Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 2 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Tamil Model Question Paper 2

நேரம்: 2.30 மணி 
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

 • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
 • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
 • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
 • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
 • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
 • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
 • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
காளைகளின் பல இனங்களைக் காட்டும் நூல் …………………..
(அ) குறிஞ்சிக்கலி
(ஆ) முல்லைக்கலி
(இ) மருதக்கலி
(ஈ) நெய்தற்கலி
Answer:
(ஆ) முல்லைக்கலி

Question 2.
கிடை என்பது ……….ன் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அறைக்கும் குறுநாவல்.
(அ) ஆடு
(ஆ) மாடு
(இ) மான்
(ஈ) மிளா
Answer:
(அ) ஆடு

Question 3
………….. ஆண்டுதான் வெப்பமான ஆண்டு என இந்திய வானிலை அறிவித்தது.
(அ) 2008
(ஆ) 2009
(இ) 2010
(ஈ) 2012
Answer:
(ஆ) 2009

Question 4.
சங்க காலத்தில் இல்லாத சொற்களான………… சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன.
(அ) திருமணம், மறுமணம்
ஆ) நிதியம், சங்கம்
(இ) அறவோர், துறவோர்
(ஈ) அவை, மன்றம்
Answer:
(இ) அறவோர், துறவோர்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 5.
கவிச்சக்ரவர்த்தி கம்பன் வாழ்ந்த காலம்…….. நூற்றாண்டு ஆகும்.
(அ) 10-ம்
(ஆ) 11-ம்
(இ) 12-ம்
(ஈ) 15-ம்
Answer:
(இ) 12-ம்

Question 6.
பழங்காலத்தில் ‘கணக்கு’ என …………ஐ அழைத்தனர்.
(அ) ஆசிரியர்
(ஆ) நூல்
(இ) குடும்பம்
(ஈ) மரம்
Answer:
(ஆ) நூல்

Question 7.
ஓலைச்சுவடிகளில் துளையிட்டுக் கட்டும் முறைக்கு………. என்று பெயர்.
(அ) தூக்கு
(ஆ) நாராசம்
(இ) பானையேடு
(ஈ) முறைமை
Answer:
(ஆ) நாராசம்

Question 8.
மனித மனங்களில் நின்று நிலைக்க வேண்டியவற்றுள் முதன்மையானது……….. ஆகும்.
(அ) அறங்க ள்
(ஆ) புகழ்
(இ) செல்வம்
(ஈ) உறவுகள்
Answer:
(அ) அறங்க ள்

Question 9.
துறவுக்கு எதிரானது………. ஆசை என வள்ளலார் கூறுகிறார்.
ஆ) மண்
ஆ) பொன்
(இ) பெண்
(ஈ) பணம்
Answer:
(இ) பெண்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 10.
பாரதியார் இராமலிங்கரை…………. எனப் புகழ்ந்தார்.
(அ) புதுமுதுநெறிகண்ட புலவர்
(ஆ) புதுவழி தந்த வள்ளல்
(இ) நிறைமொழி தந்த செம்மல்
(ஈ) ஆன்மிகம் தந்தசோதி
Answer:
(அ) புதுமுதுநெறிகண்ட புலவர்

Question 11.
அகநானூறு என்ற சொல்லை ………… எனப் பிரிப்பதே சரி.
(அ) அக + நானூறு
(ஆ) அகம் + நான்கு + நூறு
(இ) அகநான்கு + நூறு
(ஈ) அகம் + நானூறு
Answer:
(ஆ) அகம் + நான்கு + நூறு

Question 12.
அம்மூவனார்………. திணை பாடுவதில் சிறந்தவர்.
(அ) குறிஞ்சி
(ஆ) முல்லை
(இ) மருதம்
(ஈ) நெய்தல்
Answer:
(ஈ) நெய்தல்

Question 13.
ரயிலின் வருகை என்ற படத்தினை கிராண்ட்க பே விடுதியின் திரையிட்டவர்கள்……….. சகோதரர்கள் ஆவர்.
அ) ரைட்
(ஆ) லூமியர்
(இ) மார்டன்
(ஈ) சார்லி
Answer:
(ஆ) லூமியர்

Question 14.
பாட்டும், உரைநடையும் கலந்து வந்த காப்பியம் ……….
(அ) மணிமேகலை
(ஆ) சீவகசிந்தாமணி
(இ) வளையாபதி
(ஈ) சிலப்பதிகாரம்
Answer:
(ஈ) சிலப்பதிகாரம்

பகுதி-1

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.[12 x 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
காப்பியத்தின் சிறப்பு யாது?
Answer:

 • ஒரு மொழியின் வளத்தைக் காப்பியங்களே புலப்படுத்தும் என்பர்.
 • எளிய நடை, இனிய கதை, அழகியல், கற்பனை ஆகியவை ஒருசேர அமைந்த இலக்கிய வடிவமே காப்பியமாகும்.
 • காவியமானாலும், ஓவியமானாலும் இன்பம் தந்து வாழ்க்கையை உயர்த்த வேண்டும்.
 • இன்றைக்கு மனிதனுடைய எண்ணங்களும் சுவையுணர்ச்சியும் கற்பனை ஆற்றலும் விரிந்திருக்கின்றன.
 • பண்பாட்டிற்கேற்ற மரபைத் தெரிந்துகொண்டு பழமைக்குப் புதிய உருவமும் புதுமைக்குப் பழைய உரமும் இணைந்த காப்பியங்கள் காலந்தோறும் தோன்ற வேண்டும்.

