Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.6 திருக்குறள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்க.

Question 1.
வாய்மை எனப்படுவது ………………
அ) அன்பாகப்பேசுதல்
ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்
இ) தமிழில் பேசுதல்
ஈ) சத்தமாகப் பேசுதல்
Answer:
ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்

Question 2.
……………. செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
அ) மன்னன்
ஆ) பொறாமை இல்லாதவன்
இ) பொறாமை உள்ளவன்
ஈ) செல்வந்தன்
Answer:
இ) பொறாமை உள்ளவன்

Question 3.
‘பொருட்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………
அ) பொரு + செல்வம்
ஆ) பொருட் + செல்வம்
இ) பொருள் + செல்வம்
ஈ) பொரும் + செல்வம்
Answer:
இ) பொருள் + செல்வம்

Question 4.
‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………….
அ) யா + எனின்
ஆ) யாது + தெனின்
இ) யா + தெனின்
ஈ) யாது + எனின்
Answer:
ஈ) யாது + எனின்

Question 5.
யாது + எனின் என்ற சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……………….
அ) தன்நெஞ்சு
ஆ) தன்னெஞ்சு
இ) தானெஞ்சு
ஈ) தனெஞ்சு
Answer:
ஆ) தன்னெஞ்சு

Question 6.
தீது + உண்டோ என்ற சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………..
அ) தீதுண்டோ
ஆ) தீது உண்டேத்
இ) தீதிண்டோ
ஈ) தீயுண்டோ
Answer:
அ) தீதுண்டோ

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 7.
சிறந்த அரசின் பணிகளை வரிசைப்படுத்துக.
விடை
அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.
ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்
ஈ) பொருள்களைச் சேர்த்தல்.
Answer:
1. ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
2. ஈ) பொருள்களைச் சேர்த்தல்.
3. இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்
4. அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.

குறு வினா

Question 1.
எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும்?
Answer:
ஒருவர் தன் மனம் அறிய பொய்சொல்லக் கூடாது. அவ்வாறு கூறினால் அவர் மனமே அவரைச் சுடும்.

Question 2.
வாழும் நெறி யாது?
Answer:
ஒருவர் தன் மனத்தில் பொறாமை இல்லாது ஒழுக்க நெறியோடு வாழ வேண்டும்.

Question 3.
உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார்?
Answer:
உள்ளத்தில் பொய்யில்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவர்.

கீழ்காணும் சொற்களைக் கொண்டு திருக்குறள் அமைக்க.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 1
Answer:
1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.
2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

பின்வரும் பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் ‘அரிச்சந்திரன்’ நாடகத்தைப் பார்த்தார். அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் ‘பொய் பேசாமை’ என்னும் அறத்தை எத்தகை சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார்.

இந்த நாடகத்தைக் கண்ட காந்தியடிகள் தாமும் பொய் பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். அதனைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள் எல்லார் இதயத்திலும் இடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது.

1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

2. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்
Answer:
3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
முப்பால், பொய்யா மொழி, தெய்வ நூல் போன்ற பிறபெயர்களில் அழைக்கப்படும் நூல்
அ) திருக்குறள்
ஆ) ஏலாதி
இ) திரிகடுகம்
ஈ) ஆசாரக்கோவை
Answer:
அ) திருக்குறள்

Question 2.
திருக்குறளில் அமைந்த மொத்த குறட்பாக்கள்
அ) 133
ஆ) 1330
இ) 70
ஈ) 38
Answer:
ஆ) 1330

Question 3.
திருக்குறள் பகுப்பு
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஒன்பது
ஈ) 133
Answer:
அ) மூன்று

Question 4.
பொருத்துக
1. அழுக்காறு – அ) செல்வம்
2. ஆக்கம் – ஆ) பொறாமை
3. கேடு – இ) பிறர்
4. ஏதிலார் – ஈ) வறுமை

அ) 1- ஆ 2-அ 3-ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4- ஈ
Answer:
அ) 1- ஆ 2-அ 3-ஈ 4-இ

Question 5.
பொருத்துக
1. பூரியார் – அ) இழிந்தவர்
2. வாய்மை – ஆ) சான்றோர்
3. செவ்வியான் – இ) உண்மை
4. தீது – ஈ) குற்றம்
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 6.
தீங்கு தராத சொற்களைச் சொல்லுதல் …………………..
அ) வாய்மை
ஆ) அருள்
இ) அழுக்காறாமை
ஈ) இறைமாட்சி
Answer:
அ) வாய்மை

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒருவர் ……………. பொய் சொல்லக் கூடாது.
2. அவ்விய நெஞ்சத்தான் ………………. செவ்வியான்.
3. தன் குற்றம் காண்பவருடைய வாழ்வில் …………….. இல்லை.
4. சிறந்த செல்வம் ………………
5. தன்னெஞ்சு அறிவது ……………….
Answer:
1. நெஞ்சறிய
2. ஆக்கமும்
3. துன்பம்
4. அருட்செல்வம்
5. பொய்யற்க

குறு வினா:

Question 1.
செவ்வியான் கேடு நினைக்கப்படும் எப்போது?
Answer:
பொறாமை கொண்டவருடைய செல்வம், பொறாமை இல்லாதவருடைய வறுமை சான்றோரால் ஆராயப்படும்.

Question 2.
எப்போது வாழ்வில் துன்பம் இல்லை?
Answer:
பிறருடைய குற்றத்தைக் காண்பது போல தன் குற்றத்தைக் காண்பவருக்குவாழ்வில் துன்பம் இல்லை .

Question 3.
எப்போது புறங் கூறுதல் கூடாது?
Answer:
நேருக்கு நேர் நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால், அவர் இல்லாத போது புறங்கூறல் கூடாது.

Question 4.
அருட்செல்வம் , பொருட்செல்வம் குறித்து வள்ளுவர் கூறுவது?
Answer:
1. செல்வங்களுள் சிறந்தது அருட்செல்வம்
2. பொருட்செல்வம் இழிந்தவரிடத்திலும் உள்ளது.

சிறு வினா

Question 1.
சிறந்த அரசின் செயல்கள் யாவை?
Answer:
1. பொருள் வரும் வழிகளை அறிதல்.
2. பொருள்களைச் சேர்த்தல்.
3. சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்
4. பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.
– ஆகியன சிறந்த அரசின் செயல்கள் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

சொல்லும் பொருளும்

1. அழுக்காறாமை – பொறாமை கொள்ளாமை
2. அழுக்காறு – பொறாமை
3. ஆக்கம் – செல்வம்
4. கேடு – வறுமை
5. ஏதிலார் – பிறர்
6. பூரியார் – இழிந்தவர்
7. வாய்மை – உண்மை
8. செவ்வியான் – சான்றோர்

Leave a Reply