Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 2.3 நெடுநல்வாடை Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 2.3 நெடுநல்வாடை
கற்பவை கற்றபின்
Question 1.
தற்கால வாழ்க்கைமுறையில் மழை, குளிர் காலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
ஆசிரியர் : மாணவ – மாணவியருக்கு வணக்கம், இன்று, மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் பாதிப்புப் பற்றி உங்களோடு கலந்துரையாட வந்துள்ளேன்.
மாணவர்கள் : ஐயா! அறிந்துகொள்ள மிக ஆவலாக இருக்கிறோம்.
ஆசிரியர் : மிக்க மகிழ்ச்சி! சொல்கிறேன்.
மாணவர்கள் : உறுதியாக ஐயா! நாங்கள் உங்கள் அறிவுரைப்படியே நடந்து கொள்வோம் ஐயா!
ஆசிரியர் : நல்லது, அன்பு மாணவர்களே!
முதலாவதாக மழைக்காலப் பாதிப்பு :
- மழைக்காலங்களில் மழை – ஆடை அணிந்து கொள்ளவில்லை என்றால் சளி, சுரம் இவைகளின் வாயிலாக உடல் பாதிப்புக்கு உள்ளாகும்.
- வீட்டினைச் சுற்றி மேடான அமைப்பு இல்லை எனில் மழை நீர் தேங்கும். நீர்தேங்கினால் கொசுத்தொல்லை ஏற்படும் அபாயம் ஏற்படும்.
- மழைக்காலத்தில் மின்கம்பங்களுக்கு அருகில் நிற்றல், மரங்களுக்குக் கீழே நிற்றல் போன்ற செயல்களாலும் பாதிப்பு மற்றும் ஆபத்து ஏற்படும்.
- மொட்டை மாடியின் மேல் நீர்தேங்காமல் பாதுகாக்க வேண்டும், தேங்கினால் மேற்கூரை நீரினால் ஊறி வீடே இடிந்துவிழும் சூழல் ஏற்படும்.
- குளிர்காலங்களில், தலைக்கு கம்பளி ஆடை, காதுக்கு அடைப்பானும் அணிய வேண்டும், இல்லையெனில் குளிர்க்காற்று காதில் புகுந்து காய்ச்சில், சளி தொந்தரவினை உண்டாக்கும். அதிகமான குளிர் சிறு குழந்தைகளுக்குச் சிறுசிறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
- எனவே, வருமுன்னர் காப்போம் என்னும் கூற்றுப்படி நம்மை நாமே காக்க முற்பட வேண்டும்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
பொருத்தக.
அ) குரங்குகள் – 1. கன்றுகளைத் தவிர்த்தன
ஆ) பசுக்கள் – 2. மரங்களிலிருந்து வீழ்ந்தன
இ) பறவைகள் – 3. குளிரால் நடுங்கின
ஈ) விலங்குகள் – 4. மேய்ச்சலை மறந்தன
அ) 1, 3, 4, 2
ஆ ) 3, 1, 2, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 1, 3, 4
Answer:
ஆ ) 3, 1, 2, 4
Question 2.
‘பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென’ – தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ) வினைத் தொகை
ஆ) உரிச்சொல் தொடர்
இ) இடைச்சொல் தொடர்
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Answer:
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
குறுவினா
Question 1.
இனநிரை – பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
Answer:
இனநிரை – இனம் + நிரை
‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும்’ என்ற விதிப்படி, மவ்வீறு ஒற்றழிந்து ‘இனநிரை’ எனப் புணர்ந்தது.
சிறுவினா
Question 1.
வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
Answer:
- வாடைக் காலத்தில் மேகம் மழையை வலப்பக்கமாகச் சூழ்ந்து பூமி குளிரும்படி மழைப் பெய்தது.
- தாழ்வான பகுதியில் வெள்ளம் பெருகிறது.
- கோவலர்கள் தாங்கள் மேயவிட்டிருந்த எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை மேடான நிலங்களுக்கு மாற்றினர்.
- பழகிய நிலத்தை விட்டுப் புது இடத்தை அடைந்ததால் வருந்தினர்.
- தண்ணீர் தாழ்வான பகுதியில் நிரம்பி விடும் என்பதால் பாதுகாப்பிற்காக மேடான பகுதிக்குச் சென்றனர். நீர்த்துளிகள் மேலே படுவதாலும், வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் : உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.
நெடுவினா
Question 1.
நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answer:
(i) ஐப்பசி மாதம் அடை மழைக்காலம் என்பார்கள். பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களை கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர். பருவ மாற்றங்களால் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை மாற்றம் பெறுகிறது.
(ii) முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழை குளிரால் ஏற்படும் தாக்கத்தினை நெடுநல்வாடை வருணனை செய்கிறது.
