Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.3 விலங்குகள் உலகம் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.3 விலங்குகள் உலகம்
கற்பவை கற்றபின்
Question 1.
விலங்குகள் தொடர்பான பழமொழிகளைத் திரட்டி வருக.
Answer:
1. பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி
(எ.கா.) : புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
2. சாது மிரண்டால் காடு கொள்ளாது.
3. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே.
4. நொண்டிக் கழுதைக்குச் சருக்கினது சாக்காம்.
5. வீட்டில் எலி, வெளியில் புலி.
6. நாயப் பொறந்தாலும் நல்லாப் பொறக்கனும்.
7. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசைன.
8. ஆடு மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராசா.
9. தூங்கணாங் குருவிக்குக் குரங்கு புத்தி சொல்லுச்சாம்.
Question 2.
காட்டு விலங்குகளின் படங்களைத் திரட்டி படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது
அ) காது
ஆ) தந்தம்
இ) கண்
ஈ) கால்நகம்
Answer:
ஆ) தந்தம்
Question 2.
தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்
அ) வேடந்தாங்கல்
ஆ) கோடியகரை
இ) முண்டந்துறை
ஈ) கூந்தக் குளம்
Answer:
இ) முண்டந்துறை
Question 3.
‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) காடு + ஆற
ஆ) காட்டு + ஆற
இ) காட் + ஆறு
ஈ) காட் + டாறு
Answer:
அ) காடு + ஆறு
Question 4.
‘அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) அனைத்து + துண்ணி
ஆ) அனை + உண்ணி
இ) அனைத் + துண்ணி
ஈ) அனைத்து + உண்ணி
Answer:
ஈ) அனைத்து + உண்ணி
Question 5.
‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………….
அ) நேரமாகி
ஆ) நேராகி
இ) நேரம் ஆகி
ஈ) நேர் ஆகி
Answer:
அ) நேரமாகி
Question 6.
‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………
அ) வேட்டை ஆடிய
ஆ) வேட்டையாடிய
இ) வேட்டாடி
ஈ) வேடாடி
Answer:
ஆ) வேட்டையாடிய
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ என்று அழைக்கப்படும் விலங்கு …………………
2. யானைக் கூட்டத்திற்கு ஒரு ………………. யானைதான் தலைமை தாங்கும்.
3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ……………..
Answer:
1. புலி
2. பெண்
3. அடர்ந்த முடிகள்
குறு வினா
Question 1.
காடு – வரையறு.
Answer:
(i) மனிதர்களின் முயற்சியின்றி வளர்ந்த மரங்கள், செடி, கொடிகள், புல், புதர்கள், பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பல உயிர்களின் வாழ்விடம் காடாகும்.
(ii) இடையிடையே காட்டாறுகளும், நீரோடைகளும் இருக்கும்.
(iii) மனிதனின் முதல் இருப்பிடம் காடு.
Question 2.
யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகிறது ஏன்?
Answer:
- யானைகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை.
- யானைகள் செல்லும் வழிப்பாதைகளில் மனிதர்கள் குறுக்கிடும்போது, அவர்களைத் தாக்குகின்றன.
- மேலும் யானைக்குக் கண்பார்வைக் குறைவு, கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதியாக உள்ளது.
Question 3.
கரடி ‘அனைத்துண்ணி ‘ என அழைக்கப்படுவது ஏன்?
Answer:
பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் என அனைத்தையும் உண்பதால் கரடி அனைத்துண்ணி’ என அழைக்கப்படுகின்றது.
Question 4.
மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
Answer:
- புள்ளிமான்
- சருகுமான்
- மிளாமான்
- வெளிமான்
சிறு வினா
Question 1.
புலிகள் குறித்து நீங்கள் அறிந்து கொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) புலிகள் தனித்து வாழும் இயல்பு உடையன.
(ii) ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும். மற்ற புலிகள் அந்த எல்லைக்குச் செல்லாது.
(iii) கருவுற்ற புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் வரைப் பெற்றெடுக்கும். அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும்.
(iv) அவை வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளைப் பிரித்து அனுப்பிவிடும்.
சிந்தனை வினா
Question 1.
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிடுக.
Answer:
1. மழை வளம் குறையும்.
2. மண் தரிசு நிலமாக மாறிவிடும்.
3. காட்டுயிரிகள் வாழ்விடம் அழியும்.
4. குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும்.
5. உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
6. மண் வளம் சேர்க்கும் நுண்ணுயிரிகள் அழியும்.
7. மண்ண ரிப்பு ஏற்படும்.
8. நோய் தீர்க்கும் மூலிகைகள் அழியும்.
