Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 1.1 தமிழின் இனிமை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 1.1 தமிழின் இனிமை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைச் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
‘கழை’ இச்சொல் உணர்த்தும் சரியான பொருள் ………………..
அ) கரும்பு
ஆ) கறும்பு
இ) கருப்பு
ஈ) கறுப்பு
Answer:
அ) கரும்பு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

Question 2.
கனியிடை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) கனி + யிடை
ஆ) கணி + யிடை
இ) கனி + இடை
ஈ) கணி + இடை
Answer:
இ) கனி + இடை

Question 3.
பனி + மலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) பனிம்மலர்
ஆ) பனிமலர்
இ) பன்ம லர்
ஈ) பணிமலர்
Answer:
ஆ) பனிமலர்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

அ) கழையிடை – ………………….. + ……………………
ஆ) என்னுயிர் – ………………….. + ……………………
Answer:
அ) கழையிடை – கழை + இடை
ஆ) என்னுயிர் – என் + உயிர்

இ. பெட்டியிலுள்ள சொற்களைப் பொருத்தி மகிழ்க.|
1. பால் – ……………….
2. சாறு –  ……………….
3. இளநீர் –  ……………….
4. பாகு –  ……………….
Answer:
1. பால் – பசு
2. சாறு – கரும்பு
3. இளநீர் – தென்னை
4. பாகு – வெல்லம்

ஈ இப்பாடலில் வரும் ஒரே ஓசையுடைய சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
கனியிடை, கழையிடை, பாகிடை, பாலும், தேனும், நீரும், சுவையும்.

உ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் உள்ள சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
கனியிடை, பனிமலர், நனிபசு, இனியன, எனினும் தென்னை , என்னுயிர், என்பேன்.

ஊ. பாடலில் வரும் வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
கனிச்சுவை, கழைச்சாறு, பனிமலர், தேன், பாகு, நனிபசு, பால், தென்னை , குளிரிளநீர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

எ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பாரதிதாசன் எவற்றையெல்லாம் இனியன என்று கூறுகிறார்?
Answer:

  • பலாச்சுளை
  • கரும்புச்சாறு
  • தேன்
  • பாகு
  • பசுவின் பால்
  • இளநீர்

Question 2.
பாரதிதாசன் எதனை என் உயிர் என்று கூறுகிறார்?
Answer:
பாரதிதாசன் தமிழே என் உயிர் என்கிறார்.

ஏ. சிந்தனை வினா.

பாரதிதாசன் சிலவற்றை இனியன என்று கூறுகிறார். உனக்கு எவையெல்லாம் இனியானவை? ஏன்?
Answer:

  • மாம்பழம், கற்கண்டு, தேன், வாழை, நுங்கு ஆகியவை எல்லாம் எனக்கு இனிமையானவை.
  • ஏனென்றால் இவை அனைத்தும் இயற்கையில் இனிமை தருவன. உடல் நலத்திற்கும் ஏற்றதாலும் இனியனவாகக் குறிப்பிடுகின்றேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

கற்பவை கற்றபின்

Question 1.
பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்துக் காட்டுக.
Answer:
இப்பாடலைச் சரியான உச்சரிப்புடன் பாடிப் பழக வேண்டும்.

Question 2.
பாடலை உரிய ஓசையுடன் பாடுக.
Answer:
இப்பாடலை உரிய ஓசையுடன் பாடிப் பழக வேண்டும்.

Question 3.
பாரதிதாசன் தமிழை உயிர் என்கிறார். உங்களுக்குத் தமிழ் எது போன்றது? கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 1 : வணக்கம்! தமிழ் எனக்கு உணர்வு போன்றது. ஏன் என்றால், தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்ந்து, எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருளை நீக்கி என்றும் என் உணர்வில் நிலைத்து நிற்கும்.

மாணவன் 2 : தமிழ் எனக்கு அறிவு போன்றது. ஏன் என்றால், நான் பிறக்கும் முன்பே கருவுக்குள் எனக்கு அறிவு புகட்டியது தமிழ்தான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

Question 4.
மொழி தொடர்பான பாடல்கள் மற்றும் கவிதைகளைப் படித்து மகிழ்க.
Answer:
எங்கள் தமிழ்

அருள்நெறி அறிவைத் தரலாகும்.
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது.
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம். – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
பாரதிதாசனின் இயற்பெயர் ……………..
அ) பாரதியார்
ஆ) கனக. சுப்புரத்தினம்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
ஆ) கனக. சுப்புரத்தினம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

Question 2.
பாரதிதாசன் பிறந்த ஊர்.
அ) திருமறைக்காடு
ஆ) மோகனூர்
இ) ஈரோடு
ஈ) புதுச்சேரி
Answer:
ஈ) புதுச்சேரி

விடையளி :

Question 1.
கனி மற்றும் நல்கிய ஆகிய சொற்களின் பொருள் யாது?
Answer:

  • கனி – பழம்
  • நல்கிய – வழங்கிய

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

Question 2.
பாரதிதாசன் – பெயர்க் காரணம் யாது?
Answer:
பாரதியார் மீது கொண்ட பற்றினால், கனக. சுப்புரத்தினம் என்ற தம் இயற்பெயரைப் பாரதிதாசன் என மாற்றி அமைத்துக் கொண்டார்.

பாடல் பொருள்

கனியின் சுளையில் உள்ள சுவையும், முற்றிய கரும்புச் சாற்றின் சுவையும், மலரிலிருந்து எடுக்கப்பட்ட தேனின் சுவையும், காய்ச்சிய பாகின் சுவையும், சிறந்த பசு தந்த பாலின் சுவையும், தென்னை மரத்திலிருந்து பெறப்பட்ட குளிர்ந்த இளநீரின் சுவையும் இனிமையானவை. ஆனால், தமிழ் இத்தகைய சுவைகளையும் விட உயர்ந்தது. தமிழோ என் உயிர் போன்றது என்கிறார் பாரதிதாசன்.

Leave a Reply