Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.1 மதராசப்பட்டினம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.1 மதராசப்பட்டினம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 1.
ஒரு திட்டமிட்ட பெருநகரம் உருவாவதற்கு நீவிர் தரும் பரிந்துரைகளை, ‘கனவு நகரம்’ என்னும் தலைப்பில் ஒப்படைவாக உருவாக்குக.
Answer:
கனவு நகரம்

(i) தமிழகத்தின் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக மாற்றுவது. இதற்காக நாவல்பட்டு கிராமம் ஒன்றையும் உருவாக்கினர். ஆனால் அந்தக் கனவு திட்டம் இன்று காலாவதியாகிவிட்டது. அத்திட்டத்தைப் பரிந்துரை செய்து நிறைவேற்றுவதே என் கனவு.

(ii) திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்றி நாவல்பட்டு கிராமத்தில் 1000 ஏக்கரில் அண்ணா நகர் பகுதியைத் துணை நகரம் என்ற பெயரில் உருவாக்கினோம். பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்வதற்கு வசதி செய்யப்பட்டு அகலமான சாலைகள், ஆரம்ப சுகாதார திட்டம் உள்ளிட்ட பசுமை தொழிற்சாலைகள், தரமான கல்வி நிலையங்களின் பாதாள சாக்கடைகள் அமைக்க வேண்டும்.

(iii) பாதாள சாக்கடை நீரைச் சுத்தம் செய்ய தனி இயந்திரம், இயற்கை வேளாண் அங்காடி, குளிரூட்டப்பட்ட நூலகம் சிறாருக்கான தனி நூலகம் எனத் தனி தனியாக நூலகங்கள் அமைக்க வேண்டும்.

(iv) நெகிழி இல்லாத நகரமாகவும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகரமாகவும் உருவாக்க வேண்டும்.
(v) வீட்டுக்கு ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
(vi) தடையற்ற மின்சாரம், தூய்மையான குடிநீர்; பாதுகாப்பு வசதி போன்ற வசதிகள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்வேன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல. அது நம்பிக்கை மையம். காரணம் –
அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
ஆ) மென்பொருள், வன்பொருள் வாகன உற்பத்தியில் பங்கு
இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
ஈ) அ, ஆ, இ அனைத்தும்
Answer:
ஈ) அ, ஆ, இ அனைத்தும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 2.
கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவோ இருந்தது.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று சரி காரணம் சரி
Answer:
ஈ) கூற்று சரி காரணம் சரி

Question 3.
பொருத்துக.
அ) திருவல்லிக்கேணி ஆறு – 1. மாவலிபுரச் செலவு
ஆ) பக்கிங்காம் கால்வாய் – 2. கல்கோடரி
இ) பல்லாவரம் – 3. அருங்காட்சியகம்
ஈ) எழும்பூர் – 4. கூவம்

அ) 1, 2, 4, 3
ஆ) 4, 2, 1, 3
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 4, 1, 2, 3

குறுவினா

Question 1.
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
Answer:

 • காலின் மெக்கன்சியின் தொகுப்புகளைக் கொண்டு 1869இல் உருவாக்கப்பட்ட நூலகம்.
 • ஓலைச்சுவடிகள், தாள்சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகள் காணப்படுகிறது.

சிறுவினா

Question 1.
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
Answer:

 • சென்னை நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு.
 • அந்தப் பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குதல் மிகக் கடினம்.
 • இந்திய சாரசனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்று சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றன.
 • ஆவணங்களை முறையாகக் கையாளும் ஆவணக் காப்பகம் (மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ்) சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது.
 • தென்னிந்திய வரலாற்றை, பண்பாட்டை அறிவதற்கு எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம் துணை நிற்கின்றன.
 • இந்தியாவின் பொதுநூலகம் கன்னிமாரா நூலகம் நவீனமாக வளர்ந்து வரும் பெரிய நூலகம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

நெடுவினா

Question 1.
‘ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும்’ நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை :
ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு என்பதில் நான் பார்த்து வளர்ந்த சென்னை நகரத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சென்னை :
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் சென்னை இன்று தமிழகதெங்கும் பரவி வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். சென்னை இந்தியாவின் முதன்மை நகரங்களுள் ஒன்று மற்றும் தமிழகத்தின் தலைநகரம். சென்னை என்று அழைக்கப்படும் பகுதியும் அதன் சுற்றுப்பகுதிகளும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டுள்ளன.

