Students can Download 10th Tamil Chapter 9.2 சித்தாளு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.2 சித்தாளு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

கற்பவை கற்றபின்

Question 1.
மனிதநேயத்தை வெளிப்படுத்தும் புதுக்கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு - 1

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்’ – இவ்வடிகளில் கற்காலம் என்பது……………………..
அ) தலைவிதி
ஆ) பழையகாலம்
இ) ஏழ்மை
ஆ) பழையகாலம்
ஈ) தலையில் கல் சுமப்பது
Answer:
ஈ) தலையில் கல் சுமப்பது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

குறுவினா

Question 1.
‘வாழ்வில் தலைக்கனம்’, ‘தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
Answer:
“வாழ்வில் தலைக்கனம் (அகந்தை) பிடித்தவர் இடையில் ஏழ்மை காரணமாகித் தலையில் கல் சுமந்து தலைக்கனமாகவே வாழ்கிறாள் சித்தாள்.

சிறுவினா

Question 1.
சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது – இடஞ்சுட்டிப் பொருள் கூறுக.
Answer:
இடம் சுட்டல்: “சித்தாளு” என்னும் தலைப்பில் நாகூர் ரூமி எழுதியுள்ள கவிதையில் இவ்வடி இடம்பெற்றுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

பொருள் : சித்தாளின் துன்பங்களைச் செங்கற்கள் அறிவது இல்லை.

விளக்கம் : அடுத்த வேளை உணவுக்காக சுமைகளை இறக்காமல் சுமக்கும் இவர்களின் மரணம்கூட சிறிதளவே சலனத்தை ஏற்படுத்தும். பல இன்னல்களின் நடுவே தன் வாழ்வைத் தொலைக்காதிருக்க சுமை சுமக்கும் சித்தாள்களின் மனச்சுமையைச் செங்கற்களும், கற்களும் அறியாது.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

கற்காலம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
புலம்புவார் – வினையாலணையும் பெயர்
செங்கற்கள் – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்.

புலம்புவார் – புலம்பு + வ் + ஆர்

புலம்பு – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆர் – படர்க்கை வினைமுற்று விகுதி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

பலவுள் தெரிக

Question 1.
நாகூர் ரூமியின் இயற்பெயர் யாது?
அ) முகம்மதுரஃபி
ஆ) முகம்மது மீரான்
இ) முகம்மது இஸ்மாயில்
ஈ) முகம்மது
Answer:
அ) முகம்மதுரஃபி

Question 2.
நாகூர் ரூமி பிறந்த மாவட்டம்
அ) மதுரை
ஆ) நெல்லை
இ) தஞ்சை
ஈ) திருச்சி
Answer:
இ) தஞ்சை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 3.
நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் ………………….
அ) குங்குமம்
ஆ) கணையாழி
இ) தென்றல்
ஈ) புதிய பார்வை
Answer:
ஆ) கணையாழி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 4.
நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்) – ………………..
அ) சொல்லாத சொல்
ஆ) ஏழாவது சுவை
இ) கப்பலுக்குப் போன மச்சான்
ஈ) சுபமங்களா
Answer:
இ) கப்பலுக்குப் போன மச்சான்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 5.
சிறிதளவே சலனத்தை ஏற்படுத்துவது ……………………
அ) தலைக்கனம்
ஆ) அடுத்தவர் கனவு
இ) சித்தாளின் மரணம்
ஈ) சித்தாளின் புலம்பல்
Answer:
இ) சித்தாளின் மரணம்

Question 6.
தொழிலாளர்களின் மனச் சுமையை அறியாதது ………………………
அ) கட்டடம்
ஆ) செங்கற்கள்
இ) கம்பிகள்
ஈ) மணல்
Answer:
ஆ) செங்கற்கள்

Question 7.
தன் வாழ்வு தொலைக்காமல் காக்க தலையில் கை வைப்பவர் …………….
அ) சித்தாளு
ஆ) பொறியாளர்
இ) உழவர்
ஈ) காவலர்
Answer:
அ) சித்தாளு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 8.
நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்று ………………….
அ) கப்பலுக்குப் போன மச்சான்
ஆ) கொல்லிப்பாவை
இ) நதியின் கால்கள்
ஈ) மீட்சி
Answer:
இ) நதியின் கால்கள்

Question 9.
இன்னலில் இருக்கும் தொழிலாளர் நிலையை நினைப்பவர்கள் ……………………
அ) முதலாளிகள்
ஆ) கவிஞர்கள்
இ) மக்கள்
ஈ) அமைச்சர்கள்
Answer:
ஆ) கவிஞர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 10.
தன் வாழ்வு தொலைக்காமல்
தற்காத்து வைப்பதற்காய் – இத்தொடரில் உள்ள நயம்?
அ) மோனை நயம்
ஆ) எதுகை நயம்
இ) இயைபு
ஈ) உவமை அணி
Answer:
அ) மோனை நயம்

