Students can Download 8th Tamil Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

Question 1.
தமிழக முதலமைச்சர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் 1
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் 2

Question 2.
எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் உள்ள சமூகநலன் சார்ந்த பாடல்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
சமூக நலன் சார்ந்த பாடல்கள் :
1. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம். – கண்ணதாசன்

2. கொடுத்த தெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான். – வாலி

3. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்ப அயல் நாட்டில்

4. “போர் படைதனில் தூங்கியவன்
வெற்றி இழந்தான்.
உயர் பள்ளியில் தூங்கியவன்
கல்வி இழந்தான்.
கடைதனில் தூங்கியவன்
முதல் இழந்தான்.
கொண்ட கடமையில் தூங்கியவன்
புகழ் இழந்தான்.”
– பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்

5. “உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்” – புலமைப்பித்தன்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

6. நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இந்த ஏழைகள் வேதனை படமாட்டார் .
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீ ர் கடலிலே விழமாட்டார்.

தெரிந்து தெளிவோம்

(i) கேரளாவைச் சேர்ந்தவர்களாகிய எம்.ஜி.ஆரின் பெற்றோர் குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். இலங்கையில் உள்ள கண்டியில் கி.பி.(பொ.ஆ.) 1917 சனவரித் திங்கள் பதினேழாம் நாள் கோபாலன் – சத்துயபாமா இணையருக்கு ஐந்தாம் மகனாக எம்.ஜி.ஆர். பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் தாயார் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து, கும்பகோணத்தில் குடியேறினார்.

(ii) சென்னைப் பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது. தமிழக அரசு அவர் நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது; சென்னைக் கடற்கரையில் இவருக்கு எழிலார்ந்த நினைவிடம் ஒன்றையும் அமைத்துள்ளது. அவரது இறப்புக்குப்பின் இந்திய அரசு, மிக உயரிய பாரத ரத்னா (இந்திய மாமணி) விருதினை 1988ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.

(iii) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஒட்டி (2017-2018) தமிழக அரசால் சென்னையிலும் ம மதுரையிலும் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
எம்.ஜி.ஆர் ………………… என்னும் ஊரில் கல்வி பயின்றார்.
அ) கண்டி
ஆ) கும்பகோணம்
இ) சென்னை
ஈ) மதுரை
Answer:
ஆ) கும்பகோணம்

Question 2.
எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் …………..
அ) நடிப்பு ஆர்வம்
ஆ) பள்ளி இல்லாமை
இ) குடும்ப வறுமை
ஈ) படிப்பில் ஆர்வமில்லாமை
Answer:
இ) குடும்ப வறுமை

Question 3.
இந்திய அரசு சிறந்த நடிகருக்கான …………. எனும் பட்டத்தை எம்.ஜி. டக்கு வழங்கியது.
அ) புரட்சித் தலைவர்
ஆ) பாரத்
இ) பாரத மாமணி
ஈ) புரட்சி நடிகர்
Answer:
ஆ) பாரத்

Question 4.
ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் …………
அ) திருச்சி
ஆ) சென்னை
இ) மதுரை
ஈ) கோவை
Answer:
இ) மதுரை

Question 5.
எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் …………..
அ) மதிய உணவுத் திட்டம்
ஆ) வீட்டு வசதித் திட்டம்
இ) மகளிர் நலன் திட்டம்
ஈ) இலவசக் காலணித் திட்டம்
Answer:
அ) மதிய உணவுத் திட்டம்

குறுவினா

Question 1.
எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் என்ன?
Answer:
எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் :
எம்.ஜி.ஆர். குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் தாயார் (இலங்கை) கண்டியில் இருந்து குழந்தைகளுடன் கும்பகோணத்திற்கு வந்து குடியேறினார். அங்குள்ள ஆனையடிப் பள்ளியில் பயின்றார். குடும்பநிலை காரணமாகப் படிப்பைத் தொடர முடியாமல் நாடகத் துறையில் ஈடுபட்டார்.

Question 2.
திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் யாவை?
Answer:
திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் :
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்.