மானுட எச்சம் :
பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்கோடரி இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்று கிடைக்கும் மானுட எச்சங்கள் நமது பழமையை உணர்த்துகின்றன. இன்று சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.

பாடல் பெற்ற தலம் :
திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர் ஆகியவற்றில் உள்ள கோயில்கள் பாடல் பெற்ற, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தலமாக உள்ளன.

நீர்நிலை – வடிகால் :
வடசென்னைக்குக் கொற்றலையாறு, மத்திய சென்னைக்குக் கூவம், தென் சென்னைக்கு அடையாறு கீழே பாலாறு இவை நான்கும் இணைக்கும் பக்கிங்காம் கால்வாய், காட்டன் கால்வாய் இருந்தன. 18 பெரிய ஓடைகள், 540க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் வடிகால் : பெற்றிருந்தது. ஆனால் அவை எங்கு போயின என்று தெரியவில்லை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

நகரம் – உருவாக்கம் :
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே உள்ள வீடுகள் இருந்த பகுதி வெள்ளை நகரம்’ என்றும் வெளியே இருந்த குடியிருப்பு ‘கருப்பர் நகரம்’ என்றும் அழைக்கப்பட்டது. கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் வணிகத்தையே செய்தது. இதனால் நெசவாளர்கள் சென்னையை நோக்கி வந்தனர். அவர்கள் வாழ்ந்த பகுதிதான் வண்ணத்துக்காரன் பேட்டை என்பது வண்ணாரப்பேட்டை என்றும் சின்னதறிப்பேட்டை சிந்தாதரிப் பேட்டை என்றும் தோன்றியது. வடசென்னையை மதராசப்பட்டினம் என்றும் தென்சென்னையை சென்னைப்பட்டினம் என்றனர். ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று அழைத்தனர். அது இன்று சென்னையாக உள்ளது. ஆங்கிலேயரின் அதிகார மையமான இந்நகரம் ஆங்கிலேயரை எதிர்க்க முதல் தளமாக அமைந்த நகரமாக விளங்கியது.

கல்லூரிகள் – பள்ளிகள் :

 • 1715இல் உருவான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி’.
 • 1812இல் உருவான சென்னைக் கோட்டைக் கல்லூரி.
 • 1837இல் உருவான கிறிஸ்துவக் கல்லூரி.
 • 1840இல் பிரசிடென்சி பள்ளி (மாநிலக் கல்லூரி).
 • 1857இல் சென்னைப் பல்கலைக்கழகம்.
 • 1914இல் உருவான இராணிமேரிக் கல்லூரி.

போன்ற கல்லூரி பழமை வாய்ந்து அறிவின் நகரமாக விளங்குகிறது.

பண்பாட்டு அடையாளங்கள் :
சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு. பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குவது கடினம். இந்திய சாரசனிக் கட்டடக்கலை இன்றும் சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட கட்டடங்களாகத் தமிழ்நாடு ஆவணக் காப்பகம், எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம் போன்றவை விளங்குகின்றன.

நம் சென்னை (இன்றைய சென்னை:
இன்று சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல. அது நம்பிக்கை மையம். சென்னையை மையமிட்டு தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் ஏற்படுத்தி நேரடி, மறைமுக வாய்ப்புகள் உருவாகின்றன. கணினி மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் இன்று சென்னை: முதலிடம் வகிக்கிறது. இந்திய அளவில் மென்பொருள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. : மின்னணுப் பொருள்கள் உருவாக்கும் மையமாகவும் திகழ்கிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

முடிவுரை:
இத்தகு பெருமைகொண்ட சென்னை நகரம் நான் பார்த்து வாழ்ந்த காலகட்டத்தில் :(203) பெருமைகொண்ட பழமையைப் பறைசாற்றும் நகரமாக விளங்குகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடித்தளமாகவும் அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை நகரம்
அ) மதராசப்பட்டினம்
ஆ) காவிரிபூம்பட்டினம்
இ) புதுச்சேரி
ஈ) கொற்கை
Answer:
அ) மதராசப்பட்டினம்

