Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 9.1 மலைப்பொழிவு Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 9.1 மலைப்பொழிவு
கற்பவை கற்றபின்
Question 1.
இயேசுவின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு ஒன்றினை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
ஒரு நாள் பெரிய பிரசங்க கூட்டம் ஒன்று நடைபெற்று வந்தது. அங்கு ஒரு சிறுவன் இயேசுவைக் காண வந்தான். அங்கு சுமார் 5000 பேர் இருந்தனர். சிறுவன் 5 ரொட்டி, 2 மீன்கள் கொண்டு வந்தான். அதனை இயேசு ஆசிர்வதிக்க அவை பலவாகப் பெருகி 5000 பேருக்குக் கொடுக்கப்பட்டு மீதம் 12 கூடைகள் இருந்தன.
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மனித வாழ்க்கையில் தேவைப்படுவது ………………..
அ) பணம்
ஆ) பொறுமை
இ) புகழ்
ஈ) வீடு
Answer:
ஆ) பொறுமை
Question 2.
சாந்த குணம் உடையவர்கள் ……………….. முழுவதையும் பெறுவர்.
அ) புத்தகம்
ஆ) செல்வம்
இ) உலகம்
ஈ) துன்பம்
Answer:
இ) உலகம்
Question 3.
‘மலையளவு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) மலை + யளவு
ஆ) மலை + அளவு
இ) மலையின் + அளவு
ஈ) மலையில் + அளவு
Answer:
ஆ) மலை + அளவு
Question 4.
‘தன்னாடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) தன் + னாடு
ஆ) தன்மை + நாடு
இ) தன் + நாடு
ஈ) தன்மை + நாடு
Answer:
இ) தன் + நாடு
Question 5.
இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது …………….
அ) இவையில்லாது
ஆ) இவை இல்லாது
இ) இவயில்லாது
ஈ) இவஇல்லாது
Answer:
அ) இவையில்லாது
பொருத்துக.
1. சாந்தம் – சிறப்பு
2. மகத்துவம் – உலகம்
3. தாரணி – கருணை
4. இரக்கம் – அமைதி
Answer:
1. சாந்தம் – அமைதி
2. மகத்துவம் – சிறப்பு
3. தாரணி – உலகம்
4. இரக்கம் – கருணை
குறு வினா
Question 1.
இந்த உலகம் யாருக்கு உரியது?
Answer:
சாந்தம் என்ற அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இந்த உலகம் உரியது.
Question 2.
உலகம் நிலைதடுமாறக் காரணம் யாது?
Answer:
சாதிகளும் கருத்து வேறுபாடுகளும் உலகம் நிலைதடுமாறக் காரணம் ஆகும்.
Question 3.
வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்?
Answer:
வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற நல்ல உள்ளத்தோடு வாழ வேண்டும்.
சிறுவினா
Question 1.
சாந்தம் பற்றி இயேசு காவியம் கூறுவன யாவை?
Answer:
- சாந்தம் என்ற அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இந்த உலகம் உரியது. அவர்களே தலைவர்கள் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார்.
- வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சிசெய்யும் பெருமை உடையது என்றார்.
- சாதிகளும் கருத்து வேறுபாடுகளும் உலகம் நிலைதடுமாறுகின்றது.
- அறத்தை நம்பினால் சண்டை இல்லாமல் உலகம் அமைதியாகிவிடும்.
- பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும்.
சிந்தனை வினா
Question 1.
எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?
Answer:
எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ மதம், சாதி, இனம், மொழி, ஏழை, பணக்காரன் ஆகியன ஒழிய வேண்டும். பொறாமை, வன்முறை, அறியாமை ஆகியன அழிந்து மனிதநேயம் மலர வேண்டும். அனைவரும் ஒன்றெனக் கருத வேண்டும்.
கூடுதல் வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
முத்தையா என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர் ……………
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்
Question 2.
இயேசு காவியத்தை இயற்றியவர் …………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்
Question 3.
…………….. உடையோரே நற்பேறு பெற்றவர் ஆவர்.
அ) சாந்தம்
ஆ) அமைதி
இ) இரக்கம்
ஈ) அன்பு
Answer:
இ) இரக்கம்
Question 4.
ஆசையில் விழுந்த மனித வாழ்வு ………………. போன்றது.
அ) பாலைவனம்
ஆ) மலர்சோலை
இ) உலகம்
ஈ) அமைதி
Answer:
அ) பாலைவனம்
Question 5.
கவியரசு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் ………………
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ணதாசன்
Answer:
ஈ) கண்ணதாசன்
குறு வினா
Question 1.
இறைவனின் இரக்கத்தை பெறுவோர் யார்?
Answer:
இரக்கம் உடையவரே பேறு பெற்றவர் ஆவர். அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர்.
Question 2.
ஆசையில் விழுந்தவன் வாழ்வு பற்றி கண்ணதாசன் கூறுவனவற்றை எழுதுக.
Answer:
மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகிவிடும்.
Question 3.
வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறும் எப்போது?
Answer:
மனிதன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால், அவன் வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும்.
Question 4.
உண்மையில்லா உறவுகளாக வாழ்பவர் யாவர்?
Answer:
மனிதர்கள் சண்டைச் சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர். மேலும் இவர்கள் தன்னாடு என்றும், பிறர் நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.
சிறுவினா
Question 1.
கண்ணதாசன் பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
Answer:
- இயற்பெயர் : முத்தையா
- சிறப்புப்பெயர் : கவியரசு
- பணி : ஏராளமான திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதியுள்ளார். தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.
- படைப்புகள் : ஆட்டனத்தி ஆதிமந்தி, குமரிக் காண்டம், சேரமான் காதலி, மாங்கனி, தைப்பாவை, இயேசு காவியம் முதலியன.
சொல்லும் பொருளும்
1. சாந்தம் – அமைதி
2. பேதங்கள் – வேறுபாடுகள்
3. இரக்கம் – கருணை
4. மகத்துவம் – சிறப்பு
5. தாரணி – உலகம்
6. தத்துவம் – உண்மை