Students can Download 8th Tamil Chapter 3.3 தமிழ்ர் மருந்தும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்
கற்பவை கற்றபின்
Question 1.
நீங்கள் மருத்துவரிடம் கேட்க விரும்பும் ஐந்து வினாக்களை எழுதுக.
Answer:
(i) சிறு வயதிலேயே இரத்த அழுத்தம், தலைவலி போன்ற நோய்களால் அவதிப்படுகிறார்கள். அதற்குக் காரணம் என்ன?
(ii) மாணவர்களுள் சிலரால் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செயல்களைச் செய்ய இயலவில்லை. அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
(iii) நம் உடலிலுள்ள எலும்புகள் வலுவடைய நாம் செய்ய வேண்டுவன யாவை?
(iv) நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க யாது செய்ய வேண்டும்?
(v) சூரிய ஒளியைப் பெறுவதற்கு உகந்த நேரம் எது?
Question 2.
உங்கள் பகுதிகளில் கிடைக்கும் மூலிகைகளின் மாதிரிகளைத் திரட்டி அவற்றின் பயன்களை எழுதிக் காட்சிப்படுத்துக.
Answer:
(i) வல்லாரை :
வல்லாரை பல மருத்துவக் குணங்களைப் பெற்றுள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், நீர்ச்சத்து, புரதச்சத்து, தாது உப்புகள் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. சிறந்த நினைவாற்றலைத் தரக்கூடியது. வாயுத் தொல்லையை நீக்கும். சர்க்கரை நோய், இதயக்கோளாறுகள் உள்ளிட்ட முக்கிய நோய்களைத் தடுக்கும்.
(ii) கறிவேப்பிலை :
கறிவேப்பிலை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம், நீர்ச்சத்து, மாவுச் சத்து போன்ற பல சத்துகள் உள்ளன. கறிவேப்பிலை கண்களுக்கு வலுவூட்டக்கூடியது. பார்வைக் கோளாறைப் போக்கும். தலைமுடி கருகருவென்று வளரும். உடலில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.
(iii) கரிசலாங்கண்ணி :
இதில் வெள்ளை , மஞ்சள் என இரண்டு வகைகள் உள்ளன. காமாலை நோயை போக்கும். கல்லீரலைப் பலப்படுத்தும். இரத்தச் சோகையைப் போக்கும்.
(iv) முருங்கைக்கீரை :
முருங்கைக்கீரையை வேகவைத்து அதன் சாற்றைக் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும்.
(v) பொன்னாங்கண்ணிக் கீரை :
இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் கண்பார்வை தெளிவாக இருக்கும். கண் எரிச்சல், கண் மங்கல், கண்கட்டி, கண்ணில் நீர் வடிதல், பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்கள் குணமாகும். வாய்நாற்றம், வாய்ப்புண் ஆகியவையும் நீங்கும்.
(vi) அகத்திக்கீரை :
அகத்திக்கீரையை உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, பி, புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துகள் உள்ளன. அதிகப்படியான பித்தத்தைக் குறைக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். குடல் புண், வாய்ப்புண் ஆகியவற்றை ஆற்றும். பார்வைக் கோளாறுகள் வராது. எலும்பைப் பலப்படுத்தும்.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ……………… பயன்படுத்தினர்.
அ) தாவரங்களை
ஆ) விலங்குகளை
இ) உலோகங்களை
ஈ) மருந்துகளை
Answer:
அ) தாவரங்களை
Question 2.
தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ………………. நீட்சியாகவே உள்ளது.
அ) மருந்தின்
ஆ) உடற்பயிற்சியின்
இ) உணவின்
ஈ) வாழ்வின்
Answer:
இ) உணவின்
Question 3.
உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ………….
அ) தலைவலி
ஆ) காய்ச்சல்
இ) புற்றுநோய்
ஈ) இரத்தக்கொதிப்பு
Answer:
ஈ) இரத்தக்கொதிப்பு
Question 4.