Question 16.
தமிழ்நதி இயற்றிய படைப்புகள் யாவை?
Answer:

 • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்)
 • சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்)
 • கானல் வரி (குறுநாவல்)
 • ஈழம்: கைவிட்ட தேசம், பார்த்தீனியம் (நாவல்)

Question 17.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு என்பதை விளக்குக.
Answer:

 • ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அத்தனித்தன்மை அடையாளம் காணப்படுகையில் எழுச்சியும் ஊக்கமும் உடன் இணைந்துகொள்கிறது.
 • அடையாளம் இழந்த ஒருவர், முகத்தைத் தொலைத்தவராகிறார். சமூகத்தின் இறுக்கமான குடும்பக் கட்டுமானத்தில் சிக்கித் திணரும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தொலைத்ததை மீட்கும் வேட்கை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

Question 18.
மஸ்னவி என்றால் என்ன?
Answer:
ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பு நூலே ‘மஸ்னவி ‘ ஆகும். இந்த மஸ்னவி படைப்பில் 25,600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு ஆகும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

பிரிவு – 2

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 19.
தனிக்குடும்பம் என்றால் என்ன?
Answer:
தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை மற்றும் எளிய நிலை மற்றும் நெருக்கமான தனிக்குடும்பம் எனப்படுகிறது.

Question 20.
தமிழாய்வு நூலகங்கள் எவை?
Answer:

 • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்
 • ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
 • மறைமலையடிகள் நூலகம்
 • செம்மொழி தமிழாய்வு நூலகம்

Question 21.
சேய்மைக் காட்சித்துணிப்பு என்றால் என்ன?
Answer:

 • பேருந்தைப் பிடிக்க, சாலையைக் கடக்கும் போது சாலைகளின் இரு பக்கங்களிலும் பார்க்கிறோம்.
 • அப்போது நம் கண்கள் இன்னும் கொஞ்சம் சுருங்கி, பொருள்கள் அசைவதைத் தொலைவிலிருந்து பார்த்துப் பதிவுசெய்கின்றன.
 • திரைப்படத்தில் இதனைச் சேய்மைக் காட்சித்துணிப்பு எனலாம்.

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) வியர்த்த னர் (ஆ) வாழியர்
Answer:
(அ) வியர் + த் + த் + அன் + அர் – வியர்த்த னர்
வியர் – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அர் – பலர்பால் வினைமுற்று விகுதி

(ஆ) வாழ் + இயர் – வாழியர்
வாழ் – பகுதி
இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக்குறிப்பு தருக.
(அ) புக்க
(ஆ) அறியாத
Answer:
(அ) புக்க – பெயரெச்சம்
(ஆ) அறியாத – எதிர்மறைப் பெயரெச்சம்

Question 24.
மரபுப்பிழை நீக்குக.
சோளந்தோப்பிற்குள் மாட்டிக் கொண்ட எருமைக்குட்டி வெளியேற முடியாமல் தவித்தது.
Answer:
சோளக் கொல்லைக்குள் மாட்டிக் கொண்ட எருமைக்கன்று வெளியேற முடியாமல் தவித்தது.

Question 25.
ஏதேனும் ஒன்றிற்குப் பிரித்து புணர்ச்சி விதி தருக.
(அ) விண்ணுலகு
(ஆ) மலையருவி
Answer:
(அ) விண் + உலகு – விண்ணுலகு
விண் + ண் + உலகு – விண்ணுலகு
விதி : (1) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்.
(2) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.

(ஆ) மலை + அருவி – மலையருவி
மலை + ய் + அருவி – மலையருவி
விதி : இ ஈஐ வழி யவ்வும்; உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.

Question 26.
தனித்தமிழில் எழுதுக.
டயாபடிக் பேஷண்ட் இனிப்பு சாப்பிடுவதை ஸ்டாப் செய்ய வேண்டும்.
Answer:
நீரிழிவு நோயாளி இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

Question 27.
மயங்கொலிச் சொற்களின் பொருள் வேறுபடுமாறு ஒரே தொடரை அமைக்கவும்.
பனி – பணி
Answer:
பனிப்பொழிவு அதிகமாக இருந்தபோதிலும் அதிகாலையிலேயே பணிக்குச் சென்றேன்.

