Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 9.3 கண்ணியமிகு தலைவர் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 9.3 கண்ணியமிகு தலைவர்
கற்பவை கற்றபின்
Question 1.
எளிமையின் அடையாளமாக வாழ்ந்த பிற தலைவர்கள் குறித்து வகுப்பறையில் பேசுக.
Answer:
அனைவருக்கும் வணக்கம். எளிமையின் அடையாளமாக வாழ்ந்தவர் காந்தியடிகள் பற்றிப் பேசுகின்றேன். காந்தியடிகள் எளிமையின் சிகரமாக வாழ்ந்தவர். சிறிய துண்டு பென்சில். காகிதம் ஆகியவற்றைக்கூட குப்பையில் போடாமல் பிற பயன்பாட்டிற்காகக் காந்தியடிகள் வைத்துக்கொள்வார். ஆடம்பரத்தை அறவே வெறுத்தார்.
வழக்கதிற்கு மாறாக வெறும் ஒரணாவைச் செலவு செய்த தன் மனைவியைக் கண்டித்தார். உண்ணக் கஞ்சி இல்லாதவர் மத்தில் ஆடம்பரமாக அணிவது பாவம் என்றார். எளிமையான கதர் உடையையே உடுத்தினார். தமது குடும்பத்தார் அனைவரையும் அதனையே உடுத்தச் செய்தார். நாமும் அவர் போல எளிமையாக வாழ்வவோம் . நன்றி.
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
காயிதேமில்லத் ……………… பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.
அ) தண்மை
ஆ) எளிமை
இ) ஆடம்பரம்
ஈ) பெருமை
Answer:
ஆ) எளிமை
Question 2.
‘காயிதேமில்லத்’ என்னும் அரபுச்சொல்லுக்குச் ………………… என்பது பொருள்.
அ) சுற்றுலா வழிகாட்டி
ஆ) சமுதாய வழிகாட்டி
இ) சிந்தனையாளர்
ஈ) சட்டவல்லுநர்
Answer:
ஆ) சமுதாய வழிகாட்டி
Question 3.
விடுதலைப்போராட்டத்தின் போது காயிதேமில்லத் …………………. இயக்கத்தில் கலந்து கொண்டார்.
அ) வெள்ளையனே வெளியேறு
ஆ) உப்புக்காய்ச்சும்
இ) சுதேசி
ஈ) ஒத்துழையாமை
Answer:
ஈ) ஒத்துழையாமை
Question 4.
காயிதேமில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் …………..
அ) சட்டமன்றம்
ஆ) நாடாளுமன்றம்
இ) ஊராட்சி மன்றம்
ஈ) நகர்மன்றம்
Answer:
ஆ) நாடாளுமன்றம்
Question 5.
‘எதிரொலித்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது …………………
அ) எதிர் + ரொலித்தது
ஆ) எதில் + ஒலித்தது
இ) எதிர் + ஒலித்தது
ஈ) எதி + ரொலித்தது
Answer:
இ) எதிர் + ஒலித்தது
Question 6.
முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………..
அ) முதுமொழி
ஆ) முதுமைமொழி
இ) முதியமொழி
ஈ) முதல்மொழி
Answer:
அ) முதுமொழி
குறு வினா
Question 1.
விடுதலைப் போராட்டத்தில் காயிதேமில்லத் அவர்களின் பங்கு பற்றி எழுதுக.
Answer:
(i) நாடுமுழுவதும் விடுதலைப்போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொள்ள காந்தியடிகள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
(ii) காந்தியடிகளின் இத்தகைய வேண்டுகோள் காயிதேமில்லத்தின் மனதில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியது.
(iii) கல்வியைவிட நாட்டு விடுதலை மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.
Question 2.
காயிதேமில்லத் அவர்கள் தன் குடும்பத்திலும் எளிமையைக் கடைபிடித்தார் என்பதற்குச் சான்றாக உள்ள நிகழ்வை எழுதுக.
Answer:
காயிதேமில்லத் அவர்கள் தன் மகனுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தார். பெரிய தலைவர் என்பதால் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடக்கும் என அனைவரும் நினைத்தனர்.பெண்வீட்டாரிடம் மணக்கொடை வாங்காமல் மிக எளிமையாக மகன் திருமணத்தை நடத்தினார்.