சமையலறையில் செலவிடும் நேரம் ………… செலவிடும் நேரமாகும்.
அ) சுவைக்காக
ஆ) சிக்கனத்திற்காக
இ) நல்வாழ்வுக்காக
ஈ) உணவுக்காக
Answer:
இ) நல்வாழ்வுக்காக
குறுவினா
Question 1.
மருத்துவம் எப்போது தொடங்கியது?
Answer:
மருத்துவத்தின் தொடக்கம் :
தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களைக் கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் நோயைத் தீர்க்க முயன்றிருப்பான்.
தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான். இவ்வாறுதான் மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது.
Question 2.
நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?
Answer:
நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை :
தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, ஏழு மணி நேர தூக்கம், மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துதல் ஆகியன அவசியம்.
எங்கோ விளையும் ஆப்பிளைச் சாப்பிடுவதை விட, நமது ஊரில் விளையும் கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி, நெல்லி, வாழைப்பழங்கள் ஆகியவற்றைக் காலை உணவுக்கு முன் சாப்பிடலாம்.
Question 3.
தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
Answer:
வேர், தழை போன்ற தாவர உறுப்புகளும் தாதுப் பொருட்களும் உலோகமும் தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவனவாகும்.
சிறுவினா
Question 1.
நோய்கள் பெருகக் காரணம் என்ன?
Answer:
நோய்கள் பெருகியிருப்பதற்குக் காரணம் :
மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.
மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள்.
சுற்றுச்சூழல் மாசு மற்றொரு காரணம்.
தன் உணவுக்காக வேறு எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், நிலத்தை உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான எண்ண மும் மனஅழுத்தமும் எது கேளிக்கை, எது குதூகலம், எது படிப்பு, எது சிந்தனை என்ற புரிதல் இல்லாமையும் கூடுதல் காரணங்கள் ஆகும்.
நம்முடைய வாழ்வியலைச் செம்மைப்படுத்துவதற்காக அறிவியல் அறிவை, மேம்பட்ட அறிவை வளர்த்தோம். ஆனால் நுண்ணறிவைத் தொலைத்துவிட்டோம். இயற்கையோடு இயைந்து வாழலாம் என்கிற அறிவை நாம் மறந்துவிட்டோம். இதுவே இன்றைக்குப் பல நோய்கள் பெருக மிக முக்கியமான காரணம் ஆகும்.
Question 2.
பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
Answer:
பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் :
(i) நோய் வந்த பின்பு மருத்துவமனைக்குச் செல்வதைவிட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
(ii) சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.
(iii) விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.
(iv) எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
(v) கணினித்திரையிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.
(vi) இரவுத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது.
(vii) உரிய நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்; அதிகாலையில் விழித்தெழுங்கள். உங்களை எந்த நோயும் அண்டாது.
நெடுவினா
Question 1.
தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”
என்றார் திருவள்ளுவர். அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள். தமிழ் மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்த விளங்கினர். உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் தமக்கென மரபு சார்ந்த மருத்துவ முறைகளை உருவாக்கிப் பின்பற்றி வந்தனர். அத்தகைய மருத்துவ முறைகள் பற்றிய செய்திகளை இக்கட்டுரை மூலம் அறியலாம்.
தொடக்கக் காலத்தில் தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தினர். தமிழர் மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் போன்றவற்றையும் உடலை வளப்படுத்தி உள்ளத்தைச் சீராக்கும் யோகம் முதலிய கலைகளையும் அறிந்திருந்தார்கள்.
மருத்துவ முறைகள் :
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம் என்றெல்லாம் மருத்துவமுறைகள் பல இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுதான். இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை, சுவை இவற்றைக் கொண்டே நோயைக் குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத் தெளிவாக விளக்கினர். தமிழர் மருத்துவம் நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்துள்ளது.