Question 11.
‘சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது’ எனக் குறிப்பிடும் கவிஞர்?
அ) நாகூர் ரூமி
ஆ) கண்ணதாசன்
இ) ஜெயகாந்தன்
ஈ) பாரதியார்
Answer:
அ) நாகூர் ரூமி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 12.
மாறுபட்ட ஒன்றினைக் கண்டறிக.
அ) மீட்சி
ஆ) சுபமங்களா
இ) ஏழாவது சுவை
ஈ) புதியபார்வை
Answer:
இ) ஏழாவது சுவை

Question 13.
நதியின் கால்கள் என்பது நாகூர் ரூமியின்…………………..
அ) கவிதைத் தொகுதி
ஆ) படைப்புகள் வெளியான இதழ்
இ) நாவல்
ஈ) சிறுகதைத் தொகுதி
Answer:
அ) கவிதைத் தொகுதி

Question 14.
‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்பது நாகூர் ரூமியின்…………………..
அ) கவிதைத் தொகுதி
ஆ) படைப்புகள் வெளியான இதழ்
இ) நாவல்
ஈ) சிறுகதைத் தொகுதி
Answer:
இ) நாவல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

குறுவினா

Question 1.
நாகூர் ரூமியின் படைப்புகள் வெளியான இதழ்களைப் பட்டியலிடுக.
Answer:

  • மீட்சி
  • கொல்லிப்பாவை
  • சுபமங்களா
  • குமுதம்
  • புதிய பார்வை
  • இலக்கிய வெளிவட்டம்
  • குங்குமம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 2.
நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகள் யாவை?
Answer:

  • நதியின் கால்கள்
  • ஏழாவது சுவை
  • சொல்லாத சொல் ஆகியவையாகும்.

Question 3.
சித்தாள் கற்கள் சுமக்கக் காரணம் யாது?
Answer:

  • வாழ்வைத் தொலைக்காமல் தன்னைக் காக்கவும்,
  • அடுத்த வேளை உணவுக்காகவும் சித்தாள் கற்களைச் சுமக்கிறாள்.

Question 4.
‘தலைக்கனமே வாழ்வாக
ஆகிப்போனது இவளுக்கு’ – ஏன்? யாருக்கு?
Answer:
செங்கற்களைச் சுமந்து , சித்தாளுக்குத் தலைக்கனமே வாழ்வாகிப்போனது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 5.
‘சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது’ என்று கவிஞர் நாகூர் ரூமி கூறுவதன் உள்நோக்கம் யாது?
Answer:

  • சித்தாள் தலையில் சுமக்கும் செங்கற்கள் சுமைகளைவிட,
  • அவளது மனதில் சுமக்கும் வறுமை உள்ளிட்ட சுமைகள் ஏராளம் ஆகும்.

Question 6.
‘நதியின் கால்கள்’ என்ற கவிதைத் தொகுதியை எழுதியவர் யார்? அவர் இயற்பெயர் யாது?
Answer:

  • ‘நதியின் கால்கள்’ என்ற கவிதைத் தொகுதியை எழுதியவர் : நாகூர் ரூமி
  • அவரின் இயற்பெயர் : முகம்மது ரஃபி

சிறுவினா

Question 1.
நாகூர் ரூமி குறிப்பு வரைக.
Answer:

  • நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்.
  • இவரது இயற்பெயர் முகம்மது ரஃபி.
  • இவர் 1980களில் “கணையாழி” இதழில் எழுதத் தொடங்கினார்.
  • குறுநாவல், கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கி வருபவர்.
  • கப்பலுக்குப் போன மச்சான் என்ற புதினத்தையும் படைத்துள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Question 2.
சித்தாளின் இன்னல்களை விளக்குக (அல்லது) நாகூர் ரூமியின் ‘சித்தாளு’ கவிதைக் கருத்தை எழுதுக.
Answer:

  • பொற்காலமாக இருந்தாலும் சித்தாள் தலையில் எழுதப்பட்டதோ கற்காலம்.
    தன் வாழ்வை தொலைத்துவிடாமல் காத்துக்கொள்வதற்காக தலையில் கை வைப்பவள்.
  • வாழ்வில் தலைக்கனம் (இறுமாப்பு) கொண்டவர் உண்டு. ஆனால், கல் சுமந்து தலைக்கனமானது இவளுக்கு.
  • அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் சுமக்கும் கற்களெல்லாம் இவளின் அடுத்தவேளை உணவுக்குதான். இவள் இறந்தால் கூட சலனம் சிறிதளவுதான்.
  • இந்தச் சித்தாளின் மனச்சுமையை அவள் சுமக்கும் செங்கற்கள் அறியாது.

Question 3.
‘அலுக்காமல் இவள் சுமக்கும்
கற்களெல்லாம்
அடுத்தவேளை உணவுக்காக’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டுதல் :
நாகூர் ரூமியின் சித்தாளு’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில் சித்தாள் ஒருவர் கூறுவதாக இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

பொருள் விளக்கம் :
அடுக்குமாடி வீடாகவோ அல்லது அலுவலகமாகவோ, எதுவாக இருப்பினும் அடுத்தவர் கட்டும் கட்டிடத்தின் கனவுக்கு அலுப்பில்லாமல் கற்களைச் சுமந்து உழைப்பது எல்லாம், சித்தாளின் அடுத்தவேளை உணவுக்காகத் தான்.

Leave a Reply