Question 3.
எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்களுள் நான்கனை எழுதுக.
Answer:
எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்கள் :
(i) உழவர்களின் கடன் தள்ளுபடி.
(ii) ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்.
(iii) ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித்திட்டம்.
(iv) தாய்சேய் நல இல்லங்கள்.
(v) பற்பொடி வழங்கும் திட்டம்.
(vi) நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாடநூல் வழங்கும் திட்டம்.
(vii) முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்.
(viii) வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம். (மாணவர்கள் இவற்றில் எவையேனும் நான்கனை மட்டும் எழுதினால் போதுமானது)

சிறுவினா

Question 1.
பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த நிகழ்வை எழுதுக.
Answer:
பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த நிகழ்வு :
எம்.ஜி.ஆர். ஒருமுறை வெளியூரிலிருந்து மகிழ்வுந்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் மூதாட்டி ஒருவரும் பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் தலையில் புல்கட்டுகளைச் சுமந்தவாறு கால்களில் காலணிகள் இல்லாமல் சென்று கொண்டிருந்தனர்.

சாலையின் சூடு பொறுக்க முடியாமல் அவர்கள் சாலையோர மரநிழலில் நிற்பதும் ஓடுவதுமாக இருந்ததைக் கண்ட எம்.ஜி.ஆர். உடனே தமது மகிழ்வுந்தை நிறுத்தச் செய்தார்.

உடன் வந்த தமது துணைவியாரது காலணியையும் உறவினரான பெண்ணின் காலணியையும் அவர்களிடம் கொடுக்கச் செய்தார். மேலும் அவர்களுக்குப் பணமும் கொடுத்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.

ஏழை எளியவர்கள் காலில் காலணிகூட இல்லாமல் நடந்து செல்லும் இந்நிகழ்ச்சி அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனால், பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

Question 2.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் யாவை?
Answer:
தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் :
(i) பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுத்து முறையை எளிமைப்படுத்தினார்.
(ii) மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.
(iii) தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்.

நெடுவினா

Question 1.
எம்.ஜி.ஆரின் பண்புநலன்களை விளக்கி எழுதுக.
Answer:
எம்.ஜி.ஆரின் பண்புநலன்கள் :
எம்.ஜி.ஆர். ஒரு முறை வெளியூரிலிருந்து மகிழ்வுந்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் மூதாட்டி ஒருவரும் பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் தலையில் புல்கட்டுகளைச் சுமந்தவாறு கால்களில் காலணிகள் இல்லாமல் சென்று கொண்டிருந்தனர். சாலையின் சூடு பொறுக்க முடியாமல் அவர்கள் சாலையோர மரநிழலில் நிற்பதும் ஓடுவதுமாக இருந்ததைக் கண்ட எம்.ஜி.ஆர். உடனே தமது மகிழ்வுந்தை நிறுத்தச் செய்தார்.

உடன் வந்த தமது துணைவியாரது காலணியையும் உறவினரான பெண்ணின் காலணியையும் அவர்களிடம் கொடுக்கச் செய்தார். மேலும் அவர்களுக்குப் பணமும் கொடுத்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். ஏழை எளியவர்கள் காலில் காலணிகூட இல்லாமல் நடந்து செல்லும் இந்நிகழ்ச்சி அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனால், பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தினார்.

எம்.ஜி.ஆர். ஒரு முறை படப்பிடிப்பிற்காகக் காஷ்மீருக்குச் சென்றிருந்தார். அங்கிருந்த இந்தியப் படைவீரர் நலச்சங்கத்தினர் தமது சங்கவிழாவிற்கு எம்.ஜி.ஆர். வருகைதர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அதற்கு ஒப்புக்கொண்ட அவர் அச்சங்கத்திற்கு நன்கொடை வழங்க விரும்பினார்.

ஆனால் அப்பொழுது அவரிடம் பணம் இல்லை. – எனவே, அங்குத் தங்கியிருந்த தமிழ்நாட்டுத் தொழிலதிபர் ஒருவரிடம் பெருந்தொகையைக் கடனாகப் பெற்று அதனை நன்கொடையாக வழங்கினார். சென்னை திரும்பியதும் முதல் வேலையாக அத்தொகையைத் திருப்பிக் கொடுத்தார்.