தமிழர் மருத்துவம் பின்தங்கியதும் மறுமலர்ச்சி அடைந்ததும் :
ஆங்கிலேயரின் வருகையால் நவீன மருத்துவம் தலை தூக்கியது. இம்மருத்துவம் துரிதமாகச் சில நோய்களைத் தீர்த்தன. அதனால் தமிழர் மருத்துவம் பின்தங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலிய நோய்களுக்குத் தீர்வு காண இரசாயன மருந்துகள் போதாது என்றும், இதனுடன் உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்றும் உணர்ந்தனர். மேலும் இம்மருத்துவமுறை பக்கவிளைவுகள் அற்றது என்பதாலும் மறுமலர்ச்சி அடைந்தது.
சித்த மருத்துவ மருந்துப் பொருள்கள் :
வேர், தழையால் குணமாகாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாகப் பயன்படுத்தினர். மேலும் ஒவ்வொருவருடைய உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு மருத்துவம் மாறுபடும். நோயாளியின் வாழ்வியல், சமூகச் சிக்கல், எண்ணப் போக்கு மரபுவழி எப்படிப்பட்டது என்பனவற்றை ஆராய்ந்து சிகிச்சை அளித்தது தமிழர் மருத்துவம்.
மருத்துவத்தில் பக்க விளைவுகள் :
ஒரு மருந்தை எடுத்துக் கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும். பக்க விளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது. சித்த மருத்துவத்தின் மீது தற்போது நடக்கும் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் அவற்றைத் தர நிர்ணயம் செய்து யாருக்கு எந்த மருந்து, எந்த அளவில், எந்தத் துணை மருந்துடன் கொடுத்தால் பக்க விளைவு இருக்காது என்று பட்டியலிட்டுள்ளனர்.
தமிழர் மருத்துவத்தின் சிறப்பு :
தனித்துவமான பார்வை தமிழர் மருத்துவத்தின் முதல் சிறப்பு. சூழலுக்கு இசைந்த மருத்துவம் இது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது. நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.
முடிவுரை :
நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின்படி நோயை மட்டுமன்றி அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்கும் தமிழ்
மருத்துவமுறையை நாமும் பின்பற்றி நோயின்றி வாழலாம்.
சிந்தனை வினா
Question 1.
நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?
Answer:
(i) அலட்சியம், முரண்பாடு இன்றி அளவோடு உணவு உண்ண வேண்டும்.
(ii) உணவை மென்று, மெதுவாக, உமிழ்நீர் நன்றாக சுரக்க, ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும்.
(iii) நீண்ட காலம் வாழவும் நோயின்றி வாழவும் உடற்பயிற்சி மிகவும் அவசியம்.
(iv) யோகாசனங்கள் செய்வதால் உடலும் மனதும் எப்பொழுதும் புத்துணர்வோடு இருக்கும்.
(v) ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும்.
(vi) நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுதல்.
(vii) நாள்தோறும் அரைமணி நேரம் நல்ல வேகமாக நடக்க வேண்டும்.
(viii) எளிமையாக வாழ விரும்புதல்.
(ix) கோபத்தைக் குறைத்துக் கொள்ளுதல்.
(x) அளவான உணவு, அளவான ஆசை, அளவான உறக்கம் இம்மூன்றும் அடிப்படை வழிகளாகும்.
கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
1. அருந்தும் உணவே ……………………. அறிந்தவர்கள் நம் தமிழ் மக்கள்.
2. ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு எனக் கூறும் நூல் ……………….. கூறியவர் ……………….
3. தமிழர்கள் பின்பற்றிய மருத்துவமுறை ……………. சார்ந்த மருத்துவமுறை.
Answer:
1. அருமருந்தென
2. திருக்குறள், திருவள்ளுவர்
3. மரபு
குறுவினாக்கள் :
Question 1.
சித்த மருத்துவதில் தாவரங்களின்றி மருந்தாகப் பயன்படுத்தப்பட்டவை எவை?