(iii) மேகம் தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாக சூழ்ந்து எழுந்தது. உலகம் குளிரும்படியாக மழைப் பொழிந்தது. மழை வெள்ளம் தாழ்வானப் பகுதியை நோக்கிச் சென்றது. வெள்ளத்தை வெறுத்த மக்கள் / வளைந்த கோலையுடைய ஆயர்கள் தம் நிரைகளை மேடான
(iv) பகுதியில் மேயவிட்டனர். மக்கள் தாம் பழகிய நிலத்தைவிட்டு வேறு இடம் சென்றதால் வருத்தம் அடைந்தனர். கோவலர்கள் சூடியிருந்த காந்தள் மாலை கசங்கியது. குளிரால் மக்கள் கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர், பற்கள் நடுங்கியது.
(v) விலங்குகள் குளிர் மிகுதியால் மேய்ச்சலை மறந்தன; குரங்குகள் நடுங்கின பறவைகள் நிலத்தில் விழுந்தன. பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன.
(vi) மலையையே குளிரச் செய்வன போன்று இருந்தது என்று நக்கீரர் மழைக்கால வருணனையினை நெடுநல்வாடையில் பதிவு செய்கிறார்.
இலக்கணக் குறிப்பு
வளைஇ – சொல்லிசை அளபெடை
பொய்யா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
புதுப்பெயல் – பண்புத்தொகை
கொடுங்கோல் – பண்புத்தொகை
உறுப்பிலக்கணம்
கலங்கி = கலங்கு + இ
கலங்கு – பகுதி
இ – வினையெச்ச விகுதி
புணர்ச்சி விதி
புதுப்பெயல் = புதுமை + பெயல்
- ஈறுபோதல்’ என்ற விதிப்படி ‘மை’ கெட்டு புது + பெயல் என்றானது.
- ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதபமிகும்’ என்ற விதிப்படி ப் தோன்றி, புதுப்பெயல்’ எனப் புணர்ந்தது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
‘ஆர்கலி’ என்ற சொல்லின் பொருள்
அ) சூரியன்
ஆ) வெள்ளம்
இ) கடல்
ஈ) நிலா
Answer:
ஆ) வெள்ளம்
Question 2.
‘கலங்கி’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) கல+ங்+க்+இ
ஆ) கலங்கி +இ
இ) கலங்கு+க்+இ
ஈ) கலங்கு+இ
Answer:
ஈ) கலங்கு+இ
Question 3.
வாடைக்காற்று எந்தத் திசையில் இருந்து வீசும்?
அ) வடமேற்கு
ஆ) வடக்கு
இ) தென்கிழக்கு
ஈ) தெற்கு
Answer:
ஆ) வடக்கு
Question 4.
போர்மேற்சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படை வீடு
அ) கடவை
ஆ) சிவிரம்
இ) கூதிர்ப்பாசறை
ஈ) வீடாரம்
Answer:
இ) கூதிர்ப்பாசறை
Question 5.
ஆயர்கள் சூடியிருந்த மாலை
அ) குறிஞ்சி மாலை
ஆ) மல்லிகை மாலை
இ) வாகை மாலை
ஈ) காந்தள் மாலை
Answer:
ஈ) காந்தள் மாலை
Question 6.
‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி அமைந்த சொல்
அ) கொடுங்கோல்
ஆ) புதுப்பெயல்
இ) வலனேற்பு
ஈ) கண்ணுடைய
Answer:
இ) வலனேற்பு
Question 7.
‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்’ என்னும் விதிப்படி அமைந்த சொல்
அ) இனநிரை
ஆ) ஏறுடை
இ) புதுப்பெயல்
ஈ) கொடுங்கோல்
Answer:
அ) இனநிரை
Question 8.
‘வளைஇ’ – என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ) மரூஉ
ஆ) சொல்லிசை அளபெடை
இ) இசைநிறையளபெடை
ஈ) இன்னிசையளபெடை
Answer:
ஆ) சொல்லிசை அளபெடை
Question 9.
வெற்றி பெற்ற அரசனும் வீரரும் சூடும் பூ
அ) காஞ்சி
ஆ) தும்பை
இ) வாகை
ஈ) வஞ்சி
Answer:
இ) வாகை
Question 10.
கூற்று 1 : தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
கூற்று 2 : கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.
அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று 1 சரி 2 தவறு
Answer:
இ) கூற்று இரண்டும் சரி
Question 11.
கூற்று : வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு, ஆகிய நிரைகளை மேடான நிலங்களில் மேயவிட்டனர்.
விளக்கம் : உலகம் குளிருமாறு புதிய மழை பொழிந்ததால் தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தால் மேடான நிலம் சென்றனர்.
