Students can Download 8th Tamil Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 1.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து, அதில் இடம்பெற்றுள்ள பழைய வரிவடிவச் சொற்களை எடுத்து எழுதி, அவற்றை இன்றைய வரிவடிவில் மாற்றி எழுதுக.
Answer:
சுற்றுப்புறச் சூழ்நிலைப் பிரச்னைகள் பற்றிய இந்தியாவின் கவலை பல்லாண்டு காலமாக வளர்ந்தே வருகிறது.

‘மனிதன் ஏழ்மையிலே இருக்கும்போது சத்தற்ற உணவினாலும், நோயினாலும் அச்சுறுத்தப்படுகிறான்; பலவீனனாக இருப்பவன் போருக்கு அஞ்சுகிறான்; செல்வந்தனாக இருப்பவனோ தன் கொழுத்த செல்வத்தால் உண்டான அசுத்தத்திற்கு அஞ்சுகிறான்’ என்றெல்லாம் திருமதி இந்திராகாந்தி அன்றைக்கு ஆற்றிய உரை நாம் நினைவுகூரத் தக்கது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 1

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ……………… காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை
ஆ) இசைக்கலை
இ) அச்சுக்கலை
ஈ) நுண்கலை
Answer:
இ) அச்சுக்கலை

Question 2.
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ………………….. என அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெழுத்து
ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து
ஈ) ஓவிய எழுத்து
Answer:
ஆ) வட்டெழுத்து

Question 3.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் ………………….
அ) பாரதிதாசன்
ஆ) தந்தை பெரியார்
இ) வ.உ.சிதம்பரனார்
ஈ) பெருஞ்சித்திரனார்
Answer:
ஆ) தந்தை பெரியார்

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் …………… என அழைக்கப்பட்டன.
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் …………..
Answer:
1. கண்ணெழுத்துகள்)
2. வீரமாமுனிவர்)

குறுவினா

Question 1.
ஓவிய எழுத்து என்றால் என்ன?
Answer:
தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவம் ஓவிய எழுத்து எனப்படும்.

Question 2.
ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
Answer:
(i) ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக : மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் கி குறிப்பதாயிற்று.

(ii) இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை, ஒலி எழுத்து நிலை எனப்பட்டது.

Question 3.
ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
Answer:
(i) ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளைப் பயன்படுத்தினர்.
(ii) புள்ளிகளைப் பயன்படுத்தினால் ஓலைகள் சிதைந்து விடும் என்பதால் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலவில்லை.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 4.
வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 2

சிறுவினா

Question 1.
எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
Answer:
(i) ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.

(ii) ஓலைச்சுவடிகளில் நிறுத்தற்குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.

(iii) புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா, உயிர்மெய்யா, குறிலா, நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.

(iv) இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

Question 2.
தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
Answer:
தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றம் :
(i) தமிழ் எழுத்துகளில் நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் ரு பயன்படுகின்றது.

(ii) ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக் கொம்புடை பயன்படுகின்றது.

(iii) ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால்ள பயன்படுகின்றது.

(iv) குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்து விட்டது.

நெடுவினா

Question 1.
எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
Answer:
முன்னுரை :
மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான். பிறகு ஒலிகள் மூலம் வெளிப்படுத்தினான். அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக் கொண்டான். காலப் போக்கில் அவை பேச்சு மொழியாக உருவானது.

வரிவடிவத்தின் தொடக்க நிலை :
மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலையாகும்.

ஓவிய எழுத்து :
தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

ஒலி எழுத்து நிலை :
அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்துநிலை என்பர். இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.

தமிழ் எழுத்துகள் :
காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

முடிவுரை :
பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். பிறகு அச்சில் ஏற்றப்பட்டது. காலந்தோறும் வளர்ந்து வரிவடிவத்தில் பல மாற்றங்களை ஏற்று, தற்காலத்தில் கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாக வளர்ந்துள்ளது தமிழ் எழுத்துகள்.