Question 2.
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது
அ) திருப்பதி
ஆ) சென்னை
இ) திருவனந்தபுரம்
ஈ) கன்னியாகுமரி
Answer:
ஆ) சென்னை

Question 3.
தமிழகத்தின் தலைநகரம்
அ) மதுரை
ஆ) கோயம்புத்தூர்
இ) திருச்சி
ஈ) சென்னை
Answer:
ஈ) சென்னை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 4.
சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி நிறுவுவது
அ) அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை
ஆ) அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை
இ) அப்பகுதிகளில் மனித வாழ்வு நடைபெறவில்லை என்பதை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை

Question 5.
சென்னையில் ஓடக்கூடிய ………….. படுகை மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று எனலாம்.
அ) அடையாற்றுப்
ஆ) பாலாற்றுப்
இ) கூவமாற்றுப்
ஈ) கொற்றலையாற்றுப்
Answer:
ஈ) கொற்றலையாற்றுப்

Question 6.
இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய கல்கோடரி கண்டுபிடிக்கப்பட்ட இடம்
அ) கூடுவாஞ்சேரி
ஆ) பல்லாவரம்
இ) புழல்
ஈ) மயிலாப்பூர்
Answer:
ஆ) பல்லாவரம்

Question 7.
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ என்னும் துறைமுகமாகச் சுட்டப்படும் சென்னையின் இன்றைய ஒரு பகுதி
அ) திருவல்லிக்கேணி
ஆ) மீனம்பாக்கம்
இ) மயிலாப்பூர்
ஈ) வடபழனி
Answer:
இ) மயிலாப்பூர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 8.
பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை …………… காலத்தில் அமைக்கப்பட்டது.
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) முதலாம் நரசிம்மவர்மன்
இ) முதலாம் நந்திவர்மன்
ஈ) மூன்றாம் நந்திர்வமன்
Answer:
அ) முதலாம் மகேந்திரவர்மன்

Question 9.
சென்னையில் கிடைத்தவற்றுள் மிகப் பழமையான கல்வெட்டு
அ) பல்லாவரம் கல்வெட்டு
ஆ) திருவல்லிக்கேணி கல்வெட்டு
இ) மயிலாப்பூர் கல்வெட்டு
ஈ) மாதவரம் கல்வெட்டு
Answer:
அ) பல்லாவரம் கல்வெட்டு

Question 10.
சென்னையில் நந்திவர்மன் கல்வெட்டு கிடைக்கப்பெற்றுள்ள இடம்
அ) பல்லாவரம்
ஆ) மாதவரம்
இ) திருவல்லிக்கேணி
ஈ) வடபழனி
Answer:
இ) திருவல்லிக்கேணி

Question 11.
வள்ளல் பச்சையப்பர் ……….. நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக ஒரு குறிப்பு, அவரது நாட்குறிப்பில் உள்ளது.
அ) கூவம்
ஆ) அடையாறு
இ) கொற்றலையாற்று
ஈ) பாலாற்று
Answer:
அ) கூவம்

Question 12.
பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்தவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) காமராசர்
Answer:
ஆ) பாரதிதாசன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 13.
சென்னையிலே ஒருவாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும் – என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியவர்
அ) மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) ப. ஜீவானந்தம்
இ) கண்ண தாசன்
ஈ) பாரதிதாசன்
Answer:
ஈ) பாரதிதாசன்

Question 14.
கி.பி. 1647இல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் ”தொண்டமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்’ என்று காணப்படும் குறிப்பால் அறியப்படும் செய்தி
அ) குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாறு
ஆ) வளமிகு சென்னையின் வணிக மேம்பாடு
இ) சென்னை மக்களின் செல்வ வாழ்க்கை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாறு

Question 15.
மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியை ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெடுத்தவர்
அ) பிரான்சிஸ் டே
ஆ) கால்பர்ட்
இ) இராபர்ட் கிளைவ்
ஈ) தாமஸ் பிட்
Answer:
அ) பிரான்சிஸ் டே