அ) கூற்று சரி விளக்கம் தவறு
ஆ) கூற்று தவறு விளக்கம் தவறு
இ) கூற்றும் விளக்கமும் சரி
ஈ) கூற்று தவறு விளக்கம் சரி
Answer:
இ) கூற்றும் விளக்கமும் சரி
Question 12.
சரியானதைத் தேர்க.
அ) வாகை – துறை
ஆ) கூதிர்ப்பாசறை – திணை
இ) கொடுங்கோல் – வளைந்த கோல்
ஈ) கண்ணி – கன்னம்
Answer:
இ) கொடுங்கோல் – வளைந்த கோல்
Question 13.
பொருந்தாததைத் தேர்க.
அ) புதுப்பெயல் – புதிய வயல்
ஆ) புலம்பு – தனிமை
இ) மா – விலங்கு
ஈ) கவுள் கன்னம்
Answer:
அ) புதுப்பெயல் – புதிய வயல்
Question 14.
பொருந்தாததைக் தேர்க.
அ) புதுப்பெயல் – ஈறுபோதல், இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
ஆ) கொடுங்கோல் – ஈறுபோதல், இனமிகல்
இ) வலனேற்பு – உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
ஈ) இனநிரை – மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
Answer:
இ) வலனேற்பு – உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
Question 15.
பொருத்துக.
அ) ஆர்கலி – 1. பெண் குரங்கு
ஆ) கவுள் – 2. தலையில் சூடும் மாலை
இ) மந்தி – 3. கன்ன ம்
ஈ) கண்ணி – 4. வெள்ளம்
அ) 3, 4, 1, 2
ஆ) 2, 1, 4,3
இ) 4, 3, 1, 2
ஈ) 4, 1, 3, 2
Answer:
இ) 4, 3, 1, 2
Question 16.
நெடுநல்வாடையை இயற்றியவர்
அ) கபிலர்
ஆ) பரணர்
இ) நக்கீரர்
ஈ) மோசிகீரனார்
Answer:
இ) நக்கீரர்
Question 17.
நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன்
அ) சோழன் கரிகாலன்
ஆ) சேரன் செங்குட்டுவன்
இ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஈ) பறம்புமலை பாரி
Answer:
இ) பாண்டியன் நெடுஞ்செழியன்
Question 18.
நக்கீரரின் தந்தை
அ) மதுரைக் கணக்காயனார்
ஆ) மாங்குடி மருதனார்
இ) வெள்ளைக்குடி நாகனார்
ஈ) இவர்களில் எவழருமிலர்
Answer:
அ) மதுரைக் கணக்காயனார்
Question 19.
நெடுநல்வாடை …………. நூல்ளுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) நீதி
Answer:
ஆ) பத்துப்பாட்டு
Question 20.
நெடுநல்வாடை ……………. அடிகளைக் கொண்டது.
அ) 144
ஆ) 150
இ) 188
ஈ) 196
Answer:
இ) 188
Question 21.
நெடுநல்வாடை அமைந்துள்ள பா
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) விருத்தப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா
Question 22.
கலங்கி – இச்சொல்லைப் பிரிக்கும் முறை
அ) கல + ங் + க் + இ
ஆ) கலங்கு + இ
இ) கலங்கு + க் + இ
ஈ) கல + க் + க் + இ
Answer:
ஆ) கலங்கு + இ
Question 23.
புதுப்பெயர் – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதிகளைக் கண்டறிக.
i) ஈறுபோதல்
ii) முன்நின்ற மெய் திரிதல்
iii) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) மூன்றும் சரி
ஈ) i, iii சரி
Answer:
ஈ) i, iii சரி
Question 24.
கூதிர்ப்பருவத்திற்குரிய மாதங்கள்
அ) தை, மாசி
ஆ) பங்குனி, சித்திரை
இ) ஐப்பசி, கார்த்திகை
ஈ) மார்கழி, தை
Answer:
இ) ஐப்பசி, கார்த்திகை
Question 25.
கண்ணி என்பது
அ) கழுத்தில் அணியும் மாலை
ஆ) தலையில் சூடும் மாலை
இ) கையில் அணியும் அணிகலன்
ஈ) காலில் அணியும் தழல்
Answer:
ஆ) தலையில் சூடும் மாலை
Question 26.
கூதிர்ப் பாசறை என்பது
அ) போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு
ஆ) போர்மேற் சென்ற அரசன் தோற்றுப் பதுங்கும் படைவீடு
இ) தலைவனும் தலைவியும் குளிர்காலத்தில் தங்கும் வீடு
ஈ) போரில் காயம் அடைந்த மன்னன் சிகிச்சை பெறுமிடம்
Answer:
அ) போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு
Question 27.
ஆயர் ………… மாலையைத் தலையில் சூடியிருந்தனர்.