9. பருவநிலைமாறும்.
10. புவி வெப்பமயமாகும்.
11. நிலத்தடி நீர்க்குறையும்.
கூடுதல் வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்த இடம் …………………
அ) மேட்டுப்பாளையம்
ஆ) குன்னூர்
இ) ஊட்டி
ஈ) கோத்தகிரி
Answer:
அ) மேட்டுப்பாளையம்
Question 2.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் ………………..
அ) ஈரோடு
ஆ) கோவை
இ) நாமக்கல்
ஈ) சேலம்
Answer:
ஆ) கோவை
Question 3.
தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் அமைந்துள்ள இடம் ………………..
அ) வேடந்தாங்கல்
ஆ) கோடியகரை
இ) முண்டந்துறை
ஈ) கூந்தக் குளம்
Answer:
இ) முண்டந்துறை
Question 4.
உலகில் உள்ள யானை வகைகள்
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
Answer:
ஆ) இரண்டு
Question 5.
ஆண் , பெண் ஆகிய இரண்டுக்கும் தந்தம் கொண்ட யானை வகை ………………..
அ) ஆப்ரிக்க யானை
ஆ) ஆசிய யானை
இ) அமெரிக்க யானை
ஈ) தாய்லாந்து யானை
Answer:
அ) ஆப்ரிக்க யானை
Question 6.
நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல் , இலை தழைகளை உணவாகக் கொள்ளும் விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) யானை
Answer:
ஈ) யானை
Question 7.
கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதியாக உள்ள விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) யானை
Answer:
ஈ) யானை
Question 8.
நன்கு வளர்ந்த கரடியின் எடை
அ) 160 கி
ஆ) 100 கி
இ) 106 கி
ஈ) 601 கி
Answer:
அ) 160 கி
Question 9.
தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த உணவையும் வேட்டையாடாத விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) யானை
Answer:
இ) புலி
Question 10.
பண்புள்ள விலங்கு என்றழைக்கப்படும் விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) யானை
Answer:
இ) புலி
Question 11.
இரவில் மட்டும் வேட்டையாடும் தன்மை கொண்ட விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) யானை
Answer:
இ) புலி
Question 12.
அழகில் சிறந்த மான் வகை
அ) புள்ளிமான்
ஆ) சருகுமான்
இ) மிளாமான்
ஈ) வெளிமான்
Answer:
அ) புள்ளிமான்
Question 13.
இயற்கை விஞ்ஞானிகள் காட்டுக்கு அரசனாகக் குறிப்பிடும் விலங்கு
அ) கரடி
ஆ) மான்
இ) புலி
ஈ) சிங்கம்
Answer:
இ) புலி
Question 14.
‘நினைவாற்றல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது …………………….
அ) நினை + ஆற்றல்
ஆ) நினை + வாற்றல்
இ) நினைவு + ஆற்றல்
ஈ) நினைவு + வாற்றல்
Answer:
இ) நினைவு + ஆற்றல்
‘கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இந்திய வனக்கல்லூரி அமைந்த மாவட்டம் …………………
2. காட்டுவிலங்குகளின் உறைவிடம் ……………….
3. மனிதனின் முதல் இருப்பிடம் …………………
4. முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு …………………….
5. கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வனவியல் சார்ந்த படிப்புகள் ……………………, ……………
6. மிகுந்த நினைவாற்றலைக் கொண்ட விலங்கு ………………….
7. பாசம் நிறைந்த விலங்கு ………………….
8. யானைக்குக் கடிப்பதற்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு …………………..
9. …………… ஒரு அனைத்துண்ணி.
10. காட்டு அரசன் ……………….
11. விஞ்ஞானிகள் என்ற பிறமொழிச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல் …………………….
Answer:
1. கோவை
2. முண்டந்துறை புலிகள் காப்பகம்
3. காடு
4. 895 சதுரமீட்டர்
5. இளநிலை வனவியல், முதுநிலை வனவியல் –
6. யானை
7. யானை
8. 65 லிட்டர்
9. கரடி
10. சிங்கம்
11. அறிவியலறிஞர் (அல்லது) அறிவியலாளர்
குறுவினா
Question 1.
ஆதினி எங்குச் சென்றாள்? எதற்காகச் சென்றாள்?
Answer:
(i) ஆதினி தன் அம்மாவுடன் முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குச் சென்றாள்.
(ii) காட்டு விலங்குகள் பற்றிய புகைப்படத்தொகுப்பிற்குத் தேவையான புகைப்படங்கள் எடுப்பதற்காகச் சென்றாள்.
Question 2.