Answer:
சித்த மருத்துவத்தில் வேர், தழை ஆகியவற்றை மருந்துகளாகப் பயன்படுத்தினர். அவை மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாகப் பயன்படுத்தினார்கள். தாதுப் பொருட்களையும் உலோகத்தையும் மருந்துகளாக மாற்றும் வல்லமை பெற்றது சித்த மருத்துவம்.
Question 2.
எல்லோருடைய உடல்நலனுக்கும் உடல் அமைப்பிற்கும் ஒரே வகையான மருந்து ஏற்றதாக இருக்குமா?
Answer:
(i) ஒரே அளவு எடை கொண்ட பலர் வெவ்வேறு இடங்களில் இருக்கும்போது அவர்களுக்கு ஒரே வகையான மருந்து கொடுக்க முடியாது.
(ii) வாழ்வியல், சமூகச் சிக்கல், எண்ணப்போக்கு, உணவுமுறை, மரபுவழி என்பன ஒவ்வொருக்கும் வேறுபடும். அதனால் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் மருந்துகள் அளிக்க வேண்டும்.
Question 3.
தமிழர் மருத்துவத்தின் சிறப்பு யாது?
Answer:
(i) தமிழர் மருத்துவம் தனித்துவமான பார்வை மற்றும் சூழலுக்கு இசைந்த மருத்துவம் ஆகும். இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ
சுற்றுச்சூழலைச் சிதைக்காது.
(ii) மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல் நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.
(iii) ‘நோய்நாடி நோய் முதல் நாடி’ என்ற திருக்குறளின்படி ஒருவரை நோயில்லாத மனிதராக்குகிறது.
Question 4.
உடல் நலத்துக்காக உடலுக்கு நாள்தோறும் நாம் என்ன செய்ய வேண்டும்?
Answer:
(i) தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி, ஏழு மணி நேர தூக்கம், மூன்று லிட்டர் தண்ணீ ர் அருந்துதல் ஆகியன அவசியம்.
(ii) எங்கோ விளையும் ஆப்பிளைச் சாப்பிடுவதைவிட, நமது ஊரில் விளையும் கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி, நெல்லி, வாழைப்பழங்கள் ஆகியவற்றைக் காலை உணவுக்கு முன்பு சாப்பிடலாம்.
சிறுவினாக்கள்
Question 1.
பழந்தமிழர்களின் மருத்துவமுறைகளின் அடிப்படை யாது?
Answer:
பழந்தமிழர்களின் மருத்துவ முறைகளாவன சித்த மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம் ஆகியனவாகும்.
இவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுதான். தமிழரது நிலம், நிறைந்த பண்பாடுகளும் தத்துவங்களும் அடங்கியது. நோய்கள் எல்லாம் பேய், பிசாசுகளால் வருகின்றன. பாவ புண்ணியத்தால் வருகின்றன என்று உலகத்தின் பல பகுதிகளில் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.
நோயை இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை, சுவை இவற்றைக் கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத் தெளிவாக விளக்கினர். தமிழர் மருத்துவம் பண்பாட்டுக் கூறாக ஆகும்போது நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும் பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.
Question 2.
தமிழர் மருத்துவமுறை பின்தங்கிப் போனதற்குக் காரணம் என்ன?
Answer:
(i) நம்மீது நிகழ்ந்த படையெடுப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தின.
(ii) தமிழர் மருத்துவம் அவரவர் வாழ்வியலுடனும் தத்துவங்களுடனும் பிணைந்துதான் வந்துகொண்டிருந்தது.
(iii) சமண, பௌத்தர் காலத்தில் அந்தந்த மதங்களின் கூறுகள் நம் மருத்துவத்தில் இருந்தன.
(iv) பிறகு சைவம் ஓங்கியபோது சைவ சித்தாந்தத்தின் கூறுகள் கலந்தன. இறுதியில் ஆங்கிலேயர்கள் வந்தனர்.
(v) அவர்களுடைய நவீன அறிவியல் பார்வை நம்மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.
(vi) சித்த மருத்துவம் என்பது மரபு வழி மருத்துவமாகவும் நாட்டு மருத்துவமாகவும் சுருங்கியது.
