Students can Download 8th Tamil Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
கற்பவை கற்றபின்
Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள வல்லினம் மிகும், மிகா இடங்களைக் கோடிட்டு அறிக. அவற்றின் காரணங்களை எழுதுக.
Answer:
வல்லினம் மிகும் இடம் :
(i) தாக்குதலைக் கண்ட – இரண்டாம் வேற்றுமை விரி
(ii) தாவிக்குதித்து – வினையெச்சம்
(iii) இந்தத் திட்டம் – “இந்த” சுட்டுத் திரிபு
(iv) கலிங்கப்படையினர் – கலிங்கம் + படை : மகரமெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்துள்ளது.
(v) இறப்புக்குப்பின் – நான்காம் வேற்றுமை விரி
வல்லினம் மிகா இடம் :
(i) சிறுசிறு – அடுக்குத்தொடர்
(ii) காமராசர் காலத்தில் – எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
(iii) நடித்த கதைமாந்தர் – பெயரெச்சத் தொடர்
(iv) பாடம் படிக்கின்றனர் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
(v) இரண்டு சிறுவர்கள் – எண்ணுப் பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் தவிர பிற எண்ணுப் பெயர்களில் வல்லினம் மிகாது.
(vi) துணைவியாரது காலணி – ஆறாம் வேற்றுமைத் தொடர்
மதிப்பீடு
பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக.
1. சுட்டுத் திரிபு – மிகும்
2. திசைப் பெயர்கள் – மிகும்
3. பெயரெச்சம் – மிகாது
4. உவமைத் தொகை – மிகும்
5. நான்காம் வேற்றுமை விரி – மிகும்
6. இரண்டாம் வேற்றுமை தொகை – மிகாது
7. வினைத்தொகை – மிகாது
8. உருவகம் – மிகும்
9. எழுவாய்த் தொடர் – மிகாது
10. எதிர்மறைப் பெயரெச்சம் – மிகாது
சிறுவினா
Question 1.
சந்திப்பிழை என்றால் என்ன?
Answer:
வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுவதுவதும் மிகக்கூடாத இடத்தில் வல்லின மெய்இட்டு எழுதுவதும் தவறாகும். இது சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை எனப்படும்.
Question 2.
வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக.
Answer:
வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்கள் :
(i) இரண்டாம் வேற்றுமை உருபாதிய வெளிப்படையாக வருடத்தில் வல்லினம் மிகும்
எ.கா. தலையைக் காட்டு.
(ii) நான்காம் வேற்றுமை உருபாகிய ‘கு’ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.
எ.கா. எனக்குத் தெரியும்.
Question 3.
வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தனை எழுதுக.
Answer:
வல்லினம் மிகாத் தொடர்கள் :
(i) எழுவாய்த் தொடர் – தம்பி படித்தான்
(ii) பெயரெச்சம் – எழுதிய பாடல்
(iii) எதிர்மறைப் பெயரெச்சம் – எழுதாத பாடல்
(iv) வினைத் தொகை – சுடுசோறு
(v) உம்மைத் தொகை – தாய்தந்தை
மொழியை ஆள்வோம்
கேட்க
Question 1.
நாட்டுப்பற்றை வளர்க்கும் நாடகங்களின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே நாட்டுப்பற்றை வளர்க்கும் நாடகங்களை ஒலிப்பதிவுகளை கேட்டு மகிழ வேண்டும்.
கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.
Question 1.
நான் விரும்பும் தலைவர்.
Answer:
நான் விரும்பும் தலைவர் – வ.உ.சி
அவையோர்க்கு வணக்கம் ! நான் விரும்பிய தலைவரான வ.உ.சிதம்பரனாரைப் பற்றிப் பேச வந்துள்ளேன்.
சுதந்திரப் போருக்கு மகாத்மா காந்தி தலைமை ஏற்பதற்கு முன்பே, சுதந்திரப் போரில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்டவர் ‘கப்பலோட்டிய தமிழன்” வ. உ. சிதம்பரம் பிள்ளை . பாலகங்காதர திலகரைத் தன் குருவாக ஏற்றவர்.