Question 28.
விடைக்கேற்ற வினா எழுதுக.
ஸ்ரீகிருஷ்ணரால் நரகாசுரன் கொல்லப்பட்டான்.
Answer:
நரகாசுரன் யாரால் கொல்லப்பட்டான்?

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 29.
உரிய இடங்களில் வல்லினம் சேர்த்து எழுதுக.
புறநானூறு நூலின் சிறப்பு கருதி இதனை பலரும் ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழி ஆக்கம் செய்துள்ளனர்.
Answer:
புறநானூறு நூலின் சிறப்புக் கருதி இதனைப் பலரும் ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழி ஆக்கம் செய்துள்ளனர்.

Question 30.
மரபுச் சொற்களைத் தொடரில் அமை.
வழிவழியாக
Answer:
ஆண்டுதோறும் எங்கள் குடும்பத்தினர் வழிவழியாகக் குலதெய்வ வழிபாடுகள் நிகழ்த்துகின்றார்கள்.

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 x 4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 31.
‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
Answer:

 • செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் – செம்மையான சூரியன் அதாவது மாலைப் பொழுதில் தோன்றும் சிவப்பு நிற சூரியன் மலைகளின் மேடு அதாவது மலையின் உச்சியில் சென்று மறைந்து போவான்.
 • செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம் – செம்மையான நிறம் கொண்ட பூக்கள் போல அத்தருணத்தில் வானம் எல்லாம் சிவப்பு வண்ணமாய் அந்த மாலைப் பொழுதில் நிறம் மாறி
  நிற்கும்.

Question 32.
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.
Answer:

 • இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
 • எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டுவந்து வைத்தான்.
 • தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டுவந்து தூவினான். மணலினால், மேடையைத் திருத்தமாக அமைத்தான்.
 • நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.

Question 33.
புதுக்கவிதையின் சிறப்பைக் கூறுக.
Answer:

 • பாரதிக்குப் பின்னர் வந்த காலகட்டத்துக் கவிதைகள், பலவற்றையும் பற்றிய சிந்தனைகளைச்
  செறிவாக, குறிப்பாக, முரணாக, அழகிய தொடராகத் தருவதற்கு முயன்றன.
 • புதுக்கவிதை வடிவம் இதற்கு ஏற்றதாக இருந்தது; இருக்கிறது.
 • புதுக்கவிதை, புதிய வடிவம் கொண்ட கவிதை என்ற பொருள் மட்டும் கொண்டதல்ல புதிய சிந்தனைகளையும் புதிய கருத்துகளையும் புதுமையாகச் சொல்வதையும் குறிப்பது.

Question 34.
ஆசிரியர் தமிழ் நதி குறிப்பு வரைக.
Answer:

 • தமிழ்நதி (கலைவாணி) ஈழத்தின் திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண்கவிஞர்.
 • இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். தற்போது – புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார்.
 • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்), சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில்
  பொழியும் துயரப்பனி (கவிதைகள்), கானல் வரி (குறுநாவல்) ஈழம்: கைவிட்ட தேசம். பார்த்தீனியம் (நாவல்) முதலிய பல்வேறு படைப்புகளைப் படைத்துள்ளார்.
 • புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
தொடக்கத்தில் நாடகத்தை எவ்வாறு நடத்தினர்?
Answer:

 • திரைப்படம் என்பது ஒருவகையில் பார்த்தால் நாடகத்தின் குழந்தை எனலாம்.
 • தொடக்க காலங்களில் நாடகங்களை அப்படியே திரைப்படமாக எடுப்பது வழக்கம். நாடகம்
  என்பது ஒரு காட்சியை ஒன்றைக் கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது. இதனால்தான் நாடகத்தை ஒற்றைக் கோணக்கலை எனக் கூறுவர்.
 • நாடகங்களின் காலத்தில் ஒலிபரப்புக் கருவிகள் இல்லாததால் வசனங்களை உரக்கப் பேச வேண்டிய தேவையிருந்தது.
 • அதே போலத் தொலைவிலிருப்பவர்களும் நடிகர்களின் நடிப்பைப் பார்க்க வேண்டும் என்பதால் அதிக ஒப்பனை செய்துகொண்டு கை – கால்கள், கண்களின் அசைவுகள் நன்றாகத் தெரியும் வகையில் அசைத்து உரக்கப்பேசி இயல்பில் நாம் செய்வதைவிடச் சற்றுக் கூடுதலாகச் செய்து நடித்தார்கள்.
 • திரையரங்கில் மவுனப்படங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரைக்கு அருகே ஒருவர் மைக்கைப் பிடித்து, கதை சொல்லும் காலமும் இருந்தது. அவருக்கு ஆங்கிலத்தில் நேரேட்டர் என்று பெயர்.
 • ஒரு கதாநாயகன் போல மிடுக்காக உடை அணிந்து ‘நேரேட்டர்’ எனும் அக்கதைச்சொல்லி வந்து நின்றாலே அனைவரும் கைதட்டத் தொடங்கினர்.