Question 16.
கூவம் ஆற்றை …………… என்றும் அழைத்தனர்.
அ) வடபழனி ஆறு
ஆ) திருவல்லிக்கேணி ஆறு
இ) மாதவரம் ஆறு
ஈ) பல்லாவரம் ஆறு
Answer:
ஆ) திருவல்லிக்கேணி ஆறு

Question 17.
பொருத்திக் காட்டுக.
அ) வடசென்னை – 1. பாலாறு
ஆ) தென்சென்னை – 2. கூவம்
இ) மத்திய சென்னை – 3. அடையாறு
ஈ) தென்சென்னைக்கும் கீழ் – 4. கொற்றலையாறு

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 1, 4, 3, 2
ஈ) 4, 1, 2, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 18.
பிரான்சிஸ் டே மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியைச் சென்னப்பரின் இருமகன்களிடமிருந்து வாங்கிய நாள்
அ) 22.08.1639
ஆ) 23.09.1739
இ) 23.08.1640
ஈ) 24.10.1642
Answer:
அ) 22.08.1639

Question 19.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே இருந்த பகுதி …………….. என்று அழைக்கப்பட்டது.
அ) வெள்ளையர் நகரம்
ஆ) கோட்டைநகரம்
இ) தமிழர் நகரம்
ஈ) கருப்பர் நகரம்
Answer:
அ) வெள்ளையர் நகரம்

Question 20.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்தகுடியிருப்புகள்…………..என அழைக்கப்பட்டது.
அ) வெள்ளையர் நகரம்
ஆ) கருப்பர் நகரம்
இ) கோட்டை நகரம்
ஈ) தமிழர் நகரம்
Answer:
அ) வெள்ளையர் நகரம்

Question 21.
பொருத்திக் காட்டுக.
அ) வடசென்னைப் பகுதிகள் – 1. மதராஸ்
ஆ) தென்சென்னைப் பகுதிகள் – 2. மதராசப்பட்டினம்
இ) ஆங்கிலேயர்கள் – 3. சென்னைப்பட்டினம்

அ) 2, 3, 1
ஆ) 2, 1, 3
இ) 1, 2, 3
ஈ) 3, 2, 1
Answer:
அ) 2, 3, 1

Question 22.
1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சென்னைநகரின் மக்கள் தொகை
அ) 18,000
ஆ) 25,000
இ) 19,000
ஈ) 29,000
Answer:
இ) 19,000

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 23.
சென்னை நகராட்சி உருவாக்கபப்ட்ட ஆண்டு
அ) 1639
ஆ) 1646
இ) 1688
ஈ) 1768
Answer:
இ) 1688

Question 24.
ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல் தலைவர்
அ) பிரான்சிஸ் டே
ஆ) எலி யேல்
இ) தாமஸ் பிட்
ஈ) தானியேல்
Answer:
ஆ) எலி யேல்

Question 25.
எலியேலைத் தொடர்ந்து சென்னை மாகாணத்தின் தலைவரானவர்
அ) பிரான்சிஸ் டே
ஆ) தாமஸ் பிட்
இ) இராபர்ட் கிளைவ்
ஈ) தாமஸ் மன்ரோ
Answer:
ஆ) தாமஸ் பிட்

Question 26.
……………… ஆட்சிக்காலத்தைச் சென்னையின் பொற்காலம் என்பர்.
அ) பிரான்சிஸ் டே
ஆ) எலி யேல்
இ) தாமஸ் பிட்
ஈ) இராபர்ட் கிளைவ்
Answer:
இ) தாமஸ் பிட்

Question 27.
சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றிய நூற்றாண்டு
அ) கி.பி. 17
ஆ) கி.பி. 16
இ) கி.பி. 18
ஈ) கி.பி. 19
Answer:
இ) கி.பி. 18

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 28.
ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1615
ஆ) 1635
இ) 1675
ஈ) 1715
Answer:
ஈ) 1715

Question 29.
பொருத்திக் காட்டுக.
அ) சென்னைக் கோட்டைக் கல்லூரி – 1) 1914
ஆ) கிறித்தவக் கல்லூரி – 2) 1857
இ) பிரசிடென்சி கல்லூரி – 3) 1840
ஈ) சென்னைப் பல்கலைக்கழகம் – 4) 1837
உ) இராணிமேரி கல்லூரி – 5) 1912

