Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

Question 1.
இயற்கைக்காட்சி குறித்து நான்கு வரிகளில் கவிதை எழுதுக.
Answer:
“பூமித் தாயே! பசுமை போர்த்தியவளே!
நீலக் கடலாய் அலங்கரித்தவளே!
கதிரவன் காட்சியில் …. பொன் தகடானவளே!
உன்னரும் வளத்தால் இன்னுயிர்கள் வாழ்கின்றனவே!”

Question 2.
‘தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது’ என்பதை வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
ஆங்கல வழிக்கல்வி படித்தால் மட்டுமே உயர முடியும் என்றெண்ணிக் கொண்டிருப்போரே! கவனியுங்கள். வாழ வந்த ஆங்கிலேயரைக்கூட விரட்டினோம். ஆனால், ஆங்கில மொழியை விரட்டாமல் அதன் மீது மோகம் கொண்டு அதன் வழியில் கற்க அலைகின்றோம். இது எப்படி இருக்கின்றது தெரியுமா?

தன் தாயைப் புறந்தள்ளிவிட்டு, அயலாம் தாயைப் போற்றுவது போலத்தான். எல்லா வளமும் புதைந்துள்ள மொழி நம் தாய்மொழி. அதன் வழியிலேயே நாம் கல்வி பெறுவது சிறப்பு.ஔவையாரும் கம்பரும் சேக்ஸ்பியரும் காந்தியடிகளும் தாகூரும் எப்படிச் சிறந்தனர் தெரியுமா? அனைவரும் அவரவர் தாய்மொழியால் தான் சிறந்தனர். எனவே, சிறந்த நம் தாய்மொழியிலேயே கல்வி பெறுவோம்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ……………..
அ) மயில்
ஆ) குயில்
இ) கிளி
ஈ) அன்னம்
Answer:
அ) மயில்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

Question 2.
பின்வருவனவற்றுள் ‘மலை’யைக் குறிக்கும் சொல
அ) வெற்பு
ஆ) காடு
இ) கழனி
ஈ) புவி
Answer:
அ) வெற்பு

Question 3.
‘ஏடெடுத்தேன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது, ……………….
அ) ஏடே + தேன்
ஆ) ஏட்டு + எடுத்தேன்
இ) ஏடு + எடுத்தேன்
ஈ) ஏ + டெடுத்தேன்
Answer:
இ) ஏடு + எடுத்தேன்

Question 4.
‘துயின்றிருந்தார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) துயின்று + இருந்தார்
ஆ) துயில் + இருந்தார்
இ) துயின்றி + இருந்தார்
ஈ) துயின் + இருந்தார்
Answer:
அ) துயின்று + இருந்தார்

Question 5.
என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது …………….
அ) என்று உரைக்கும்
ஆ) என்றிரைக்கும்
இ) என்றரைக்கும்
ஈ) என்றுரைக்கும்
Answer:
ஈ) என்றுரைக்கும்

பொருத்துக.

1. கழனி – கதிரவன்
2. நிகர் – மேகம்
3. பரிதி – சமம்
4. முகில் – வயல்
Answer:
1. கழனி – வயல்
2. நிகர் – சமம்
3. பரிதி – கதிரவன்
4. முகில் – மேகம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

குறு வினா

Question 1.
பாரதிதாசனின் மனதைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?
Answer:

  1. வானம்
  2. நீரோடை
  3. தாமரை
  4. காடு
  5. வயல்
  6. மேகம்
  7. தென்றல்
  8. மயில்
  9. அன்னம்
  10. கதிரவன்

Question 2.
தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகின்றார்?
Answer:

  1. தமிழ்நாட்டு மக்களின் அறியாமை தூக்கம் களையும்,
  2. வாழ்வில் துன்பங்கள் நீங்கும்,
  3. நஞ்சில் தூய்மை உண்டாகும், வீரம் வரும்.
    – ஆகியவற்றைத் தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகளாகப் பாரதிதாசன் குறிப்பிடுகின்றார்.