சிந்தனை வினா

Question 1.
தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
Answer:
(i) பள்ளிகளில் தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும். பிறமொழிகளையும் அறிந்து கொள்ளுதல் நன்மை பயக்கும் என்பதால் அவற்றைக் கூடுதலாக கற்க
வழிவகை செய்யலாம்.

(ii) தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

(iii) கன்னித் தமிழைக் கணினித் தமிழில் ஏற்றி உலகெங்கும் பரப்ப வேண்டும்.

(iv) புதியதாகக் கண்டறியப்பட்ட அறிவியல் சாதனங்களுக்கும், பிற துறையில் கண்டறியப்படும் சொற்களுக்கும் கலைச்சொற்களைக் கண்டறிய வேண்டும்.

(v) பிறமொழியில் உள்ள நூல்களைத் தமிழில் எளிமையான முறையில் மொழிபெயர்க்க வேண்டும்.

(vi) சிறந்த தமிழ் நூல்கள் நிறைந்த, இலவச நூலகங்களை நாடெங்கிலும் அமைக்க வேண்டும்.

(vii) ஒவ்வொரு துறைக்கும் எளிமையான தமிழில் நூல்கள் வெளியிடப்பட வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 2.
தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விவாதிக்கவும்.
Answer:
மாணவன் 1 : தமிழ்மொழியை உரோமன் எழுத்துருவில் எழுதுவது எவ்வளவு எளிமையாக உள்ளது பார்த்தாயா?

மாணவன் 2 : அவ்வாறு எழுதுவதே தவறான செயல். இதை எளிமை என்று மகிழ்கிறாயா?

மாணவன் 1 : தவறு என்று ஏன் கூறுகிறாய்? தவறொன்றும் இல்லை. ஏனெனில் தொண்ணூறு சதவீத மாணவர்கள் ஆங்கில வழியில் பயில்கின்றனர். அவர்களுக்குத் தமிழ் படிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. பேச்சுமொழியில் படிப்பதில் மாணவர்கள் இன்னலுறுகின்றனர்.

மாணவன் 2 : நீ கூறுவது முற்றிலும் தவறானது. வரிவடிவம்தான் ஒரு மொழியின் அடையாளம். அவ்வாறு இருக்கும் நிலையில் தமிழ்மொழியை உரோமன் எழுத்துருவில் படித்தால் எந்த மொழியில் படிக்கிறோம் என்பதை அறிய முடியுமா? படிப்பவருக்கே குழப்பம்தான் விளையும்.

மாணவன் 1 : படிப்பவருக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் அவருக்குத் தமிழ் படிப்பதில் தகராறு. உரோமன் எழுத்துருவில் படிப்பது எளிமை என அவர் எண்ணுகிறார்.

மாணவன் 2 : இக்கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ‘தீ’ என்ற தமிழ்ச் சொல்லை உரோமன் எழுத்துருவில் ‘the’ என்றுதான் எழுதவேண்டும். இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளில்தான் புரிந்து கொள்வார்கள். தமிழ் எழுத்துகளில் ஒலி வேறுபாடறிந்து படிக்க இயலும். அதனை உரோமன் எழுத்துருவில் எழுதும்போது தமிழை அழிப்பதைப் போன்று உணர்வு ஏற்படுகிறது.

மாணவன் 1 : எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல. தமிழ்மொழி ஆரம்பக் காலத்தில் பிராமி எழுத்துருவில்தான் எழுதப்பட்டன. அதிலிருந்து வட்டெழுத்துகள் உருவாயிற்று. அதன்பிறகு இன்றைய எழுத்துருக்கள் உருவாயின. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வரிவடிவத்தைப் பெற்றுள்ளன. அதுபோல தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதும் ஒரு மாற்றம் தானே?

மாணவன் 2 : “எழுத்தாகிய உடல் இல்லையேல், மொழியாகிய உயிர் அழியும்” என்பார் பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார். அவர் வழியில் நாம் உடலாகிய எழுத்துரு அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

மாணவன் 1 : மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான். பயிற்சியின் மூலம்தான் நாம் ஒரு மொழியைக் கற்கிறோம். உரோமன்
எழுத்துருவில எழுத்துகளை உச்சரிப்பது எளிமையானது.

