Students can Download 8th Tamil Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

Question 1.
மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்களைப் பற்றி எழுதுக.
Answer:
சூறாவளி :
சூறாவளி என்பது கடலில் ஏற்படுகின்ற குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அல்லது குறைந்த அழுத்த மண்டலமாகும். புயலின் மத்தியில் குறைந்த அழுத்தமும் அதனைச் சுற்றி அதிக அழுத்தமும் உருவாகியிருந்தாலோ, புயலின் மத்தியில் அதிக 15 அழுத்தமும் அதனைச் சுற்றிலும் குறைந்த அழுத்தமும் உருவாகியிருந்தாலோ சூறாவளி உண்டாகும். இது கடற்பகுதியிலிருந்து நிலப்பகுதியைக் கடக்கும்.

சுனாமி :
கடலுக்கு அடியில் ஏற்படுகின்ற நிலநடுக்கம் போன்ற மிகப்பெரிய மாறுதல்களால், திடீரென கடல்நீர் மிகப்பெரிய அலைகளாக உருவெடுத்து கரையைச் சேர்ந்து அங்கே பேரழிவுகளை ஏற்படுத்தும். இதனைக் கடற்கோள் என்றும் ஆழிப் பேரலை என்றும் கூறுவர்.

பூகம்பம் : –
இதனைப் பூமி அதிர்ச்சி அல்லது நிலநடுக்கம் என்று கூறுவர். நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும்.

Question 2.
இயற்கைச் சீற்றங்கள் பற்றிய புகைப்படங்களை நாளேடுகளிலிருந்து திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு 2

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வானில் கரு ………… தோன்றினால் மழை பொழியும் என்பர்.
அ) முகில்
ஆ) துகில்
இ) வெயில்
ஈ) கயல்
Answer:
அ) முகில்

Question 2.
முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் ………………..யும் ஓட்டிவிடும்.
அ) பாலனை
ஆ) காலனை
இ) ஆற்றலை
ஈ) நலத்தை
Answer:
ஆ) காலனை

Question 3.
‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………..
அ) விழுந்த + அங்கே
ஆ) விழுந்த + ஆங்கே
இ) விழுந்தது + அங்கே
ஈ) விழுந்தது + ஆங்கே
Answer:
ஈ) விழுந்தது + ஆங்கே

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

Question 4.
‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) செ + திறந்த
ஆ) செத்து + திறந்த
இ) செ + இறந்த
ஈ) செத்த + இறந்த
Answer:
ஈ) செத்த + இறந்த

Question 5.
பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………
அ) பருத்தி எல்லாம்
ஆ) பருத்தியெல்லாம்
இ) பருத்தெல்லாம்
ஈ) பருத்திதெல்லாம்
Answer:
ஆ) பருத்தியெல்லாம்

குறுவினா

Question 1.
கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?
Answer:
கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது : கடலில் விரைந்து வந்த கப்பல் எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்த து.

Question 2.
புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
Answer:
புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு : தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

Question 3.
கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?
Answer:
கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி : சித்தர்கள் வாழும் கொல்லிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.

சிறுவினா

Question 1.
புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
Answer:
புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள்:
(i) வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.

(ii) அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.

(iii) தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

Question 2.
கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
Answer:
கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் : திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

சிந்தனை வினா

Question 1.
இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
Answer:
இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

புயல், மழை :
ஏரிக்கரை மற்றும் ஆற்றோரச் சாலைகளில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்; மரங்களின் கீழே நிற்பதைத் தவிர்க்க வேண்டும். சாக்கடை நீர் வடிகால்கள், வாய்க்கால்கள் போன்றவற்றை அடைப்பில்லாமல் சீர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கழிவுநீர்த் தொட்டிகள் எப்போதும் மூடிய நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும்.

சாலையில் மின்கம்பிகள் விழுந்திருந்தால் அவற்றைத் தொடக்கூடாது. மின்சாதனங்கள், எரிவாயுப் பொருள்கள் பழுதுபட்டிருந்தால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது. தற்போது மின்சார வாரியமே புயல், மழை என்றால் மின்சாரத்தைத் துண்டித்து விடுகின்றனர். புயலின்போது வெளியில் செல்லாமல் இருப்பது சாலச் சிறந்தது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வாகனங்களில் செல்லலாம்.

வெள்ளப் பெருக்கென்றால் வேடிக்கை பார்க்கச் செல்வதைத் தவிர்க்கலாம். இடி மின்னலின்போது மரத்தின்கீழ் நிற்கக் கூடாது. செல்பேசி, வீட்டுச்சாவி, தீப்பெட்டி மெழுகுவர்த்தி, தண்ணீர்ப் புட்டிகள் முதலிய அவசியமான பொருள்களை ஒரே இடத்தில் வைத்திருக்க வேண்டும். முதலுதவி பெட்டி ஒவ்வொருவர் வீட்டிலும் இருப்பது அவசியம். அவசர உதவிக்கான தொலைபேசி எண்களை அனைவரும் அறிந்திருத்தல் அவசியம்.

நிலநடுக்கம் :
நிலநடுக்கத்தின் போது அடுக்ககங்களில் இருப்பவர்கள் மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து வெட்ட வெளியில் நிற்கலாம். மரங்கள், மின்கம்பங்கள் இல்லாத இடமாகப் பார்த்து நிற்க வேண்டும். பாலங்களைக் கடக்கக்கூடாது.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :
1. முகில் – மேகம்
2. வின்னம் – சேதம்
3. கெடிகலங்கி – மிக வருந்தி
4. வாகு – சரியாக
5. சம்பிரமுடன் – முறையாக
6. காலன் – எமன்
7. சேகரம் – கூட்டம்
8. மெத்த – மிகவும்
9. காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று.

நிரப்புக :

1. இயற்கை மிகவும் ……………………
2. தமிழ்நாடு அடிக்கடி ………………. தாக்கப்படும் பகுதியாகும்.
3. பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப்பாடல்கள் …………………….. என்று அழைக்கப்பட்டன.
4. பஞ்சக்கும்மிகள் என்னும் நூல் …………………….. என்பவரால் தொகுக்கப்பட்டது.
5. காத்து நொண்டிச்சிந்து’ இயற்றியவர் ……………………
Answer:
1. அழகானது, அமைதியானது
2. புயலால்
3. பஞ்சக்கும்மிகள்
4. புலவர் செ. இராசு
5. வெங்கம்பூர் சாமிநாதன்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு

நூல் வெளி
நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினர். பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன. புலவர் செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடலின் பொருள்
திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு 1
அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன. ஆடவர்கள் மனைவி, பிள்ளைகளுடன் கூகூ’ என்று அலறியபடி ஓடினர். தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன. கடலில் விரைந்து வந்த கப்பல் எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்த து.

ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய புயலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர். தெத்துக்காடு, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு, மாடுகள் இறந்தன. சித்தர்கள் வாழும் கொல்லி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.

முருகப் பெருமானே! இத்தகைய அழிவுகளை நாங்கள் எவ்வாறு தாங்குவோம்? எங்களுக்கு வருகின்ற இடர்களை எல்லாம் தடுத்து எங்களைக் காப்பாயாக!

 

Leave a Reply