சிறு வினா
Question 1.
ஆட்சிமொழி பற்றிய காயிதேமில்லத்தின் கருத்தை விளக்குக.
Answer:
ஆட்சிமொழி தேர்வு செய்யும் கூட்டத்தில் காயிதேமில்லத், “பழமையான மொழிகளில் ஒன்றைத்தான் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழி என்று தான் நான் உறுதியாகச் சொல்வேன்.
மண்ணிலே முதன் முதலாகப் பேசப்பட்ட மொழி திராவிட மொழிகள் தான். அவற்றுள் இலக்கிய செறிவு கொண்ட தமிழ்மொழி தான் மிகப்பழமையான மொழி. அதனைத் தான் நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் ” என்று குறிப்பிட்டார்.
சிந்தனை வினா
Question 1.
நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் எத்தகைய மக்கள் நலப்பணியைச் செய்வீர்கள்?
Answer:
- தமிழை உலகமொழி ஆக்குவேன்.
- ஏழ்மை நிலையை ஒழித்து, அனைத்தும் அனைவருக்கும் என்பதை நடைமுறைக்குக் கொண்டு வருவேன்.
- சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை நீக்குவேன்.
- இந்திய நதிகளை இணைப்பேன்.
ஆகியவற்றை நான் தலைவராக இருந்தால், மக்களுக்குச் செய்வேன்.
கூடுதல் வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
‘கண்ணியமிகு ‘ என்னும் அடைமொழியால் சிறப்பிக்கப்படும் தலைவர் ……………….
அ) காந்தியடிகள்
ஆ) நேரு
இ) பெரியார்
ஈ) காயிதேமில்லத்
Answer:
ஈ) காயிதேமில்லத்
Question 2.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்ட ஆண்டு ……………….
அ) 1962
ஆ) 1972
இ) 1926
ஈ) 1960
Answer:
அ) 1962
Question 3.
காயிதேமில்லத்தின் இயற்பெயர் …………………
அ) முகமது அலி
ஆ) முகமது ஜின்னா
இ) முகமது இசுமாயில்
ஈ) முகமது மைதீன்
Answer:
இ) முகமது இசுமாயில்
Question 4.
காயிதேமில்லத் ஜமால் முகமது கல்லூரியை உருவாக்கிய இடம் ………………….
அ) திருச்சி
ஆ) தஞ்சை
இ) கோவை
ஈ) மதுரை
Answer:
அ) திருச்சி
குறுவினா
Question 1.
காயிதேமில்லத் அவர்கள் பற்றி தந்தை பெரியார் கூறியது யாது?
Answer:
“இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்.- என்று காயிதேமில்லத் குறித்துத் தந்தைப் பெரியார் கூறினார்.
Question 2.
காயிதேமில்லத் அவர்கள் பற்றி அறிஞர் அண்ணா கூறியது யாது?
Answer:
“தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதேமில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்” என்று காயிதேமில்லத் குறித்து அறிஞர் அண்ணா கூறினார்.
Question 3.
காயிதேமில்லத் – பெயர்க்காரணம் யாது?
Answer:
காயிதேமில்லத்தின் இயற்பெயர் முகமது இசுமாயில். ஆனால் மக்கள் அன்போடு காயிதேமில்லத் என்று அழைத்தனர். காயிதேமில்லத் என்பதன் பொருள் சமுதாய வழிகாட்டி. அப்பெயருக்கு ஏற்ப வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
சிறுவினா
Question 1.
காயிதேமில்லத்தின் கல்விப்பணி குறித்து எழுதுக.
Answer:
கல்வி ஒன்றுதான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எண்ணினார் காயிதேமில்லத். “கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை” என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தார். திருச்சியில் ஜமால் முகமது கல்லூரியை உருவாக்கினார். கேரளாவில் ஃபரூக் கல்லூரி உருவாக காரணமாக இருந்தார்.
Question 2.
காயிதேமில்லத் மேற்கொண்ட அரசியல் பணிகள் யாவை?
Answer:
- 1946 முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்.
- இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினர்.
- இந்தியா விடுதலை பெற்றபின் மாநிலங்களவை உறுப்பினர்.
- மக்களவை உறுப்பினர்.