மாணவன் 2 : நீ கூறுவது, உன்னுடைய மாயை. ஒரு வரிவடிவில் மற்றொரு மொழியைப் படிப்பதால் அம்மொழியை அறிந்தவர் ஆவோம் என்பது அறியாமை ஆகும். தமிழில் எழுத்து வடிவத்திற்கும் உச்சரிப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எழுதுவதை அப்படியே சரியான உச்சரிப்புடன் வாசிக்க இயலும். உரோமன் எழுத்து முறையே வேறு. அதில் தமிழ்மொழியில் உள்ளது போல் வரிவடிவத்திற்கும் உச்சரிப்பிற்கும் தொடர்பு இருக்காது. உச்சரிப்பைத் தனியே கற்றுக் கொள்வதற்கென்று உச்சரிப்பு அகராதி தேவைப்படுகிறது.

மாணவன் 1 : நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். தெளிவான அமைப்பு முறை அடிப்படைத் தமிழில் இருக்கும்போது நாம் ஏன் உரோமன் எழுத்தில் தமிழை எழுத வேண்டும்.

மாணவன் 2 : நமக்கு நம் தாய்மொழியான தமிழ்தான் பண்பாட்டு, இன அடையாளம். எழுத்து வடிவம் அழிந்தால் மொழி அழியும்; மொழி அழிந்தால் இனம் அழியும் என்ற வரலாற்று உண்மையை மறக்கக்கூடாது.

மாணவன் 1 : சரியாகச் சொன்னாய். இனிமேல் நானும் என்னை மாற்றிக் கொள்கிறேன். முகநூல், புலனம், கீச்சகம் போன்றவற்றில் இனிமேல் தமிழிலேயே செய்தியைப் பரிமாறுவோம் என உறுதிகொள்வோம். பிறரையும் மாற்றுவோம்.

மாணவன் 2 : நான் கூறியதைக் கேட்டு உன் கருத்தை மாற்றிக் கொண்டதற்கு நன்றி. நாம் அனைவரும் தமிழ்மொழியின் நிலையான தன்மையை உணர்ந்து பிறருக்கும் உணர்த்துவோம்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. எழுத்துகளின் வரிவடிவங்கள் மொழிக்கு மொழி வேறுபடுகின்றன.
2. பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.
3. பொருளின் ஓவிய வடிவமாக இருந்த வரிவடிவம் ஓவிய எழுத்து.
4. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை ஒலி எழுத்து நிலை.
5. தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்கள் காணப்படும் இடங்கள் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்கள்.
6. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து வட்டெழுத்து.
7. கல்வெட்டுகள் மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
8. செப்பேடு, கல்வெட்டில் காணப்படும் வரிவடிவங்கள் வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகைப்படும்.
9. அரச்சலூர் கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டுள்ளன.
10. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் இடம்பெற்ற எழுத்துகள் வட்டெழுத்துகள்.
11. முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலம் பதினொன்றாம் நூற்றாண்டு.
12. ‘கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ என்னும் தொடர் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம்.
13. பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்.
14. தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துகள் இருந்ததற்குச் சான்றாக அமைந்த கல்வெட்டு அரச்சலூர் கல்வெட்டு.
15. பாறைகளில் செதுக்கும்போது பயன்படுத்த முடியாதது வளைகோடுகள்.
16. பாறைகளில் செதுக்கும்போது பயன்படுத்தப்பட்டவை நேர் கோடுகள்.
17. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர்.
18. ஒற்றைப்புள்ளி, இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக பயன்படுத்தப்படுபவை துணைக்கால்(π), இணைக்கொம்பு(), கொம்புக்கால்(ள).
19. இருபதாம் நூற்றாண்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் தந்தை பெரியார்.
20. தமிழ்மொழி கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் ஆகியிருக்கிறது.