Question 36.
மயிலை சீனி, வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக.
Answer:

 • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்த கால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை ஊட்டக்கூடியது இவரது வார்த்தைகள்.
 • தமிழில் ‘தமிழர் அழகுக்கலைகள்’ குறித்து முழுமையான நூல் வெளியிட்டவர்.
 • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல் ஆகும்.
 • வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிரம்மி போன்றவற்றில் புலமை பெற்றவர்.
  சமயம், மானுடவியல் தொல் பொருள் போன்ற துறையில் மொழி ஆய்வு செய்தவர்.
 • இன வரலாற்றை எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.

Question 37.
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் – எவ்வாறு?
Answer:

 • சங்ககாலக் குடும்ப அமைப்பில் முதல்நிலை உறவினர்களை மட்டும் ஓரளவு இனம் காண முடிகிறது.
 • நற்றாய் (பெற்ற தாய்) ஒருபுறம் இருந்தாலும் செவிலித்தாயும் அவளது மகளாகிய தோழியும் குடும்ப அமைப்பில் முதன்மைப் பங்கு பெறுகின்றனர்.
 • சமூகத் தாயாக விளங்கிய செவிலித்தாய் முறை பண்டைய இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சியாகச் சங்ககாலத்தில் வருவதை அறிய முடிகிறது. சங்க காலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் செவிலித்தாயே பொறுப்பேற்றிருந்தாள்.
 • இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் பெருமைகள் நிறைந்த மக்களுடன் நிறைந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு சேர்ந்து, தலைவனும் தலைவியும் மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயனாகும் எனச் சங்ககால மக்கள் எண்ணினார்கள். விரிந்த குடும்பம் பற்றிய இக்கருத்தினைத் தொல்காப்பியமும் பதிவு செய்கிறது.
 • சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டிருந்த நிலையைச்சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
 • அதன் தொடர்ச்சியாகவே இன்றைய சமூக அமைப்பும் கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகுகளைக் கொண்டதாகவும் தந்தை வழிக்குடும்ப அமைப்பை கொண்டதாகவும் இருக்கிறது.
 • தொன்மைமிக்க இக்குடும்ப அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளப் பெருமிதமாகும்.

Question 38.
தி. சு. நடராசன் குறிப்பு வரைக.
Answer:

 • தி. சு நடராசன் எழுதிய தமிழ் அழகியல்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டுப் பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
 • திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி. சு. நடராசன் குறிப்பிடத்தக்கவர்.
 • திறனாய்வாளராகப் பரவலாக அறியப்படும் இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
 • கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

Question 39.
குறிஞ்சித்திணை அல்லது பரிசில்துறையை விவரி.
Answer:
குறிஞ்சித்திணை
அகத்திணைகள் ஐந்து, அவற்றுள் ஒன்று குறிஞ்சித்திணை.

முதற்பொருள்
நிலம் – மலையும் மலை சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – யாமம்
பெரும்பொழுது – கூதிர், முன்பனி

கருப்பொருள்
தெய்வம் – முருகன்
மக்கள் – சிலம்பன், வெற்பன், பொருப்பன், கொடிச்சி, குறத்தி, குறவர், குறத்தியர்
கானவர்
பறவை – கிளி, மயில் விலங்கு
விலங்கு – புலி, கரடி, யானை, சிங்கம்
பூ – காந்தள், குறிஞ்சி, வேங்கை
தொழில் – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல், தினைகாத்தல்
உணவு – தினை, மலைநெல், மூங்கிலரிசி
ஊர் – சிறுகுடி

உரிப்பொருள்:
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

சான்று: ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே

விளக்கம்:
தலைவன் நெடுங்காலம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாமல் காலந்தாழ்த்த அதனால் வருந்திய தலைவி “தலைவர் கருணைகொண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டாலன்றி எனக்கு உதவியாகச் சான்று கூறுவார் வேறு ஒருவரும் இலர்” என்று தோழியிடம் கூறியது.

(அல்லது)

பரிசில் துறை:
துறை விளக்கம்:
புலவர் அரசனின் சிறப்பையும் நாட்டின் சிறப்பையும் புகழ்ந்து பாடியபின் பரிசுவேண்டி வாயிலில் நிற்பது.

(சான்று) “வாயிலோயே வாயிலோயே….” எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் துறை பொருத்தம் :
அதியமான் நெடுமான் அஞ்சியின் நாட்டையும் அவனது புகழையும் பாடிய ஓளவையார் பரிசிலுக்காகக் காத்திருந்த நிலைபற்றிக் கூறுவதால் இப்பாடல் பரிசில் துறையைச் சார்ந்ததாகும்.

Question 40.
ஏகதேச உருவக அணி அல்லது மடக்கணியைச் சான்றுடன் விளக்குக.
Answer:
ஏகதேச உருவக அணி:
அணி விளக்கம்:
தொடர்புடைய இரண்டில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை அப்படியே விட்டுவிடுதல் ‘ஏகதேச உருவக’ அணியாகும்.