இவ்வாறு பிறர் வியக்கத்தக்க வகையில் தம் செல்வத்தை வாரி வழங்கியமையால் தான் அவரைப் பொன்மனச்செம்மல் என்று மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

சிந்தனை வினா

Question 1.
சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகள் :
(i) விடாமுயற்சியுடனும் சுய அறிவாற்றலுடனும் அவர்களுக்கென தனிப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுதல்.

(ii) பொறுமையுடன் செயல்களைச் செய்தல், தன்னிடம் வரும் பிரச்சனைகளைப் பொறுமையுடன் தீர்த்து வைத்தல்.

(iii) குறைவாய்ப் பேசி நிறைவாய் வேலை செய்யும் மனமுடையவராய் இருத்தல்.

(iv) இது இல்லை அது இல்லை என்று கூறாமல் ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பதைப் போல் இருக்கும் வளத்தைப் பயன்படுத்தி செயல்களைச் செய்தல்.

(v) பிறருடைய கருத்துகளுக்கும் மதிப்பு அளித்தல்.

(vi) தன்னிடம் நியாயம் இருந்தாலும் யாரிடமும் விவாதம் செய்யாமல் இருத்தல்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. மதிய உணவுத் திட்டம் …………………. காலத்தில் தொடங்கப்பட்டது.
2. மதிய உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு …………………. என அழைக்கப்பட்டது.
3. எம்.ஜி. இராமச்சந்திரன் ………………. என்று அழைக்கப்பட்டவர்.
4. எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் ……………………….
5. எம்.ஜி.ஆர். பிறந்த நாள் ……………..
6. எம்.ஜி.ஆரின் பெற்றோர் ………………………
7. எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் குடியேறிய இடம் …………………
8. எம்.ஜி.ஆருக்கு இந்திய அரசு வழங்கிய பட்டம் ………………………….
9. எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கியப் பட்டம் …………………
10. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட ஆண்டு …………………,
11. எம்.ஜி.ஆர். ………………………… என்றெல்லாம் அழைக்கப்பெற்றார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்
Answer:
1. காமராசர்
2. சத்துணவுத் திட்டம்
3. புரட்சித் தலைவர்
4. இலங்கையில் உள்ள கண்டி
5. 17-1-1917
6. கோபாலன் – சத்தியபாமா
7. கும்பகோணம்
8. பாரத் பட்டம்
9. டாக்டா பட்டம்
10. 2017-2018
11. புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர்

விடையளி :

Question 1.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழக அரசு எம்.ஜி.ஆருக்குச் செய்த சிறப்பு யாது?
Answer:
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி (2017-2018) தமிழக அரசு, சென்னையிலும் மதுரையிலும் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டி அவருக்குச் சிறப்பு செய்துள்ளது.

Question 2.
எம்.ஜி.ஆர் ஏன் பொன்மனச்செம்மல் என அழைக்கப் பெற்றார்?
Answer:
எம்.ஜி.ஆர் பிறர் வியக்கத்தக்க வகையில் தம் செல்வத்தை வாரி வழங்கியமையால் பொன்மனச்செம்மல் என்று அழைக்கப் பெற்றார்.

Question 3.
எம்.ஜி.ஆரிருக்குக் கிடைத்த சிறப்புகள் யாவை?
Answer:
சென்னைப் பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது. தமிழக அரசு அவர் நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது; சென்னைக் கடற்கரையில் இவருக்கு எழிலார்ந்த நினைவிடம் ஒன்றையும் அமைத்துள்ளது. அவரது இறப்புக்குப்பின் இந்திய அரசு, மிக உயரிய பாரத ரத்னா (இந்திய மாமணி) விருதினை 1988ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

Question 4.
எம்.ஜி.ஆரின் இளமைக்காலம் குறித்து எழுதுக.
Answer:
எம்.ஜி.ஆரின் பெற்றோர் கேரளாவைச் சார்ந்தவர்கள். இவர்கள் குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். இலங்கையில் உள்ள கண்டியில் கி.பி. 1917 சனவரித் திங்கள் பதினேழாம் நாள் கோபாலன் – சத்தியபாமா இணையருக்கு ஐந்தாம் மகனாக எம்.ஜி.ஆர் பிறந்தார்.

இவர் குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் தாயார் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப வறுமை காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாமல் நாடகக் குழுவில் சேர்ந்தார்.

Leave a Reply