Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 9.2 தன்னை அறிதல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 9.2 தன்னை அறிதல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.2 தன்னை அறிதல்

Question 1.
பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கு உரிய தனிச்சிறப்புகளைப் பட்டியலிடுக.
Answer:

  1. நாய், பூனை – மோப்ப சக்தி
  2. காக்கை – கூடி உண்ணும், துக்கத்தை கூடி அனுசரிக்கும்.
  3. கிளி – பேசும்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கூடுகட்டத் தெரியாத பறவை ………………
அ) காக்கை
ஆ) குயில்
இ) சிட்டுக்குருவி
ஈ) தூக்கணாங்குருவி
Answer:
ஆ) குயில்

Question 2.
‘தானொரு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) தா + ஒரு
ஆ) தான் + னொரு
இ) தான் + ஒரு
ஈ) தானே + ஒரு
Answer:
இ) தான் + ஒரு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.2 தன்னை அறிதல்

குறுவினா

Question 1.
காக்கை ஏன் குயில் குஞ்சைப் போகச்சொன்னது?
Answer:
காக்கைக்குக் கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல, குயில் குஞ்சு தான் என்று ஒருநாள் தெரியவந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது.

Question 2.
குயில் குஞ்சு தன்னை எப்போது ‘குயில்’ என உணர்ந்தது?
Answer:
ஒரு விடியலில் குயில் குஞ்சு “கூ” என்று கூவியது. அன்று தான் ஒரு ‘குயில்’ என உணர்ந்தது.

சிறுவினா

Question 1.
குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக.
Answer:
(i) காக்கைக்குக் கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல, குயில் குஞ்சு தான் என்று ஒருநாள் தெரியவந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது.

(ii) அதனால் தாய் காக்கையைவிட்டுச் செல்ல முடியவில்லை. அந்த மரத்திலேயே வாழ ஆரம்பித்தது. ‘கா’ என்று கத்த முயற்சித்தது, அதனால் முடியவில்லை .

(iii) அதற்குக் கூடுகட்டத் தெரியாது. அம்மா, அப்பா, தோழர் யாரும் இல்லை குளிர், மழை, வெயில் ஆகியவற்றைக் கடந்தது. தானே இரை தேடத் தொடங்கியது.

(iv) வாழ்கையை வாழப் பழகிவிட்டது. ஒரு விடியலில் குயில் குஞ்சு “கூ” என்று கூவியது, அன்று தான் ஒரு ‘குயில்’ என உணர்ந்தது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.2 தன்னை அறிதல்

சிந்தனை வினா

Question 1.
உங்களிடம் உள்ள தனித்தன்மைகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:

  1. அனைவரிடமும் அன்பாகப் பழகுவது,
  2. உண்மை பேசுவது,
  3. தன்னம்பிக்கையுடன் இருப்பது,
  4. மனம் தளராமை
    – ஆகியவை என்னிடம் உள்ள தனித்தன்மைகள் ஆகும்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘தன்னை அறிதல்’ கவிதை இடம்பெறும் நூல் ……………..
அ) மழை பற்றிய பகிர்தல்கள்
ஆ) வீடு முழுக்க வானம்
இ) மகளுக்குச் சொன்ன கதை
ஈ) எதுவுமில்லை
Answer:
இ) மகளுக்குச் சொன்ன கதை

Question 2.
குயில் ……………… ன் கூட்டில் முட்டையிட்டது.
அ) காக்கை
ஆ) குருவி
இ) குயில்
ஈ) புறா குறுவினா
Answer:
அ) காக்கை

சிறுவினா

Question 1.
காக்கையின் கூட்டில் முட்டையிட்டது எது?
Answer:
குயில் காக்கையின் கூட்டில் முட்டையிட்டது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.2 தன்னை அறிதல்

Question 2.
காக்கையைப் போலக் கரைய முயன்றது எது?
Answer:
குயில் குஞ்சு காக்கையைப் போலக் கரைய முயன்றது.

Question 3.
தன்னை அறிதல் என்ற கவிதையின் உட்பொருள் யாது?
Answer:
“நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகள் புரியலாம்.”

Question 4.
கவிஞர் சே.பிருந்தா குறிப்பு வரைக.
Answer:

  • புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர் சே.பிருந்தா.
  • மழை பற்றிய பகிர்தல்கள் , வீடு முழுக்க வானம் , மகளுக்குச் சொன்ன கதை ஆகியன இவரது படைப்புகள் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 9.2 தன்னை அறிதல்

சே. பிருந்தா

  • புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர்.
  • படைப்புகள் : மழை பற்றிய பகிர்தல்கள் , வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை.

Leave a Reply