(எ.கா.) ‘நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா’

விளக்கம்:
இவ்வரியில் கவிஞர் நீல வானத்தை ஓடையாக உருவகப்படுத்தியுள்ளார். ஆனால், அதனில் நீந்தும் கப்பலாக வெண்ணிலாவை உருவகப்படுத்தாமல் விட்டுவிட்டார். எனவே இது ‘ஏகதேச உருவக அணி’யாகும்.

(அல்லது)

மடக்கணி:
அணி விளக்கம் :
ஒரு சொற்றொடர் மீண்டும் வந்து வேறு பொருள் தருவது மடக்கணி’ எனப்படும்.
(எ.கா.) அரிவையம்பாகத்தான்’

விளக்கம் :
இச்சொல், அரி + வை + அம்பு + ஆக = திருமால்
கூர்மையான அம்பாக விளங்க, என்னும் பொருளைத் தருகிறது. இதே சொல்லை,

அரிவை + அம் + பாகத்தான் எனப் பிரித்தால், பார்வதி தேவியை அழகிய ஒரு பாகத்தில் உடையவன் சிவபெருமான், என வேறு பொருள் தருகிறது. ஒரே சொற்றொடர் இரு வேறு பொருள் தருகிறது. எனவே, இது ‘மடக்கணி’ எனப்படும்.

Question 41.
பின்வரும் பாடலை நன்கு படித்துப் பார்த்து மையக் கருத்தையும், திரண்ட கருத்தையும்
எழுதுக.
Answer:
ஆடுகின்றாய் உலகப்பா! யோசித்துப் பார்
ஆர்ப்பாட்டக் காரர் இதை ஒப்பாரப்பா!
தேடப்பா ஒருவழியை என்று சொன்னேன்
செகத்தப்பன் யோசித்துத்துச் சித்திரம் சோர்ந்தான்!
ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப் பாநீ! (- பாரதிதாசன்)

ஆசிரியர் குறிப்பு:
இயற்பெயர் : கனக சுப்புரத்தினம்
பிறப்பு : 29, ஏப்ரல் 1891
ஊர் : புதுவை
புனைப்பெயர் : பாரதிதாசன் (பாரதிக்கு அடிமையானவன்)
விருது : சாகித்திய அகாதெமி
துணைவியர் : பழநி அம்மையார்

திரண்ட கருத்து:
ஆடுகின்ற உலக மனிதனே யோசித்துப்பார். வெறும் ஆர்ப்பாட்டகாரர்கள் இதை ஒப்பாரும் இலர். உன் ஒரு வழியை நீயே தேடிச் செல். யோசித்து உன் வாழ்வை நீ யோசித்து சித்திரமாக்கு. ஏழையாய் இருப்பவர் சிந்தித்து விட்டால் ஓடப்பர் உதையப்பராய் மாறிடுவர் ஒரு நொடியில் ஓடப்பர் எல்லாம் உயர்ந்திடுவர் அதை நீ உணர்ந்திடு.

மையக் கருத்து: மனிதன் சிந்தித்து செயல்பட்டால் உலகத்தை மாற்றும் வல்லமை உண்டு.
மோனை: மோனை – சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது
ஆடுகின்றாய் – ஆர்ப்பாட்டக்காரர்
ஒருவழியை – ஒப்பப்பர்

எதுகை: அடிதோறும் இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை. .
தேடப்பா – ஓடப்பர்
இயைபு: ஒப்பாரப்பா – ஏழையப்பா
அணி: சொற்பொருள் பின்வருநிலையணி

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 42.
தமிழாக்கம் தருக.
1. Knowledge is power.
2. A young calf knows not fear.
3. All his geese are swans.
4. All is fair in love and war.
Answer:
1. அறிவே ஆற்றல்.
2. இளங்கன்று பயமறியாது.
3. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
4 ஆபத்துக்குப் பாவம் இல்லை.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக. கடற்காட்சி (அல்லது) தென்றல்
Answer:
im 1

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3 x 6 = 18]

Question 44.
(அ) கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.
Answer:

 • வானம் என்பது ஒன்று. வானத்தில் இயங்குகின்ற நிலவு, சூரியன், மேகம் என்பது வேறு. எனவே வானம் வேறு, அதில் இயங்குபவை வேறானது. மண் என்பது பூமியை குறிக்கும்.
 • அப்பூமியின் மீது கலந்திருக்கும் மணல், பனித்துளி, மழை இவை எல்லாம் வேறு. எனவே மண் வேறு, அதில் கலந்திருப்பவை வேறு.
 • புண் என்பது அடிப்படுதல். வீரர்களுக்கு ஏற்படுவது விழுப்புண் வேறு வேறானது. புகழும், செல்வாக்கும் வேறுவேறானது. உடம்பில் உள்ள கண்ணும், கல்விக் கண்ணும் வேறு கற்றவரின் கவிநடையும், உரைநடையும் வேறுவேறானது.
 • சமைக்கும் முன்வரை அரிசி என்றும் சமைத்த பின்பு அதனையே சோறு என்றும் சொல்கின்றோம்.
 • பூக்களை, பூப்பதாலேயே பூ என்கிறோம் அதற்கு முன் அரும்பு என்றழைக்கிறோம். சொல்கள் சேர்கின்ற போது எதுகை, மோனை என்றும், சேராமல் அடிகளாக மாற்றாமல் எழுதுவதை வசனம் என்றும் யாப்பை சேர்த்து எழுதினால் கவிதை என்றும் அழைக்கின்றோம்.
 • பழம் பழுத்து இருந்தால் சாறுகிட்டும். வயலில் நீர்பாய்ந்திருந்தால் ஏர்கள் வரும் அதேபோல் எழுத்திருந்தால் அசைகள் வரும்.
 • இரண்டு சீர் இடைவெளியில் தளைகள் வரும். தளைகள் சேர்ந்தால் அடிகள் வரும் அடிகள் பல அடுக்கிவந்தால் தொடைகள் வரும்.
 • தொடைகள் நன்குழு செழித்திருந்தால் பாக்கள் வரும் இவை எல்லாம் தெரிந்து கொண்ட பின்னர் ‘ கவிதை எழுதத் தொடங்க வேண்டும்.
 • தேமாவும், புளிமாவும் மரத்தில் காய்க்கும். சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும். ஏமாந்தால் சீர்கள் தளையைத்தட்டும். வெள்ளைப் பாட்டின் இறுதிச்சீரில் காசு தரும்.
 • பூத்த பூவில் வண்டு வருவதுபோது நல்லபுலவர்களின் பாடல்களுக்கு கீர்த்தி தங்கும். சாதாரண மக்களுக்கும் விளங்கும் வண்ணம் தமிழ்க்கவிதை தரவேண்டும்.
 • எருவினாலே பயிர்கள் விளையும். சிறந்த கேள்வி எழுப்புவதால் நல்ல ஆராய்ச்சி விளையும். நடு இரவில் குளிர்விளையும். ஆழ்ந்து, நுணுங்கதோடே பொருளும் உள்ளத்தில் விளையும்.
 • மிஞ்சும் அறிவினிலே புகழ்விளையும். இவற்றை எல்லாம் பெரும்பாலும் அறியாமல் எழுதுவோர்க்கும் புகழும், சிறப்பும் எங்கே விளையக்கூடும்.

(அல்லது)

Question 44.
(ஆ) கடையெழு வள்ளல்கள் பற்றிச் சிறுபாணாற்றுப்படை கூறும் கருத்துக்களைத் தொகுத்து
எழுதுக.
Answer:
பேகன்:
பருவம் பொய்க்காமல் மழை பெய்யும் வளமலையில் வாழும் மயிலுக்கு பேகன் (அது குளிரால் நடுங்கும் என்று எண்ணித் தன் மனத்தில் சுரந்த அருளினால்) தன்னுடைய ஆடையைக் கொடுத்தான். இவன் வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவன்; பெரிய மலை நாட்டுக்கு உரியவன்: வலிமையும் பெருந்தன்மையும் நற்பண்பும் கொண்டவன்; பொதினி மலைக்குத் தலைவன்.

பாரி:
வண்டுகள் உண்ணும் வண்ணம் நல்ல தேன்மிகுதியாகக் கொண்ட மலர்களைச் சிந்தும் சுரபுன்னை மரங்களை நிறைந்த நெடுவழியில், மலர்களையுடைய முல்லைக்கொடியொன்று பற்றிப்படரக் கொம்பின்றித் தவித்துக்கொண்டிருந்தது; அதைக்கண்டு, மனம் வருந்தித் தான் ஏறிவந்த பெரிய தேரின் மீது, அக்கொடியினைப் படரவிட்டவன் பாரி. அவன், வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலையின் தலைவன்.

காரி:
உலகம் வியக்கும்படி ஒலிக்கின்ற மணிகளையும் வெண்மையான பிடரியுடன் தலையை ஆட்டும் குதிரைகளையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லையென்னாமல் கொடுப்பவன் காரி என்னும் வள்ளல். இவன், பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பைப் போல் சுடர்விடுகின்ற நீண்ட வேலினையும் வீரக்கழலையும் உடையவன்; தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவன்.

ஆய்:
ஒளிமிக்க நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுத்த ஆடையினையும் மன விருப்பம் கொண்டு ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுக்குக் கொடுத்தவன், ஆய் என்னும் வள்ளல். இவன் வில் ஏந்தியவன்; சந்தனம் பூசி உலர்ந்த தோள்களை உடையவன்; ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவன்.