வெள்ளையர்களின் கடல் வாணிகத்தை ஒடுக்குவதற்காகவே சுதேசி கப்பலை ஓட்டியவர். அதற்காக அவர் செய்தவை ஏராளம். வெள்ளையர்களுக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்க அவர் விரும்பினார். 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி” என்ற பெயரில் கப்பல் கம்பெனி தொடங்கப் பதிவு செய்தார்.
பத்து லட்சம் ரூபாயைத் திரட்டினார். வடநாட்டுக்குச் சென்று, காங்கிரசு தலைவர்களின் உதவியுடன் “காலியா”, “லாவோ” என்ற பெயர்களுடைய கப்பல்களை வாங்கிக் கொண்டு வெற்றிகரமாகத் தமிழகம் திரும்பினார். இவருடைய கப்பல் கம்பெனிக்குப் பொதுமக்கள் ஆதரவு அளித்தனர். இதனால் வெள்ளையர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இதனால் அரசாங்கத்துக்கு எதிராகப் பேசியதாகவும், அரசுக்கு எதிரியான சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் சிதம்பரனார் மீது வழக்குத் தொடரப்பட்டது. அரசுக்கு எதிராகப் பேசிய குற்றத்திற்காக ஓர் ஆயுள் தண்டனையும் சுப்பிரமணிய சிவாவிற்கு அடைக்கலம் தந்ததற்காக இன்னொரு ஆயுள் தண்டனையும் ஆண்டுகள்) விதிக்கப்பட்டது.
தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த அப்பீலை விசாரித்து, இரட்டை ஆயுள் தண்டனையை 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைத்தது.
கோவை, கண்ணனூர் சிறைகளில் தமது தண்டனைக் காலத்தைச் சிதம்பரனார் கழித்தார். சிறையில் செக்கிழுத்தார், கல்லுடைத்தார். 1912 டிசம்பர் மாத இறுதியில் சிதம்பரனார் விடுதலையானார்.
விடுதலையான பிறகும் வ.உ.சி பல துன்பங்களை அனுபவித்தார். அவர் வழக்கறிஞர் பட்டம் பெற்றிருந்த போதிலும் அதை ஆங்கிலேய அரசு பறிமுதல் செய்துவிட்டதால், அவர் எண்ணெய் வியாபாரம் செய்தார். மளிகைக் கடை நடத்தினார். தம் தாய்த்திருநாட்டிற்குப் பல தியாகங்களைச் செய்து வாழ்ந்தவர் என்பதால் இவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி!
Question 2.
நான் முதலமைச்சர் ஆனால்…
Answer:
நான் முதலமைச்சரானால் நம் தமிழ்நாட்டிற்குப் பல நன்மைகள் செய்வேன். நான் முதலில் கல்வியில் சீர்திருத்தம் செய்வேன். அழியாத சொத்து கல்வி. கல்வி எவராலும் எப்போதும் அழிக்க முடியாத சொத்து. அதுமட்டுமன்று. ஒரு நாட்டில் அனைத்தையும் ஆக்கும் வல்லமை கல்விக்கு மட்டும்தான் உண்டு.
கல்வித்துறையினர் நினைத்தால் உயர்ந்த அறிவும், ஆற்றலும், பெருமையும், பொருள் வளமும் உள்ள மக்களை உருவாக்க முடியும். ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டில் கல்வித்துறை எவ்வளவு வளர்ச்சியடைந்தது என்பதைப் பொருத்துத்தான் உள்ளது. நாடு கல்வியால் உயர்ந்தால் வல்லரசு நாடாக மாறும்.
அதனால் என் முதல் பணியே கல்வியை மேம்படுத்துவதுதான். கல்வி கேள்வியில் சிறந்த சான்றோர்களின் ஆலோசனையின்படி பல புதிய சீர்திருத்தம் மேற்கொள்வேன். கிராமப்புற மாணவர்களும் கல்வி கற்கும் வண்ணம் சட்டங்கள் இயற்றுவேன்.
அடுத்ததாகப் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு நான் முனைந்து பாடுபடுவேன். அதற்கு உற்பத்திப் பெருக்கம் செய்து பொருள்களை ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியைப் பெருமளவில் ஈட்டுவேன்.