சிறு வினா

Question 1.
‘இன்பத்தமிழ்க் கல்வி’ – பாடலின் மையக்கருத்தை நும் சொந்த நடையில் எழுதுக.
Answer:
பாரதிதாசன் கவிதை எழுத ஏட்டினை எடுத்தார். வானம் தன்னைக் கவிதையாக எழுதும்படிக் கூறியது. நீரோடை, தாமரை, காடு, வயல், மேகம் ஆகியன அவரைக் கவர்ந்து தங்களைக் கவிதை எழுதும்படி அவரிடம் வேண்டியது.மயில் போன்ற பெண்கள் அன்பைக் கவிதையாக எழுதும்படிக் கூறினர். தென்றல், மயில், அன்னம், கதிரவன். வீரர்கள் ஆகியனவும் அவரிடம் கவிதை எழுத வேண்டின.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

ஆனால் துன்பத்தில் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். அதனை நீங்க இன்பத்தமிழ்க் கல்வி கற்க வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பம் நீங்கும். மனதில் தூய்மை உண்டாகும். வீரம் வரும்.

சிந்தனை வினா

Question 1.
தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:

  1. எளிதில் பொருள் விளங்கி நன்கு பாடப்புரிதல் ஏற்படும்.
  2. பழந்தமிழ் கலை, பண்பாடு, மரபு ஆகியன காக்கப்படும்.
  3. தொன்மையையும் வரலாற்றையும் நன்கு உணரலாம்.
  4. விழுமிய தமிழ்ச்சிந்தனைகளை அறியலாம்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பாரதிதாசனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்
அ) பாண்டியன் பரிசு
ஆ) அழகின் சிரிப்பு
இ) பிசிராந்தையார்
ஈ) குடும்பவிளக்கு
Answer:
இ) பிசிராந்தையார்

Question 2.
பின்வருவனவற்றுள் கதிரவனை’க் குறிக்கும் சொல்
அ) நிகர்
ஆ) பரிதி
இ) முகில்
ஈ) கழனி
Answer:
ஆ) பரிதி

Question 3.
பின்வருவனவற்றுள்‘மேகம்’ என்பதைக் குறிக்கும் சொல்
அ) நிகர்
ஆ) பரிதி
இ) முகில்
ஈ) கழனி
Answer:
இ) முகில்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

Question 4.
வீரர்களின் தோள்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது
அ) மயில்
ஆ) மேகம்
இ) தாமரை
ஈ) மலை
Answer:
ஈ) மலை

Question 5.
பசுமையான தோகைளை உடையது …………….
அ) தாமரை
ஆ) பெண்கள்
இ) மயில்
ஈ) சோலை
Answer:
இ) மயில்

குறு வினா

Question 1.
என்னைக் கவிதையாக எழுதுக என்று பாரதிதாசனிடம் முதலில் கூறியது எது?
Answer:
வானம், தன்னைக் கவிதையாக எழுதுக என்று பாரதிதாசனிடம் முதலில் கூறியது.

Question 2.
பாரதிதாசனிடம் கவி ஓவியமாகத் தங்களைத் தீட்டுமாறு கூறியவை எவை?
Answer:

  1. நீரோடை
  2. தாமரை மலர்கள்

Question 3.
பெண்கள் எதனைக் கவிதையாக எழுதச் சொன்னனர்?
Answer:
பெண்கள் அன்பினைக் கவிதையாக எழுதச் சொன்னனர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

Question 4.
பாரதிதாசனிடம் வேல் ஏந்திய வீரர்கள் எதனை எழுதுமாறு வேண்டினர்?
Answer:
பாரதிதாசனிடம் வேல் ஏந்திய வீரர்கள் மலை போன்ற தங்களின் தோள்களின் அழகை எழுதுமாறு வேண்டினர்.

Question 5.
பாரதிதாசன் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு.

சிறு வினா

Question 1.
பாரதிதாசன் குறிப்பு வரைக.
Answer:
இயற்பெயர் – சுப்புரத்தினம்
பெற்றோர் – தந்தை – கனகசபை, தாய் – இலக்குமி
பிறப்பு – 1891 ஏப்பிரல் 29ம் நாள், புதுவை
சிறப்புப் பெயர் – பாரதிதாசன், பாவேந்தர், புரட்சிக்கவி.
படைப்புகள் – குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலியன.
பணி – புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியர் பணி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.1 இன்பத்தமிழ்க் கல்வி

சொல்லும் பொருளும்

1. எத்தனிக்கும் – முயலும்
2. வெற்பு – மலை
3. கழனி – வயல்
4. நிகர் – சமம்
5. பரிதி – கதிரவன்
6. அன்னதோர் – அப்படி ஒரு
7. கார்முகில் – மழைமேகம்
8. துயின்றிருந்தார்- உறங்கியிருந்தார்
9. கவி – கவிதை, பாடல்
10. சித்திரம் – ஓவியம்
11. நிகர் – சமம், போல
12.இன்னல் – துன்பம்
13. ஆவி – உயிர்

Leave a Reply