அதிகன்:
நறுமணம் கமழும் பெரிய மலைச்சாரலில் இருந்த அழகுமிக்க நெல்லி மரத்தின் கனி, உயிர் நிலைபெற்று வாழ உதவும் அமுதத்தின் தன்மையுடையது. அது தனக்குக் கிடைக்கப் பெற்றபோது, அத்னை (தான் உண்ணாமல்) ஔவைக்கு வழங்கியவன் அதிகன் என்னும் வள்ளல். வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடையவன்; கடல் போன்ற ஒலிமிக்க படையினையும் உடையவன்

நள்ளி :
நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவன். இவன் காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன்; போர்த் தொழிலில் வல்லமையுடையவன்; மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன்.

ஓரி:
செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவன் ஓரி என்னும் வள்ளல். இவன் காரி என்னும் வலிமைமிக்க குதிரையைக் கொண்ட காரி என்பவனை எதிர்த்து நின்று அஞ்சாமல் போரிட்டவன். ஓரி என்னும் வலிமைமிக்க குதிரையைத் தன்னிடத்தில் கொண்டவன்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 45.
(அ) ‘ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு’ – நீங்கள் பார்த்த அல்லது
வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை:
மதுரை தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருப்பது மதுரை. அம்மதுரையின் சிறப்பு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

மதுரை மாநகர்:
தமிழ்நாட்டின் 3 ஆவது பெரிய நகரம் மதுரை. 10 லட்சத்திற்கும் மேல் மக்கட்தொகை கொண்டது. இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31 ஆவது பெரிய நகரம் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் மிகவும் புகழ்வாய்ந்தது.

பழமை:
இந்திய துணைக் கண்டத்தில் தொன்மையான வரலாற்றை கொண்ட மதுரை சுமார் 25,000 ஆண்டுகள் பழமையானது, பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கியது.

பெயர்க்காரணம்:
இந்நகரம் மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான் மாடக்கூடல் திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத்துறை மதுரை, மருதமரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத்துறை என்பது மருவி, மதுரை என ஆனது. இந்துக்கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

வரலாற்று நினைவிடங்கள்:
மதுரையில் வரலாற்று நினைவிடங்கள் பல அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை, போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. இந்நகரில் ஆண்டுதோறும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. அவற்றில் புகழ் பெற்றது சித்திரைத் திருவிழா. இது 10 நாட்கள் நடைபெறும் திருக்கல்யாணம் ஆகும். அதில் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் சிறப்பு.

ஏறுதழுவுதல் :
மதுரை மாநகரில் ஏறுதழுவுதல் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவுதல் நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும். இது பலகாலமாக நடைப்பெற்று வரும் ஒரு நிகழ்வாகும். தற்பொழுது ஏறுதழுவுதலுக்கு தடைவிதிக்கப்பட்டு பல போராட்டங்களை மக்கள் நடத்தி அதில் வெற்றி பெற்றனர்.

தொழில் மற்றும் கல்வி:
மதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், கிரானைட் போன்ற உற்பத்தித்தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளது.

மதுரை மருத்துவக் கல்லூரி, ஓமியோ மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் மதுரையில் நகரில் அமைந்துள்ளன.

முடிவுரை:
முச்சங்கம் வளர்த்த மதுரையில் அன்பும் அருளும் நிறைந்திருக்கும். அவை வரலாறும் வடிவழகும் கொண்டது. அந்நகரில் வாழ்வது சிறப்பு வாய்ந்தது.

(அல்லது)

(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு
கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:

 • குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.
 • குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம் :
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே. குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம், குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை . குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

வாழிடம்:
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம்:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும்வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம்:
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் ‘ இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம் :
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம்:
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம்:
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் ” விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 46.
(அ) ‘சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
Answer:
குறிப்புச் சட்டகம்
1. முன்னுரை
2. சாலை விதிகள்
3. கணக்கீடு
4. சாலைக்குறியீடு
5. மோட்டார் வாகனச் சட்டம்
6. முடிவுரை

முன்னுரை:
வாழ்வை முழுமையாக்கும் கூறுகளுள் முதன்மையானது பயணம். அதிலும் சாலைவழிப் பயணம் மனதிற்கு இன்பத்தை அளிக்கக் கூடியது. அத்தகைய பயணத்தை அனைவரும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும். சாலை விதிகளைத் தெரிந்து கொள்வதும் கல்விதான். போக்குவரத்து குறித்த விதிகளையும், பாதுகாப்பு வழிகளையும் இக்கட்டுரை வழி காண்போம்.

 • அதில் 5,000 பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 2 இலட்சம் பேர் உடலுறுப்பை இழக்கின்றனர்.
 • நாளொன்றுக்கு 1317 விபத்துகளும் அதில் 413 பேர் உயிரிழக்கின்றார்கள்.
 • இந்தியாவில் நடக்கும் விபத்துகளில் 15 சதவீதம் தமிழ்நாட்டில் நடப்பது வேதனைக்குரியது.

