறப்பதற்கு முதன்மையாய் இருப்பதாலும் இவை முதல் எழுத்துகள் எனப்பட்டன.

மாணவன் 1 : சார்பெழுத்து என்பது காரணப் பெயராகும். சார்ந்து வருதலாலே இப்பெயர் பெற்றுள்ளது. எழுத்துகள் ஒலி வடிவில் ஒன்றையொன்று சார்ந்து வருவதால் சார்பெழுத்தாயிற்று. சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்பனவாகும்.

மாணவன் 2 : சரியாகக் கூறியுள்ளாய். மெய்யெழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன. உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும். வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும். இவ்வாறு முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்குகிறது. உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் 216 ஆகும்.

மாணவன் 1 : அடுத்ததாக உள்ள சார்பெழுத்து ஆய்த எழுத்து. இது மூன்று புள்ளிகளை உடையது. தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது. முதல் எழுத்துகளாகிய உயிரையும் மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆயிற்று.

மாணவன் 2 : இதேபோன்று உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக் குறுக்கம் முதலியவை பிற எழுத்துகளின் சார்பினாலேயே ஓசையில் நீண்டும், ஓசையில் குறைந்தும் ஒலிக்கும். ஆதலால் இவை சார்பெழுத்துகள் எனப்பட்டன.

மாணவன் 1 : ஓசையில் நீண்டும், குறைந்தும் என்கிறாயா? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்.

மாணவன் 2 : உயிரளபெடையும் ஒற்றளபெடையும் மாத்திரையளவில் நீண்டு
ஒலிக்கும். (எ.கா.) 1. உயிரளபெடை – தொழாஅர், கெடுப்பதூஉம்
2. ஒற்றளபெடை – கலங்கு.

மாணவன் 1 : ஓசை குறைதல் என்றாயே?

மாணவன் 2 : ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம், மகரக் குறுக்கம் ஆகியவை தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும்.
(எ.கா.) ஐகாரக் குறுக்கம் – தலைவன்
ஔகாரக் குறுக்கம் – ஔவையார்
மகரக்குறுக்கம் – வரும் வண்டி
ஆய்தக் குறுக்கம் – அஃறிணை

இதேபோன்று குற்றியலுகரம், குற்றியலிகரம், இவையிரண்டும் தன் மாத்திரையளவில் குறைந்து ஒலிக்கும்.
(எ.கா.) குற்றியலுகரம் – காது, அஃது, பாக்கு
குற்றியலிகரம் – வீடு + யாது – வீடியாது, கேண்மியா,
சென்மியா.

மாணவன் 1 : முதலெழுத்து, சார்பெழுத்தைப் பற்றி இனிமேல் மறக்கவே முடியாது. அதுபோல நன்கு விளங்கும்படிக் கூறியுள்ளாய் மிக்க நன்றி.

Question 2.
முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொற்களை எழுதுக
(எ.கா.) ஆம்
Answer:
முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொற்கள் :
ஆம்
ஆள், ஆல், ஆண், ஆன், ஆய், ஆர்
உன், உண்,ஊழ், ஊண், ஊன், ஊர்
என், எண், எள், ஏன், ஏர், ஏண், ஏம், ஏல்
ஈர், ஓர்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்

Question 3.
முதல் எழுத்துகள் இடம்பெறாத சொற்களை எழுதுக.
(எ.கா.) குருவி
Answer:
குருவி
கருவி, கனவு, கனி, கதை
மருவி, பணிவு, தனிமை, கவிதை
தருவி, கனிவு, பொதுமறை, பெருமை
தருக, வருக, தீமை, கருமை

மதிப்பீடு

Question 1.
முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Answer:
உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவை முதல் எழுத்துகள் என்று அழைக்கப்படுகிறது.

Question 2.
சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை?
Answer:
சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை.
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலிகரம்
6. குற்றியலுகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஒளகாரக்குறுக்கம்
9 மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்

Question 3.
சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?
Answer:
தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். இது தனித்து இயங்காது. (எ.கா) : அஃது, இஃது

Leave a Reply