அ) அத்தி
ஆ) முல்லை
இ) காந்தள்
ஈ) குறிஞ்சி
Answer:
இ) காந்தள்
Question 28.
முல்லை நிலத்தில் குளிரால் நடுங்கியவை
அ) பறவைகள்
ஆ) குரங்குகள்
இ) பசுக்கள்
ஈ) எருதுகள்
Answer:
ஆ) குரங்குகள்
Question 29.
‘மா’ என்பதன் பொருள்
அ) பறவை
ஆ) விலங்கு
இ) வானம்
ஈ) பூமி
Answer:
ஆ) விலங்கு
Question 30.
கன்றுகோள் ஒழியக் கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்
அ) எதுகை
ஆ) இயைபு
இ) முரண்
ஈ) அந்தாதி
Answer:
அ) எதுகை
குறுவினா
Question 1.
‘நெடுநல்வாடை’ – பொருள் விளக்கம் தருக.
Answer:
- தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்ப மிகுதியால் நெடுவாடை (நீண்ட வாடை)யாக இருந்தது.
- போர்ப்பாசறையில் இருந்த தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாக இருந்தது.
Question 2.
நக்கீரர் பற்றிய சிறுகுறிப்பு வரைக.
Answer:
- மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரர்.
- அகநானூற்றில் 17 பாடல்கள், குறுந்தொகையில் 8 பாடல்கள், நற்றிணையில் 7 பாடல்கள், புறநானூற்றில் 3 பாடல்கள் பாடியுள்ளார்.
- இறையனார் களவியலுக்குச் சிறந்த உரைதந்தவர்.
- கபிலர், பரணர் காலத்தவர்.
- 188 அடிகளை உடையை ‘நெடுநல்வாடை’ என்ற நூலை இயற்றியவர்.
Question 3.
‘வாகைத்திணை’ விளக்குக.
Answer:
- வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடுவதாகும்.
- தாங்கள் பெற்ற வெற்றியைக் கொண்டது வாகைத்திணை.
Question 4.
‘கூதிர்ப்பாசறை’ என்றால் என்ன?
Answer:
கூதிர்ப்பாசறை என்பது போர்மேற்கொண்ட அரசன் குளிர்காலத்தில் தாங்கும் படைவீடாகும்.
Question 5.
கூதிர்பருவம் என்பது யாது?
Answer:
ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் கூதிர்ப்பருவமாகும்.
Question 6.
குளிரினைப் போக்க கோவலர்கள் என்ன செய்தார்கள்?
Answer:
கோவலர்கள் பலரும் கூடிக் கொள்ளி நெருப்பினில் கைகளைக் காட்டி சூடாக்கி குளிரினைப் போக்க முயற்சித்தார்கள்.
சிறுவினா
Question 1.
கூதிர் காலத்தின் தன்மையான நெடுநல்வாடை குறிப்பிடுபவை யாவை?
Answer:
- விலங்குகள் மேய்ச்சலை மறந்தன.
- பெண் குரங்குகளின் உடல் குளிரால் கூனிப் போயின.
- பறவைகள் குளிரால் நடுங்கி மரத்தின் மீதிருந்து கீழே விழுந்தன.
- பால் குடிக்க வரும் கன்றுகளைப் பசுக்கள் உதைத்துத் தள்ளின.
- குன்றே குளிர்ந்தது போல கூதிர்காலத்தின் தன்மை இருந்தது.
Question 2.
வாகைத் திணை சான்றுடன் விளக்குக.
Answer:
திணை விளக்கம்:
வெற்றிபெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணையாகும்.
சான்று:
வையகம் பணிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென….
– என்ற நெடுநல்வாடைப் பாடல்.
பொருத்தம்:
வாடைக் காலத்தில் மேகம் மழையை வலப்பக்கமாகச் சூழ்ந்து பூமி குளிரும்படி மழைப் பெய்தது. வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர். அவர்களோடு மன்னனும் பாசறையில் குளிர்காலத்தில் வெற்றியைக் கொண்டாடினான்.
Question 3.
‘கூதிர்ப்பாசறை’ துறையைச் சான்றுடன் விளக்குக.
Answer:
துறை விளக்கம்:
கூதிர்ப்பாசறை என்பது போர்மேற்கொண்ட அரசன் குளிர்காலத்தில் தாங்கும் படைவீடாகும்.
சான்று:
வையகம் பணிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென…
– என்ற நெடுநல்வாடைப் பாடல்.
பொருத்தம்:
வாடைக் காலத்தில் மேகம் மழையை வலப்பக்கமாகச் சூழ்ந்து பூமி குளிரும்படி மழைப் பெய்தது. வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர். அவர்களோடு போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு கூதிர்ப்பாசறை.