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ ) 2, 3, 1, 5, 4
ஈ) 2, 3, 4, 1, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 30.
ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம்
அ) இராணிமேரிக் கல்லூரி
ஆ) பச்சையப்பன் கல்லூரி
இ) சென்னைக் கோட்டைக் கல்லூரி
ஈ) கிறித்துவக்கல்லூரி
Answer:
ஆ) பச்சையப்பன் கல்லூரி

Question 31.
இந்தோ -சாரசனிக் கட்டடப் பாணியில் 1768இல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம்
அ) சேப்பாக்கம் அரண்மனை
ஆ) சென்னைப்பல்கலைக்கழகம்
இ) ரிப்பன் கட்டடம்
ஈ) விக்டோரியா அரங்கு
Answer:
அ) சேப்பாக்கம் அரண்மனை

Question 32.
இந்தியாவின் முதல் பொதுநூலகம்
அ) சரசுவதிமகால் நூலகம்
ஆ) கொல்கத்தா நூலகம்
இ) கன்னிமாரா நூலகம்
ஈ) திருவனந்தபுரம் நூலகம்
Answer:
இ) கன்னிமாரா நூலகம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 33.
அண்ணாசாலைக்கு (மவுண்ட் ரோடு) அடுத்ததாக மதராசப்பட்டினத்தின் மற்றொரு முக்கியமான சாலை ………………. நெடுஞ்சாலையாகும்.
அ) பூவிருந்தவல்லி
ஆ) திருவொற்றியூர்
இ) சிந்தாதிரிப்பேட்டை
ஈ) மவுலிவாக்கம்
Answer:
அ) பூவிருந்தவல்லி

Question 34.
1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்ட இடம்
அ) எழும்பூர்
ஆ) கிண்டி
இ) இராயபுரம்
ஈ) திருவான்மியூர்
Answer:
இ) இராயபுரம்

Question 35.
ஆங்கிலேயருக்கும் சென்னை மாநகருக்கும் ஏறத்தாழ 300 ஆண்டுகாலமாக இருந்த உறவு முடிவுக்கு வந்த நாள்
அ) 1942 அக்டோபர் 2
ஆ) 1945 ஜூன் 15
இ) 1947 ஆகஸ்ட் 15
ஈ) 1950 ஜனவரி 26
Answer:
இ) 1947 ஆகஸ்ட் 15

Question 36.
பொருத்திக் காட்டுக.
அ) சென்னை இலக்கியச் சங்கம் – 1) 1869
ஆ) கன்னிமாரா நூலகம் – 2) 1812
இ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – 3) 1860
ஈ) அண்ணா நூற்றாண்டு நூலகம் – 4) 2010

அ) 2, 3, 1, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 1, 4, 2
Answer:
அ) 2, 3, 1, 4

Question 37.
காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூலகம்
அ) கன்னிமாரா நூலகம்
ஆ) சரசுவதி மகால் நூலகம்
இ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
ஈ) சென்னை இலக்கியச் சங்கம்
Answer:
இ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 38.
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம்
அ) கன்னிமாரா நூலகம்
ஆ) திருவனந்தபுரம் நூலகம்
இ) சரசுவதிமகால் நூலகம்
ஈ) அண்ணாநூற்றாண்டு நூலகம்
Answer:
ஈ) அண்ணாநூற்றாண்டு நூலகம்

குறுவினா

Question 1.
சென்னை நகராட்சி, மாகாணம் உருவான அமைப்பை விளக்குக.
Answer:
நகராட்சி : 1646ஆம் ஆண்டின் நகரின் மக்கள் தொகை 19000. இதை அறிந்து 1688இல் நகராட்சி உருவாக்கப்பட்டது.

மாகாணம் :

 • ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கு வசதியாக தென்னிந்தியாவில் பல பகுதிகளை உள்ளடக்கிச் சென்னை மாகாணத்தை உருவாக்கினர்.
 • தலைவர் – எலி யேல் அவரைத் தொடர்ந்து தாமஸ் பிட். இவரது ஆட்சிக்காலம் சென்னையின் பொற்காலம் என்பர்.