வேளாண்மையில் புதுமைகள் செய்வேன். பலவிதமான உதவிகளை உழவர்களுக்குச் செய்து, அவர்கள் நன்முறையில் வேளாண் தொழிலை வளர்ப்பதற்கு வழி செய்வேன். நவீன முறை விவசாயமான வேதியுரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்தி இயற்கை வேளாண்மையான அங்க வேளாண்மையை செய்யும்படி வலியுறுத்துவேன்.
ஏரி குளங்களைத் தூர்வாரி நீர்நிலைகளை வளப்படுத்துவேன். அணைகள் தேவையெனில் அணைகள் கட்டி நீர்ப்பாசன வசதியைப் பெருக்குவேன். விலைவாசிகள் ஏறாதபடி பார்த்துக்கொள்வேன்.
சமுதாயத்தின் சீர்கேடுகளை குலைக்கும் எத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தமாட்டேன். அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவேன். அரசு வேலை அல்லது அரசு சார்ந்த வேலை இவற்றின் மூலம் தகுதி வாய்ந்த இளைஞர்களை பணியில் அமர்த்துவேன். மக்கள் செல்வச் செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ என்னென்ன செய்ய இயலுமோ அவற்றைக் கட்டாயம் செய்வேன். என்னுடைய தலைமையின் கீழ் உள்ள மக்கள் அச்சமின்றி வாழவும் வழி செய்வேன். நன்றி!
சொல்லக் கேட்டு எழுதுக
அனைவருக்கும் தலைவராகும் விருப்பம் இருக்கலாம். ஆனால் சிறந்த ஆளுமைப் பண்பும் அனைவரையும் கட்டுப்படுத்தும் திறனும் இருப்பவர்களால்தான் தலைவர்கள் ஆக முடிகிறது. எடுத்துக்காட்டாகப் பின்வரும் நிகழ்வுகளைக் காணலாம். ஒரு விளையாட்டு அணியின் தலைவருக்கான தேர்வு நடந்தது.
அணியின் பயிற்சியாளர் வீரர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொண்டார். சிலர் தங்களைத் தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப் என அறிமுகப்படுத்திக் கொள்ள, ஒருவர் மட்டும் தன்னை ‘இந்தியர்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவர்தான் அணியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காரணம் மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டியதும். ‘இந்தியர்’ என்று குழுவாகச் சிந்தித்ததுமே ஆகும். இப்படிப்பட்ட தகுதிகள் இருந்தால் நீங்களும் தலைவர் ஆகலாம்.
அறிந்து பயன்படுத்துவோம்
எதிர்மறைச் சொற்கள்
வந்தது நீ அல்ல; பார்த்தது நான் அல்ல; நான் படித்த புத்தகம் இது அல்ல என்றெல்லாம் பேசுகின்றோம். இவையெல்லாம் சரியான தொடர்கள் அல்ல. எதிர்மறை வினைமுற்றுகள் பல உண்டு. அவற்றை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.
பின்வரும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
Question 1.
அதைச் செய்தது நான் அன்று.
Answer:
அதைச் செய்தது நான் அல்லேன்.
Question 2.
பானையை உடைத்தது கண்ணன் அல்ல.
Answer:
பானையை உடைத்தது கண்ணன் அல்லன்.
Question 3.
மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை.
Answer:
மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்ற.
Question 4.
சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.
Answer:
சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்.
Question 5.
பகைவர் நீவீர் அல்லர்.
Answer:
பகைவர் நீவீர் அல்லீர்.
சரியான எதிர்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக.
1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை …………….
2. உங்களோடு வருவோர் ……………. அல்லோம்.
3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் …………….
4. மொய்த்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன ……………
5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் …………. அல்லை.
Answer:
1. அல்ல
2. நாம்
3. அல்லள்
4. அன்ற
5. நீ
கட்டுரை எழுதுக.