(vii) இறுதியில் கிராமம் சார்ந்த மருத்துவமாக மாறிப்போனது. நவீன மருத்துவத்தில் துரிதமாகச் சில நோய்களுக்குக் கிடைத்த தீர்வுகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இக்காரணங்களால் தமிழர் மருத்துவமுறை பின்தங்கிப் போனது.
Question 3.
வாழ்வியல் நோய்களும் அவற்றைத் தீர்க்கும் தமிழ் மருத்துவம் பற்றிக் கூறுக.
Answer:
(i) சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு நோய் முதலியவை வாழ்வியல் நோய்கள் ஆகும்.
(ii) இந்நோய்கள் பரவலாக பெருகியது. இவற்றைத் தீர்க்க வெறும் இரசாயன மருந்துகள் மட்டும் போதாது. கூடவே உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகா இவையும் கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
(iii) தொடர் சிகிச்சைக்குப் பிறகு பக்கவிளைவுகள் இல்லா மருந்துகளை அளிக்கும் மரபு சார்ந்த மருத்துவ முறைகளை நவீன அறிவியல் கண்டறிந்தது.
(iv) அதனால் சித்த மருத்துவத்தின் தொன்மையையும் தமிழர்களின் தொன்மையையும் அறிந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது நாட்பட்ட நோய்களுக்கு மட்டுமல்லாமல் புதிய தொற்று நோய்களுக்கும் இம்மருத்துவமுறை பயன்படுகிறது.
Question 4.
மருத்துவத்தில் பக்கவிளைவுகள் பற்றி மருத்துவர் கூறிய கருத்துகளை எழுதுக.
Answer:
ஒரு மருந்தை எடுத்துக் கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும் பக்க விளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்கவிளைவுகள் இல்லை . அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது.
நம் உடல் உணவை எப்படி எடுத்துக் கொள்கிறதோ அப்படியேதான் சித்த மருத்துவத்தின் இலேகியத்தையும் சூரணத்தையும் எடுத்துக் கொள்ளும். அதனால் இம்மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை.
இருந்த போதிலும் சித்த மருத்துவத்தின் மீது தற்போது நடக்கும் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் அவற்றைத் தர நிர்ணயம் செய்து யாருக்கு எந்த மருந்து, எந்த அளவு, எந்தத் துணைமருந்துடன் கொடுத்தால் பக்கவிளைவு இருக்காது என்று பட்டியலிட்டுள்ளனர் என்று மருத்துவர் பக்கவிளைவுகள் பற்றிக் கூறியுள்ளனர்.
Question 5.
உடல் எடையைப் பற்றி பாடத்தின் மூலம் நீ அறிந்தவற்றை எழுதுக.
Answer:
உடல் எடை :
அழகுக்காக உடல் எடையைக் குறைப்பதும் மிகவும் மெலிவதும் நல்லதன்று. மரபு ரீதியாக ஒருவர் உடல் எடை அதிகமாக இருந்து, அவருக்கு எந்த நோயும் இல்லையென்றால் அவர் எடையைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எடை அதிகரிப்பால் சர்க்கரைநோய், இரத்தக் கொதிப்பு வர வாய்ப்புள்ளது என்றால் அவர் குறைத்துத்தான் ஆக வேண்டும்.
இன்றைக்குள்ள உணவுக் கட்டுப்பாட்டு முறைகள் நம் உடலுக்கு ஏற்றவையாக இருக்கிறதா என்பதை மருத்துவரிடம் கேட்டு முடிவெடுக்க வேண்டும். இணையத்தைப் பார்த்து ஒரே அடியாக எடையைக் குறைக்காமல் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் எடையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
உணவுக்காகச் சமையலறையில் செலவிடும் நேரத்தை, நல்வாழ்விற்காகச் செலவிடும் நேரம் என நினைத்து, உணவு உண்பதில் சில ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து வாழ வேண்டும்.