Question 2.
மல்லியர்பா – விளக்குக.
Answer:
தொல் பழங்கால மானுட எச்சங்களை உணர்த்தும் பழமையான சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சூட்டப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 3.
சென்னை – ஓர் காட்டுமரம் விளக்குக.
Answer:
(i) இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகளாக ஆங்கிலேயரின் ஆட்சிக்கு அடித்தளமாகவும், அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை நகரம் மதராசப்பட்டினம்.

(ii) அது இன்று பரப்பரப்பானசென்னைமாநகரமாக வளர்ந்திருக்கிறது. திட்டமிட்டு உருவாக்கப்படாத இந்நகரம் காட்டுமரம் போல் தன் மனம் போன போக்கில் வளர்கிறது.

(iii) அதனால் சென்னை ஓர் காட்டுமரம் என்பது சாலப் பொருந்தும்.

Question 4.
சென்னை நகரின் பழமையான கோயில்களை குறிப்பிடுக.
Answer:
திருவொற்றியூர், திருமுல்லைவாயில், திருவான்மியூர், மயிலாப்பூர் இவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடல் பெற்ற தளங்கள் ஆகும்.

Question 5.
சென்னை என்ற பெயர் வளர்ச்சி பெற்றதனை விளக்குக.
Answer:

 • வடசென்னைப் பகுதியை மதராசப்பட்டினம் என்றும், தென்சென்னைப் பகுதியை சென்னைப்பட்டினம் என்றும் அமைத்தனர்.
 • ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று பெயர் சூட்டினர்.
 • மதராஸ் பின்பு மெட்ராஸ் ஆகியது.
 • இன்று சென்னை என்று பெருமையோடு விளங்குகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 6.
மெட்ராஸ் ரெக்காட் ஆபீஸ் – குறிப்பு வரைக.
Answer:
ஆவணங்களை முறையாகக் கையாளும் பழக்கம் கொண்ட ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டது. சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது. இன்று தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.

Question 7.
சென்னைக்கு இயற்கை கொடுத்த வடிகால்கள் சிலவற்றைக் கூறுக.
Answer:

 • வடசென்னை – கொற்றலையாறு, தென்சென்னை, அடையாறு.
 • மத்திய சென்னை – கூவம், பாலாறு.

இவை நான்கையும் இணைப்பது, பக்கிங்காம் கால்வாய்.

Question 8.
சென்னை நகரில் காணப்படும் சில கால்வாய்களைக் கூறுக.
Answer:
காட்டன் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், விருகம்பாக் கால்வாய்.

Question 9.
சென்னையில் அக்காலத்தில் வடிகால்களாக எத்தனை பெரிய ஓடைகள், சிறிய ஓடைகள் காணப்பட்டன?
Answer:

 • 18 பெரிய ஓடைகள், 540 சிறிய ஓடைகள்.
 • மழைநீர் சிறிய ஓடைகள் வழியாக பெரிய ஓடைகளை அடைந்து பிறகு ஆறுடன் சேர்ந்து கடலில் கலக்கிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 10.
பாரதிதாசன் பக்கிங்காம்கால்வாயில் படகுப் பயணம் செய்தவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
Answer:
மயிலை சீனி. வேங்கடாசாமி, ப. ஜீவானந்தம்

Question 11.
கூவம் நதியில் குளித்துவிட்டு கோயிலில் வழிபட்டவர் யார்?
Answer:
வள்ளல் பச்சையப்பர் கூவம் நதியில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோயிலில் வழிபட்டவர் ஆவார்.

Question 12.
சென்னையில் கிழக்கிந்திய நிறுவனம் கால்பதிப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர் புகழ்பெற்றிருந்த கிராமங்கள் யாவை?
Answer:
சேத்துப்பட்டு (சேற்றுப்பட்டு), நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, தாம்பரம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 13.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி, வெளியே குடியிருப்புகள் உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer:

 • வெள்ளையர் நகரம் = உள்ளே வீடுகள் இருந்த பகுதி.
 • கருப்பர் நகரம் = வெளியே குடியிருப்புகள் இருந்த பகுதி.