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு
முன்னுரை :
‘விதைத்ததே விளையும்’ என்பது நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற பொன்மொழியாகும். ஒரு மனிதன் தன் இளமைப் பருவத்தில் கற்றுக் கொள்பவைகளைப் பின்பற்றியே வாழ்கிறான். ஆதலால் இப்பருவத்தில் தொண்டு செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மாற்றங்களின் விதை :
‘இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது’ என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களின் மாறுபட்ட அணுகுமுறை நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும். அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இவை மாற்றங்களுக்கு வித்திடுகிறது.
தொண்டு :
இளைஞர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும் நாடும் நலம் பெறும். பிற உயிரினங்களின் துன்பத்தைக் கண்டு அதனைத் தாங்கிக்கொள்ளாமல் உடனே ஓடிச் சென்று உதவுவதுதான் தொண்டு.
இளைஞர்களின் பங்கு :
வறுமை, கல்வியின்மை , அறியாமை, சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சமுதாயம் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் ஓர் உறுப்பாய் விளங்கும் இளைஞர்கள் இச்சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான செயல்களைச் செய்ய வேண்டும்.
பிற பணிகள் :
புயல் வெள்ளம் போன்ற காலங்களில் மீட்புக் குழுவினரோடு சேர்ந்து ஐம்பது சதவீதம் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். இது போதாது. அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும். காலரா, பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
முடிவுரை :
மக்களுக்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டவுடன் உதவி புரியும் தொண்டுள்ளம் படைத்த இளைஞர்களாலேயே நாடு வளம் பெறும் நலம் பெறும், என்பதை உணர்வோமாக.
மொழியோடு விளையாடு
வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.
கதை நிகழ்வுக்கேற்பச் சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துக.
1. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
3. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
4. அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
5. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
6. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
Answer:
1. அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
3. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
4. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
5. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
6. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள் …
1. தலைமைக்குரிய பண்புகளை அறிந்து வளர்த்துக் கொள்வேன்.
2. சமூக மாற்றத்திற்குக் காரணமான தலைவர்களின் வரலாறுகளை அறிந்து போற்றுவேன்.
கலைச்சொல் அறிவோம்
1. குதிரையேற்றம் – Equestrian
2. கதாநாயகன் – The Hero
3. முதலமைச்சர் – Chief Minister
4. தலைமைப்பண்பு – Leadership
5. ஆதரவு – Support
6. வரி – Tax
7. வெற்றி – Victory
8. சட்டமன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly
கூடுதல் வினாக்கள்
நிரப்புக .
1. எண்ணுப்பெயர்களில் ………………… ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்.
2. வடக்கு + தெரு சேர்த்து எழுதக் கிடைப்பது ……………..
3. சுட்டுத்திரிபு வினாத்திரியை அடுத்து வல்லினம் ……………..
4. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடா குற்றியலுகரமாகவோ, ………………….. குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது.
Answer:
1. எட்டு, பத்து
2. வடக்குத்தெரு
3. மிகும்
4. இடைத்தொடர்க்
விடையளி :
Question 1.
வல்லினம் மிகும் இடங்களுக்குச் சில சான்றுகள் தருக.
Answer:
(i) சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்.
எ.கா: அந்தப்பக்கம்
(ii) வினாத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்.
எ.கா: எந்தச்சட்டை ?
(iii) இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை வெளிப்படையாக வரும் இடங்களில் வல்லினம் மிகும்.
எ.கா: பாடத்தைப்படி (ஐ) ; அவனுக்கு பிடிக்கும் ,
Question 2.
வல்லினம் மிகா இடங்களுக்கு இரண்டு சான்றுகள் தருக
Answer:
(i) எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
சான்று: தம்பி படித்தான்.
(ii) வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
சான்று: சுடு சோறு.
Question 3.
மண்வெட்டி கொண்டு வா.
Answer:
மண்வெட்டிக் கொண்டு வா – இத்தொடர்களின் பொருள் எழுதுக.
(i) மண்வெட்டி கொண்டு வா – மண்வெட்டியை எடுத்து வா.
(ii) மண்வெட்டிக் கொண்டு வா – மண்ணை வெட்டி எடுத்து வா.