முண்டந்துறை புலிகள் காப்பகம் குறித்து வன அலுவலர் கூறியது யாது?
Answer:
- தமிழ்நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் : முண்டந்துறை புலிகள் காப்பகம்.
- 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
- யானை, புலி, சிறுத்தை , மான் , கரடி , காட்டுமாடு போன்ற அரிய விலங்குகள் வாழ்கின்றன.
– என்று முண்டந்துறை புலிகள் காப்பகம் குறித்து வன அலுவலர் கூறினார்.
Question 3.
முண்டந்துறை புலிகள் காப்பகத்தல் வாழும் அரிய விலங்குகள் யாவை?
Answer:
1. யானை
2. புலி
3. சிறுத்தை
4. மான்
5. கரடி
6. காட்டுமாடு
Question 4.
உலகில் உள்ள யானை வகைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன. அவையாவன:
- ஆசிய யானை
- ஆப்பிரிக்க யானை
Question 5.
ஆசிய யானைக்கும் ஆப்பிரிக்க யானைக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
1. ஆசிய யானை
ஆண்யானைக்குத் தந்தம் உண்டு, பெண் யானைக்குத் தந்தம் இல்லை.
2. ஆப்பிரிக்க யானை
ஆண், பெண் யானைகள் இரண்டுக்குமே தந்தம் உண்டு.
Question 6.
ஒரு காட்டு வளத்தைக் குறிக்கும் குறியீடு எது?
Answer:
புலியே ஒரு காட்டு வளத்தைக் குறிக்கும் குறியீடாகும்.
Question 7.
தமிழ்நாட்டில் வனக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?
Answer:
தமிழ்நாட்டில் வனக் கல்லூரி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது.
Question 8.
வனவியல் சார்ந்த படிப்புகள் யாவை? அவை எங்குள்ளன?
Answer:
(i) வனவியல் சார்ந்த படிப்புகள் இளநிலை வனவியல் , முதுநிலை வனவியல் ஆகும்.
(ii) கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் அவை கற்பிக்கப்படுகின்றன.
Question 9.
புலியைப் பண்புள்ள விலங்கு எனக் கூறக் காரணம் யாது?
Answer:
தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த உணவையும் வேட்டையாடாத விலங்கு. எனவே புலியைப் பண்புள்ள விலங்கு என் கூறுகின்றனர்.
Question 10.
புலியைக் காட்டுக்கு அரசன் என இயற்கை விஞ்ஞானிகள் கூறக் காரணம் யாது?
Answer:
(i) நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத் திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தைவிட புலியே உயர்ந்தது.
(ii) எனவே, புலியைக் காட்டுக்கு அரசன் என இயற்கை விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Question 11.
அழகில் சிறந்த மான் வகை எது?
Answer:
நம் நாட்டில் உள்ள புள்ளி மானே அழகில் சிறந்ததாகும்.
Question 12.
சிங்கங்களின் வகைகளைக் குறிப்பிடுக.
Answer:
- ஆசியச் சிங்கம்
- ஆப்பிரிகச் சிங்கம்
Question 13.
யானைகள் அடிக்கடி இடம்பெயரக் காரணம் யாது?
Answer:
யானைகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும்.
Question 14.
சிங்கம் குறித்து நீவிர் அறிந்த செய்திகள் யாவை?
Answer:
(i) ஆசியச் சிங்கம், ஆப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கம் உள்ளன.
(ii) இந்தியாவில் குஜராத்தில் ‘கிர் சரணாலயத்தில் மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.
சிறு வினா
Question 1.
யானைகள் குறித்து நீவிர் அறிந்ததை எழுதுக.
Answer:
(i) யானைகள் எப்போதும் கூட்டமாகவே வாழும்.
(ii) கூட்டத்திற்குப் பெண் யானை தலைமை தாங்கும்.
(iii) தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும்.
(iv) நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை தழைகளை உணவும், 60 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும்.
(v) மிகுந்த நினைவாற்றலும் பாசமும் கொண்ட விலங்கு.
(vi) கண்பார்வைக் குறைவு, மோப்ப ஆற்றல் மிகுதி.
Question 2.
கரடி குறித்து நீவிர் அறிந்த செய்திகள் யாவை?
Answer:
(i) நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ எடை வரை இருக்கும்
(ii) பழங்கள் மற்றும் தேன் உண்பதற்காக கரடி மரம் ஏறும்.
(iii) பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் என அனைத்தையும் உண்பதால் கரடி ‘அனைத்துண்ணி’ என அழைக்கப்படுகின்றது.
(iv) தன் அடர்ந்த முடிகள் மூலம் எதிரிகளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்றது.