Question 14.
மதராசப்பட்டினம் என்று அழைக்கப்படும் பகுதி எது?
Answer:
உள்ளே வீடுகள் இருந்த பகுதி வெள்ளையர் நகரமும், வெளியே உள்ள குடியிருப்பு பகுதி கருப்பர் நகரமும் இணைந்த பகுதி. மதராசப்பட்டினம் என்று அழைப்பர்.

Question 15.
கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக சென்னையில் செய்த வணிகம் யாது?
Answer:
கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக சென்னையில் செய்த வணிகம் துணி வணிகம் ஆகும்.

சிறுவினா

Question 1.
சென்னை தொன்மைய வாய்ந்த நகரம் என்பதுற்குச் சான்று தருக.
Answer:
(i) சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதியில் மேற்கொண்ட அகழாய்வு. கொற்றலையாற்றுப் படுகை. பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்கோடரி.

(ii) கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்னும் கிடைக்கும் மானுட எச்சம்.

(iii) மயிலாப்பூர் 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் மல்லியர்பா எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டது. திருநெல்வேலிக்கேணியில் கிடைத்த நந்திவர்மன் கல்வெட்டு
போன்றவை சென்னையின் தொன்மையை விளக்கும் சான்றாக அமைகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 2.
சென்னை அறிவின் நகரம் என்பதற்குச் சான்று தருக.
Answer:

 • 18ஆம் நூற்றாண்டிலேயே ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனம் தோன்றின.
 • 1715இல் புனித மேரி தேவாலய தர்மப்பள்ளி
 • 1812 சென்னைக் கோட்டைக் கல்லூரி
 • 1840 மாநிலக் கல்லூரி (பிரசிடென்சி கல்லூரி)
 • 1857 சென்னைப் பல்கலைக்கழகம்
 • 1914 இராணிமேரி கல்லூரி

இவை மட்டுமல்லாமல் ஆங்கிலேயரின் உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்லூரியாக பச்சையப்பன் கல்லூரி விளங்குகிறது. மருத்துவக் கல்லூரி, கவின்கலைக் கல்லூரி போன்ற பல்துறை சார்ந்த கல்லூரிகள் இங்குள்ளன.

Question 3.
இந்தோ -சாரசனிக் கட்டடக்கலை – விளக்குக.
Answer:
முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானியக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி. இவை மூன்றையும் கலந்து உருவாக்கப்பட்ட கட்டடக்கலை.
சான்று:

 • 1768இல் உருவான சேப்பாக்கம் அரண்மனை
 • மத்தியத் தொடர்வண்டி நிலையம்
 • எழும்பூர் தொடர்வண்டி நிலையம்
 • உயர்நீதிமன்றம்
 • ரிப்பன் கட்டடம்
 • விக்டோரியா அரங்கு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 4.
மதராசப்பட்டினத்தின் போக்குவரத்துப் பற்றி சில சான்றுகள் தருக.
Answer:
நடந்து சென்றபாதை, மாட்டுவண்டிகள் சென்ற பாதை ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு சாலைகளாக மாறின.

 • சென்னை அண்ணாசாலை (மவுண்ட் ரோடு) அடுத்ததாக பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை.
 • 1856 உருவான இராயபுரத்தில் உருவான தொடர் வண்டி நிலையம்.
 • சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம்.
 • எழும்பூர் தொடர் வண்டி நிலையம்.

Question 5.
சென்னையின் பழமை, அறிவுப் புரட்சி போன்றவற்றை சான்றுடன் நிறுவுக.
Answer:

 • சென்னை இலக்கிய சங்கம் 1812ல் உருவான நூலகம்.
 • 1860இல் கன்னிமாரா நூலகம் அருகங்காட்சியகமாக தொடங்கப்பட்டு இந்தியாவின் முதல் பொது நூலகம் என்ற பெருமை பெறுகிறது.
 • 1869இல் உருவான கீழ்த்திசைச் சுவடி நூலகம்.2010இல் உருவான ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம்.
 • தமிழாய்வு நூலகம்.
 • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்.
 • ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.
 • மறைமலையடிகள் நூலகம்.
 • செம்மொழித் தமிழாய்வு நூலகம்.
 • உ.வே.சா நூலகம் போன்றவை.

சென்னையின் பழமையையும் அறிவுப் புரட்சியையும் விளக்குவதாக அமைகிறது.

Leave a Reply