குறுவினாக்கள் :

Question 1.
எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை யாது?
Answer:
மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது – கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை ஆகும்.

Question 2.
தமிழ் எழுத்துகள் எப்போது நிலையான வடிவத்தைப் பெற்றன?
Answer:
காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 3.
கண்ணெழுத்து – குறித்து எழுதுக.
Answer:
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன. இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும், ‘கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ என்னும் தொடரால் அறியலாம்.

Question 4.
எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட காரணங்களாக அமைந்தவை யாவை?
Answer:
எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைந்தன.

Question 5.
தமிழ்மொழியின் வரிவடிவ வளர்ச்சியின் இன்றைய நிலை யாது?
Answer:
காலந்தோறும் ஏற்பட்ட வரிவடிவ வளர்ச்சி காரணமாகத் தமிழ்மொழியைப் பிற மொழியினரும் எளிதில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்மொழிகணினிப்பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் மாற்றம் பெற்றுள்ளது.

சிறுவினாக்கள் :

Question 1.
பேச்சுமொழி எவ்வாறு உருவானது?
Answer:
(i) மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான்.

(ii) காலப்போக்கில் தனது குரலைப் பயன்படுத்தி ஒலிகள் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்த முற்பட்டான்.

(iii) அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக்கொண்டான். அவை மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் செம்மைப்பட்டுக் காலப்போக்கில் அவை
பண்பட்டுப் பேச்சுமொழி உருவானது.

Question 2.
தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்கள் பற்றி எழுதுக.
Answer:
(i) தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களை கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது.

(ii) கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. செப்பேடுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

(iii) கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப் பிரிக்கலாம்.

Question 3.
பெரியார் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் நான்கனை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 3

Question 4.
இரு வகையான எழுத்துகள் பற்றி எழுதுக.
Answer:
(i) வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்து மிகப் பழைய தமிழ் எழுத்து ஆகும். தமிழ் எழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவம் ஆகும்.

(ii) சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே இடம் பெற்றுள்ளன.

(iii) முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழ் எழுத்துகள் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Question 5.
தமிழ் எழுத்துகளில் புள்ளிகளின் நிலை பற்றி எழுதுக.
Answer:
(i) எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது.

(ii) எடுத்துக்காட்டாக எது என எழுதப்பட்டால் எது என்றும் எது என எழுதப்பட்டால் ஏது என்றும் ஒலித்தனர்.

(iii) அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை நெடிலாகக் (க. = கா, த. = தா) கருதப்பட்டன.

(iv) ஐகார எழுத்துகளைக் குறிப்பிட எழுத்துகளின் முன் இரட்டைப் புள்ளி இட்டனர். (.க =கை)

(v) எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இருபுள்ளிகள் இடப்பட்டால் அவை ஒளகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன. (கெ.. = கௌ, தெ..= தெள).

(vi) மகர எழுத்தைக் குறிப்பிட, பகர எழுத்தின் உள்ளே புள்ளி இட்டனர்.

(vii) குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளைக் குறிக்க அவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர்.

நெடுவினா :

Question 1.
எழுத்துச் சீர்திருத்தத்தில் வீரமாமுனிவர், பெரியார் மேற்கொண்டவை எவை?
Answer:
வீரமாமுனிவர் :
தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர். எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார். எ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும் ஒ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார்.

அதேபோல ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக்கொம்பு இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து போ) புதிய வரி வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம் :
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 4

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் :
இருபதாம் நூற்றாண்டு வரை ணா, றா, னா ஆகிய எழுத்துகளை ணா, றா, னா என எழுதினார். அதே போல ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகளை ணை, லை, ளை, னை என எழுதினார். இவற்றை அச்சுக்கோப்பதற்காக இவ்வெழுத்துகளுக்குத் தனி அச்சுகள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. இக்குறைகளை நீக்குவதற்காகத் தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அவரது எழுத்துச் சீர்திருத்தங்கள் சில ஏற்கப்பட்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 5

 

Leave a Reply