சாலை விதிகள்:

 • சாலையின் வகைகள், மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
 • போக்குவரத்தினை முறைப்படுத்தும் குறியீடுகள் மற்றும் போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
 • நடைமேடை, நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும் சாலையைக் கடப்பவர்களையும் அச்சுறுத்தக் கூடாது.
 • சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. தேவையான இடங்களில் சரியான சைகையைச் செய்ய வேண்டும்.
 • எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும். தேவையெனில் வேகம் குறைத்து இதர வாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும்.
 • பிற ஊர்தி ஓட்டிகளுக்கு விட்டுக்கொடுப்பது சிறந்தது.
 • இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

சாலைக் குறியீடு:
சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன. அவை:

 • உத்தரவுக் குறியீடுகள்
 • எச்சரிக்கைக் குறியீடுகள்
 • தகவல் குறியீடுகள்

இக்குறியீடு கவனத்தில் கொண்டு பயணித்தல் சிறந்தது. சாலைப் போக்குவரத்து உதவிக்கு 103 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மோட்டார் வாகனச் சட்டம்:

 • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வாகனம் இயக்க கூடாது. அதை மீறி இயக்கினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
 • ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கினால் ரூ.5,000 தண்டனைத் தொகையோ மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
 • அபாயகரமான முறையில் ஊர்தியை இயக்கினால் ரூ.5,000 தண்டத்தொகைப் பெறப்படும். *
 • மது அருந்திவிட்டு இயக்கினால் ரூ.10,000 தண்டத்தொகைக்கட்ட நேரும்.
 • மிக வேகத்தில் ஊர்தியை இயக்கினால் ரூ. 5,000 தண்டத்தொகை கட்ட நேரும்.
 • இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ. 2,000 தண்டத்தொகை அல்லது 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம்.
 • தலைக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.1,000 தண்டத்தொகையுடன் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் நீக்கம்.

முடிவுரை:
சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்ந்து போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தல் அவசியமாகும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் நம் உயிரையும் உடல் உறுப்புகளையும், உடைமைகளையும், மற்றவரின் உயிரையும் காக்க முடியும், மாணவர்களாகிய நீங்களும் பாதுகாப்புடன் பயணம் செய்யவும், மற்றவர்களுக்கும் அதனை எடுத்துரைக்கவும்.

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 2

Question 46.
(ஆ) உங்கள் ஊர்ப் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக.
Answer:
எங்கள் ஊரான மதுரை மாவட்டத்தில் பல நாடக சபைக் குழுக்கள் உள்ளது. அதிலே நாடகங்களை எழுதி, நடிக்கும், திரு. கபிலன் என்பவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரிடம் நிகழ்ந்த உரையாடல் பற்றியும், உங்கள் நாடகங்கள் பற்றியும், உங்கள் நடிப்புத்திறன் பற்றியும் கூறுங்கள் என்ற கேள்விக்கு அவர் கொடுத்த பதிலை கூறுகிறேன்.

எங்கள் நாடகக் குழுக்களின் நோக்கம், பல சமுதாய மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவே போடப்படுகிறது. நல்ல மனிதர்களை உருவாக்கும் முயற்சி, சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி, தெரியாத சம்பவங்களை, வேத, இதிகாச, புராணங்களை மக்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சிக்காகவே நாடகங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் மக்களை சிரிக்க வைப்பதுவே முதல் காரணம்.

எங்கள் குழுவில் 20-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒவ்வொரு கலையிலும் சிறந்தவர்கள். நாங்கள் நாடகங்களில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவோம், அதுவே எங்களின் சிறப்பு.

நாடகங்களில் நடிக்கும் போது, அரசனாகவும், மந்திரியாகவும், ஏழை விவசாயியாகவும், திருடனாகவும், அதிகாரியாகவும், கடவுளாகவும் இது போன்ற எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதுவாக நாங்கள் மாறிவிடுவோம். நாடகங்களில் வரும் பணத்தைவிட மக்களைச் சிரிக்க வைக்கிறோம் மற்றும் மக்களை விழிப்புணர்ச்சியூட்டுகிறோம், மக்களை நல்வழிப்படுத்துகிறோம் என்ற மனநிறைவே எங்களுக்குப் போதும். பணநிறைவை விட மனநிறைவே எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் (பூம்புகார்) மற்றும் பல சுதந்திர போராட்ட நாடகங்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், திருப்பூர் குமரன், பாரதியார், ஜான்சிராணி இதுபோன்ற நாடகங்கள் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவை.

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.

Question 47.
(அ) ‘குழல்வழி’ என்று துவங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.[1 x 4 = 4]
இசைக்கருவிகள் ஒலித்த முறை
Answer:
குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை (- இளங்கோவடிகள்)

(ஆ) ‘நுண்ணிய’ என்று துவங்கும் குறளை எழுது. [1 x 2 = 2]
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும். (- திருவள்ளுவர்)

Leave a Reply